இடுகைகள்

August, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக் காசு:

படம்
திருவள்ளுவரின் திருமேனி
தாங்கிய தங்கக் காசு:

தமிழா நீ பேசுவது தமிழா?

தமிழா நீ பேசுவது தமிழா?

தமிழா நீ பேசுவது தமிழா?
தமிங்கிலம் நீ பேசுவது அழகா?

உணவுக் கலப்படம் உடலுக்குக் கேடு
மொழிக் கலப்படம் மொழிக்குக் கேடு

என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில்
ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில்
தமிழைப் பிழையின்றித் தமிழாகவேப் பேசு
தமிழில் பிறமொழி கலந்து பேசக் கூசு
தொலைக்ககாட்சியில் தினமும் தமிழ்க்கொலை நடக்குது
தொல்லைக்காட்சி நிலை காண நெஞ்சம் கொதிக்குது
பத்துச் சொற்களில் இரு சொல் தமிழ்
பெயரோதமிழ் மாலை என விளம்பரங்கள்
தமிழா உன் அடையாளம் தமிழ்
தமிழ் சிதைந்தால் தமிழன் சிதைவான் உணர்
தமிழா உன் முகவரி தமிழ்
தமிழ் அழிந்தால் தமிழன் அழிவான் எழு
நமக்கென்ன என்று நீ இருந்து விட்டால்
நாளைய வரலாறு உன்னைப் பழிக்கும்
உலகின் முதன்மொழி தமிழ்மொழி
உலக மொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி
பிறமொழிகலந்து பேசுவதை விட்டுவிடு
பண்டைத் தமிழ்மொழிக் காத்திட நீ விழித்திடு
செம்மொழி நம் மொழி சிறப்பை உணர்ந்திடு

புதிய ஹைக்கூ

புதிய ஹைக்கூ இரா .இரவி

கரைந்தது காகம்
வந்தனர் விருந்தினர்
காகத்திற்கு

அவசியமானது
புற அழகல்ல
அக அழகுதான்

சண்டை போடாத
நல்ல நண்பன்
நூல்

ரசித்து படித்தால்
ருசிக்கும் புத்தகம்
வாழ்க்கை

சக்தி மிக்கது
அணுகுண்டு அல்ல
அன்பு

அழகிய ஓவியிமான்து
வெள்ளை காகிதம்
துரிகையால்

மழை நீர் அருவி ஆகும்
அருவி நீர் மழை ஆகும்
ஆதவனால்

ஒன்று சிலை ஆனது
ஒன்று அம்மிக்கல் ஆனது
பாறை கற்கள்

காட்டியது முகம்
உடைந்த பின்னும்
கண்ணாடி

உருவம் இல்லை
உணர்வு உண்டு
தென்றல்

பாத்ததுண்டா மல்லிகை
சிவப்பு நிறத்தில்
வாடா மல்லிகை


கூர்ந்து பாருங்கள்
சுறுசுறுப்பை போதிக்கும்
வண்ணத்துப்பூச்சி

இல்லாவிட்டாலும் கவலை
இருந்தாலும் கவலை
பணம்

உடல் சுத்தம் நீரால்
உள்ளத்தின் சுத்தம்
தியானத்தால்

மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
மயில் இறகு குட்டி போடும்

பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் தொட்டி மீன்கள்

அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
அம்மாவிற்கு விடுமுறை

இளமையின் அருமை
தாமதமாக புரிந்தது
முதுமையில்

தோற்றம் மறைவு
சாமானியர்களுக்குதான்
சாதனையாளர்களுக்கு இல்லை

ஹைக்கூ

மலர் சூட இரா .இரவி
மலருக்கு தடை
விதவை

இயற்கையா? செயற்கையா?
கூந்தல் மணம் மட்டுமல்ல
பெண்களின் மனமும்தான்

மலரே மலர் சூடியது
கனியே கனி சுவைத்தது
என்னவள்

என்னைவிட என் பேனா
அதிகம் நேசிக்கிறது அவளை
அவளைப்பற்றியே எழுதுகிறது.

