இடுகைகள்

March, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Thaalam --- இலக்கியம் - என்ன கொடுமை இது

இதுதாண்டா காங்கிரஸ் கவிஞர் இரா .இரவி

படம்
இதுதாண்டா காங்கிரஸ் கவிஞர் இரா .இரவி

கட்சிக் கொடியையே தலைகீழாகக்
கம்பத்தில் கட்டிடும் தொண்டர்கள்

மனைவியின் படிவத்தை திட்டமிட்டே
தவறாக எழுதிடும் மாநிலத்தலைவர்

சூரியன் உதிக்க மறந்தாலும்
கோஷ்டிச் சண்டை நடத்த மறப்பதில்லை

கடலில் அலைகள் ஒய்ந்தாலும்
காங்கிரஸ் கோஷ்டிப் பூசல் ஓயாது

வேஷ்டி கிழியும் மண்டை உடையும்
வேறு எங்குமில்லை கட்சி அலுவலகத்தில்

காமராசர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லி
காமராசரைக் களங்கப் படுத்தும் பேச்சாளர்கள்

தேர்தல்நாள் வரை வேட்பாளர்கள் பெயர்
தினமும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள்

தமிழே தெரியாத வடவர்கள் தான்
தமிழக அரசியல் பொறுப்பாளர்கள்

கவனித்தவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு
கக்கன் மருமகளுக்கே தராமல் ஏய்ப்பு

காந்தியடிகள் சொன்னபடி அன்றே கட்சியைக்
களைத்து இருந்தால் நாடுப் பிழைத்திருக்கும்

நூல் : கண்ணின் மணி நீயெனக்கு நூல் ஆசிரியர் : அகில் நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி

படம்
நூல் : கண்ணின்மணிநீயெனக்கு
நூல்ஆசிரியர் :அகில்
நூல்ஆய்வு:கவிஞர்இரா.இரவி

நாவலின்தலைப்பேகவித்துவமானநாவலைப்படிக்கவேண்டுமென்றஆவலைத்தூண்டும்வண்ணம்உள்ளது. நூலாசிரியர்கவிஞர்அகில்ஈழத்தமிழர், தற்போதுகனடாவில்வசித்துவருபவர். இவர்கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைஎனஎழுதிமுத்திரைபதிக்கும்எழுத்தாளர். உலகஅளவில்நடந்தசிறுகதைப்போட்டிகள்பலவற்றில்பரிசுகள்வென்றவர். உலகில்உள்ளஎழுத்தாளர்கள், கவிஞர்களைஆவணப்படுத்தும்ஒப்பற்றபணியினைறறற.வயஅடையரவாழசள.உழஅஎன்றஇணையத்தின்மூலம்செய்துவரும்கடினஉழைப்பாளி.

கதையினைப்படிக்கும்போதுஈழத்தமிழர்கள்நம்முடன்பேசுவதுபோன்றஉணர்வினைஏற்படுத்துகின்றது. நாவல்ஆசிரியர்ஈழத்தமிழர்என்பதால்ஈழத்தமிழர்கள்கதைக்கும்மொழியிலேயேநாவலைப்பதிவுசெய்துஇருப்பதுகூடுதல்சிறப்பு. படைப்பாளியின்வெற்றியினைப்பறைசாற்றும்விதமாகஉள்ளது. நல்லநடைநாவலின்மனிதஉணர்வுகளை, தாய் - மகன்பாசம், தந்தை – மகன்பாசம்படம்பிடித்துக்காட்டுகின்றார்.

