திங்கள், 31 டிசம்பர், 2012

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

காதல் ! கவிஞர் இரா .இரவி .

நெடிலில் தொடங்கி
மெய்யில் முடியும்
சொல் மட்டுமல்ல !
நெடிய உறவாகத் தொடர்ந்து
மெய்யான அன்பை பொழிவது !
இன்பங்கள் எத்தனையோ
இவ்வுலகில் இருந்தாலும்
இனிமையான காதல் இன்பத்திற்கு
இணை இவ்வுலகில்  இல்லை !
கூடு விட்டு கூடு பாயும்
எண்ண  அலை !
தனிமையில் பேச வைக்கும்
பாச வலை !
மகிழ்ச்சிப் போதையில்
மிதக்க வைக்கும் கலை !
கோடிப் பணம் தந்தாலும்
பிடிக்காத நிலை !
இறுதிவரை உறுதியாக இருந்தால்
அசைக்க முடியாத மலை !

அசை போடுகிறேன் !    கவிஞர் இரா .இரவி .

நீயும் நானும்
பேசிய நிமிடங்களும்
சந்தித்த நாட்களும்
மிகவும் குறைவுதான் !
மூச்சு இருக்கும் வரை
நினைவு இருக்கும் !
பசுமையான நினைவுகள் அவை !
மாடு என நானும் அடிக்கடி
அசை போடுகிறேன் நினைவுகளை!

சொல்வதில்லை !     கவிஞர் இரா .இரவி

பிரிந்து வருடங்கள்
பல கடந்தும்
மனதில் , நினைவில்
வருடி விட்டு செல்கிறாள் !
தனிமையான நேரங்களில்
நினைவில் வந்து செல்கிறாள் !
மறக்க நினைத்தாலும்
மறக்க முடிவதில்லை !
மூளையின் மூலையில் இருந்து
மூ்ழ்கடிக்கிறாள் !
மறந்து விட்டதாக
உதடுகள் சொன்னபோதும்
உள்ளம் ஒருபோதும்
சொல்வதில்லை !

மன்னிக்கட்டும் கலாம் ! கவிஞர் இரா  .இரவி .

தூங்கும்போது காண்பதல்ல கனவு !
தூங்கவிடாமல் செய்வதே கனவு !
படித்தேன் கலாம் வாசகம் !
தூங்கும்போது காணும் கனவில் அவள்  !
தூங்கவிடாமல் செய்யும் கனவிலும் அவள்  !
கலாம் என்னை மன்னிக்கட்டும் !

இனிமை ! இளமை ! கவிஞர் இரா .இரவி .

உனக்கும் எனக்குமான
நட்பு காதலாகி
அடுத்தக் கட்டம்
அடைந்தபோது
சின்னச் சின்ன
தீண்டல் தொடங்கியது !
தீயாய் எரிந்தது !
எண்ணிக்கையில் குறைவு என்றாலும்
எண்ணங்களில் மிக நிறைவு !

உண்மை ! கவிஞர் இரா .இரவி .

பார்த்தும் காதலா ?என்று
பார்த்தவர்களிடம் கேலி பேசியவன் !
உன்னைப் பார்த்ததும் காதல் வந்தது
உன்னிடம் தாமதமாகத்தான் சொன்னேன் !
காதலை ஏற்றுக் கொண்ட நீயும் சொன்னாய் !
பார்த்த  அன்றே காதல் மலர்ந்த உண்மையை !

நம்பிக்கை !  கவிஞர் இரா .இரவி .

தூக்குத் தண்டனை கைதியிடம்
நிறைவேறாத ஆசை என்ன ?
என்பார்கள் !
முடிந்தால் நிறைவேற்றுகள் !
நானும் தூக்குத் தண்டனை கைதியாக
விரும்புகின்றேன் !
உன்னை ஒரு முறை பார்க்க ஆசை
நிறைவேற்றுங்கள் என்பேன் !
உன்னை அழைத்து வந்து
என்னிடம் காடு்வார்கள் !
இறக்கும் முன் ஒரு முறை
உன்னை பார்த்து விடலாம் !

என்னவள் !  கவிஞர் இரா .இரவி .

அங்கிருந்து என்னை
இங்கு இயக்குகின்றாள் !
எங்கிருந்தபோதும்
என்னுள் இருக்கின்றாள் !
எழுச்சி தருகின்றாள் !
மனக்கவலை வரும்போது
மனத்தெம்பு தருகின்றாள் !
சோர்வு வரும்போது
சுறுசுறுப்பு தருகின்றாள் !
துன்பம் வரும்போது
இன்பம் தருகின்றாள் !
தடுக்கி விழும்போது
திரும்ப எழ  வைக்கிறாள் !
விரக்தி வரும்போது
சக்தி தருகின்றாள் !
என்னுள் என் நினைவுள்
கலந்த இனியவள் !
அவள் என்னவள் !

பிடிக்காத புத்தர்    கவிஞர் இரா .இரவி .

புத்தரை எல்லோருக்கும் பிடிக்கும் !
ஆனால் எனக்குப் புத்தரைப் பிடிக்காது !
என்னவளே உன் மீது அளவற்ற
ஆசை வைத்திருக்கும் எனக்கு
"ஆசையை அறவே அழி " என்ற
புத்தர்  போதனை பிடிக்கவில்லை   .அதனால்
புத்தரையும் பிடிக்கவில்லை !

இதமான மனசு  !  கவிஞர் இரா .இரவி .

பேசும் போது  உன் விரல் பட்டு
என் கண்கள் கலங்கியது !
உடன் நீ உன் கைக்குட்டை எடுத்து
உன் வாயில் வைத்து ஊதி விட்டு
என் கண்ணில் ஒத்தினாய் !
இதமானது கண் மட்டுமல்ல
என் மனசும்தான் !
இப்படி ஒரு சுகத்திற்காக
எத்தனை முறையும்
விரல்கள் விழிகளில் படலாம் !
கல்வெட்டாகத் பதிந்தது
இந்த நிகழ்வும் நம்  உறவும் !

கண்டுபிடித்தாள் கள்ளி ! கவிஞர் இரா .இரவி .

சேலை ஒன்று என்னவளுக்கு
வாங்கித் தந்தேன் !
எனக்காக வாங்கியதா ? என்றாள் !
உனக்காக நெய்தது ! என்றேன் !
கைத்தறிச்சேலை என்பதை
உயர்வாகச் சொல்கிறாய் !என்றாள் !
கைத்தறி உயர்வானதுதான் !என்றேன் !
பட்டுச்சேலை வாங்கப் பணம்
இல்லை என்பது தெரியும் !என்றாள் !
மனதிற்குள் ! கண்டுபிடித்தாள் கள்ளி !
என்பதை நினைத்துக் கொண்டு
பட்டுச்சேலையை விட
கைத்தறிச்சேலைதான்
உனக்கு அழகு என்றேன் !
பட்டுக்கு எதற்கடி பட்டு
என்றேன் !
பட்டென சிவந்து நின்றாள் !

தண்ணீர் குடிப்பாயாக ! கவிஞர் இரா .இரவி .

நான் சாப்பிடும் போது
பொறை  ஏறியது !
என் அம்மா உடன்
தலையில் தட்டி
யாரோ நினைக்கிறார்கள்
என்றார்கள் !
நினைப்பது நீ என்பது
எனக்குத் தெரியும் !
உடன் நான் உன்னை நினைத்தேன் !
உனக்கும் பொறை  ஏறி இருக்கும் !
இங்கு நான் தண்ணீர் குடித்து விட்டேன்
அங்கு நீயும் தண்ணீர் குடிப்பாயாக

விழிப்படம் ! கவிஞர் இரா .இரவி

இருவரும் சேர்ந்து
ஒரே ஒரு திரைப்படம்தான்
பார்த்தோம் !
திரைப்படம் பார்த்த நேரத்தை விட
அவளை நான் பார்த்த நேரமும்
என்னை அவள் பார்த்த நேரமும்தான்
அதிகம் !
இதழ்களை விட
விழிகள்தான் அடிக்கடி பேசிக் கொண்டன !
காதலர்கள் ஏன் ?
திரைப்படம் செல்கிறார்கள் என்பது
அன்றுதான் விளங்கியது எனக்கு !

விலைமதிப்பற்ற பரிசு ! கவிஞர் இரா .இரவி .

அவளிடம் பல முறை
பரிசு வாங்கி இருக்கிறேன் !
நானும் அவளுக்கு பல முறை
பரிசு வழங்கி  இருக்கிறேன் !
உருவம் இல்லாத பரிசு !
உணர்ச்சி மிகுந்த பரிசு !
நினைக்கும் போதெல்லாம்
இனிக்கும் பரிசு !
சகாராவில் பாய்ந்த
நயாகராவாக
அவள் முத்தம்தான்
விலைமதிப்பற்ற பரிசு !

அறிவாளி அவள் !கவிஞர் இரா  .இரவி .

என்னவள் அழகை விட
அறிவில் சிறந்தவள் ! என்றேன் .
நண்பன் இருக்காதே ! என்றான் .
அறிவில் சிறந்தவள் எப்படியடா
உன்னை காதலிப்பாள்  !என்றான் .
பொறாமையில்  பேசும் நண்பனை
பொருட்படுத்தவில்லை நான் !
என்னவள் அழகி என்பதை விட
அறிவாளி என்பதால்தான்
எனக்குப் பிடித்தது அவளை !

--

சனி, 29 டிசம்பர், 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி.

புத்தாண்டு வாழ்த்துக்கள் !      கவிஞர் இரா .இரவி.

வரும் ஆண்டு வளமான ஆண்டாகட்டும்
!
வறுமை ஏழ்மை இல்லாத ஆண்டாகட்டும் !

இயற்கையின் சீற்றம் இல்லாத ஆண்டாகட்டும் !
இயற்கை சீரான மழை  தரும் ஆண்டாகட்டும் !

வஞ்சியருக்கு ஏற்றம் தரும்
ஆண்டாகட்டும் !
வாலிபருக்கு மகிழ்ச்சித் தரும் ஆண்டாகட்டும் !

முதியோருக்கு இன்பம் தரும் ஆண்டாகட்டும் !
மூத்தோருக்கு மதிப்புத் தரும் ஆண்டாகட்டும் !

சாதி மத சண்டைகள் இல்லாத ஆண்டாகட்டும் !
சகோதர உணர்வுப் பெருகும் ஆண்டாகட்டும்
!

படைப்பாளிகளுக்குப் புகழ் மிக்க ஆண்டாகட்டும் !
பண்பாளர்களைப் போற்றும்
ஆண்டாகட்டும் !
ழல் எங்கும் எதிலும்  இல்லாத ஆண்டாகட்டும் !ழல்வாதிகள் மனம் திருந்தும் ஆண்டாகட்டும் !

அரசியல்வாதிகள் திருந்தி வாழும்  ஆண்டாகட்டும் !
அரசியலில் தூய்மை வாய்மை நிலவும்
ஆண்டாகட்டும் !

அறவழி நடப்போருக்கு நன்மை கிட்டும் ஆண்டாகட்டும் !
தீயோ
ருக்குத் திருந்தும் வாய்ப்பு கிட்டும் ஆண்டாகட்டும் !

வன்முறை இன்றிஅமைதி நிலவும் ஆண்டாகட்டும் !
நன்முறையில் மக்கள்  நடக்கும்
ஆண்டாகட்டும் !
மூடநம்பிக்கைகள் முற்றாக ஒழியும் ஆண்டாகட்டும் !
மூளையை பகு
த்தறிவிற்குப் பயன்படுத்தும் ஆண்டாகட்டும்

மனிதநேயம் எங்கும் மலரும் ஆண்டாகட்டும் !
மதவெறி எங்கும் அழியும்
ஆண்டாகட்டும் !
ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமநிலை
ஆண்டாகட்டும் !
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்
ஆண்டாகட்டும் !
மனிதனை மனிதன்  மதித்து நடக்கும்  ஆண்டாகட்டும் !
மனதர்கள் யாவரும் மகிழ்ந்து இருக்கும்
ஆண்டாகட்டும் !

