சனி, 30 ஏப்ரல், 2011

கவிதை அல்ல விதை

சிகரம் வழங்கிய மதிப்புரை ; ( - - - - - - / சந்திரா மனோகரன்)கவிஞர் இரா.இரவியின் இலக்கியப் பயணத்தில் இது எட்டாவது மைல் கல் என்று அவரே தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். அவருடைய இணையதளமான 'கவிமலர் டாட் காம்' -ல் பார்த்த இலட்சக்கணக்கான வாசகர்கள் பாராட்டிய கவிதைகளே இவை என்பது இன்னும் சிறப்பு. வித்தகக் கவிஞர் பா.விஜய் மற்றும் தமிழறிஞர் தமிழண்ணல் ஆகியோரின் அற்புதமான அணிந்துரைகள் இந்நூலினை மேலும் மெருகூட்டுகின்றன. 'ஹைக்கூவின் மறுபெயர்தான் இரவி' என்ற தமிழண்ணலின் பாரட்டுக்கு முற்றிலும் பொருத்தமானவர் தான் இந்நூலாசிரியர்.

தனது முதல் கவிதை குறளுக்கு அர்ப்பணம், தொடர்ந்து பாரதி (குடும்ப அட்டையில் 'எச்' முத்திரை குத்தியிருக்கமாட்டான், ஏன் தெரியுமா? / இன்றும் அவனது வருமானம் / அய்யாயிரத்திற்கும் கீழ்தான் இருந்திருக்கும். - பக்கம் 14 ) அப்புறம், பாரதிதாசன், நேதாஜி, காமராஜர், தெரசா என்று ... கவிதைத் தோரணம் நீளுகிறது. கலாம் அறிவுக்குச் சலாம் போடும் கவிதைப் புநையல்களில் மூழ்கிக் குளிக்கலாம். (கடுகு அளவும் கவலை நாளும் கொள்ளாதவரே - பக்.34 ) அவரது குடும்பத்தின் மக்களையும் கவிதைச் சாரலுக்குள் நனையவிட்டிருக்கிறார். எளிய நடையில், பொலிவான வடிவமைப்பு, மனதில் நெருப்பு உள்ள (நன்றி - பா.விஜய்) கவிஞர் இரா.இரவி இப்படைப்பின் மூலம் வாசகர்களைச் சுட்டு விடுகிறார்

இனிய நந்தவனம் வழங்கிய மதிப்புரை ; ( - - - - - - / பீர்முகம்மது)
கவிஞர் இரா.இரவியின் எட்டாவது படைப்பான கவிதைத் தொகுப்பு நூல் "கவிதை அல்ல விதை" கடந்தகால சமூக நிகழ்வுகளை வரிகளால் படம் பிடித்துக் காட்டும் பெட்டகமாக இலக்கியம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்த வல்லவரே என்று தமிழின் இமயம் திருவள்ளுவர் என்று தொடங்கி தன்னம்பிக்கை வரை 70 கவிதை விதைகளை பதியச்செய்திருக்கிறார். தன்னம்பிக்கை குறித்த பொங்குமே வாழ்வு என்ற கவிதையும், விவேகமானவனுக்கு வெற்றியைக் கொடு, அதுவும் தொண்டு என்ற தொண்டு கவிதையும் மனதைத் தொடுவதாக உள்ளது. மண் பயனுறவேண்டும் என்றாய் அன்று, விளை நிலங்களெல்லாம் வீடுகளாது இன்று என்று பாரதியையும், பகுத்தறிவைப் பாடல்களில் தந்த பாட்டுச் சித்தர் என்ற கவிதைக்குள்ளும் மிகப்பெரிய பரிணாம மாற்றத்தை உண்டாக்கியுள்ளது என்றால் மிகையாகாது என்ற வித்தகக் கவிஞர் பா.விஜய் அணிந்துரையும், ஹைக்கூ கவிதைகளைக் கருவியாகக் கொண்டு தமிழுணர்வையும் பண்பாட்டையும் பரப்பி வருபவர் கவிஞர் இரவி என்று தமிழண்ணல் அணிந்துரையும் கூடுதல் சிறப்பு.
உங்கள் பாரதி வழங்கிய மதிப்புரை ; ( - - - - - - / ஆசிரியர் குழு)
நூலாசிரியர் கவியரங்குகளில் வாசித்த கவிதைகளையும், அவர் நேசித்த தலைவர்கள், கவிஞர்கள் பற்றியும் எழுதிய கவிதைகளையும் நூலாக்கியிருக்கிறார். வித்தகக் கவிஞர் பா.விஜய், தமிழறிஞர் தமிழண்ணல் ஆகியோர் உரை வழங்கியிருக்காறர்கள். உலகப் பொதுமறை, தமிழின் இமயம் திருவள்ளுவர், மகாகவி பாரதியார், அன்னை தெரசா, கண்ணதாசன், வெல்லும் தமிழ் இனி வாழும், எயிட்ஸ் போன்ற தலைப்புளில் கவிதைகளைத் தந்துள்ளார். இலக்கணம் பார்க்காமல் கருத்துப் புதையல்களை சிவைக்கச் சரியான நூல்.

இதயத்தில் ஹைக்கூ

தமிழ் ஊடகங்கள் வழங்கிய மதிப்புரைகள்இனிய நந்தவனம் வழங்கிய மதிப்புரை ; ( - - - - - - / பீர்முகம்மது
ஹைக்கூ திலகம் எனப் பட்டம் பெற்ற கவிஞர் இரா.இரவியின் ஏழாவது ஹைக்கூ தொகுப்பு நூல் "இதயத்தில் ஹைக்கூ ". வினைபுரியும் வீரிய விதையாய் என்ற தலைப்பில் மு.முருகேஷ் அணிந்துரையும், ஹைக்கூவுக்கு அமுதென்று பேர் என்ற தலைப்பில் இரா.மோகன் அவர்கள் அணிந்துரையும் சிறப்பு. ஒவ்வொரு கவிதைக்கும் படங்கள் வைத்து கவிதையா, புகைப்படக் கண்காட்சியா என வியக்க வைக்கிறது 72 பக்கத்தில் 434 ஹைக்கூ கவிதைகளும். "அவள் நினைவலைகளில் நான், என் நினைவலைகளில் அவள் காதல் அலைவரிசை" என்ற கவிதையும், "இதழ் சொல்லும் விழிகள் சொல்லாது பொய்" என்ற காதல் ரசனைமிக்க வரிகள், "இனிக்கவில்லை வாழ்க்கை, கரும்பு நட்டத்தில் நட்டம்" என்ற விவசாயிகளின் கவலையின் வெளிப்பாடு, "அப்பா மது போதையில், அம்மா தொலைக்காட்சி போதையில், வாழ்க்கைப் போராட்டம் நடைபாதையில்" என சீரியல் மோகத்தை விளக்குகிறார். மதுரை ஆர்.ஆர். டிசைனர்ஸ் ஓவியமும் வடிவமைப்பும் புத்தகத்தை மேலும் மெருகூட்டுகின்றது.

நெஞ்சத்தில் ஹைக்கூ


தமிழ் ஊடகங்கள் வழங்கிய மதிப்புரைகள்புதிய காற்று வழங்கிய மதிப்புரை ; ( - - - - / மு.செல்லா

கவிஞர் இரா.இரவியின் ஆறாவது கவிதைத் தொகுப்பு. ஏற்கனவே இவரது "விழிகளில் ஹைகூ" "உள்ளத்தில் ஹைகூ" என்ற இரண்டு ஹைகூ கவிதைத் தொகுதிகள் வெளியிடப்பட்டு சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன.

நவீன கவிதை வடிவங்களில் சிறியவர், பெரியவர், அதிகம் படித்தவர், ஓரளவே படித்தவர் என்ற பேதம் இன்றி அனைத்துத் தரப்பினராலும் பரவலாக வரவேற்று வாசிக்கப்படுபவை குறும்பா என்னும் ஹைகூ கவிதைகளாகும். ஆளமான செய்திகளையும் சுருக்கென்று ஒருசில வார்த்தைகளிலேயே நம்முள் பதிய வைத்துவிடுபவை என்பதால் இதற்கான வரவேற்பு நாட்டின் எல்லைக்ள தாண்டி மொழிகளைத்தாண்டி அமைந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை.

தமிழில் ஹைகூக்களின் மீதான சோதனை முயற்சி மிகச் சமீபத்திலானது என்றாலுமகூட வீரயம் மிக்க நல்ல கவிதைகள் அதிகம் தென்படத்துவங்கியுள்ளன. தமிழில் தேர்ந்த ஹைகூ கவிஞர்களில் ஒருவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பவர் இரா.இரவி. இவரது கவிதைகள் பல்வேறு மேடைகளில், இணைய தளங்களில், ஒருபடி மேலே போய் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இடம் பிடித்துள்ளதே இவரது கவிதைத் திறனுக்கு சிறந்த சான்றாகும். "நெஞ்சத்தில் ஹைகூ" என்ற இந்நக் கவிதைத் தொகுதியின் மூலம் கவிஞர் ஹைகூ கவிதைகளின் ஆர்வலர்களுக்கு மேலும் ஊக்கம் கொடுக்கிறார்.