கதைஎன்றபெயரில்கண்டதைக்கதைக்கும்காலத்தில், கதைக்குஎதுதேவையோஅதைமட்டும்

இணையங்களில் கவிஞர் இரா .இரவி

முட்டாள்கள் தினத்தன்று மூடன் வருகிறான் திருப்பதியை வணங்க கவிஞர் இரா .இரவி

படம்
முட்டாள்கள் தினத்தன்று
மூடன் வருகிறான் திருப்பதியை வணங்க
கவிஞர் இரா .இரவி

வரவேற்பு வழங்க மூடன்கள்
அணிவகுப்பு நடக்கும்

செய்த கொலை பாதகம்
ஜென்மத்திற்கும் தீராது

பாவத்தின் பங்கைத் திருப்பதியிடம்
பகிர்ந்துக் கொள்ள வருகிறான்

பாவத்திற்கான சம்பளம் உனக்கு
பாவியே நிச்சயம் உண்டு

உலக மகா யோக்கியன் வருகிறான்
உடன் செம்பைத் தூக்கி உள்ளே வை

லட்சக் கணக்கில் தமிழர்களைக்
கொண்ட கொலைகாரன்

தமிழர்களின் வரிப் பணத்தில்
இயங்கும் இந்தியா வந்து செல்கிறான்

காங்கிரசே உனக்கு தமிழர் வேண்டுமா ?
சிங்களக் கொடியவன் வேண்டுமா ?

தேர்தல் நேரம் நல்ல முடிவை எடு
தேர்தலில் தோற்று வருந்தாதே

--

இணையங்களில் கவிஞர் இரா .இரவி

Thaalam --- இலக்கியம் - ஹைக்கூ

என்ன கொடுமை இது கவிஞர் இரா .இரவி

படம்
என்ன கொடுமை இது கவிஞர் இரா .இரவி

கிரிக்கெட் காண அனுமதிச் சீட்டு தாருங்கள்
கிட்னி தருகிறேன் என்கிறார் ரசிகர்
உயிர் காக்கும் உன்னதத்தை
கேளிக்கைக்காக தருகிறேன் எனும் அவலம்
கிட்னியைத் தேவைப்படும் நண்பனுக்கு
குடும்ப உறுப்பினர்க்குக் கொடுக்கலாம்
கிட்டினியை இட்லிக்கு வைக்கும்
சட்னியைப் போல தருகிறேன் என்கிறார்
ஊடகங்கள் போட்டிப் போட்டு
ஊதி ஊதிபெருசாக்கி விட்டனர் கிரிக்கெட்டை
கால்ப்பந்துக்கு ஈடாகுமா ? கிரிக்கெட்
கபடிக்கு ஈடாகுமா ? கிரிக்கெட்
குளிர்ப் பிரதேசத்து ஆடையை
வெப்பப்பூமியில் அணியும் மடமை
ஆவலுடன் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்
அனைவரையும் முட்டாள் ஆக்குகின்றனர்
முந்தைய விளையாட்டுகளில் நடந்த
சூதாட்டங்கள் அம்பலமாகி விட்டது
ஒழுக்கம் என்றால் என்னவென்று அறியாத
ஒழுக்கம் கெட்ட கிரிக்கெட் வீரர்கள்
விளையாட்டை விளையாட்டாகப் பாருங்கள்
விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள்
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டை
இந்தியா பாகிஸ்தான் போராகப் பார்க்காதீர்கள்
பிரதமர்களும் முதல்வர்களும் கிரிக்கெட்டைப்
பார்க்க நேரில் செல்வதை நிறுத்துங்கள்
விளையாட்டை வெறியாக மாற்றாதீர்கள்
விரயம் செய்யாதீர்கள் பொன்னான நேரத்தை��…

