இடுகைகள்

October, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாசகர் மடல் ! கவிஞர் இரா .இரவி !

படம்
வாசகர் மடல் ! கவிஞர் இரா .இரவி !
.
தி இந்து தமிழ் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் .
நாளிதழ் சிறப்பாக வருகின்றது ..அறிவார்ந்த பல கட்டுரைகள்  வருகின்றன .பாராட்டுக்கள் .மூளைக்காரன் பேட்டை பகுதியில் ஆரம்பத்தில் பொது அறிவுக்கு பயன்படும் விதத்தில் வந்தது .பின் ஆங்கிலச் சொற்களை விடையாக வரும்படி வந்தது .ஆங்கிலச் சொற்கள் தவிர்க்கும் படி தங்களுக்கு மடல் அனுப்பினேன் .தற்போது அஜித் ,விஜயகாந்த் ,சிம்ரன் இவர்கள் நடித்த படங்களின் பெயர்கள்  குறித்த கேள்விகள் வந்தது .வருங்காலங்களில் திரைப்படம் தவிர்த்து பொது அறிவு சமந்தமாக மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் கேள்விகள் அனுப்பும் படி வாசகர்களுக்கு அறிவிப்பு செய்யுங்கள் .தரமான அறிவார்ந்த கேள்விகளை மட்டும் பிரசுரம் செய்யுங்கள் .திரைப்பட செய்தி வெளியிடும் பக்கத்தில் கவர்ச்சி படங்களை தவிர்த்திடுங்கள் .குடும்பத்தில் அனைவரும் படிக்கும் நாளிதழில்    என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.no…

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

படம்
ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

வளர்ப்போம்
புறத்தில் மரம்
அகத்தில் அறம்

நல்லது
நினை பேசு செய்
நடக்கும் நன்மை !

உணருங்கள்
ஆடம்பரமன்று அவசியம்
கல்வி !

சேமிப்பில் சிறந்தது
வளமாக்கும் சேமிப்பு
மழை நீர் சேமிப்பு !

இல்லங்களில் இன்று
வழக்கொழிந்தது  வரவேற்பு
தொ(ல்)லைக்காட்சி !

தேய்பிறை
வளர்பிறையாகுமா ?
அரசுப்பள்ளிகளில் தமிழ் !

உறவுகள் மட்டுமல்ல
ஊரும் மரணத்திற்கு அழுதால்  
வாழ்வாங்கு வாழ்ந்துள்ளார் !

இறப்பு இல்லை
இறந்தும் வாழ்கிறார்கள்
பொதுநலவாதிகள் !

வராது நோய்
பசித்த பின்
புசித்தால் !

உச்சரிக்க  வேண்டாம்
முன்னேற்றத்தின் எதிரிகள்
முடியாது தெரியாது நடக்காது !

நாளை என்று
நாளைத் தள்ளிட
நாள் உன்னைத் தள்ளும் !

உடலை உருக்கும்
உருவமில்லா நோய்
கவலை !

பெறுவதை விட
கொடுப்பதே இன்பம்
பொதுநலம் !

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் ! நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

படம்
கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள்  !


நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
குமரன் பதிப்பகம் ,19 கண்ணதாசன் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை .600017. விலை ரூபாய் 100.
 நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .அவர்கள்  அரசுப்பணியில் செயலராக  இருந்து கொண்டே இலக்கியப்பணியும் செய்து வருபவர் .முகத்தில் புன்னகையை எப்போதும் அணிந்திருக்கும் பண்பாளர் .அன்பாகப் பேசிடும் நல்லவர் .வல்லவர்.
 இவரது முந்தைய  நூல் உலகப்பொதுமறையான திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கமும் ஆங்கிலத்தில் எழுதி . ( முன்னாள் ) இந்தியாவின் முதற் குடிமகன் மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் பாராட்டைப்   பெற்றது .
நூல் ஆசிரியர்  சுற்றுலாத்துறையின் ஆணையாளராக இருந்தபோது, மிகச் சிறந்த சிந்தனையாளர் வெ .இறையன்பு  இ.ஆ .ப .அவர்கள் சுற்றுலாத்துறையின் செயலராக இருந்தார்கள் .இந்த இருவரின் காலம் சுற்றுலாத்துறையின் பொற்க்காலம் என்று சொல்லும்அளவிற்கு வரலாற்று சிறப்பு மிக்க பணிகள் செய்தார்கள் .தற்போது தமிழ் வளர்ச்சித் துறையின்  செயலராக இருந்து தனி முத்திரை பதித்து வருகிறார்கள் .
இந்த நூலை ஆ…

எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினால் தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கோ.சௌந்தி .தென் கொரீயா !

படித்ததில் பிடித்தது !
எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினால் தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! 

கோ.சௌந்தி    .தென் கொரீயா !


-நெல்லெடுத்து கீரிவிடுமுன்னே
சொல்லெடுக்க சொல்லிக்கொடுத்தது,
சோரெடுத்து தின்றுபழகும்முன்னே
மரநிழலில் விரல்பிடித்து எழுதிபார்த்தது,
என் முகவடிவம் நானறியும்முன்னே
மீசைக்காரனவன்
முகம் மனதில் பதியச்செய்தது,
ஒரு  நாளைக்கு
அரைமணி தான் என்றபோதும்
எப்போது வருவார் ஐயா
என காத்திருக்கச்செய்தது,
சேர சோழ பாண்டியரேல்லாம்
பார்விட்டுப்போனபின்னும்
நமைவிட்டுப்போகாமலிருக்கச்சேய்தது,
ஏர்கலப்பை பிடிக்கும்போதும்
போர்களத்தை பிடிக்கும்போதும்
இதயத்தில் துடிப்பது,
அம்மா என நான் சொல்கையிலும்
அப்பாவென என் மகன் சொல்கையிலும்
என்றுமே வாழும் தமிழ் ,வீழாது தமிழ்.