தமிழில் முதுபெரும் எழுத்தாளரும், தனது "புதுக்கவிதைகள் - தோற்றமும் வளர்ச்சியும்" என்ற ஆய்வு நூலுக்காக சாகித்திய அகாதமி பரிசு பெற்றவரும், மிகச் சிறந்த ஆய்வறிஞருமான வல்லிக் கண்ணன் அவர்களின் அணிந்துரை நூலுக்கு சிறப்பு சேர்ப்பதாகவும், மணிமகுடமாகவும் திகழ்கிறது. "இனிய ஹைகூ" இதழின் ஆசிரியரும் கவிஞருமாகிய மு.முருகேஷின் மதிப்புரையும் இந்நூலுக்கு அளகு சேர்த்துள்ளது.

அழகியல், காதல், இயற்கை, பகுத்தறிவு, அறிவியல், சுயமுன்னேற்ற கருத்துக்கள், சமூக அவலங்களின் மீதான சாடல் என அனைத்து நிலைகளிலும் இவர் ஆக்கியுள்ள கவிதைகளின் தொகுப்பாகவும் இது மலர்ந்துள்ளது. அவற்றில் பலவும் வசீகர மணத்தை வெளிப்படுத்தியுள்ளது கூடுதல் சிறப்பாகும்.........................இனிய நந்தவனம் வழங்கிய மதிப்புரை ; ( இனிய நந்தவனம் / கவிஞர் பீர்முகமது, சந்திரசேகரன்)
இது ஹைக்கூ காலம். இன்று இளந்தலை முறையினரால் மிகவும் உற்சாகமாக ஹைக்கூக்கள் எழுதப்படுகிறது என்று ஹைக்கூ கவிஞர்களை உற்சாகப்படுத்தும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களின் அணிந்துரையுடன் கவிஞர் இரா. இரவியின் சமீபத்திய வெளியீடாய் வெளி வந்திருக்கிறது நெஞ்சத்தில் ஹைக்கூ என்ற கவிதை நூல். நூலின் கட்டமைப்பும் முகப்பு அட்டையும் மிகவும் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டுள்ளது. கண்ணில் படுகின்ற எல்லாவற்றையும் கவிதைகளாய் வடித்திருப்பது பாராட்டக்கூடியதே. ஆனாலும் சில கவிதைகள் தான் மனதில் நிற்கும்படி அமைந்துள்ளன. சில கவிதைகள் தினசரி செய்தித்தாள்களின் தலைப்பைப் போலவே வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது. இதைத் தவிர்த்திருக்கலாம். சொல்ல வந்த கருத்து சிறப்பாக இருந்த போதிலும் வார்த்தைகளை இன்னும் செரிவுபடுத்தி இருக்கலாம். நிறைய கவிதைகளை தரும் கவிஞர் இரவி, இன்னும் நிறைவான கவிதைகளைத் தர வேண்டும் என்பது என் கருத்து. தருவார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. கவிதைகளுக்கென முதல் இணையதளத்தைத் தந்த கவிஞர் இரவியின் கவிதைகளை இன்று உலகத்தமிழர்கள் பலரும் வாசித்து வருகிறார்கள் என்பது இவருக்கு கிடைத்த தனிச்சிறப்பு என்றே சொல்லலாம்.
தென் செய்தி வழங்கிய மதிப்புரை ; ( - - - - - - / தமித்தலட்சுமி)
"படிப்பு எதற்கு?
அடுப்பூதும் பெண்களுக்கு
செருப்பாலடி சொல்பவனை'

என்று வருகிறது ஒரு ஹைக்கூ. இதில் ஆசிரியரின் கோபம், கொந்தளிப்பு, வேகம் தெரிவது இருக்கட்டும்! ஆனால் சில பெண்களே பெண்களுக்கு எதிராக இந்த ஆண்கள் கூட்டணியில் உள்ளனரே! அவர்களை என்ன செய்யப் போகிறார் ஆசிரியர்?

"தாழ்த்தப்பட்டவன் விளைவித்த
பஞ்சில் உருவானது
அர்ச்சகர் பூணுல்'

மூன்றே வரிகளில் ஏற்றத்தாழ்வின் எதிரொலி! பளிச்சிடுகிறது.

தீபாவளிக்குத் தப்பி
ரம்ஜானுக்கு மாட்டியது ஆடு'

வலிக்கும் வரிகளில் இயல்பான உண்மை!

இதுபோல் இயற்கை, சமுதாயம், ஆணாதிக்கம், தமிழ்ப்பற்று, குழந்தைகளின் மனநிலை என்று நிறையப் பார்க்க முடிகிறது. அதில் சில வரிகள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன. மொத்தத்தில் வாசகர்களுக்கு எது எளிதில் புரியும் என்று தெரிந்து ஹைக்கூவை மனதில் பதிய வைத்துள்ள கவிஞர் இரா. இரவிக்கு பாராட்டுக்கள்.

பார்வையற்றவர்கள்

பார்வையற்றவர்கள்

புறப்பார்வை இரண்டு இல்லா விட்டாலும்
அகப்பார்வை ஆயிரம் பெற்றவர் நீங்கள்
சாதாரண வாழ்க்கை எங்களுக்கு
சாரனை வாழ்க்கை உங்களுக்கு
சராசரி மனிதர்கள் நாங்கள்
சரித்திர மனிதர்கள் நீங்கள்
வாழ்க்கையில் போராட்டம் உண்டு எங்களுக்கு
வாழ்க்கையே போராட்டம் உங்களுக்கு
நூறு கோடியில் சிறு புள்ளி நாங்கள்
கோடியில் ஒருவர் நீங்கள்
சிறு துன்பத்திற்க்கு கலங்கும் நாங்கள்
பெரும் துன்பத்திற்க்கு கலங்காதவர் நீங்கள்
வாழ்க்கையில் இருட்டு என வருந்துபவர் நாங்கள்
இருட்டே வாழ்க்கை என்ற போதும்
ஒளி ஏற்றுபவர் நீங்கள்
இருக்கை பின்னத்தெரியாது பார்வையுள்ள
எங்களுக்கு
இருக்கையை சிறப்பாக பின்னுபவர்கள் நீங்கள்
விழியில் தூசி விழுந்தால் துடிப்போம் நாங்கள்
விழியே தூசியானதால் துடிப்பதில்லை நீங்கள்
பிறந்தோம் இறந்தோம் என்பது எங்களுக்கு
பிறந்தோம் சாதித்தோம் என்பது உங்களுக்கு.


இரா. இரவி, மதுரை--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com

http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

எண்ணை மாற்றவில்லை


எண்ணை மாற்றவில்லை .

என் செல்லிடப்பேசியில்
பாட்டு ஒலிக்கும் ஒவ்வொரு முறையும்
ஆவலோடு எடுக்கிறேன் .
அழைப்பது நீயாக இருக்குமோ? என்று .
எடுக்கும் ஒவ்வொரு முறையும்
ஏமாற்றமே மிச்சம் .என்றாவது
நீ அவசியம் அழைப்பாய்
என்ற நம்பிக்கையில் எண்ணை மாற்றவில்லை .
என்னையும் மாற்றவில்லை

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


ஹைக்கூ கவிஞர் இரா .இரவிதென்னைமரம் தேங்காய்
பனைமரம் நுங்கு
உழைக்காத மனிதன் ?

அகராதியில் இல்லாத சொல்
அடிக்கடிப் பயன்படுத்தும் சொல்
சும்மா
திரைஅரங்கின் பெயரால்
ஆபாசம் மறைத்தார்
சுவரொட்டி

ஹைக்கூ ராஜபட்சே கவிஞர் இரா .இரவி


ஹைக்கூ ராஜபட்சே கவிஞர் இரா .இரவி

ஹிட்லரின் தற்கொலை
முடிவை நீயே எடு
ராஜபட்சே

மரணம் உறுதி
விரைவில் இறுதி
ராஜபட்சே

தப்புச் செய்தவன்
தப்பிக்கப் பார்க்கிறான்
ராஜபட்சே

பலநாள் கொலைகாரன்
ஒரு நாள் அகப்பட்டான்
ராஜபட்சே

கெட்டிக்காரன் புளுகு
எட்டு நாளைக்குதான்
ராஜபட்சே
வணங்கிய புத்தரும்
கைகழுவினார்
ராஜபட்சே

மொட்டைப் பிட்சுக்களால்
காக்க முடியாது உன்னை
ராஜபட்சே

எத்தனுக்கு எத்தன்
உலகில் உண்டு உணர்
ராஜபட்சே

முகத்தில் தெரியுது
மரணபயம் உனக்கு
ராஜபட்சே

வினை விதைத்தவன்
வினை அறுப்பான் உண்மை
ராஜபட்சே

கூட்டுக்களவானி பொன்சேகா
உன்னுடன் இல்லை
ராஜபட்சே

--

வியாழன், 28 ஏப்ரல், 2011

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


பார்க்காதவர்கள் பாருங்கள்
தேவதை
என்னவள்

நடந்து சென்றாள்
கடந்து சென்றாள்
கடத்திச்சென்றாள்

சக்தியில்
மின்சாரத்தை வென்றது
அவள் கண்சாரம்

வேண்டாம் வண்ணம்
இயற்கையாகவே சிகப்பு
அவள் இதழ்கள்

உச்சரிப்பை விட
அசைவே அழகு
அவள் இதழ்கள்

செவிகளை விட
விழிகளுக்கு இன்பம்
அவள்

ஆயிரம்
அர்த்தம் உண்டு
மவுனத்திற்கு

வருகிறது
பெரு மூச்சு
அவளை நினைத்தாலே

இன்று நினைத்தாலும்
மனதில் மகிழ்ச்சி
அவள் புன்னகை

கால்தடம் அழித்தது
கடல் அலை
உள்ளத்தின் தடம் ?