மதுரையில் கவிஞர் கவிமுகில் நூல்கள் அறிமுக விழா

படம்
மதுரையில் கவிஞர் கவிமுகில் நூல்கள் அறிமுக விழா

யாரும் தடுக்காதீர்கள் கவிஞர் இரா .இரவி

படம்
யாரும் தடுக்காதீர்கள் கவிஞர் இரா .இரவி

கொள்ளையடித்தப் பணம்
கொடுத்துவிட்டுப் போகட்டும்
மலையளவு அடித்தக் கொள்ளையில்
மடுவளவுதான் தருகிறார்கள்
நெற்றி வியர்வைத் தன்னை
நிலத்தில் சிந்தி சம்பாதிதத்தன்று
குடிமக்களிடமிருந்து அடித்தப் பணம்
குடிமக்களுக்கேப் போகட்டும்
தேர்தல் நிதி என்று நியமனங்களில்
திரட்டியப் பணம் செலவாகட்டும்
தேர்தல் செலவிற்கு என்று இடமாற்றங்களில்
திரட்டியப் பணம் செலவாகட்டும்
தேர்தல் அறிவித்ததும் ஏழைகள் மகிழ்ந்தனர்
ஒரு வாரமாவது பசிப் போக்கலாம் என்று
யார் கொடுத்தாலும் வாங்கட்டும்
யாரும் தடுக்காதீர்கள் தயவுசெய்து
வறுமையில் பலர் வாடுவது உண்மை
வயிற்றுப் பசிப் போக்கட்டும்
வாழ்வாதாரங்களைச் சிதைத்துப் பெற்ற
வளமான செல்வங்களை செலவழிக்கட்டும்
கொடுப்பதை வாங்கிக் கொண்டு
கொடுத்தவர்களுக்குப் போடாதீர்கள்
மனதிற்கு நல்லவர் என்று தெரிந்தால்
மனதார வாக்களியுங்கள்
யாருமே நல்லவர் இல்லை என்றால்
யாருக்கும் இல்லை என்பதைப் பதியுங்கள்

Thaalam --- இலக்கியம் - ஜப்பானியர்கள் வைர நெஞ்சம் பெற்றவர்கள்

இரஜகை ராபர்ட்: கவிஞர் இரா. இரவி, மதுரை அவர்களின் படைப்புகள்

இரஜகை ராபர்ட்: கவிஞர் இரா. இரவி, மதுரை அவர்களின் படைப்புகள்: "மேலே கிளிக் பண்ணி படியுங்க.. ஹைக்கூ கர்மவீரர் காமராசர் தென்னாட்டுக் காந்தி காமராசர் பேரறிஞர் அண்ணா காதல் ஹைக்கூ பகுத்தறிவுப் பகலவன் பெரிய..."

கவிதைகள்

கவிஞர்கள் கவிதை

http://ikavithai.com/kavingarkavi.php?author=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF

ஹைக்கூ

படம்
ஓராயிரம் பொருள் கிடைக்கும்
உற்று நோக்கினால்
படைப்பதற்கு
!- கவிஞர்.இரா.இரவிhttp://hemajillary.blogspot.com/2010/07/blog-post.html

Speaker's Address During the Monthly Meeting of Madurai Media Club

படம்

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவிசிற்பி வீட்டு
படிக்கல்லானாலும்
சிலையாவதில்லை

ஆட்சியில் ஆள்பவர்களை விட
மனதை ஆண்டவர்கள்
மரித்த பின்னும் வாழ்கின்றனர்

கோடிகள் கொள்ளை
அடித்தாலும் முடிவு
தற்கொலை கொலை

பொம்மை உடைந்த போது
மனசும் உடைந்தது
குழந்தைக்கு

தடியால் அடித்து
கனிவதில்லை கனி
குழந்தைகளும்தான்

அனைவரும் விரும்புவது
அதிகாரம் அல்ல
அன்பு

நிலம் விற்றுப்
பெற்றப் பணத்தில்
அப்பாவின் முகம்

கால்களைத் தொட்டு
வணங்கிச் சென்றன
அலைகள்

சிற்பி இல்லை
சிற்பம் உண்டு
நிலையானது எது ?

போட்டியில் வென்றது
புற அழகை
அக அழகு

நான் கடவுள் என்பவன்
மனிதன் அல்ல
விலங்கு

அவளுக்கும் உண்டு
மனசு மதித்திடு
மனைவி

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeraviஇறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண்தானம்செய்வோம் !!!!!