விலை மதிப்பற்றது
விற்க்க கூடாதது
காதலி தந்த பரிசு

உதட்டிட்க்கு பூசுங்கள்
உள்ளத்திற்க்கு பூசாதீர்கள்
சாயத்தை...

உன் விழி கண்டு
தாமரைகள் மலர்கின்றன
ஆதவனுக்கு பொறாமை.

கவிஞர் இரா .இரவி நூல்கள்

படம்
கவிதைச்சாரல் ஹைக்கூ கவிதைகள்
விழிகளில் ஹைக்கூ உள்ளத்தில் ஹைக்கூ
என்னவள் கவிதை அல்ல விதை இதயத்தில் ஹைக்கூ

புதிய ஹைக்கூ -

புதிய ஹைக்கூ - ( கவிஞர். இரா.இரவி) http://www.eraeravi.com/index.html
மனம் வருந்தியது
விணாய் போனதற்கு
திருஷ்டி பூசணி
ஓராயிரம் பொருள் கிடைக்கும்
உற்று நோக்கினால்
படைப்பதற்கு
மேடுகளைத் தகர்த்து
பள்ளம் நிரப்பு சமத்துவம்
பொதுவுடமை
விழி இரண்டு போதாது
வனப்பை ரசிக்க
வண்ண மலர்கள்
ஒய்வதில்லை
விண்ணும் மண்ணும் அலையும்
ஒய்ந்திடும் மனிதன்
வெட்ட வெட்ட
வளரும் பனைமரம்
பாராட்ட வளரும் குழந்தை
குடியால் கோடிகள் திரட்டி
கோடித் துணி தந்தனர்
ஏழைகளுக்கு
புதிய பொருளாதாரம்
கல்வி தனியார் மயம்
மது அரசுமயம்
உருவமின்றியும்
தேசப்படுத்தியது வாழையை
காற்று
அன்றே அநீதி
ஆண்களுக்கு கை சிலம்பு
பெண்களுக்கு கால் சிலம்பு
இருப்புப் பாதையில்
இருப்பின்றி பயணம்
தொடர் பயணம்
கழிவுநீர் உறிஞ்சி
இளநீர் தரும்
உயர்ந்த தென்னை
யார் உயர் திணை
மோதி விழும் மனிதன்
கூடி வாழும் பறவைகள்
விளைவித்தன கேடு
கண்ணிற்கும் மனதிற்கும்
தொ்(ல்) லைக்காட்சிகள்
தரம் தாழ்ந்தால்
களையாகும்
கலை
மாடு செரிப்பதற்கும்
மனிதன் மகிழ்வதற்கும்
உதவிடும் அசைபோடுதல்
போராட்டம் நடிப்பு அரசியலில்
பேராட்டமே வாழ்க்கை
ஏழைகளுக்கு
கண்ணிற்கு குளிர்ச்சி
மனதிற்கு மகிழ்ச்சி
இயற்கை
மனம் வருந்துவதில்லை
மங்கையர் சூடாததற்கு
எருக்கம் பூக்கள்
சால…

