ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

மலரும் நினைவுகள் !

மலரும் நினைவுகள் ! பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில்

மலரும் நினைவுகள் !

பொதிகை தொலைக்காட்சியில்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ! கவிஞர் இரா .இரவி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் !  கவிஞர் இரா .இரவி.

நடிப்பிற்கு சிறந்த  இலக்கணம் வகுத்தவன் நீ
நல்ல கர்ணனை கண்முன் கொண்டு வந்தவன் நீ


தமிழ்த் திரைப்பட வரலாற்றின் நாயகன் நீ
தமிழென அழியாப் புகழைப் பெற்றவன் நீ

பராசக்தி திரைப் படத்தில் அறிமுகமானவன் நீ
பாராத சக்திகளையும் பார்க்க வைத்தவன் நீ


நடிப்பில் நடமாடும் பல்கலைக்கழகம் நீ  
நல்ல வசன உச்சரிப்பைப் புகுத்தியவன் நீ

நாடகத்தில் நடித்துப் பயின்றுத் திரைப்படம் வந்தவன் நீ
திரைப்படத்தில் நடித்து வாழ்க்கையில் நடிக்காதவன் நீ

கூட்டுக்குடும்பப் பெருமையைக் கட்டிக் காத்தவன் நீ
குடும்பத்தின் ஒற்றுமையை பெரிதும் வலியுறுத்தியவன் நீ

அன்பில் பலரை வென்று அரசியலில் தோற்றவன் நீ
நடிப்பில் நிலையாக நின்று திரைஉலகில் வென்றவன் நீ

ஒன்பதுப் பாத்திரங்களையும் வேறுபடுத்திக் காட்டியவன் நீ
ஒன்பது மணி என்றால் எட்டு முப்பதுக்கே இருந்தவன் நீ

தாமதத்தை என்றும் வெறுத்துத் தவிர்த்தவன் நீ
சமாதானத்தை என்றும் எப்பொதும் விரும்பியவன் நீ

போலிப் பிம்பங்கள் மீது நம்பிக்கை இல்லாதவன் நீ
பாத்திரங்கள் எதுவென்றாலும் ஏற்று நடித்தவன் நீ

முகபாவத்தில் நாதஸ்வர வித்துவான்களையே வென்றவன் நீ
முகம் முதல் நகம் வரை நடிப்பைக் காட்டியவன் நீ

வீரபாண்டிய கட்டபொம்மனை அறிமுகம் செய்தவன் நீ
கப்பல்
ஓட்டியத் தமிழனைக் கண் முன் நிறுத்தியவன் நீ

பகுத்தறிவுப் பகலவனிடம் சிவாஜிப் பட்டம் பெற்றவன் நீ
படிக்காதப் பாமரர்களுக்கும் தமிழ்க் கற்பித்த ஆசான் நீ

உணர்ந்தோம் கள்ள வாக்கு அளிப்போரின் திறனை
உனது வாக்கையே வாக்களித்துச் சென்றனர் அன்று

இந்திய தேசத்தில் உன்னைப் போல நடிகர் இல்லை
இந்தியாவோ உனக்கு தேசியவிருதை தரவே இல்லை

செவாலியர் விருதுத் தந்து அயல் நாடுப் பாராட்டியது உன்னை
செந்தமிழனின் திறமையை உலகிற்கு பறை சாற்றியவன் நீ


உன்னைப் போல ஒரு நடிகன் பிறக்க வில்லை
உனக்கு இணையான நடிகன் உலகில் இல்லை 

தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

தாண்டவம் !
நடிப்பு விக்ரம் .
இயக்கம் விஜய் .
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

தெய்வத்திருமகள் தந்த சிறந்த இயக்குனர் விஜய் , நடிகர்
விக்ரம் கூட்டணியில்  படம்  .படத்தில் அதிக எதிர்ப்பார்ப்புடன் சென்றேன் .ஆனால் தெய்வத் திருமகள் அளவிற்கு இல்லாவிட்டாலும் ,படம் பார்க்கும் படி உள்ளது .வழக்கம் போல தீவிரவாதி கதைதான் .
காவல் உயர் அதிகாரி விக்ரம் .அவரது நண்பன் காவல் உயர் அதிகாரியே துரோகியாக மாறும் மசாலா கதைதான் .கதை நடப்பது லண்டனில் என்பதால், லண்டனை மிக நன்றாக படம் பிடித்து உள்ளார்  . லண்டனில் பாம் வெடித்த காட்சிகளை இணைத்து  உள்ளது தெரின்றது .ஆங்கிலம்  பேசும் காட்சிகளில் அலுப்பு தட்டுகின்றது.நடிப்பில் சிவாஜி கணேசன் ,கம ஹாசன் இருவருக்கும் அடுத்து விக்ரம் தான்.  என்று அறுதி இட்டுக் கூ றலாம்.பார்வையற்றவர்கள் கண்களில் பார்வை இல்லாததால் காதுகளே விழிகள். ஒலியை வைத்தே    யார் என்று சொல்லி விடுவார்கள் .நான் மதிக்கும் மாற்றுத் திறனாளிகள் பார்வையற்றவர்கள். பார்வை இழந்த விக்ரமை கொலைக்காரனாக காட்டியது வருத்தமே .ஒரு கொலை அல்ல வருசையாக படம் முழுவதும் கொலை செய்கிறார் . கொலை செய்வது தீவிரவாதிகளைத்தான் என்றாலும் பார்வையற்றவர்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள் .ராஜபார்வை படத்தில் கமலை பார்வையற்றவராக மிக கண்ணியமாக காட்டி இருப்பார்கள் .

திருமணம் வேண்டாம் நன்கு பார்த்து ,தெரிந்து, புரிந்து கொண்ட பின் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருந்த விக்ரமை  கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைக்கிறார் அவர் அம்மா சரண்யா. மழையில் தான்  நனைந்து கொண்டு நாய் குட்டிகளுக்கு குடை பிடிக்கும் மணப்பெண் அனுஷ்காவை பார்த்து வியந்து போகிறார் விக்ரம்.அவரசக் கல்யாணம் ஆகி விட்டதால் இருவரும் உடன் தம்பதியாகமல் உடன்படிக்கை செய்கின்றனர் .இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நண்பராகி  காதலித்து பிறகு தம்பதியாவோம் என்று .ஒப்பந்தப்படி இருவரும் நடந்து கொள்கின்றனர் .இப்படி புரிந்து நடந்தால்  நாட்டில் மணவிலக்கு வராது .

