ஞாயிறு, 30 ஜூன், 2013

மனதில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி

மனதில் ஹைக்கூ 
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி 
நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி 
மின்னல் கலைக் கூ டம் ,117 எல்டாம்ஸ் சாலை .சென்னை .18
விலை ரூபாய் 40. செல் 9841436213

மனதில் ஹைக்கூ ........மிகவும் அருமையான  நூல் ! பலவிதச் சிந்தனைகளை மனதில் ஏற்படுத்துகிறது ......சிந்தனை வயப்பட்டாலே செயல் வடிவம் பெரும்.மனிதர்களுக்கு  , மனிதர்களைப் பற்றிச் சிந்திக்கச் சொல்லியிருக்கிறார் .தங்களைப்பற்றித் தாங்களே சிந்திக்கத்தெரியாத  மனிதர்களுக்கு , வேறு யாராவது சொன்னால்.....சொல்லும் முறையில் சொன்னால் அது அவர்களைச் சென்று அடையும் என்பதாக ஒரு 'ஆசானைப்' போல நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி சொல்லியிருப்பது நல்ல படிப்பினை..

..தொலைக்காட்சிப் பெட்டியே கதி..எனக் கிடக்கும் மக்களைக்  குறிப்பாகப் பெண்களை வேறு  சிந்தனைக்குச் செல்லுங்கள் எனக் கூறுவது......அதுவும் தலையில் கொட்டுவது போல் கூறுவது......நல்ல அறிவுறுத்தல்!

தமிழ்ப்பண்பாடு  சிதைப்பு 
தமிழர் திருநாளில் 
தொ(ல்)லைக்காட்சிகள்!

நல்ல ஹைக்கூ ....
தமிழர் திருநாட்களில் குழந்தைகளுக்கு நமது நாட்டுப் பண்பாட்டைப்பற்றிக் கூறுவதைவிடுத்து அனைவரும்  தொலைக்காட்சியில் யார் யாரையோ பார்க்கிறார்கள்.....
மக்கள் திருந்தவேண்டும் .......தொலைகாட்சி பார்ப்பது தவறில்லை......ஆனால், அதே கதி என .....இருத்தல் நன்று அல்ல என்பதை நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நன்றாகவே சாடியிருக்கிறார்.

ஹைக்கூ புகழாரம் அருமை.    சுருங்கச் சொல்லி விளக்கும் ஹைக்கூக்களை ..  ...'ஹாய்'  எனக்கொள்ளலாம் .
'கணினி யுகத்தின் 
கற்கண்டு 
ஹைக்கூ!'
உருவத்தில் கடுகு 
உணர்வில் இமயம் 
ஹைக்கூ!
உழைப்பில்லையேல் பிழைப்பில்லை என்பதை அறியாத மக்கள் , தங்களுக்குச் சுக்கிர திசை எப்போது ? எண்  சோதிடம் , சோதிடம் பார்ப்பது....மூடத்தனம் என்பதைச்  சாடுகின்ற  பார்வை அருமை!

எதிர்காலம் அறிவதாக 
நிகழ்காலம் வீணடிப்பு 
சோதிடம்!
இன்னும் பல .......
சமுதாயம் திருந்த வேண்டும் என்பதில் உள்ள அக்கறை .......
இமயமாக உயரவேண்டியவன் 
படுபாதாளத்தில் விழுமிடம் 
டாஸ்மாக்!
வருங்காலத் தூண்கள் 
வழுக்கி விழுமிடம் 
டாஸ்மாக்!
இன்னும்     நிறைய .......

மனதை வருடிச் செல்லும் தென்றல் கவிதைகள் நிறைய ..நிறைய..

காதலைப் பற்றி காவியமும் படிக்கலாம்........ஹைக்கூவும் எழுதலாம் எனச் சவாலாக  பல கவிதைகள் இந்நூலில் மின்னுகின்றன.....காதலை  மேம்படுத்துகின்றன.
உணர்ந்தவர்களுக்கு மட்டும் 
புரிந்திடும் உன்னத சுகம் 
காதல்!

ஆஹா........என்ன இது .......ஒரு பார்வை என்று சொல்லி.......'மனதில்  ஹைக்கூ' படித்தவைகள் அத்தனையும் கொட்டுகிறேனே .....
இனி ......பிற வாசகர்களின் பார்வைக்கு.........நூலைக் கொடுக்கலாம்.
.

Waterfalls of Tamilnadu

புரட்சிக்கவிஞர் பாடல்கள்

Speaker's Address During the Monthly Meeting of Madurai Media Club

Madurai Heritage Thirumalai Nayak Palace

Old Madurai-1945.mp4

Niththiraip Payanangal veliyitu vizha part 2.wmv

Archive MMSTF 0019

Archive MMSTF 0018

www.tamilauthors.com-Eraeravi interview01

மதுரை மாவட்ட மைய நூலகத்தில் கவிதை விழா அழைப்பிதழ்

மதுரை மாவட்ட மைய நூலகத்தில் கவிதை விழா அழைப்பிதழ் 

வெள்ளி, 28 ஜூன், 2013

DVD 2

DVD 2

VTS 01 2

VTS 01 1

Oru Cup Urchagam 28-06-2013 Thanthi TV (ஒரு கப் உற்சாகம்)

பட்டிமன்றத்தில் கவிஞர் இரா.இரவி

kaalaimalar_split2.mp4

Eraravi split1

Eraravi split1

Eraravi split1

www.tamilauthors.com-Eraeravi interview01

வியாழன், 27 ஜூன், 2013

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ( சென்றியு )  கவிஞர் இரா .இரவி !

வழி  மேல் விழி வைத்து 
முதியோர் இல்லத்தில் 
முதியோர்கள்   ! நேரம் கிடைத்தால் 
ரசித்து மகிழுங்கள் 
வானம் !

உதட்டில் புன்னகை 
உள்ளத்தில் ரணம் 
திருநங்கைகள் !

வாசிக்க சுகம் 
ரசிக்கும் மனம் 
கவிதை !

வாக்குப்பிச்சை எடுத்தவர்களிடம் 
வாக்குப்பிச்சை 
மேல்சபை தேர்தல் !

மரங்களை வெட்டி 
யாகம் நடந்தது 
மழைக்காக !

வேண்டாம் வன்சொல் 
வாடிடும் பிஞ்சு 
அன்போடு கொஞ்சு !

வெள்ளத்தில் பக்தர்கள்
காக்கவில்லை 
கடவுள் !