புதிய ஹைக்கூ

படம்
புதிய ஹைக்கூ

அதிசியம்தான்
கரிசல் பூமியில்
விளைந்தது வெண் பருத்தி

பயிர்களின் உயிர்
வளர்க்கும் உயிர்
மழை

கண்ணிற்கு குளிர்ச்சி
மனதிற்கு மகிழ்ச்சி
இயற்கைக்காட்சி

மனம் வருந்தவில்லை
மங்கையர் சூடாதத்ற்க்காக
எருக்கம் பூ

புறக்குப்பை உரமாகும்
அகக்குப்பை
தாழ்வாகும்

கழிவு நீர் உறிஞ்சி
இளநீர் தரும்
உயர்ந்த தென்னை

வனப்பை ரசிக்க
விழி இரண்டு போதாது
வண்ணமலர்கள்

வெட்ட வெட்ட
வளரும் பனைமரம்
பாராட்ட வளரும் குழந்தை

ஓராயிரம் பொருள் கிடைக்கும்
உற்று நோக்கினால்
படைப்பதற்கு
இரா .இரவி

கவிஞர் இரா .இரவியின் படைப்புகள் பிற இணையங்களில் படித்து மகிழுங்கள்

கவிஞர் இரா .இரவியின் படைப்புகள்
பிற இணையங்களில் படித்து மகிழுங்கள்

http://tamilbookmarket.com/archives/category/6

http://tamilparks.nsguru.com/-f16/

http://nidurseasons.blogspot.com/2010/08/blog-post_17.html


http://www.eegarai.net/-f17/----t36246.htm


http://www.viyapu.com/news/?p=18985

ஹைக்கூ

படம்
ஹைக்கூ – கவிஞர் இரா.இரவி
ஏவுகணை சோதனை வெற்றி
விலைவாசி குறைப்பில் படு தோல்வி
இந்தியா

அறிவு விளக்கை அணைத்து விட்டு
அணையா விளக்கு
காமராசருக்கு

தூரத்தில் தர்ம தரிசனம்
அருகில் நடப்பது
அதர்ம தரிசனம்

இலஞ்சம் ஒழிப்பவரே
இலஞ்சம் வாங்கி கைது
காவல்துறை

ஏறும் விலைவாசி
இறக்கிட யோசி
மக்கள் விருப்பம்

அன்று ஊறுகாய்
இன்று சாப்பாடு
திரைப்படங்களில் ஆபாசம்

நாட்டில் ஓடியது
தேனும் பாலும்
திருப்பதிக்கு தங்கக் கோபுரம்

பேச ஆரம்பித்தனர்
மதுவிலக்கு
அருகில் தேர்தல்

வெற்றி பெற்றன
ஊடகங்கள்
பண்பாட்டுச் சீரழிப்பில்

போதித்தன
மிருக குணம்
தொ(ல்)லைக்காட்சித் தொடர்கள்

குடிபோதையில்
குடும்பத்தலைவன்
தள்ளாடும் குடும்பம்

வந்தாரை வாழ வைத்தே
வீடு இழந்தவன்
தமிழன்

கூழ் இன்றி ஏழை
கோடிகளில் அரசியல்வாதி
வாழ்க இந்தியா

சக நடிகர் கைது
கண்டிக்காத திரைஉலகம்
சுயநலவாதிகள்

nandri

படம்

9 வயதில் பார்வை பறிபோனது திரு .பழனியப்பன் அவர்களுக்கு

9 வயதில் பார்வை பறிபோனது திரு .பழனியப்பன் அவர்களுக்கு
பார்வையின் பயனையும், பார்வையற்றதன் துன்பத்தையும்
உணர்ந்த காரணத்தால் பார்வையற்றவர்களுக்காக
மூன்றாம் பார்வை அறக் கட்டளை நிறுவி
அகவிழி பாவையற்றோர் விடுதி தொடங்கி
5 ஆண்டுகளாக கஷ்டப் பட்டு நடத்தி வருகிறார் .
25 மாணவ மாணவியருக்கு இலவச உணவு,
கல்வி ,ஆற்றல் வளர்க்க பயிற்சி
தங்குமிடம் நல்கி நடத்தி வருகிறார் .
மனித நேயத்தோடு வாழ்த்து வரும்
நல்ல மனிதருக்கு மனிதாமானத்தோடு
உதவிடுவோம் .அவரது இணையத்தில்
அவரது சாதனையைப் பாருங்கள் .நன்றி
இரா .இரவி

http://agavizhi.in/

http://agavizhi.org/

கவிஞர் இரா .இரவியின் புதிய இணையம் பார்த்து மகிழுங்கள்

கவிஞர் இரா .இரவியின் புதிய இணையம் பார்த்து மகிழுங்கள்
http://www.eraeravi.com/ http://www.eraeravi.com/home/home.html