படத்தில் சிறப்பு அம்சம் என்னவென்றால் கணவன் மனைவி புரிதல் பற்றி ,விட்டுக் கொடுக்கும் நல்ல குணம் பற்றி கருத்து உள்ளது .இன்றைக்கு பல தம்பதிகள் உணர்ந்து கொள்ள வேண்டிய தகவல் படத்தில் உள்ளது .பாராட்டுக்கள் .மனைவியின் ஓவியத்தை காட்சிப் படுத்தி நிதி திரட்டி ,மனைவி ஆசைப்பட்ட கண் அறகட்டளை தொடங்க உதவுகிறார் கணவன் . ஓவிய கண்காட்சி திறக்க முக்கிய பிரமுகர்கள் வந்த நேரத்தில் ,என்னவென்று சொல்லாமல் உடன் வா !  என்று செல்லிடப்  பேசியில் அழைக்கிறார் . மனைவி மருத்துவர்  அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருப்பதால் வர மறுக்கிறார் .பிறகுதான் தெரிகிறது ஓவிய கண்காட்சி என்பது இருவருமே கோபப்படாமல் புரிந்து கொள்கின்றனர் .விருந்துக்கு ஒரு பெரிய உணவகத்தில்  முன் பதிவு செய்து விட்டு ,மனைவியை காரில் அழைத்து செல்கிறார் .மனைவியோ எனக்கு தூக்கம் வருகிறது உணவகத்திற்கு வரவில்லை என்கிறார் .உணவக வாசல் வரை வந்து விட்டு திரும்ப வீட்டிற்கு செல்கிறார் .பதிவு செய்து விட்டு வராமல் போனதால் உணவகத்தினர் திட்டுகின்றனர் .   மனைவியுடன் கோபம் கொள்ளாமல் புரிந்து கொள்வார் . தெய்வத் திருமகள் படத்தில் நன்றாக நடித்த அனுஷ்கா மனைவியாக இந்தப்படத்திலும் நன்றாக நடித்து உள்ளார் .பொதுவாக கணவன் எழுதர்ராக இருந்து கொண்டு அலுவலர் என்று போய் சொல்வதுதான் வழக்கம் .ஆனால் காவல் உயர் அதிகாரியாக இருக்கு விக்ரமை மனைவி காவல் உதவி ஆய்வாளாரா ? என்றதும் ஆம் என்கிறார் .பிறகுதான்  காவல் உயர் அதிகாரி என்பது மனைவிக்கு தெரிகின்றது .

மனைவிக்கு பியானோ வாசிக்கத் தெரியும் .கணவருக்கு தெரியாது .ஆனால் மனைவிக்காக பியானோ வாசிக்க கற்று ,பியானோ வாசிப்பில் தேறி விடுகிறார் .

பார்வையற்றோர் ஒலி எழுப்பி  அதன் எதிரொலி வைத்து வவ்வால் போல உணர்ந்து கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் .பார்வையற்றோர் பள்ளியில் பயின்று இந்த ஆற்றலைக் கற்றுக் கொண்டு விக்ரம் தீவிரவாதிகளை கொலை செய்கிறார் .கடைசி காட்சியில் துரோகியாக மாறிய காவல்துறை நண்பன் இரைச்சல் ஒலியை மிகைப் படுத்தி வைத்து விட்டு விக்ரமிற்கு காதில் எதுவும் கேட்க முடியாதபடி செய்து விட்டு , பார்வையற்ற விக்ரமை கொடூரமாக  தாக்கும்  காட்சி பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீர் வர வைத்து விடுகின்றது .நாடகர் விக்ரம் பார்வையற்றவராகவே மாறி மிகச் சிறப்பாக நடித்து உள்ளார். கடைசியில் விக்ரம் இறந்து விட்டாரா ?  என்று தொட்டுப் பார்க்கும் கையை பிடித்துக் கொண்டு விக்ரம் தாக்கும் காட்சி அபாரம் .மனதிற்கு பாரம் .

படத்தின் பெரும் பகுதி லண்டனில் நடப்பதால் லண்டன் காரர்கள்  ஆங்கிலம் பேசுவதால் படம் சில காட்சிகளில் அந்நியப்படுகின்றது.  விக்ரம்  காயம் பட்டதும் மருத்துவமனைக்கு வந்து அனாதை விடுதி குழந்தைகள் வந்து பார்க்கும்  காட்சி நெகிழ்ச்சி .படத்தில் நடிகர் சந்தானம் கார் ஓட்டுனராக நடித்து உள்ளார்.  நகைச் சுவைக் காட்சிகளில் இயக்குனரின் கட்டுப்பாடு உணர முடிகின்றது .நடிகர் சந்தானம் இந்தப் படத்தில் அடக்கி வாசித்து உள்ளார் .நடிகர் நாசர் இலங்கைத் தமிழ் பேசும் லண்டன் காவல் அதிகாரியாக நடித்து உள்ளார் .

ஜி .வி .பிரகாசின் பாடல்களும் பின்னணி இசையும் நன்று .
எமி ஜாக்சன் சமுதாய அக்கறை இல்லாத போது லண்டன் அழகியாக வென்ற போது  நீ அழகு இல்லை  என்கிறார் .விக்ரம் .பார்வையற்றோர்  துன்பம் உணர எமி ஜாக்சன் கண்களைக் கட்டிக் கொண்டு நடந்து விழுந்து காயம் ஆன முகத்தைத் தடவி நீ அழகு என்கிறார் . நெகிழ்ச்சியான காட்சி .சில காட்சிகள் போரடித்தாலும் பல காட்சிகள் மிக நன்றாக உள்ளது.

 அனுஷ்காவை மிக ஆபாசமாக காட்டாமல் மிக மேன்மையான,
மென்மையான மருத்துவராக காட்டிய இயக்குனர் விஜய்க்கு பாராட்டுக்கள் . அரைத்த மாவையே அரைத் தீவிரவாதி கதை . இந்தக் கதைக்கு என் கதை!  உன் கதை ! என்று சண்டை வேறு .பஞ்சாயத்து வேறு ,வழக்கு வேறு .நினைத்தால் சிரிப்பு வருகிறது .

நடிகர் விக்ரம் மிக நன்றாக நடித்து உள்ளார் .தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு ஒரு வேண்டுகோள் .தயவு செய்து தீவிரவாதி கதையை விட்டு விடுங்கள் .பார்த்துப் பார்த்து அலுத்து விட்டது .
 www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

உலக சுற்றுலா தின விழா !

உலக சுற்றுலா தின விழா !

உலக சுற்றுலா தின விழா !

உலக சுற்றுலா தின விழா !

உலக சுற்றுலா தின விழா !

உலக சுற்றுலா தின விழா !

உலக சுற்றுலா தின விழா !

உலக சுற்றுலா தின விழா !

உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சுற்றுலாத்  துறையின் சார்பிலும் ,ட்ராவல் கிளப் சார்பிலும் அன்னை பாத்திமா ,ஓரியண்டல்  கல்லூரிகளின்  மாணவ  மாணவியரின் சுற்றுலா விழிப்புணர்வு பாரம்பரிய நடைப்பயணம் நடைபெற்றது .மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்சுல் மிஸ்ரா அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள் .
பாரம்பரிய சுற்றுலாத் தலங்கள் வழி நடைப்பயணம் சென்று திருமலை நாயக்கர் அரண்மனை அடைந்தது. உதவி சுற்றுலா அலுவலர் இரா இரவி திருமலை நாயக்கர் அரண்மனை வரலாறு கூறினார் .பேராசிரியர் வெங்கட்ராமன் மதுரை வரலாறு வரலாறு கூறினார் .
தொல்லியல்த் துறை உதவி இயக்குனர் நாக கணேசன் , திருமலை நாயக்கர் அரண்மனை கட்டிய மன்னர் கூ  தன் பெயர்பொறிக்க வில்லை.ஆனால் பார்வையிட வருபவர்கள்  பெயர் பொறித்து சேதப்படுத்துகின்றனர் .இது தவறு.என்று எடுத்துக் கூறினார் .
  பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவியருக்கு  பரிசுகள் வழங்கப்  பட்டது . விழாவிற்கான ஏற்பாட்டை சுற்றுலா அலுவலர் க .தர்மராஜ் தலைமையில்  உதவி சுற்றுலா அலுவலர்கள்  இரா இரவி ,சிவகுமார் ,உமா தேவி ,நெல்சன் ,மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்து இருந்தார்கள் .