மின்தடையிலும் 
ஒளிர்ந்தது 
மின்மினி !

அன்று சேவைக்காக 
இன்று தேவைக்காக 
அரசியல் !

அன்று மக்களுக்காக 
இன்று தன் மக்களுக்காக 
அரசியல் !

கற்பித்தன ஒழுக்கம் 
காந்தியடிகளின் 
மூன்று குரங்குகள் !

திறந்திடுவார்கள் 
உடையுமோ  பயத்தில் 
அணை !

பைத்திமாகியும் 
காரியமாக 
அரசியல்வாதி !
 


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

Oru Cup Urchagam 24-06-2013 Thanthi TV (ஒரு கப் உற்சாகம்)

நம்பிக்கை வாசல் மாத இதழில் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின் எழுதிய "மேதைகளின் வாழ்வில் மென்மையான சம்பவங்கள் " நூல் விமார்சனம் கவிஞர் இரா .இரவி

நம்பிக்கை வாசல் மாத இதழில் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின் எழுதிய "மேதைகளின் வாழ்வில் மென்மையான சம்பவங்கள் " நூல் விர்சனம் கவிஞர் இரா .இரவி

செவ்வாய், 25 ஜூன், 2013

படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை !
நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் செல் 9442112288
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

மணிமேகலைப் பிரசுரம் ,7.தணிகாசலம் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை .17.
விலை ரூபாய் 60.

ஸ்ரீ விநாயகா ,சுவாஷ்சிகா பர்னிச்சர் உரிமையாளர் இனிய நண்பர் திரு பி .சுரேந்திரன் அவர்களின் செல்ல மகள் கவிதா -செல்வன் பி .அரவிந்த்  பொன்னையா திருமணம் மதுரையில் நடந்தது .நான் சென்று இருந்தேன் . திருமணத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் வழங்கிய தாம்பூல பையில் இந்த நூல் இருந்தது .உடன் இனிய நண்பர் திரு பி .சுரேந்திரன் அவர்களை செல்லிடப்பேசியில் அழைத்துப் பாராட்டினேன் .திரு பி .சுரேந்திரன் அவர்கள் கர்மவீரர் காமராஜர் மீது அளவற்ற பாசமும் , நேசமும் கொண்டவர் .காமராஜரை பெரிதும் மதிப்பவர் .பணம் இருக்கும் அனைவருக்கும் இதுபோன்ற மனம் இருப்பதில்லை .5000 நூல்கள் வாங்கி வழங்கிய செய்தி அறிந்து மேலும் பாராட்டினேன் .பணக்காரர்கள் திருமணங்களில் இதுபோன்று நூல் வழங்கும் நல்ல பழக்கத்தைக் கடைபிடிக்கலாம் .5000 நூல்களை ஒரு குடும்பத்தில் 5 பேர் வாசித்தால் 25000 பேருக்கும் காமாராஜர் பற்றிய நேர்மை உள்ளம் விளங்கும் .

தேசப்பிதா காந்தியடிகளை " இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் இனி வரும் உலகம் நம்ப மறுக்கும் ." என்றார்கள் .இது தென்னாட்டு காந்தி காமராஜருக்கும் அப்படியே பொருந்தும் .அதனை மெய்ப்பிக்கும் நூல் இது .நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் அவர்களுக்கும் நூலை மிகத்தரமாக பதிப்பித்த மணிமேகலைப் பிரசுரத்திற்கும்  பாராட்டுக்கள் .

கர்மவீரர் காமராஜர் போல ஒரு அரசியல்வாதியை இன்று உலகம் முழுவதும் தேடினாலும் கிடைக்க மாட்ட்டார்கள் . இன்று பேராயக்கட்சி  தமிழருக்கும் , தமிழ்நாட்டிற்கு  ,தமிழுக்கும் வஞ்சனை செய்துவருகின்றது என்ற கோபம் இருந்தாலும் . தமிழர்களுக்கு காமராஜரின் மீதான மதிப்பு மட்டும் என்றும் உயர்ந்தே உள்ளது .

.முன்பெல்லாம் லஞ்சம் வாங்காதவரை நல்லவர் என்றார்கள் .ஆனால் இப்போது லஞ்சம் வாங்குபவரை மிக நல்லவர் வாங்கினால் முடித்துக் கொடுத்து விடுவார் .என்கிறார்கள் .மக்கள் மனங்களில் மாற்றம் விதைத்து விட்டனர் இன்றைய அரசியல்வாதிகள் .இன்றைய  இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய அற்புத நூல் இது .காமராஜர் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்பு உண்டு .அவரைப் பற்றி பல கவிதைகள் எழுதி இருக்கிறேன் .அவர் மீது வைத்துள்ள மதிப்பை இன்னும் உயர்த்தும் விதமாக நூல் இருந்தது . 

நூல் தொடங்கும்போது காமராஜரின் வாழ்க்கைக் குறிப்புகளுடன் தொடங்குகின்றது .
காமராஜர் பிறந்த நாள் 15.7.1903 தொடங்கி ,காந்தியடிகள் பிறந்த நாள் அன்று காமராஜர்மறைந்த நாள் 2.10.1975.வரை பல தகவல்கள் தேதிகளுடன் புள்ளி விபரமாக உள்ளன .நூல் ஆசிரியர்  நீலம் மதுமயன் அவர்கள் கவிஞர் என்பதால் சொற்கள் கவித்துவமாக படிக்கச்  சுவையாக உள்ளது .
காமராஜர் பற்றி எல்லோருடைய மனதிலும் மிகச் சிறந்த பிம்பம் உண்டு .அதை மேலும் உயர்த்தும் விதமாக நூல் உள்ளது .

உயர்ந்த உள்ளம் !
உயர்ந்த உள்ளம் இருப்பவரிடம் மட்டுமே உயர்ந்த செயல்கள் வெளிப்படும் .அவர்களால் மட்டுமே உயர்ந்தோரை உருவாக்க முடியும் .காமராஜர் ஓர் உயர்ந்த மனிதர் .உருவத்தால் மட்டுமன்றி உள்ளத்தாலும் உயர்ந்தவர் .

நூலில் உள்ள கருத்துக்கள் யாவும் உண்மை .காமராஜருக்கு உயந்த உள்ளம் இருந்த காரணத்தால்தான் இன்றும் அவரை மறக்காமல் இருக்கின்றோம் .