ஓ இளைஞனே !கவிஞர் இரா.இரவி

படம்
ஓ இளைஞனே !கவிஞர் இரா.இரவி

விடியவில்லை என்றவனே
விடிந்தும் நீ எழவில்லை
விழித்துப்பார் இளைஞனே
விடிந்தது விளங்கும்
கடிகார முள்ளைப்பார்
களைப்பின்றி ஓடுவதைப் பார்
சோம்பேறித் தனத்தை விடுத்து
ஓய்வின்றி உழைக்கப்பார்
எதிர் காலத்திற்குச் சேமிக்கும்
எறும்பின் சுறுசுறுப்பைப்பார்
மலர்களில் தேனை
எடுத்துச் சேமிக்கும் தேனீயைப்பார்
சுறுசுறுப்பாக மாறிப்பார்

பணம் அனுப்பி ஏமாற வேண்டாம்

பணம் அனுப்பி ஏமாற வேண்டாம்

திரு இறைஅன்பு அவர்கள் நேர்மையான அதிகாரி
என்பது நாடு அறிந்த உண்மை .iraianbu@hotmail.com
அவரது மின் அஞ்சலை திருடிய திருட்டுக் கும்பல்
அவர் லண்டனில் இருந்து பணம் கேட்பது போல
போலியான மின் அஞ்சலை அனுப்பி வருகின்றது .
அவர் சென்னையில் உள்ளார் .லண்டன் செல்லவில்லை .
எனவே யாரும் பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் .
மின் அஞ்சலின் ரகசிய குறியீட்டை யாருக்கும்
தராமல் எச்சரிகையாக இருங்கள் .
இரா .இரவி

www.kavimalar.com
http://tamilbookmarket.com/archives/category/6

http://eraeravi.blogspot.com/


http://eraeravi.wordpress.com/

www.tamilauthors.com

கொடிது கொடிது வறுமை கொடிது

படம்
கொடிது கொடிது வறுமை கொடிது
வயிற்றுப் பசிப் போக்க
கயிற்றில் நடக்கும் கொடுமை
காசு போடாத கல் நெஞ்சங்கள்
நூல் இழை தவறினாலும் மரணம்
நுட்பமாக வேண்டும் கவனம்
இந்தியா ஏவுகணை ஏவி என்ன பயன் ?
ஏழ்மையை ஒழிக்க வழி காணுங்கள்
அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்
அழுகி வீணாகப்போகும் தானியங்களை
அல்லல் படும் ஏழைகளுக்கு வழங்குங்கள்
வேலைக்கு உத்திரவாதம் வழங்குங்கள்
இரா .இரவி

தி ஹிந்து High on Haiku

படம்
High on Haiku R. Ravi has a love for Tamil poetry PHOTO: T. SARAVANAN

SPONTANEOUS R. Ravi Inspiration makes a man more creative. Take, for instance, R. Ravi, whose educational qualifications have no bearing on his passion. It is his sheer love for Tamil poetry that drives him to pen free verses and haikus in Tamil. Tracing his interest in the native language and literature to school days, he says: “I was thrilled to study in Setupati Higher Secondary School where Subramania Bharathi worked. It inspired me to visit literary fora regularly.After I finished my schooling, I was on the lookout for a job. I worked for a pharmaceutical wholesale dealer for a meagre remuneration. But it helped me a lot at that time.” Later he joined B.Com through correspondence. “But I did not write the examinations. My ambition was to become a cost accountant, which still remains a dream,” says Ravi, a clerk with the Department of Tourism.Inspired by the haik…