நல்லதை மட்டும் கேட்கும் பார்க்கும் படிக்கும் ஆண்டாகட்டும் !
தீயவை எங்கும் எதிலும் நிகழாத நல்ல
ஆண்டாகட்டும் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் !

ஹைக்கூ ! சென்றியு ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !   சென்றியு !      கவிஞர் இரா .இரவி !

நன்கு உணர்த்தியது
எடிசனின் பெருமையை
மின்தடை !

தணிக்கையின்றி
ஆபாச விசம் இல்லத்தில்
தொ(ல்)லைக்காட்சி !

விலங்கிலிருந்து வந்தவனை
திரும்பவும் விலங்காக்கின
தொலைக்காட்சித்  தொடர்கள் !

நேர்மறைக்கு இடமின்றி
எதிர்மறைக்குப் பேரிடம்
ஊடகங்கள் !

பரப்பி விதைக்கின்றனர்
தமிங்கிலம்
ஊடகங்கள் !

ஒரே பார்வை
பாய்ந்தது மின்சாரம்
காதல் விளக்கு !

மறந்தது கவலை
குடிசையின் துளையில்
மழைத்துளிகளின் இசை !

திருட வந்தவன்
திட்டிச் சென்றான்
ஏழை வீடு !


சொன்னார்கள் நேரம்
வானம் பார்த்து
கிராமத்தினர் !

பிடிக்காதது
இளைஞர்களுக்கு
அறிவுரை !

கர்நாடக உறவோடு
நிலத்திலும்
விரிசல் !

உயிர் வளர்க்கும் உணவு
உழைத்துத் தந்த உழவன்
உயிர் வெறுத்து தற்கொலை !

வெகு நாட்கள் இல்லை
அருங்காட்சியத்தில்
நெல் !

கையில் வெண்ணை
நெய்  தேடல்
இலவசங்கள் !

காலுக்கடியில் புதையல்
அறியாமல் பிச்சை
மக்கள் !

வெள்ளி, 28 டிசம்பர், 2012

மதுரைமணி நாளிதழில் விழி காணும் மொழிகள் ! வெளியீட்டு விழா செய்தி !

மதுரைமணி நாளிதழில் விழி காணும் மொழிகள் ! வெளியீட்டு விழா செய்தி ! 

நூல் ஆசிரியர் கவிமுரசு சு .இலக்குமணசுவாமி .

மதுரையில் என் போன்ற, நூல் ஆசிரியர் இலக்குமணசுவாமிபோன்றகவிஞர்களை
வளர்த்து விடும்  மதுரைமணி ஆசிரியர் சொ .டயஸ் காந்தி தலைமை வகித்தார் .
 தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குனர்  பசும்பொன் வெளியிட காவல்துறை
துணை ஆணையர் திருநாவுக்கரசு பெற்றுகொண்டார். எழுத்தாளர் இந்திரா
சௌந்தரராஜன் ஆய்வுரை நிகழ்த்தினார் ..கவிஞர் இரா .இரவி வாழ்த்துரை வழங்கினார் .பலரும் கவிதைகளை மேற்கோள் காட்டி பேசினார்கள் .விழா கோலாகலமாக நடைபெற்றது .
நூல் ஆசிரியர் கவிமுரசு சு .இலக்குமணசுவாமி அவர்கள் நல்ல கவிஞர்
என்பதையும் தாண்டி நல்ல மனிதர் . எழுதுவதோடு நின்று விடாமல் திருநகர்
பகுதி மக்களுக்கு பல தொண்டுகள் செய்து வருபவர் .இந்நூல் வெளியீட்டு
விழாவிற்கு அவர் வசிக்கும் திருநகர் பகுதியில் இருந்து குடும்பத்துடன்
அனைவரும் வந்து இருந்தனர் .திருமண விழா போல கூட்டம் நிரம்பி  வழிந்தது--

விழி காணும் மொழிகள் ! நூல் ஆசிரியர் கவிமுரசு சு .இலக்குமணசுவாமி . விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விழி காணும் மொழிகள் !

நூல் ஆசிரியர் கவிமுரசு சு .இலக்குமணசுவாமி செல் 9789788989

  விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விலைரூபாய் 65.6.வேங்கடேசுவரா நகர் ,சுந்தர் நகர் விரிவு ,திருநகர்,மதுரை.6

நூல் ஆசிரியர் கவிமுரசு சு .இலக்குமணசுவாமி அவர்கள் ஆசிரியராக
பணியாற்றி ஒய்வுப் பெற்று ,முழு நேர இலக்கியவாதியாக இயங்கி வரும்
படைப்பாளி  67 .வயது இளைஞர் . தள்ளாத வயதிலும் தளராத தேனீயாக உழைத்து
வரும் உழைப்பாளி .கவிப்பேரரசு அருமைநாதன் அவர்கள் தோற்றுவித்த தாய்மண்
இலக்கியக் கழகத்தின் மதுரைக் கிளை தலைவராக இருந்து பல்வேறு இலக்கியப்
பணிகள் செய்து வருபவர் .1992 ஆம் ஆண்டில் எனக்கு கவிப்பேரரசு அருமைநாதன்
அவர்களை அறிமுகம் செய்து வைத்து எனது முதல் நூலான கவிதைச்சாரல் வெளிவர
காரணமாக இருந்தவர் கவிமுரசு சு .இலக்குமணசுவாமி அவர்கள்.

நூல் ஆசிரியர் கவிமுரசு சு .இலக்குமணசுவாமி இவர் எழுதாத இதழ்களே இல்லை
என்று சொல்லும் அளவிற்கு தினமணி சிறுவர்மணி உள்ளிட்ட பல்வேறு இதழ்களில்
எழுதி வருபவர் .பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து
நூலாக்கி உள்ளார்கள் .விழி காணும் மொழிகள் ! நூலின் பெயரே கவித்துவமாக
கவிதை நூல் என்பதை பறை சாற்றும் விதமாக உள்ளது .இந்த நூலை தாய் தந்தைக்கு
படையலாக்கி பாசத்தை வெளிப்படுத்தி  உள்ளார் .

நூல் ஆசிரியர் கவிமுரசு சு .இலக்குமணசுவாமி அவர்கள் நல்ல கவிஞர்
என்பதையும் தாண்டி நல்ல மனிதர் . எழுதுவதோடு நின்று விடாமல் திருநகர்
பகுதி மக்களுக்கு பல தொண்டுகள் செய்து வருபவர் .இந்நூல் வெளியீட்டு
விழாவிற்கு அவர் வசிக்கும் திருநகர் பகுதியில் இருந்து குடும்பத்துடன்
அனைவரும் வந்து இருந்தனர் .திருமண விழா போல கூட்டம் நிரம்பி  வழிந்தது
.நானும் சென்று வாழ்த்துரை வழங்கி வந்தேன் .
மதுரையில் என் போன்ற, நூல் ஆசிரியர் இலக்குமணசுவாமிபோன்றகவிஞர்களை
வளர்த்து விடும்  மதுரைமணி ஆசிரியர் சொ .டயஸ் காந்தி தலைமை வகித்தார் .
 தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குனர்  பசும்பொன் வெளியிட காவல்துறை
துணை ஆணையர் திருநாவுக்கரசு பெற்றுகொண்டார். எழுத்தாளர் இந்திரா
சௌந்தரராஜன் ஆய்வுரை நிகழ்த்தினார் .பலரும் கவிதைகளை மேற்கோள் காட்டி
பேசினார்கள் .விழா கோலாகலமாக நடைபெற்றது .

இளைஞர்களை நெறிப்படுத்தும் விதமாக நல்ல  பல கருத்துக்களைக் கூறும்
கவிதைகள் நிறைய உள்ளது .பாராட்டுக்கள் . நூலில் உள்ள கவிதைகள் அனைத்தும்
சிறப்பாக இருந்தபோதும் பதச் சோறாக சில மட்டும் தங்கள் பார்வைக்கு இதோ .

இளைஞர்களை இன்பமாக வாழுங்கள் ..
சிந்தனைகளை சிந்தையில் நாளும்
செதுக்குங்கள் ! வாழ்வுச்
சிறகுகளை நம்பிக்கையுடன் விரித்தே
வாழ்வை விரிவாக்குங்கள் !

புத்தாண்டை வரவேற்று வடித்த கவிதை நன்று .

புதிய ஆண்டே நீ வா !
புதிய ஆண்டே பொலிவுடன்  வா ! இன்பத்தை
பதியம் போட்டப் பரவசத்தை நீ தா !
அதிசய உலகமதை உருவாக்கி வா !அதில்
அதிரச சுவையை ஊட்டியே வா !

இளைஞர்கள் பலர் சிந்திக்காமல் மூடத்தனத்தில் தற்கொலை செய்து வரும் செய்தி
 தினந்தோறும் செய்தித் தாளில் வருகின்றது .தற்கொலை செய்வது கோழைத்தனம்
என்பதை வலியுறுத்தி மண்ணில் நல்ல  வண்ணம் வாழ வகை சொல்லும் கவிதை .

எழுச்சியோடு எழு !
ஓ  மானிடா
இப்பூலகில் பிறந்ததே
நீ வாழத்தான் !
மரணத்தை தழுவிட அல்ல !
உன் வாழ்க்கைக்கு
நம்பிக்கையும் நாணயமும் தான் உயிர்நாடிகள் !
துன்பம் - துயரம் இவைகள் கண்டு நீ அஞ்சாதே !

தமிழ்ப் பற்று மிக்கவர் கவிமுரசு சு .இலக்குமணசுவாமி.தமிழ் மொழி
பற்றியும் பல  கவிதைகள் .வடித்துள்ளார் .

எங்களின் நேசிப்பு !
எங்கள் மொழி எங்கள் மொழியென்றே
எமது தமிழை நாளும் உச்சரிப்போம் .
எல்லா நாட்டாரும் பாராட்டுகின்ற
எமது பண்பட்ட  மொழியை நாளும் மெச்சிடுவோம் !

உலகில் உறவுகள் ஆயிரம் இருந்தாலும் அன்னை என்ற உறவிற்கு ஈடு இல்லை
.அன்னையை பற்றி எழுதியுள்ள கவிதை .

அன்னை !
அன்னையெனும்  சொல்லே
அமுதூட்டும்  சொல்லடா !
என்னை உருவாக்க
எணியான சொல்லடா !
தண்ணி உருக்கிய
தன்மானச் சொல்லடா !

சொல்லடா ! சொல்லடா ! என்று எழுதி சொல் விளையாட்டு விளையாடி .உள்ளார்
பாராட்டுக்கள் .

இலக்கியம் பயனற்றது என்று ஒரு சிலர் புரியாமல் சொல்லி வருகின்றனர்
.அவர்களுக்கு இலக்கியம் பற்றி விளக்கும் விதமாக ஒரு கவிதை .

இலக்கியமே வாழ்க்கைக்கு ஏணி !
இலக்கியமே வாழ்க்கைக்கு ஏணி ! -உலகு
இயலில் கைக்குள் அடக்கம் இன்பத் தோணி
விழிகளின் பதிவில் விண்ணப்பம் -உயர்
மொழிகளின் கனிவுடன் கூடிய தீர்மானம்
இலக்கியமே வாழ்க்கைக்கு  இல்லை எனில் -தமிழர்
இதயமெல்லாம் இளைக்கும் !