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள் .இன்றைய அரசியில்வாதிகள் என்ற வெயிலின்  காரணமாக  காமராஜர் என்ற நிழலிலின்  அருமையை  அனைவரும் உணர்கின்றோம் .இந்த நூல் படித்தபோது நான் எழுதிய ஹைக்கூ நினைவிற்கு வந்தது .

காமராஜர்  காலம் பொற்காலம் 
காமராஜர்  காலமானதால் 
காலமானது பொற்காலம் !

" எல்லோர்க்கும் கல்வி .அதன் மூலம் எல்லோர்க்கும் வேலை வாய்ப்பு .அதன் மூலம் எல்லோர்க்கும்உணவு .அதன் மூலம் எல்லோர்க்கும் சமத்துவம் காண வேண்டும் என்பதே காமராஜரின் இலட்சியம் ."

இன்று கல்வி ஏழைகளுக்கு எட்டாக் கனியாகி வருகின்றது .

காமராஜரின்  வாழக்கையைச் சுட்டும் விதமாக குறிப்பிட்டுள்ள இந்த வரிகள் போதும் .
காமராஜர் எப்போதும் கடவுள் பக்தராக இருந்ததில்லை .ஆனால் அரசியல் பக்தர்கள் லட்சகணக்கில் அவரையே வணங்கினார்கள் ."
காமராஜரை கதாராடை அணிந்த கறுப்புச் சட்டைக்காரர் என்றார்கள் .காமராஜருக்கு கடவுள் பக்தி இல்லாமல் இருந்து இருக்கலாம் .ஆனால் அவருக்கு எளிமை ,நேர்மை ,மனிதநேயம் ,மக்கள் மீது அன்பு ,பாசம் ,நேசம் இருந்தது .

இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் அவசியம் கவனத்தில் கொள்ள வெடிய வைர வரிகள் இதோ .

"அரசுபபணியாளர் களை முடுக்கி விட வேண்டும் பணியை அரசியல்வாதிகள் செய்ய வேண்டுமே தவிர முடக்கிவிடும் பணியைச் செய்யக் கூடாது ."இந்த உயர்ந்த நாகரிகத்தை கர்மவீரர் காமராஜரிடம் கற்க வேண்டும் .

காமராஜர் முதல்வராக இருந்தபோது முதல்வரின் உதவியாளர் ,இந்திய ஆட்சிப் பணி அதிகாரியிடம் பேச வேண்டும் என்று தொலைபேசியில் அழைத்து இருக்கிறார் .அதற்கு அதிகாரியின் உதவியாளர் அவர் 
தூங்குகிறார் எழுப்ப முடியாது என்று சொல்ல ,அழைப்பது முதல்வர் என்றபோதும் எழுப்ப மறுத்து விட்டார் .மறுநாள் இதனை கேள்விப்பட்டு மாற்றல் ஆகப் போகிறோம் என்ற பயத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி வந்தபோது .முதல்வர் காமராஜர் சொன்னார் .உங்கள்  உதவியாளர் மிக நேர்மையாக உள்ளார் .அவரை எனக்கு உதவியாளராகத் தாருங்கள் ."

இப்படி சொல்லும் முதல்வரை இன்று உலகம் முழுவதும் தேடினாலும் காண முடியாது .

.வெற்றியால் துடிக்காமல் ,தோல்வியால் துவளாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் காமராஜரைப் படிக்க வேண்டும் .அதற்க்கு இந்த நூலைப் படிக்க வேண்டும் .என்பது என் கருத்து .

அரசியலில் எதிர்க்கட்சியினர் எதிரணியினர்தானே தவிர எதிரிகள் அல்ல .ஆரோக்கியமான அரசியல் நடத்தியவர் காமராஜர் .
அமெரிக்க அதிபர் நிக்சன் காமராஜராய் சிந்திக்க விரும்பி அனுமதி கேட்டார்கள் .காமராஜர் .அனுமதி தர வில்லை .சந்திக்க வில்லை .காரணம் கேட்டபோது .அறிஞர் அண்ணா அமெரிக்கா சென்று இருந்தபோது நிக்சனை  சந்திக்க அனுமதி தரவில்லை .நம் தமிழ்நாட்டு தமிழரை மதிக்காதவரை நான் ஏன் சந்திக்க வேண்டும் .என்றார் .
.அமெரிக்க அதிபர் சந்திக்க விரும்பினால் ஓடோடி சந்திக்கும் அரசியல்வாதிகள் இன்று உள்ளனர் .தமிழக மக்களின் மனங்களில் என்றும் வாழும் நேர்மையின் சின்னம் காமராஜர் பற்றி தெரிந்து கொள்ள உதவும் மிக நல்ல நூல் இது .பாராட்டுக்கள் .
-- 

.

ஞாயிறு, 23 ஜூன், 2013

கவியரசு என்றால் கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி .


கவியரசு என்றால் கண்ணதாசன் !   கவிஞர் இரா .இரவி .

கவியரசு என்றால் கண்ணதாசன் !   
கண்ணதாசன் என்றால் கவியரசு !

"ஆறு மனமே ஆறு " பாடலின் மூலம் 
ஆறுதல் வழங்கிய கவியரசு நீ !

"வெற்றி பெற்ற மனிதரெல்லாம் " பாடலில் 
தோற்றவருக்குத் தெம்பு  தந்தவன் நீ !

"நான் மலரோடு தனியாக" பாடலில் 
நல்ல காதலை சுகமாக வடித்தவன் நீ !

"மலர்களைப்  போல் தங்கை" பாடலுக்கு 
மயங்காத உள்ளம் இல்லை உலகில் !

"போனால் போகட்டும் போடா "பாட்டில் 
புத்திப்புகட்டும் நிலையாமையைப் பாடினாய் !

"நான் சார்ந்த மதம் தாமதம் "என்று சொல்லி 
நீ தாமதத்தையும் நகைச்சுவையாக்கியவன்  !

சித்தர்கள்  பாடல்களை எளிமைப் படுத்தி   
சித்திரமாய் திரையில் தீட்டித் தந்தவன் நீ !

வாழ்வியல் கருத்துக்களை பாடல்களில் 
வற்றாத ஜீவ நதியாக  வார்த்தவன்  நீ !

காதலின் வேதனையை பாட்டில் 
கடவுளோடு ஒப்பிட்டுப் பாடியவன் நீ !