“Libraries promote social and cultural progress of humanity

படம்
“Libraries promote social and cultural progress of humanity” Staff Reporter — Photo: G. Moorthy

STRESS ON READING: V.R. Bhoopalan, District Judge, Madurai, delivering a talk on World Book Day at the District Central Library. MADURAI: Libraries remain a sacred space, enlightening not only the mind by quelling ignorance and promoting the social and cultural progress of humanity, but also give a chance to get an insight into the best of minds in the form of printed words, said V.R. Bhoopalan, District Judge, Madurai.He was delivering a talk on the occasion of ‘World Book and Copyright Day’ organised here on Monday by D…

அன்னை தெரேசா

படம்
அன்னை தெரேசா
[]

அன்னை தெரேசா (அல்லது அன்னை தெரசா) (எக்னஸ் கோஞ்செ பொயாஜியூ, Agnes Gonxha Bojaxhiu ஆகஸ்ட் 26, 1910 – செப்டம்பர் 5, 1997) இந்தியாவில் கருணை இல்லம் (Missionaries of Charity) என்ற கிறிஸ்தவ சமூகசேவை அமைப்பை தோற்றுவித்த அல்பேனிய உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியாவார். கொல்கத்தாவின் வறிய மக்களிடையே அவர் செய்த நற்பணிகள் உலக பிரசித்தமாக்கியது. இவரது மரணத்தின் பின்னர் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் ஆசிர்வதிக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்டார். பெற்ற விருதுகள் * 1962 – சமாதானம் மற்றும் உலக புரிந்துணர்வுக்கான மக்சேசே விருது வழங்கப்பட்டது.
* 1972 – பாப்பரசர் 23ஆம் அருளப்பர் சமாதான பரிசும் கபிரியேல் விருதும் வழங்கப்பட்டது.
* 1973 – டெம்லெடொன் விருது
* 1979 – அமைதிக்கான நோபல் பரிசு
* 1980 – இந்திய அரசின் பாரத ரத்னா பட்டம் வழங்கப்பட்டது.
* 1981 – எய்டி ஆட்சியாளரான ஜியாண்-குளோட் டவலியரினால் லெஜென் டி ஒணர் (Legion d’Honneur) என்ற கௌரவ பட்டம் வழங்கப்பட்டது.
* 1985 – அமெரிக்காவின் அதியுயர் விருதான விடுதலைக்கான அதிபர் பதக்கம் வழங்கப்பட்டது.
* 1996 – கௌரவ அமெரிக்க குடிமகள் தகமை வழங…

திருக்குறள் ஆய்வுக் கருத்தரங்கம் பொருள் : குறள் கூறும் குடிமை - கவிஞர் இரா.ரவி

படம்
திருக்குறள் ஆய்வுக் கருத்தரங்கம் பொருள் : குறள் கூறும் குடிமை - கவிஞர்
இரா.ரவி editor www.kavimalar.com உலகப் பொதுமறையான திருக்குறளில் 1330
குறள்கள் இருந்தாலும், குடிமை பற்றிய 10 திருக்குறளைக் கடைபிடித்தால் வாழ்வில்
உயரலாம். மனிதர்களில் சிலர், நான் உயர்ந்த குடியில் பிறந்தவன் என இருமாப்புடன்
இருக்கின்றனர். ஆனால் திருவள்ளுவர் யார் ? உயர்ந்த குடி என்பதற்கு பல்வேறு
விளக்கங்கள் தந்துள்ளார். திருவள்ளுவர் வழியில் வாழ்பவரே உயர்குடி.
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு - குறள் 951
எந்த ஒரு மனிதன், நடுநிலை தவறாமல் நாணயத்தோடு நடக்கிறானோ ? அவன் தான் உயர்ந்த
குடி உயர்ந்த குடியில் பிறந்தவன் என்று சொல்லிக் கொண்டு நாணயம் தவறி,
நடுநிலைமையின்றி வாழ்பவன் உயர்ந்த குடியே அன்று. இது தான் திருவள்ளுவர் சொல்ல
வந்த கருத்து. பிறப்பால் தாழ்ந்த குடியில் பிறந்தாலும், நேர்மையாக வாழ்பவன்
உயர்ந்த குடி தான். இது தான் திருவள்ளுவர் தரும் விளக்கம்.
ஒழுக்கமும் வாய்மையும் நானும் இம்மூன்றும்
இருக்குhர் குடிபிறந் தார். - குறள் 952
உயர்ந்த குடியில் பிறந்தவன் என்று உதடு சொல்வதை விட சிறந்தது. உன்னுடைய நல
;ஒழுக்கம…