தமிழகத்து விவசாயிகள் நிலத்திற்கு தண்ணீர் இன்றி கண்ணீர்  விட்டு நாள்
தோறும் தற்கொலை செய்து வருகின்றனர் .கல் நெஞ்சம்  படித்த கர்நாடகமும்
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் மதிக்காமல் தண்ணீர் தர மறுத்து
வருகின்றனர் .தட்டிக் கேட்க ஒரு நாதி இல்லை .தமிழகம் தொடர்ந்து அண்டை
மாநிலங்களால் வஞ்சிக்கப்பட்டு வருகின்றது . மைய  அரசும் வேடிக்கை
பார்த்து மகிழ்கின்றது .நாட்டில் நடக்கும் அவலம் குறித்து எழுதியுள்ள
கவிதை.

நெல்  - என்னும் சொல் இல்லை !
உழவனின் கண்ணீரே
மடை திறந்த வெள்ளமாகிறது !
உழவனின் வறுமையே
விதையாய் விதைக்கபடுகிறது !
விலை நிலங்களெல்லாம் வீடுகள் ஆச்சு !
இயற்கை கூட உழவனுக்கு சதி செய்திடுச்சு !
இந்நிலை தொடர்ந்தால் இனி நெல்  - என்னும் சொல்
இனிஇல்லை ! இல்லை ! இல்லை !

சிந்திக்க வைக்கும்  கருத்துள்ள நல்ல துளிப்பாக்களும் நூலில் உள்ளது.
பாராட்டுக்கள் .

வியர்வை உலர
வியர்வை  சிந்தாத
மின்விசிறி !

காதலை பாடாத கவிஞர் இல்லை .காதலை பாடாத கவிஞர் கவிஞரே இல்லை .இவரும் பாடி
உள்ளார் காதலை .

இலைகள் உதிர்ந்தன
மனதில் உதிரவில்லை
அவள் நினைவுகள் !

அவள் விழிகள் சந்தித்தால்
என் மொழிகள்
மவுனமாயின !

மனிதநேயம் மறந்து மோதி வீழும் மனித விலங்குகள் பற்றியும் எழுதி உள்ளார் .

கலவரத்தீயில்
கருகியது
மனிதநேயம் !

ஆழிப்பேரலை பற்றி,ஏழைகளின் தீபாவளி வலி பற்றி இப்படி பல்வேறு
தலைப்புகளில்  கவிதை எழுதி உள்ளார் .குழந்தைகளுக்கு பண்பாடு போதிக்கும்
குழந்தைப்பாடல்கள்,  கவிதைகள் .பல்சுவை விருந்தாக உள்ளது .முத்தமிழ் போல
முப்பால் போல, ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்தது போல .ஒரே நூலில்
மரபுக்கவிதை,புதுக்கவிதை,ஹைக்கூ  கவிதை மூன்றும் உள்ளது . பாராட்டுக்கள்
.தொடர்ந்து எழுதுங்கள் .அட்டைப்பட வடிவமைப்பு ,உள்  கட்டமைப்பு ,அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளது .பாராட்டுக்கள் .


செவ்வாய், 25 டிசம்பர், 2012

தந்தைப்பெரியார் புரட்சி மொழிகள்

தந்தைப்பெரியார்                                          புரட்சி மொழிகள்


  - மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
  - பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி
  - மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்
  - விதியை நம்பி மதியை இழக்காதே.
  - மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
  - மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.
  - பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
  - பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
  - பக்தி இல்லாவிட்டால் இழ்ப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
  - தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்
  - கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து
  கிடக்கும் மக்களை உயர்த்தும்.
  - பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும்,
  உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
  - ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள்
  ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
  - ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு
  விடக்கூடாது.
  - வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள்
  நலனுக்கும் என்று கருத வேண்டும்.
  - ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ,
  அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
  - என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல்
  எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை
  நம்புகிறவன்.
  - எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து,
  சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.
  - மற்றவர்களிடம் பழகும் வித்த்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக
  ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.

கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

கும்கி !
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
இயக்கம் பிரபு சாலமன் .
நடிப்பு விக்ரம் பிரபு .

மைனா படத்தின் இயக்குனர்  பிரபு சாலமன் இயக்கத்தில் வந்துள்ள தரமான படம்
.குடும்பத்துடன் தைரியமாக சென்று பார்க்கக் கூடிய படம் .நடிகர் திலகம்
சிவாஜியின் பேரன் , இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு .பணக்கார
வீட்டுப் பையனாக இருந்தபோது்ம் யானைப் பாகனாக மிக நன்றாக நடித்துள்ளார்
.அறிமுகமான முதல் படத்திலேயே முத்திரை பதித்து உள்ளார். பாராட்டுக்கள்
.கதாநாயகி லட்சுமி மேனன் அல்லி பாத்திரத்தில் நடித்து பார்பவர்களின்
உள்ளதை   அள்ளி விடுகிறார் .நல்ல நடிப்பு .யானையுடன் பயமின்றி
நடித்துள்ளார் .

காடும் காடு சார்ந்த கதையுமாக மிக நன்றாக இயக்கி உள்ளார் .ஆபாசமின்றி
படம் எடுத்ததற்காக இயக்குனர்  பிரபு சாலமனுக்கு பாராட்டுக்கள் .பின்னணி
இசை, பாடல் மிக நன்று . இமான் சிறப்பாக  இசை அமைத்து உள்ளார். ஒளிப்பதிவு
பிரமாண்டம். வனப்பகுதியும் ,பிரமாண்ட அருவியின் உச்சியில் படம் பிடித்த
விதமும் ,இறுதிக் காட்சியில் இரண்டு யானைகளின் மோதலும் பிரமிப்பு
ஒளிப்பதிவாளர் சுகுமார் மற்றுமொரு பாலு மகிந்திரா .முத்திரை பதித்து
உள்ளார் .கதாநாயகி லட்சுமி மேனன் அல்லியின் அப்பாவாக நடித்தவர் மிக
நன்றாக நடித்துள்ளார் .

தம்பி ராமையா மனதிற்குள் பேசுவது போன்ற வசனங்கள் நகைச்சுவை சர வெடிகள்
.உண்டியல் என்ற பெயரில்தம்பி ராமையாவுடன்  நடிகர் நன்றாக நடித்துள்ளார்
.படத்தில் வசனம் மிக நன்று .200 ஆண்டு கால வரலாறு உள்ள வன மக்கள் பண்பாடு
,கட்சிக் கொடிகள் இன்றி அரசாங்க இலவசங்கள்  இன்றி வாழும் உயர்ந்த
வாழ்க்கை .

அறுவடை நேரத்தில் ஊருக்குள் புகுந்து அழிக்கும் காட்டு யானையை விரட்ட
கும்கி யானையை வரவழைக்கின்றனர் . கும்கி யானை செல்ல முடியாத சூழலில்
கோயில் யானையை கும்கி யானை என்ற பெயரில் அழைத்து செல்கின்றனர்
.வானவாசிகள் வரவேற்று மாலையிட்டு சந்தானம்  குங்குமம் இட்டு பாத பூஜை
செய்து எங்களை காக்க  வந்த சாமி என்கின்றனர் .கோயில் யானை பாகன் இரண்டு
நாட்களுக்கு மட்டும் என்ற சென்றவன் அல்லியின் அழகில் மயங்கி
காதிலிக்கிறான் .அங்கேயே தங்கி விடுகிறான். வனவாசிகளுக்கு  கும்கி
யானைக்கும் கோயில் யானைக்கும் உள்ள வேறுபாடு தெரியாமலா இருக்கும் .இந்த
இடத்தில இயக்குனர்  பிரபு சாலமனுக்கு சறுக்கல் .

இயற்கை வனக் காட்சிகள் கண்ணிற்கும், மனதிற்கும் குளிர்ச்சி .மாணிக்கம்
என்ற பெயரில் வரும் கோயில் யானைதான் முதல் கதாநாயகன் .விக்ரம் பிரபு
இரண்டாம் கதாநாயகன் என்று சொல்லும் அளவிற்கு மாணிக்கம் யானையின் நடிப்பு
மிக நன்று .உருவத்திலும் நடிப்பிலும் பிரமாண்டம் .  யானையை ராம நாராயணன்
அளவிற்கு பயன்படுத்தாதற்கு நன்றி சொல்ல வேண்டும் .

இறுதிக் காட்சியில் யானைக்கு மதம் பிடிக்கவில்லை எனக்குதான் மதம்
பிடித்து விட்டது .என்னால்தான்  மாணிக்கம் யானையும் மாமா தம்பி
ராமையாவும் .உண்டியல் நண்பனும் இறக்க காரணம் ஆகி விட்டேன் என்று அழும்
காட்சி நன்று .

கடைசியில் ஜோடிகளை இணைத்து வைக்கும் வழக்கமான எதிர்ப்பார்த்த முடிவை
தராதது இயக்குனர்  பிரபு சாலமன் பதித்துள்ள தனி முத்திரை .

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

மதுரை தொடர்வண்டி நிலையத்தின் எதிரில் உள்ள மங்கம்மா சத்திரத்தில் புதுப்பிக்கப்பட்டு மதுரை மாநகராட்சியின் சார்பில் நவீன சுற்றுலா தகவல் மையம்

 மதுரை தொடர்வண்டி நிலையத்தின்  எதிரில் உள்ள மங்கம்மா சத்திரத்தில் புதுப்பிக்கப்பட்டு மதுரை மாநகராட்சியின் சார்பில் நவீன சுற்றுலா தகவல் மையம்  மாவட்ட ஆட்சியர் திரு .அன்சுல் மிஸ்ரா அவர்களால் திறந்து  வைக்கப் பட்டது .இங்கு மதுரையில் காண வேண்டிய சுற்றுலாத்தலங்களின்   வண்ண புகைப்படங்கள் கண்காட்சியும் .உள்ளது இந்த விழாவில் மதுரை மாநகராட்சி மேயர் ,துணை மேயர்,மாநகராட்சி ஆணையாளர் ,உதவி ஆணையாளர்,மாநகராட்சி பொறியாளர்கள் ,அதிகாரிகள் ,சுற்றுலாத் துறையின் சார்பில்  சுற்றுலா அலுவலர் க.தர்மராஜ் ,உதவி சுற்றுலா அலுவலர்கள் இரா .இரவி ,சிவகுமார் ,உமா தேவி ,தான் பவுண்டெசன் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர் .மதுரை வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த தகவல் மையத்தைப் பயன்படுத்தி பயன் பெறலாம் .

மதுரை சிவாஜி மன்றத்தின் சார்பில் அய்யா வி .என் .சிதம்பரம் 30 ஆம் நாள் நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது . தொகுப்பு கவிஞர் இரா .இரவி


மதுரை சிவாஜி மன்றத்தின் சார்பில் அய்யா வி .என் .சிதம்பரம் 30 ஆம் நாள் நினைவு அஞ்சலி கூட்டம்  நடந்தது .
தொகுப்பு கவிஞர் இரா .இரவி .சட்ட மன்ற உறுப்பினர் திரு .பழ .கருப்பையா ,கலைமாமணி கு. ஞானசம்பந்தன் ,மேடைக்கலைவாணர் என் .நன்மாறன் ,சின்னக்கலைவாணர் நடிகர் விவேக்,கவிஞர் இரா .இரவி  உள்பட பலர் கலந்து கொண்டு அய்யா வி .என் .சிதம்பரம் அவர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர் .