சனி, 29 செப்டம்பர், 2012

புதிய இணையம் உதயம்

இலக்கிய இணையர் தமிழ்த்தேனீ ,முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் , முனைவர்.நிர்மலா மோகன் அவர்களின் புதிய இணையம் உதயம் பார்த்து மகிழுங்கள் .

http://www.eramohannirmala.com/

மலரும் நினைவுகள் ! இலக்கிய விழாக்களின் புகைப்படங்கள்

மலரும் நினைவுகள் ! இலக்கிய விழாக்களின் புகைப்படங்கள்

மலரும் நினைவுகள் ! இலக்கிய விழாக்களின் புகைப்படங்கள்

மலரும் நினைவுகள் ! இலக்கிய விழாக்களின் புகைப்படங்கள்

மலரும் நினைவுகள் ! இலக்கிய விழாக்களின் புகைப்படங்கள்

மலரும் நினைவுகள் ! இலக்கிய விழாக்களின் புகைப்படங்கள்

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கும், விமானிகளுக்கும்  வரவேற்பு . 

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்  துறையின் சார்பிலும் ,ட்ராவல் கிளப்  சார்பிலும் இனிப்பு ,பொன்னாடை, தொப்பி
,மதுரை சுற்றுலாத்தலங்கள்   புகைப்படங்களின் நாட்காட்டி ஆகியவற்றை  வழங்கி  வரவேற்றனர். உதவி சுற்றுலா அலுவலர்  இரா இரவி ,மற்றும் ட்ராவல் கிளப் பொறுப்பாளர்கள் திரு முஸ்தபா  ,GRT .திரு. முரளி ,மற்றும் GERMANUS திரு. அப்துல்லா ,GRT.திரு வெங்கடேஷ் ஆகியோர் வரவேற்றனர் .

வியாழன், 27 செப்டம்பர், 2012

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வரவேற்பு .

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கும், விமானிகளுக்கும்  வரவேற்பு . 

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்  துறையின் சார்பிலும் ,ட்ராவல் கிளப்  சார்பிலும் இனிப்பு ,பொன்னாடை, தொப்பி
,மதுரை சுற்றுலாத்தலங்கள்   புகைப்படங்களின் நாட்காட்டி ஆகியவற்றை  வழங்கி  வரவேற்றனர். உதவி சுற்றுலா அலுவலர்  இரா இரவி ,மற்றும் ட்ராவல் கிளப் பொறுப்பாளர்கள் திரு முஸ்தபா  ,GRT .திரு. முரளி ,மற்றும் GERMANUS திரு. அப்துல்லா ,GRT.திரு வெங்கடேஷ் ஆகியோர் வரவேற்றனர் .
--

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

பல லட்சம் வாசகர்கள் கண்டு களித்த இலக்கிய இணையம் கண்டு மகிழுங்கள்

பல லட்சம் வாசகர்கள் கண்டு களித்த இலக்கிய இணையம் கண்டு மகிழுங்கள்  www.eraeravi.com
முகப்பு                                             http://www.eraeravi.com/index.html
என்னைப்பற்றி                              http://www.eraeravi.com/home/home.html

கவிதை                                          http://www.eraeravi.com/home/kavithai.php      


கட்டுரை                                         http://www.eraeravi.com/home/katturai.php

நூல் விமர்சனம்                          http://www.eraeravi.com/home/noolvimarsanam.php

புகைப்பட தொகுப்பு                    http://www.eraeravi.com/home/album.html

விருதுகள்                                     http://www.eraeravi.com/home/awards.html

ஒளிப்பேழை                                
http://www.eraeravi.com/home/video.html

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


 www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response


 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் செய்வோம் !!ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

சாட்டை !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

சாட்டை !
இயக்கம் M.அன்பழகன் .
நடிப்பு சமுத்திரக்கனி .
திரைப்பட  விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

                துளி கூட  ஆபாசமின்றி  மிகச் சிறப்பாக இயக்கி உள்ளார் இயக்குனர் அன்பழகன்.சமுத்திரக்கனி ஆசிரியராகவே மாறி பாத்திரத்தில் நடிக்காமல் வாழ்ந்துள்ளார் இப்போது வரும் பல திரைப்படங்கள் குடும்பத்துடன் சென்று பார்க்க முடிய வில்லை .ஆனால் இந்தப் படத்தை   குடும்பத்துடன் சென்று அவசியம் பார்க்க வேண்டும் .தமிழ்த் திரைப்படத் துறையை புதிய
உயரத்திற்கு கொண்டு சொல்லும் முயற்சி. பாராட்டுக்கள் .

அரசுப் பள்ளிகளின்  அவல நிலையை எடுத்துக் காட்டி .ஆசிரியர்கள் மனது வைத்தால் தரத்தை உயர்த்தலாம் என்பதை உணர்த்தும் உன்னதமான  படைப்பு .அரசு மருத்துமனை சுகாதாரமின்றி இருப்பது போல அரசுப்பள்ளி தரமின்றி இருக்கின்றது.

  சில ஆசிரியர்கள் வட்டிக்கு விடுவது ,வகுப்பறையில்  தூங்குவது ,வீட்டு வேலையை மாணவனிடம் வாங்குவது ,சத்துணவுப் பொருட்களை கையாடல் செய்வது ,மாணவியிடம் தவறாக  நடக்க முயற்சிப்பது இவற்றை தோலுரித்து காட்டி விட்டு .மாதா ,பிதா ,குரு ,தெய்வம்  என்றார்கள் தெய்வத்திற்கும் 
முன்பாக குருவை வைத்தார்கள் .அப்படிப்பட்ட குரு எப்படி ? நடந்துக்  கொள்ள   வேண்டும் . என்று கற்பிக்கும் சிறந்த படம் .இந்தப்படத்தை எல்லா ஆசிரியர்களும், மாணவர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம் .

தாயாளன்  ஆசிரியராக  சமுத்திரக்கனி மிக நன்றாக நடித்து உள்ளார் .தோப்புக் கரணம் போடுவது மூளையை சுறுசுறுப்பு ஆக்குகின்றது.ஒரே நேரத்தில் மணி அடித்து தீபாராதனை காட்டுவது  இடது மூளை வலது  மூளை இரண்டும் வேலை செய்ய உதவுகின்றது .சாக் பீஸில் எழுதி, எழுதிய சொல்லைக் கேட்காமல் வண்ணத்தை கேட்டு மாணவர்களின் மூளைக்கு வேலை வைப்பது .மாணவர்களிடம் அன்பு செலுத்துவது, சக தோழன் போல பழகுவது .இப்படி தயா ஆசிரியர் படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பின்னும் மனதை விட்டு அகலாமல் நிற்கிறார் .தயா போன்று எல்லா ஆசிரியர்களும் மாறி விட்டால் நம் நாடு முன்னேறி விடும் .

தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா ஒரு ஆசிரியர் எப்படி? இருக்கக் கூடாது என்பதற்கு  உதாரணமாக வில்லன் பாத்திரத்தில் மிக நன்றாக நடித்து உள்ளார் .த்தின் கடைசி காட்சியில் தயா ஆசிரியருக்கு பல தீங்கும் செய்த போதும் , தண்டிக்காமல்  மன்னித்த உள்ளம் கண்டு நெகிழும்  போது மிக நன்றாக நடித்து உள்ளார் .தலைமை  ஆசிரியாரா வரும் ஜூனியர் பாலையா மிக நன்றாக நடித்து உள்ளார்.
 

மாணவ மாணவிகள் அனைவரும் மிக நன்றாக நடித்து உள்ளனர் .இப்படி பாராட்டிக் கொண்டே இருக்கலாம்  .

