ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து சில துளிகள் ! தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி !

31.8.2014  அன்று புத்தகத் திருவிழாவில் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து சில துளிகள் ! 

தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி !

2 மணி நேரம் பார்வையாளர்களை தன பேச்சால் கட்டிப் போட்டு விட்டார் .சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார் .திருக்குறளின் சிறப்பை அடிக்கடி சொன்னார்கள் .தேவாரம் திருவாசகம் ஆத்திச்சூடி பாடல்களை மனப்பாடமாகச்  சொல்லி வியப்பில் ஆழ்த்தினார் . தமிழ்க்கடல் பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் . 


திருக்குறளை படியுங்கள் .குழந்தைகளை படிக்க வையுங்கள். வள்ளுவம் வழி வாழுங்கள் .மகிழ்ச்சியாக சிரித்துக்  கொண்டே வாழுங்கள் .அன்பு செலுத்துங்கள் .மனைவியை மதியுங்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்துங்கள்.தன் குழந்தைகள் மட்டுமன்றி பிற  குழந்தைகளிடமும் அன்பு செலுத்துங்கள் .ஆசிரியர் இரும்பு தடியால்  மாணவன் கண்ணில் அடித்த செய்தி படித்தேன் .ஆசிரியர் மாணவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் . மாணவர்கள் ஆசிரியகளிடம் அன்பு செலுத்த வேண்டும்.

பணக்காரர்கள் பிறருக்கு உதவ வேண்டும் .யாருக்கும் உதவாத பணக்காரர்களை செத்த பிணம் என்கிறார் .பெண்கள் தயவுசெய்து தொலைக்காட்சித் தொடர் பார்க்காதீர்கள் .அதில் நல்ல செய்தி எதுவும் இல்லை .மாமியார் மருமகளை கொலை செய்ய முயலுவது, மருமகள் மாமியாரை கொலை செய்ய முயலுவது ,பழிக்குப் பலி வாங்குவது ,வக்கிரம் ,வன்மம் காட்டி வருகின்றனர் .நீங்கள் நடு வீட்டில் அமர்ந்து கொண்டு  தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்துக் கொண்டு குழந்தைகளை படி படி என்றால் எப்படி படிக்க முடியும்.

குழந்தைகளை இரவு நேரம் கண்  விழித்துபடி படி என்று துன்புத்தாதீர்கள். அதி காலை நேரம்தான் படிக்க உகந்த நேரம் .நான் தினமும் 4 மணிக்கு எழுந்து குயில் சதம் கேட்கும் நேரத்தில் படிப்பேன். நன்கு பதியும் .என் அம்மாவிடம்தான் பாடல்கள் கேட்டு கவிஞனானேன் .    

குழந்தைகளை 5 வயதிற்குக் குறைந்து பள்ளிக்கு அனுப்பாதீர்கள் . 5 வயது வரை வீட்டில் வைத்து நீங்களே சொல்லிக் கொடுங்கள். புட்டிப்பால் புகட்டாதீர்கள் .தாய்ப்பால்  கொடுக்க கொடுக்க  ஊறும் .நம் நாட்டில்தான் பிரதமரே தாய்ப்பால் கொடுங்கள் என்று சொல்ல வேண்டிய நிலை .

யாரும்  குடிக்காதீர்கள் .குடித்தால் யாரும் மதிக்க மாட்டார்கள் ,குடித்து விட்டு தெருவில் விழுந்து கிடப்பவனைப்  பார்த்தால் பார்த்தவனுக்கு குடிக்க மனம் வராது .குடித்தால் நாமும் இப்படித்தான் அவமானப்பட நேரிடும் என்று உணர்ந்து குடிக்க மாட்டான்  .என்று வள்ளுவர் சொல்கிறார் . குடிக்காக செலவிடும் பணத்தில் குடும்பத்திற்கு செலவிட்டுப் பாருங்கள் .மகிழ்ச்சி பொங்கும் .

ஊழல் உழைப்பு பெண்கள் கையில்தான் உள்ளது .கணவன் ஊதியம்  தவிர  கூடுதலாக பணம் கொண்டு வந்தால் கணக்கு கேளுங்கள் .ஏது என்று கேளுங்கள் .கையூட்டு  வாங்கினால் நம் குழந்தைகள் செத்துப் போகும்  என்று சொல்லுங்கள் .உண்மையாக நேர்மையாக வாழ்ந்து பாருங்கள் வாழ்க்கை மிக சுகமாக இருக்கும் .  கையூட்டு வாங்கி வாழ்ந்தால் எப்போது கைது ஆவோம் என்ற பயத்தோடுதான்  வாழ வேண்டும் .முடிந்த அளவிற்கு பிறருக்கு உதவி வாழுங்கள் மனிதநேயத்தோடு  வாழுங்கள் . அவரவர் கடவுளை அவரவர்  வணங்குங்கள் .பிறரை சாடாதீர்கள் .சாதி மத சண்டை வேண்டாம். அன்பு செலுத்துவோம் .

இரண்டு நண்பர்கள் காட்டுக்கு சென்றார்கள் .ஒரு துறவி இருந்தார். அவர் சொன்னார் அங்கே போகாதீர்கள் உயிர்க்கொல்லி என்றார் . நண்பர்கள் மீறி உள்ளே சென்றனர் .தங்க பொற்காசுகள் உள்ள பானை இருந்தது .பார்த்து மகிழ்ந்தனர் .ஒருவன் சொன்னான் இதை கொண்டு சென்றால் மற்றவர்கள்  பிடுங்கி விடுவார்கள் .நான் இதை பார்த்து கொள்கிறேன் . பசிக்கிறது நீ  போய் சாப்பிட்டு விட்டு எனக்கு சாப்பிட வாங்கி வா பிறகு திட்டமிட்டு எடுத்து செல்வோம் .என்றான் .மற்றவன் சென்று சாப்பிட்டு விட்டு நண்பன் சாப்பாட்டில் விசம் கலந்து கொண்டு வந்தான்  .கொண்டு வந்து வைக்க குனியும்போது மறைத்து வைத்து இருந்த தடியால் அடித்தான் .அவன் இறந்தான் .கொன்று விட்டு நஞ்சு கலந்த உணவை உண்டு மற்றவனும்  இறந்தான் .ஆம் பணம் ,பொன் இவையெல்லாம் உயிர்க்கொல்லிதான் .அதிகம் ஆசை வைக்காதீர்கள்.  உண்மையாக நேர்மையாக மனசாட்சிப்படி வாழுங்கள் .மகிழ்ச்சியாக வாழலாம் . .

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி

விறகடுப்பில் அம்மா சுட்ட அப்பம்
இன்றும் என் நினைவில்
அப்பமென  தித்திப்பாய் அம்மா !
கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி

விரல்கள் இல்லாத போதும் 
நம்பிக்கை இருப்பதால் 
வசப்பட்டது எழுத்து !
கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி

பொது இடங்களில் தேவையில்லை இந்த பிணைப்பு 
அறைக்குள் இருக்கட்டும் அணைப்பு !
காமக்கண்களுக்கு தீனியாவது தப்பு !
கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி

தோட்டாவில் பூத்தது புது மலர் 
ஆயுத வியாபாரிகளின் சிந்தையில் 
பூக்கட்டும் மனிதநேய மலர் !
கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி

தட்டுப்பாடும் நீங்கும் 
விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் 
விழிகளில் உள்ளது மின்சாரம் !
கவிஞர் இரா .இரவி !

