பொற்றாமரை நூல் ஆசிரியர் முனைவர் அம்பை மணிவண்ணன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


பொற்றாமரை

நூல் ஆசிரியர் முனைவர் அம்பை மணிவண்ணன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

எ .ஆர்.பதிப்பகம் கே .கே .நகர், மதுரை விலை ரூ 955

தமிழர்களின் கலையை உலகிற்குப் பறைசாற்றிடும் கலைப் பொக்கிஷம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் .சமீபத்தில் உலக அதிசயமாக அறிவிக்க வேண்டுமென்று இணையத்தில் வாக்கெடுப்பு நடந்தது .
சீனப் பெருஞ்சுவர் நீளமான ஒன்று .உலக அதிசயமாக உள்ளது .ஆனால்
உலகில் எந்தக் கோயிலிலும் இல்லாத அளவிற்கு கற்ச்சிலைகளும் ,சுதைச் சிற்பங்களும் நிறைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலை உலக அதிசயமாக இன்னும் அறிவிக்கவில்லை என்பது வருத்தம்தான் அறிவிக்க இவர்கள் யார் ?உலகத் தமிழர்கள் நாம் அறிவிப்போம் .
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உலக அதிசயம்தான் என்று .

இந்த நூலை படித்து முடித்தவுடன் இந்த நிலைக்குதான் நான் வந்தேன் .
எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது .ஆனால் உலகின் முதல் மொழியான தமிழ் பேசிய தமிழன் உலகம் வியக்கும் வண்ணம் ,கல்லிலே கலை வண்ணம் கண்ட திறனைக் கண்டு வியந்து போனேன் .மீனாட்சி கோயில் பற்றி பல நூல்கள் வந்துள்ளன .ஆனால் இந்த நூல் MASTER PEICE என்றே சொல்ல வேண்டும் .இது போன்ற நூல் இதற்கு முன் வரவில்லை .
இனி வரப்போவதுமில்லை என்று அறுதியிட்டுச் சொல்லலாம் .
பிரமாண்டமான நூல் .பிரமிக்க வைக்கும் நூல் .வாங்கிப் படித்துப் பார்த்தால் நீங்களும் உணர்வீர்கள் .வண்ணப் புகைப் படங்கள் வளமான கலை நுட்பத்தைப் பறை சாற்றுகின்றன .
நூல் ஆசிரியர் முனைவர் அம்பை மணிவண்ணன் மேலூர் அரசு கலைக் கல்லூரியின் பேராசிரியர் .மீனாட்சி கோயில் பற்றிய தகவல் களஞ்சியமாக ,ஆய்வு நூலாக மலர்ந்து உள்ளது .சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணிலிருந்து வெளிவந்துள்ள நூல் .கலைக் களஞ்சியமாக வந்துள்ள இந்த நூல், எ .ஆர்.பதிப்பகம் மூலம் வெளியிட்ட மருத்துவர் பொற்றாமரை கொண்டான் திரு .சீனிவாசன் ,அவரது அன்பு மனைவி திருமதி மல்லிகா இருவரும் பாராட்டுக்குரியவர்கள் .மிகப் பெரிய தொகையை இந்த நூலிற்காக முதலீடு செய்த தொண்டுள்ளத்தைப் பாரட்ட வேண்டும் .டாக்டர் ராதா தியாகராஜன் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்க்கின்றது .அவரதுஅணிந்துரையில் சிறு துளி

சுருங்கக் கூறின் ஒரு வாரம் முழுவதும் கண்டறிந்து வணங்கிப் போற்றத்தக்க இவ்வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாபெருந்திருக் கோயிலின் அனைத்துப் பகுதிகளையும் மாபெரும் வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் அறிந்து கொண்ட மனநிறைவு ,இந்நூலினைப் படிப்பவர்களுக்கு உண்டாகும் .இவ்வரலாற்றை நுண்ணரிதின் நோக்கித் தெள்ளிதின் வரைந்த டாக்டர் அம்பை மணிவண்ணனை மனமாரப் பாராட்டுகின்றேன் .