ஆங்கில  இலக்கியம் படிக்காத   நீ 
ஆங்கில  இலக்கியம் வென்றாய் பாட்டில் !

சங்க   இலக்கியத்தை  திரைப்பாடலில் வைத்தாய் 
சாமானியருக்கும் புரிந்திட பாடல் படைத்தாய் !

கம்ப இராமாயண கருத்துக்களையும் 
கனிச்சாறாக பாட்டில் பிழிந்தவன் நீ !

"படைப்பதனால் என் பெயர் இறைவன்" என்று 
படைத்தாய் இறவாத பாடல்களை நீ !

எந்த நிலையிலும் மரணமில்லை என்று பாடி 
இன்றும் எங்கள் மனங்களில் வாழ்கிறாய் நீ !

உனக்குப் பின் பாட்டெழுத யார் யாரோ வந்தனர் 
உன் இடத்தை யாருமே எட்ட வில்லை ! 

கவியரசு என்றால் கண்ணதாசன் !   
கண்ணதாசன் என்றால் கவியரசு !
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

வெள்ளி, 21 ஜூன், 2013

கவிஞர் இரா இரவி உரை கேட்டும் மகிழுங்கள்

கவிஞர் இரா இரவி உரை கேட்டும் மகிழுங்கள் 

-- 
http://www.youtube.com/watch?v=_3-JIRFbk3A

மதுரைக்கு வருகை தந்த முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப .அவர்களுடன் சந்திப்பு.

மதுரைக்கு வருகை தந்த முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப .அவர்களுடன் சந்திப்பு.

மதுரைக்கு வருகை தந்த முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப . அவர்களிடம்  முதுநிலை தமிழாசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் , வெ .இறையன்பு அவர்களின் மேற்கோள்களுடன் எழுதிய  தனது நூலான " வலி தாங்கும் மூங்கில் "  நூலை வழங்கி மகிழ்ந்தார் .உடன் கவிஞர் இரா .இரவி ,தமிழ் வளர்ச்சித் துறை  உதவி இயக்குனர் முனைவர் க .பசும்பொன், கொடைக்கானல் வானொலி நிலையத்தின் பொறுப்பாளர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன் உள்ளனர் .
-- 

முனைவர் வெ. இறையன்பு இ.ஆ .ப . அவர்களை வரவேற்றனர்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வந்த முனைவர் வெ. இறையன்பு இ.ஆ .ப . அவர்களை கவிஞர் இரா .இரவி, மருத்துவர் சரவணன் , G.R.T  வெங்கடேஷ் ,அப்போலோ கார்த்திகேயன் , ஆகியோர்
வரவேற்றனர் 

வியாழன், 20 ஜூன், 2013

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வந்த முனைவர் வெ. இறையன்பு இ.ஆ .ப . அவர்களை வரவேற்றனர்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வந்த முனைவர் வெ. இறையன்பு இ.ஆ .ப . அவர்களை கவிஞர் இரா .இரவி, G.R.T  வெங்கடேஷ் ,அப்போலோ கார்த்திகேயன் ,AVA கணேசன் ஆகியோர் வரவேற்றனர் 
-- 

புதன், 19 ஜூன், 2013

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில் கவிக்குயில் இரா .கணேசன் மகள் சிறுமி பொற்க்கொடி திருக்குறள் மற்றும் தமிழ்ப்பாடல் மனப்பாடமாக சொன்னது .

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில் கவிக்குயில் இரா .கணேசன் மகள் சிறுமி பொற்க்கொடி திருக்குறள் மற்றும் தமிழ்ப்பாடல் மனப்பாடமாக சொன்னது .

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

துரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

துரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

துரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !நடைபெற்றது .வாசகர் வட்டத்தின் தலைவர் எ .எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .   திரு .ஜோதி மகாலிங்கம், மலேசியா திரு .சேதுமாதவன், திரு .சரவணன் ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினார்கள் கவிஞர்கள் கே .விஸ்வநாதன் ,இரா .கணேசன் தன்னம்பிக்கை கவிதை வாசித்தனர் .அரசுத் தேர்வில் அதிக மதிப்பெண்  பெற்ற செல்வி கார்த்திகாவிற்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கப் பட்டது .

தன்  முன்னேற்றப் பயிற்சியாளர் கவிஞர் கோ அவர்கள்  "தடைகளும் விடைகளும் " என்ற தலைப்பில் ன்  முன்னேற்றப் பயிற்சி அளித்தார்.  

"தொடர் வண்டி இந்தியாவிற்கு வந்தபோது மூடநம்பிக்கை காரணமாக எதிர்த்தனர் .தொடர் வண்டி வந்ததால் கடவுள் கோபம் கொண்டு நோய்கள் தந்தார் .என்றனர் தடைகள் வந்தது .விடைகள் கண்டனர் . இன்று உலகில் தொடர்வண்டி பயன்பாட்டில்  முதல் இடத்தில இந்தியா உள்ளது .எல்லா தடைகளுக்கும் விடைகள் உண்டு .மனிதனுக்கு வேலை 8 மணி நேரம் ,ஓய்வு  8 மணி நேரம்,தூக்கம்  8 மணி நேரம் இப்படி வகுத்தனர் .ஓய்வு  8 மணி நேரத்தை இது போன்ற தன் முன்னேற்ற பயிற்சிகளில் கலந்து கொள்வதின் மூலம் பயனுள்ளதாக்க முடியும் ." இப்படி பல்வேறு பயனுள்ள கருத்துக்களைக் கூறி  தன்  முன்னேற்றப் பயிற்சி அளித்தார். தினேஷ் நன்றி கூறினார் .

.தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர் ஆ .முத்துக் கிருஷ்ணன்,சுரேஷ் ,உதயம் ஜீவா ,G.K. உள்பட பலர் கலந்து கொண்னர் 

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய கட்டுரை

தமிழ்த் தேனீ  முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய கட்டுரை படித்து மகிழுங்கள் .நன்றி  மனித நேயம்  ' மாத இதழ் .

