வியாழன், 28 பிப்ரவரி, 2013

ஹைகா ! கவிஞர் இரா .இரவி

ஓவியத்திற்கு நான் எழுதிய ஹைகா !
நீங்களும் பங்கு பெறலாம் !

ஹைகா ! கவிஞர் இரா .இரவி

வெட்டப்பட்ட மரத்தில்
கூட்டின் சுவடு
பறவைகளின் கண்ணீர் !

வெட்டாதீர் மரங்களை
பொய்த்திடும் மழை
உணரத்திடும் பறவைகள் !

நிழல் தந்த மரத்திற்கு
நிழல் தந்து மகிழ்கின்றன
சிறகு விரித்து !

வெட்டியவனை விரட்டியடித்து
வேர் காத்தன
நன்றி மிக்க பறவைகள் !

வெட்டப்பட்ட மரதிற்காக
வடித்தன கண்ணீர்
கூடு கட்டிய பறவைகள் !

ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல ..

நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  .

கந்தகப்பூக்கள்  பதிப்பகம் .குட்டியணஞ்சான் ,தெரு சிவகாசி .626123.

செல் 9843577110

விலை ரூபாய் 60.

நூலின் தலைப்பும் , அட்டைப்படமும் வித்தியாசமாக உள்ளது .நூல் விமர்சனம் எழுதுவதில் தனி முத்திரை பதித்து வரும் இனிய நண்பர் சேலம் கவிஞர் பொன் குமார் அவர்களின் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்ப்பதாக உள்ளது .இந்நூல், எங்க வீட்டுச் செல்லங்களுக்கு என்று பதிவு செய்து இருப்பது சிறப்பு .

நூல் ஆசிரியர் சிற்றிதழ் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .திருமணத்திற்கு மொய் செய்வதை நினைத்தாலே பலருக்கு வெறுப்பு வரும் .ஒரே நேரத்தில் ஒரே நாளில் பல திருமணங்கள் வந்து சிரமப்படுவதும் உண்டு .செலவு பெருகி வருகிறது .வரவு பெருக வில்லையே என்று வருந்துவதும் உண்டு .அவர்களது மன நிலையை படம் பிடித்துக்காட்டும் புதுக்கவிதை ஒன்று .

அழைப்பிதழ்களை வரவேற்பதில்லை ..
என்ன செய்வது
தேய்பிறைகளிலும் முகூர்த்தங்கள் !
முகூர்த்தங்கள் அதிகரித்த அளவிற்கு
வருமானங்கள் ?

காதலியைப்  பார்த்துக் கேட்கும் கேள்வி போல ஒரு நுட்பமான கவிதை .

காதல் விருட்சம் .
வெறும் சதை என்று
வியாக்கியானம் பேசித் திரியும் என்னுள்
எப்படி நீ விதையானாய் ?

அமெரிக்கா என்ன சொல்கிறது அதனை உடன் நிறைவேற்றும் அடிமைகளாக மத்தியில் ஆள்வோர் இருக்கும் அவலத்தை எள்ளல் சுவையுடன் சுட்டும் கவிதை நன்று .

நவீன இராமாயணம் !
இந்திய சீதை
அழுது  கொண்டே இருக்கிறாள் !
அமெரிக்க அசோக  வனத்தில் !

போலிகள் நிஜத்தை வெல்லும் அளவிற்கு தோற்றம் அளிக்கும் .சிலர் போலிகளைக் கண்டு ஏமாந்து விடுவதும் உண்டு .

அதனை உணர்த்தும் கவிதைகள்  .

பொய் மான் கூட்டம் !

புகைப்படச் சட்டத்துள்
சலசலத்து  வழியும்
நீர் வீழ்ச்சி !

குளிர்பதன பெட்டி மேல்
பறப்பது போல் நிற்கும்
வண்ணத்துப் பூச்சி !

தொலைக்காட்சிப் பெட்டி மேல்
வாசமற்றுச் சிறுக்கும்
பூ ஜாடி !

நாம் கண்ட சில போலிகளைக் காட்சிப் படுத்தி நூல் ஆசிரியர் வெற்றி பெறுகின்றார் .போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என்று எச்சரிப்பது போல உள்ளது .

.உனக்கான கவிதை !
எனக்கான கவிதையாய்
நீ இருக்கையிலே
கவிதைக்கே கவிதையா ?
சிந்தை சிதறுகிறது !

புதுக்கவிதையில் காதலியை கவிதையாக்கி படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதலியை நினைவூட்டி  விடுகிறார் .

பெயரிடாதீர் !
ஆயிரம் முறை
உன்னை மறக்க நினைத்தாலும்
பாடாய்ப் படுத்தும்
உன் பெயரோடு கூடிய
சில கடைகளின் பதாகைகள் !

காதலியின் பெயரை கடையின் பாதகையில் பார்த்து உணர்ந்த உணர்வை கவிதையாக்கி நமது உணர்வையும் நினைத்துப் பார்க்க வைத்துள்ளார் .

அர்த்தனாரியின் இடபாகமும் !
ஆதாம் எழும்பும் !
கருப்பு அங்கியும் !
ஆதிக்கத்தின் சின்னங்கள் !

அதிகம் பற்றி நம்மை சிந்திக்க வைக்கிறார் .நூல் ஆசிரியர்
வித்தியாசமான இதுவரை யாரும் வழங்காத காதல் பரிசு தருகிறார் பாருங்கள் .

காதல் பரிசு !
உனக்கு அனுப்ப
ஒரு பரிசு தேடுகிறேன்
எந்தனது எண்ணத்தை
எதுவுமே நிறைவு செய்யவில்லை !
உனக்கு எப்போதும் பிடிக்கின்ற
மௌனத்தையே  இப்போதும் !

மனசு !
என் மனசு
மாடாய்ப் போனது !
எப்போதும் அவளை
அசை போட்டுக் கொண்டே ..

காதலி பற்றி , காதல் பற்றி பல சுவையான கவிதைகள் நூலில் நிறைய உள்ளது .பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

ஏ ஞாபக மறதியே !

என் பிரியமான ஞாபக மறதியே !
ஏன் நீ அவள் விசயத்தில் மட்டும்
என்னோடு ஒத்துழைக்க மறுக்கிறாய் ?

காதல் பற்றி பல கவிதைகள் இருந்தாலும் ,சமுதாயம் பற்றியும் சில கவிதைகள் நூலில் உள்ளது .

அப்பன் சொல்லும் பாடம் கேளு !

தப்பைக் கண்டால் எதிர்த்து நில்லு !
பாதகம் செய்வோரை
பாதையில் கண்டால்
பாரதி மீசையாய் !

நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் .

ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

இயக்கம் :ஜி.என்.ஆர் குமரவேல்.

நடிப்பு கிஷோர் .

அதிசயமாக வரும் மிக நல்ல படங்களில் ஹரிதாஸ் படமும் ஒன்று .சமுதாயத்திற்கு கருத்து சொல்லும் மிகச் சிறப்பான படம் .இயக்குனர் :ஜி.என்.ஆர் குமரவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள் .ஆட்டிசன் குழைந்தைகள் பற்றிய புரிதலை உருவாக்கிய படம் .படத்தில்  சினேகா ,சூரி, சிறுவன் அனைவரும் மிக நன்றாக நடித்துள்ளனர் படம் முடிந்து வெளியில் வந்த பிறக்கும் படத்தைப் பற்றிய சிந்தனையில் இருந்து மீள முடியவில்லை .இதுதான் இயக்குனரின் வெற்றி ...

ரவுடிகளை கொல்லும்   காவல் அதிகாரியாக கிஷோர் .ரவுடிகள் கொலை எதிர்பாராமல் நடப்பதில்லை திட்டமிட்டே நடத்தப்படுகிறது என்ற உண்மையை படத்தில் காட்டிய இயகுனருக்கு பாராட்டுக்கள் .மனைவியை  இழந்த கிஷோர்ஆட்டிசனால் பதிக்கப்பட்ட தன மகனை கிராமத்தில் உள்ள அன்னையிடம் வளர்க்க  வைக்கிறார் .அன்னை இறந்தவுடன் தன மகன் ஹரியை தன்னுடன் ச்சென்னைக்கு அழைத்து வந்து விடுகிறார் .நட்பிற்காக மருத்துவராக நடித்துள்ள யூகி சேது பாத்திரம் மிக நன்று .படம் முடிந்து வந்தப்பின்னும் மனதில் நிற்கும் பாத்திரம்.
 .

ஹரி பைத்தியம் அல்ல அவனுக்கு இருப்பது நோய் அல்ல சிறு குறைதான் .இதுப்போன்ற பதிப்பு வந்தவர்கள் பின்னாளில் பெரிய சாதனையாளர்களாக வந்ததை எடுத்துக் கூறி  ஹரியின் மீது கவனம் செலுத்தினால்  பெரிய சாதனையாளராக வருவான் என்று மருத்துவர் அறிவுரை கூறியதும் .தந்தை காவல் அதிகாரி பதவியில் விடுப்பு கேட்கிறார் .ஆணையாளர் விடுப்பு தர மறுக்கிறார் .ஆதி என்ற ரவுடியை  கொல்ல என்னை விட்டால் வேறு காவல் அதிகாரி பலர் உள்ளனர் .ஆனால் என் மகன் ஹரியை கவனிக்க நான் மட்டுமே உள்ளேன் .எனவே எனக்கு விடுப்பு அவசியம் எட்ன்று வாதிட்டு .,என் பொறுப்பை ரமேஷ் பார்ப்பான் என்று சொல்லி விட்டு வந்து மகன் ஹரிக்காக வாழத் தொடங்குகிறார் .

சென்னை மாநகராட்சி பள்ளியில் சேர்க்கிறார் .இப்படிப்பட்ட குழந்தைகளை பொதுவான பள்ளிகளில் சேர்க்க அரசு ஆணை உள்ளது என்ற தகவலும் தந்து உள்ளார் இயக்குனர் ..அங்கு ஆசிரியராக சினேகா நடித்து உள்ளார் .மாணவன் மீது அன்பு செலுத்தும் நல்ல பாத்திரம் .நடிகர் சூரி மனதிற்குள் பேசி சிரிக்க வைக்கிறார் .
.
பள்ளியில் இருந்து சுற்றுலா அழத்து சென்றபோது மாணவன் ஹரி காணமல்போக , சினேகா துடித்து விடுகிறார் .மற்றொரு நாள்  ஆசிரியர் சினேகா வெளியில்  ஹரியை அழைத்து  சென்றபோது தங்கச் சங்கிலியை திருடி விட்டான் என்று ஹரியை அடிக்கும்போது துடித்து தடுத்து விளக்கம் சொல்கிறார் .சிறப்பு குழந்தை
( special child ) என்ற சொல்லாட்சி நன்று .ஹரி குழந்தையாக இருந்தபோது இருந்து குதிரையை பொம்மையை எப்போதும் கையில் வைத்து இருக்கிறான் .
அந்த தங்கச் சங்கிலியில் குதிரை பொம்மை இருந்ததால் அதனை எடுத்து இருக்கிறான் .என்பதை அறிய முடிகின்றது .அதற்குள் பைத்தியமா ? என்று கேட்டு மனதை புண்  படுத்துகின்றனர் .

ஹரியை அவன் தந்தை கடைக்கு அழைத்து சென்ற போது  கடையில் இருந்த ஜாம் பாட்டிலை தட்டி விட உடைந்த கடையில் சிதற , கடைக்காரார் வந்து கண்டபடி திட்டுகிறார் .பணம் தந்து  விடுகிறேன் என்று சொன்னபோதும் பைத்தியமா ? என்று திட்டுகிறார் .உடன் கோபப்பட்டு அடிக்கப் போகிறார் .மனதை நெகிழ   வைக்கும் பல காட்சிகள் படத்தில் உள்ளது .

பாடல் எழுதியுள்ள திரு .அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டுக்கள் .தாயின் கருவில் கலையாமல் பிறந்ததே பிறந்ததே வெற்றி என்ற பாடலும் ,பாடலில் வெள்ளத்தனைய ,தெய்வத்தான் என்ற முக்கியமான இரண்டு திருக்குறளும் பாடலில் இடம் பெற்றது சிறப்பு . ,காவலர்களின் சிரமம் சொல்லும் கானாப் பாடலும் மிக நன்று .இந்தப்பாடலுக்கு  நடிகையின் கவர்ச்சி நடனம் தவிர்த்து இருக்கலாம் .இரட்டை அர்த்தத்துடனும் ஆங்கிலச் சொற்களும் கலந்து எழுதும் பாடல் ஆசிரியர்கள் அண்ணாமலையை  பார்த்து திருந்த வேண்டும் .

சாதாரணமாக நடக்கவே சிரமப்படும் ஹரி பந்தயக் குதிரைகள் ஓடுவதைப் பார்த்து ஓடுகிறான் .இதனைக்கண்ட   தந்தை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவனை ஓட்டப்பந்தய வீரனாக  உருவாக்க மிகக் கடுமையாக உழைக்கிறார் .முயற்சி பயிற்சி எடுத்து போட்டியில் கலந்துக்  கொள்ள தயாராகி விடுகிறான் .போட்டியில்  பங்கு பெரும் மாணவர்கள் பெயரில் ஹரி பெயர் இல்லை  என்றவுடன் தேர்வுக் குழுவினருடன் வாதாடி ஹரி பெயரை இடம் பெற வைக்கிறார் .
போட்டியில் ஹரி ஓடி வெற்றி பெறுகிறான் .அவன் வெற்றி பெற்றதும் படம் பார்க்கும் அனைவருக்கும் நாம் வெற்றி பெற்ற உணர்வு வருகின்றது .இது இயக்குனரின் வெற்றி .
..போட்டிக்கு செல்லும் வழியில் ரவுடி ஆதியை பார்க்க , ஆசிரியர் சிநேகாவுடன்  ஹரியை அனுப்பி விட்டு

ரவுடியை விரட்டி சென்று ஆதியை கொல்கிறார் .கொன்ற பின் பின் புறமாக மற்றொரு ரவுடி குத்த தந்தை இறக்கிறார் ..ரவுடிகளை காவல் துறை சுட்டுக் கொள்வதால் மற்றொரு ரவுடியால் காவலர்க்கு  சாவு உண்டு. கொலை தொடர் கதையாகும் என்ற உண்மையையும் உணர்த்தி  உள்ளார் .காவல்துறை அதிகாரிகள் நண்பர்களுடன் அடிக்கடி மது அருந்தும் காட்சியை தவிர்த்து இருக்கலாம் .

. அரைத்த மாவையே அரைக்கும் விதமாக தீவிரவாதிகள் கதையை எடுக்கும் இயக்குனர்களும் .நடிகர்களின் புகழ் பாடும் விதமாக விதமாக படம் எடுக்கும்  இயக்குனர்களும் .பார்த்துத்திருந்த வேண்டிய நல்ல படம் இது . காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் படம் .

 

சிறுவன் ஹரி ஆசிரியர் சினேகா பராமரிப்பில் வளர்ந்து மிக பெரிய ஓட்டப் பந்தய வீரனாக மாறி பதக்கம் பரிசு பெற்று தந்தையைப் பற்றி நினைத்து பார்க்கிறான் ".ஊக்கப் படுத்தினால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்ப்பான் " என்ற பொன் மொழியின் விரிவாக்கம் தான் இந்தப்படம் .ஆட்டிசன் குழந்தைகளையும் காயப் படுத்தாமல் ஊக்கப் படுத்தினால்  சாதிப்பார்கள் என்ற உண்மையை  உலகிற்கு உணர்த்தியுள்ள மிக நல்ல படம் .


படத்தில் .உரையாடல் எழுதியவரையும் பாராட்ட வேண்டும் .தன்னம்பிக்கை விதைக்கும் நல்ல வசனம் .எழுதி உள்ளார் .சமுதாயத்தை  சீர்படுத்த உதவும் மிக நல்ல படம் .ஆட்டிசன் குழந்தைகள் மீது அன்பு செலுத்த வைக்கும் அற்புதமான படம் .இந்தப்  படத்திற்கு உறுதியாக  தேசிய விருது கிடைக்கும் .இந்தப் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டியது நல்லவர்களின் கடமை .அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று பாருங்கள் .இயக்குனரை தயாரிப்பாளரை ஊக்கப்படுத்துங்கள் .--செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

முத்துக்களைத் தருவாயா ? நூல் ஆசிரியர் கவிஞர் மகா .ராசா . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

முத்துக்களைத் தருவாயா ?

நூல் ஆசிரியர் கவிஞர் மகா .ராசா .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

கீற்று வெளியீட்டகம் 142.வடக்கு வெளி வீதி .யானைக்கல் ,மதுரை .1

விலை ரூபாய் 60

அழகிய குழந்தை கண்களை கைகளால் முடிய அட்டைப்படம் மிக நன்று .இந்த நூலை
மிக வித்தியாசமாக காணிக்கை ஆக்கி உள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் மகா .ராசா
 ."சமர்ப்பணம் .சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தை முத்துக்களுக்கும்
,கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் கருகிய குழந்தை மலர்களுக்கும் ...இதனை
படித்தவுடனேயே நூலை படிக்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கின்றது .கவிஞர் நா
.காமராசன் அணிந்துரை மிக நன்று .முனைவர் சு .விஜயன் ஆய்வுரை நூலுக்கு
தோரணம் .

உள்ளத்தில் உள்ளது கவிதை! உள்ளத்து உணர்வு கவிதை ! கவிஞனின் கண்ணில் பட்ட
காட்சி கவிதை ! கண்ணில் பட்ட மனிதர்கள் கவிதை ! கவிதைக்கண் கொண்டு
கண்டால் கவிதை பிறக்கும் .சுரக்கும்

.பெரிய மனிதர்கள் பலர் நல்ல குணம் இன்றி , பரந்த மனம் இன்றி சின்னப்
புத்தியுடன் இருப்பதைக் கொண்டு வடித்த நுட்பமான கவிதை ஒன்று .

இதயம் சுருங்கி விரிவது உண்மையென்றால் !
பலரின் இதயமென் விரிவதேயில்லை !

ஆழிப்பேரலை பலரின் வாழ்க்கையை சூறாவளியாக சுழற்றிப் போட்டது .பெற்றோரை
இழந்த குழந்தைகள் உண்டு .குழந்தைகளை இழந்த பெற்றோரும் உண்டு .ஆழிப்பேரலை
நிகழ்த்திய சோகத்தை கவிதை .வடித்துள்ளார் .
சுனாமி பற்றி வித்தியாசமாக சிந்தித்து எழுதி உள்ளார் .

.ஆழிப்பேரலை ( சுனாமி )

கடலில் முத்தெடுத்துப்  பார்த்திருக்கிறேன் !
கடல்  முத்தெடுத்த அதிசயம்
இதுவே முதல் முறை ! ஆம் !
நாம் பறி கொடுத்த ஒவ்வொரு குழந்தையும்
ஒவ்வொரு முத்துதானே !
கடல் அன்னையே !
உன்னிடமிருந்து நாங்களெடுத்த
முத்துக்களைத்  தந்து விட்டால்
திருப்பி நீ எங்கள் முத்துக்களைத்
தருவாயா ?

 கவிஞனுக்கு கற்பனை அழகு ! கவிஞன் கற்பனை மட்டுமே பாடாமல் நிஜத்தையும்
பாட வேண்டும். .கவிஞன் காதலையும் பாட வேண்டும் சமூகத்தையும் பாட வேண்டும்
.ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போலே ஒரே கவிதையில் காதலையும்,
சமூகத்தையும் பாடி உள்ளார் .பாராட்டுக்கள் .

பெண்ணே !
உனக்கு உன் உடம்பில் மட்டுமா
ஏற்றத்தாழ்வுகள்
சமூகத்திலும்தான் !

வண்டிச் சக்கரத்து அச்சாணியோடு நாட்டின் அச்சாணி விவசாயியை  ஒப்பிட்டு
எழுதிய கவிதை நன்று !

நமது நாட்டில் முதியோர் இல்லங்கள் பெருகி வருவது பெருமை அல்ல இழுக்கு
.பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளின்  கன்னத்தில் அறைவதுப்  போல ஒரு கவிதை
.

பெற்றோர்களைப் புறகணிக்க
முடிந்தவர்களால்
புறகணிக்க முடியாததாய்
பெற்றோர்களின் முதலெழுத்துக்கள் !

மனிதன் பிணமானதும்  வீட்டில் நடக்கும் மூட நம்பிக்கை சடங்குகள்  பற்றி
பெரிய புத்தகமே எழுதலாம் .அவ்வளவு
சடங்குகள் நடக்கும் .

அதில் ஒன்று ஊதுபத்தி .அது பற்றி ஒரு கவிதை எள்ளல் சுவையுடன் !

ஊதுபத்தி !
மனிதர்களே நாங்கள் உண்மையான தியாகிகள்
உங்களில் யார் இறந்தாலும் '
நாங்கள்தானே முதலில் தீக்குளிக்கிறோம் !

பக்கம் 73 இல் வந்த கவிதையே பக்கம் 87 லிலும் வந்துள்ளது .அடுத்த
பதிப்பில் தவிர்த்திடுங்கள் .

கர்ம வீரர் காமராசர் பற்றி சொற்ச்சிக்கனத்துடன் மிகக் குறைந்த வரியில்
மிகப் பெரிய கருத்தை விதைத்துள்ளார் .

காமராசர் மறைவு !

மண்ணிலிருந்துதான் புதையல் எடுப்பார்கள் !
கிடைத்த புதையலை மண்ணில் புதைத
சோகச் சம்பவமிது !

காதலைப் பாடாத கவிஞர் இல்லை காதலைப் பாடி உள்ளார் .

மின்சாரத்தைத் தொட்டுக் கொண்டே செல்லும்
மின்சார ரயிலைப் போல்
உன் நினைவுகளைத் தொட்டுக் கொண்டே
வாழும் நான் !

இந்தக் கவிதை படிக்கும் வாசகர்களுக்கு , தங்கள் காதலியின் நினைவு
வரவழைத்து கவிஞர் மகா .ராசாவெற்றி பெற்றுள்ளார் .

இப்படி பல்வேறு பொருள்களில் பொருள் படை கவிதை வடித்துள்ள நூல் ஆசிரியர்
கவிஞர் மகா .ராசா  அவர்களுக்கு பாராட்டுக்கள்

கனவில் உண்ணும் கவளங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் தா .ஆதித்தன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

கனவில் உண்ணும் கவளங்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் தா .ஆதித்தன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

முக்கடல் .72.எம்.ஜி .ஆர் .சாலை ,நங்கநல்லூர் ,சென்னை .61 பேசி 9444365642
.நூலின் அட்டைப்படம் ,நூலின் தலைப்பு வித்தியாசமாக உள்ளது .எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் அணிந்துரையும் ,கவிஞர் பழநி பாரதி வாழ்த்துரையும் நூலிற்கு அழகு சேர்த்துள்ளது .

நூலில் உள்ள புதுக்கவிதைகள் படிக்கும் அனைவருக்கும் புரியும்படி உள்ளது .பாராட்டுக்கள் .எழுதிய கவிஞரே வந்து விளக்கம் சொன்னாலும் புரியாத இருண்மைக் கவிதைகள் இந்த நூலில்  இல்லை ..மகிழ்ச்சி
சமுதாயத்தை உற்று நோக்கி உள்ளார் .சந்தித்த மனிதர்களால் வந்த பாதிப்பை உணர்ந்து நொந்து கவிதை எழுதி உள்ளார் .மனிதர்கள் மனிதர்களாக வாழ வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டி உள்ளது .

வேந்தும் வேகாத
பச்சிலைப் பசுமரமாய்
வெந்து கொண்டிருக்கிறேனே !
இன்றைய
சுயநலமும்
பொறாமையும் கொண்ட
மனிதர்களின் வேகாத நினைவுகளால் !

காதல் பற்றி ஒரு கவிதை !
கவிதை அல்ல !
அங்கு
இதய நாண்களை மீட்டும் போது
ஒலிப்பது ராகம் அல்ல சோகம் ...சோகம் ...

கேட்பார் பேச்சுக் கேட்டு கேட்டுப் போகாமல் , அடுத்தவர் சொல்கிறார் என்பதற்காக விருப்பமின்றி எதையும் முடிவு எடுக்காதே ! என்ற கருத்தை உணர்த்தும் கவிதை .

நம் வாழ்க்கை நம் கையில் !
உன் வாழ்க்கையை நீயே தீர்மானி
பிறர் சொல்வதைக் கேட்டுக் கொள் !
ஆனால்
உன் பாதையை நீ தேடு ! நீயே தேர்ந்தெடு !
கவனமாகக் தேர்ந்தெடு !

தமிழைப் பாடாத கவிஞர் . கவிஞரே இல்லை நூல் ஆசிரியர் கவிஞர் தா .ஆதித்தன் தமிழைப்பாடி உள்ளார்
தமிழ் மொழியின் பெருமையை இன்று உலகம் அறிந்து வருகின்றது .உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் தமிழ்ச் சொற்கள் உள்ளது என்று ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன   பலமொழிப்புலவர்  .மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆராந்து சொன்ன உண்மை " உலகின் முதல் மொழி தமிழ் ." உலகம் உணர்ந்து விட்டது .

தமிழ்த்தாய் திருப்பள்ளியெழுச்சி !
உலகத்தாயின் முதல் பெண்ணினாய் !
என்றும் வாடாத அறிவு மலரினாய் !
பழமொழிக் குழந்தையினை
ஈன்றெடுத்த தாயினாய் !
மனைவி எவ்வளவு சுவையாக சமைத்தாலும் கணவனுக்கு தன்  அம்மாவின் சமையலையே புகழ்வது வழக்கம் .இயல்பு .

அந்த அம்மா பாசம் உணர்த்தும் கவிதை ஒன்று .

அம்மா சமைக்கும்
உளுந்தச் சோற்றுக்கும்
கூட்டாச் .சோற்றுக்கும்  முன்
தோற்றுப் போகிறது
நட்சத்திர ஹோட்டல்
பிரியாணி !

மனிதர்கள் பலர்க்கு ஆடை சுத்தமாக உள்ளது .ஆனால் மனசு அழுக்காக உள்ளது .அதனால் சமுதாயம் சீர்க் கேட்டுப் போகின்றது .

வாழ்க்கை எனும்
நந்தவனத்தில்
தன்னலமும்
பொறாமையும் கொண்டவர்களின்
மூச்சுக் காற்று
அதிகமாய்ப் பரவியதால்
இன்று
பசுமை இழந்து
தவிக்கிறது மனது !

பல்வேறு  பொருள்களில் சிந்தித்து கவிதை வடித்துள்ளார் .தொடர்ந்து எழுதுங்கள் .பாராட்டுக்கள் .

--
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
திங்கள், 25 பிப்ரவரி, 2013

இயற்கை ஹைக்கூ . கவிஞர் இரா .இரவி !

இயற்கை  ஹைக்கூ . கவிஞர் இரா .இரவி !

நடந்தேன் நடந்தது
நின்றேன் நின்றது
நிலவு !

உழைக்காமலே வியர்வை
மலர்களின் மீது
பனித்துளி !

பூமியில் இருந்து வானம்
வானில் இருந்து பூமி
மழையின் சுற்றுலா !

ஓய்வு அறியாதவன்
சோம்பல் முறிக்காதவன்
ஆதவன் !

கண்டதும் மலர்ந்தன
சென்றதும் வாடின
மலர்கள் !

மணக்கும்
தொட்ட கை
மதுரை மல்லிகை !

முற்றிலும் உண்மை
மலர்களின் ராஜா
ரோஜா !

வெட்ட வெட்ட
பொய்த்து  மழை
மரம் !

ஒன்று இசைக்கு
மற்றொன்று பாடைக்கு
மூங்கில் !

ஒன்று சிலை
மற்றொன்று படிக்கல்
மலைக்கல் !

கழிவு நீர் குடித்து
இளநீர் தந்தது
தென்னை !


ஈழம் ! கவிஞர் இரா இரவி !

ஈழம் !     கவிஞர் இரா இரவி !

பாலகனைக்  கொன்றான்
பாவங்கள் புரிந்தான்
தண்டனை உறுதி !

சிறுவனிடம் வீரம் காட்டிய
சின்னப் புத்திக்காரன்
சிங்களப்பகைவன் !

தமிழினம் அழித்தான்
அழிவைத் தேடினான்
இலங்கைக் கொடூரன் !

இறந்த உயிர்கள் எத்தனை ?
கணக்கு இல்லை
அவன் கணக்கு முடியும் !

முள்வேலி தந்தவனுக்கு
சிறைவேலி தரும் நாள்
தமிழர் திருநாள் !

பலநாள் கொலைகாரன்
ஒரு நாள் அகப்பட்டான்
இலங்கை அரக்கன் !

எல்லா நேரமும் எல்லோரையும்
ஏமாற்ற முடியாது
மாட்டி விட்டான் !

அப்பாவிகளைக் கொன்ற
அடப் பாவி அவன்
ஹிட்லரிலும் கொடியவன் !

நாட்டு மக்கள் மீதே
போர் தொடுத்த
போர் குற்றவாளி !

முதியவர்கள் பெண்கள் குழந்தைகள்
மூர்க்கமாகக் கொன்றக் கொடியவன்
எண்ணுகிறான் நாளை !

விடுதலை கேட்டவர்களின்
வாழ்க்கையை முடித்தான்
சிங்கள வெறியன் !

கோயில்களைத் தகர்த்தவன்
திருப்பதி கோயில் வந்தான்
மனித மிருகம் !

இன்றும் உண்டு காட்டுமிராண்டி
எடுத்துக்காட்டு
இலங்கை  வெறியன் !

பகையை முடிப்பான்
தமிழ் ஈழம் ஆள்வான்
எம் தமிழன் !

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை . தொகுப்பு கவிஞர் இரா .இரவி .

23.2.2013 அன்று  மதுரையில் காந்தி
அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கஸ்தூரிபாய்
,தில்லையாடி வள்ளியம்மை நினைவு நாள் கூட்டத்தில் .

ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .

தொகுப்பு கவிஞர் இரா .இரவி .

  பிரபலமான இதழ்களில் உண்மை இல்லாத தகவல்கள் வந்து எனக்கு அதிர்ச்சி தந்தன
.அதில் ஒன்று தினமணி இதழில் வந்த தகவல் . "காந்தியடிகள் டால்ஷ்டாயை பார்க்க
வேண்டும் வருக ! என்று கடிதம் எழுதினார் .அதற்கு டால்ஷ்டாய் நான் விமானத்தில்
டெல்லி வருகிறேன் .வரவேற்க நீங்கள் வர வேண்டாம் .யாராவது மிகச் சிறிய நபரை
அனுப்பி வைத்தால் போதும் என்று .மடல் எழுதினார் . டால்ஷ்டாயை வரவேற்க
காந்தியடிகளே டெல்லி விமான நிலையம் சென்றார் .நீங்கள் என் வந்தீர்கள் என்று
கேட்டபோது நான்தான் மிகச் சிறியவன் என்று காந்தி சொன்னார் ."
-
 "காந்தியடிகள் டால்ஷ்டாயை நேரில் சந்தித்தே இல்லை.என்பதே உண்மை .தினமணி
இதழில் வந்த தகவல்  பொய் .
.டால்ஷ்டாய் இறந்த ஆண்டு 1910.விமானம் கண்டுபிடித்தது 1910 க்குப் பிறகுதான்
.இந்த தகவலை தினமணி அலுவலகத்திற்கு தொலைபேசியில் தெரிவித்தபோது கூகுளில்
உள்ளதை எழுதினோம் என்று பொறுப்பு இல்லாமல் பதில் தந்தனர் .படித்து விட்டு பலர்
மேடைகளில் மேற்கோள் காட்டி பேசுவார்கள் .

தில்லையாடி வள்ளியம்மை பிறந்தது தென்ஆப்பிரிக்காதான் வள்ளியம்மை  தந்தை
விவசாயம் புரிய தென்ஆப்பிரிக்கா சென்ற போது  பிறந்தவள் .அங்கு சென்ற தமிழர்களை
கூலித்தமிழர்களை என்றார்கள் .அவர்கள் பேசிய மொழியை கூலித்தமிழ் என்றார்கள்
.வெள்ளையர்கள் .அங்கு சென்ற தமிழர்களின் பெயர்கள் பெரியசாமி ,சின்னச்சாமி
,குப்புசாமி என்று இருந்ததால் மொத்தத்தில் தமிழர்களை சாமி என்றார்கள்
.வெள்ளையர்கள்.சாமி என்றால் தலைவன் என்று பொருள் என்பதை கேள்விப்படடதும் சாமி
என்று அழைப்பதை மாற்றிக் கொண்டனர் .

காந்தியடிகள்  போராட்டத்தில் களப் பலியான முதல் பெண் வள்ளியம்மை.வள்ளியம்மை
இறந்தபோது எனது அண்ணன் மரணத்தைக் காட்டிலும் வள்ளியம்மை மரணம் பேரிடியாக
இருந்தது .என்றார் காந்தி.

மிக முன்னேறிய நாடுகளிலும் ஆணாதிக்க சிந்தனை உண்டு .அமெரிக்க தேர்தலில் ஹிலாரி
கிளிண்டன் தோல்விக்கு காரணம்  ஆணாதிக்க சிந்தனையே என்று ஆய்வில் தெரிவித்து
உள்ளனர்

. இந்தியாவில் நடந்த கள்ளுக் கடை மறியல் போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்று
காந்தியடிகளிடம் கேட்டபோது தமிழகத்தில் உள்ள இரண்டு பெண்களின் கையில் உள்ளது
அது யார் ?  என்றால் .தந்தை பெரியாரின் மனைவி நாகம்மை , சகோதரி கண்ணம்மாள்
என்றார்.

சாக்ரடீஸ் சிறந்த சிந்தனையாளர் .கேள்வி கேட்பவர்களிடம் பதில் கேள்வி கேட்டு
அந்த பதிலில் அவர்கள் வாயாலேயே விடை தரும் ஆற்றல் மிக்கவர் .சாக்ரடீஸ் பாணி
என்றனர் .அவருக்கும் அவர் மனைவிக்கும் கருத்து ஒற்றுமை .இருந்ததில்லை அவர்
மீது  நண்பர்கள் முன்பு  மனைவி தண்ணீரை ஊற்றியபோது கோபப்படாமல் இடி
மின்னலுக்குப்பின் மழை  வருவது இயல்பு என்றார் .

ஆபிரகாம் லிங்கன் விறகு வெட்டி மகன் .அடிமைச்சந்தையில் மனிதர்களை விற்பதைப்
பார்த்து நண்பனிடம் கேட்டார் .எது என்ன கொடுமை இதனை ஒழிக்க வேண்டுமே .என்றார்
.அதற்கு நண்பர் சொன்னார் .நீ அமெரிக்க ஜனாதிபதி ஆனால்தான் ஒழிக்க முடியும்
என்றார் .அன்று சொன்னார் லிங்கன் இதை ஒழிப்பதற்காகவே நான் அமெரிக்க ஜனாதிபதி
ஆவேன் என்றார் .  "எல்லா நாட்களும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது ".என்ற பொன்
மொழி சொன்னவர் லிங்கன் .23 ஆண்டுகள் மனைவியுடன் சோக வாழ்க்கை வாழ்ந்தார் .

 லியோ டால்ஷ்டாய் காதலித்து திருமணம் முடித்தவர் .அவருக்கு மனைவியுடன்
முரண்பாடு .உலகின் 10 சிறந்த நாவல்களில் இரண்டு சிறந்த நாவல்கள் டால்ஷ்டாய்
எழுதியது .1900 ஆம் ஆண்டிலேயே ஒரு கோடியே இருபது லட்சம் பிரதிகள் விற்றது
.ஆனால் அவர் அனாதையாக  உயிர் விடும் போது ,
  நான் இறந்த  தகவலை மனைவிக்கு சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு இறந்தார்
.
.
மற்றவர்களுடன்  அவர்களது மனைவி முரண்பட்டதுப்போல .காந்தியடிகளுடன் கஸ்தூரிபாய்
முரண் படாமல் உடன் பட்டு வாழ்ந்ததால்தான்  காந்தியடிகள் தேசப்பிதா ஆக
முடிந்தது.

1913 ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கருப்பு சட்டத்தை எதிர்த்து போராடிய போது
.காந்தியடிகள் பக்கத்துக்கு வீட்டு பெண்களிடம் போராட அழைப்பு விடுத்தபோது,
கஸ்தூரிபாய் கேட்டார் ஏன் ? என்னை அழைக்கவில்லை .என்று .இங்கு உள்ள சிறை மிக
மோசம் நீ சிறைக்கு பயந்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டால் என்
போராட்டம் தோல்வி அடைந்து விடும். அதனால்தான் , உன்னை அழைக்க வில்லை என்றார்
.என்னை என்ன நினைத்தீர்கள் . என்று சொல்லி போராடி 3 மாதம் சிறை சென்றார்
கஸ்தூரிபாய்.தில்லையாடி வள்ளியம்மையும்  சிறை சென்றார் .வள்ளியம்மைக்கு நோய
வந்ததால் 2 மாதத்தில் விடுதலை செய்தனர் .

.வள்ளியம்மையை சிறைக்கு வெளியே காந்தியடிகள் நின்று வரவேற்றார் .சிறை
சென்றதற்காக வருந்துகிறாயா ? என்று கேட்டபோது இப்போதும் சிறை செல்ல தயார்
.என்றார் வள்ளியமமை.சிறை சென்றால் இறந்து விடுவாயே ! என்ற போது தாய்
நாட்டிற்காக உயிரைவிடுவதை விரும்பாமல் இருப்பேனா ? என்றார் .காந்தியடிகள்
வள்ளியமையின் மனத்திடம் கண்டு வியந்தார் .சில நாட்களில் வள்ளியம்மை இறந்து
விடுகிறார் .வள்ளியம்மை தியாகம் பலன் தந்தது ! என்று எழுதினார் .

கஸ்தூரிபாய் இறந்தபோது சிதை அருகே கண்ணீர் விட்டு  அழுதார் .காந்தியடிகள்
அழுதது அன்று மட்டுமே காந்தியடிகளுக்கு ஏற்ற மனைவியை வாழ்ந்தவர் .காந்தி
மகாத்மா காந்தி ஆகக்  காரணம் கஸ்தூரிபாய்.--

புதன், 20 பிப்ரவரி, 2013

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின்
சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைபெற்றது
.வாசகர் வட்டத்தின் தலைவர் எ.எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர்
வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் . ஒருங்கிணைப்பாளர்திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார்.
கவிஞர் பேனா மனோகரன் காவல்துறை D.S.P.( ஒய்வு )
,திரு ராஜேந்திரன் ஆகியோர்   வாழ்த்துரை வழங்கினார்கள்
  மேலாளர்  (வேளாண் சந்தைப்படுத்துதல் ) 
"திரு .ஆ .முத்துக்கிருஷ்ணன்  உலகம் அழியாதிருக்க தன்னம்பிக்கை  என்ற தலைப்பில் தன்  முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .   பாலிதீன் பயன்படுத்தாதிருத்தல் ,பாட்டில் குளிர்பானங்கள் குடிக்காதிருத்தல் ,ஒலிமாசு தரும் வெடிகள் வெடிக்காதிருத்தல் ,பயன்பாடு இல்லாத போது மின் .மின் அணு சாதனங்கள் அணைத்து வைத்தல் ,பி.வி .சி போன்ற பைப்புகளை பயன்படுத்தாதிருத்தல்
,தண்ணீர் வீணாவதை தடுத்தல் ,கழிவு நீரை சுத்தம் செய்து மறு சுழற்சி முறையில் பயன்படுத்துதல் ,சூரிய ஒளி  வழி  மின்சாரம் எடுத்தல் ,மலை போக்காமல் இருக்க மரங்களை வெட்டாதிருப்போம் எல்லோரும் கடைபிடித்தால் உலகம் அழியாது என்றார் ., திரு .தினேஷ் நன்றி கூறினார் .

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர் திரு.பாண்டியன் ,
திரு .கார்த்திகேயன்,  உள்ளிட்ட   பலர் கலந்துக் கொண்டு
விழாவை சிறப்பித்தனர் .

திங்கள், 18 பிப்ரவரி, 2013

பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி .

பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி .

இரவிலே சுதந்திரம் வாங்கினோம் என்பதால்
பெட்ரோல் விலையை இரவிலேயே உயர்த்துகின்றனர் .சுதந்திரம் மக்களுக்கு கிடைத்ததோ இல்லையோ. ஆனால் ஆளும் அரசியல்வாதிகளுக்கு நினைத்த போதெல்லாம் பெட்ரோல் விலையை உயர்த்த சுதந்திரம் உள்ளது .ஆளுவோர் எத்தனை முறை பெட்ரோல் விலையை உயர்த்தினார்கள் என்று சரியாக விடை சொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசு வழங்கப்படும் .மத்தியில் .ஆளுவோருக்கு பெரும் பணக்கார்கள் இன்னும் பெரும் பணக்கார்கள் ஆக வேண்டும் .ஏழைகள் இன்னும் பரம ஏழைகள் ஆக வேண்டும் .இது ஒன்று மட்டுமே லட்சியம் ..

ஹெலிஹாப்டரில் ஊழல் செய்தோர் , டு ஜி ஊழல் செய்தோர், காமன் வெல்த் விளையாட்டில் ஊழல் செய்தோர் கண்டு கொள்ள மாட்டார்கள் .பாலியல் குற்றம் புரிந்தவருக்கு உயர்ந்த பதவி தருவார்கள் .
ஏழை மக்கள் பெட்ரோல் விலை உயர்வால் பாதிப்பார்கள் என்பதை மட்டும் சிந்தித்துப் பார்க்க மாட்டார்கள் .

.பெட்ரோல் மீது தீ பட்டால்தான் நெருப்பு .ஆனால் இன்று பெட்ரோல் விலையை கேட்டாலே மனதில்
தீ ,நெருப்பு ,வெறுப்பு .

அடிப்படை தேவையாகி விட்ட பெட்ரோல் விலையை அடிக்கடி ஏற்றி வருகின்றனர் .அடித்தட்டு மக்களுக்கு பெட்ரோல் விலை உயர்வின் காரணமாக விலைவாசி ஏறிக் கொண்டே போகின்றது .வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் .ஆனால் ஏழை மக்களுக்கு போராட்டமே வாழ்க்கையாகி விட்டது .

விலைவாசியை இறக்குவோம் என்று சொல்லி வாக்கு வாங்கி ஆட்சில் அமர்ந்ததும் தொடர்ந்து மன சாட்சி இன்றி விலைவாசியை ஏற்றுகிறார்கள் .
மதுரையில் ஆட்டோ ஓட்டுனர்கள் நொந்து எழுதியது ஆட்டோவில் கண்ட வாசகம் .

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் !
அவன் ஆட்டோ ஒட்டி வேதனையில் வாட வேண்டும் !
பெட்ரோல் விலை உயர்வு !

விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்

விஷ்வரூபம் !

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்

கமல் சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிருபித்து உள்ளார் .பாராட்டுக்கள் .கதக் நாட்டிய கலைஞராக மிக சிறப்பாக அபிநயம் செய்துள்ளார் .திருநங்கை போல நன்கு  முக பாவம் செய்துள்ளார் .சண்டைக் காட்சிகளில் வேகம் உள்ளது . சாணு வர்க்கீஸ் ஒளிப்பதிவு மிக நன்று .ஆப்கானிஸ்தான் போன்ற செட் அமைப்பு நன்று .கலை இயக்குனருக்கு பாராட்டுக்கள் .பாடல் பின்னணி இசை யாவும் மிக நன்று .தொழில் நுட்பத்தில் காட்டிய கவனத்தை கதைக் கருவிலும் காட்டி இருக்க வேண்டும் .

ஆங்கிலப்படம் பார்ப்பது போன்ற உணர்வே வருகிறது .காரணம் படத்தில் நடித்து இருப்பவர்களும் ஆங்கிலேயர்கள் . பேசும் வசனமும் ஆங்கிலம் ஆப்கானிஸ்தான் இஸ்லாமியர்கள் பேசுவது உருது ,அரபு மொழிகள்  , .தமிழ் எழுத்து திரையில் தெரிந்தாலும் ஒரு வித அந்நிய உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை .பாமரகளுக்கு புரியாத உரையாடல்கள் உள்ளது .வில்லனாக வருபவர் நன்கு நடித்துள்ளார் .ஆண்ட்ரியா பாத்திரம் ஆட  மட்டும் பயன் பட்டுள்ளது .

அமெரிக்காவை கதாநாயகனாகவும் ஆப்கானிஷ்தானை வில்லனாகவும் சித்தரித்து உள்ளார் .அமெரிக்க ராணுவம் எந்த   நாட்டிற்க்குள் நுழைந்தாலும் அந்த நாட்டை விட்டு திரும்புவதில்லை என்பது உலகம் அறிந்த உண்மை .இன்னும் வியாட்னாமிலும் .அமெரிக்க ராணுவம் உள்ளது . ஆப்கானிஷ்தானிலும்  உள்ளது
.இஸ்லாமியர்கள் இந்தப்படத்தை ஆட்சேபித்ததில் நியாயம் உள்ளது .இஸ்லாமியர்கள் பலரை தீவிரவாதியாகவும் இஸ்லாமிய சிறுவனின் கண்ணைக் கட்டி விட்டு கையில் துப்பாக்கி கொடுத்து என்ன துப்பாக்கி என்று கேட்டதும் ஏ .கே .47 என்கிறான் .தோட்டாக்களை தடவிப் பார்த்து அளவு எண்களை சரியாக சொல்கிறான் .இது போன்ற காட்சிகள் இஸ்லாமியர் குழந்தைகளை தீவிரவாதியாக  வளர்க்கிறார்கள் என்பது போல தோன்றுகிறது .இஸ்லாமியர் எல்லோரும் தீவிரவாதி அன்று .இஸ்லாம் வன்முறையை ஆதரிக்கவில்லை .இஸ்லாலாமியரில் பலரும் மிக நல்லவர்களே .ஒரு சிலர் தீவிரவாதி இருக்கலாம் .எல்லா மதத்திலும் ஒரு சில தீவிரவாதி உண்டு .

 திரைப்படத்தில் விஜயகாந்த் ,அர்ஜுன் ,சரத்குமார் ,கமல் உள்ளிட்ட பலரும் இஸ்லாலாமியர்  என்றாலே தீவிரவாதிகள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள் .இனியாவது நிறுத்துங்கள் .கமலின் ரசிகன் என்ற முறையிலும் ,அவரை போன்ற பகுத்தறிவாதி நான் என்ற முறையிலும் கமலிடம் ஒரு வேண்டுகோள் விஷ்வரூபம்  .பாகம் 2 எடுப்பதை நிறுத்தி விட்டு மக்களை செம்மைப் படுத்தும் வன்முறை இல்லாத நல்ல படம் எடுங்கள் .

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அடுத்த  படியாக மிகச் சிறந்த நடிகர் கமல் என்பதில் சந்தேகம் இல்லை .ஆனால் உங்கள் படத்தில் உயிரோடு கழுத்தை அறுக்கும் காட்சி .பொதுமக்கள் முன்னிலையில் திறந்த வெளியில்  உங்கள் பாத்திரத்தின் வஞ்சகத்தால் நிரபராதியை தூக்கில் போடும் காட்சி ,கையை வெட்டி எரியும் காட்சி .வெடி குண்டால் உடல் மட்டும் சிதறி வந்து விழுந்து துடிக்கும் காட்சி அளவிற்கு அதிகமான வன்முறைக் காட்சிகள் .இளகிய மனசுக்கார்கள் திடப் படுத்திக் கொள்ளுங்கள் என்று படம் தொடங்கும் போது எழுத்து வேறு போட்டு வன்முறை காட்ட வேண்டிய அவசியம் ஏன் ?நாட்டில் நடந்ததை காட்டுகிறோம் .என்பார்கள் .நாட்டில் நடந்த கெட்டதை ஏன் ?  காட்ட வேண்டும் .நாட்டில் நடந்த  நல்லதை காட்டலாமே
!
உலக அளவில் சண்டைக்கு உலகப்புகழ் பெயர் பெற்ற திரு ,ஜாக்கி ஜான் :" எனக்கு 58 வயதாகி விட்டது இனி நான் வன்முறை சண்டைக்  காட்சிகளில் நடிக்கப் போவது இல்லை .நாட்டில் ஏற்கெனவே வன்முறை பெருகி விட்டது. .இந்த அறிவிப்பை கமல் கவனத்தில் கொள்ள வேண்டும்
அமெரிக்கா நடத்திய வன்முறைகள் செய்தியாக நிறைய வந்தது .அதை  .கமல் கவனத்தில் கொள்ள வில்லை .பெட்ரோல் எண்ணை  வளத்தை கொள்ளை
அடிப்பதற்காக அரபு நாடுகளில் நடத்தும் திருவிளையாடல்கள் உலகம் அறிந்த உண்மை .எண்ணை வளம் இல்லாத இலங்கையில் மட்டும் அமெரிக்காவும் அய் நா மன்றமும் இன்று வரை பாரா முகமாக இருந்து ராஜபட்ஜெயின் வன்முறையை வேடிக்கை பார்த்து வருவது கமலுக்கு தெரியாதா ?

இந்தப்படம் வெற்றிப்படம் .வசூல் குவிக்கும் படம் ,ஆனால் உங்கள் மன சாட்சியை கேட்டுப் பாருங்கள் ,நீங்கள் படத்தில் காட்டிய அளவிற்கு அமெரிக்கா நல்ல நாடும் இல்லை .இஸ்லாமியர்கள்  கெட்டவர்களும் இல்லை என்பதை உணருங்கள் .


நீங்கள்  நல்லவரா ?  கெட்டவரா ?  என்று படத்தில் கேட்ட வசனத்தை .உங்களை நேரில்,நிஜத்தில் கேட்கும் படி நடக்காதீர்கள் .அமெரிக்கா உலக ரவுடி என்பது உலகம் அறிந்த உண்மை .அமெரிக்காவின் ஒரு முகம் காட்டிய நீங்கள் மறு முகம் ,கோர முகம் காட்ட வில்லை ..

.நமது இனிய நண்பர் பேராசிரியர் கு .ஞானசம்பந்தன் அவர்களின் செல்லில்  இருந்து தசாவதாரம் படத்தில் உங்களின் சிறந்த நடிப்பை பாராட்டியவன் நான் .சிறந்த விமர்சனம் எழுதியவன் நான் ..உங்களுக்கு பல இஸ்லாமிய ரசிகர்கள் உண்டு ..அவர்கள் இந்தப்படத்தை பார்க்க விரும்ப வில்லை .ஒரு சிலர் பார்த்தாலும் வருத்தம் அடைவது உறுதி .

கமலஹாசன் அவர்கள் தனக்கு உள்ள நடிப்பு ஆற்றலை  ,மற்ற நடிகர்களுக்கு இல்லாத எழுத்து ஆற்றலை ,சிந்திக்கும் திறனை ,இயக்கும் திறமையை நல்ல விசயத்திற்கு மட்டும் பயன்படுத்தட்டும் என்ற வேண்டுகோளை வைத்து முடிக்கின்றேன் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .

மழையின் கையெழுத்து !
ஆங்கில மொழி பெயர்ப்புடன் !
SIGN OF RIAN HAIKUS

வெளியீடு நிவேதிதா  822, பெரியார் நகர் ,புதுக்கோட்டை .622003.
செல் 9443126025.விலை ரூபாய் 100

நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி
விமர்சனம் கவிஞர் இரா . இரவி .

நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி இனிய நண்பர் .புன்னகையை முகத்தில் எப்போதும் அணிந்திருக்கும் பண்பாளர் .புதுக்கோட்டையின் இலக்கியக்கோட்டையாக திகழ்பவர் .புதுக்கோட்டையில் பிரமாண்ட இலக்கிய விழாக்கள் நடத்தி முத்திரை பதிப்பவர் .மேல் நிலைப் பள்ளியின் தாளாளராக இருந்து கொண்டு பல்வேறு இதழ்களிலும் எழுதி வரும் படைப்பாளி .

இவரது ஹைக்கூ கவிதைகள் மிகவும் புகழ் பெற்றவை .பட்டிமன்ற மேடைகளில் பலரால் குறிப்பாக தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களால் மேற்கோள் காட்டப் பட்ட ஹைக்கூ கவிதைகளை பேராசிரியர் எஸ் .நவநீதன் உதவியுடன் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து மழையின் கையெழுத்து ! நூலாக வந்துள்ளது .கவியரசர் பாரதியின் வரிகளின் படி தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவிட வழி செய்துள்ளார் .
 
ஹைக்கூ கவிதை வடிப்பதில் தமிழ் படைப்பாளிகள் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறை சாற்றும் விதமாக வந்துள்ளது .பக்கத்திற்கு ஒரு ஹைக்கூ இடது புறம் தமிழில் வலது புறம் ஆங்கிலத்தில் உள்ளது .மிக நேர்த்தியான வடிவமைப்பு .

நூல் கிடைத்ததும் இனிய நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களை செல்பேசியில்அழைத்து பாராட்டி பேசியபோது இந்த நூலின் அடுத்த  பதிப்பு  ஓவியங்களுடன் அச்சாகி  வருவதாக சொன்னார்கள் .இந்த நூல் இன்னும் சிறப்பாக அமையும் .பாராட்டுக்கள் .

ஒரு பானை சோற்றுக்கு சில சோறு பதம் போல நூலில் இருந்து சில மட்டும் உங்கள் ரசனைக்கு .இதோ !
இந்த ஹைக்கூ படித்தவுடன் படித்தவர்களுக்கு அவரவர் காதலி நினைவு கட்டாயம் வரும் .என்று அறுதி இட்டு  சொல்லலாம் .

விழிகளில் ஊதி
தூசி எடுத்தாய்
துசி வெளியேற உள்ளே நீ .
.YOU BLEW INTO MY EYES
THE DUST FLEW OFF
YOU BLEW IN.

அரசுப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அவசியம் பார்த்து இருப்பார்கள் .முதலுதவிப்  பெட்டி மிக மோசமாக இருக்கும் .தற்போது சில பேருந்துகளில் அதுவும் இருப்பதில்லை .எள்ளல் சுவையுடன் படைத்த ஹைக்கூ .

பேருந்தில் இருக்கிற
முதலுதவிப்  பெட்டி
இறக்கிற நிலையில் !

THE BUS HAS A FIRST AIID BOX
WHAT WILL HAPPEN
WHEN IT BECOMES MORIBOND ?

இந்த ஹைக்கூ பல்வேறு பட்டிமன்றங்களில் மேற்கோள் காட்டிட நானே கேட்டு இருக்கிறேன் .பட்டிமன்ற சுவைஞர்களுக்கும் , பட்டிமன்ற பேச்சாளர்களுக்கும்  சொந்த அனுபவும் உண்டு .

பட்டிமன்றம்  முடிந்து
தாமதமாக வீடு வந்தேன்
வழக்காடு மன்றம்!

THE LITERARY DEPATE OVER
REACHED HOME LATE
TO ACRIMONIOUS CHARGE - SHEETS.


இன்று மனிதத்தொல்லையை விட கொசுத்தொல்லை பெருகி விட்டது .நோய்களும் பெருகி வருகின்றது .
 
மருத்துவமனையில்
ஆரோக்கியமாக
கொசுக்கள் !
 
MOSQUITOES- THE ONLY
HEALTHY INMATES
OF HOSPITALS.

காதல் நினைவுகளை நாம் மறக்க நினைத்தாலும் மறக்க முடிவதில்லை .அதனை உணர்த்தும் அழகிய ஹைக்கூ .

துடைக்கத் துடைக்க
உன் நினைவுகள்
ஒட்டடையாய் !

LIKE STUBBORN COB- WEBS
YOUR MEMORIES
BAFFLE ALL SCRUBS.

எள்ளல் சுவையுடன் நம் ஊர் சாலைகள் பற்றி ஒரு ஹைக்கூ .

சிரிக்காமலே
குழி விழுகிறது
எங்களூர்ச் சாலைகளுக்கு !

DIMPLES APPEAR
ON OUR ROADS
EVEN WITHOUT SMILE 
 
அரசு அலுவலங்களில் நடக்கும் லஞ்சம் பற்றி நேரடியாக இல்லாமல் குறியீடாக உள்ள நல்ல ஹைக்கூ ஒன்று .

நான்கு கால்களும்
பல கைகளுமாய்
அரசாங்க மேசைகள் !
 
JUST FOUR LEGS
BUT MANY HANDS
TABLES OF PUBLIC SERVANTS
 
இது வரை எந்த ஒரு கவிதையும் தாய் மொழியில் இருந்து மிகச்சரியாக பிற மொழியில் மொழி பெயர்க்கப்பட வில்லை என்பதே உண்மை .நாம் படித்துப் பார்த்தால் வேறுபாடு விளங்கும் .எந்த ஒரு மொழி பெயர்பாளருக்கும்  படைப்பாளியின் மூலத்தை அப்படியே மொழி பெயர்ப்பில் கொண்டு வந்து விட முடியாது .அதனால்தான் அறிஞர்கள் பலர் தாய் மொழியில் சிந்தித்தார்கள் தாய் மொழியில் எழுதினார்கள் .
குழந்தையின் உள்ளத்தை படம் பிடித்துக் காட்டுகின்றார் .பாருங்கள் .

பட்டாம் பூச்சி
பிடித்துக் கொடுத்தேன்
இறக்கை முளைத்தது மகளுக்கு !
 
ஆனால் மகளுக்கு சிறகு முளைக்கும் .பட்டாம் பூச்சி சிறகை இழந்து விடும் .
 
CAUGHT A BUTTERFLY
GAVE IT TO THE KID
SHE GREWWINGS.
 
ஆங்கிலத்தில்  ( DAUGHTER ) என்று வரவேண்டிய சொல் ( KID ) என்று வந்துள்ளதைப் பாருங்கள் ..
 
மொழி பெயர்ப்பில் இப்படி நிகழ்வது இயல்புதான் .அதனால்தான் காந்தியடிகள்  திருக்குறளை இந்தியிலும் ஆங்கிலத்திலும் படித்து திருப்தி அடையாமல் திருக்குறளை மூல மொழியான தமிழில் படிக்க அடுத்த பிறவி இருந்தால் தமிழனாப் பிறக்க வேண்டும் ."என்று ஆசைப் பட்டார் .

அன்று காமராசர் காலத்தில் பெரும் பணக்காரர்கள் கல்விக்கு சேவை செய்ய வந்தார்கள் .ஆனால் இன்று பெரும் பணக்காரர்கள் பகல் கொள்ளை அடிப்பதற்காகவே கல்வித்துறைக்கு வருகின்றனர் என்பதை உணர்த்தும் ஹைக்கூ .

வயல்கள் அழித்துக்
கல்லூரி கட்டினார்கள்
நல்ல அறுவடை !

THEY FALLOWED THE LAND
BUILT COLLEGES
SECURED A GOOD HARVEST.

இன்பம் துன்பம் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை .துன்பம் வந்தால் மனம் கவலை கொள் ளாதீர்கள் என்ற வாழ்வியல் தத்துவம் குறியீடாக விளக்கும் ஹைக்கூ .

இரவின் வலிகள்
பொறுத்தால்
பகலின் பிரசவம் !

BEAR PAINS
AT NIGHT
THE DAY IS A NEW BIRTH .

ஜப்பானிய கவிஞர்களுக்கு தமிழ் கவிஞர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்பிக்கும் விதமாக இயற்கையையும் ஹைகூவில் வடித்துள்ளார் .

இரவுக் கூட்டுக்குள் 
நட்சத்திரக் குஞ்சுகள்
இறைதேடி அலையும் நிலா !

BIRDLING STARS
IN THE NESTING DARKNESS
THE MOON IS AFTER ITS PREY.
கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டு வரும் தபூ சங்கர் நூல்கள் போல் கட்டி அட்டையுடன் மிக நேர்த்தியான வடிவமைப்பு .பாராட்டுக்கள் .
இந்த நூலைப் படித்து முடித்ததும் மொத்தத்தில் நந்தவனத்தில் நடந்து வந்த உணர்வு இனிய நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்திஅவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் .--

.

சனி, 16 பிப்ரவரி, 2013

பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி .

பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி .

இரவிலே சுதந்திரம் வாங்கினோம் என்பதால் 
பெட்ரோல் விலையை இரவிலேயே உயர்த்துகின்றனர் .சுதந்திரம் மக்களுக்கு கிடைத்ததோ இல்லையோ. ஆனால் ஆளும் அரசியல்வாதிகளுக்கு நினைத்த போதெல்லாம் பெட்ரோல் விலையை உயர்த்த சுதந்திரம் உள்ளது .ஆளுவோர் எத்தனை முறை பெட்ரோல் விலையை உயர்த்தினார்கள் என்று சரியாக விடை சொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசு வழங்கப்படும் .மத்தியில் .ஆளுவோருக்கு பெரும் பணக்கார்கள் இன்னும் பெரும் பணக்கார்கள் ஆக வேண்டும் .ஏழைகள் இன்னும் பரம ஏழைகள் ஆக வேண்டும் .இது ஒன்று மட்டுமே லட்சியம் ..

ஹெலிஹாப்டரில்  ஊழல் செய்தோர் , டு ஜி ஊழல் செய்தோர், காமன் வெல்த் விளையாட்டில் ஊழல் செய்தோர் கண்டு கொள்ள மாட்டார்கள் .பாலியல் குற்றம் புரிந்தவருக்கு உயர்ந்த பதவி தருவார்கள் .
ஏழை மக்கள் பெட்ரோல் விலை உயர்வால் பாதிப்பார்கள் என்பதை மட்டும் சிந்தித்துப் பார்க்க மாட்டார்கள் .

.பெட்ரோல் மீது தீ பட்டால்தான் நெருப்பு .ஆனால் இன்று பெட்ரோல் விலையை கேட்டாலே மனதில்
 தீ ,நெருப்பு ,வெறுப்பு .

அடிப்படை தேவையாகி விட்ட  பெட்ரோல் விலையை அடிக்கடி ஏற்றி வருகின்றனர் .அடித்தட்டு மக்களுக்கு  பெட்ரோல் விலை உயர்வின் காரணமாக விலைவாசி ஏறிக் கொண்டே போகின்றது .வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் .ஆனால் ஏழை மக்களுக்கு போராட்டமே வாழ்க்கையாகி விட்டது .

விலைவாசியை இறக்குவோம் என்று சொல்லி வாக்கு வாங்கி ஆட்சில் அமர்ந்ததும் தொடர்ந்து மன சாட்சி இன்றி  விலைவாசியை ஏற்றுகிறார்கள் .
மதுரையில் ஆட்டோ ஓட்டுனர்கள் நொந்து எழுதியது ஆட்டோவில் கண்ட வாசகம் .

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் !
அவன் ஆட்டோ ஒட்டி வேதனையில் வாட வேண்டும் !
பெட்ரோல் விலை உயர்வு !

வன யுத்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

வன  யுத்தம் !
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் .

தெரிந்த கதை தெரியாத உண்மை என்று சுவரொட்டிகளில் பிரசுரம் செய்துள்ளார்கள் .வீரப்பன் கதை என்று ஆர்வமாக சென்று படம் பார்த்தேன் .ஏமாற்றமே மிச்சம் .வீரப்பனின் ஒரு முகம் மட்டுமே காட்டி உள்ளனர் .மறு  முகம் காட்ட வில்லை .

வீரப்பன்  கர்னாடகத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். அவர் கொலை, கொள்ளை செய்த போதும் மக்களுக்கு பல நன்மைகள் செய்தார் என்பதற்கு மக்களே சாட்சி ! கர்னாடகம் வீரப்பன் இருக்கும் வரை வாலை சுருட்டிக் கொண்டே இருந்தது ..வீரப்பன் இறந்ததும் வட்டாள்  நாகராஜ் போன்ற வட்டார ரவுடி எல்லாம் தமிழக எல்லைப் பகுதிகளை கர்னாடத்தோடு சேர்க்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்யும் அளவிற்கு வாலாட்டி வருகின்றனர்.
 வீரப்பன் மரணம் தமிழகத்திற்கு பெரிய இழப்புதான் .
வீரப்பன் இறப்பில் மர்மம் உள்ளது .அவருக்கு மோரில் விஷம் கலந்து கொன்று  விட்டு பிறகு பிணத்தை ஆம்புலன்சில் வைத்து சுட்டதாக காவல்துறை நாடகமாடிய தகவல் புலானாய்வு இதழ்களில்  வந்தது .படித்தேன் .ஆனால் இந்தப் படத்தில் மோர் தருகிறார் .ஆனால் காவல் துறை உயிரோடு சுடுவது போல காட்டி உள்ளனர் .காவல்துறைக்கு சாதகமாக நினைத்தபடி படம் எடுத்து விட்டு உண்மை கதை என்று பித்தலாட்டம் செய்துள்ளனர் .படத்தின் இறுதிக் காட்சியை பார்வையாளர் யாருமே விரும்பவில்லை வீரப்பனை ரசித்தவர்கள் வீரப்பனை மரணத்தை யாரும் ரசிக்க வில்லை .படத்தில் மயான அமைதி நிலவியது .
வீரப்பனாக நடித்துள்ள கிஷோர் மிக நன்றாக நடித்துள்ளார் .பாராட்டுக்கள் .ஹெலிகாப்டரில் இருந்து காடுகளை பாடமாக்கிய ஒளிப்பதிவைப் பாராட்டலாம் .

பின்னணி இசை மிக நன்று .வீரப்பனை வில்லனாக காட்டிட முயன்று தோற்று விட்டார் இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் .
வீரப்பனை நேர்முகத்தை தொலைக்காட்சியில் பலரும் பார்த்து உள்ளனர் .அதில் அவரே பல முறை சொல்லி உள்ளார் .அரசியல்வாதிகள் பலர் துரோகிகள் என்று .அது பற்றி எதுவும் படத்தில் இல்லை . வீரப்பன் பற்றிய நல்ல பிம்பத்தை தகர்க்க முயன்று தோற்று விட்டார் .வீரப்பன் மனைவி  இந்த படத்தை எதிர்த்து போட்ட  வழக்கை திரும் பெற்று இருக்க கூடாது .கொடும்ப சூழ்நிலை கருதி 25 லட்சம் தருவதாக சொன்னதும் வழக்கை திரும் பெற்று இருக்கிறார் .அவருடைய வறுமை காரணமாக இருக்கலாம் .மன்னிக்கலாம் .
காவல்துறை விளம்பரப் படம் போல உள்ளது .காவல்துறை வீரப்பனை தேடுகின்றோம் என்ற பெயரில் மக்கள் மீது நடத்திய  வன்முறை ,பாலியல் வன் புணர்ச்சி பற்றி ஒரு வரி சொல்ல வில்லை .இது பற்றி வழக்குகள் உள்ளது .உண்மைக் கதை என்று சொல்லி தெரியாத உண்மை என்று சொல்லி தெரிந்த உண்மைகளை மறைத்து எடுத்துள்ளார் .

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பாத்திரம் திரைஅரங்கில் புகைப்படத்தில்  உள்ளது .ஆனால் படத்தில் ஒரு காட்சியிலும்  முத்துலட்சுமி பாத்திரம்  வரவில்லை .வீரப்பனின்  உண்மை கதை படமாக வேண்டும் .மக்கள் தொலைக்காட்சில் உண்மை கதை வந்தது .பலரும் பார்த்துப்  பாரட்டினார்கள் .அந்த தொடரை இயக்கிய இயக்குனரை வைத்து உண்மை கதை படமாக்கப் பட வேண்டும் .

ஊழல் படிந்த வன அதிகாரிகளால் ,காவல் துறையினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் அரணாக வீரப்பன் இருந்தார் என்பதை மறுக்க முடியாது .அது பற்றி ஒரு காட்சியோ ஒரு வசனமோ இல்லை .மிக நுட்பமாக எடுத்தது போல காட்டிக் கொள்ள தேதி நேரம் காட்டி ஏமாற்றி உள்ளார் .வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

படித்ததில் பிடித்தது !

படித்ததில் பிடித்தது !

உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

உருவி எடுக்கப்பட்ட கனவு !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !
செல் 994298123
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அமுதமதி வெளியீடு ,65.மேலபச்சேரி ,திருப்பரங்குன்றம் .மதுரை .625005 விலை ரூபாய்
.செல்  30.8608341428.

நூல் ஆசிரியர் கவிஞர் இரா செராயன் திருப்பரங்குன்றத்தில் வாழும் கட்டிடப் பொறியாளர் மட்டுமல்ல புதுக்கவிதைக் கட்டுவதிலும் வல்லவர் என்பதை மெய்ப்பிக்கும் நூல் இது .திருப்பரங்குன்றத்து கவிதைக் குன்று புலவர் தமிழ்க்கூத்தனார் கவிதைப் ப
ட்டறையில் வளர்ந்தவர் .திருப்பரங்குன்றத்து 16 கால் மண்டபத்தில் நடக்கும் கவியரங்கங்களில் என்னோடு கவிதை பாடும் இனிய நண்பர் .
எழுத்தாளர் ,நல்ல சிந்தனையாளர் ,இயக்குனர் பாரதி கிருஷ்ணா குமார் அணிந்துரை
அழகுரையாக உள்ளது .
மனிதனுக்கும் தேனீக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தும் புதுக் கவிதை .இதோ !
பிரியமான தேனீக்கள்
இரவிலும் சிறகசைக்கின்றன
நானோ
ஒரு துளி
வியர்வை பொறுக்காமல்
விசிறிக் கொண்டு இருக்கிறேன் !

திருப்பரங்குன்றத்தில் எந்த ஒரு கூட்டம் என்றாலும் இலக்கியக் கூட்டம் என்றாலும்,கட்சிக் கூட்டம் என்றாலும் மக்கள் கூடுமிடம் 16 கால் மண்டபம் .இந்த நூலின் தலைப்புக்கான கவிதையும் இதுதான் .

16 கால் மண்டபம் !

எங்கோ இருந்த ஒரு மலையின்
ஆழ்ந்த உறக்கத்திலிருந்து
உருவி எடுக்க்கப்பட்ட
பெரும் கனவு
நிற்கிறது 16 கால்களுடன் !
யாத்திரை நடந்திருக்கிறது
அரசியல் கூட்டங்களின் மகவரியாக
பலரது வீட்டின் முகவரியாகவும் !

கவிதைக்கு கற்பனை அழகு .கவிஞனுக்கு சிந்தனை அழகு. நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன்வித்தியாசமாக சிந்தித்து உள்ளார் .

வரம் !
சீவப்பட்ட பென்சிலில்
மனதின் காயங்களை
எழுதுகிறோம் !
வசதியாக !
பென்சிலின் காயங்களை
மறந்துவிட்டு !

வாடிய
பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் போல சீவிய பென்சிலுக்காக வாடி உள்ளார் .

பேச்சிக்கா கவிதையில் கிராமிய மண் வாசனை சொற்கள் மண் மணம் வீசுகின்றன .நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளை ,மனிதர்களை, இயற்கையை , மண்ணை மரத்தை உற்று நோக்கி கவிதை வடித்துள்ளார் .
இயற்கையை நூல் படிக்கும் வாசகர்களுக்கு காட்சிப் படுத்தி வெற்றி பெ
றுகின்றார் .

இட்லி வெந்து விட்டதா என்பதை பார்க்க அம்மா விரல் விட்டு பார்க்கும் பழக்கத்தை கவனித்து ஒரு கவிதை
இதோ ! இந்தக் கவிதை படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் அவரது அம்மாவையும் , அவர் சாப்பிட்ட இட்லியையும் நினைவூட்டும் .

ஆவி பறக்க
ஈடு ஈடாய் அவித்துத் தட்டிய
இட்லிகள் சிலவற்றில்
அம்மாவின் ஆட்காட்டி விரல் இட்ட
பள்ளங்கள் சூடு தணிந்து
ஆறியிருந்த பின்னும்
பள்ளங்கள் முழுக்க
நிரம்பியிருக்கும்
விரலைச் சுட்ட வேக்காடு !

எத்தனையோ இசைக் கருவிகள் உண்டு .ஆனால் பறை
ஒலிக்கு ஈடான ஓசையை எந்த இசைக் கருவிகளும் எழுப்புவதில்லை .தமிழ் மொழி தெரியாத அயல் நாட்டவர்கள் கூட மெய் மறந்து பறை ஒலி ரசிக்கின்றனர் .பறை பற்றி ஒரு கவிதை .

பறை !
இசைவானின் உறை !
அடிக்க அடிக்க
காற்றின் கரத்தில்
சுழல்கிறது வாள் !
அதிகாரத்தின் மூச்சுக்காற்று திணறுகிறது !
அதிர்கிறது கோட்டை !

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல ஒரே கவிதையில் உயர்ந்த தமிழையும்  , உயர்ந்த பனை மரத்தையும் பாராட்டி உள்ளார் .பாராட்டுக்கள் .

சங்க இலக்கியத்துக்கு
ஓலைகள்
தந்த செருக்கு
நிமிர்ந்தே வளர்கிறது
புவியில் பனை !

.நிலவைப் பாடாத கவிஞர் இல்லை .நிலவைப் பாடாதவர் கவிஞர் இல்லை என்பது உண்மை .
கவிஞர் இரா சென்ராயனும் நிலவைப் பாடி உள்ளார் .

நிலா ஏழு !
தேய்வது வளர்வது
வளர்வது தேய்வது
காணாமல் போவது
வாழ்வின் கவிதை இது !

இன்பம் , துன்பம் இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை .இறுதியில் மறைந்து போவதுதான் வாழ்க்கை என்ற வாழ்வியல் கருத்தை நிலவின் மூலம் விளக்கி உள்ளார். பாராட்டுக்கள் .

நண்பர்களின் உள்ள
த்தை படம் பிடித்துக் காட்டும் கவிதை நுட்பமான வரிகள் .

உழைப்பின் திரு !

நண்பர்களோடு வசிக்கிற
குறுகிய அறையின் சுவர்கள்
வருகைகள் குறித்த கவலைகளற்று
அகன்று கொடுக்கும் !

உண்மை பணம் இருப்பவர்களிடம் மனம் இருப்பதில்லை 
மாளிகையில் வசிப்பவர்களுக்கு நண்பர்களுக்கு இடம் அளிக்கும் குணம் இருபதில்லை .ஆனால் ஏழைகள் குடிசையாக இருந்தாலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் .வறுமையிலும் செம்மையாக வாழும் நண்பர்களை பாராட்டி உள்ளார் .

விபத்தில் இருந்து தப்பியவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வை நினைத்துப் பார்க்கும் கவிதை .

தப்பிய வாசம் !


23 தையல்களால் நிறுத்தப்பட்டது
தலையில் பீறிட்ட ரத்தம்
ஒரு கணம் தப்பியதால் தப்பியது
ரோசாப் பூ மாலைகளின் வாசம் !

வலிகள் மிகுந்ததுதான் வாழ்க்கை ! என்பதை மெய்ப்பிக்கும் கவிதை ஒன்று .

என் மீது எறியப்பட்ட துரோகத்தின் ஈட்டிகளை
பிடுங்கிக் கொண்டே இருக்கிறேன் .
தீர்ந்தபாடில்லை ! இன்னும் !
காண்டா விளக்கு போல்தான் வாழ்வும் வெளிச்சத்தை விட
கரிப்புகையே அதிகம் !

 புதுக்கவிதை என்ற பெயரில் புரியாத இருண்மை கவிதை
எழுதி  வரும் கூட்டம் உள்ளது .ஆனால் இவர் கவிதை எளிமையாகவும் , இனிமையாகவும் எல்லோருக்கும் புரியும் படி உள்ளது .பாராட்டுக்கள் .

--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

வியாழன், 14 பிப்ரவரி, 2013

" மாமதுரை போற்றுவோம் " நிகழ்ச்சி புகைப்படங்கள் .

" மாமதுரை
போற்றுவோம் " நிகழ்ச்சி புகைப்படங்கள் .

" மாமதுரை போற்றுவோம் " நிகழ்ச்சி புகைப்படங்கள் .

" மாமதுரை
போற்றுவோம் " நிகழ்ச்சி புகைப்படங்கள் .

" மாமதுரை போற்றுவோம் " நிகழ்ச்சி புகைப்படங்கள் .

சங்கம் வைத்து தமிழ் மதுரையில்  நடந்த " மாமதுரை
போற்றுவோம் " நிகழ்ச்சி புகைப்படங்கள் .
நன்றி தீக்கதிர் புகைப்படக் கலைஞர் திரு .லெனின்

சங்கம் வைத்து தமிழ் மதுரையில் தமுக்கம் திடலில் நடந்த " மாமதுரை போற்றுவோம் " நிகழ்ச்சி புகைப்படங்கள்

சங்கம் வைத்து தமிழ் மதுரையில் தமுக்கம் திடலில் நடந்த " மாமதுரை
போற்றுவோம் " நிகழ்ச்சி புகைப்படங்கள் .
நன்றி தீக்கதிர் புகைப்படக் கலைஞர் திரு .லெனின்

பெருங்கவிக்கோ வா .மு .சேதுராமன் அவர்களுக்கு வரவேற்பும் பாராட்டும்

தமிழ் ஊர்திப் பயணம் கன்னியா குமரியில் இருந்து மதுரை வந்து சேர்ந்த பெருங்கவிக்கோ வா .மு .சேதுராமன் அவர்களுக்கு வரவேற்பும் பாராட்டும்

தமிழா ! சாதியை மற ! மதத்தை மற ! கட்சியை மற ! தமிழா ! தமிழால் தமிழாராய் இணை ! என்பதை வலியுறுத்தி, ஆரம்பக் கல்வி தமிழில் தமிழ் வழியில்  மட்டுமே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் ஊர்திப் பயணம் கன்னியா குமரியில் இருந்து மதுரை வந்து சேர்ந்த பெருங்கவிக்கோ வா .மு .சேதுராமன் அவர்களுக்கு வரவேற்பும் பாராட்டும் மேலவாசல் தேவாலயத்தில் நடைபெற்றது அருட்த்தந்தை ஞான ஆனந்தராஜ் தலைமை வகித்தார் .அருட்த்தந்தை ரொனால்ட் ஆப்ரகாம் வரவேற்றார் .திரு வேதா நவ மணியன் முன்னிலை வகித்தார் .கவிஞர் இரா .இரவி ,கவிபாரதி  அசோக்ராஜ் ,முன்னாள் துணை ஆட்சியர் கருப்பையா ,கவிஞர் சாப்டூர் சத்திர கிரியான் ,தேசிய வலிமை ஆசிரியர் வே .சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொன்னாடைப் போர்த்தி பாராட்டினார்கள் .பெருங்கவிக்கோ வா .மு .சேதுராமன் ஏற்புரையாற்றி விட்டு சென்னை நோக்கி பயணமானார் .மதுரை மக்கள் வழி அனுப்பி வைத்தனர் .


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !புதன், 13 பிப்ரவரி, 2013

"மாமதுரைபோற்றுவோம் " வைகை ஆற்றில் நடந்த ஊர்வலம் "

சங்கம் வைத்து தமிழ் மதுரையில்
"மாமதுரைபோற்றுவோம் " வைகை ஆற்றில் நடந்த ஊர்வலம்  "   புகைப்படங்கள் .
நன்றி தீக்கதிர் புகைப்படக் கலைஞர் திரு .லெனின் lenin.iniyan@gmail.com

" மாமதுரை போற்றுவோம் " ஊர்வலம் புகைப்படங்கள் .

சங்கம் வைத்து தமிழ் மதுரையில் நடந்த " மாமதுரை
போற்றுவோம் " ஊர்வலம்  புகைப்படங்கள் .
நன்றி தீக்கதிர் புகைப்படக் கலைஞர் திரு .லெனின்

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...