சட்ட மன்ற உறுப்பினர் திரு .பழ .கருப்பையாஉரை ;

அய்யா வி .என் .சிதம்பரம் அவர்கள்  மதுரை மீனாட்சி கோயில் தர்க்காராக இருந்தபோது கோயிலில் "இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்." என்று எழுதி இருந்தது .நான் சொன்னேன் தமிழ் நாட்டில்உள்ள தமிழக கோயிலில்  "இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்" என்று எழுத வேண்டிய அவசியம் இல்லை ."இங்கு சமஸ்கிரத்திலும்அர்ச்சனை செய்யப்படும் " என்று எழுதி வையுங்கள் .எல்லோருக்கும் தமிழில் அர்ச்சனை நடக்கட்டும் .சமஸ்கிருத்தில் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு மட்டும் சமஸ்கிருத்தில்  அர்ச்சனை நடைபெறட்டும் என்றேன் .அதனை ஏற்று உடன் நடைமுறைப் படுத்தினார் .அர்ச்சனை  சீட்டு சமஸ்கிருத்தில் வேண்டும் என்பவர்களுக்கு தனி சீட்டும் வழங்கப்பட்டது .இதன் படி 28000 பேருக்கு தமிழிலும் 32 பேருக்கு சமஸ்கிருத்திலும் அர்ச்சனை நடந்தது .மதுரை மீனாட்சி கோயில் தர்க்காராக இருந்தபோது மீனாட்சி கோயில் குங்குமத்தை  தவிர வேறு எதையும் அவர் வீட்டு கொண்டு சென்றதில்லை .

கலைமாமணி கு. ஞானசம்பந்தன் உரை ;

 
ஒரு நாள்  கூட்டம் முடிந்து  எல்லோரும் சாப்பிட எழுந்த சமயத்தில் ஒரு 10 நிமிடம் மட்டும் இவர் பேசுவார் .எல்லோரும் அமர்ந்து கேளுங்கள் என்று வேண்டுகோள்  விடுத்தார் .நீதிஅரசர் லட்சுமணன் உள்பட அனைவரும் அமர்ந்து கேட்டனர் .10 நிமிடத்தில் முடிக்க நினைத்த என்னிடம் மேலும் பேசு ! என்று கை காட்டினார் .40 நிமிடங்கள் பேசினேன் .பலரும் பாரட்டினார்கள் .அன்று நீதிஅரசர் லட்சுமணன் என் உரை கேட்டதன் விளைவாக எனக்கு சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் பேசவாய்ப்பு வழங்கினார் .சென்னையில் கலைஞர் முன்னிலையில் பேசினேன். என்னுரை கேட்டு விட்டு "சிற்றரசு "பட்டம் வழங்கினார் ."இவர் எந்த இயக்கத்தில் இருக்கிறார் என்பது தெரியவில்லை நம் இயக்கத்தில் இருந்தால் நல்லது .நான் சொன்னது கட்சி அல்ல தமிழியக்கத்தில்  இருந்தால் நல்லது" என்றார் .திருமண வீட்டில் நடிகர்திலகம் சிவாஜி முன்னிலையில் பேசு! என்று ஒரு வாய்ப்பு வழங்கினார் .எனக்கு ஞானதந்தையாக திகழ்ந்தவர். என்னுடைய  எல்லா விழாக்களிலும் பங்கு பெற்று உள்ளார் .நகைச்சுவை உணர்வு மிக்கவர் .என்னுடைய புது மனை புகு விழாவிற்கு அழைத்து இருந்தேன் .வந்து வீட்டைப் பார்த்து விட்டு நன்றாக உள்ளது .இந்த ஒரு வீடோடு நிறுத்திக்  கொள் வேறு வீடு வேண்டாம் என்று நகைச் சுவையாக சொன்னார்கள் .

மேடைக்கலைவாணர் என் .நன்மாறன் உரை ;

மதுரையில் சிவாஜி சிலை அமைக்க முழு முதற் காரணம்  அய்யா வி .என் .சிதம்பரம் அவர்கள் அன்றைய  முதல்வர் கலைஞரிடம்  அனுமதியை  நான் வாங்கி தந்தேன் .அய்யா வி .என் .சிதம்பரம் அவர்களுக்கும் சிலை அமைக்க வேண்டும் .அதற்கான அனுமதியும் நான் பெற்றுத் தருவேன் .

சின்னக்கலைவாணர் நடிகர் விவேக் உரை ;

லாரன் காரடி இருவரில் ஒருவர் இறந்தபோது, மற்றவர் நான் பார்க்க வரவில்லை என்றாராம் .ஏன் ? என்று கேட்டதற்கு .அவன்  படுத்து இருப்பதைப் பார்த்தால்  எனக்கு சிரிப்பு வந்து விடும் .இதைப் பார்த்தால் மற்றவர்கள் தவறாக நினைப்பார்கள் .என்றாராம்.அதுபோல அய்யா இறந்து விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை .அவர் என்னை எந்த விழாவிற்கு அழைத்தாலும் உடன் சென்று விடுவேன் .எந்த விழா முடிந்தும் அவர் வெறுங்கையோடு அனுப்பியதில்லை .இந்த விழாவில் மட்டுமே நான் வெறுங்கையோடு போகிறேன் .

என்னை அழைத்த
மதுரை சிவாஜி மன்றத்தினருக்கு  நன்றி .சிவாஜி படத்தில் நான் ஒரு வசனம் பேசுவேன் .அது வேறு வசனம் மட்டுமல்ல உண்மை ."சிக்ச்சுக்கு அடுத்து செவண்டா !சிவாஜிக்கு அடுத்து எவன்டா " நடிகர் திலகம் சிவாஜியோடு அய்யா வி .என் .சிதம்பரம் உள்ள அந்த புகைப்படத்தைப் பாருங்கள் .நேரு பேசினால் அவருக்கு கிழ் உள்ளவர்கள் வாய் பொத்தி மரியாதையாக கேட்பார்கள் . காந்தியடிகள் பேசுவதை   நேரு கேட்கும்போது வாய் பொத்தி மரியாதையாக கேட்பார்.இதுதான் வழக்கம் .அந்த புகைப்படத்தில்  நடிகர் திலகம் சிவாஜி,அய்யா வி .என். சிதம்பரம் இருவரும் வாய் பொத்தி மரியாதையாக கேட்கிறார்கள் .இருவரின் சிறந்த பண்பிற்கு எடுத்துக்காட்டு இந்த புகைப்படம்.
கர்ணன் திரைப்படம் அன்றும் சக்கை போடுபோட்டது . இன்றும் சக்கை போடு போடுகின்றது .கர்ணன் பார்ட் ஒன்று சிவாஜி. கர்ணன் பார்ட் டு அய்யா வி .என் .சி. மக்கள் திலகம் எம். ஜி .ஆரை சொல்வார்கள் "கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் " என்று .அய்யா வி .என் .சி."கொடுத்து கொடுத்து கருத்த கரங்கள்  " அந்த அளவிற்கு அள்ளி வழங்கியவர் வி .என் .சி.நாம் செய்த சேவை கண்டு புகழ் என்பது தானாக வர வேண்டும்.

மதுரைக்கு புதிதாக வந்தவர் பார்த்தார் மாடசாமி அழைக்கிறார் .
மாடசாமி பேசுகிறார். என்று திரும்பிய பக்க மெல்லாம் எழுதி இருந்ததாம். புதிதாக வந்தவர்  கடையில் கேட்டார் யார் ? இந்த மாடசாமி.இப்பதான் அவரே எழுதிட்டு போறார் அவர்தான் மாடசாமி என்றார்களாம் .

வயதானவர்களை பெருசு என்று ஒதிக்கி வைத்து விடுகிறோம் .அவர்களை பால் வாங்க பேப்பர் வாங்க ரேசன் கடைக்கு  போக மட்டுமே பயன் படுத்தும் காலத்தில் .
அய்யா வி .என் .சிதம்பரம் தன்னுடைய தாத்தாவிற்கு சிலை திறந்து பிரமாண்ட  விழா நடத்தி தன் பேரன்களுக்கு தன் தாத்தா  பற்றி சொல்லி வேரை  அடியாளம் காட்டியவர்.  விழாவில் தன் காரோட்டிக்கு லட்சகணக்கில் நன்கொடை வழங்கி மகிழ்ந்தவர் .தலைமுறை இடைவெளி இன்றி எல்லோரோடும் அன்பாகப் பழகிய இனியவர் .அய்யா வி .என் .சிதம்பரம் வழியில் அவரது புதல்வர்களும் நடப்பார்கள் .

கவிஞர் இரா .இரவி உரை ;

தூங்கா நகரம் படம் வெளி வந்த நேரம்
அய்யா வி .என் .சிதம்பரம் அவர்களை சந்தித்தேன் .நன்றாக நடித்து இருந்தீர்கள் நீங்கள் நல்ல மனிதர் படத்தில் வில்லனாக நடித்து இருந்தீர்கள்.என்றேன் . " என் இனிய  நண்பன் வாசன்ஸ் டுடோரியல் இருளப்பன் மகன்  திரு கெளரவ் தூங்கா நகரம் இயக்குனர். நண்பனுக்காக நடித்தேன் ".என்று அவர் சொன்னார் .எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை .அது வருக்கு தெரியாது .அவர் என்னிடம் திருப்பதி சிலை ஒன்று தந்தார் .வேறு யாரேனும் தந்து இருந்தால் அவர்களிடம் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை எனவே எனக்கு வேண்டாம் என்று திருப்பி தந்து இருப்பேன் .மிகப் பெரிய மனிதர் தந்தை திறப்பித் தந்தால் தவறு. அவர் மனம் புண்படும் என்று பேசாமல்  வாங்கிக் கொண்டேன் .அதை கொண்டு வந்து என் மனைவிடம் கொடுத்தேன் .அவளுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு .அவள் தன் பூஜை அறையில் வைத்துக் கொண்டாள் .அய்யா வி .என் .சிதம்பரம் கருப்பு வைரம் .உயர்ந்த  உள்ளம் .உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் உயர்ந்த  மனிதர்.  உடலால் உலகை விட்டு மறைந்த  போதும் புகழால்  என்றும் வாழ்வார் .

கவிமாமணி வீரபண்டியத் தென்னவன் ,கவிஞர்கள் பொற்கை பாண்டியன் ,அசோக் ராஜ் ஆகியோர் ர் அய்யா வி .என் .சிதம்பரம்பற்றி கவிதை வாசித்தனர் .கவிஞர் மார்சல் முருகன் தொகுப்புரையாற்றி கவிதை வாசித்தார் .வி .என் .சிதம்பரம் அவர்களின் புதல்வர்கள் கலந்து கொண்டனர் .வி .என் .சி.வள்ளியப்பன் மிக உருக்கமான நெகிழ்ச்சியான கண்ணீர் உரையாற்றினார் .என் தந்தை அளவிற்கு எங்களால் முடியாது என் தந்தை சூரியன் முன் டார்ச்சு அடிப்பதுப் போன்றது .ஆனால் அவர் காட்டிய வழியில் நடந்து சாதிப்போம் .என் தந்தை இறுதி நாளில் எங்கள் ரில்  4000 பேர் கலந்து கொண்டனர் .அதில் 1000 பேருக்கு மேல் எங்கள் கைகளை பிடித்து உங்கள் தந்தை அப்படி உதவினார் இப்படி உதவினார் .என்றார்கள் .எங்கள் ஊர் மாணவ புத்தாடைகள்  வழங்கி நன்றாக படிக்க வேண்டும் என்ற அறிவுரை சொல்வதை நான் பார்த்து இருக்கிறேன் .என் தந்தை எந்தக் கட்சியிலும் சேராதவர் ஆனால் எல்லாக்கட்சியினரோடும்  சேர்ந்து பழகியவர் .முதல் கட்டமாக உங்கள் ஊரில் மருத்துவ வசதி செய்து தர உள்ளோம் .நானும் என் தம்பிகளும் அவர் விட்டு சென்ற பணிகளை அவர் வழியில் தொடர்வோம் என்று சொல்லி அனைவருக்கும் நன்றி  கூ றி முடிக்கின்றேன் .

சனி, 22 டிசம்பர், 2012

தேன் சுவைத் துளிப்பாக்கள் !

தேன் சுவைத் துளிப்பாக்கள் !