(லிமெரைக்கூ ) கவிஞர் இரா.ரவி

படம்
Infotainment" href="http://keralites.net/" rel="nofollow" target="_blank">

(லிமெரைக்கூ )

கவிஞர் இரா.ரவி


கண்களுக்கு விருந்து சிலை
காண்போரை வியப்பில் ஆழ்த்தி விடும்
சிற்பியின் நுட்பமான கலை!

குறுகியது இளையோர் உள்ளம்
இமயம் முதல் குமரி வரை
பெருகுது முதியோர் இல்லம்!

நிகரற்ற உறவு அன்னை
உயிர் உள்ளவரை மறக்காதே
உயிராய் வளர்த்தாய் உன்னை

கவிஞர் இரா.இரவியுடன் ஒரு நேர்காணல்.

படம்

உலக எழுத்தாளர்கள் மாநாட்டை கொலைக் களமான இலங்கையில் நடத்துவது ஏன்? மறு பரிசீலனை செய்யுங்கள்

உலக எழுத்தாளர்கள் மாநாட்டை கொலைக் களமான
இலங்கையில் நடத்துவது ஏன்?


மறு பரிசீலனை செய்யுங்கள்

இலங்கைக்கு சென்ற அசினுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
நடிகர் கருணாஸ் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டது .
கொள்கை இல்லாத கோமாளிகளே போக வேண்டாம்
என்று சொல்லும் போது
லட்சியத்துடன் சிற்றிதழ் நடத்தும் நல்லவர்கள்,
படைப்பாளிகள், எழுத்தாளர்கள் இலங்கை செல்வது சரியா ?
சிந்தித்துப் பாருங்கள்
லட்சக் கணக்கான தமிழ் மக்களை
கொன்று குவித்த அரக்கனுக்கு
தண்டனை ஐநா மூலம் வாங்கித் தராமல்
தமிழினம் ஓயாக் கூடாது.உலகில் வேறு எங்கு வேண்டுமானாலும் நடத்துங்கள்

குற்றவாளி தண்டிக்கப் படும் முன்
கொலைக் களத்தில்இலங்கையில்
மாநாடு நடத்த வேண்டிய
அவசியம் என்ன?
சிற்றிதழை மிகவும் மதித்து
சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும்
படைப்பாளியின் வேண்டுகோள் .
சிங்களன் விரிக்கும் வலையில்
படைப்பாளிகள் விழக் கூடாது..
சிங்களனின் பிரித்து ஆளும்
சூழ்ச்சிக்கு தமிழனம் பலி ஆகக் கூடாது..
இரா .இரவி
www.kavimalar.com
http://tamilparks.50webs.com/tamil_padaipugal/ravi_madurai.html
http://eraeravi.wordpress.com/
http://eraeravi.blogspot.com/
www.tamilauthors.com