செவ்வாய், 18 ஜூன், 2013

ஞாயிறு, 16 ஜூன், 2013

தன்னம்பிக்கை மாத இதழில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை செய்திகள்

தன்னம்பிக்கை மாத இதழில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை செய்திகள் 

செல்லமுத்து சரஸ்வதி கல்வி அறக்கட்டளையின் சார்பில் நன்கொடை

செல்லமுத்து சரஸ்வதி கல்வி அறக்கட்டளையின் சார்பில் அகவிழி பார்வையற்றோர்  விடுதியில் இருந்து கல்வி கற்று வரும் மாணவ , மாணவியரின் கல்விக்காக ரூபாய் 3000 க்கான காசோலையை லட்சுமி விலாஸ் வங்கியில் பணிபுரியும் திரு .ராஜேந்திரன் ,திரு.அனந்த குமார் ,நுகர்வோர் அமைப்பின் செயலர்  திரு .ராம மூர்த்தி ,ஆகியோர் அகவிழி பார்வையற்றோர்  விடுதி நிறுவனர் திரு பழனியப்பன் அவர்களிடம் வழங்கினார்கள் .உடன் கவிஞர் இரா .இரவி 

செல்லமுத்து சரஸ்வதி கல்வி அறக்கட்டளையின் சார்பில் நன்கொடை


செல்லமுத்து சரஸ்வதி கல்வி அறக்கட்டளையின் சார்பில் அகவிழி பார்வையற்றோர்  விடுதியில் இருந்து கல்வி கற்று வரும் மாணவ , மாணவியரின் கல்விக்காக நன்கொடை 
ரூபாய் 3000 க்கான காசோலையை லட்சுமி விலாஸ் வங்கியில் பணிபுரியும் திரு .ராஜேந்திரன் ,திரு.அனந்த குமார் ,நுகர்வோர் அமைப்பின் செயலர்  திரு .ராம மூர்த்தி ,ஆகியோர் அகவிழி பார்வையற்றோர்  விடுதி நிறுவனர் திரு பழனியப்பன் அவர்களிடம் வழங்கினார்கள் .உடன் கவிஞர் இரா .இரவி 

சனி, 15 ஜூன், 2013

இயக்குனர் மணிவண்ணன் மணியான மனிதர் ! கவிஞர் இரா .இரவி !

இயக்குனர் மணிவண்ணன் மணியான மனிதர் ! கவிஞர் இரா .இரவி !

கோவை அருகே உள்ள சூளுரில் பிறந்தவர் !
கோடம்பாக்கத்தில் சூறாவளியாக சுழன்றவர் !

அய்ம்பது திரைப்படங்கள் இயக்கியவர் !
நாணூறு திரைப்படங்கள் நடித்தவர் !

வெண்தாடி வேந்தரின் பகுத்தறிவுக்கருத்துக்களை !
கருந்தாடி வைத்து திரையில் உரைத்தவர் !

மனிதநேயம் மிக்க மாமனிதர் மணிவண்ணன் !
மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்தவர் ! 

கதையாசிரியர் வசனகர்த்தா உதவி இயக்குனர் 
கதையின் நடிகர் இயக்குனர் என்று வளர்த்தவர் !

உதவி இயக்குனர்கள பலரை உருவாக்கியவர் !
உச்சம் செல்ல வழி  வகுத்துத் தந்தவர் !

ஈழத்தமிழர்களுக்காக உரக்கக் குரல் கொடுத்தவர் !
ஈழத்தமிழர்களின் விடுதலையை விரும்பியவர் !

நூல்களை வாசிக்கும் நூல்களின் நேசர் !
நூல்களில் சிறந்ததைப் பரிந்துரை செய்தவர் !

ஆணவம் இல்லாத எளிமையான மனிதர் !
அனைவரும் விரும்பிய அன்பு மனிதர் !

நெசப்பாக்கத்தில் வாசித்த நேசக்காரர் !
நெஞ்சில் பட்டதைப் பேசும் பாசக்காரர் !

தன்  உதவி இயக்குனர்கள்   இயக்குனரானால் 
தன்னால் முடிந்த உதவிகள் செய்தவர் !

மற்ற இயக்குனர்கள் போல என்றும் 
மனதில் பொறாமை கொள்ளாதவர் !

சீடர்களின் வளர்ச்சியில் பெருமைப்பட்டவர் !
சின்னப் புத்தி என்றும் இல்லாதவர் !

நடிகர்கள் பலர் வளரக் காரணமானவர் !
நடிப்பைப் பலருக்குக் கற்றுத் தந்தவர் !

வசனத்தை இயல்பாகப்  பேச வைத்தவர் !
வஞ்சகம் இல்லா மனதைப் பெற்றவர் !

அரசியல்வாதிகளின் பித்தலாட்டத்தை !
அச்சம் இன்றி தோலுரித்துக் காட்டியவர் !

வெண் திரையில் அற்புதமாக நடித்தபோதும் !
வாழக்கையில் யாரிடமும் நடிக்காதவர் !

எள்ளல் சுவையுடன் கோவைத் தமிழில் !
நாகராஜா சோழன் வரை எழுதியவர் !

அவருடைய இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு !
அவருக்கு இணை அவர் மட்டுமே !

இயக்குனர் மணிவண்ணன் மணியான மனிதர் !
இயக்குனர்களின் முன்மாதிரியான மனிதர் !

ஈழக்கொடி போர்த்தி உறங்குகிறாய் !
ஈழக் கனவு விரைவில் நனவாகும் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

ஆதலினால் காதல் செய்வீர் ! கவிஞர் இரா .இரவி !

ஆதலினால் காதல் செய்வீர் ! கவிஞர் இரா .இரவி !

காதலால் கவலை போகும் !
கல்யாணம் சிறக்கும் !

காதல் சொன்னால் புரியாது !
காதல் காதலித்தாலே புரியும் !

தென்றலால் இலைகள் அசைவது !
மொட்டுகள் மலர்களாக மலர்வது !

பூமியில் மழை பெய்வது !
விதைகள் மரமாக வளர்வது !

அருவியில் நீர் கொட்டுவது 1
எப்படி வந்தது தெரியாது !

இயற்கையாக வருவது !
அப்படித்தான் காதலும் !

ஆணுக்கும் பெண்ணுக்கும்
அவசியம் காதல் வரும் !

ஒருதலைக் காதலாவது
ஒரு முறையேனும் வந்திருக்கும் !

அரும்பிய காதல் மலராமல்
கருகி இருக்கும் !

பிறப்பும் இறப்பும் நிச்சயம் !
காதல் அனுபவுமும் நிச்சயம் !

காதல் பலவகை உண்டு !
மனதிற்குள் மறைந்த காதல் !

உதடுகள் உச்சரிக்காத காதல் !
உச்சரித்து ஏற்காத காதல் !

காதல் இல்லை என்றால்
இந்த உலகம் இல்லை !