மின் அஞ்சலில் வந்தது !

மின் அஞ்சலில் வந்தது !
-- 
அன்புடையீர், வணக்கம்.
12வது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் 
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 40வது ஆண்டு நிறைவு விழாவும் 
2014 அக்டோபர் 4,5 ஆம் தேதிகளில் ஜெர்மனியில் நடைபெற உள்ளது.
மாநாட்டிற்கான அறிவிப்பு மடல் இணைப்பில்.

உலகத் தமிழர் பண்பாடு, கலை, கலாச்சார, வாழ்வியல் மேம்பாடு, தமிழ்க் கல்வி போன்றவற்றைப் பற்றிய பதிவுகளாக 

உலகளாவிய தமிழ்க்கல்வி
புலம் பெயர் தமிழர்கள்
தமிழர் சமயமும் வழிபாடும்
தமிழர் நாகரீகமும் தமிழ்க் கலைகளும்
தமிழ் மரபுகள்
தமிழ் வளர்ச்சியின் அறிவியல் மேம்பாடுகள்
உலக நாடுகளில் தமிழர் நிலை
உலகத் தமிழர் வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்கு

ஆகிய கருப்பொருள்களில் பேராளர்கள் கட்டுரைகளை எழுத வேண்டும். 
A4 தாள் அளவில் 10 பக்கங்களுக்கு மிகாமல் ஒருங்குறி(Unicode) எழுத்துருவில் தட்டச்சு செய்த கட்டுரையையும் கடைசிப் பக்கத்தில் உள்ள பேராளர் பதிவுப் பகுதியில் உள்ள தகவல்களையும் imtcgermani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 10.09.2014க்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இணைப்பைப் பாருங்கள்.
நன்றி.

---
மாநாட்டுக் குழு
Conference Program Committee
12th  International Conference Tamil Culture & 40th Anniversary of  IMTC
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், ஐரோப்பிய ஒன்றியம்
International Movement for Tamil Culture, Europe Union
Postfach 2129, 48431 Rheine, Germany.
 
Phone:    0049-597114258                    0049-5211 60523
              0049-15211 317329                 0049-15111 557890
                                     0091-98423 74750
.

முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் ஜூனியர் விகடன் இதழில் எழுதி வரும் மனிதன் மாறி விட்டான்

முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள்  ஜூனியர் விகடன் இதழில்   எழுதி வரும்  மனிதன் மாறி விட்டான் 
(   காதோடுதான் நான் பேசுவேன் ! ) தொடர்  படித்து மகிழுங்கள் !


கட்டுரையில் இருந்து சில துளி  !

  " பேச்சை இசையாகக் கையாளுபவர்கள் இதயங்களில் வாழ்கிறார்கள் .வசையாகக் கையாளுபவர்கள் வசமாக மாட்டிக் கொள்கிறார்கள் ."

பேச்சாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய  வைர வரிகள் .

தொடர் பற்றிய கருத்தை பகிர்ந்து கொள்ள மின்னஞ்சல் 


புலவர் க .தண்டபாணி மடல் .

புலவர் க .தண்டபாணி மடல் .
http://www.eraeravi.com/home/detail.php?id=467&cat=nl

புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்

புத்தகம் போற்றுதும் விமர்சனம்


 

நூல்       : புத்தகம் போற்றுதும்

ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.

எழுத்தாக்கம்

 

கவிஞர் ச. கோபிநாத்

27/12 அம்மாப்பேட்டை முதன்மை சாலை

பாவடி பெண்கள் பள்ளி எதிரில்

சேலம் 636001

பேச 9790231240

மின்னஞ்சல் kavignarsagopinath@gmail.com

வலைப்பூ www.kavivanam.blogspot.com

பக்கம்     : 224 பக்கங்கள்

விலை     : ரூ. 150 /-

வெளியீடு  : வானதி பதிப்பகம், 12, தீனதயாளு தெரு, தி.நகர் சென்னை – 17

 தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.

புத்தகங்கள் அறிவின் திறவுகோல் மட்டுமல்ல, நம் ஆன்மாவை பண்படுத்தும் அற்புத மருந்து. வண்ண மலர்கள் எங்கும் நிறைந்து பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம் போலவே, நல்லெண்ண மலர்கள் எங்கும் நிறைய சுடர்விடும் அறிவுத்தோட்டங்களாக திகழ்கின்றன புத்தகங்கள். இதனை அறிந்தே பண்டைய தீப்ஸ் நகரின் நூலக வாயிலில் “புத்தகம் ஆன்மாவுக்கு மருந்து” என்று பொறிக்கப்பட்டது.

 

எல்லோரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்பதோடு நின்றுவிடாமல், நாம் வாசித்த நல்ல நூல்களை நம் நண்பர்களுக்கும் அடையாளம் காட்டுவது நம் அனைவரின் கடமை. அந்த செம்மையான கடமையை நிறைவேற்றும் பொருட்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு கவிஞர் இரா.இரவி அவர்கள் தொகுத்துத் தந்திருக்கும் நூலே “புத்தகம் போற்றுதும்” ஆகும்.

 

ஹைக்கூ கவிதைகளால் உலகறியப்பட்ட கவிஞர் இரா.இரவி அவர்கள் பல்வேறு இதழ்களிலும் இணையதளங்களிலும் எழுதிய நூல் விமர்சனங்களில் 50 நூல்களின் விமர்சனங்களை  இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளார்.

 

“நாம் வாழும் வாழ்க்கை, பூக்களின் மீது அமரும் வண்டுகளைப் போல் மென்மையாக இருக்க வேண்டுமே தவிர, உயிர்களை வதைக்கும் மற்றொரு மிருகத்தின் வன்மச்சுவடுகளாக இருக்கக்கூடாது“ என்கிறது ஓர் பொன்மொழி. திறனாய்வு என்ற அடிப்படையில் படைப்பாளிகளை காயப்படுத்தாமல், மென்மையான வார்த்தைகளால் விமர்சித்திருக்கும் நூலாசிரியரின் நடை பாராட்டுக்குரியது. இதனையே நூலாசிரியர் தன் அணிந்துரையில் “விமர்சனம் என்ற பெயரில் படைப்பாளியை காயப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் போலப் படைப்பாளியை மயிலிறகால் வருடுவது போலவே என்னுடைய விமர்சனம் இருக்கும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார். கொண்ட குறிக்கோளில் உறுதியாக இருக்கும் நூலாசிரியரின் பண்பு சிறப்பு.

 

தான் எடுத்துக் கொண்ட நூல்களிலுள்ள சிறப்புகளை முதலில் கூறி, பின் குற்றங்களை மென்மையாக சுட்டிக்காட்டி படைப்பாளிகளின் மனதை விமர்சன மயிலிறகால் வருடியுள்ளார். திறனாய்வாளர் என்ற நிலையிலிருந்து மட்டும் நூல்களை விமர்சிக்காமல், சகபடைப்பாளி என்ற முறையிலும் விமர்சித்திருக்கும் நட்பு ரீதியிலான விமர்சன நடை எல்லோரும் ஏற்கும்படி இருக்கிறது.