இரா .இரவி புகைப்படங்கள்

படம்

வெற்றி உன் கையில்!கவிஞர் இரா. இரவி

படம்
வெற்றி உன் கையில்! கவிஞர் இரா. இரவி


விதி என்று வெந்து சாகாதே!
விதி என்று ஒன்றும் கிடையாதே!
தோல்விக்குப் பயந்து வாய்ப்பை விடாதே!
துவண்டு விட்டால் வெற்றி கிடைக்காதே!
எடிசன் தோல்விக்குத் துவண்டு இருந்தால்
இருட்டாகவே இருந்திருக்கும் இந்த உலகம்
என்னால் முடியும் எதுவும் முடியும்
என்றே முயன்றால் இனிதே முடியும்!
சோம்பலை விடுத்துச் சுறுசுறுப்பை பெற்றிடுக!
அகந்தையை விடுத்து அன்பைப் பெற்றிடுக!
அச்சத்தை விடுத்துத் துணிவைப் பெற்றிடுக!
துன்பத்தை விடுத்து இன்பத்தைப் பெற்றிடுக!
தூக்கத்தை விடுத்து உழைப்பைப் பெருக்கிடுக!
வேகத்தை விடுத்து விவேகத்தைப் பெற்றிடுக!
வேதனையை விடுத்து வெற்றியைப் பெற்றிடுக
வெற்றி உன் கையில் என்பதை உணர்ந்திடுக!
வீணாய் அடுத்தவரைப் பழிப்பதை நிறுத்திடுக! -

இரா .இரவி புகைப்படங்கள்

படம்
இரா .இரவி புகைப்படங்கள்

இரா .இரவி புகைப்படங்கள்

படம்
இரா .இரவி புகைப்படங்கள்

இரா .இரவி ஒளிப்பேழைகள்

அவள் தலைக்கு கீரிடம் வருகின்றது

படம்
அவள் தலைக்கு கீரிடம் வருகின்றது
ஆயிரம் மலர்கள் மலர்ந்தாலும்
அழகிய ரோஜாவிற்குஇணை உண்டோ ?
காதலுக்கு தூது செல்லும் மலர்
காதலர்களின் தேசிய மலர்
பூக்களில் சிறந்தப் பூ ரோஜா
பூவையர் விரும்பும் பூ ரோஜா
ரோஜாவை சூடிய பின்புதான்
அவள் தலைக்கு கீரிடம்
வருகின்றது
இரா .இரவி

மனிதா திருந்திவிடு கவிஞர் இரா.இரவி

படம்
மனிதா திருந்திவிடு கவிஞர் இரா.இரவி

உன்னையும், என்னையும்
பிரிப்பது சாதி என்றால்
அந்த சாதிக்கு இன்றே
சமாதி கட்டு

உன்னையும், என்னையும்
பிரிப்பது மதம் என்றால்
அந்த மதத்தை இன்றே
மயானத்திற்கு அனுப்பு

உன்னையும், என்னையும்
பிரிப்பது பேதம் என்றால்
அந்த பித்தலாட்டத்தை இன்றே
புதைத்துவிடு

உன்னையும், என்னையும்
பிரிப்பது இனம் குலம் என்றால்
அந்த ஈனத்தே இன்றே
தூக்கிலிடு

உன்னையும் என்னையும்
உரித்தாலே வெங்காயம்

கவிஞர் இரா.இரவியுடன் ஒரு நேர்காணல்.

புறாவே நில்

படம்
புறாவே நில்
அன்றைய சிபிச் சக்கரவர்த்தி
இன்று இல்லை .
சமாதானப் புறாக்களையே
சமைத்துச் சாப்பிடும்
நவீன சிபிச் சக்கரவர்த்திகள்
உனக்கு நீதி கிடைக்காது இன்று
இரா .இரவி

என்னவளே

படம்
என்னவளே

வானில் இருந்து தேவதை வந்தாலும்
வஞ்சி உனக்கு இணை இல்லை
வனப்பில் உன்னிடம் தேவதையும்
தோற்றுப் போவாள்.
இரா .இரவி

ஓடு ஓடு நிற்காமல் ஓடு லட்சியம் அடையும் வரைஓடு

படம்
ஓடு ஓடு நிற்காமல் ஓடு லட்சியம் அடையும் வரைஓடு