நூல் ஆசிரியர்
கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்


நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
பல்வேறு இதழ்களில் பிரசுரமான ,இணையங்களில் பதிவான துளிப்பாகளின் தொகுப்பு நூல். நேரில் சந்திக்காத , இணையத்தின் வழி தினமும் சந்திக்கும் நண்பரின் நூல்.துளிப்பாகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது .பதச்சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு .


விவசாயி  கஷ்டப்பட்டு விளைவித்த  பூசணிக்காயை சமைத்து உண்ணாமல் மூட நம்பிக்கையின் காரணமாக வீதியில் போட்டு வீணடித்து விபத்திற்கு வழி  வகுக்கும்   செயலை சாடும் விதமாக  உள்ள துளிப்பா .

பல்லாயிரம் பூசணிக்காய்கள்
உடல் சிதறி பலி
ஆயுத பூஜை .

மனித நேயம் கேள்வி பட்டு இருக்கிறோம் .மரநேயம் என்று புதுச் சொல் பயன் படுத்தி உள்ளார். பாராட்டுக்கள். மரநேயம் விதைத்து உள்ளார் .

மரங்களின் தாலாட்டு
மனிதனுக்கு தூய காற்று
என்னே மரநேயம் .


தமிழக மீனவர்கள் தினந்தோறும் செத்து பிழைக்கின்றனர் .அவர்களை காக்க  ஒரு நாதி இல்லை. இந்த அவல நிலை என்று மாறுமோ ? என்ற வருத்தத்தில் வந்த துளிப்பா .

கண்ணீரில் வாழ்கிறான்
தண்ணீரில் 
பிழைக்கிறான்தமிழக மீனவன் .

மீனவர்களின் சோகத்தை கண்டு கேட்டு படித்து பார்த்து உணர்ந்து துளிப்பா வடித்துள்ளார் .

கடலில் அழும் மீன் போல்
கரையில் அழுகிறாள்
மீனவன் மனைவி .

தமிழக மக்கள் மாறி மாறி வாக்களித்த போதும் இன்னல் மட்டும் இன்னும் தீர்ந்தபடில்லை .மின் தடை ஒழிய வில்லை .இன்று மின்சாரம் என்பது அடிப்படை தேவை .அதைக் கூட ஆள்வோர் நிறைவேற்ற வில்லையே என்ற வேதனையில் உள்ளனர் .அதனை உணர்த்தும் துளிப்பா .

ஆட்சி மாறுகிறது
காட்சி மாறவில்லை
தமிழ்நாட்டில் .

சொல் விளையாட்டு விளையாடும்  ஒரு துளிப்பா .ஒரு புறம் அரசியல்வாதிகள் கோடிகள் கொள்ளையடித்து அயல் நாட்டு வங்கிகளில் வருங்கால வாரிசுகளுக்கு சேர்த்து வைக்கின்றனர். மறுபுறம் வசிக்க வீடு இன்றி தெருக்களில் வாழும் வறுமை .இந்த முரணை உணர்த்திடும் துளிப்பா .

கோடிகளில் வாழ்வதும்
கோடிகளில்  வாழ்வதும்
இதியாவில் மட்டுந்தான் .

ஆள்வோர் திட்டங்கள் தீட்டிக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் ஏழ்மை மட்டும் இன்னும் ஒழிந்தபாடில்லை .

வயிற்றில் வலி இல்லை
வயிற்றில் ஈரத்துணி
கண்ணீரில் ஏழை  .

சில துளிப்பாக்கள் மேற்கோள்  காட்டவே தயங்கும் அளவிற்கு  சாட்டை அடி துளிப்பாக்கள் நூலில் உள்ளது .
துளிப்பாவின் மூலம்  உழைப்பின் மேன்மையையும் உணர்த்துகின்றார் .

வாழ்க்கை முழுக்க
ஓட்டப்பந்தயம்
கடிகார முட்கள் .


விலை நிலங்கள் விரைவாக அழிந்து வருகின்றது .விவசாயிகள் தற்கொலை தினமும் நடகின்றது .இந்த  அவல  நிலை தொடர்ந்தால் உண்ண  சோறு கிடைக்காத அவல  நிலை விரைவில் வரும் என்பதை உணர்த்தும் துளிப்பா .

விலை நிலங்களில்
ஓங்கி வளர்ந்தன
மாடி வீடுகள் .

வியப்பில் ஆழ்த்தும் துளிப்பா ஒன்று .

மீசையுடன்
குழந்தை பிறந்தது
பூனைக்குட்டி .


மனசாட்சி உள்ள ஒரு நேர்மையான படைப்பாளியால் ஈழக் கொடுமை பற்றி எழுதாமல் இருக்க முடியாது .கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் ஈழம் பற்றி எழுதி உள்ளார் .

இன வெறியால்
இடம் பெயர்கின்றன
ஈழத்துப் பறவைகள் .


நிலா பற்றி பாடாத கவிஞர் இல்லை .நிலாவைப் பாடதவர் கவிஞரே இல்லை என்பதும் உண்மை .நிலாவை வித்தியாசமாக பார்த்து உள்ளார் .

ஆழம் அதிகம்
நீந்தத்  தெரியாமல்
நிலா .


நம் நாட்டில் வளர்ச்சி என்ற பெயரில் நல்ல மரங்களை வெட்டி வீழ்த்தி வீழ்ச்சிக்கு வழி வகுத்து வருகின்றனர் .வெட்டிய   அளவிற்கு புதிய மரங்கள் நடுவதே இல்லை .

சாலை விரிவாக்கம்
சங்கு
தினர்
மரங்களுக்கு .
எள்ளல் சுவையுடன் கவிஞர்களின் சோகத்தை உணர்த்துகின்றார் .இன்று பிரபல கவிஞர்கள் கவிதை நூல் மட்டுமே புத்தக் கடைக்காரர்கள்   வாங்குகின்றனர் .வாங்கி வைத்துக் கொண்டு நூல்  விற்ற பின்பு பணம் தாருங்கள் என்றாலும் , நூலை வாங்க மறுக்கின்றனர்.
வில்லுப்பாட்டு கலைஞர்  கொத்தமங்கலம்  சுப்பு அவர்களிடம் காந்தி மகான் கதை சொல்லும்போது , அவரை சுட்டக் காட்சி வரும்போது தின்ந்தோறும் உங்களால் எப்படி அழ முடிகின்றது .என்று கேட்டபோது .அவர் .சொன்னது ."வீட்டில் விற்காமல் இருக்கும் என் நூல்கள் பற்றி நினைப்பேன் உடன் அழுகை வந்து விடும் ".என்றாராம் .அதனை நினைவிற்கு கொண்டு வந்த துளிப்பா .
கவிதை நூல் வெளியீடு
மகிழ்ச்சியில் திளைத்தன
கரையான்கள் .
காதிலில் தோல்வி அடிந்தவர்களின்மான நிலையை படம் பிடித்துக் காட்டும் துளிப்பா .
காதல் தோல்வி
அறுத்தெறிய முடியவில்லை
அவளின் நினைவுகள் .

பறவைக்கு உள்ள சுதந்திரம் கூடமனிதனுக்கு இல்லை .கடலில் ,காற்றில் தெரியாமல் படகு எல்லை தாண்டினால் சுட்டு வீழ்த்தும் கொடிய சிங்கள இலங்கை ராணுவத்தைச் சாடிடும் துளிப்பா .சிந்திக்க வைத்தது .
கடலெல்லையைத் தாண்டியும்
பறக்கும் பறவைகள்
கொல்லப்படும் மீனவன் 


உள்ளத்து உணர்வை ஒளிவு மறைவு இன்றி அப்படியே பதிவு செய்துள்ளார் .ஒரு சில துளிப்பாகளில் ஆங்கிலச் சொல் வருகின்றது .வருங்காலத்தில் ஆங்கிலச் சொல் தவிர்த்து எழுதுங்கள் .தொடர்ந்து எழுத்துகள் பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்  .


--

மதுரை பற்றிய சுற்றுலா தகவல்

 மதுரை தொடர்வண்டி நிலையத்தின்  எதிரில் உள்ள மங்கம்மா சத்திரத்தில் புதுப்பிக்கப்பட்டு மதுரை மாநகராட்சியின் சார்பில் நவீன சுற்றுலா தகவல் மையம்  மாவட்ட ஆட்சியர் திரு .அன்சுல் மிஸ்ரா அவர்களால் திறந்து  வைக்கப் பட்டது .இங்கு மதுரையில் காண வேண்டிய சுற்றுலாத்தலங்களின்   வண்ண புகைப்படங்கள் கண்காட்சியும் .உள்ளது இந்த விழாவில் மதுரை மாநகராட்சி மேயர் ,துணை மேயர்,மாநகராட்சி ஆணையாளர் ,உதவி ஆணையாளர்,மாநகராட்சி பொறியாளர்கள் ,அதிகாரிகள் ,சுற்றுலாத் துறையின் சார்பில்  சுற்றுலா அலுவலர் க.தர்மராஜ் ,உதவி சுற்றுலா அலுவலர்கள் இரா .இரவி ,சிவகுமார் ,உமா தேவி ,தான் பவுண்டெசன் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர் .மதுரை வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த தகவல் மையத்தைப் பயன்படுத்தி பயன் பெறலாம் .

வியாழன், 20 டிசம்பர், 2012

ஹைக்கூ (சென்டிரியு) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ (சென்டிரியு) கவிஞர் இரா .இரவி !
செவி மடுக்க வேண்டாம்  
மூடர்களின் உளறல்
அழியாது உலகம் !
மதத்தை வென்றது பாசம்
பள்ளிவாசலில் குழந்தையை
மந்திரிக்க இந்து தாய் !


தடை செய்தால்
அமைதி நிலவும்
சாதிக்கட்சிகள் !


பிஞ்சுலேயே கற்பிப்பு
ஆணாதிக்க உள்ளம்
ஆண்  பிள்ளைக்கு !


சிரிச்சாப் போச்சு
அடிமைத்தனம் போதிப்பு
பெண் குழந்தைக்கு !


சின்ன மீன் போட்டு
சுறா மீன் பிடிப்பு
அரசியல் !


அந்நிய முதலீடு வரவேற்று
பெற்றப் பணங்கள்
அந்நிய நாட்டு வங்கியில் முதலீடு !

பார்ப்பதற்கு அழகு
மலர்கள்மீது
மார்கழிப்பனி !

பணியாளர்கள் வயிற்றில்
அடித்தவர் நன்கொடை
எழுமலையானுக்கு !

சிறகுகளின் சுவாசங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி . நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

சிறகுகளின் சுவாசங்கள் ! 

நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி .

நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி
.

 இனிய நண்பர் நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.தொடர் வண்டித் துறையில் அதிகாரியாக பணி புரிபவர் . பணிபுரிந்துகொண்டே இலக்கியத்திலும் தடம் பதிப்பவர் .இவருடைய முந்தைய நூல் நித்திரைப் பயணங்கள்வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டவன் நான் இவரது அருமையான கவிதைகளை அடிக்கடி முக நூலில் படித்து விட்டு பாராட்டி வருகிறேன் .தனித்தனியாகப்  பார்த்து ரசித்த கவிதைகளை நூலாகப்  பார்ப்பதில் படிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி .

  "ஒரு சிற்பியின் பிரசவம் " முதல் கவிதையிலேயே முத்திரைப் பத்தித்து ,படித்த வாசகர்களை சிலையாக்கி விடுகின்றார் .

எனக்குள்
சன்னமாய் தேய்ந்து  மறைத்து
உளியோசையும்
வேதனையின் வலியும் !

சிந்திக்க வைக்கும் வைர வரிகள் .இவை .உளியின் தாக்குதலுக்குப் பயந்தால் கல் சிலையாக முடியாது .துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வது உயர்வானது .என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக உள்ளது .பாராட்டுக்கள் .