 

      நூலில் உள்ள சிறப்பம்சங்களை பட்டியலிட்டிருக்கும் கவிஞர் இரா.இரவி அவர்கள், நூலாசிரியர்களின் சிறப்பு பண்புநலன்களையும் அவர்களுடனான தன் நட்பையும் பதிவு செய்திருப்பது மற்றுமோர் சிறப்பு. நூலிலுள்ள கருத்துக்களை நினைவுகூறும் சமகால நிகழ்வுகளையும் எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டியிருப்பது, நூலாசிரியர்களின் சமூகப்பார்வையையும் கவிஞர் இரா.இரவி அவர்களின் திறனையும் படம்பிடித்துக்காட்டுகிறது.

 

      கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என அனைத்து வகை நூல்களையும் திறனாய்வுக்கு எடுத்திருக்கும் கவிஞர் இரா.இரவி அவர்களின் நூல் தேர்வு, ஆய்வாளர்களுக்கு விருந்தாகவும், வாசகர்களுக்கு தகவல் பெட்டகமாகவும் திகழ்கிறது. மலர்கள் பல சேர்ந்து மாலையாவதைப் போல, பல்வகை நூல்களை ஒரு சேர திறனாய்வு செய்து “புத்தகம் போற்றுதும்” நூலை கதம்பமாக படைத்தளித்துள்ளார்.  “இனிய நண்பர் கவிஞர் இரா.இரவியின் இந்த நூலை படித்து முடித்ததும் மொத்தத்தில் ஒரு நந்தவனத்தில் நடை பயின்ற உணர்வே நெஞ்சில் எழுகின்றது” என்று நூலின் அணிந்துரையில் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அய்யா அவர்கள் குறிப்பிட்டிருப்பதே இதற்கு சான்று.

 

      50 நூல்களையும் வாசிக்கத் தூண்டும் வாசிப்பின் திறவுகோலாக விளங்குவதே இந்நூலின் தனிச்சிறப்பு. நூலாசிரியர் தான் விமர்சித்த நூல்களின் விபரங்களையும் ஒவ்வொரு நூலுக்கும் தந்திருப்பின் வாசகர்களுக்கு மற்றுமோர் பரிசாக அமைந்திருக்கும் “புத்தகம் போற்றுதும்” நூல். புத்தகங்களை போற்றுவோம் ; புதிய உலகம் படைப்போம்.

குறிப்பு ; மதுரை புத்தகத் திருவிழாவில் அறிவுக்கடல் பதிப்பகம் கடை  எண் 148 இல் புத்தகம் போற்றுதும் நூல் கிடைக்கும் . . 

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

சனி, 30 ஆகஸ்ட், 2014

குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் உரையில் இருந்து சிறு துளிகள் . கவிஞர் இரா .இரவி !

30.8.2014 மாலை மதுரை புத்தகத் திருவிழாவில் குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் சிறப்புரையாற்றினார்கள் .புகைப்படம் இனிய நண்பர் கவிஞர் ஞா சந்திரன் கைவண்ணத்தில் .

குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் உரையில் இருந்து சிறு துளிகள் .  கவிஞர் இரா .இரவி !

 புத்தக வாசிப்பை சுவாசமாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி  அறிஞர் அண்ணா ,பகத்சிங் ஆகியோரின் புத்தக வாசிப்பு ஆர்வம் பற்றியும் ,லெனின் நூல் எழுதிட பட்ட துன்பம்  பற்றியும் , எடிசன் செய்த முயற்சிகள் பற்றியும் , ஆப்ரகாம் லிங்கன் அடைந்த தோல்விகள் செய்த சாதனைகள் பற்றியும் விரிவாக எடுத்து இயம்பினார்கள் .

ஒரு  துறவி ஓலைச்சுவடிகளுடன்   படகில்  சென்ற போது படகோட்டி' பாரம் அதிகமாகி விட்டது கொஞ்சம்  ஓலைச்சுவடிகளை தண்ணீரில் போட்டு விடலாம்  ' என்ற போது ஓலைச்சுவடிகளை பத்திரமாக அக்கரை கொண்டு சென்ற மடத்தில் சேர்த்திடு, நான். உயிரோடு இறந்தால் வந்து சேருகிறேன் என்று சொல்லி விட்டு  படகில்   இருந்து தான் குதித்தார் துறவி  .தன் உயிரினும் மேலாக புத்தத்தை  நேசித்தவர்கள் உண்டு .

ஓலைச்சுவடிகளை ஓடி  ஓடி  சேர்த்த தமிழ் தாத்தா உ .வே  சாமிநாத அய்யரையும் நினைவு கூர்ந்தார் .குன்றக்குடி  மடத்தில் இருந்து சிலப்பதிகார  ஓலைச்சுவடிகள் பெற்ற  வரலாறும் உண்டு .

மிகச் சிறந்த சிந்தனையாளர் ,நேர்மையான அதிகாரி ,சிறந்த எழுத்தாளர் ,சிறந்த பேச்சாளர் முது முனைவர் வெ.இறையன்பு அவர்களின் சிந்தனையான ' வாசற்படி,  தள்ளுபடி,  படி, படி, உருப்படி' என்ற கருத்தை மேற்கோள் காட்டி  மிக விரிவாக எடுத்துக்கூறி வாசகர்களின் கரவொலியைப் பெற்றார்கள்.

மனிதநேயம் வேண்டும் ,மத நல்லிணக்கம் வேண்டும் .இரக்க சிந்தனை வேண்டும்.மனிதன் மனிதனாக வாழ துணை புரிவது நூல்கள்.

மின்மினி விழா அழைப்பிதழ்

மின்மினி விழா அழைப்பிதழ்

புத்தகத் திருவிழாவில் இன்று

புத்தகத் திருவிழாவில் இன்று

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 9 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா அழைப்பிதழ் !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த  மதுரையில் 9 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா அழைப்பிதழ் !