காதலை உணர்ந்த பெற்றோர்கள்
ஊருக்குப் பயந்து எதிர்ப்பார்கள் !

காதல் திருமணத்தை அங்கீகரியுங்கள் !
கட்டாயம் வரதட்சணை ஒழியும் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

இயக்குனர் மணிவண்ணன் இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு .கவிஞர் இரா .இரவி !

இயக்குனர் மணிவண்ணன் இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு .கவிஞர் இரா .இரவி !

அமைதிப்படை ஒன்று ,இரண்டு  படங்களின் மூலம் அரசியல் பித்தலாட்டங்களை தோலுரித்துக் காட்டியவர் .பகுத்தறிவுக் கருத்துக்களை வெண் திரையில் சொன்னவர் .நல்லசிந்தைனையாளர் .ஈழத் தமிழருக்காக உரக்க குரல் தந்தவர் .வெண்தாடி வேந்தரைப் போல் கருந்தாடி வைத்தவர் .மணிவண்ணன் மணியான கருத்துக்களை திரைப்படத்தில் சொன்னவர் .அவரது இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு .

வெள்ளி, 14 ஜூன், 2013

சிந்தனை !

சிந்தனை !


சேகுவாரா சொன்னது !
இலங்கையில் நடந்தது !
சேகுவாரா " எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கே விரிவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் ."

சிங்கள இன வெறியர்கள் இலங்கையில் யாழ் நூலகத்தில் உள்ள அறிய பல நல்ல நூல்களை எரித்தார்கள் .அதன்பின் நல்ல மனிதர்கள் ( ஈழத் தமிழர்கள் ) எரிக்கப்பட்டார்கள் .இறந்தவர்கள் இனி உயிர்த்தெழ முடியாது .ஆனால் பல்லாயிரம் தமிழர்கள் இறப்பிற்கு காரணமான கொடியவன் ராஜபட்சே உலக நீதிமன்றத்தால் தண்டிக்கப் படும் நாளே .
உலகத்தமிழர்களுக்கு திருநாளாகும் .

பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்களே ! கவிஞர் இரா .இரவி !

பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்களே ! கவிஞர் இரா .இரவி !

பெண் பிறந்தால் 
பேதலிக்கும் மனிதர்களே!
ம்ருமகள் கிடைக்காமல் 
மண்டியிடும் நாள் வரும் !

ஆட்டிற்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி !
மாட்டிற்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி !
கோழிக்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி !
பெண்ணிற்குப் பெண் பிறந்தால் ஏன் இகழ்ச்சி ?
பெண்ணிற்கு முன்னுரிமை
பேருந்தில் தந்தோம் !
திரையரங்கில் தந்தோம் !
இல்லத்தில் தந்தோமா ?
இதயத்தில் தந்தோமா ?
இல்லதரசிக்குத் தந்தோமா ?
உணவு உண்பது உடை உடுப்பது
உறக்கம் கொள்வது
இருபாலருக்கும் பொது !
ஒழுக்கம் மட்டும் பெண்ணிற்கு மட்டும்தானா ?
ஆணிற்கு வேண்டாமா ?
பெண்ணுரிமை பற்றிப்
பேசிவிட்டு வந்து
எதிர்த்துப் பேசிய
இல்லதரசியை எட்டி உதைக்கும் அவலம் .!
பெண்ணுரிமை ஏட்டில் எழுத்தில்
தந்தால் போதாது !
பெண்ணுரிமை நாட்டில் நடைமுறையில்
வீட்டில் தர வேண்டும் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

சாரல் காலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி ! நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி !

சாரல் காலம் !
நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி !
நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி !

வானிலிருந்து வரும் அமுதம் மழை .உலக உயிரினங்களின் உயிர் மழை .ஒப்பற்ற மழை பற்றி பல்வேறு கோணங்களில் கவிதை வடித்துள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி.உள்ளத்தில் உள்ளது கவிதை .உள்ளத்து உணர்வு கவிதை .கண்ட காட்சி கவிதை என்று முத்தான  கருத்துக்களால் முத்துக் கவிதை வடித்துள்ளார் .மா .முத்துப்பாண்டி .

மழையைப்  பற்றிப்  பல்வேறு கவிஞர்கள் கவிதை எழுதி உள்ளார்கள் .ஆனால் கவிஞர் மா .முத்துப்பாண்டி அளவிற்கு மழை பற்றி யாரும் எழுதவில்லை என்றுதான் சொல்லவேண்டும் .அந்த அளவிற்கு அடை மழை போல கவிதைகளைக்  கொட்டி உள்ளார் .சாரல் காலம் கவியருவியில் குளித்த மகிழ்ச்சியைத் தருகின்றது .பாராட்டுக்கள் .

இயற்கையை ரசிக்கத் தெரிந்தால்தான் இயற்கைப்  பற்றி எழுதிட முடியும் .நூல் ஆசிரியர் கவிஞர் மா.முத்துப்பாண்டி மழை கொட்டுவதை இமை கொட்டாமல் ரசித்த காரணத்தால் , மழையைப் பற்றி பல்வேறு கவிதைகள் வடித்துள்ளார் .பதச்சோறாக சில வரிகள் மட்டும் .

ரசனை !
ருமேகங்களை  நாண 
நடனமாடச் சொல்லுங்கள் !
நாம் அனைவரும் 
ரசிப்போம் ! ஈர்க்கின்ற  
மழைத்துளிகளில் !

நயகன் ,நாயகி பற்றியும் கவிதைகள் உள்ளன .கும்பகோணம் குழந்தைகள் தீ விபத்து ,சுனாமி என சமுதாய நிகழ்வுகள் யாவும் உற்று நோக்கி கவிதைகள் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .இந்த நூலில்  புதுக்கவிதைகளும் ,ஹைக்கூ கவிதைகளும் உள்ளன .வாசகர்களுக்கு பல்சுவை விருந்து வைத்துள்ளார் .

பறவைக்காக ஏங்கி பறவை நேசத்துடன் வடித்த ஹைக்கூ நன்று .

எப்போது கிடைக்கும் விடுதலை 
இந்த அழகான 
கூண்டுக் கிளிக்கு !

தேசப்பிதா காந்தியடிகளின் கள்ளம் கபடமற்ற வெள்ளைச் சிரிப்பைப் பாராட்டும் விதமாக உள்ள ஹைக்கூ நன்று .