ஜப்பானியர்கள் வைர நெஞ்சம் பெற்றவர்கள்

படம்
ஜப்பானியர்கள் வைர நெஞ்சம் பெற்றவர்கள்

கவிஞர் இரா .இரவி

அணுகுண்டு போட்டார்கள்
புல் பூண்டு கருகியது
உயிர்கள் ஒழிந்தது
உயரம் குறைந்தது
உழைத்தார்கள் ஓய்வின்றி
உழைத்தார்கள்
உலகின் உச்சம்
தொட்டார்கள் .

சுனாமி வந்தது
சும்மா புரட்டிப் போட்டது
அணு உலை வெடித்தது
ஆருயிர்கள் மடிந்தது
உழைப்பார்கள் ஓய்வின்றி
உழைப்பார்கள்
உலகின் உச்சம்
மீண்டும் தொடுவார்கள்.

விதியை நினைத்து
வீழ்ந்து கிடக்க மாட்டார்கள்
மதியைப் பயன்படுத்தி
மற்றட்ட வளர்ச்சிக் காண்பார்கள்
தோல்விக்குத் துவளாத
வைர நெஞ்சம் பெற்றவர்கள்
சோகதிற்குச் சோர்ந்திடாத
இதயம் படைத்தவர்கள்

ஈழத்து சிறுகதைகள்: அரசனின் வருகை

ஈழத்து சிறுகதைகள்: அரசனின் வருகை: "உமா வரதராஜன் மூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் ..."

முனைவர் வெ. இறைஅன்பு இ.ஆ.ப அவர்களுடன் கவிஞர் இரா .இரவி

படம்
திருவள்ளுவரும் ,சேக்ஸ்பியரும் என்ற தலைப்பில்
இரண்டாவது முனைவர் பட்ட ஆய்விற்காக
மதுரை வந்த வனத்துறை செயலர்
முனைவர் வெ. இறைஅன்பு இ.ஆ.
அவர்களுடன் கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

கூடுதலாக உண்டு
தாய்மண் பாசம்
புலம் பெயர்ந்தவர்களுக்கு

வெந்நீர் ஊற்றியபோதும்
வளரும் செடிகள்
புலம் பெயர்ந்தவர்கள்

பயன்பட்டது
சாக்கடைநீரும்
தீ அணைக்க

கூடலின் அருமை
உணர்த்தியது
ஊடல்

ஈடில்லா வேகம்
பின்னோக்கிப் பார்ப்பதில்
மலரும் நினைவுகள்

உடலின் மச்சமென
நீங்காத நினைவு
காதல்

இனிமை இனிமை
சின்னத் தீண்டல்
சிந்தையில் கிளர்ச்சி

கோலமிட்டுச் சென்றது
சாலையில்
தண்ணீர் லாரி

பிணமானபின்னும்
காசு ஆசை
நெற்றியில் காசு

தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
அம்மா

வந்துவிட்டது
சேலையிலும் சைவம்
சைவப்பட்டு

கொன்ற கோபம்
இன்னும் தீரவில்லை
அதிரும் பறை

உயராத கூலி
உயரும் விலைவாசி
வேதனையில் ஏழைகள்

அயல்நாட்டில் ஊறுகாய்
நம்நாட்டில் சாப்பாடு
தொலைக்காட்சி


மழை வந்ததும்
உடன் வந்தது
மண்வாசைனை

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeraviஇறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண்தானம்செய்வோம் !!!!!கூடுதலாக உண்டு
தாய்மண் பாசம்
புலம் பெயர்ந்தவர்களுக்கு