 குடும்பத்துடன் வந்து நூல்கள் வாங்கி நிகழ்ச்சிகளை  கண்டு களியுங்கள் 

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவிபடித்ததில் பிடித்தது ! நன்றி தினமலர் நாளிதழ்

படித்ததில் பிடித்தது !    நன்றி  தினமலர் நாளிதழ்  30.8. 2014

இன்று நாகரீகக் கோமாளி' என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள் !   முனைவர் நிர்மலா மோகன் ! 
தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும் மகான் கிருஷ்ணன். தமிழர்கள் தங்கள் துயரத்தைச் சில நிமிஷங்களேனும் மறக்கும் படியாகச் செய்யும் பெரிய உபகாரியான கிருஷ்ணனை மதிக்காதவர்கள் நாட்டின் பொது நன்மைக்குப் பாதகம் நினைப்பவர்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
கிருஷ்ணன் தமது சொந்த வாழ்க்கையிலும் பரம ரசிகர் என்பது மதுரத்தைத் தோழியாகக் கொண்டதே தெளிவாகக் காண்பிக்கிறது. கிட்டப்பாவுக்குச் சுந்தராம்பாள் வாய்த்தது போல, கிருஷ்ணனுக்கு மதுரம் வாய்த்திருக்கிறார். இல்லை; தப்பிதம். சுந்தராம்பாளுக்குக் கிட்டப்பா வாய்த்தது போல மதுரத்துக்குக் கிருஷ்ணன் வாய்த்திருக்கின்றார். இது தமிழ்நாட்டின் பாக்கிய-மாகும்” - 1943-ம் ஆண்டிலேயே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனையும் டி.ஏ.மதுரத்தையும் இப்படி நெஞ்சாரப் புகழ்ந்து எழுதியவர் 'அக்கிரகாரத்து அதிசய மனிதர்' எனச் சிறப்பிக்கப்பெறும் அறிஞர் வ.ரா.'கலைவாணர் என்.எஸ்.கே.' என்று தமிழக மக்களால் போற்றிப் புகழப்பெற்ற என்.எஸ்.கிருஷ்ணன் பெருமித உணர்வோடு தமக்குத் தாமே சூட்டிக்கொண்ட பட்டப் பெயர் 'நாகரீகக் கோமாளி' என்பதாகும்.''நாட்டுக்குச் சேவை செய்யநாகரீகக் கோமாளி வந்தான் அய்யா:ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி நல்லஅழகான ஜதையோடு வந்தான் அய்யா!”
என்று தமது சொந்தப் படமான 'நல்ல தம்பி'யில் தம்மைப் பற்றிய கொள்கை முழக்கத்தை ஒரு பாடலின் வாயிலாக வெளியிட்டார் கலைவாணர். ஒரு முறை சென்னை வானொலியில் உரையாற்ற நேர்ந்த போதும் அவர் 'என் கடன் களிப்பூட்டல்' என்றே குறிப்பிட்டார். தம் தனி வாழ்விலும் சரி, திரையுலக வாழ்விலும் சரி கலைவாணர் நகைச்சுவை உணர்வுக்குத் தந்த இடம் முக்கியமானது;
முதன்மையானது.கலைவாணரின் நகைச்சுவை உணர்வுக்குக் கட்டியம் கூறும்
சில சுவையான நிகழ்ச்சிகள்
சுவை 1:
உண்மையில் என்.எஸ். கிருஷ்ணனுக்கும், நாகம்மைக்கும் நாகர்கோயிலில் ஏற்கனவே திருமணம் நடந்திருந்தது. ஆனால் டி.ஏ. மதுரத்திடம் தமக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறி அவரது கரங்களைப் பற்றினார் கலைவாணர். இந்தப் பொய் மிக விரைவிலேயே அம்பலமாகி மதுரம், கலைவாணருடன் சண்டை போட்டார்; “ஏற்கனவே உங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?” என்று கலைவாணரைக் கோபமாகக் கேட்டார். அப்போது கலைவாணர் சிரித்துக் கொண்டே சொன்ன பதில்:“ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தைச் செய் என்பார்கள். நான் எனக்குக் கல்யாணம் ஆகவில்லை என்ற ஒரே ஒரு பொய்யைத்தானே சொன்னேன்?”
சுவை 2:
'மதுரை வீரன்' திரைப் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி:'அத்தே!' என்பாள் அரசிளங்குமரி (பானுமதி). அக மகிழ்ந்து போவார் மதுரை வீரனின் தாய் (டி.ஏ.மதுரம்); அப்போது இரண்டே சொற்களில் தமது விமர்சனத்தைச் சொல்லுவார் மதுரை வீரனின் தந்தையாக வரும் கலைவாணர்: “நீ செத்தே!” திரை அரங்கமே இதைக் கேட்டுச் சிரிப்பில் அதிரும்.இப்படத்தில் பிறிதொரு காட்சியில் கலைவாணரும் மதுரமும் வைகை ஆற்றைக் கடந்து மதுரை மாநகருக்குச் செல்வார்கள். அப்போது இருவருக்கும் இடையே நிகழும் சுவையான உரையாடல்: “என்ன மச்சான்! வைகையிலே தண்ணியே இல்லை?”“வை அண்டான்னானா? குண்டான்னானா? 'வை', 'கை'ன்னு தானே சொன்னான்?”
சுவை 3:
1956-ல் இந்தியப் பேசும் படத்தின் 25-ம் ஆண்டு விழா சென்னையில் நடந்தது.“லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன்!” என்று கலைவாணர் பேச்சைத் தொடங்கினார்.'கலைவாணர் ஆங்கிலத்தில் உரையாற்றப் போகிறார்' என்று பலரும் நினைத்தனர்.“அவ்வளவுதான் எனக்குத் தெரிந்த இங்கிலீஷ்” என்று கூறிவிட்டு தமிழில் பேசினார்.
சுவை 4:
ஒருமுறை என்.எஸ்.கிருஷ்ணன் கல்கியிடம் “எனக்குக் கதை எழுத வேண்டும் என்று ஆசை” எனச் சொன்னார்.“அதற்கு நான்கு 'மை' வேண்டுமே?” என்றார் கல்கி.“என்னென்ன கலர்களில்?” - இது என்.எஸ்.கிருஷ்ணன்.“பேனா மை, திறமை, தனிமை, பொறுமை” எனக் கல்கி சொன்னதும் உடனடியாக, “நீங்கள் சொன்னது மிக அருமை…” என்றார் என்.எஸ்.கிருஷ்ணன்!
சுவை 5:
என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தச் சரித்திர நாடகத்தில் வந்த சக்கரவர்த்தி, தமக்கு எந்தெந்த ராஜாக்கள் கப்பம் கட்டினார்கள் என்று மந்திரியைக் கேட்டார். “வங்க ராஜா தங்கம் கட்டினார்; கலிங்க ராஜா நவமணிகள் கட்டினார்” என்றெல்லாம் அடுக்கிக் கூறினார் மந்திரி. உடனே சக்கரவர்த்தி, “சோழராஜா என்ன கட்டினார்?” என்று கேட்க, வசனம் மறந்த மந்திரி விழிக்க, வேலைக்காரனாக நின்ற கலைவாணர் “வேஷ்டி! வேஷ்டி!” என்று சொல்லி விட்டுப் போக, அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்தனர்.திரைப்பட ஆய்வாளரான அறந்தை நாராயணன் 'நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்' என்ற கலைவாணரைப் பற்றிய நுாலின் முடிவில் எழுதியிருக்கும் வரி இது:
“1936 முதல் 1957 வரை லட்சக்கணக்கான தமிழர்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்து கொண்டிருந்த கலைவாணர் ஆகஸ்ட் முப்பதாம் நாள் முற்பகல் பதினொரு மணி பத்து நிமிடத்தில் இருந்து, தான் சிரிப்பதை நிரந்தரமாக நிறுத்திக் கொண்டார்”.அனைவரது நெஞ்சங்களையும் நெகிழச் செய்யும் ஓர் அரிய தற்செயல் நிகழ்வு; ஒப்புமை; “பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலமான போது அவருக்கு வயது 29; பாரதியார் காலமானது அவரது 39-ஆவது வயதில்; கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனோ 49-ம் வயதில் காலமானார்.
தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். நகைச்சுவைக்கு இலக்கியமாகவும் இலக்கணமாகவும் வாழ்ந்த கலைவாணரை சிறப்பிக்கும் விதத்தில் அவரது பிறந்த நாளை (நவம்பர் 29) 'நகைச்சுவை நாள்' என்று அறிவிக்கலாமே!
-முனைவர் நிர்மலா மோகன்,
எழுத்தாளர்
94436 75931
-- 

.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

மதுரையில் நடந்த எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் மகள் திருமண விழா புகைப்படங்கள் ! இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் சோமு கை வண்ணத்தில் .

மதுரையில் நடந்த எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் மகள் திருமண விழா புகைப்படங்கள் !

இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் சோமு கை வண்ணத்தில் .

மதுரையில் நடந்த எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் மகள் திருமண விழா புகைப்படங்கள் ! இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் சோமு கை வண்ணத்தில் .

மதுரையில் நடந்த  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் மகள் திருமண விழா புகைப்படங்கள் !

இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் சோமு கை வண்ணத்தில் .

நடிகர் திரு. சிவகுமார் ,திருமதி சிவகுமார் ,  திருக்குறள்  செம்மல் மணி மொழியன் ,தமிழ்த் தேனீ இரா .மோகன் ,கவிஞர் இரா .இரவி, பட்டிமன்ற இராஜா ,இயக்குனர் சமுத்திரக்கனி ,திருச்சி  சந்தர் , கவிஞர் கருப்பையா . கவிஞர் அசோக்ராஜ் ,நெல்லை பாலு, எழுத்தாளர் கர்ணன் ,உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

முதல் நாள் நடந்த திருமண வரவேற்பு   விழாவில் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

செய்தி புகைப்படம் வெளியிட்ட மதுரை மணி ஆசிரியர் திரு சொ.டயஸ் காந்தி அவர்களுக்கு நன்றி .


‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : பேராசிரியர் ,கவிஞர் மித்ரா !

‘புத்தகம் போற்றுதும்’

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : பேராசிரியர் ,கவிஞர் மித்ரா !

வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.
*****
விமர்சன வேள்வி
*****
‘புத்தகம் போற்றுதும்’ என்னும் தலைப்பில் 50 நூல்களின் விமர்சனங்களை  இரா. இரவி தொகுத்தளித்துள்ளார்.  விமர்சனம் என்பதும் சீரிய நேரிய ஆய்வே.  சமன் செய்து சீர்தூக்கும் துலாக்கோல் போல் நடுநிலையில் இருந்து செயல்பட வேண்டும்.  இவரது விமர்சனம் நடுநிலையில் அமைந்துள்ளதை அறியலாம்.
இந்நூலில் ஐம்பது நூல்களின் விமர்சன வேள்வி நூலாசிரியரால் நிகழ்த்தப் பெற்றுள்ளது.  இதில் மூதறிஞர்கள் மூவர், முதுமுனைவர் ஒருவர், பேராசிரியர்கள் நால்வர், முனைவர்கள் ஒன்பதின்மர், எழுத்து வேந்தர், சொல் வேந்தர், கவி வேந்தர் என வேந்தர்கள் மூவர், கவிஞர்கள் பதினாறு பேர், கவிதையால் பேறு பெற்றவர்கள் அறுவர், கலைமாமணி விருது பெற்றவர் ஒருவர், மூத்த பத்திரிகையாளர் ஒருவர், ஆளுமையானவர் ஒருவர், பொறியாளர் ஒருவர், வெற்றியாளர் ஒருவர், டாக்டர் ஒருவர், ஈழத்து எழுத்தாளர் ஒருவர், ஆட்சியர் ஒருவர், சிந்தனையாளர் ஒருவர், கவிமுரசு ஒருவர் என ஐம்பதின்மர் படைப்புகள் இடம்பெற்று விமர்சனம் நிகழ்த்தப் பெற்றுள்ளன.
இனி நூல்களைப் பற்றிய விமர்சனங்கள் :
மூதறிஞர் தண்டபாணி தேசிகர் :  ‘திருக்குறள் அமைப்பும், அழகும்’ என்னும் நூலை யாத்துள்ளார். அதில் திருக்குறளின் பெருமையப் பறைசாற்றியுள்ளார்.  அதில் அந்நூலுக்குரிய பெயர்க் காரணம், நூல் அமைப்பு ஆகியவற்றை ஆராய்ந்துள்ள பாங்கு கண்டு வியக்கலாம்.  இதற்காக உலகத் தமிழ் மக்கள் அனைவரும் அவரை வணங்கலாம்.
மூதறிஞர் இரா. இளங்குமரனார் :  இவர் திருக்குறள் என்னும் நூலை யாத்துள்ளார்.  அதில் அவர் திருக்குறளின் பொருள் விளக்கம், தவம், வாய்மை, நட்பு இவற்றையெல்லாம் நூலில் விளக்கமாக பேசியுள்ளதைக் கொண்டு நூலை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் எனலாம்.
மூதறிஞர் ம.ரா.போ. குருசாமி :  ‘மூவா நினைவுகள்’ என்னும் நூலை இயற்றி ஆசிரியர்-மாணவர் உறவு பற்றி குறிப்பிட்டுள்ளார்.  மு.வ.-வை புரவலராய், நண்பராய், தாய், தந்தையாய், குருவாய், ஒழுக்க சீலராய், வாழ்ந்து காட்டியவர் என்றார்.  பேச்சைக் குறைத்து – உழைப்பைப் பெருக்குவீர் என்ற மு.வ.-வின் உயர்ந்த கருத்துக்களை நூல் முழுவதும் காணலாம்.  குறள் வழி வாழ்ந்தவர் என்றும் குறிப்பிட்ட நூலாசிரியரின் கருத்தை மக்கள் அனைவரும் அறிய விமர்சனம் செய்துள்ள இரா. இரவிக்கு வாழ்த்துக்கள்.
முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.  :  இவர் எழுதியுள்ள நூல் ‘அவ்வுலகம்’.  இதில் மூட நம்பிக்கையை எள்ளி நகையாடும் வகையில் இறந்தவர் நெற்றியில் காசு வைப்பது மூடப்பழக்கம், மரணம் பற்றிய பயம் போக்கும் நாவல் இது. குழந்தையிடம் அன்பு செலுத்துவது அவசியம் என்னும் கருத்துக்களைப் பெற வைத்த ஆசிரியருக்கும், விமர்சகருக்கும் நன்றி.
பேராசிரியர் இரா. மோகன் :  இவரது 100வது நூல் ‘கவிதைக் களஞ்சியம்’.  20 கவிஞர்களின் 20 நூல்களைப் படித்து 20 கட்டுரைகள் எழுதியுள்ளார்.  கவிஞர் முடியரசன், கவிஞர் சுரதா, மீரா, அப்துல் ரகுமான், தமிழன்பன், வாலி, மு. மேத்தா, பாலா, தாராபாரதி, கந்தர்வன், காசி ஆனந்தன், முத்துலிங்கம், இறையன்பு, பத்மாவதி தாயுமானவர், தங்கம் மூர்த்தி, வெற்றிச் செல்வம், மு.முருகேஷ் ஆகியோரது கவிதைகளைச் சுட்டி நூலை வாங்கும் ஆர்வத்தைத் தூண்டிய விமர்சகரை பாராட்டியே ஆக வேண்டும்.
பேராசிரியர் ஜேம்ஸ் :  இவர் எழுதிய நூல் ‘ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும்’ என்பதாகும். திருக்குறள் உலக நூல்களின் சிகரம்.  இதனைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்னும் கருத்தைச் சொன்ன இவரை உலகோர் பாராட்டி மகிழ வேண்டும்.
பேராசிரியர் பொன் சௌரிநாதன் : இவர் ‘மு. வரதராசன்’ என்னும் தலைப்பில் நூல் யாத்துள்ளார்.  நூலில் மு.வ.-வின் ஆளுமையின் வரலாறு, அவரது படைப்புகள் பற்றிய ஆய்வு, அவரது குண நலங்கள், இலக்கிய ஆளுமை ஆகியவற்றை தெளிவுபடுத்தியுள்ளதை விமர்சகர் புலப்படுத்தி உள்ளார்.
பேராசிரியர் அருணன் :  இவரது 16 கட்டுரைகளை உள்ளடக்கிய நூல்.  மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை, சோதிடம் என்பது மூட நம்பிக்கை, அதனைக் கணினியோடு ஒப்பிடுவது தவறு என்னும் பகுத்தறிவுச் சிந்தனையை மக்களுக்குப் பரப்பும் வகையில் அமைந்த நூல் என்கின்றார் விமர்சகர்.
முனைவர் மு. இராசாராம் : ‘கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள்’ என்னும்  இந்நூல் கல்வியாளர்கட்கும், மாணவர்கட்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது என்றால் அது உண்மையே.
முனைவர் கு. ஞானசம்பந்தன் :  இவரது நூல் ஜெயிக்கப் போவது யாரு? நீ தான்! என்பதாகும்.  25 தலைப்புகளில் நகைச்சுவைத் ததும்பும் நல்ல, எளிய நடையில் சிந்திக்க வைக்கிறார் என்பதனை நூலைப் படிக்கத் தூண்டும் வகையில் விமர்சகர் விமர்சித்துள்ளார்.
முனைவர் இளசை சுந்தரம் :  இவரது நூல் “இன்று ஒரு தகவல்”.  இதில் புதினா இலை, நொச்சி இலை – இவற்றின் மருத்துவக் குறிப்புகளைத் தந்துள்ளார்.  சிரிப்பின் விஞ்ஞானத் தகவலையும் குறிப்பிட்டுள்ளதை விமர்சகர் திறம்பட குறிப்பிட்டுள்ளார்.
முனைவர் கி.ர. அனுமந்தன் :  இவர் ‘நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை’ என்னும் நூல் யாத்துள்ளார். காந்தியடிகள் மீதும் பாரதியார் மீதும் பற்றுக்கொண்டு வாழ்ந்தார்.  தேசப்பற்று, தமிழ்ப்பற்று, தமிழர் மீது பற்றுக் கொண்டிருந்தார்.  அவரது வரலாறு அறிய விரும்புவோர்க்கு இது நல்ல நூல்.
முனைவர் ம.பெ. சீனிவாசன் :  இவர் ‘வண்டாடப் பூ மலர’ என்னும் நூலை எழுதி உள்ளார்.  காதலைப் பற்றிய உயரிய கணிப்புப், இயற்கையை நேசிக்கும் உயரிய பண்பை, நாகரிகத்தை, உலகோரை உறவாகக் கொள்ளச் சொல்லும் மனித நேயத்தையும் நூலில் காண முடிகின்றது.
முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி :  இவர் ‘பெண்ணிய நோக்கில் கம்பர்’ என்னும் நூலைப் படைத்துள்ளார். கம்பராமாயணத்தை அறிவுக்கண் கொண்டு வாசிக்க வேண்டும் என்கின்றார்.
முனைவர் சு. சங்கரி :  இவர் ‘இலக்கியச் சங்கமம்’ என்னும் நூலை எழுதியுள்ளார்.  இலக்கியங்களில் காணலாகும் இயற்கைக் காட்சிகளைப் பாடல் வரிகளோடு தந்துள்ளார்.  இலக்கியங்களைப் படிக்க தூண்டும் நூல் என்கின்றார் இரா. இரவி.
முனைவர் அ. கோவிந்தராஜீ :  இவர் ‘கவிதைத்தேன்’ என்னும் நூலுக்குச் சொந்தக்காரர்.  நூலைப் படித்தால் மாணவர்கள் பெறும் பயன், கல்வியின் மேன்மை, ஒழுக்கம் ஆகியவற்றோடு காந்தியடிகள், காமராசர் ஆகியோரையும் பாடுபொருளாக்கிய திறனை விமர்சகர் தக்க கவிதைகள் கொண்டு விமர்சித்துள்ளார்.
முனைவர் நிர்மலா மோகன் :  இவர் ‘சங்கச் சான்றோர் ஆளுமைத் திறன்’ என்னும் நூலில் குறுந்தொகையில் உள்ள உலக நிகழ்வுகளை பெற்ற பாடலின் விளக்கம் தமிழரின் ஆளுமைப் பெருமைகளைச் சொல்லும்.  மனித நேய மாண்பினைச் சொல்லும் பாங்கி நேர்த்தியானது.  கல்வியின் சிறப்பு, கவிஞர்கள் செயல்பட வேண்டியதைக் குறிப்பிட்டுள்ள விதம் மிகவும் நன்று,.
இனி கவிஞர்களைப் பற்றிய விமர்சனங்களை அறிவோம்.
கவிஞர் மீரா :  இவரது கவிதை நூல் ‘ஊசிகள்’ அமைச்சர், மேயர் யாராக இருந்தாலும் தவறுகளை ஊசிகள் கொண்டு குத்துவது போல் கவி யாத்துள்ள திறம் காணலாம்.
‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் : இவர் ‘கண்ணீர்த் துளிகளுக்கு முகவர் இல்லை’ என்னும் நூலை யாத்துள்ளார். கொள்கைப் பிடிப்பும், கோட்பாடும் கொண்டவர் இவர்.  ஈழப்படுகொலையையும், நிலவு பற்றியும், அரசு பற்றியும் அறிவார்ந்த சிந்தனையைப் புலப்படுத்தி உள்ளார்.
‘கவி வேந்தர்’ மு. மேத்தா :  இவர் எழுதிய நூல் ‘ஒரு வானம் இரு சிறகு’.  இந்நூலில் ஹைக்கூ சாயலில், 10-க்கு மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார்.  இன்றைய அரசியல்வாதிகளின் நிலைபாடு, நீதித்துறையின் நேர்மை இன்மை, இன்றைய கல்விநிலையின் அவலம், மரங்களின் நன்மை, பண்பாடு, மதுவின் கொடுமை, வள்ளுவர் பற்றிய கவிஞரின் கருத்து, பாரதி பற்றிய சிந்தனை ஆகியவற்றை இவரது நூலில் காணலாம்.
கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் :  இவர் ‘ஒரு நாடும் ஒவ்வொரு நாளும்’ என்னும் நூலை எழுதியுள்ளார்.  38 தலைப்புகளைல் புதுக்கவிதை, மரபுக் கவிதை ஆகியவற்றை எழுதியுள்ளார்.  கவிதைகளில் நூலாசிரியர் தமிழ்ப் பற்று, அன்பின் மேன்மை, அரசியல் அவலங்களை, கடவுளைப் பற்றிய அவரது கணிப்பு ஆகியவற்றை அறியலாம்.
வித்தகக் கவிஞர் பா. விஜய் : இவரது நூல் ‘நட்பின் நாட்கள்’ என்பதாகும்.  62 கவிதைகள் அடங்கிய நூல் இது.  இதில் நண்பன், மதிய உணவு, பள்ளி, கல்லூரி பற்றிய செய்திகள்.  ஆசிரியர் பற்றிய செய்திகள் நூலில் உள்ளன.
கவிஞர் அறிவுமதி :  இவர் மழைப் பேச்சு என்னும் நூலில் மழை, உணர்ச்சிகள், நிலவான காதலி, அருவி, காதல் போன்ற பாடுபொருளோடு மனித நேயத்தையும் இடம் பெறச் செய்துள்ளார்.
கவிஞர் தங்கம் மூர்த்தி : இவரது நூல் ‘மழையின் கையெழுத்து’ இதில் காதல், முதலுதவிப் பெட்டி, கொசுத் தொல்லை, நினைவு ஊர்ச்சாலைகள், லஞ்சம், பட்டாம்பூச்சி, வாழ்வியல் தத்துவம், இயற்கை ஆகியவற்றைக் காணலாம்.
கவிஞர் நெல்லை ஜெயந்தா : இவரது கவிதை நூல் நிலாவானம்.  இதில் பத்திரிக்கைகள், கட்சிகளின் செயல், மகாகவி பாரதியார், தாயன்பு, சாமியார், தந்தை பெரியார், தொலைக்காட்சி, செல்போன் கோபுரம், காதல், ஸ்திரி தொழிலாளி, புத்தர் சிலை, குருவிகளின் நிலை இவை பாடுபொருளாக்கப்-பட்டதை அறியலாம்.
கவிஞர் லிங்குசாமி : ‘லிங்கூ’ என்னும் இவரது நூலில் பனைமரம், மயில், பிச்சைக்காரன், குருவிகள், தேர், இளநீர் வியாபாரி, ஸ்திரி தொழிலாளி, புத்தர், காக்கையின் சபதம், காதல் இவற்றை ஹைக்கூ ஆக்கியுள்ளார். ஹைக்கூ இவருக்கு பிடிபடவில்லை, 3 வரி மட்டும் ஹைக்கூ அல்ல.  வருந்துகிறேன் விமர்சிக்க.
கவிஞர் புதுயுகன் : இவரது நூல் ‘மடித்து வைத்த வானம்’.  சுனாமி, சமுதாயம், இயற்கை, அரசியல் அவலம் இவற்றைப் பாடுபொருளாக்கிய விதம் பாராட்டுக்குரியது.
கவிஞர் கவிமுகில் :  இவரது நூல் ‘கவிமுகில் கவிதைகள்’, பண்பாடு குறையக் காரணம் சி.டி. ஸ்கேன்கள், திருநங்கை, தொலைக்காட்சி தொடர்களின் நிலைபாடுகள், சாமி, குழந்தை, தன்னம்பிக்கை இவற்றைக் கவிதைகளில் கொண்டு வந்த திறம் இவற்றை காணலாம்.
கவிஞர் வசீகரன் :  இவரது கவிதை நூல் ‘மரவரம்’.  இந்நூலில் மரம், வேப்பமரக்காற்று, தென்னம்பிள்ளை, போதி மரம், மரத்தடி நிழல், படரும் கொடி, அத்தி மரம், இலை, ஈழத்தமிழர்கள், குடில், மர நாகரிகம் ஆகியவை ஹைக்கூகளாக்கப்பட்டுள்ள கவிக்கு இயற்கை தந்த வரம் எனலாம்.
கவிஞர் கன்னிக்கோவில் ராஜா :  இவர் ‘வன தேவதை’ என்னும் நூலை இயற்றியவர்.  சூழல் சிதைவு, தமிழீழம், பிள்ளையார் வெண்சுருட்டு, கந்தக நெடி, மலர்கள், அம்மா, மழைத்தூறல், அணு உலை ஆகியவற்றை கன்னிக்கோவில் ராஜா பாடுபொருளாக்கி சிந்திக்க செய்கிறார்.
கவிஞர் விஜயலெட்சுமி மாசிலாமணி :  இவர் ‘கவிதை பாட ஆசை’ என்னும் இந்நூலை எழுதியுள்ளார். கவிதைக்கு இலக்கணம் தேவையில்லை என்னும் இவர், இலை பற்றிய கவிதை, படிப்பு, பெண்ணுரிமை, படைப்பாளி இவை கவிதைக்குப் பாடுபொருளாக்கப் பெற்றுள்ளதைக் கண்டு மகிழலாம்.
கவிஞர் ஏகலைவன் :  இவர் ‘இப்படிக்குத் தோழன்’ என்னும் புதுக்கவிதை  நூலை இயற்றியுள்ளார். தோழமையுணர்வு, அதன் மகத்துவம், தோழமை என்பனவற்றை நூலில் நூலாசிரியர் நிறம்ப பேசியுள்ள திறம் காணலாம்.
கவிஞர் மன்னை பாசந்தி :  இவரது நூல் ‘மின்னல் துளிப்பா’.  கனவு, திருநங்கைகள், சாமியார், வாழ்க்கை, சாதிக் கலவரம், குடிப்பழக்கம், ஈழப்படுகொலை, சமுதாய முன்னேற்றம் போன்றவற்றை ஹைக்கூகளில் பாடுபொருளாக்கியுள்ளதை அறியலாம்.
கவியருவி ம. இரமேஷ் :  இவரது நூல் ‘ஓராயிரம் சென்ரியூ’.  நீதி தேவதை, நீதிமன்றங்கள், மருத்துவமனை, காதல் கவிதைகள், கூரைவீட்டுக்காரன், முருகன்-மயில், காகிதக்கப்பல்கள், செவ்வானம், மின்சாரத் துடிப்பு, முதுகலைப் பட்டதாரி, சீட்டு, அரசியல் போன்ற பாடுபொருட்கள் கவிதைகளாக்கப்படுவதை நூலில் காணலாம்.
கவிஞர் ச. கோபிநாத் :  இவரது நூல் குழந்தைகளைத் தேடும் கடவுள்.  அடுக்கக வாழ்க்கை, பெண்களின் திறமைகள், காதல், மூட நம்பிக்கை, நெகிழிப்பைகளால் விளையும் தீமை, குழந்தைகளின் செயல்கள், வீடுகள், நிலா, மூட நம்பிக்கை, திரைப்பாய் என்பவை பாடுபொருள்களாக்கப்பட்டு உள்ளன நூலில்.
கவிஞர் கவிவாணன் :  இவர், ‘சிறகு முளைத்த பூக்கள்’ என்னும் நூலை எழுதியுள்ளார்.  அரசு, பள்ளி செல்லும் பையன், கவிதை, மின்மினிகள், மனித இரத்தம், குஜராத், பிரிவு, அரசு, காதலியின் அழகு புல்லாங்குழலில் அமர்ந்த வண்ணத்துப்பூச்சி போன்றவை நூலில் கவிதைகளாக்கப்பட்டுள்ள திறம் அறியலாம்.
கவிதாயினி யாத்விகா :  இவர் உனக்காகவே மயங்குகிறேன் என்னும் நூலை யாத்தவர்.  இப்புதுக்கவிதை நூலில் ஒரு பெண்ணே காதலை இயல்பாகவும் வெளிப்படையாகவும் கவித்துவமாகவும் பேசுவதோடு விஞ்ஞானத்தையும் கவிதைகளில் ஊடாடவிட்டது சிறப்பாக உள்ளது.
கவிஞர் நீலம் மதுமயன் :  இவர் படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை என்னும் நூலை யாத்தவர்.  இந்நூல் நூலாசிரியர் காமராஜர் மீது கொண்ட ஈடுபாட்டை எடுத்துரைக்கிறது.
ஆளுமையாளர் லேனா தமிழ்வாணன் :  இவர், நேரம் நல்ல நேரம் என்னும் நூலை 27 தலைப்புகளில் கட்டுரைகளைல் உருவாக்கியுள்ளார்.  கவனக்குறைவு, வினாடியில் நிகழும் சாலை விபத்து, நாட்களைக் கடத்தல், நேரத்தை மதித்தல், நேரம் உயரிய மூலப் பொருள் போன்றவற்றைச் சொல்லும் நூலாசிரியர் திறம் கண்டு வியக்கலலாம்.
சிந்தனைக் கவிஞர் கவிதாசன் :  இவர் ‘திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்’ என்னும் நூலை யாத்தவர். சுறுசுறுப்பே வெற்றி தரும். உண்மை நட்பே உயர்ந்தது, அவமானங்களை எழுச்சியாக்கி உந்துசக்தியாய் மாற்றிட வேண்டும் என்னும் கொள்கையில் உள்ளடக்கிய நூலிது.
கவிஞர் ஞா. சந்திரன் :  இவர் ‘வலி தாங்கும் மூங்கில்’ என்னும் நூலை எழுதியுள்ளார்.  தன்னம்பிக்கையை மனதில் விதைக்கும் நூலில் 30 கட்டுரைகள் உள்ளன.  தற்கொலை, அவமானம் இரண்டும் வாழ்வில் நம்மை உயர்த்தவே காமராசர், பெரியார் மேற்கோள் நூலுக்கு அணி சேர்க்கின்றன.
டாக்டர் பெரு. மதியழகன் :  இவர் ‘நினைவாற்றல் மேம்பட வழி’ என்னும் நூலுக்குச் சொந்தக்காரர்.  எதனையும் சாதிக்க நினைவாற்றல் வேண்டும்.  நமது அறிவின் அளவுகோல் நினைவாற்றலே. இதற்கு கற்றல், நினைவிருத்தல், மீட்டடைத்தல் ஆகியவை மீட்டறிதல் பற்றிய விளக்கங்களாகும்.  கஷ்டப்பட்டு, இஷ்டப்பட்டு உழைத்தால் வெற்றி கிட்டும் என நூலாசிரியர் கூறுவது அனைவர்க்கும் பயனுள்ள செய்தியாகும்.
பொறியாளர் கே. முத்துராஜீ : இவர் ‘வரலாற்றில் இன்று’ என்னும் நூலை எழுதியுள்ளார்.  உலகப் புற்றுநோய் தினம் பிப்ரவரி 4.  இந்திய அறிவியல் தினம் பிப்ரவரி 28.  சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8, உலக நுகர்வோர் தினம் மார்ச் 15, இச்செய்திகளோடு உலக ஆட்டிசம் தினம் ஏப்ரல் 2 என்னும் தகவல்கள் அனைவரும் படித்தறிய வேண்டியது.  விரிவாய்-விளக்கமாய் நூலை வாங்கி படித்தறிய வேண்டும்.
கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் :  இவர் ‘யாதும் ஊரே’ என்னும் நூலை இயற்றியுள்ளார்.  பயண இலக்கிய நூலிது.  ஈழத்தமிழர்களின் இன்னல்களை அறிந்தவர் லண்டன், கனடா, பாரீசு, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து நூல் எழுதியுள்ளார்.
வெற்றியாளர் ‘அமுதா’ ந. பாலகிருஷ்ணன் :  இவர் எழுதிய நூல் ‘வா.... வியாபாரி ஆகலாம்’ சிறுகதைகள் வாயிலாக படிப்போரை வியாபாரி ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  நேரத்தின் அருமையை, உழைப்பை, கூட்டு முயற்சியை, விழிப்புணர்வை விதைத்துச் செல்லும் இவர், அறநெறியையும் குறிப்பிட மறக்கவில்லை.
       இவ்வாறு அறிஞர், கவிஞர் பெருமக்களின் நூல்களைக் காண நேர்கின்றது.  நூலாசிரியர்களின் குணாதிசயங்களை இரா. இரவி அறிந்த வகையில்  நூலில் குறிப்பிட்டுள்ளார்.  இது நூலாசிரியர்களை மேலும் அறிய வாய்ப்பாக அமைந்துள்ளது.  இரா. இரவியின் விமர்சனத் தொண்டு மேலும் தொடர வாழ்த்துகின்றேன்.
-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் சிறப்புரை !