முகம் சிரித்தாலும்
அகம் அழுகின்றது
காதல் தோல்வி

சோகமான முடிவுகள்
சுகமான சுமைகள்
காதல் தோல்வி

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

இன்றும் காணலாம்
டைனோசர்கள்
அரசியல்வாதிகள்

சுருங்கச்சொல்லி
விளங்கவைத்தல்
ஹைக்கூ

வாடிக்கையானது
காக்காக் குளியல்
பெரு நகரங்களில்

ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
ஒழியவில்லை வறுமை

உலகெலாம் பரவியது
தேமதுரத் தமிழோசை அல்ல
ஊழல் ஓசை

பெருகப் பெருக
பெருகுது வன்முறை
மக்கள்தொகை

பலதாரம் முடித்தவர்
பண்பாட்டுப் பேச்சு
ஒருவனுக்கு ஒருத்தி

சிலைகளில் தெரிந்தது
ஆடை அணிகலனும்
சிற்பியின் சிறப்பும்

கூட்டம் கூடுவதில்லை
இலக்கிய விழாக்களுக்கு
தொலைகாட்சிகளால்

நிஜத்தை வென்றது நிழல்
நாடகத்தை வென்றது
திரைப்படம்

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

புதன், 27 ஏப்ரல், 2011

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

அருமை அறியாதவனிடம்
அகப்பட்டால்
வீணையும் விறகுதான்

நடிகர்களின் ஆசை
நடிகைகளையும் தொற்றியது
வாரிசு அறிமுகம்

ஒரே வரிசையில்
தமிழ் அறிஞர்களும் ஆபாச நடிகைகளும்
கலைமாமணி பட்டமளிப்பில்

வில் அம்பு
விளம்பரமோ ?
அவள் விழிகள்

படித்ததில் பிடித்தது


படித்ததில் பிடித்தது

முனைவர் இறைஅன்பு இ .ஆ .ப,அவர்களின் நெஞ்சைத் தொட்டதும் ...சுட்டதும் நூலில் , தாய் என்ற கட்டுரையிலிருந்து சில துளிகள்

தொகுப்பு கவிஞர் இரா .இரவி

தாய்


தாய் ஈரெழுத்து திருக்குறள்
ஒரு சொல் காவியம்

அம்மா என்ற சொல் உயிர் எழுத்தில் தொடங்கி,மெய்யை மையப்படுத்தி உயிர் மெய்யில் முடியும்
உன்னதம் கொண்டது .
நான் சின்ன வயதில் இருந்தே என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது எதையும் செம்மையாகச் செய்ய வேண்டும் என்பதுதான் .
தாயிடம் இருந்து மனப்பாட சக்தியையும் ,தந்தை இடமிருந்து படைக்கிற திறனும் பெற்றதாய்த் தெரிந்தவர்கள் அடையாளப் படுத்துவார்கள் .

உறவுகள் பல வளர்ச்சியால் விளைவன.தாயின் உறவே வளர்ச்சியைத் தருவது .
மிதிவண்டியோட்டி விழுந்தபோது ஏற்பட்ட முதல் காயத்தில் அழுத அதே தாய் .வாகன விபத்தில் அடிபட்டு இரு கைகளிலும் கோலுன்றி நடந்தபோது ,இப்படி உன்னைப் பார்க்க நேர்ந்ததே ,உன் நடையின் வேகமல்லவா உனக்கு அழகு சேர்த்தது .என்று வாய் பொத்தி அழுதபோது
அந்த ரணதிற்க்காவாவது கால் விரைவில் குணமாகி விட வேண்டும் என்று தோன்றியது .
தங்கள் மகன்கள் மகள்கள் நேர்மையுடனும், அறிவுடனும் ,ஒழுக்கத்துடனும் ,உண்மையுடனும் ,சமூகப் பொறுப்புடனும் ,அன்புடனும் ,பண்புடனும் திகழ வேண்டும் என்று சின்ன வயதில் இருந்தே கதைகளைச் சொல்லி மகன் வகுப்பிற்கே ஆசிரியராகவும் இருந்தும் மதிப்பெண்களில் கண்டிப்புக் காட்டி ,வளர்கிற நாட்களில் பொறுப்பினை ஊட்டி வளர்ந்த பிறகும் நிதானத்தை சொல்லி இன்றும் என் சொற்களிலும் எழுத்துக்களிலும் அந்த தாயே வெளிப்படும் அளவிற்கு வாழ்ந்து கொண்டிருக்கும் என் தாய் என்னை இயக்கும் அதிசய சக்தி .

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

ஹைக்கூ ஆற்றுப்படை நூலாசிரியர் :இரா.இரவி விமர்சனம் :ச.சந்திரா


ஹைக்கூ ஆற்றுப்படை நூலாசிரியர் :இரா.இரவி விமர்சனம் :ச.சந்திரா
ஹைக்கூ சாலை :
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறுத்துவதே ஆற்றுப்படை என்பர்.துளிப்பா என்றால் என்னவென்றே அறியாதோரை அறியச் செய்வதோடு அவர்களை ஹைக்கூ சாலையில் நிரந்தரமாக பயணிக்க வைக்கும் வல்லமை இரா.இரவியின் ஹைக்கூ ஆற்றுப்படை எனும் நூலுக்கு உண்டு. எனவே இப்பெயர் இந்நூலுக்குப் பொருத்தமான ஒன்றே !
தமிழன்னைக்கு மாலை :
அமுதபாரதி முதலாக தேவகிமைந்தன் ஈறாக உருவாக்கிய முத்துக்களை , கவிஞர் இரா.இரவி தன் சொல்லிழைகளால் திறனாய்வு மாலையாகத் தொடுத்து தமிழன்னைக்குச் சூட்டி அழகு பார்த்திருக்கிறார்.துளிப்பா என்பது இரா.இரவியின் இரத்தத்தில் கலந்த ஒன்றாக இருக்குமோ என்று எண்ணி அதிசயிக்கும் அளவிற்கு அவர் இந்த மூன்று வரிகளுக்குள் மோகம் வைத்திருப்பதை இந்நூலின் வழி உய்த்துணர முடிகிறது.அவர்தம் இலக்கிய பயணத்தில் அதிகம் பயன்படுத்திய சொல் ஹைக்கூவாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் போன்றோரின் கணிப்பு.
நதியோட்டம் :
கோவிலுக்குள் நுழையும் கோபுர வாயிலாய் நூலாசிரியரைப் பற்றியும் ,நூலின் தன்மை குறித்தும் சொல்லிக்கொண்டே ,திறனாய்வுக் கோட்டைக்குள் நுழையும் இலாவகம் கவிஞர் இரா.ரவிக்கே உரியது.இலக்கியம் ந்ன்கு கற்றோர் பயன்படுத்தும் செந்தமிழ் வார்த்தை களை தம் திறனாய்வின்போது அவர் உபயோகிப்படுத்தும்விதம் நம்மையெல்லாம் ஆச்சிரியப்படவைக்கும்.இந்நூலில் வாசித்துணர்ந்த விமர்சனங்கள் ,சுட்டிக்காட்டிய மேற்கோள்கள் திறனாய்வாளரின் சமூக அக்கறையை ,மூட நம்பிக்கை எதிர்ப்பை ,சாதி மத இன மொழி பேத மறுப்பை வெளிப்படுத்தும்விதமாக உள்ளன.
உதாரணத்திற்கு ஒன்றிரண்டு :
” கொடி கொடுத்தீர் !
குண்டூசி தந்தீர் !
சட்டை ?” (புதுவைத் தமிழ்நெஞ்சன் )
ம.ஞான சேகரன் கவிதை :
” தேள் கொட்டியது
கணியனை
குறி சொன்ன நேரம் !”
தீண்டாமையை மறுக்கும் ஒரு கவிதை :
” தொடருது மனக்கவலை
அறுபதாம் ஆண்டு விடுதலை நாளிலும்
தொங்குவது இரட்டைகுவளை ”
அகலமா ? ஆழமா ?
இலக்கியத்தின் உட்புகுந்து அதனை முழுமையாய் அனுபவிக்கும் உணர்வு உடையவரும் ,நுண்மாண் நுழைபுலம் மிக்கவரும் மட்டுமே ஒரு சிறந்த திறனாய்வாளராக இருக்க முடியும்.மேற்கூறிய கூற்றிற்கு இரா.இரவிபொருத்தமானவர்தான் என்பதை இந்த ஹைக்கூ ஆற்றுப்படை நூல் நன்றாகவே நிரூபணம் செய்கின்றது.சமூக நல்லெண்ணமும் ,அழகியல் உணர்வும் ,மரபு போற்றும் தன்மையும் திறனாய்வாளருக்கு வேண்டிய இன்றியமையாத பண்புகளாகும்.இவையும் இரவி அவர்களுக்கு பொருந்தி வருகிறது.இவரது விமர்சன நோக்கு சமுத்திரம் போல் ஆழ்ந்தும் ,மைதானத்தைப் போல் படர்ந்தும் ,அம்பைப் போல் கூர்மையாகவும் இருப்பதை நூல் முழுமையும் வாசித்துப் பார்த்தால் உணர முடியும்.
அறிவியலா ? இலக்கியமா ?
ரோஜாவை இதழ் இதழாய்ப் பிரித்துப் பார்த்துச் செய்யும் ஆய்விற்கு அறிவியல் ஆராய்ச்சி எனப் பெயர். அதுவே ஒற்றை ரோஜாவை உற்றுநோக்கி அதில் இலயித்து அதனைக் குறித்து உணர்வுப்பூர்வமாக எழுதினால் அதற்கு இலக்கிய ஆராய்ச்சி எனப் பெயர்.ஹைக்கூ குளத்தில் மலர்ந்த தாமரை, அல்லி ,குவளை போன்ற பல்வேறு பூக்களை கவிஞர் இரா.இரவிஉற்றுநோக்கி உணர்ந்ததன் விளைவுதான் இந்த ஆற்றுப்படை நூல் .படைப்பாளி எவ்விதமாக உணர்ந்து எழுதினானோ அது சிதையாமல்,அதன் வெளிப்பாடாக விமர்சனம் இருப்பின் அதுவே சிறந்த திறனாய்வு.இவ்விதமாய் எழுதுவது கவிஞர் இரா.இரவிக்கு கை வந்த கலையாக இருக்கிறது.
அதிசயமும் ஆச்சர்யமும் :
ஒரே வாசிப்பில் ஒப்பற்ற 26 நூல்களின் உணர்வோட்டத்தைச் சொல்லிவிடுகின்றார் இரவி அவர்கள். திறனாய்வின்போது சுட்டிக்காட்டியிருக்கும் ஹைக்கூ கவிதைகளும் ,அவற்றிற்கு அவர் தந்துள்ள விளக்கங்களும் அருமை.சின்னஞ்சிறு வாக்கியங்களாக மொழிநடை இருப்பதனால் வாசிப்போர்க்கு விமர்சனம் எளிதில் புரிந்தும் விடுகிறது.இலக்கியத்தை முழுமையாக கற்றறிந்தவரும் இப்படி திறனாய்வு செய்ய இயலுமா என அதிசயவைக்கிறது இவரது ஜப்பானிய-தமிழ் ஹைக்கூ நூல் விமர்சனம் (முனைவர் பட்ட ஆய்வேடு) மனமார்ந்த வாழ்த்துக்கள்..
இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும் ஹைக்கூ திலகம் இரா.இரவியின் பத்தாவது மைல்கல்லான ஹைக்கூ ஆற்றுப்படை நூல் அவரை கவிதை உலகிலிருந்து திறனாய்வு உலகத்திற்கு இட்டுச் சென்றிருக்கின்றது.இந்த மாற்றம் கவிஞர் இரா.இரவி இலக்கிய வானில் மென்மேலும் சுடர்விடுவதற்கு உறுதுணை புரியும்.படிப்பாளியை படைப்பாளியாக்கும் இந்த ஆற்றுப்படை நூல் இன்னும் பல துளிப்பா கவிஞர்களை இலக்கிய உலகிற்கு தரும் என்பதில் எவ்வித ஐயமும் உண்டோ ?கவி சூரியன் இரா.இரவி அவர்களுக்கு என்போன்ற ஹைக்கூ பிரியர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