வெந்நீர் ஊற்றியபோதும்
வளரும் செடிகள்
புலம் பெயர்ந்தவ…

ஹைக்கூ இரா .இரவி

படம்
ஹைக்கூ இரா .இரவி

வீடு மாறியபோது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி

விமர்சனங்களுக்கு
செவி மடுக்கவில்லை
தவளை

இராமாயண மாற்றம்
கடன் கொடுத்தார் நெஞ்சம் போல்
கலங்கினான் இலங்கை வேந்தன்

மலர்களோடு பேசினேன்
அவளின் தாமதத்திற்கு
நன்றி

பாராட்டினார்கள்
சிலையையும் சிற்பியையும்
சோகத்தில் உளி

ஏங்கியது குழந்தை
கதை கேட்க
முதியோர் இல்லத்தில் பாட்டி


பொருத்தமாக இல்லை
எயிட்ஸ் விளம்பரத்தில்
நடிகர்

கூவலின் இனிமை
இனப்பெருக்கத்தில் இல்லை
குயில்

திருந்தாத மக்கள்( மாக்கள் )
அமோக வசூல்
சாமியார் ? தரிசனம்

முக்காலமும் எக்காலமும்
அழியாத ஒன்று
காதல்

வேகமாக விற்கின்றது
நோய் பரப்பும் குளிர்பானம்
வருத்தத்தில் இளநீர்

உழைப்பாளியின் ரத்தம்
உறிஞ்சிக் குடிக்கும்
டாஸ்மாக்

விதைத்த நிலத்தில்
பாய்ச்சிய நீரில்
பாலிதீன் பைகள்

பகுத்தறிவுப் பகலவன் பெரியார் - கவிஞர் இரா.இரவி

படம்
பகுத்தறிவுப் பகலவன் பெரியார் - கவிஞர் இரா.இரவி
பெரியார் தமிழகத்தில் பிறக்கவில்லை என்றால்
பாரினில் தமிழன் சிறக்கவில்லை என்று பொருள்

சமூக நீதியை நிலைநாட்டிய நாயகர்
சமுத்துவ சமுதாயத்தை உருவாக்கியவர் பெரியார்

இட ஒதுக்கீட்டிற்காக முதன் முதலாக அன்றே
இந்திய அரசியல் சட்டம் திருத்திட வைத்தவர் பெரியார்

காந்தியடிகள் கதர் உடுத்த வேண்டியதும்
கதராடை சுமந்து விற்றவர் பெரியார்

கள் மது ஒழிக்க வேண்டும் என்றதும் சொந்தக்
கள் மரங்களை வெட்டி வீழ்த்தியவர் பெரியார்

விதி என்றும் ஒன்றும் கிடையாது சொந்த
மதியை பயன்படுத்தி வென்றிடச் சொன்னவர் பெரியார்

கடவுள் என்பது கற்பிக்கப்பட்ட கற்பனை
கடைக்கொடி மனிதனுக்கு புரியும்படி உரைத்தவர் பெரியார்

பெண் ஏன்? அடிமையானாள் நூலின் மூலம்
பெண்ணின் அடிமை விலக்கை அடித்து நொருக்கியவர் பெரியார்

பிள்ளை பெறும் இயந்திரமா? பெண்கள்
பல கேள்விகளைக் கேட்ட அறிவுச்சுடர் பெரியார்

விதவைகள் மறுமணத்திக்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே
வித்திட்ட புரட்சி வேங்கை பெரியார்

எதையும் என்? எதற்கு? எப்படி? என
எல்லோரையும் கேட்ட வைத்த அறிஞர் பெரியார்

பக்தி என்பது தனிச்சொத்து ஒழுக்கம் பொதுச்சொத்து
பாமரனுக்கும் புரியும் வண்ணம் உணர்த்தியவ…

