இலக்கிய மாலை ! ( அணிந்துரைகளின் தொகுப்பு ) நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

இலக்கிய மாலை ! 
( அணிந்துரைகளின் தொகுப்பு  )

நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர் ,சென்னை .600017.
விலை ரூபாய் 100. 
மின்னஞ்சல் vanathipathippagam@gmail.com

பதிப்பு உலகில் தனி முத்திரைப் பதித்து வரும்  புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் தரமான பதிப்பாக வந்துள்ளது .அட்டைப்படம் அச்சு ,வடிவமைப்பு யாவும் மிக நன்று .

நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன்அவர்கள் அணிந்துரை எழுதுவதில் வல்லவர் .முதல் நூல் எழுதுபவர் கேட்டாலும் ,முப்பதாவது நூல் எழுதுபவர் கேட்டாலும் மறுக்காமல்  அணிந்துரை நல்குவார்கள் .இவரிடம் அணிந்துரை வாங்கினால் அது தனி நூலாக வந்து விடும் என்பது படைப்பாளிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி .பல்வேறு பணிகளுக்கு இடையில் தன்னிடம் அணிந்துரை கேட்கும் அன்பர்களுக்கும் , நண்பர்களுக்கும், அனைத்துப்  படைப்பாளிக்கும் நூல் முழுவதையும் படித்து விட்டு  மிக நுட்பமாகவும் ,நூலின் சிறப்பை எடுத்து இயம்பும் விதமாகவும் ,நூலிற்கு தோரண வாயிலாகவும் அணிந்துரை  தந்து மகிழ்வார்கள் .

இந்த நூலிற்கு .இலக்கிய மாலை !  என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள் .இலக்கியச் சோலையாக ,நந்தவனமாக உள்ளது நூல்.பாராட்டுக்கள்.இந்த நூலில் புகழ் பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களுக்கு எழுதிய அணிந்துரையும் ,என்னுடைய நூலான சுட்டும் விழிக்கு எழுதிய அணிந்துரையும் இடம் பெற்றுள்ளது .அமெரிக்க செல்லும் பரபரப்பிலும் என்னுடைய புதிய நூல் ஆயிரம் ஹைக்கூ நூலுக்கு அணிந்துரையை   மதுரை விமான நிலையத்தில் தந்து மகிழ்ந்தார்கள் .
.
 அணிந்துரைகளின் தொகுப்பு மட்டுமல்ல இலக்கிய சுவையின் அணிவகுப்பாக உள்ளன .பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களிடம் அணிந்துரை வாங்குவது படைப்பாளிக்கு "அக் மார்க்" முத்திரைப் பெறுவதைப் போன்றது .இந்நூலில் 36 நூல்களின் அணிந்துரைகல் உள்ளது .எல்லோருக்கும் 36 நூல்கல் படிக்கும் வாய்ப்பு இருக்காது .இந்த ஒரு நூல் படித்தால் 36 நூல்கள் படித்த மகிழ்ச்சி வரும் என்று அறுதி இட்டுக் கூறலாம் .

நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில்  ஒப்பிலக்கியத்துறையின் தலைவராக இருந்த காரணத்தால் ஆழ்ந்த படிப்பு ,அனுபவம் உள்ளதால் நூலைப் பற்றி  மட்டும் எழுதாமல் நூலில் தொடர்புடைய கருத்துக்களை சங்க இலக்கியத்தோடு ஒப்பிட்டு ,பொருத்தமான இடத்தில திருக்குறளையும் ,மேல் நாட்டு அறிஞர்கள் கருத்தையும் மேற்கோள்  காட்டி மிகச் சிறப்பாக அணிந்துரை வழங்கி  வருகிறார்கள் .அணிந்துரை எழுதுவது  தனிக்கலை .இக்கலையில் வல்லராகத் திகழ்கின்றார்கள்  .அணிந்துரை எழுதுவதில் அவர்க்கு நிகர் அவரே ! என்று சொல்லும் அளவிற்கு அனைத்தும் சிறப்பாக உள்ளன .

.இந்திரா சௌந்தர்ராஜன் !
" தொட்டுத் தொடரும் ஓர் எழுத்துப் பாரம்பரியம் "
" முன்னைப் பழமையும் பின்னைப் புதுமையும் கைகோர்த்து செல்வது இந்திரா சௌந்தர்ராஜனின் மொழி ஆளுமையில் காணலாகும் ஒரு சிறப்புக் கூறு ஆகும் ."
பதச்சோறாக ஒன்று எழுதி உள்ளேன் .
ஒவ்வொரு அணிந்துரைக்கும் மிகப் பொருத்தமான தலைப்பு இட்டு .அந்தத்  படைப்பாளியின் திறமையைப்  பறை சாற்றுவதாக அமையும் .பட்டிமன்றத்திற்கு தலைப்பு வைப்பதிலும் நூலிற்கு பெயர்  சூட்டுவதிலும் ,கட்டுரைக்கு தலைப்பு இடுவதிலும் வல்லவர் .யாரும் சிந்திக்காத கோணத்தில் சிந்தித்து வித்தியாசமாக தலைப்பு வைப்பார்கள் .முதலில் இவர் வைத்த  பட்டிமன்றத் தலைப்பை பின் மற்ற நடுவர்கள் வைத்துக் கொண்ட வரலாறும் உண்டு .

"இயங்கிக் கொண்டே இருக்கும்ஆற்றல்சால்ஆளுமையாளர் ஏர்வாடியார்"   .இந்த வரிகளே கலைமாமணி ஏர்வாடி.ராதா கிருஷ்ணன் அவர்களின் சிறப்பு இயல்புகளை சுட்டுவதாக உள்ளது .
" எடுப்பு தொடுப்பு முடிப்பு என்னும் மூன்று கூறுகளையும் திட்டமிட்டுச் சரிவரக் கையாளும் சதுரப்பாடு வாய்க்க பெற்றவராக  ஏர்வாடியார்  விளங்குகிறார் ."
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களின் எழுத்தில் புதுப் புது சொல்லாட்சியையும் காண முடியும் .சதுரப்பாடு என்ற சொல்லை நான் இப்போதுதான் அறிகிறேன் .

பாரதி கண்ட புதுமைப்பெண்களை பட்டியலிடும் விதமாக " வரலாறு படித்த வைர மங்கையர் "என்ற தொடரை புதுகைத் தென்றல் இதழில் திருமதி பானுமதி தருமராசன் அவர்கள் எழுதி வந்தார்கள் .மாதாமாதம் இதழில் படித்து வியந்தேன் .அவற்றை நூலாக்கியபோது நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களின் அற்புதமான அணிந்துரையுடன் வந்தது . .நூலிற்கு மகுடமாக இருந்தது அணிந்துரை.நூலிற்கு பல்வேறு பரிசுகளும் ,பாராட்டும் கிடைத்தது .அந்த அணிந்துரையும் இந்த நூலில் உள்ளது .

அணிந்துரைகளை மற்றவர்கள் போல கடமைக்கு மேலோட்டமாக எழுதாமல் ,நூல் முழுவதையும் ஆழ்ந்து படித்து ,அறிந்து ஆராய்ந்து ,ஆய்வுரையாக வழங்கி உள்ளார்கள் .சிறு கதைகள் என்றால் கதையில் உள்ள சிறந்த பாத்திரம் ,சிறந்த வசனம் ,நல்ல முடிவு அனைத்தையும் மேற்கோள் காட்டி மிகச் சிறந்த அணிந்துரை நல்கி உள்ளார்கள் .

கவிதை நூல் என்றால் சிறந்த கவிதைகளை மேற்கோள் காட்டி உள்ளார்கள் .நூலில் பல கவிதைகள் இருந்தாலும் ,எனக்கு மிகவும் பிடித்த சில மட்டும் உங்கள் பார்வைக்கு .இதோ .

கவிஞர் க .சண்முக சிதம்பரத்தின் கவிதை .

கண்டதை உண்ப வர்க்கு 
கணக்கிலா நோய்கள் தோன்றும் !
உண்டது செரித்த பின்னே 
உண்டிட நோய்கள் இல்லை !

கவிஞர் ஞான அனந்தராஜ் கவிதை .

மனதைத் திருடினால் இல்லறவாசம் !
மணலைத் திருடினால் சிறைவாசம் !

இந்த நூலில் மேற்கோள்களாக மரபுக் கவிதை ,புதுக் கவிதை ,ஹைக்கூ கவிதை மூன்று கவிதையு ம் உள்ளன .
கம்பம் புதியவன் ஹைக்கூகள்  .

ஓநாய் நரி முதலை 
பரிணாம வளர்ச்சியடைந்தன 
அரசியல்வாதியாய் ..

 
குலம் கோத்திரம் 
மாறாத திருமணம் 
சாதி மறுப்புத் தலைவர் 

பல்சுவை விருந்தாக நூல் உள்ளது .நந்தவனத்தில் நடந்து வந்த உணர்வைத் தந்தது .நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .


-- 

கருத்துகள்