நூலின் பெயர் : மனதில் ஹைக்கூ நூலின் ஆசிரியர் : இரா.இரவி நூல் விமர்சனம் :முனைவர் ச.சந்திராநூலின் பெயர் : மனதில் ஹைக்கூ
நூலின் ஆசிரியர் : இரா.இரவி
நூல் விமர்சனம் :முனைவர் ச.சந்திரா
கோபுர நுழைவாயில் :
உலகம் மூன்று ; கணிக்கும் காலம் மூன்று; ;சுவையூட்டும் கனி மூன்று ;உலகப்பொதுமறையின் பால் மூன்று ;அரும்பெருந் தமிழ் மூன்று ; ஆற்றல்சால் வேந்தன் மூன்று என புகழின் உச்சத்தை எட்டிய அனைத்துமே மூன்று எனும் உயரிய எண்ணாக வடிவெடுக்க,அதில் துளிப்பா மட்டும் விதிவிலக்கா என்ன ? மூன்றே வரிகளில் முத்தான கருத்துக்களை வாசகர் மனதிற்குள் புகுத்தும் சக்தி கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு உண்டு என்பதனை நிரூபணம்செய்ய வந்த நூலே மனதில் ஹைக்கூ.
ஆதியோடு அந்தமும் :
கடிகாரம் முதல் கணினி வரை ,பூசணிக்காயிலிருந்து பொக்ரான் வரை ,சம்மட்டி தொடங்கி சந்திராயன் வரை,காந்திதாசன் முதல் கண்ணதாசன் வரை, வாடும் ரோஜாமுதல் வாடாமல்லி வரை,அரேபியா முதல் ஆகாயம் வரை அலசி ஆராய்கிறது 64 பக்கங்களையுடைய மனதில் ஹைக்கூ எனும் அற்புத நூல்.
இதயப்பகுதி :
ஹைக்கூ திலகம் இரா.இரவியின் இந்நூலில் சமூக அத்துமீறல்கள் அப்பட்டமாக வெளிச்சமிட்டு காட்டப்பட்டிருக்கின்றது.மூடநம்பிக்கைகளின் ஆணிவேர் கிள்ளி எறியப்படுகின்றது.தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் வரைமுறையற்ற ஆதிக்கம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இயற்கை இடையிடையே வந்து நலம்விசாரித்து விட்டு போகின்றது.பாசமும்நேசமும் பாங்காய் பண் பாடுகிறது.
தன்னம்பிக்கை ஆங்காங்கே பளிச்சிடுகின்றது.ஒரு சமூக சீர்திருத்தவாதியின் ஒட்டுமொத்த பணியை செய்வதற்கு ஹைக்கூ எனும் அஸ்திரத்தை கவிஞர் இந்நூலில் பயன்படுத்தியுள்ளார்.
இரத்த ஓட்டம் :
இந்த கவிதை தொகுப்பில் அஞ்சல் பெட்டி அழுகின்றது.தொலைக்காட்சிப்பெட்டி தொற்று நோய் பரப்புகின்றது.கைபேசி கதற வைக்கின்றது.அல்லி கூம்புகின்றது.பட்டாசு பற்றி வெடிக்கின்றது.பாம்பு இரை தேடுகின்றது.குப்பை கூட தத்துவம் பேசிச்செல்கின்றது.மொத்தத்தில் கற்கால கோடாரி முதல் தற்கால கணினி வரை கருவாக உருமாற்றியிருக்கிறார் கவிஞர்.
நவரத்தின குவியல் :
பழமொழியை காலத்திற்கு ஏற்றாற் போல் புதுமொழியாக மாற்றுவது என்பது கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு கை வந்த கலை.
குஞ்சுகள் மிதித்து
கோழிகளுக்கு காயம்
முதியோர் இல்லம்.
நகைச்சுவை கவிதை :
மேலிருந்து குதித்தான்
மரணம் இல்லை
நீச்சல் குளம்.
நச்-என்று ஒரு கவிதை:
பாஸ் மார்க் வாங்கியும்
கிளாஸ் பாட்டிலுடன் வேலை
டாஸ்மாக் .
இளைஞர்களுக்கு ஓர் இலவசக்கவிதை :
மூளைப்புற்று நோய்
முற்றிலும் இலவசம்
செல்பேசியுடன் !
சொல் விளையாடல் கவிதை :
காசு கரியானது தீபாவளி
கரி காசானது
நெய்வேலி.
சமூகத்தை படம்பிடித்து காட்டும் கவிதை :
உலகெல்லாம் உறவு
பக்கத்து வீடு பகை
மனிதன்.
மனதார ஒன்பதாவது மைல்கல்லை எட்டி, ஹைக்கூ இலக்கிய உலகிற்கு மனதில் ஹைக்கூ எனும் ஒப்பற்ற நூலை வழங்கியிருக்கும் கவி சூரியன் இரா.இரவியின் பெயரும் புகழும் அலைகடல் தாண்டி அகிலம் முழுவதும் ஒலிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். –

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

புறத்தில் கோபம்
அகத்தில் இன்பம்
அவள் பலாப்பழம்

யானைப்பசிக்கு
சோளப்பொரி
அவள் முத்தம்

இதழ்கள் வழி
இனிமைப் பகிர்வு
முத்தம்

கைரேகை பதிந்தனர்
படித்தவர்களும்
நவீன வருகைப்பதிவு

திங்கள், 25 ஏப்ரல், 2011

Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details

Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details

Seasons Ali Video: இலக்கியங்களும் ஹைக்கூ கவிதைகளும்!கவிஞர் இரா.இரவியு...

Seasons Ali Video: இலக்கியங்களும் ஹைக்கூ கவிதைகளும்!கவிஞர் இரா.இரவியு...: "பங்கேற்போர் கவிஞர் இரா.இரவி கிறிஸ்டோபர்"

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

வானிலிருந்து வரும்
திரவத்தங்கம்
மழை

இரண்டும் சமம்
மலை மண்
மழைக்கு

கழுவும் நீரே
அழுக்கு
சுத்தம் ?

ஓய்வுக்கு ஒய்வு
தந்தால்
சாதிக்கலாம்

சாதனைக்கு
முதல் எதிரி
சோம்பேறித்தனம்

தண்ணீரைப் பெட்ரோலாக்கி
வித்தைக் காட்டியவரிடம்
வித்தைக் காட்டியது இயற்கை

எலி மீது யானை
எப்படிச் சாத்தியம்
பிள்ளையார்

உருண்டது
உலோகக் குண்டென
தாமரையிலைத் தண்ணீர்

கருவறை உள்ள
நடமாடும் கடவுள்
தாய்

பல் பிடுங்கிய
பாம்பாக
தோற்ற அரசியல்வாதி
இன்றும் சொல்கின்றது
மன்னனின் பெயரை
அரண்மனை

பெருமூச்சு விட்டாள்
தங்கக்கோபுரம் பார்த்து
முதிர்கன்னி

கல்லுக்குள் தேரை
பாறைக்கு மேல் செடி
மனிதனுக்குள் மனிதநேயம் ?