உள்ளத்து  உணர்வு கவிதை ! உண்மையை உரக்க உரைப்பது கவிதை ! சிந்திக்க வைத்து சீர் படுத்துவது கவிதை ! இயற்கையின் படப்பிடிப்பு கவிதை ! இளகிய மனது கவிதை ! குழந்தை உள்ளம் கவிதை ! மனிதநேயம் கவிதை ! மகத்தானது கவிதை ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி
அவர்கள் சிறகுகளின் சுவாசங்கள் !  என்று நூலிற்கு தலைப்பு வைத்த விதத்தில் வித்தியாசமாக சிந்தித்து உள்ளார் என்பதை உணர முடியும். சிறகுகளின் அசைவுகள் பார்த்து இருக்கிறோம் .ஆனால் நாம் சிறகுகளின் சுவாசங்கள் ! பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை .இனி பார்ப்போம் கேட்போம் இதுதான் படைப்பாளியின் வெற்றி .

முட்களின் வேதனை !

என்னைத் தீண்டி சிதைப்பது
நீயல்லவா ...
வலியின் வேதனையுடன்
உன் சாப
த்தையுமல்லவா
சேர்ந்து சுமக்கிறேன் !
முள் மீது நாம் மிதித்து குத்திக் கொண்டு ,"முள் குத்தி விட்டது " என்று எல்லோரும் பொய்  சொல்லும் வழக்கத்தை சாடும் விதமாக வேறு பட்டு சிந்தித்து உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி .பாம்பும் அப்படிதான் பாம்பை நாம் மிதிக்காமல் அது கடிக்காது நம்மை .நாம் அதைத் தீண்டாமல் அது நம்மைத் தீண்டாது .பிறகு பாம்பு தீண்டி விட்டது என்று கவலை கொள்கிறோம் .பார்த்து கவனமாக நடந்தால் பாம்பு கடிக்காது. இவ்வாறு பல சிந்தனைகளை என்னுள்  விதைத்து முள் கவிதை .மாறுபட்டு மாற்றி சிந்திபவர்களே வெற்றிப் பெறுகின்றனர் .வித்தியாசமாக சிந்தித்து பல கவிதைகள் வடித்துள்ளார் .

சித்தர்கள் போல பல தத்துவக் கவிதைகள் வடித்துள்ளார் .

மாயத்தோற்றம் !
குயில் குரல் இனிமை
புறாவின் தோற்றம் அழகுதான்
அகம் புறம்
த்தனை மாயை  ...


குயில்  புறா அளவிற்கு அழகில்லை என்றாலும் தன் குரல் வளத்தை, இனிமையை நினைத்து பெருமை கொள்ள வேண்டும் .இது மனிதர்களுக்கும் பொருந்தும் .இல்லாததற்காக வருந்துவதை விடுத்து இருப்பதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும்.கிடைக்காதை  நினைத்து கவலை கொள்வதை விடுத்தது கிடைத்ததை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் .

பல்வேறு தலைப்புகளில் பல்வேறு சிந்தனைகளில் பல்வேறு கவிதைகள் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .அணிந்துரையில் அத்தனை கவிதைகளையும் எழுதிவிட முடியாது .பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

சிறகுகளே துணையாய் !

விழிகளில் காதல் பனி
த்திருக்க  பசுமையாய் ...
நினைவில் வருட வசந்தத்தின் விளிம்பில்
சிறகுகளே துணையாய் !
அந்த நந்தவன மாளிகையில்
மன்னவன் வரவிற்கா
ய்
மண்
டியிட்டுக் கிடந்தனையோ !

காதல் பிரிவு பற்றியும் பாடி உள்ளார் .காதலை பாடாத கவிஞரும் உண்டோ ?

கவியரசு கண்ணதாசன் பாணியில் தேன் தேன் என்று எழுதி கவித்தேன்  விருந்து வைத்து வியப்பில் ஆழ்த்தி உள்ளார் .

பார்த்
தேன்  உணர்ந்தேன் பார்வையில் திளைத்தேன்
மனம்
தேன் மலைத்தேன் மணந்தேன் உயிர்த்தேன்
இடைத்தேன் இழைத்தேன் இதழ்
தேன்  மலர்ந்தேன்
விழித்தேன் படித்தேன் மொழிந்தேன் சுவைத்தேன்

இப்படி 
தேன் கவிதை தித்திக்கும் விதமாக நீண்டு கொண்டே செல்கின்றது .நூலை வாங்கி கவித்தேனை குடித்துப்  பாருங்கள் .சங்க இலக்கியப் பாடல் போல இலக்கித் தமாக கவிதை உள்ளது .

குறிஞ்சித் தென்றல் !
குறிஞ்சி மலர்க் கொய்த காந்தள்  மென் மேனியிவள்
தேன்  திணை கலந்து சுனை நீர்ப் பருகி
குறிஞ்சி யாழ் இசைக்க கிளி வந்து சொன்ன தூது
மலைப்பாதை நெளிந்து மன்னவன் நினைத்து
வேலன் வழிப்பட்டு வேல் விழியால்
குறிஞ்சிப் பண்  சுருதி புலி சிங்கம் வணங்கி  நிற்க
தலைவன் மஞ்சம் சேர்ந்த சிறுகுடி பூங்கொடியாள் !


நல்ல சுவாசம் புத்துணர்ச்சியைத் தரும்.நல்ல கவிதை மகிழ்ச்சியைத்  தரும் . சிறகுகளின் சுவாசங்கள் !  என்ற இந்த நூல் புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தருகின்றது.தொடர்ந்து  எழுதுங்கள் என்ற என் வேண்டுகோளை ஏற்று தொடர்ந்து எழுதி வரும் இனிய நண்பர் கவிஞர்
மு .ஆ .பீர்ஒலி
அவர்களுக்கு பாராட்டுக்கள் .--
http://2.bp.blogspot.com/-Go9Ju9PVjZY/T5FQdYwQIwI/AAAAAAAAFLU/_0giHMyJYXk/s1600/578838_424998540862587_100000573330162_1486214_1434638446_n.jpg

http://www.youtube.com/watch?v=x6AlHCPjNq4&feature=player_embedded

புதன், 19 டிசம்பர், 2012

தலைநகரில் நிகழ்ந்த தலைகுனிவு ! கவிஞர் இரா .இரவி !

தலைநகரில் நிகழ்ந்த தலைகுனிவு  !     கவிஞர் இரா .இரவி !

நடுநிசியில் நங்கை ஒருத்தி டெல்லியில்
நண்பனுடன் பேருந்தில் பயணித்தப்போது !

போதையில் இருந்த மனித நாய்களால்
பாலியல் கொடுமை நிகழ்ந்துள்ளது !

யார் காரணம்? யார் காரணம் ?
யான் சிந்தித்துப் பார்த்தேன் !


போதையைப் பொதுவாக்கி இளைஞர்களின் 
பாதையைத் தவறாக்கிய அரசும் காரணம் !

அன்பு செலுத்த வேண்டிய பெற்றோர்கள்
பணம் செலுத்தி விடுதியில் சேர்க்கின்றனர் !


மனிதாபிமானம் இல்லாத வக்கிரமான
மனித  விலங்காக வளர்கின்றனர் !

ஊடகங்களும் இந்தஅவல  நிலைக்கு
ஒரு  வகையில் காரணமாகின்றன !


அன்று வெள்ளிக்கிழமை அரைமணிநேரம் பொதிகையில் ஒளியும் ஒலியும் ஒளிபரப்பானது !

இன்று இருபத்திநான்கு மணி நேரமும்
தொலைக்காட்சிகளில்
ஒளியும் ஒலியும்  தணிக்கையின்றி ஒளிபரப்பாகின்றது !

தமிழ்ப்பண்பாட்டைச் சிதைத்து புத்தியைக் கெடுத்து
பிஞ்சுகளின் நெஞ்சங்களில் ஆபாசநஞ்சு விதைப்பு !

நாங்கள் பள்ளியில் படித்த காலத்தில்
நீதி போதனை வகுப்புகள் நடந்தது !

இன்று
நீதி போதனை வகுப்புகள் இல்லை பள்ளிகளில் 
இன்று காமபோதனை வகுப்புகள் உண்டு  ஊடகங்களில் !

தலைநகரில் நிகழ்ந்த தலைகுனிவு இனியும்
தொடராதிருக்க சமுதாயத்தைச் சீர்படுத்துவோம் --

திங்கள், 17 டிசம்பர், 2012

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !
   

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைபெற்றது .வாசகர் வட்டத்தின் தலைவர் எ.எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் . ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் , பேராசிரியர் போத்தி  ,திரு .ஆ .முத்துக்கிருஷ்ணன் ,திரு C.ராஜேந்திரன் ,
திரு .அழகர் சுவாமி
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,கே.விஸ்வநாதன் ஆகியோர் தன்னம்பிக்கை கவிதை வாசித்தனர் .
 
" நுகர்வோரின் தன்னம்பிக்கை " என்ற தலைப்பில் திரு G. ராம மூர்த்தி  தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .   பல பயனுள்ள கருத்துக்கள் கூறி பயிற்சி அளித்தார் .நுகர்வோர் எப்படி எல்லாம் ஏமாற்றப் படுகிறார்கள் என்பதை விளக்கி  கூறினார் .நுகர்வோரின் விழிப்புணர்வு  பற்றி உரிமைகள் பற்றியும் விளக்கினார்  .நுகர்வோரின் உரிமைகள் மறுக்கப்படும் போது சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் .நுகர்வோர் நீதி மன்றத்தின் உதவியால் சாதித்த சாதனைகள் . மாணவி பாண்டிச்செல்வி நுகர்வோர் விழிப்புணர்வு   கருத்துக் கூறினார் . திரு.தினேஷ் நன்றி கூறினார் .

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர் திரு . திரு .ஜான், திரு .மோகன் உள்ளிட்ட   பலர் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர் . 

மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .

மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில்  நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு  தொடக்க விழாவில் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் இயக்குனர் பாண்டிய ராஜன் அவர் மகன் நடிகர் பிரிதிவி ராஜன் முன்னிலையில் குழந்தைகள், பெரியவர்கள் சொன்ன நகைச்சுவைகள்  !

தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .

------------------------------
------------------------------
கணவன் ; என் மனைவி   வீட்டு ஆள்கள் வந்தால் எங்கள் வீட்டில் மட்டன் சாப்பாடு .
நண்பர் ;உங்க வீட்டு
ஆள்கள் வந்தால் ?
கணவன் ; மட்டமான சாப்பாடு.
----------------------------------------------------------
ஒருவர் ;காப்பிஎவ்வளவு ?
மற்றவர் ;10 ரூபாய் .
ஒருவர் ;எதிர்த்த கடையில்  ஒரு ரூபாய் சொல்றாங்க .
ஒருவர் ;அது செராக்ஸ்  கடை
.
-----------------------------------------------------------
அப்பா ;பரிட்சையில் பாசான சைக்கிள் வாங்கி தருவேன் .
மகன் ;பெயில் ஆயிட்டா
அப்பா ;5 சைக்கிள் வாங்கி வாடகை சைக்கிள் கடை வைத்து தருவேன் .
--------------------------------------------------------------
மகன் ;எதிர் வீட்டு அறிவாளி பையனே  பெயில் ஆகிட்டான் .
அப்பா ;நீ என்ன ஆனாய்?
மகன் ; நான்தான் சொன்னேனே அறிவாளி பையனே  பெயில் ஆகிட்டான் .
உங்க மகன் எப்படி பாசாவான் .

