புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி ! கவிஞர் இரா .இரவி


புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி

ஆசையே அழிவுக்குக் காரணம் !என்றேன்
அகிலத்தில்
பேராசைப்  பிடித்து அலைகின்றனர் 

என் போதனைகளை மறந்து  விட்டு 
எனக்கு பிரமாண்ட சிலைகள்  எதற்கு ?


என் பொன்மொழிகளை கொன்று விட்டு
எனக்கு
பெரிய ஆலயம் கட்டி என்ன பயன் ?
வாழ்க்கையின் நோக்கம் உதவுவதே ! என்றேன்
வாழ்கையில் பலர் கடைபிடிக்க  வில்லை

எல்லாம் தெரியும் என நினைப்பவன் மூடன் ! என்றேன்
எல்லாம் தெரியும் என இறுமாப்பு கொள்கின்றனர்

பிறருக்கு துன்பம் தரக் கூடாது ! என்றேன்
பிறரை துன்புறுத்தி இன்புறுகின்றனர்


தீய செயலை செய்தவர் தப்பிக்க முடியாது ! என்றேன்
தீய செயலை செய்து விட்டு தப்பிக்கப் பார்க்கின்றனர்

தீங்கு செய்யாதவனுக்கு தீங்கு நேராது என்றேன்
தீங்கு செய்யாதவனுக்கு தீங்கு செய்கின்றனர்

தன்னை அடக்கத் தெரியாதவன் மனிதனன்று ! என்றேன்
தன்னை அடக்கத் தெரியாமல் விலங்காகி விட்டனர்

நேர்மையும் நம்பிக்கையும் இரு விழிகள் ! என்றேன்
நேர்மையை மறந்து நம்பிக்கை துரோகம் புரிகின்றனர்

ஒழுக்கம் உள்ளவர்களுடன் உறவாடுங்கள் ! என்றேன்
ஒழுக்கம்  கெட்டவர்களுடன் உறவாடுகின்றனர்

பகைமையை பகைமையால் தணிக்க முடியாது ! என்றேன்
பகைமை வெறி பிடித்து அலைகின்றனர்

அதர்ம வழியில் அடையும்  வெற்றி வெற்றியன்று ! என்றேன்
அதர்ம வழியில் அடைந்த வெற்றிக்கு கூத்தாடுகின்ற்னர்

செய்யும் நன்மையை யாராலும்
அழிக்க முடியாது ! என்றேன் நன்மை செய்தவர்களை அழித்து மகிழ்கின்றனர்
அறநெறி தவறியவர்களுக்கு அழிவு உறுதி ! என்றேன்
அறநெறி தவறியே நடந்து வருகின்றனர்

மரணமே வந்தாலும் இரக்கம் காட்டுங்கள் !
என்றேன்
மரணமே மற்றவருக்குத் தந்து இரக்கம் மறந்தனர்


மனிதர்களுக்கு மதம் பிடிக்கலாம் தவறில்லை
மனிதர்கள் யானைக்கான மதம் பிடித்து அலைகின்றனர்


என்னை வணங்குவதில் நேரம் செலவழிப்பது வீண் வேலை
என்னை வணங்காவிட்டாலும் நல்லவராய் வாழ்ந்தால் போதும்

தீயவர்களை நீங்கள் என்னை வணங்க வேண்டாம்
தீங்கு செய்த நீங்கள் என்னை வணங்குவது எனக்கு களங்கம்

புத்தப்பிட்சுகளும்  கடைப்பிடிக்கவில்லை என் போதனை 
என்பதுதான் எனக்குள்ள வேதனை மாபெரும் சோதனை

என் சிலைகளை
வணங்குவதை முதலில் நிறுத்துங்கள்
என் போதனைகளை கடைப்பிடிக்க முயலுங்கள்     

மனிதர்களே மனிதனாக வாழுங்கள் மனிதனை மதியுங்கள்
மனிதநேயத்தோடு வாழுங்கள் விலங்கு குணம் அகற்றுங்கள்


என்னை வணங்கும் உங்களின் இழி செயல்களால்
என் மனக் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


 www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response


 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் செய்வோம் !!





கருத்துகள்