கனவில் உண்ணும் கவளங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் தா .ஆதித்தன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

கனவில் உண்ணும் கவளங்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் தா .ஆதித்தன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

முக்கடல் .72.எம்.ஜி .ஆர் .சாலை ,நங்கநல்லூர் ,சென்னை .61 பேசி 9444365642
.நூலின் அட்டைப்படம் ,நூலின் தலைப்பு வித்தியாசமாக உள்ளது .எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் அணிந்துரையும் ,கவிஞர் பழநி பாரதி வாழ்த்துரையும் நூலிற்கு அழகு சேர்த்துள்ளது .

நூலில் உள்ள புதுக்கவிதைகள் படிக்கும் அனைவருக்கும் புரியும்படி உள்ளது .பாராட்டுக்கள் .எழுதிய கவிஞரே வந்து விளக்கம் சொன்னாலும் புரியாத இருண்மைக் கவிதைகள் இந்த நூலில்  இல்லை ..மகிழ்ச்சி
சமுதாயத்தை உற்று நோக்கி உள்ளார் .சந்தித்த மனிதர்களால் வந்த பாதிப்பை உணர்ந்து நொந்து கவிதை எழுதி உள்ளார் .மனிதர்கள் மனிதர்களாக வாழ வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டி உள்ளது .

வேந்தும் வேகாத
பச்சிலைப் பசுமரமாய்
வெந்து கொண்டிருக்கிறேனே !
இன்றைய
சுயநலமும்
பொறாமையும் கொண்ட
மனிதர்களின் வேகாத நினைவுகளால் !

காதல் பற்றி ஒரு கவிதை !
கவிதை அல்ல !
அங்கு
இதய நாண்களை மீட்டும் போது
ஒலிப்பது ராகம் அல்ல சோகம் ...சோகம் ...

கேட்பார் பேச்சுக் கேட்டு கேட்டுப் போகாமல் , அடுத்தவர் சொல்கிறார் என்பதற்காக விருப்பமின்றி எதையும் முடிவு எடுக்காதே ! என்ற கருத்தை உணர்த்தும் கவிதை .

நம் வாழ்க்கை நம் கையில் !
உன் வாழ்க்கையை நீயே தீர்மானி
பிறர் சொல்வதைக் கேட்டுக் கொள் !
ஆனால்
உன் பாதையை நீ தேடு ! நீயே தேர்ந்தெடு !
கவனமாகக் தேர்ந்தெடு !

தமிழைப் பாடாத கவிஞர் . கவிஞரே இல்லை நூல் ஆசிரியர் கவிஞர் தா .ஆதித்தன் தமிழைப்பாடி உள்ளார்
தமிழ் மொழியின் பெருமையை இன்று உலகம் அறிந்து வருகின்றது .உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் தமிழ்ச் சொற்கள் உள்ளது என்று ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன   பலமொழிப்புலவர்  .மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆராந்து சொன்ன உண்மை " உலகின் முதல் மொழி தமிழ் ." உலகம் உணர்ந்து விட்டது .

தமிழ்த்தாய் திருப்பள்ளியெழுச்சி !
உலகத்தாயின் முதல் பெண்ணினாய் !
என்றும் வாடாத அறிவு மலரினாய் !
பழமொழிக் குழந்தையினை
ஈன்றெடுத்த தாயினாய் !
மனைவி எவ்வளவு சுவையாக சமைத்தாலும் கணவனுக்கு தன்  அம்மாவின் சமையலையே புகழ்வது வழக்கம் .இயல்பு .

அந்த அம்மா பாசம் உணர்த்தும் கவிதை ஒன்று .

அம்மா சமைக்கும்
உளுந்தச் சோற்றுக்கும்
கூட்டாச் .சோற்றுக்கும்  முன்
தோற்றுப் போகிறது
நட்சத்திர ஹோட்டல்
பிரியாணி !

மனிதர்கள் பலர்க்கு ஆடை சுத்தமாக உள்ளது .ஆனால் மனசு அழுக்காக உள்ளது .அதனால் சமுதாயம் சீர்க் கேட்டுப் போகின்றது .

வாழ்க்கை எனும்
நந்தவனத்தில்
தன்னலமும்
பொறாமையும் கொண்டவர்களின்
மூச்சுக் காற்று
அதிகமாய்ப் பரவியதால்
இன்று
பசுமை இழந்து
தவிக்கிறது மனது !

பல்வேறு  பொருள்களில் சிந்தித்து கவிதை வடித்துள்ளார் .தொடர்ந்து எழுதுங்கள் .பாராட்டுக்கள் .

--
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !












கருத்துகள்