---------------------------------------------------------------

பேருந்தில் ஒருவர் ;.ஏங்க இது நெல்பேட்டையா ?
மற்றவர் ; இல்லை இது என் தோள் பட்டை .
----------------------------------------------------------------

ஆசிரியர் ; "ஆசிரியர் மாணவனை அடித்தார் ."இது என்ன காலம் ?
மாணவன் ;ஆசிரியருக்கு கெட்ட   காலம் .
---------------------------------------------------------------

மாமனார் ;வீட்டுக்கு வந்த மருமகளிடம் அத்தைக்கு மரியாதை கொடுக்கனும்  என்று சொன்னது தப்பா போச்சு .
மற்றவர் .ஏன் ?
மாமனார் ;நானும் என் மனைவியும் வெளியே பொய் விட்டு வந்தோம் .சாமி படங்களோடு என்  மனைவி படத்துக்கும் மாலை போட்டுட்டா .
---------------------------------------------------------------

ஒருவர் ;கல்யாணம் நடக்கனுமா ? வேணாமா .?
மணமகன் ; நடக்கனும் ஒருவர் ; நீ மேஜரா ? மைனரா ?மணமகன் ; மேஜர்தான் .
ஒருவர் ;அப்புரும் ஏன் ? மைனர் ஜெயின் கேட்குற பேசாமல் தாலியை கட்டு .
------------------------------------------------------------------------

மருத்துவர் ;நீங்க ரேசன் கடையில் வேலை பார்ப்பவரா ?
நோயாளி ;ஆமாங்க .
மருத்துவர் ;சுகர் குறைவா இருக்கு .அதுதான் கேட்டேன் .
---------------------------------------------------------------------

ஒருவர் ;இவர் எப்ப இருந்து ஊமை ஆகி விட்டார் .
மற்றவர் ;போன வாரம் கல்யாணம் ஆச்சு அதில் இருந்து ஊமையாகி விட்டார் .
-------------------------------------------------------------------------

ஒருவர் ; ஏன் ? இப்படி பேமுழி  முழிக்கிறிங்க .
மற்றவர் ;எங்க பேமிளியே இப்படிதான் முழிப்போம் .
-------------------------------------------------------------------------

ஒருவர் ;இந்தியாவை விட்டு போறான் அவன் பெயர் என்ன ?
மற்றவர் ; தெரியவில்லை .
ஒருவர் ;இந்துஸ்தான் லீவர் .
------------------------------------------------------------------------------

ஒருவர் ;இந்தியாவை விட்டு எப்பாவாவது போறான் அவன் பெயர் என்ன ?
மற்றவர் ; தெரியவில்லை .
ஒருவர் ;இந்துஸ்தான் லீவர் லிமிடட் .
------------------------------------------------------------------------

அப்பா ;என் மகன் ஒரு புத்தகப் புழு
நண்பர் ;அவன் நெளியரதைப் பார்த்தாலே தெரியுது .
----------------------------------------------------------------------------

அம்மா ; இந்த வீட்டில் நான் இருக்கனுமா ? அல்லது உன் மனைவி இருக்கனுமா ? நீயே முடிவு சொல்லு .
மகன் ;நீங்க ரெண்டு பேரும்  வேண்டாம் வேலைக்காரி இருந்தால் போதும் .

---------------------------------------------------------------------------

ஒருவன் ;உங்க அப்பா அடக்குமுறையா ?
மற்றவன் ;இல்லை அடங்கும் முறை
.
-----------------------------------------------------------------

ஒருவர் ;இளையராஜா சைனாவிற்கு  போனால் அங்கு அவர் பெயர் என்ன ?
மற்றவர் ;தெரியவில்லை
ஒருவர் ;யங் கிங் .
-------------------------------------------------------

அப்பா  ; என் மகன் பண்ண காரியத்தால் வெளியில் தலை காட்ட முடியவில்லை .
நண்பர் ;அப்படி என்ன செய்து விட்டான் .
அப்பா  ; என் விக்கை அவன் போட்டுக் கிட்டு போயிட்டான் .
------------------------------------------------------------

ராஜ அடித்தால் சங்கு
 
போன் அடித்தால் ரிங்கு .
------------------------------------------------------

பாட்டி ; ஓடி ஒளிடா உங்க வாத்தியார் வருகிறார் .
பேரன் .நீ முதலில்
ஓடி ஒளி பாட்டி .நீ செத்து  போய்ட்டேன் சொல்லி லீவு போட்டேன் .

-----------------------------------------------------------------

ஒருவர் ;எங்க தலைவர் மைக்கே இல்லாமல் பேசுவார் .
மற்றவர் ;எங்க தலைவர் ஆளே  இல்லாமல் பேசுவார் .
------------------------------------------------------------

ஒருவர் ;ஓங்கி எத்தினால் மாட்டுத்தாவணியில் பொய் விழுவாய் .மற்றவர் ;கொஞ்சம் மெதுவா எத்துங்க சிம்மக்கல்லில் போய்  விழுகிறேன் .

------------------------------------------------------------------

சிறுவன் ;   தன் ஆட்காட்டி  விரலைக் காட்டி நீங்க குளிக்கும் போது இந்த விரல் நனையாது .
பெரியவர் ;அது எப்படி .
சிறுவன் ; நீங்க குளிக்கும் போது என் விரல் எதுக்கு நனையுது .

-------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

இந்திய இலக்கியச் சிற்பிகள் மு .வ .( மு .வரதராசன் ) நூல் ஆசிரியர் பொன் சௌரி ராஜன். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=b81c859f46&view=att&th=13ba319433d56fcd&attid=0.2&disp=inline&realattid=f_haro5dzh1&safe=1&zw&saduie=AG9B_P_7oaRvciWGRYPyk6iaZVQX&sadet=1355651256022&sads=hC4KIzkk5ws0ztBLG8qSE2GtO28இந்திய இலக்கியச் சிற்பிகள் மு .வ .( மு .வரதராசன் )

நூல் ஆசிரியர் பொன் சௌரி ராஜன்.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
.

வெளியீடு சாகித்ய அகதமி விலை ரூபாய் 40.

மு .வ .என்ற மிகச் சிறந்த ஆளுமையின் வரலாறு .அவரது படைப்புகள் பற்றிய ஆய்வு .அவரது குநலன்கள் என அனைத்தும் நூலில் உள்ளது .
 
நூல் ஆசிரியர் பொன் சௌரி ராஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .மு .வ .அவர்களை நேரில் பார்க்காத என் போன்ற பலருக்கும் ,இளைய சமுதாயதிற்கும் மு .வ .பற்றிய பிம்பம் மனதில் பதியும் படியாக உள்ளது .நூலில் 5 கட்டுரைகள் உள்ளது .பின் இணைப்பாக 4 பகுதிகள் உள்ளது. மிகச் சிறந்த ஆய்வு நூலாக உள்ளது .ஒரு மாணவர் ஆசிரியருக்கு செய்த மரியாதையாக மு .வ . வின் மாணவர் பொன் சௌரி ராஜன்எழுதியுள்ள நூல் .நூலின் முதல் வரிகளை வாசித்துப் பார்த்தவுடன் நூல் முழுவதும் வாசிக்க வேண்டும் என்ற  ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது .

" பறந்துபோய் மலையுச்சியை அடைவோம் என்று சொல்லுகின்றவர்களைப் பார்த்து ஏங்கி நிற்பது வீண் .படிப்படியாக நடந்து ஏறி  மலை உச்சியை அடைகின்றவர்களைப் பின் பற்றுவதே கடமை "( காந்தி அண்ணல் ப .8)என்று ( மு .வரதராசன் ) மு .வ . காந்தி அண்ணல் பற்றி எழுதிய கருத்து அவருக்கும் பொருந்தும் .மணி மணியாக ,நாள் நாளாக ,ஆண்டு ஆண்டாகத்  திட்டமிட்டுக் கல் மேல் கல் வைத்து  வீடு கட்டுவது போல இடையறாது  உழைத்துப் படிப்படியாக முன்னேறிவர் மு .வ . மு வ .அவர்கள் வேலம்  என்னும் சிற்றூரில்  25.4.1912 அன்று பிறந்தார் .அவரது வாழ்க்கை வரலாறு உணவு நெறி ,இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை வாழ்ந்தவர் மு .வ .நன்றியோடு வாழ்ந்தார் .புகழை  வேண்டாம் என்று சொல்லியபடி வாழ்ந்து காட்டியவர் .இப்படி  பல்வேறு தகவல்கள் நூலில் உள்ளது .

மு வ .அவர்களின் வாழ்வில்அவருக்குள் மாற்றம் நிகழ்த்திய  ஒரு நிகழ்வு நூலில் உள்ளது .

" திருப்பத்தூர் கிறித்தவ குல ஆசிரமத்தில் திருக்குறள் வகுப்பு நடத்தி வந்தேன் .அந்த காலத்தில் என் உள்ளத்தில் என் கல்வித் திறமை பற்றிய செருக்கு .இருந்தது என்னை விட படித்த பெரியண்ணன் ( சவுரி ராசன் ஜேசுதாசன் ) சின்ன
ண்ணன் ( பாரஷ்டர் பேட்டன் ).ஒரு நாள் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்துக் கையலம்ப எழுந்தேன் .குழாயருகே சென்ற போது நான் மட்டும்  வெறுங்கையோடு நிற்பதையும் மற்றவர்கள் ஒவ்வொருவரும் சாப்பிட்ட தட்டை கழுவுவதற்காக கையில் ஏந்தி நிற்பதையும் உணர்ந்தேன் .சின்னண்ணன் கையில் இரண்டு தட்டுகளைக் கண்டேன் .அவரிடம் என் தட்டை பெற முயன்றேன் .அவர் இரண்டையும் உமி இட்டுத் தேய்க்கத் தொடங்கி  என்னிடம் கொடுக்க மறுத்து விட்டார் .

அன்று என் வாழ்வில் பெரிய திருப்பம் நேர்ந்தது .கல்வி பற்றிய செருக்கு என் உள்ளத்தில் சுவடு தெரியாமல் அழிந்தது .மூளையால்  உழைக்காமல் ,கை கால் கொண்டு உழைக்கும்  எவரைப் பார்த்தாலும் அவர்களும் என்னைப் போன்ற மனிதர்களே என்று மதிக்கும் மனப்பான்மை அமைந்தது .
( மு .வ .வின் சில நிகழ்ச்சிகளைத் திரும்பிப் பார்க்கிறேன் ஆனந்த விகடன் 10.6.1973)
இந்த நிகழ்வை படிக்கும் வாசகர்களின் மன செருக்கை
அழிக்
கும் விதமாக உள்ளது .இது போன்ற பயனுள்ள பல தகவல்கள் நூலில் உள்ளது .


மு .வ .காலத்தைக் கண்ணாகக் கருதியவர் மு .வ .வின் வெற்றி ரகசியம் இதுதான் ." காலந்தவறாமைக் கடவுள்  மனிதனுக்கு வகுத்தளித்த அடிப்படை அறமாக மேற்கொண்டு பணியாற்றியவர் .இதனால்தான் நல்ல ஆசிரியராகவும் ,சிறந்த தந்தையாகவும் ,உற்றுழி உதவும் நண்பனாகவும், சமுதாயத் தொண்டனாகவும் அவர் விளங்க   முடிந்தது .

  பொன்னை விட மேலான நேரத்தை எப்படி மதிக்க வேண்டும் .எப்படிபயனுள்ளதாக்க வேண்டும் என்பதை பயிற்றுவிக்கும்  பயனுள்ள நூல் இது. தரமான பதிப்பாக பதிப்பித்த சாகித்ய அகதமிக்கு பாராட்டுக்கள் .ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்
மு .வ .