நூல் ஆசிரியர் முனைவர் அம்பை மணிவண்ணன் மணியான மொழியில் ,அற்புத வர்ணனைகளுடன் ,அழகு தமிழில் அற்புதமாக .மிகச் சிறப்பாக எழுதி உள்ளார் .மீனாட்சி கோயில் பற்றிய முழுமையான நூல் .உலகில் எல்லா நூலகத்தில் இருக்க வேண்டிய நூல் .வெறும் புகழ்ச்சி அல்ல உண்மை என்பதை வாங்கிப் படித்துப் பார்த்தால் நீங்களும் உணர்வீர்கள்.296 பக்கங்களும் புகைப்படங்களும் எழுத்து மட்டுமல்ல ,தமிழர்களின் திறமை உழைப்பு ,கலை ,பண்பாடு ,நாகரீகம் ,விழாக்கள் அனைத்துத் தகவல்களின் சுரங்கமாக உள்ளது .இந்நூலில் புகைப்படங்கள் சிறப்பா? கருத்துக்கள் சிறப்பா ?எனப் பட்டிமன்றமே நடத்தலாம் .நடத்தினாலும் நடுவரால் தீர்ப்புச் சொல்ல முடியாது . அந்த அளவிற்கு புகைப்படங்களும் ,கருத்துகளும் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்கின்றன .நூலில் விமானத்தில் இருந்து எடுக்கப் பட்ட புகைப்படம் ,செயற்கைக்கோள் வரைபடம் மீனாட்சி கோயிலில் உள்ள அனைத்துப் பகுதிகளின் புகைப்படங்கள் சிலைகள் அதற்க்கான விளக்கங்கள் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன .
இந்த நூலைப் படித்துவிட்டு மீனாட்சி கோயில் சென்றுப் பார்த்தேன் .நான் மட்டுமல்ல இந்த நூல் படிக்கும் அனைவருக்கும் தோன்றும் மீனாட்சி கோயிலை கலைக் கண்ணோடு பார்க்க வேண்டும் என்று .இந்நூலை அயல்நாட்டில் உள்ள நண்பர்களுக்குப் பரிசாகத் தந்து மகிழலாம் .மீனாட்சி கோயிலின் கலை நுட்பத்திற்காகவே உலகில் தமிழனாகப் பிறந்த ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளலாம் .வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்தில் தமிழன் பிரமாண்டமாக கலை அம்சத்துடன் கட்டி எழுப்பிய கோயில் ,காலத்தால் அழியாத கலைச் சின்னமாக உள்ளதை நூல் விளக்குகின்றது .
விழிகளுக்கு விருந்தாக கலை உள்ளது .கருத்து மனதிற்கு இனிமையாக உள்ளது .மிகச் சிறப்பாக அச்சிட்ட மதுரை விநாயகா அச்சகதாரும் பாராட்டுக்கு உரியவர்கள்மீனாட்சி கோயில் ஆயிரம் கால் மண்டபத்தில் உள்ள சிலைகளைப் பார்த்தால் உண்மையில் மனிதர்கள் நிற்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றன .சிலைகளின் புகைப்படங்கள் ,விளக்கங்கள் ,இசை எழுப்பும் தூண்கள் பற்றிய தகவல்கள் ,மதுரையின் வரலாறு .கோயிலின் தோற்றம் ,வளர்ச்சி ,பிரகார ஓவியங்கள் ,கோபுரங்கள் பற்றிய விபரங்கள் ,திருமலை நாயக்கர் வரலாறு,தங்கக் கோபுரம் ,சிற்ப அமைப்பு ,வாயிற்க் காவலர்கள் சிலைகள் இப்படி பல்வேறு தகவல்கள் நூலில் உள்ளது .
புதுமண்டபத்தில் உள்ள 34 சிலைகளின் பெயர்கள் அதன் விளக்கங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன .கள்ளழகர் திருவிழா தகவல்கள் ,தேரின் கலைநய வேலைப்பாடு எல்லாம் நூலில் உள்ளது.இந்நூலைப் படித்து முடித்தவுடன் நாமக்கல் கவிஞர் பாடிய வைர வரிகள்தான் என் நினைவிற்கு வந்தது .

தமிழன் என்று சொல்லடா !
தலை நிமிர்ந்து நில்லடா !

--

கருத்துகள்

  1. இந்த புத்தகம் எங்கு கிடைக்கும், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பெற முடியுமா ... தயவு செய்து இந்த தகவலை பகிர்ந்து உதவவும்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக