ஹைக்கூ ( சென்ட்ரியு ) கவிஞர் இரா .இரவி !

  1. ஹைக்கூ  ( சென்ட்ரியு )  கவிஞர் இரா .இரவி !

    விழிகள் இரண்டு போதவில்லை 
    சிறகுகள் ரசிக்க 
    வண்ணத்துப்பூச்சி  !

    அமர்ந்தாலும் அழகு 
    பறந்தாலோ அழகோ அழகு 
    பட்டாம்பூச்சி  ! 

    புகை வரும் 
    நெருப்பின்றி 
    பனி மூட்டம் ! 

    புல்லின் மீது பனித்துளி 
    முகம் பார்த்தது 
    முழு நிலவு !

    அம்மாவின் கைமணம் கமழும் 
    அப்பத்தை நினைவூட்டியது 
    நிலவு !
     
    கிளைகள் எனும் 
    கைகள் விரித்து வரவேற்கும் 
    மரங்கள் !

    நிறமோ கருமை 
    குரலோ இனிமை 
    குயில் !

    கண்டனக் குரல் கொடுத்தன 
    கூடு கட்டிய பறவைகள் 
    வெட்டப்படும் மரத்திற்காக !

    உடல் நலத்திற்கு நல்லது 
    அதியமான் அவ்வைக்கு தந்தது   
    நெல்லிக்கனி !

    ஏழைகளின் ஆப்பிள் 
    ஏழைகளின் வாழ்வாதாரம் 
    நெல்லிக்காய் !

    சிறு துரும்பும் 
    கூடு கட்ட உதவும் 
    குருவிக்கு !

    கண்களைப் போலவே 
    மீசையும் அழகு 
    பூனை !

    கழிவு நீர் உறிஞ்சி 
    இளநீர் தரும் 
    தென்னை !

    கோடையில் வாடி நின்று 
    கோடைக்கு  இதமான  நுங்கு தந்தது 
    பனைமரம் !

    இனிமையாக்கியது 
    பேருந்துப்   பயணத்தை 
    வெள்ளரிக்காய் !

    வருடங்கள் உருண்டதை 
    உணர்த்தின 
    நரைகள் !
    .

கருத்துகள்