இவர்  கற்றன இவ்வளவுதாம் என்று வரையறுக்க முடியாத அளவு கற்றமை ,மாணாக்கர் எழுப்பும் வினாக்களுக்கு விடையறுப்பதில் பொறுமை. மாணாக்கரது உழைப்பிற்கு ஏற்ப உதவுதல் இவற்றில் நிலம் போன்று விளங்கினார் .இன்றைய ஆசிரியர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல் நூலில் உள்ளது .ஆசிரியர்கள் பேராசிரியர்கள் பலர் இன்று ஆசிரியப் பணியோடு என் பணி  முடிந்தது  என்று வாழ்ந்து வருகின்றனர் .மு .வ .அவர்களைப் போல இலக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் .ஆசிரியர்கள் பேராசிரியர்கள் பலர் இன்று ஆசிரியப் பணியோடு என் பணி  முடிந்தது  என்று வாழ்ந்து வருகின்றனர் .ஆசிரியர்கள் பேராசிரியர்கள் மு .வ .அவர்களைப் போல இலக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் .

மு வ .ஆர்கள் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 85 .மு வ .அவர்கள் அவர் மட்டுமல்ல தன் மாணாக்கர்களையும் இலக்கியவாதிகளாக உருவாக்கி உள்ளார்.மு வ .அவர்களின் செல்லப் பிள்ளை தமிழ்த்தேனீ முனைவர் மோகன் அவர்கள்  பேராசிரியராகப்  பனி புரிந்து கொண்டே நூல் ஆசிரியராக 85  நூல்களைத் தாண்டி விரைவில் 100 நூல்களை தொட உள்ளார் .
தமிழ்த்தேனீ முனைவர் மோகன் அவர்கள்எழுதிய மடல்களுக்கு மு வ . பதில் மடல் இட்டு தெளிவு தந்த தகவல் நூலில் உள்ளது.
 

தனது படைப்புகளில் மனித நேயத்தை வலியுறுத்தி ,மனிதனை நெறிபடுத்தும் பணியினை இலக்கியத்தால் செய்த சகலகலாவல்லவர் மு .வ. என்பதை மெய்பிக்கும் நூல் .அவரது நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் பற்றிய ஆய்வுக் கருத்துக்கள் நூல் உள்ளது .
திருக்குறளுக்கு உரை வந்தது, வருகின்றது ,வரும் .ஆனால் மு .வ .அவர்களின் திருக்குறள் உரைக்கு இணையான ஒரு உரை இது வரை வரவும் இல்லை .இனி வரப்போவதும் இல்லை .மு வ .அவர்களின் தமிழ்ப் புலமைக்கு மகுடமாகத் திகழ்வது அவரது திருக்குறள் உரை.

இந்த நூலில் மு வ .அவர்களின் பாத்திரங்களின் பெயர்கள் ,உரையாடல்கள் மேற்கோள் காட்டி அவரது ஆற்றலை நன்கு உணர்த்தி உள்ளார் .
சாகித்ய அகதமி பதிப்பாக மு .வ .அவர்கள் எழுதிய " தமிழ் இலக்கிய வரலாறு  " என்ற நூல் 27 பதிப்புகள் வந்துள்ளது .இன்னும் பல பதிப்புகள் வரும் .
மு வ .அவர்கள் படைப்பாளியாக மட்டுமன்றி இலக்கிய திறனாய்வாளராகவும் சிறந்து விளங்கி உள்ளார் .கட்டுரை நூல்கள் மொழியியல் நூல்கள் எழுதி உள்ளார் .தான்  வாழ்ந்த நேரத்தை ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக்கி படைத்தான் காரணமாக மு வ .அவர்கள் உடலால் உலகை விட்டு மறைந்த போதும் படைப்புகளால் இன்றும் வாழ்கின்றார் .என்றும் வாழ்வார் .அவர் எழுதிய இறுதி நூல் " நல்வாழ்வு "அவரது நல் வாழ்வை முடித்துக் கொண்டார் .நம் மனங்களில் வாழ்கிறார் .மு .வ .என்ற இலக்கிய ஆளுமையை இளைய தலைமுறைக்கு நன்கு அறிமுகம் செய்து வைத்த
நூல் ஆசிரியர் பொன் சௌரி ராஜன் அவர்களுக்கும் சிறப்பாக வெளியிட்டுள்ள சாகித்ய அகதமிக்கும் பாராட்டுக்கள் .

வெள்ளி, 14 டிசம்பர், 2012

நீதானே என் பொன் வசந்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

நீதானே என் பொன் வசந்தம் !

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

இயக்கம் : கெளதம்
வாசுதேவ்  மேனன் ,
நடிப்பு : ஜீவா ,சமந்தா.


 
.வருண் ,நித்யா காதல் ஜோடியின் ஊடல் காதல் கதை .சின்ன சின்ன சண்டையை பேசி பெரிது படுத்தாமல் பேசாமல் முத்தம் கொடுத்து  சரி செய்து விடலாம் .என்ற ஒரு வரி  கதையை ஒரு படமாக வழங்கி  உள்ளார் .ஊடலை கூடலால் சரி செய்யலாம் என்பதே கதை.பள்ளிப் பருவத்தில் காதல் பிறகு சண்டை பிரிவு .சில வருடங்கள் கழித்து அனைத்து  கல்லூரி விழாவில் சந்திப்பு  மீண்டும் காதல் . மீண்டும் சண்டை பிரிவு .சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திப்பு மீண்டும் காதல் இதுதான் கதை .படத்தின் இறுதிக் காட்சிகளை குறைத்து விடுவது நல்லது .நேற்று மதுரையில் திரையரங்கில் ஒரு ரசிகர் பொறுக்க   முடியாமல் படத்தை முடிங்கடா என்று கத்தி  விட்டார் .

 படம் பார்ப்பவர்களுக்கு காதலித்த அவரவர் துணை நினைவிற்கு வருவது உண்மை .அதில் இயக்குனர் வெற்றி பெற்று உள்ளார் .பாராட்டுக்கள் காதல் மலரும் நினைவுகளை மலர்விக்கின்றது .சிறு சண்டையின் காரணமாக காதலை இழந்தவர்களுக்கு மன ஆறுதல் தரும் படம்.
ஜீவாவும் சமந்தாவும் மிக நன்றாக நடித்து உள்ளனர் .பாராட்டுக்கள் .சமந்தா அழகு தேவதையாய் வலம்  வந்தாலும் .பள்ளி மாணவியாய், கல்லூரி மாணவியாய், பள்ளி ஆசிரியராய் பல நிலைகளில் மிக இயல்பாக நன்றாக நடித்து உள்ளார் .சமந்தா மற்றொரு ரேவதியாக வலம்  வருவார் .
காதல் காட்சிகள் மிக இயல்பாக உள்ளது .காதல் காட்சிகள் இயக்குவதில் வல்லவர்  என்பதை மீண்டும் நிருபித்து உள்ளார் இயக்குனர்  .
பள்ளிப்  பருவத்தில் வந்த பக்குமில்லாத காதல் காரணமாக வருண் காதலி நித்யா பள்ளியின் மாணவிகள் தலைவியாக இருப்பதால் அரங்கம் தொடர்பாக வேலை உள்ளது .நான் வர நேரம் ஆகும் என்கிறார் .பள்ளி தலைவனுடன் சிரித்துப்  பேசியதை தவறாக புரிந்துக் கொண்ட வருண் உடனே என்னுடன் வர முடியுமா ? முடியாதா ? என்று மிரட்டுகிறான் .முடியாது என்று சொல்ல ,சண்டை, பிரிவு .பல வருடங்கள் கழித்து  அனைத்து கல்லூரி   விழாவில் "நினைவெல்லாம் நித்யா "படத்தில் வரும் பாடலான  "நீதானே என் பொன் வசந்தம்"என்ற பாடலை மிக நன்றாகப் பாடி கை தட்டல் பெறுகின்றான் வருண் .நித்யாவும் பாராடுகின்றாள்  .நித்யா பேச்சுப்போட்டியில் சிறப்பாகப் பேசி முதல் பரிசு பெறுகிறாள் .வருண் கை தட்டி பாராட்டுகிறான் .திரும்பவும் காதல் .இருவரும் காரில் சுற்றுகின்றனர் .திகட்ட திகட்ட காதலிக்கின்றனர் .

வருண் அண்ணனுக்கு பெண் கேட்டு போன இடத்தில அப்பாவிற்கு நேர்ந்த அவமானம் கண்டு ,சமுதாயத்தில் நல்ல நிலை அடைய வேண்டும் என்று  குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு,பொறுப்பு வந்து படிக்கின்றான் .நுழைவுத் தேர்விற்கு பயிற்சி எடுத்து வெற்றிப் பெற்று எம் .பி .எ  படிக்க கேரளா கோழிக்கோடு செல்வதாக காதலி நித்யாவிடம்  சொல்கிறான் .அவளோ நானும் வருகிறேன் .உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது .என்கிறாள் .அவன் நீ வேண்டாம் நீ அங்கு வந்து இருக்க முடியாது .நான் கல்லூரியில்  தங்குவேன் என்கிறான் .மீண்டும் சண்டை .பல வருடங்கள் பிரிவு .

 வருணுக்கு படிப்பு முடித்து நல்ல வேலை கிடைத்து விடுகின்றது .திரும்பவும் நித்யாவை  தோழி மூலம் நித்யா  இருக்கும் இடம் தேடி செல்கிறான். நித்யா மணப்பாடு என்ற ஊரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆசிரியராகப் பணி  புரிகிறாள் .வருண் நித்தியாவை தன்னுடன் வரச் சொல்கிறான் .அன்று இருந்த நித்யா நான் இல்லை தற்போது வேறு நித்யா என்கிறாள் .நித்யா வர மறுத்து  விடுகிறாள் .உதடு மறுத்த போதும் உள்ளம் மறுக்காமல்  தவிக்கிறாள் .வருணும் தவிக்கிறான் .வருணுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கின்றது .நித்யா நேரில் வந்து வாழ்த்தி விட்டு சென்றாலும் மனம்  வருந்தி வாடுகின்றாள் .செல்லிடப் பேசியில் அழைத்து சந்தித்து திரும்பவும் பேசி சண்டை நடக்கின்றது .இந்த காட்சியில்தான் படம் பார்பவர்களுக்கு எரிச்சல் வந்து விடுகின்றது .கடைசியில் வருண் தந்தை இவர்கள் காதலை அறிந்து வருண் திருமணத்தை நிறுத்து விட்டு நித்யாவிடம் வாழச் சொல்கிறார் .இறுதியில் இருவரும் இணைகின்றனர்.

இயக்குனர் கெளதம்  வாசுதேவ்  மேனனிடம் அதிகம் எதிர் பார்த்து சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம் .ஓகோ என்று இல்லாமல் ஒரு முறை பார்க்கலாம் என்ற கத்தில் உள்ளது .சந்தானம் படத்தில் நகைச்சுவைக்கு வந்து போகின்றார் .சிரிக்க வைக்கின்றார் .நீண்ட நாட்களுக்குப் பின் மேஸ்ட்ரோ, சிம்பொனி இளைராஜாவின் பாடல்களும் ,பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்து உள்ளது .  சண்டை  போடாமல் காதலிக்க வேண்டும் என்று காதலர்களுக்கு உணர்த்தும் படம் .


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

செவ்வாய், 11 டிசம்பர், 2012

வெளியீட்டு விழா விழா ,இணையம் தொடக்க விழா புகைப் படங்கள்!

அருள்திரு

கவிஞர் ஞான ஆனந்தராஜ் அவர்களின்

ஒரு கவிஞனின் வாக்கு மூலம்

வெளியீட்டு விழா  விழா ,இணையம்  தொடக்க விழா புகைப் படங்கள்!

மாமதுரை கவிஞர் பேரவையின் சார்பில் மதுரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழா புகைப்படங்கள்

மாமதுரை கவிஞர் பேரவையின் சார்பில் மதுரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழா புகைப்படங்கள்

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...