சிறந்த இயக்குனர்  வரிசையில் இடம் பிடித்து   விட்டார் அன்பழகன் .ஒரு தந்தை மகனிடம் எப்படி ? நடந்து கொள்ள வேண்டும் .ஒரு மகன் தந்தையிடம் எப்படி ? நடந்து கொள்ள வேண்டும். என்று வாழ்வியல் பாடம் சொல்லும் படம் . நம் நாட்டில் பெண் பிள்ளையிடம் அவள் சம்மதம்இல்லாமலேயே  யாரவது காதல் கடிதம் தந்து விட்டால் உடன் பெண் பிள்ளையின் படிப்பிற்கு முடிவுரை எழுதும் அவலம் எங்கும் நடக்கின்றது.அது தவறு. பெண் பிள்ளைகளை நம்புங்கள் .படிக்க வையுங்கள். என்று படிப்பினை சொல்லித் தரும் படம் . 

மாணவர்களை வெயிலில் முட்டி போட வைத்து தண்டனை தருவது தவறு .அன்பால் திருந்துங்கள் .
ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஒவ்வொரு திறமை  இருக்கும் .எந்த மாணவனையும் உதவாக்கரை ,படிப்பு ஏறாது என்று புறக்கணிக்காதீர்கள் .பெண் ஆசிரியர்கள் ஆடை ஒழுக்கமாக இருக்க வேண்டும் .ஆசிரியர்கள் கெட்ட பழக்கம் இன்றி இருக்க வேண்டும் .இப்படி பல தகவல்கள் படத்தில் உள்ளது .இந்தப் படம் பார்த்த மாணவனுக்கும் ஆசிரியருக்கும் மன மாற்றம் நிகழும் என்று அறுதி இட்டு கூறலாம் .

மாணவி    அறிவழகியை  மாணவன் பழனி விரட்டி விரட்டி ஒரு தலையாக காதலிக்க அவள் மறுக்கிறாள்.படிக்காமல் சுற்றியவன் ஆசிரியர் தயா அவர்களின் அறிவுரை கேட்டு நன்கு படிக்கிறான்.விளையாட்டிலும் ,கலை நிகழ்ச்சியிலும் பள்ளிக்கு முதலிடம் பெற்றுத் தருகிறான் .உடன் மாணவி  அறிவழகி அவளும் காதலிப்பதாக சொல்லுகிறாள் .படம் வழக்கமான மசாலா காதல் கதை ஆகிவிடுமோ ?  என்று நினைக்கும் போது, மாணவன் பழனி பேசும் வசனத்தில் இயக்குனர் முத்திரை தெரிகின்றது ." இந்த பள்ளியில் ஆசிரியராக இருக்கும் என் தந்தை உள்பட எல்லா ஆசிரியர்களும் என்னை வெறுத்தபோது ,ஆசிரியர் தயா என் மீது அன்பு செலுத்தினார் என்னை நம்பினார் .அவர் நம்பிக்கை வீண் போக நான் விரும்ப வில்லை . அறிவழகி நன்றாக படிக்கும் மாணவி   .காதலிப்பது தெரிந்தால் அவள் வீட்டில் அவள் படிப்பதை நிறுத்தி விடுவார்கள் .எனவே நான் காதலிக்க விரும்பவில்லை ".என்று நண்பன் முருகனிடம் சொல்கிறான் .சமுதாயத்தில் மாற்றம் உருவாக்கும் மிக நல்ல படம் .இநதப் படத்தில் கொலை, கொள்ளை ,வன்முறை ,வெட்டு, குத்து ,ஆபாசம் எதுவுமின்றி ய்தரமான படம் தந்துள்ளார். பாராட்டுக்கள்.

 இந்த படத்தை கோடிகளை கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் தந்து ,வெளி நா
டுகள் சென்று கோடிகளை விரையம் செய்து படம் எடுக்கும் மசாலா பட இயக்குனர்கள் அனைவரும் அவசியம் பார்த்து திருந்த வேண்டிய படம் இது .

திக்கு வாய் குறை உள்ள மாணவி வீட்டில் நன்றாக பேசுகிறாள் ..ஆனால், பள்ளிக்கு வந்ததும் சக மாணவர்கள் கேலிக்கு அஞ்சி அதிகம் திக்குகின்றது .இதனை உணர்ந்த ஆசிரியர் தயா , மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி திக்கு வாய் குறை உள்ள மாணவிக்கு படிக்க பயிற்சி தந்து பேச்சுப் போட்டியில் பங்குப் பெற வைக்கிறார் .ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஆசிரியர் தயா.

மாவட்டத்தில் பின்தங்கிய பள்ளியை மாவட்டத்தில் முதல் பள்ளியாக வர வைத்து விட்டு ,ஆசிரியர் தயா படத்தின் இறுதியில் மாணவர்கள் வேண்டுதலையும் மீறி ,அடுத்த மாவட்டத்தில் பின் பின்தங்கிய பள்ளி நோக்கி பயணிக்கும் முடிவும் பாராட்டுக்குரியது .இயக்குனர் M.அன்பழகன்,  இயக்குனர் சமுத்திரகனி வெற்றிக் கூட்டணியாகி விட்டது .
முற்போக்கு சிந்தனை உள்ள இயக்குனர் M.அன்பழகன் .அவர்களிடம் ஒரு வேண்டுகோள் தங்கள் முன் எழுத்தை தமிழில் எழுதுங்கள் .

சனி, 22 செப்டம்பர், 2012

கோட்சேயை விடக் கொடியவன் ! கவிஞர் இரா .இரவி!

கோட்சேயை விடக் கொடியவன் ! கவிஞர் இரா .இரவி!
தமிழ் இனத்தின் அமைதிக் கொன்றவன்
அமைதி பற்றி பேசியுள்ளான் !

சகிக்க முடியாத போர்க் குற்றம் புரிந்தவன்
சகிப்புத் தன்மை பற்றி
பேசியுள்ளான் !

சாட்சிகளின்றி தமிழர்களைக் கொன்றவன்
சாஞ்சி நகரில் மூஞ்சி காட்டிஉள்ளான் !

புத்தர் பல்கலைக் கழகம் அடிக்கல் நாட்டிட
புரட்டனை அழைத்தது அவமானம் !

ஆசையே அழிவிற்கு காரணம் புத்தர்
அழித்து பேராசை  நிறைவேற்றியவன் !

வன்முறை கோரத் தாண்டவம் நடத்தியவன்
வன்முறை வேண்டாம் உபதேசம் செய்துள்ளான் !

பேரழிவை ஈழத்தில் நிகழ்த்தியவன்
பேரழிவு வேண்டாம் போதனை செய்துள்ளான் !

கொலைகாரனைப்  பார்த்தாலே உலகத் தமிழர்
உள்ளங்களில் பொங்குது வெறுப்பு !

பிரதமரும் குடியரசுத் தலைவரும்
கொலைகாரனை வரவேற்றுள்ளனர் !

தமிழர்களின் பகைவன் நண்பனா ?
தமிழர்களின் நெஞ்சில் தீ வைத்துள்ளனர் !

தமிழன் மறக்க மாட்டான் என்றும்
தேர்தலில்
தக்க பாடம் புகட்டுவான் !

கோட்சேயை விடக் கொடியவன்
காந்தி பெயரை உச்சரிக்கிறான் !


அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !

நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

50/ 22 கணபதி நகர் ,செட்டிகுளம் சந்திப்பு ,நாகர்கோவில் . விலை ரூபாய் 35
செல் 9487172501


நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் அவர்கள் குமரித் தமிழ் வானம் என்னும் இலக்கிய
அமைப்பை நிறுவி, தமிழ்ப்பணி செய்து வருபவர் .உலகப் போது மறையான திருக்குறளின் பெருமையைப் பறை சாற்றும் விதமாக பல அறிஞர்களின் அறிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். பாராட்டுக்கள் .கவிஞர் நா .முத்திலவேனார் அணிந்துரை மிக நன்று .   

திரு  பொ.வின்சென்ட் அடிகளார் கவிதை மிக நன்று .

திருக்குறள் தலைவன் திருவள்ளுவரின்
தேன்தமிழ் சுவைத்துத் திளைத்திட வாரீர்
திருக்குறள் தூதைத்  தெருவெல்லாம் முழங்கும்
தமிழனின் பெருமை தழைப்பதும் காணீர் .

இந்த நூலில் அறிய தகவல்கள் கட்டுரைகள் உள்ளது .முனைவர் பா .வளன் அரசு ,வீரமாமுனிவர் ,சிலம்புச் செல்வர் ம .பொ.சி ,பாவலரேறு    பெருஞ்சித்திரனார்    ,ஜி .யூ .போப் ,கவிமணி பன்மொழிப் புலவர்  அப்பாத்துரையார் ,தந்தை பெரியார் ,அறிஞர் அண்ணா ஆகியோர் பற்றிய சிறு குறிப்பும் ,திருக்குறள் பற்றி அவர்களின் கருதும் நூலில் இடம் பெற்றுள்ளது .பாராட்டுக்கள் .

வீரமாமுனிவரின் தேம்பாவணியில் திருக்குறள் உள்ளது என்ற ஆய்வுக்கட்டுரை  மிக நன்று .
உழுதுண்டு ,மழித்தலும்,அன்பின் வழிய என்று தொடங்கும்
திருக்குறள் தேம்பாவணியில் உள்ளதை பாடல்களுடன் எடுத்துக் காட்டி உள்ளார் .தமிழகத்தின் எல்லைகளை போராடிக் காத்த  ம .பொ.சி. அவர்களின் சிறு வரலாறு .

திருக்குறள் பற்றி 
ம .பொ.சி. அவர்களின்  கருத்து நூலில் உள்ளது .

" பிறரிடம் குற்றம் காண்போர் தம்மிடமுள்ள குற்றங்களையும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும் .உலகம் உய்ய மன்னுயிர் தழைக்க ,இந்த நன்நெறி ஒன்றே வழி " என்று கூறுகிறார் வள்ளுவர் .

இந்தக் கருத்தைப் படித்தவுடன் எனக்கு அறிஞர் அண்ணா சொன்ன கருத்து நினைவிற்கு வந்தது ."பிறரை குற்றம் சொல்லி ஆள் காட்டி விரலை நீடும் போது மற்ற மூன்று விரல்கள்  நம்மைக் காட்டும் ."

பாவலரேறு  பெருஞ்சித்திரனார் பார்வையில் திருவள்ளுவம் !

" திருக்குறள் தமிழினம்
காக்கத் தோன்றிய ஒரு பட்டய ஆவணப் பதிவு நூலே ! வெறும் மறைஎன்று கூறி அதை மக்களுக்கு எட்டாத தூரத்தில் வைத்தோ ,பொதுமறை என்று  கூறி அதைத் தமிழின நலத்திற்குப் பயன்படாத வகையில் அவ்வினதினின்று பிரித்து அப்புறப் படுத்தியோ விட வேண்டாம் .என்று வேண்டியும் கொள்கிறோம் ."  

திருக்குறளை  முதன் முதலில்  ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகத்தார் அனைவரும் கற்றுணர்ந்து   கொள்ளும் வகையில் திருவள்ளுவரின் பெருமையை நிலை நாடியவர் டாக்டர் ஜி . யூ.போப் அவர்கள் திருக்குறள் பற்றி.

" உலகத்தில் உள்ள இலக்கியங்களுள் திருக்குறளுக்கு இணையான நூல் ஒன்றுமில்லை ."

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் திருக்குறள் பற்றி பாடிய பாடல் .

வள்ளுவர் தந்த திருமறைத் - தமிழ்
மாதின் இனிய உயிர்நிலையை
உள்ளம் தெளிவுறப் போற்றுவோமே ; என்றும்
உத்தமராகி ஒழுகுவோமே !


பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார்  பார்வையில் திருவள்ளுவம் .

வள்ளுவர் திருக்குறளை விடப் பழமையான நூல் உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை .தமிழில்
கூத் தொல்காப்பியம் ஒன்றுதான் இருக்கிறது .அஃது இவ்வளவு பழமையான நூலாகவும் இருக்கிறது .இன்று உலகின் மிகப் புதிய நூலாகவும் இருக்கிறது .என்னென்றால் அன்றைய தமிழகமே இன்றையஉலகின் வித்து. வருங்கால உலகின் கருமூலம்  அதுவே .

தந்தை பெரியார் பார்வையில் திருக்குறள் .

கம்பராமாயணத்தில் 100 பாட்டும் ,கந்த புராணம்  அல்லது பெரிய 
புராணத்தில்  200 பாட்டும் படிப்பதைக் காட்டிலும் திருக்குறள் பாட்டுப் படிப்பது எவ்வளவோ அறிவூட்டவல்லது .

அறிஞர் அண்ணா பார்வையில்  
திருக்குறள் .

ஒரு பெரிய பாரா
ங்  கல்லை விட  ஒரு சிறிய வைரக்கல் எப்படி மதிக்கப் படுகிறதோ அப்படித்தான் இரண்டு அடிகளால் ஆன குரல் மதிக்கப் படுகிறது . 

தகவல்கள் ; திருக்குறளில் இல்லாத உயிர் எழுத்து ஔ. முதல் திருக்குறள் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார் .

திருக்குறள் பற்றிய பல அறிய தகவல்களின் தொகுப்பு நூல் இது .
உலகின் முதல் மொழி தமிழ் .உலகின் முதல் மனிதன் தமிழன் என்பதை மெய்பிக்கும் நூல் இது . நல்ல  முயற்சிநூல் ஆசிரியர் தமிழ் வானம்
செ. சுரேஷ் 
அவர்களுக்கு பாராட்டுக்கள் .

சுட்டிப் பூங்கா.நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் . விமர்சனம் கவிஞர் இரா .இரவி

சுட்டிப் பூங்கா

நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன்             
செல் 8903926173

வெளியீடு மின்னல் கலைக்கூடம் 117.எல்டாம்ஸ்  ரோடு ,சென்னை .18   விலை ரூபாய் 30

செல் 9841436213.

  விமர்சனம் கவிஞர் இரா .இரவி

குழந்தை இலக்கியமாக குழந்தைகளுக்கான ஹைக்கூ நூலாக மலர்ந்துள்ளது .பெரியவர்களும் படித்து மகிழலாம் .மழலைகள் பற்றிய மலரும் நினைவுகளை மலர்விப்பதோடு மகிழ்ச்சியும் தருகின்றன. ஹைக்கூ கவிதைகள் அளவில் மூன்று  வரிகள்தான்  .ஆனால் கருத்து ஆழத்தில் அளவிட முடியாதது. ஹைக்கூ கவிதைகளின் உணர்வுகள், தாக்கங்கள்    பெரிது  .
நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் அவர்களின் முதல் நூல் இது .மின்மினி இதழ் ஆசிரியர் ,கவிஞர் கன்னிக் கோவில் இராஜா அவர்களின் அணிந்துரை அழகுரை .பதிப்பாளர் பொதிகை மின்னல் இதழ் ஆசிரியர் கவிஞர் வசிகரன்    இவர்கள் இருவரும் தந்த க்கத்தால்தான் இந்த நூல் வந்தது என்று நூல் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் .முதல் ஹைக்கூ கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது .பாராட்டுக்கள் .