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

Madurai vasagar vattam

பொற்றாமரை நூல் ஆசிரியர் முனைவர் அம்பை மணிவண்ணன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


பொற்றாமரை

நூல் ஆசிரியர் முனைவர் அம்பை மணிவண்ணன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

எ .ஆர்.பதிப்பகம் கே .கே .நகர், மதுரை விலை ரூ 955

தமிழர்களின் கலையை உலகிற்குப் பறைசாற்றிடும் கலைப் பொக்கிஷம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் .சமீபத்தில் உலக அதிசயமாக அறிவிக்க வேண்டுமென்று இணையத்தில் வாக்கெடுப்பு நடந்தது .
சீனப் பெருஞ்சுவர் நீளமான ஒன்று .உலக அதிசயமாக உள்ளது .ஆனால்
உலகில் எந்தக் கோயிலிலும் இல்லாத அளவிற்கு கற்ச்சிலைகளும் ,சுதைச் சிற்பங்களும் நிறைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலை உலக அதிசயமாக இன்னும் அறிவிக்கவில்லை என்பது வருத்தம்தான் அறிவிக்க இவர்கள் யார் ?உலகத் தமிழர்கள் நாம் அறிவிப்போம் .
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உலக அதிசயம்தான் என்று .

இந்த நூலை படித்து முடித்தவுடன் இந்த நிலைக்குதான் நான் வந்தேன் .
எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது .ஆனால் உலகின் முதல் மொழியான தமிழ் பேசிய தமிழன் உலகம் வியக்கும் வண்ணம் ,கல்லிலே கலை வண்ணம் கண்ட திறனைக் கண்டு வியந்து போனேன் .மீனாட்சி கோயில் பற்றி பல நூல்கள் வந்துள்ளன .ஆனால் இந்த நூல் MASTER PEICE என்றே சொல்ல வேண்டும் .இது போன்ற நூல் இதற்கு முன் வரவில்லை .
இனி வரப்போவதுமில்லை என்று அறுதியிட்டுச் சொல்லலாம் .
பிரமாண்டமான நூல் .பிரமிக்க வைக்கும் நூல் .வாங்கிப் படித்துப் பார்த்தால் நீங்களும் உணர்வீர்கள் .வண்ணப் புகைப் படங்கள் வளமான கலை நுட்பத்தைப் பறை சாற்றுகின்றன .
நூல் ஆசிரியர் முனைவர் அம்பை மணிவண்ணன் மேலூர் அரசு கலைக் கல்லூரியின் பேராசிரியர் .மீனாட்சி கோயில் பற்றிய தகவல் களஞ்சியமாக ,ஆய்வு நூலாக மலர்ந்து உள்ளது .சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணிலிருந்து வெளிவந்துள்ள நூல் .கலைக் களஞ்சியமாக வந்துள்ள இந்த நூல், எ .ஆர்.பதிப்பகம் மூலம் வெளியிட்ட மருத்துவர் பொற்றாமரை கொண்டான் திரு .சீனிவாசன் ,அவரது அன்பு மனைவி திருமதி மல்லிகா இருவரும் பாராட்டுக்குரியவர்கள் .மிகப் பெரிய தொகையை இந்த நூலிற்காக முதலீடு செய்த தொண்டுள்ளத்தைப் பாரட்ட வேண்டும் .டாக்டர் ராதா தியாகராஜன் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்க்கின்றது .அவரதுஅணிந்துரையில் சிறு துளி

சுருங்கக் கூறின் ஒரு வாரம் முழுவதும் கண்டறிந்து வணங்கிப் போற்றத்தக்க இவ்வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாபெருந்திருக் கோயிலின் அனைத்துப் பகுதிகளையும் மாபெரும் வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் அறிந்து கொண்ட மனநிறைவு ,இந்நூலினைப் படிப்பவர்களுக்கு உண்டாகும் .இவ்வரலாற்றை நுண்ணரிதின் நோக்கித் தெள்ளிதின் வரைந்த டாக்டர் அம்பை மணிவண்ணனை மனமாரப் பாராட்டுகின்றேன் .

நூல் ஆசிரியர் முனைவர் அம்பை மணிவண்ணன் மணியான மொழியில் ,அற்புத வர்ணனைகளுடன் ,அழகு தமிழில் அற்புதமாக .மிகச் சிறப்பாக எழுதி உள்ளார் .மீனாட்சி கோயில் பற்றிய முழுமையான நூல் .உலகில் எல்லா நூலகத்தில் இருக்க வேண்டிய நூல் .வெறும் புகழ்ச்சி அல்ல உண்மை என்பதை வாங்கிப் படித்துப் பார்த்தால் நீங்களும் உணர்வீர்கள்.296 பக்கங்களும் புகைப்படங்களும் எழுத்து மட்டுமல்ல ,தமிழர்களின் திறமை உழைப்பு ,கலை ,பண்பாடு ,நாகரீகம் ,விழாக்கள் அனைத்துத் தகவல்களின் சுரங்கமாக உள்ளது .இந்நூலில் புகைப்படங்கள் சிறப்பா? கருத்துக்கள் சிறப்பா ?எனப் பட்டிமன்றமே நடத்தலாம் .நடத்தினாலும் நடுவரால் தீர்ப்புச் சொல்ல முடியாது . அந்த அளவிற்கு புகைப்படங்களும் ,கருத்துகளும் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்கின்றன .நூலில் விமானத்தில் இருந்து எடுக்கப் பட்ட புகைப்படம் ,செயற்கைக்கோள் வரைபடம் மீனாட்சி கோயிலில் உள்ள அனைத்துப் பகுதிகளின் புகைப்படங்கள் சிலைகள் அதற்க்கான விளக்கங்கள் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன .
இந்த நூலைப் படித்துவிட்டு மீனாட்சி கோயில் சென்றுப் பார்த்தேன் .நான் மட்டுமல்ல இந்த நூல் படிக்கும் அனைவருக்கும் தோன்றும் மீனாட்சி கோயிலை கலைக் கண்ணோடு பார்க்க வேண்டும் என்று .இந்நூலை அயல்நாட்டில் உள்ள நண்பர்களுக்குப் பரிசாகத் தந்து மகிழலாம் .மீனாட்சி கோயிலின் கலை நுட்பத்திற்காகவே உலகில் தமிழனாகப் பிறந்த ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளலாம் .வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்தில் தமிழன் பிரமாண்டமாக கலை அம்சத்துடன் கட்டி எழுப்பிய கோயில் ,காலத்தால் அழியாத கலைச் சின்னமாக உள்ளதை நூல் விளக்குகின்றது .
விழிகளுக்கு விருந்தாக கலை உள்ளது .கருத்து மனதிற்கு இனிமையாக உள்ளது .மிகச் சிறப்பாக அச்சிட்ட மதுரை விநாயகா அச்சகதாரும் பாராட்டுக்கு உரியவர்கள்மீனாட்சி கோயில் ஆயிரம் கால் மண்டபத்தில் உள்ள சிலைகளைப் பார்த்தால் உண்மையில் மனிதர்கள் நிற்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றன .சிலைகளின் புகைப்படங்கள் ,விளக்கங்கள் ,இசை எழுப்பும் தூண்கள் பற்றிய தகவல்கள் ,மதுரையின் வரலாறு .கோயிலின் தோற்றம் ,வளர்ச்சி ,பிரகார ஓவியங்கள் ,கோபுரங்கள் பற்றிய விபரங்கள் ,திருமலை நாயக்கர் வரலாறு,தங்கக் கோபுரம் ,சிற்ப அமைப்பு ,வாயிற்க் காவலர்கள் சிலைகள் இப்படி பல்வேறு தகவல்கள் நூலில் உள்ளது .
புதுமண்டபத்தில் உள்ள 34 சிலைகளின் பெயர்கள் அதன் விளக்கங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன .கள்ளழகர் திருவிழா தகவல்கள் ,தேரின் கலைநய வேலைப்பாடு எல்லாம் நூலில் உள்ளது.இந்நூலைப் படித்து முடித்தவுடன் நாமக்கல் கவிஞர் பாடிய வைர வரிகள்தான் என் நினைவிற்கு வந்தது .

தமிழன் என்று சொல்லடா !
தலை நிமிர்ந்து நில்லடா !

--

சனி, 23 ஏப்ரல், 2011

படித்ததில் பிடித்தது


படித்ததில் பிடித்தது

ஹைக்கூ

அச்சகம் கட்டிய
அறிவுக் கோபுரம்
புத்தகம்.
ச.சந்திரா

வியாழன், 21 ஏப்ரல், 2011

கை விட்டுச் சென்றதேன் ? கவிஞர் இரா .இரவி


கை விட்டுச் சென்றதேன் ? கவிஞர் இரா .இரவி


தூக்குத் தண்டனைக் கைதியிடம்
கூட கடைசி ஆசை
என்ன ?என்று கேட்கிறார்கள் .
உன்னைக் காதலித்து
ஆயுள் தண்டனைக் கைதியான
என்னிடம் நீ
கடைசி ஆசை
என்ன ?என்று கேட்காமலே
கை விட்டுச் சென்றதேன் ?