சிரிப்பைப் பார்த்துதான் சிரிக்கவே   
கற்றுக் கொண்டேன் ரூபாய் 
நோட்டில் காந்தியின் படம் !

நாட்டுப்பற்றை விதைக்கும் விதமாக உள்ள இராணுவ தேசிய மாணவர் படை கவிதை நன்று .கிராமிய மணம் வீசும் வண்ணம் கிராமிய மொழியிலும் கவிதை வடித்துள்ளார் .

காதலைப் பாடாத கவிஞன் இல்லை .காதலைப் பாடாதவன்  கவிஞன் இல்லை .கவிஞர் மா .முத்துப்பாண்டியும் காதலைப் பாடி உள்ளார் .

காதல் !
இயங்கிடும் இதயம் பிடிக்கும் !
இரக்கம் வரும் மனம் பிடிக்கும் !
புல்லிடம் பேசும் புன்னகை பிடிக்கும் !
புன்னகையில் மயங்கும் தேன்மொழி பிடிக்கும் !

பிடிக்கும் ! பிடிக்கும் !என்று முடித்து வாசகர்களுக்குப் பிடிக்கும் படியாக கவிதை எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .எதிர் காலத்தில் பெரிய கவிஞராக வருவார் என்பதைப் பறைசாற்றும் விதமாக கவிதைகள் உள்ளன .இது கவிஞர் மா .முத்துப்பாண்டியின் முதல் நூல் மட்டுமல்ல ,முத்தாய்ப்பான நூலாக  வந்துள்ளது .வாழ்த்துக்கள் .

.மேஸ்ட்ரோ இளையராஜா பற்றிய கவிதை நன்று .அணிந்துரையிலேயே அத்தனை கவிதைகளையும் எழுதி விட முடியாது என்ற காரணத்தால் இன்னும் கவிதைகள்  எழுதவில்லை .உள்ளே சென்று நூலைப் படித்துப் பாருங்கள் .உங்கள் உள்ளதைக் கொள்ளைக் கொள்ளும் கவிதைகள் உள்ளன .

மனதில் பட்டதை ,தான் உணர்ந்த உணர்வை ,கண்ட காட்சியைப்  படம் பிடித்துக் காட்டுவதுபோல கவிதைகள் எழுதி உள்ளார் .மதுரை மன்னர் கல்லூரி மாணவர் .கல்லூரி மாணவப்  பருவத்தில் கவிதை எழுதும் படைப்பாற்றலுடன் கவிஞர் மா .முத்துப்பாண்டி திகழ்வது ,இன்றைய இளைய தலைமுறை நல்வழியில் பயணிக்கிறது என்று மகிழ்வடையும் விதமாக உள்ளது .இது முதல் நூல் .கன்னி முயற்சி .தனக்குள் உள்ள கவிதை எழுதும் ஆற்றலை இன்னும் வளர்த்துக் கொண்டு இன்னும் பல நூல்கள் எழுதிட வாழ்த்துகின்றேன் .

இந்த நூல் படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் தான் கண்ட மழைக்காட்சி நினைவிற்கு வரும் என்று அறுதியிட்டுக் கூறலாம் .சாரல் காலம் நூல் குற்றாலச் சாரலாக ,கவிதைச் சாரலாக உள்ளது .உள்ளே சென்று கவிதைகளைப் படித்துப் பாருங்கள் .மழையை மறக்க மாட்டீர்கள் .மாமழை போற்றுவோம் !மாமழை போற்றுவோம் !

வியாழன், 13 ஜூன், 2013

வலி தாங்கும் மூங்கில் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வலி தாங்கும் மூங்கில் ! 
நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

பாவை பப்ளிகேசன்ஸ் ,142.ஜானி ஜான் கான் சாலை .இராயப்பேட்டை,சென்னை .14. விலை ரூபாய் 50.

 வலி தாங்கும் மூங்கில் நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது .வலி தாங்கும் மூங்கில் தான் புல்லாங்குழல் ஆகின்றது .இசை தருகின்றது .துன்பத்தைத் தாங்கினால்தான் வாழ்வில் வெற்றிப் பெறலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக நூல் உள்ளது .தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக முத்தாய்ப்பாக 30 கட்டுரைகள் உள்ளன .

இனிய நண்பர் நூல் ஆசிரியர் ஞா. சந்திரன் .புனித மரிய மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் , கவிஞர் ,கட்டுரையாளர் ,தன்னம்பிக்கைப்  பேச்சாளர் பன்முக ஆற்றலாளர் .இனிய  நண்பர் வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்கள் மதுரைக்கு வந்தால் சந்திக்கும் முதல் நண்பர் .புதுமனை புகு விழா ,இந்த நூல் வெளியீட்டு விழா , மகனுக்கு புனித விழா என்று முப்பெரும் விழா மதுரையில் நடத்தினார் .இவ்விழாவில் நானும் ,வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களும் , தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களும் ,பொறியாளர் சுரேஷ் அவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தோம் .விழா கோலாகலமாக நடந்தது .

.நூலில் வித்தகக் கவிஞர் பா .விஜய் மற்றும் கும்கி படப் புகழ் நடிகர் ,எழுத்தாளர்ஜோ .மல்லூரி இருவரின் வாழ்த்துரையும் மிக நன்று 
 
.கட்டுரைகளின் தலைப்புகள் தாழ்வு மனப்பான்மை ஓர் உயிர்க்கொல்லி ,நம்பிக்கை நலம் தரும் ,காலம் நம் கையில் ,தற்கொலை தீர்வன்று ,அவமானமும் வெகுமானமே இப்படி  ஊக்கம் தரும் விதமாக உள்ளன .

நூலில் உள்ள முனைவர் வெ .இறையன்பு அவர்களின் மேற்கோள் சிந்திக்க வைக்கின்றது ." சாப்பாட்டைக் கூட சடங்காக உண்பவர்கள் இருக்கிறார்கள் ;சடலத்தைக் கூட பொறுப்புடன் புதைப்பவர்கள் இருக்கிறார்கள் ."

.வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களின் மேற்கோள் வித்தியாசமாக உள்ளது ." வாழ்வே ஒரு கிரிக்கெட் அவநம்பிக்கை ,கவனமின்மை ,ஒழுக்கமின்மை , மறதி  மந்தச்சிந்தை ,மனபயம் ,அகந்தை ,அறிவின்மை ,தாழ்வுமனப்பான்மை ,சோர்வு ,அலட்சியம் எனும் பதினொரு ஆட்டக்காரர்கள் உன் ஒருவனை ஒழிக்கப் போராடுவார்கள் .நீ தனியாய்த் தன்னம்பிக்கை எனும் ரன்னோடு  ஓடு ;போராடு ;"

உண்மையில் தாழ்வுமனப்பான்மை நம்மை அளிக்கும் உயிர்க்கொல்லி நோயாகும்  என்கிறார் நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . முதுநிலை தமிழாசிரியாரகப் பணிபுரிகிறார் , ஆசிரியப் பணியோடு நின்று விடாமல் , பல்வேறு நூல்களைப் படிப்பவர் .பல நல்ல நூல்களில் இருந்து தேனீ மலர்களில் தேன் எடுப்பதுபோல எடுத்து நல்ல பல தன் முன்னேற்ற சிந்தனை விதைக்கும் கட்டுரைகளாக வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .

தேன் உடலுக்கு நல்லது .இந்த நூல் உள்ளத்திற்கு  நல்லது .வாழ்க்கையில் கடைபிடித்தால் சாதிக்கலாம் .இந்த நூல் படிப்பதற்கு முன் இருந்த மன நிலைக்கும்  படித்து முடித்தபின் உள்ள மன நிலைக்கும் உள்ள முன்னேற்றம்தான் நூலின் வெற்றி .பல்வேறு பயனுள்ள கருத்துக்களை  படிப்பதற்கு சுவையாக இருக்கும் வண்ணம் சின்னச் சின்ன கதைகளுடன் , நகைச் சுவை உணர்வுடன் கட்டுரை வடித்துள்ளார் .

தலைமைப்பண்பு பற்றிக் கவிஞர் வைரமுத்து அவர்கள் ,"தலைமை என்பது கெடுபிடிகளில் கிடைப்பது அல்ல ;கெடுபிடிகள் செய்பவர்களுக்கு எடுபிடிகள்தான் கிடைப்பார்கள் .உண்மையாகப் பின்பற்றுபவர்கள் கிடைக்க மாட்டார்கள் .பலாத்காரத்தால், மிரட்டலால் ,
பயமுறுத்தலால் ஏற்படுகின்ற தலைமை வானவில்லைப் போல அற்பநேரத்தில் அஸ்தமித்து விடுகின்றது ."இந்த பயனுள்ள தலைமைப்பண்பு பற்றிய  கருத்து நூலில் உள்ளது . 

வாழ்வியல் கருத்துக்கள் கற்பிக்கும் விதமாக நூல் உள்ளது .பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றி  ,பச்சைத்தமிழர் காமராசர் பற்றி  கருத்துக்கள் நூலில் உள்ளன .ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் மிகச்சிறப்பான மேற்கோள்கள் உள்ளன .கட்டுரையைப் படிக்கத் தூண்டும விதமாக உள்ளன .பதச்சோறாக சில 

அன்பு வளர்வதற்கான பக்குவத்தைக் குடும்பம் கற்றுத் தருகிறது .

துன்பங்கள் தாம் நம்முடிய ஆற்றல்களை நெறிப்படுத்தி ஆக்கப் பூர்வமாகச் செயற்படுத்த உதவுகின்றன .

பொறுமை என்பது பொக்கிஷம் நம்மிடம் உள்ளபோது  மற்ற எல்லாச் செல்வங்களும் நம்மைத் தேடி வரும் .

ஊலொன்றும் புறமொன்றுமாகப் பேசும் பேச்சு எந்த விதத்திலும் பிறரின் வளர்ச்சிக்கு உதவாது .

புத்தகங்கள் தாம் மனிதனை முழுமையாக்குகின்றன .முன்னேற்றுகின்றன .

சாகுறதுக்கு எத்தனை வழிகள் யோசிக்கிற ,ஆனா வாழ்றதுக்கு ஒரு வழியாவது யோசிக்கிறாயா ?

இதுபோன்ற கேள்வியின் மூலம் தற்கொலை முட்டாள்தனம் என்பதை உணர்த்தி வாழ்வின் பெருமையை உணர்த்தி உள்ளார் .வாழ்க்கை என்பது வாழ்வதற்கே சாவதற்கு அல்ல .இறப்பு என்பது தானாக வர வேண்டும் நாமாக வரவழைப்பது கோழைத்தனம் .வாழ்க்கையை ரசித்து வாழ் என்று உணர்த்துகின்றது நூல் .சாதனை நிகழ்த்து ,சரித்திரம் படை .வெற்றியை அடை என்று பயிற்சி தரும் கட்டுரைகள் .ஆபிரகாம் லிங்கன் வாழ்வில் அடைந்த தோல்விகள் ,அவமானங்கள் அவர் எதிர்கொண்ட விதம் நூலில் உள்ளன .

விண்ணக வாழ்வின் சுவையை நாம் மண்ணகத்தில் சுவைக்க முடியும் .எப்போது எனில் ,
" நம் உள்ளத்தின் நிறைவான அமைதியில் கோபம் என்னும் கொடிய நோயை விரட்டிஅமைதி, மகிழ்ச்சி என்னும் விலை மதிப்பில்லா ஆபரங்களை அணியும் போது ." 

முனைவர் வெ.இறையன்பு அவர்கள் புத்தகம் பற்றி எழுதிய கருத்துகள்  நூலில் உள்ளன .நூல் படிக்கும் வாசகனை நம்மை  சிந்திக்க வைக்கின்றது  .

"ஒவ்வொரு புத்தகமும் அச்சடித்த அனுபவம் ;கண்களால் கிசிகிசுக்கும் ரகசியம் ;பச்சை குத்தும் பரவசம் ;தொடர்ந்து கேட்கும் எதிரொலி ;எடுக்கும்போது வாள் ;தடுக்கும்போது கேடயம் ;எழுதும்போது கலப்பை ;அள்ளும்போது அகப்பை ;

இந்த விளக்கம் இந்த நூலிற்கு முற்றிலும் பொருந்தும் விதமாக உள்ளது . நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன்அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .பாவை பதிப்பகத்திற்கு ஒரு வேண்டுகோள் .அடுத்த பதிப்பில் ஒரு பக்கம் உள்ள எழுத்துக்கள் அடுத்த   பக்கம் தெரியாத அளவிற்கு அச்சிடுங்கள் .வாசகர்கள் படிப்பதற்கு சிரமமாக உள்ளது .-- 

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...