பயணம் இதழில் நூல் விமர்சனம்

படம்
பயணம் இதழில் நூல் விமர்சனம்

உலக மகளிர் தினம் கவிஞர் இரா .இரவி

படம்
உலக மகளிர் தினம் கவிஞர் இரா .இரவி

ஓவ்வொரு ஆணின் வெற்றிக்கு பெண் பின் நின்றது போதும்
ஓவ்வொருப் பெண்ணும் வெற்றிப் பெற வேண்டும்
தடைகளை உடன் தகர்த்திட வேண்டும்
தன்னம்பிக்கையை மனதில் வளர்த்திட வேண்டும்
மூடநம்பிகைகளை முற்றாக ஒழித்திட வேண்டும்
மூளையைப் பகுத்தறிவிற்குப் பயன்படுத்திட வேண்டும்
மானே தேனே என்றால் கவனமாக இருந்திட வேண்டும்
மனது லட்சியம் நோக்கிப் பயணித்திட வேண்டும்
சமையல் அறையில் இருந்து முதலில் விடுபட வேண்டும்
சமயங்களின் மூடப் பழக்கங்களை மாற்றிட வேண்டும்
போகப் பொருள் அல்ல பெண்கள் உணர்த்திட வேண்டும்
பாகத்தில் சரிசமமாகப் பங்குப் பெற்றிட வேண்டும்
பெண்ணாகப் பிறந்ததற்குப் பெருமைப் பட வேண்டும்
பெண் இன்றி உலகம் இல்லை விளக்கிட வேண்டும்
எதையும் சாதிக்கும் இதயம் பெற்றிட வேண்டும்
எதற்கும் அஞ்சாத துணிவினைப் பெற்றிட வேண்டும்
பெண்கள் ஆற்றலின் இமயம் தெரிந்திட வேண்டும்
பெண்கள் திறமையின் ஊற்றுப் புரிந்திட வேண்டும்
பெண்கள் சிந்தனையின் சிகரம் தெரிந்திட வேண்டும்
பெண்கள் செயலின் வடிவம் புரிந்திட வேண்டும்
ஆண் பெண் பேதம் உடன் அகற்றிட வேண்டும்
ஆண் பெண் சமத்துவம் நடைமுறைப் படுத்திட வேண்டும்
பெண்கள் இட ஒ…

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

பூகம்பம் வரும் முன்
அறியும் தவளை
மனிதன் ?

சேமிக்கும் எறும்பு
மழைக் காலத்திற்கு
மனிதன் ?

நன்றி மறக்காது
வாலாட்டும் நாய்
மனிதன் ?

பசிக்காமல் உண்பதில்லை
விலங்குகள்
மனிதன் ?

பிறந்ததும் உடன்
நீந்திடும் மீன்
மனிதன் ?

அடைகாக்கும் காகம்
குயிலின் முட்டையையும்
மனிதன் ?

காடுகள் வளரக்
காரணம் பறவைகள்
மனிதன் ?

சீண்டாமல் எவரையும்
கொத்தாது பாம்பு
மனிதன் ?

ஓடிடச் சலிப்பதில்லை
மான்
மனிதன் ?

அசைவம் உண்ணாது
அசைவம் ஆகின்றது
ஆடு

கொள்ளையர்களின்
கூடாரமானது
கல்வி நிறுவனங்கள்
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com

http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண்தானம்செய்வோம் !!!!!

குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா

படம்
மதுரை மீனாட்சி மேல்நிலைப் பள்ளியில்
குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா
தலைமை சங்கையாப்பாண்டியன் மதுரை
விமான நிலையக் கட்டுப்பாட்டு அலுவலர்
முன்னிலை திரு .பிரனேஷ் கவிஞர் இரா .இரவி
ஏற்பாடு பொறியாளர் முத்துராஜ்

மதுரை வந்த செந்தமிழன் சீமான் அவர்களுடன் கவிஞர் இரா .இரவி

படம்
மதுரை வந்த செந்தமிழன் சீமான் அவர்களுடன்
கவிஞர் இரா .இரவி

Thaalam --- இலக்கியம் - மாவீரன் நேதாஜியே நீயே பதில் சொல்