பொதிகை மின்னல் 10 ஆம் ஆண்டு விழா புகைப்படங்கள் .கன்னிமாரா நூலகம். சென்னைபொதிகை மின்னல் 10 ஆம் ஆண்டு விழா
புகைப்படங்கள் .கன்னிமாரா நூலகம். சென்னை

பொதிகை மின்னல் 10 ஆம் ஆண்டு விழா புகைப்படங்கள் .கன்னிமாரா நூலகம். சென்னைபொதிகை மின்னல் 10 ஆம் ஆண்டு விழா
புகைப்படங்கள் .கன்னிமாரா நூலகம். சென்னை

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

மன்னராட்சியையும் வென்றார்கள்
அரசியல்வாதிகள்
குடும்ப அரசியிலில்

மனிதனால் படைக்கப்பட்டு
மனிதனையே
ப் படுத்துகின்றது
பணம்

எங்கு ?முறையிடுவது
ஆண் காவலர்களால்
பெண் காவலர்களுக்குத் தொல்லை

அவள் தந்த
சங்கு பயன்பட்டது
இறுதி ஊர்வலத்திற்கு

சவுக்குமரம்
பார்க்கையில்
அவள் நினைவு

தமிழைக் காத்ததில்
பெரும்பங்குப் பெற்றன
பனை மரங்கள்

தமிழை அழிப்பதில்
பெரும்பங்குப் பெற்றன
தொலைக்காட்சிகள்

மூடநம்பிக்கையால்
முற்றுப் பெற்றது
சேதுகால்வாய்த் திட்டம்

இடித்ததால்
இடிந்தது மனிதநேயம்
பாபர் மசூதி

எட்டாவது அதிசயம்
ஊழலற்ற
அரசியல்வாதி

மூச்சுக்காற்று வெப்பமானது
ஏழை முதிர்கன்னிக்கு
தங்கத்தின் விலையால்

திரும்புகின்றது
கற்காலம்
மின்தடை

கருவறையில் உயிர்ப்பு
கல்லறையில் துயில்வு
இடைப்பட்டதே வாழ்க்கை

எல்லோரும் சிரிக்க
அழுது பிறந்தது
குழந்தை

எல்லோரும் அழ
அமைதியாக இருந்தது
பிணம்

நடமாடும் நயாகரா
நடந்துவரும் நந்தவனம்
என்னவள்

பெயருக்கு காதலிக்கவில்லை
பெயரையே காதலித்தேன்
மலரும் நினைவுகள்

அதிக வெளிச்சமும்
ஒருவகையில் இருட்டுத்தான்
எதுவும் தெரியாது

கூந்தல் மட்டுமல்ல
வாயும் நீளம்தான்
அவளுக்கு

ஹைக்கூ ராஜபட்சே கவிஞர் இரா .இரவி


ஹைக்கூ ராஜபட்சே .கவிஞர் இரா .இரவி

அணையப் போகும் விளக்கு
சுடர் விட்டு எரியும்
ராஜபட்சே

பாவத்தின் சம்பளம்
விரைவில் கிட்டும்
ராஜபட்சே

எத்தனைக் காலம்தான்
ஏமாற்றமுடியும்
ராஜபட்சே

பேராசை பெரும் நஷ்டம்
பொன்மொழியை மெய்ப்பித்தாய்
ராஜபட்சே

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

என்ன செய்ய நினைத்தாயோ ?தமிழ்ச் சாதியை கவிஞர் இரா .இரவி


என்ன செய்ய நினைத்தாயோ ?தமிழ்ச் சாதியை
கவிஞர் இரா .இரவி
அன்று முத்துக்குமார்
இன்று கிருஷ்ண மூர்த்தி
நாளை யாரோ ?
விலைமதிப்பற்ற
உயிரைத் தந்து
உலகின் கவனம்
ஈர்த்தபோதும் .
உலகின் கவனம்
ஈழத்தமிழரின் பால்
இன்னும் வரவே இல்லை .
கொலைவெறியன்
கொடூரன் ராசபட்சே
இன்னும் தண்டிக்கப் படவில்லை .
நான்கு மீனவர்களைக் கொன்று
நடுக் கடலில் வீசிய கொடுமையை
தட்டிக் கேட்க நாதி இல்லை.
கொலைக்காரன் ராசமரியாதையுடன்
கிரிக்கெட் பார்த்து
ச் செல்கிறான்
கோடிப் பணங்களையும்
கேடி வாங்கிச் செல்கிறான்
என்ன செய்ய நினைத்தாயோ ?தமிழ்ச் சாதியை
--

திங்கள், 18 ஏப்ரல், 2011

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

உழைக்காமல் உண்பது
திருட்டு
உழைப்பே உயர்வு

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

அங்கிகரிக்கப்பட்ட
சூதாட்டம்
பங்குச்சந்தை

Odum Nadhiyin Osai- Dr .V. Irai Anbu, IAS

Odum Nadhiyin Osai- Dr .V. Irai Anbu, IAS


முனைவர் இறைஅன்பு அவர்களின்
ஓடும் நதியின் ஓசை
அவர் குரலிலேயே கேட்டு மகிழுங்கள்

சிந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.கவிஞர் இரா .இரவி


சிந்தித்துக்
கொண்டுதான் இருக்கிறோம்.கவிஞர் இரா .இரவி

உடலால் நீ அங்கும்
நான் இங்கும்
பிரிந்து சந்திக்காமல்
வாழ்ந்து வந்தாலும்
உணர்வால்
நினைவால்
அடிக்கடி
சந்தித்து அல்ல சிந்தித்துக்
கொண்டுதான் இருக்கிறோம்

ஒரே சாதி கவிஞர் இரா .இரவி


ஒரே சாதி கவிஞர் இரா .இரவி

பிறப்பால் நீ வேறு சாதி
நான் வேறு சாதி
கவிதை ரசனையால்
இலக்கிய ஆர்வத்தால்
நீயும் நானும்
ஒரே சாதி

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

உள்ளம் உன்னிடமே .கவிஞர் இரா .இரவி


உள்ளம் உன்னிடமே .கவிஞர் இரா .இரவி

உதடுகள் பலரிடம்
உரையாடினாலும்
உள்ளம் உன்னையே
நினைத்துக் கொண்டு
இருப்பது
எனக்கு மட்டுமே
தெரியும்

பேரழகி இல்லை .கவிஞர் இரா .இரவி


பேரழகி இல்லை .கவிஞர் இரா .இரவி


அவள் பேரழகி இல்லை
சுமாரானவள்தான்.
பெரும் பணக்காரி இல்லை
நடுத்தரக் குடும்பம்தான்
பேரழகியைப் பார்த்தாலும்
அவளைக் கண்ட இன்பம்
வருவதில்லை .
பெரும் பணக்காரியைப்
பார்த்தாலும்
அவளின் நல்ல
குணம் இருப்பதில்லை

அவள் பதமாக வெந்த ரொட்டி. கவிஞர் இரா .இரவி


அவள் பதமாக வெந்த ரொட்டி. கவிஞர் இரா .இரவி

அவள் கருப்பு இல்லை
வெள்ளையும் இல்லை
இரண்டும் கலந்த
கலவை .
கருப்பு தீய்ந்த
ரொட்டியாம் .
வெள்ளை வேகாத
ரொட்டியாம் .
இரண்டும் கலந்த
கலவைதான்
பதமாக வெந்த ரொட்டியாம்.
அவள் பதமானவள்
மிகவும் இதமானவள்


--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

உந்தன் ஈர்ப்பு .கவிஞர் இரா .இரவி


உந்தன் ஈர்ப்பு .கவிஞர் இரா .இரவி

எந்தப் பெண் சிரிப்பைப்
பார்த்தாலும்
உந்தன் சிரிப்பின்
ஈர்ப்பு
யாரிடமும் இல்லை .
என்று அறுதியிட்டுக்
கூறுவேன்.
கோடி முகம்
பார்த்தாலும்
உன் முகம் பார்த்த
இன்பம் வருவதில்லை

என்னைக் கவிஞ்னாக்கிச் சென்றாள் கவிஞர் இரா .இரவி


என்னைக் கவிஞ்னாக்கிச் சென்றாள்
கவிஞர் இரா .இரவி

கவிதை சரியாக
எழுத வராதபோது
என்னுடன் இருந்தாள்.
கவிதை நன்றாக
எழுத வந்ததும்
ஏன்? எனைவிட்டு
சென்றாள் .
கவிஞனாக்க வேண்டும்
என்பதற்காகவே
சந்தித்துப் பிரிந்தாள்.
--

இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

ஒரே சாதி கவிஞர் இரா .இரவி


ஒரே சாதி கவிஞர் இரா .இரவி

பிறப்பால் நீ வேறு சாதி
நான் வேறு சாதி
கவிதை ரசனையால்
இலக்கிய ஆர்வத்தால்
நீயும் நானும்
ஒரே சாதி

மறுக்கமுடியாத உண்மை .கவிஞர் இரா .இரவி


மறுக்கமுடியாத உண்மை .கவிஞர் இரா .இரவிகாதலில் வென்றவர்கள்
வென்றதும் காதலை
மறந்து விடுகின்றனர் .
காதலில் தோற்றவர்கள்தான்
இருவருமே இறுதி வரை
காதலை நினைக்மறுக்ககின்றனர் .
மறுக்கமுடியாத உண்மை
மறக்க முடியாத உண்மை

நினைவில் உள்ளது கவிஞர் இரா .இரவி


நினைவில் உள்ளது கவிஞர் இரா .இரவி


எத்தனையோ வருடங்களுக்கு
முன் நடந்த நம் சந்திப்பு
சில நிமிடங்களுக்கு
முன் நடந்தது போல
இன்னும் என்
நினைவில் உள்ளது .
பசுமரத்து ஆணியாகப்
பதிந்தது .