குழந்தைக்கு முத்தம்
குழந்தையின் முத்தம்
பின்னதே  அடர்
த்தியானது !

இந்த ஹைக்கூ படித்தவுடன் படித்த வாசகர்களுக்கு
குழந்தைக்கு தந்த முத்தமும் ,குந்தை தந்த முத்தமும் நினைவிற்கு வந்து, ஒப்பீடு நடத்தி கவிஞர் கூற்று உண்மை என்ற முடிவிற்கு வந்து விடுவார்கள் .இதுதான் ஒரு படைப்பாளியின் வெற்றி .

கை நோகிறது
இறக்கினால்
மனம் நோகிறது !


உலகின் ஒப்பற்ற உறவான அம்மாவின் மன நிலையை படம் பிடித்துக் காட்டும் ஹைக்கூ .

குழந்தை எழுதியது
கியூட்டான ஹைக்கூ
அம்மா !

 
கியூட்டான என்ற ஆங்கிலச் சொல்லை தவிர்த்து அழகான என்ற அழகு தமிழ்ச் சொல்லை பயன் படுத்தி இருக்கலாம் .அடுத்த பதிப்பில் ஆங்கிலச் சொல் தவிர்த்திடுங்கள் .தமிழ்த் திரைப்படப் பாடல் ஆசிரியர்கள் செய்யும் தமிழ்க்  கொலையை , தரமான படைப்பாளிகள் செய்ய வேண்டாம் என்பது என் வேண்டுகோள் .

திங்கட்கிழமை
பூத்தாலே
வாடிவிடுகின்றன
பொம்மைகள் !

நல்ல ஹைக்கூ இது .குழந்தைகள் சனி ஞாயிறு பொம்மைகளோடு விளையாடும் .
திங்கட்கிழமை வந்து விட்டால் பள்ளிக்கு அனுப்பி விடுவார்கள் .பொம்மைகளைப் பிரிகின்றோம் என்று குழந்தைகள் உள்ளம் நோகும் .கவிதைக்கு கற்பனை அழகு ! பொம்மைகள் வாடுவதாக எழுதியது படைப்பாளியின் திறமை .

தாய் உள்ளத்தை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .தாயின்  உச்சரிப்பை உற்று நோக்கி ஹைக்கூ வடித்துள்ளார் .

என்னமோ பேசுகிறது
என்னமாய்
பேசுகிறது
என்கிறாள் தாய் !

குழந்தைகளின் குறும்புகள் ரசித்து மகிழலாம் .ஆர்வத்தோடு கவனிக்க வேண்டியது முக்கியம் .

குறும்புகளே
அழகாய் இருக்கிறது
அரும்புகளிடம் !

எள்ளல் சுவையுடன் ஹைக்கூ வடித்துள்ளார் .படித்ததும் சிரிப்பு வந்து விடும் .

தேர்வில் முட்டை
குழந்தை சொன்னது அப்பாவிடம்
ஆசிரியைக்கு ஒன்னும் தெரியல்ல  !


இன்று தனிக் குடும்ப  வாழ்கையே எங்கும் பெருகி விட்டது .வீட்டில் ஆலோசனை வழங்கிட, குழந்தைகளுக்கு கதை சொல்லிட தாத்தா ,பாட்டி இருப்பதில்லை  . அதனை உணர்த்திடும் ஹைக்கூ .

உறங்கிட
குழந்தை தயார்
கதை சொல்ல யார் !


இந்து பள்ளிகளே சிறைக் கூடங்களாக மாறி விட்டன .பிடிக்காத மொழியில் பாடங்களை கட்டாயப் படுத்தி படிக்க வைக்கும் அவலம் .கவிக்கோ அப்துல் ரகுமான்  சொன்னது போல புத்தகங்கள் குழந்தைகளை கிழித்து விடுகின்றன .அதனால்தான் குழந்தைகள் விடுமுறை நாளை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர் .

கோடையும் குளிர்ந்தது
குழந்தைகளுக்கு
கோடை விடுமுறை ! 


நிகரில்லா உறவான  நிகரில்லா உறவான அன்னையின் மேன்மையை அழகாக உணர்த்தும் ஹைக்கூ .

உயிரை
பணயம் வைத்து
உயிர் தந்தவள் தாய் !


நம் நாட்டில் கூலி  வேலை பார்த்தாவது தன் குழந்தையைப் படிக்க வைக்கும் பெற்றோர்கள் உள்ளனர். அவர்களின் ஒப்பற்ற தியாகத்தை நினைவூட்டும் ஹைக்கூ இதோ !

பிள்ளை புத்தகம் சுமக்க
செங்கல் சுமக்கிறாள்
தாய் !

தமிழ்நாட்டில் ஆங்கிலப்
பள்ளிகளில் குழந்தைகள் தமிழில் பேசினால் அபராதம் கேட்கும் அவலம் தமிழகத்தில் உள்ளது .

மழலைகள்  விரும்புவதில்லை ஆங்கில மொழியை ,ஆனால் பெற்றோர்கள் திட்டமிட்டு பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சு கலக்கின்றனர் .அம்மா அப்பா என்ற அழகு மிக்க தமிழ்ச் சொற்கள் இருக்க மம்மி டாடி என்று அழைக்க வற்புறுத்துகின்றனர் .ஆங்கிலேயர் யாராவது தங்கள் குழந்தைகளை அவர்கள் தாய் மொழி தவிர்த்து பிற மொழியில் அழைக்க சொல்வார்களா ?  சிந்திக்க வேண்டும் .அதனை உணர்த்தும் ஹைக்கூ.

ஆங்கிலப் பள்ளி வாசலில்
அம்மா என்றது
விழுந்த குழந்தை !

வாழ்வியல் தத்துவம்  உணர்த்தும் ஹைக்கூ .

குழந்தை இருந்தால் மகிழ்ச்சி
குழந்தையாய் இருந்தால்
என்றுமே மகிழ்ச்சி !

நகரத்து குழந்தைகளுக்கு நெல் விளையும் நிலம் பற்றி எதுவுமே தெரியாது வளர்க்கின்றனர்

தெரிகின்றது கணினி
தெரியவில்லை கழனி
தற்கால குழந்தைகள் !   


நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன்  அவர்களுக்கு வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .தொய்வின்றி  எழுதுங்கள் .


--

புதன், 19 செப்டம்பர், 2012

நகர் முரசு இணையத்தில் கவிஞர் இரா .இரவி கவிதை

நகர் முரசு இணையத்தில் கவிஞர் இரா .இரவி கவிதை

http://www.nagarmurasu.com/user/newsmain/news_main_view.cfm?id=3477
--

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில் தமிழக சுற்றுலாத் தலங்களில் தூய்மையைப் பேணும் விழா !

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில் தமிழக சுற்றுலாத்  தலங்களில் தூய்மையைப் பேணும் விழா !

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில் தமிழக சுற்றுலாத்  தலங்களில் தூய்மையை பேணும் விதமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் ,திருமலைநாயக்கர்  அரண்மனைக்கும் குப்பைகள் போடும் பெட்டியை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு .அன்சுல் மிஸ்ரா அவர்கள்  கோயில் இணை ஆணையரிடமும் ,அரண்மனை உதவி இயகுனரிடமும் வழங்கினார் .இந்த விழாவில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் ,மாநகராட்சி பொறியாளர்களும், செய்தி மக்கள் தொடர்பு அலுவலரும் கலந்து கொண்டனர் . விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் கொடி அசைத்து தொடங்கி  வைத்தார்கள் .பேரணியில் ஓரியண்டல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவிகளும் ,அவ்வை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவிகளும் ,ஆயிரம் வைசிய    மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் ,சுற்றுலா வழிகாட்டிகளும் கலந்து கொண்டனர் .சுத்தம் ,சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு துண்டறிக்கை பொது மக்களுக்கு வழங்கப் பட்டது .விழாவிற்கான ஏற்பாடுகளை சுற்றுலா அலுவலர் க .தர்மராஜ் தலைமையில் உதவி சுற்றுலா அலுவலர்கள் இரா .இரவி ,சிவகுமார் ,உமா தேவி ,நெல்சன் ,மற்றும் பணியாளர்கள் செய்

படித்ததில் பிடித்தது ! ஹைக்கூ முனைவர் ச.சந்திரா.

படித்ததில் பிடித்தது !

ஹைக்கூ  முனைவர்  ச.சந்திரா.

விட்டுக்கொடுப்பதும்
 தட்டிக் கேட்பதும்
 நட்பு!

சோலையிலும் பாலையிலும்
 கரங்கொடுப்பது
 நட்பு!

தற்பெருமை தலைக்கனம்
துளியும் இல்லாதது!
நட்பு!

வரவுசெலவு கணக்குவழக்கு
என்றும் பார்க்காது!
நட்பு!

எதிர்பார்ப்பு இல்லாதது!
ஏமாற்றம் காணாதது!
நட்பு!

கண்ணீரைப் பன்னீராக்கும்!
கனலைச் சந்தனமாக்கும்!
நட்பு!

இன்பத்தை இருமடங்காக்கும்!
துன்பத்தைச் சரிபாதியாக்கும்!
நட்பு!

இமயத்தை எட்டும் தூரமாக்கும்!
குமரியைக் கூப்பிடும் தூரமாக்கும்!
நட்பு!
       

NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news :: துபாயில் மதுரைக் கவிஞரின் நூல் அறிமுக நிகழ்ச்சி

NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news :: துபாயில் மதுரைக் கவிஞரின் நூல் அறிமுக நிகழ்ச்சி

NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news :: துபாயில் மதுரைக் கவிஞரின் நூல் அறிமுக நிகழ்ச்சி

NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news :: துபாயில் மதுரைக் கவிஞரின் நூல் அறிமுக நிகழ்ச்சி

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ஆதி .பாலசுந்தரன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி

தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !

நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ஆதி .பாலசுந்தரன் .

வெளியீடு மருத்துவர்  கு .  சிதம்பர நடராஜன் . நாகர்கோவில்   விலை ரூபாய் 70.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நாகர்கோவில் கவிதை உறவு அமைப்பின் சார்பில் நாகர்கோவிலில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு கலை மாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணன் , தமிழ்த்தேனீ  இரா .மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ,கவிஞர் திருநாவுக்கரசு மற்றும்  நானும் கலந்து கொண்டோம் .இந்த நூலை தமிழக வனத்துறை அமைச்சர் பச்சைமால் அவர்கள் வெளியிட்டார்கள் .வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது .விழா ஏற்பாட்டை மருத்துவர்  கு .  சிதம்பர நடராஜன் செய்து இருந்தார்கள் .
நாகர்கோவில் மருத்துவர்  கு .  சிதம்பர நடராஜன் அவர்கள் சேவைச் செம்மல் குற்றாலிங்கம் - மீனாட்சி அம்மாள்  அறக்கட்டளை நிறுவி , அதன் மூலம் இந்த நூலை வெளியிட்டு , "இந்தப் புத்தக விற்பனைத் தொகை அறக்கட்டளை நிதியுடன் ஏழை  மாணவர் கல்வி மேம்பட உதவும் " என்ற அறிவிப்பும் நூலில் பதிவு செய்துள்ளார்கள் .பாராட்டுக்கள் .நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ஆதி .பாலசுந்தரன் அவர்களின் ஒப்பற்ற உழைப்பை உணர முடிகின்றது .குமரி மாவட்ட பெயர்கள் ஆய்வு செய்து நூல் எழுதி உள்ளார்கள் .தமிழின் பெருமையைப் பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .தமிழுக்கு உரம் சரக்கும் நூல் இது. தமிழருக்கு பெருமை சேர்க்கும் நூல் இது . ஊரின் ஒவ்வொரு பெயரும் காரண காரியங்களுடன் அமைத்துள்ளது என்பதை இலக்கியச் சான்றுகளுடன் எழுதி  உள்ளார் .

 " வேண்டுமென்றே  மறைக்கப்பட்டும்  உச்சரிப்புப் சோம்பலால் சிதைத்தும் ,அழித்தும்  மனம் போனவாறு திரித்தும் ,கற்பனைக் கதைகளின் அடிப்படையிலும் தொடக்க காலத்  தமிழ் பெயர்களை அறவே மாற்றினர்.      நடு +ஆலம் =  "நடுவாலம் "என்பதை "நட்டாலம்" என எழுதுகின்றனர் . ( NATALAM )என ஆங்கிலத்தில் எழுதி தமிழில் உச்சரிப்பதால் ஏற்பட்ட விளைவு .  

இந்த தகவலை நூலில் படித்தவுடன் மதுரையில் இதுபோன்று நிகழ்ந்துள்ள தகவல் என் நினைவிற்கு வந்தது .மழை நீர் எவ்வளவு வந்தாலும் வெளியே தள்ளாத குளம் என்பதால் தல்லாகுளம் என்று இருந்ததை ஆங்கிலேயர் ஆங்கிலத்தில் ( TALLAKULAM ) என்று எழுதியதை உச்சரித்து இன்று தல்லாகுளம் என்று ஆகி விட்டது .

மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தின்   பெயர் " ஊர் மெச்சிய குளம் " நல்ல தமிழ்ப்பெயர்  ஊமச்சிகுளம்   என்றாகி விட்டது .நூல் படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் அவரவர் ஊர்களில் நடந்த இது போன்று நினைவிற்கும் வரும் .
இடப் பெயர் ஆய்வை மிக நுட்பமாக நிகழ்த்தி உள்ளார் .நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர்
ஆதி .பாலசுந்தரன்.


ஊர்ப் பெயர்கள் ; குறிச்சி ,ஊர் ,குடி ,பாடி ,சேரி , கோடு,பட்டினம் ,பாக்கம் ,காவு ,காடு ,கா என்றெல்லாம் ஊர்களுக்குப் பொதுப் பெயர் இட்டு வழங்கினர் .நிலங்களுக்கு ஏற்ற வகையில் இப்பெயர்கள் அமைத்தனர். இவை இடுகுறிச் சிறப்புப் பெயர்களாக அமைந்தன .நூல் முழுவதும் பல அரிய தகவல்கள் உள்ளது .

கல் + ஆலம் + குடி = "கல்லாலங்குடி" என்பது பேச்சு வழக்கில் கல்லாங்குடி என்றானது.
இடை + ஆலம் + குடி =  இடை ஆலக்குடி , "இடையாலக்குடி " என்பதை "இடலாக்குடி ","எடலாக்குடி" என்றானது .