முது முனைவர் வெ.இறையன்பு  இ .ஆ .ப . அவர்கள் சிறப்புரை !

ஏழை  எளிய அடித்தட்டு மாணவர்களுக்கு இலவச கல்வி நல்கி வரும் வரலாற்று சிறப்பு மிக்க மதுரை புனித மரியன்னை  மேல் நிலைப் பள்ளியின் 106 வது ஆண்டு விழாவில் முது முனைவர் வெ.இறையன்பு சிறப்புரையாற்றினார்கள் .  மாணவர்கள் , ஆசிரியர்கள், பெற்றோர்கள் ,பொது மக்கள் என 5000 க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

மதுரை மாவட்ட கல்வி அலுவலர் ,முதன்மை கல்வி அலுவலர், பேராயர்கள் ,அருட் சகோதரிகள் கலந்து கொண்டனர் .

முனைவர் வெ.இறையன்பு அவர்களின் வாசகர்கள் வடுகபட்டியில் இருந்து மதுரைக்கு வருகை தந்து விழாவில் கலந்து கொண்டனர். 

கவிஞர் இரா .இரவி , கவிஞர் ஞா .சந்திரன் ,
பொறியாளர் ஜ .சுரேஷ், பேராசிரியர் பெர்னாட்ஷா ,பேராசிரியர் அருப்புக்கோட்டை இராமச்சந்திரன், B.S.N.L.நேரு ,தணிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .மரக்கன்றுகள் நட்டனர் . 
-- 


.

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...