வேறு பேசுங்கள் கவிஞர் இரா .இரவி


வேறு பேசுங்கள் கவிஞர் இரா .இரவி

எனக்குப் பிடித்த கடவுள்
முருகன் .
உங்களுக்குப் பிடித்த கடவுள்
எது ? என்றாள் அவள் .
எந்தக் கடவுளும்
எனக்குப் பிடிக்காது
என்றேன் நான் .
ஏன்? என்றாள் அவள்.
கடவுள் இல்லை
என்றேன் நான் .
போதும் வேறு பேசுங்கள்
என்றாள் அவள்
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

இதயத்தில் ஹைக்கூநூல் விமர்சனம் :முனைவர் ச.சந்திரா


இதயத்தில் ஹைக்கூ

நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி

நூல் விமர்சனம் :முனைவர் .சந்திரா

கோபுர வாயில்:

அன்னையில் துவங்கி ஆன்மீகத் தந்தையில் நிறைவுறும் இதயத்தில் ஹைக்கூ என்னும் இந்நூல் முழுவதும் மின்மினிப்பூச்சிகள்!அரட்டிப் புரட்டிப் போடும் போலி பொதுநலவாதிகளை தன் மூன்று வரிக் கணைகளால் வீழ்த்துகிறார் கவி இரவி.இந்நூலில் சூரியனும் நிலவும் நட்சத்திரங்களும் வர்ணனைக்கு மட்டுமல்ல!அறிவுரைக்கும் இலக்கணமாகின்றன. இதயத்தில் ஹைக்கூ எனும் இந்நூலில் ஆன்மீகத்திற்கோ நிறுத்தற்குறி .மூடப்பழக்கத்திற்கோ முற்றுப் புள்ளி. ஐம்பெரும்பூதங்களும் கவியின் கரங்களில் பம்பரம் ஆடுகின்றன.புராணக் கதைகளோ இந்நூலில் பொடித்துகள்களாகின்றன.

புதிரோ புதிர்:

மங்கை பற்றிய கவிதைகள் அனைத்தும் உவமை உடை அணிந்து,உருவக நடை பயின்று வரும் மகத்தான கவிதைகளாக உள்ளன. கரை தாண்டிய சுனாமிக் கவிதைகளோ, கல்நெஞ்சக்காரரையும் கரைய வைக்கின்றன.'பெண்மை'-இது கவி இரவியின் நோக்கில் உயர்வா?தாழ்வா? என கண்டறிய முடியாத புதிராகவே இந்நூலில் உள்ளது.கவி அஃறிணை உயிரின் மீது கொண்ட அக்கறை ஆல்பர்ட் சுவைட்சரை நினைவுப் படுத்துகிறது.

பக்கத்திற்குப் பக்கம்:

அகதிகள் மேல் கவிஞர் கொண்டிருக்கும் ஆதங்கம் அக்கவிதைகளை ! தங்கம் -எனப் பாராட்டத் தோன்றுகிறது.உலக அமைதி கேள்விக்குறி-எனும் வரி ஓர் ஆச்சிரியக்குறி எனலாம்புகைப் படக் கவிதைகள் ஒவ்வொன்றும் புடம் போட்டக் கவிதைகள் எனலாம்..விதி’- கவி இரவியின் கரங்களுக்குள் சிக்கித் தவிக்கின்றது. ஆன்மீகமோ அக்குவேறு ஆணி வேறாகின்றன. இளமையில் வறுமைப் பயணம் குறித்த கவிதைகள் கண்கலங்க வைக்கும் கண்ணீர்க் கவிதைகளாக இருக்கின்றன.சிறுவனைப் பெரியாராக்கிய கவிதை இந்நூலின் சிறப்புக் கவிதை எனலாம்.அழுகின்ற குழந்தை பற்றி இத்தொகுப்பில் இடம்பெற்ற ஆறு கவிதைகளும் அருமையிலும் அருமை.காவிரித் தண்ணீருக்கான காத்திருப்பு -குறித்த இழைகள் நூலின் முதல்,இடை,கடை என எல்லாப் பக்கங்களிலும் நெசவு செய்யப்பட்டிருக்கின்றன.

ஹைக்கூ கணை:

“ஆறுகால பூசை

ஆலயத்தில் கடவுளுக்கு

பட்டினியில் மனிதன்! ”( ப.45)

வறுமை அரக்கனின் உலா:

“ வயிற்றுக்கு கஞ்சி இல்லை !

ஆடைக்கு கஞ்சி போட்டான்!

சலவைத் தொழிலாளி!.”( ப.9)

இயற்கைச் சீற்றம்:

தாய் இருக்க சேய்!

சேய் இருக்க தாய்

சுனாமிக் கொலை!” ( ப.12)

மனதார...

கவிஞர் இரா.இரவியின் இதயத்தில் ஹைக்கூ என்னும் ஏழாவது படைப்பில் இடம்பெற்றிருக்கும் குறுங்கவிதைகள் அனைத்தும் வாசிப்போர் இதயத்தில் தானாகவே வந்து பொருந்திக் கொள்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை எனலாம்.இது எனது ஏழாவது நூல்,எட்டாவது நூல் -என எண்ண இயலாத அளவிற்கு எண்ணற்ற நூல் படைக்க கவி இரவிக்கு என்போன்ற இணையதள வாசகர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.எண்டிசையும் புகழ் பரவி, கவிஞர் ஏற்றமுடன் வாழ எம் உளமார்ந்த வாழ்த்துக்கள்.


--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

சனி, 16 ஏப்ரல், 2011

நம் காதல் கவிஞர் இரா .இரவிநம் காதல் கவிஞர் இரா .இரவி

அழகு ,அந்தஸ்த்துப்
பார்த்து வருவது
காதல் அல்ல .
உள்ளம் பார்த்து
உணர்வுப் பார்த்து
மலரென பூத்தது
நம் காதல்

மனதில் மாளிகை கவிஞர் இரா .இரவி


மனதில் மாளிகை கவிஞர் இரா .இரவி


காதல் தோல்விக்காக
தற்கொலை செய்பவர்கள்
மூடர்கள்.
காதல் தோல்விக்காக
மனதில் மாளிகை
கட்டியவன் நான் .

பார் நன்றாகப் பார் ! கவிஞர் இரா .இரவி


பார் நன்றாகப் பார் ! கவிஞர் இரா .இரவி

உனக்கு கண் வலி என்பதால்
என் விழி பார்ப்பதை
தவிர்க்காதே !
பார் நன்றாகப் பார் .
எனக்கும் கண் வலி
வரவேண்டும் .
உன் வலி நானும்
உணரவேண்டும் .

நினைத்து இருப்போம் . கவிஞர் இரா .இரவி


நினைத்து இருப்போம் . கவிஞர் இரா .இரவி

நாம் இணைந்து இருந்தால் கூட
விரைவில் மறந்து இருப்போம்
நாம் இணையாததால்தான்
இருவரும் இறுதிவரை
நினைத்து இருப்போம் .

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

Kavithai :: The Real Smell of Kavithai

Kavithai :: The Real Smell of Kavithai

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

வருடா வருடம் மீனாட்சிக்கு
எப்போது? முதிர்கன்னிக்கு
திருக்கல்யாணம்

குகன் பக்கங்கள் இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி


http://guhankatturai.blogspot.com/2011/04/blog-post_15.html

குகன் பக்கங்கள் இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி
பக்கம் பக்கமாக எழுதப்படும் கவிதைகளை விட பல சமயம் இரு வரி, மூன்று வரி கவிதைகள் வாசகர் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது. அதில் குறிப்பாக நல்ல ஹைக்கூ கவிதைகள் படித்த நிமிடங்களை விட நம் மனதில் குடியிருக்கும் நிமிடங்கள் தான் அதிகமாக இருக்கும். உண்மையான கவிதைக்கு அது தான் வெற்றியும் கூட. அப்படிப்பட்ட வெற்றி ஹைக்கூ கவிதைகளை எழுதி, தொகுத்துள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள். www.kavimalar.com என்ற இணையதளம் மூலம் இணையத்தில் பரவலாக பேசப்படுபவர்.

கடலில் விளையாடும் சிறுவனுக்கு ஒரு அலையை விட இன்னொரு அலை எப்படி பெரிதாக தெரியுமோ, இந்த நூலிம் இடம் பெற்று இருக்கும் கவிதை ஒன்றை விட ஒன்று அதிகமாக அளவிடப்படுகிறது. சுனாமி, அரசியல்வாதி, ஈழம், குழந்தை தொழிலாளிகள் இரா.ரவியை அதிகமாகவே பாதித்திருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த நூலில் பல கவிதைகள் இந்த நான்கை சுற்றி தான் வலம் வருகிறது.

உண்மையிலும் உண்மை
எழுத்து இடமாற்றம்
நகரம் – நரகம்


இன்னும் சில கவிதைகள் இன்றைய அரசியல் நிலவரத்தை பகடி செய்வது போல் வடிவமைத்திருக்கிறார்.

இலவச கியாஸ், டிவி சரி
இலவச மணமகன்
எப்போது ?


தமிழகத்தில் நடக்கவிருக்கும் எல்லா தேர்தலுக்கு இந்த கவிதை பொருந்த போகிறது.

வரும் முன்பே
பரப்பரப்பாய் பேசப்பட்டது
பெரியார் படம் !


நடிகர்கள் அரசியல் வரக்கூடாது என்று சொல்லுபவர்கள், நடிகர்கள் நடித்த படத்தை வைத்து அரசியல் நடத்துவதை இந்த ஹைக்கூ காட்டுகிறது.