நேரம் நல்ல நேரம் ! நூல் ஆசிரியர் லேனா தமிழ் வாணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

படம்
நேரம் நல்ல நேரம் !
நூல் ஆசிரியர் லேனா தமிழ் வாணன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மணிமேகலைப்  பிரசுரம் ,7.தணிகாசலம் சாலை ,தியாகராயர் நகர், சென்னை .600017. விலை ரூபாய் 30.
அள்ள  அள்ள  அன்னம் வரும் அட்சயப் பாத்திரம் போல படிக்கப் படிக்க நூல்களை பதிப்பித்துக் கொண்டே இருக்கும்  மணிமேகலைப் பிரசுரம்  .தரமான கையடக்க பதிப்பாக இந்த நூல் வந்துள்ளது .நூலின் தலைப்பான " நேரம் நல்ல நேரம் "என்பதற்குப் பொருத்தமாக கூவி   அழைத்து காலையில்  எழுப்பிவிடும்  சேவல் ,ஒழி கொடுத்து துயில் எழுப்பும் கடிகாரம் அட்டையில் மிக நேர்த்தியாக அச்சிட்டுள்ளனர் .
நூல் ஆசிரியர் லேனா தமிழ் வாணன் அவர்கள் நாடறிந்த நல்ல எழுத்தாளர் ,பேச்சாளர் .'புலிக்குப் பிறந்தது பூனையாகாது' என்ற பொன்மொழியை மெய்ப்பிக்கும் வண்ணம் மிகப் பெரிய எழுத்தாளர் திரு .தமிழ்வாணன் அவர்களின் புதல்வர் .இவரது சகோதரர் ரவி   தமிழ்வாணன் அவர்களும்  வெற்றிக்கு துணை நிற்கிறார்கள் .இவர்கள் இருவரையும் சென்னையில் நடந்த இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா .விஜய் விழாவில் சந்தித்து உரையாடி உள்ளேன் .மிகவும் அன்பாகப் பேசும் பண்பாளர்கள் .
 'தாய் எட்டடி …

மதுரை மீனாட்சி மெட்ரிக் பள்ளியில் மாணவர் தின விழா ! நன்றி ! தினத்தந்தி ! மதுரை .

படம்
மதுரை மீனாட்சி மெட்ரிக் பள்ளியில் மாணவர் தின விழா ! நன்றி ! தினத்தந்தி  ! மதுரை .

இன்று காவியக் கவிஞர் வாலி பிறந்த நாள் 29.10.2013

படம்
காவியக் கவிஞர் வாலியே !   கவிஞர் இரா .இரவி !
காவியக் கவிஞர் வாலியே ! உந்தன் மரணம் எங்களுக்கு வலியே  !
மாலுமி இழந்த கப்பல் போல நாங்கள்  மட்டற்ற கவிஞரை இழந்து தவிக்கிறோம் !
வாலிப வாலி என்பது உண்மை ! வாலிபக்கவியை எண்பது கடந்தும் எழுதியவர் !
புதியவானம் புதிய பூமி என்று எழுதி ! புத்துணர்வை விதைத்தவர் வாலி !
'ஏமாற்றாதே ! ஏமாறாதே !என்று எழுதி ! எமக்கு மனிதநேயம் கற்பித்த வாலி !
கண் போன போக்கிலே கால் போகலாமா ? காளையரை நெறிப் படுத்திய  வாலி !
தரை மேல் பிறக்க வைத்தான் என்று எழுதி ! துயரில் வாடும் மீனவர்களின் கண்ணீர் பாடிய வாலி !
காற்று வாங்கப் போனேன் கவிதை வாங்கி வந்தேன்  !  காற்றில் பாட்டில் கலந்து என்றும் நின்ற வாலி !
அக்கிரகாரத்தில் பிறந்த அதிசய மனிதர் வாலி ! அய்யா பெரியார் பற்றியும் கவி வடித்த வாலி !
படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி !  மரணம் இல்லை ! கவிஞர் இரா .இரவி !

தமிழினக்காவலர் பெரிய அய்யா பா .இராமச்சந்திர ஆதித்தன் அவர்களுக்கு கவிதை அஞ்சலி

படம்
தமிழினக்காவலர்  பெரிய அய்யா பா .இராமச்சந்திர ஆதித்தன் அவர்களுக்கு கவிதை அஞ்சலி

தமிழினக்காவலர் பெரிய அய்யா பா .இராமச்சந்திர ஆதித்தன் அவர்களுக்கு கவிதை அஞ்சலி !

படம்
தமிழினக்காவலர்  பெரிய அய்யா பா .இராமச்சந்திர ஆதித்தன் அவர்களுக்கு கவிதை அஞ்சலி நிகழ்வு மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் நடந்தது .

  நன்றி ! கவிஞர் சென்றாயன் !
நன்றி !காமராஜ் புகைப்படம் ,ஒளிப்பட நிறுவனம் .திருப்பரங்குன்றம்