ஆலமரப் பெயர் ஊர்கள் ; ஆலமரப் பெயர் கொண்ட பல ஊர்கள் தமிழ்நாட்டில் உள்ளன .
ஆலம்பாறை ,ஆலங்கோடு ,ஆல
ஞ்சோலை ,ஆலம்பாடி , ஆலங்கானம் ,ஆலந்துறை ,ஆலவாய், ஆலம்பொழில் ,ஆலடியூர் ,ஆலடிப்பட்டி ,ஆலங்குளம் என்பன . இந்தத் தகவலைப் படித்ததும் உடன் என் நினைவிற்கு வந்தது . மதுரைக்கு ஆலவாய் என்ற பெயர் உண்டு .மதுரை அருகே ஆலங்குளம் என்ற ஊர் இன்றும் உள்ளது .

குமரி மாவட்டத்தில் ஆல் + ஊர் = ஆலூர்  என்பது   ஆளூர் ஆனது .
குறுமை + ஆலம்  = குற்றாலம் .

நூல் ஆசிரியர் ஆதி .பாலசுந்தரன் அவர்கள் தமிழ் அறிஞர் என்பதால் தொல்காப்பியம் , சங்க இலக்கியம் போன்றவற்றில் இருந்து பாடல்களின் சான்றுகளுடன் நூல் எழுதி பிரமிக்க வைத்துள்ளார் .

கள்ளியங்காடு   என்னும் சங்ககாலக் காட்டுப் பெயர் ,அப்படியே இங்கே சொல்லப்படுவது குமரியின் தொன்மைக்கு மேலும் ஒரு சான்றாகும் ." பரல் கல் 
விளை "  என்னும் ஊர்ப் பெயரை பேச்சுவழக்கில் "பறக்கை" எனச் சொல்கிறார்கள்  .

குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டு வகைகளில் ஒன்று இணையம் என்பது , சங்ககால
ப் பெயர் . (VEGITATION SURVEY, BIOMASS )என இப்போது தாவர அறிவியலில் கூறப்படும் செய்திகளை நம் முன்னோர், அவர்களின் அனுபவத்திற்கு ஏற்ப அறிந்து இருந்தனர் .இப்படி பல அறிய தகவல்கள் நூலில் உள்ளது .

"ஊறல் வாய் பொழில்" என்ற நல்ல தமிழ்ப் பெயர் இன்று "ஊரல்வாய்மொழி " என்றானது .

குறும்பனை ,ஏழ்தெங்கு, அஞ்சுதெங்கு ,ஒற்றைத்தெங்கு ஆகிய குமரிக்கண்டம் சார்ந்த ஊர்கள் இப்போதும் குமரி மாவட்டத்தில் உள்ளன .

தமிழகத்தில் திருநின்றவூர் சென்னைக்கு அருகில் உள்ளது .
திருநின்றவூர் எனற இதே பெயரில் காஸ்மீரத்தில்  ஒரு ஊர் இருந்தது .வட மொழி வழக்கிற்கு ஏற்ப ஸ்ரீநகர் ஆனது .இமயம் முதல் குமரி வரை தமிழர்களே வாழ்ந்தார்கள் , ஆண்டார்கள் என்பதை உணர்த்தும் மிக நல்ல ஆய்வு .பாராட்டுக்கள் .
கேரளத்தின் கடற்கரையிலும் "அலை வாய் " என்னும் ஊர் உள்ளது .இதனை ( ALWAY ) என ஆங்கிலத்தில் எழுதியதன் விளைவாக ஆல்வே ,ஆல்வாய் என வழங்கப் பட்டு விட்டது .

ஆய்வில் குமரி மாவட்டம் மட்டும் ஊர்ப்  பெயர் எழுதி உள்ளார்கள் .விரைவில் தமிழகம் முழுவதற்குமான ஊர்ப்  பெயர்  ஆய்வு செய்து எழுத வேண்டும் .அந்த நூலையும் மருத்துவர்  கு .  சிதம்பர நடராஜன் அவர்கள் வெளியிட்டு உதவ வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கின்றேன் .இந்த நூல் படித்து முடித்தவுடன் எனக்கும் ஆய்வு உள்ளம் மலர்ந்தது .எள் + நெய் =  எண்ணை .எனவே எள்ளில் இருந்து வரும் எண்ணையைத்தான்   எண்ணை என்று சொல்ல வேண்டும் .தேங்காய் + நெய் = தேங்காய்நெய் ஆனால் நாம் தேங்காய் எண்ணை என்று சொல்கிறோம். கடலை + நெய் =கடலைநெய்.ஆனால் நாம் கடலைஎண்ணை என்று சொல்கிறோம்.
இனி வரும் காலங்களில் காரண காரியம் அறிந்து வைத்துள்ள நல்ல தமிழ்ப் பெயர்களை .அதன் உண்மையான பொருளிலேயே அழைப்போம் .எழுதுவோம் .பாராட்டுக்குரிய  நூல் .பயனுள்ள நூல் .நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ஆதி .பாலசுந்தரன் அவர்களுக்கும் , வெளியிட்டு உதவிய
 மருத்துவர்  கு .  சிதம்பர நடராஜன்
அவர்களுக்கும் பாராட்டுக்கள் .

திங்கள், 17 செப்டம்பர், 2012

மானம் இருந்தால் மதியாதோர் தலை வாசல் மிதிக்காதே ! கவிஞர் இரா .இரவி .

மானம் இருந்தால் மதியாதோர் தலை வாசல் மிதிக்காதே !   
கவிஞர் இரா .இரவி
.


தமிழ் இலக்கியம் படித்து இருந்தால்
தன் மானம் தெரிந்து இருக்கும் !

கொலைகாரனே வ
ராதே ! என்று
கொள்கைக் கூட்டம் குரல் தருகின்றது !

மீறி நீ  வந்தால் உனக்கு
த்தான் அவமானம் மானம்   பற்றிய புரிதல் இல்லாதவனே !

இனத்தைக்  கொன்று அழித்து விட்டு
இளித்துக் கொண்டு வருகிறாய் ! நீ !

புத்தனின் பெயர் சொல்ல அருகதை இல்லை
பேராசை பிடித்த பித்தன் நீ !

மதம் பரப்ப வருகிறாயா ?
மதம் பரப்ப வருகிறாயா ?


அந்த மதத்தில்   நீ  இருப்பது
அந்த மதத்திற்கு இழுக்கு !

எறும்பை
க் கூட மிதிக்கக் கூடாது
என்பது அவர்கள் நோக்கம் !

இனத்தையே
கூண்டோடு அழித்த
ஈவு இரக்கமற்ற கொடூரன் நீ !

தண்டனை
ப் பெற வேண்டிய குற்றவாளி நீ
தாரளமாக இந்தியாவிற்கு வந்து போகலாமா ?

அய் .நா .மன்றமோ வேடிக்கைப் பார்க்கின்றது 
இந்தியாவோ ரத்தினக் கம்பளம் விரிகின்றது !

மனசாட்சி என்ற ஒன்று உனக்கு இருக்குமானால்
மறுபரிசீலனை  செய்து பயணத்தை ரத்து செய் !

உன்னால் நடந்த கலவரங்கள் போதும்
உன்னால் இனி ஒரு கலவரம் வேண்டாம் !
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

தியாகி வைத்தியநாதர் நினைவேந்தல்நிகழ்வில் 23.2.2019

தியாகி வைத்தியநாதர் நினைவேந்தல்நிகழ்வில் 23.2.2019