கௌரவம் இழந்தது
கௌரவா டாக்டர் பட்டம்
நடிகைக்கு வழங்கியதால்


பணத்திற்கு பட்டம் வழங்கிய பிறகு, வானத்தில் பறக்கும் பட்டத்திற்கும், இதற்கும் வித்தியாசம் இல்லாமல் போனதை எடுத்துரைக்கிறது.

ஊதிய உயர்வு
வறுமையில் வாடியதால்
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு


கேட்டவுடன் ஊதிய உயர்வு பெற்றக்குடியவர்கள் நம் சட்டமன்ற உறுப்பினர்களாக தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு ஹைக்கூ கவிதைக்கும் அழகான, மிகவும் பொருந்தக்கூடிய படங்களை போட்டு மிக அழகான புத்தகத்தை வடிவமைத்திருக்கிறார்.

சில இடங்களில் ஒரே கருத்தை வேறு வேறு வார்த்தைகளில் கவிதைகள் இடம் பெற்றுயிருப்பதால், முதல் கவிதை ஏற்ப்படுத்திய தாக்கம் இரண்டாவது கவிதை ஏற்ப்படுத்தவில்லை.

ஹைக்கூ பிரியர்கள் வாசிக்க வேண்டிய நூல்.

--

திங்கள், 11 ஏப்ரல், 2011

முற்போக்குச் சிந்தனைகளின் முகவரி கவிஞர் இரா .இரவி தமிழ்த்தேனீ இரா .மோகன்


முற்போக்குச் சிந்தனைகளின் முகவரி கவிஞர் இரா .இரவி

தமிழ்த்தேனீ இரா .மோகன்

தகைசால் பேராசிரியர்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் .

இரா .இரவி அன்னைத் தமிழினைத் தம் உயிரினும் மேலாக நேசிப்பவர் .அல்லும் பகலும் இடைவிடாமல் இலக்கியங்களை வாசிப்பவர் .பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் அடிச்சுவட்டில் முற்போக்குச் சிந்தனைகளையே தம் மூச்சுக் காற்றாய்ச் சுவாசிப்பவர்.பாரத மணித் திருநாட்டின் முன்னைக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ .ப .ஜே அப்துல் கலாமின் வழியில் இளைய தலைமுறையினரின் நெஞ்சகளில் விழிப்புணர்வை விதைப்பது பற்றியே தீவிரமாக யோசிப்பவர் .சுருங்கக் கூறின்,முற்போக்குச் சிந்தனைகளின் முகவரி என ரவியைச் சுட்டலாம்.அவர் பணியாற்றுவது சுற்றுலாத் துறையில் ,அவர் மிகவும் விரும்புவதோ தமிழ் உலாவை.
கணினியும் ,இணைய தளமும் அவருக்கு இரு கண்கள் ,இலக்கியச் சீரிதழ்களின் செல்லப்பிள்ளை இரா .இரவி.என் மனதில் பட்டதை எவருக்கும் அஞ்சாமல் ஹைக்கூவாக வடித்துள்ளேன் .உள்ளக் குமுறலை ,கோபத்தை ,சமுதாய விழிப்புணர்வை விதைத்துள்ளேன் .(மனதில் ஹைக்கூ ப 8 )என மனதில் ஹைக்கூ தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார் இரா .இரவி.


வீரத்தில் சிங்கமாய்
வேகத்தில் சிறுத்தையாய்
எப்போது மனிதனாவாய் ?
(விழிகளில் ஹைக்கூ ப 1 8)

என்னும் ஹைக்கூ கவிஞரது உள்ளக் குமுறலின் எதிரொலி ஆகும் .
சிங்கம் ,சிறுத்தை ,சுறா ,நடுநிசி நாய்கள் என்றார் போல் இன்று வெளிவரும் திரைப்படங்களின் பெயர்களைப் பார்த்தாலும் கவிஞரின்
உள்ளக் கருத்து உறுதிப்படும் .

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு ?என்று கேட்பவர்கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள் .அவர்களது அகராதியில் பெண் என்றால் இன்னொரு வீட்டிற்குப் போகப் போகிறவள் .பெண் குழந்தைக்கு ஆண் குழந்தைக்கு நிகரான உயர் கல்வி தேவை இல்லை .

படிப்பு எதற்கு ?
அடுப்பூதும் பெண்களுக்கு
செருப்பாலடி சொல்பவனை
(நெஞ்சத்தில் ஹைக்கூ ப 5)

. என்னும் ஹைக்கூ கவிஞரது கோபத்தின் வெளிப்பாடு ஆகும் .
இரா .இரவியின் கருத்தியலில் வாழ்க்கை என்பது உண்பது ,உறங்குவது
மட்டும் அன்று .மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதே வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதே வாழ்க்கை.

கருவறை கல்லறை
இடைவெளி மட்டுமல்ல
வாழ்க்கை
(மனதில் ஹைக்கூ ப 45)

எனத் தம் ஹைக்கூ ஒன்றில் வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வைப்
பதிவு செய்துள்ள இரவி .
தமிழக மக்களின் நாவில் பயின்று வரும் பழமொழிகளையும் ,மேலோரின் விழுமிய மேற்கோள்களையும் தமக்கே உரிய பாணியில் பயன்படுத்திக் கொள்வதில் கை தேர்ந்தவர் இரவி.
கோழி மிதித்து குஞ்சுகள் சாகுமா ?என்பது தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வழங்கி வரும் ஒரு பழமொழி ,இதன் அடிப்படையில் இன்றைய சமூக அவலத்தை வெளிப்படுத்தும் அழகிய ஹைக்கூ ஒன்றினைப் புனைந்துள்ளார் இரவி.

குஞ்சுகள் மிதித்து
கோழிகள் காயம்
முதியோர் இல்லம்
(மனதில் ஹைக்கூ ப 61)

தமிழன் என்று சொல்லடா - தலை நிமிர்ந்து நில்லடா ! என்பது நாமக்கல் கவிஞரின் எழுச்சிமிகு முழக்கம் .இதனைத் தம் ஹைக்கூ ஒன்றில்
திறம்படக் கையாண்டு ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவோரைக் கடுமையாகச் சாடியுள்ளார் இரவி.

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா !
ஆங்கிலக் கையொப்பம் ஏனடா ?


என்னும் கவிஞரின் கேள்வி காரசாரமானது .
இரவியின் படைப்பு ஆளுமையில் நகைச்சுவை என்னும் மெல்லிய பூங்காற்றும் அவ்வப்போது களிநடனம் புரிந்து நிற்கக் காண்கிறோம் .ஓர் எடுத்துக்காட்டு

சுனாமி வருவதாக
மருமகள்கள் பேச்சு
மாமியார் வருகை
(இதயத்தில் ஹைக்கூ ப 21 )

தமிழ்நாட்டுக்கே உரிய -அதுவும் தமிழ்நாட்டு பெண்களிடமே சிறப்பாகக் காணப் படுகின்ற மாமியார் -மருமகள் உறவை மையமாகக் கொண்டு இங்கே நகைச்சுவை ததும்பி நிற்கும் ஹைக்கூ படைத்துள்ளார் கவிஞர் .
கவிக்கோ அப்துல் ரகுமான் தொடங்கி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி வரையில் படைப்பாளிகள் பலரும் ஹைக்கூ பற்றிய தங்கள் வரைவிலக்கணங்களைச் சுருக்கமாகவும் ,செறிவாகவும் வகுத்து தந்துள்ளனர் இரவியும் தம் பங்கிற்கு

மூன்று வரி
முத்தாய்ப்பு
ஹைக்கூ
(மனதில் ஹைக்கூ ப 11)

என ஹைக்கூ குறித்துப் புனைந்துள்ளார் .கணினி யுகத்தின் கற்கண்டு ,தற்கால இலக்கியத்தின் தகதகப்பு ,உருவத்தில் கடுகு ,
உணர்வில் இமயம் ,படித்தால் பரவசம் ,உணர்ந்தால் பழரசம் ,சொற்சிக்கனம் -தேவை இக்கணம்
என்னும் அழகிய தொடர்களால் ஹைக்கூ கவிதைக்குப் புகழாரம் சுட்டியுள்ளார் .
ஹைக்கூ என்றதும் இலக்கிய ஆர்வலர்களின் நினைவுக்கு வரும் கவிஞர்களில் ஒருவராக இரவி விளங்குகிறார் .ஹைக்கூ திலகம்
என்றும் அவர் சிறப்பிக்கப் பெறுகின்றார் .இதுவரை பத்து நூல்களைப் படைத்துத் தந்துள்ள கவிஞர் இரா .இரவி
எதிர்காலத்தில் இன்னும் பல நூல்களை வெளியிட்டு எழுத்துத் துறையில் முத்திரை பதிக்க வேண்டும் .வாழும் படைப்பாளி ஒருவரை வாழும் காலத்திலேயே தாய் மனத்தோடு பாராட்ட முன் வந்து இருக்கும் பொதிகை மின்னல் இதழுக்கு தமிழ் கூறு நல்லுலகின்
நெஞ்சார்ந்த பாராட்டும் வாழ்த்தும் வணக்கமும் உரியனவாகுக !

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

எது ? சுகம் இரா .இரவி


எது ? சுகம் இரா .இரவி

காதலில் வெல்வது
சுகமா ?
தோற்ப்பது
சுகமா ?
தோற்ப்பதே சுகம்
தோற்றதால்தான்
இன்னும் அசை
போடுகிறேன்
அவள் நினைவை

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது