வெள்ளி, 30 செப்டம்பர், 2011

இதயத்தில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் பொன்.குமார்.

இதயத்தில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர்  பொன்.குமார்.

http://ponkumarsalem.blogspot.com/2011/08/blog-post_22.html
இரவும் பகலும் இடைவிடாது வந்து கொண்டேயுள்ளன. இது போலவே இரா.இரவி ஹைக்கூ படைத்தலும் தொடர்கிறது. ஹைக்கூ கவிதைகள், விழிகளில் ஹைக்கூ, நெஞ்சத்தில் ஹைக்கூ, உள்ளத்தில் ஹைக்கூ என்னும் ஹைக்கூத் தொகுப்புகளைத் தொடர்ந்து தற்போது தந்திருக்கும் தொகுப்பு "இதயத்தில் ஹைக்கூ" இரா.இரவியின் இதயத்துடிப்பு 'ஹைக்கூ ஹைக்கூ' என்றே ஒலிக்கும்.
சுனாமியில் பல்லாயிரம் உயிர்கள் பலியாயின. இப்பெரும் சோகத்தை பலகவிஞர்கள் கவிதையில் பாடியுள்ளனர். இரா.இரவியோ ...
"தாய் இருக்க சேய்
சேய் இருக்க தாய்
சுனாமி கொலை"
என சோகத்திலும் சோகமான பிரிவு சோகத்தைக் கூறியுள்ளார். இது முதல் ஹைக்கூ. தொடர்ந்து சுனாமி தொடர்பாக பல ஹைக்கூக்களை எழுதியுள்ளார். ஒரு சுனாமி கவிஞருக்கு பல கவிதைகளைத் தந்துள்ளது.
விளம்பரங்கள் பெண்ணை பலவாறாய் சீரழித்து வருகிறது. பண்பாட்டையும் சிதைக்கிறது. ஒரு மெண்டோஃபிரஸ்க்காக ஒரு பெண் சோரம் போவதான விளம்பரத்தை சொரணையில்லாமல் ஒவ்வொருவரும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். கோபமுற்ற கவிஞர்..
"பெரும் பங்கு
பண்பாட்டைச் சிதைப்பதில்
விளம்பரங்கள்"
என சாடியுள்ளார். பண்பாடு காக்க கவிஞர் ஆற்றியுள்ள சிறுபங்கிது.
மனிதர்கள் நாய் வளர்ப்பார்கள். வளர்க்கும் நாய்க்குத் தரும் மரியாதையை மனிதனுக்குத் தருவதில்லை. இந்நிலை கண்டு வருந்திய கவிஞர்...
"அம்மா தாயே
மனிதனை விரட்டி விட்டு
நாய்க்கு கறிசோறு"
என் எழுதி மனிதாபிமானமற்றவர்களாக மனிதர்கள் உள்ளனர் என்கிறார். இது கவிஞரின் மனித நேயத்தைக் காட்டுகிறது.
இத்தொகுப்பின் பின்பகுதியில் புகைப்படங்களையும், அதற்கு எழுதிய ஹைக்கூ கவிதைகளையும் இணைத்துள்ளார். ஒரு படத்திற்கு ஒரு கவிதை எழுதுவதே கடினம். கவிஞரோ ஒவ்வொன்றுக்கும் ஆறு கவிதைகள் எழுதி அசத்தியுள்ளார். படம் கூறும் கருத்துக்களை ஹைக்கூவில் பலவாறாய் பிரதிபலிக்கச் செய்துள்ளார். படங்களைத் தாண்டியும் பொருள் தரக்கூடிய தன்மை மிக்கவையுள்ள்ன.
ஹைக்கூ படைப்பில் இடையறாது இயங்கி வரும் இரா.இரவி அவர்கள் பாராட்டுக்குரியவர். ஒவ்வொரு ஹைக்கூவிலும் அவரது அக்கறையை உணர முடிகிறது. ஐந்து தொகுப்புகளின் மூலம் ஆயிரத்து ஐநூறுக்கும் மேல் ஹைக்கூ படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிடும்படி ஹைக்கூ எழுத வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

வியாழன், 29 செப்டம்பர், 2011கவிஞர் மு .குருநாதன் எழுதிய விழிகளின் விழுதுகள் நூலை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் மோகன் வெளியிட எழுத்தாளர் ஹேமலதா பாலசுப்ரமணியன் பெற்றுக் கொண்டார் .உடன் திருச்சி சந்தர் பேராசிரியர் யாழ் சந்திரா ,கவிஞர்கள்  இரா .இரவி ,மூரா ,இரா .கணேசன்,மலர்மகள் ,மஞ்சுளா ,குமதம் ஆறுமுகம் ,பா .உஷா மகேஸ்வரி ,நீத்தி ,யமுனா ரகுபதி ,   நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்


உலக சுற்றுலா தின விழா மதுரை GRT விடுதியில் நடைப்பெற்றது .மதுரை சுற்றுலா அலுவலர் தர்மராஜ் உதவி சுற்றுலா அலுவலர்கள் இரா .இரவி ,நெல்சன்       ஆகியோர்  .        வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை தமிழ்ப் பண்பாட்டு முறையில் சந்தனம் தந்து ,மாலையிட்டு, இனிப்பு வழங்கி வரவேற்றனர்.விழாச் சிறக்க GRT நிர்வாகம் ஒத்துழைப்பு நல்கினார்கள். 

படித்ததில் பிடித்தது பெண்ணே உன் மனதில்... கவிதாயினி T.கார்த்திகா

படித்ததில் பிடித்தது

பெண்ணே உன் மனதில்... கவிதாயினி T.கார்த்திகா   

 
சிந்தும் மழைத்துளியிலே
நான் சித்திரமாய் வடித்த
ஒரு பெண்ணின் உருவம்
கண்ணிமைக்கும் நேரத்தில்
கல் பட்டு சிதறினாலும்,
என் மனமெனும்  ரோஜாவில்
மங்கை அவள்
பனிதுளியாகிப் போனாள்!
 
கறைபடாத மனதை 
களவாடிச்சென்றாள்!
காயமில்லா  என்   இதயத்தில்
வலி தந்தாள்!
 
காற்றுப்போக  முடியாத 
நெஞ்சிலே
 கள்ளி அவள்
குடித்தனம் புகுந்தாள்!
 
பகல்நேரம்  கண்ட 
கனவாகிப்போனாள்!
பாதையில் என்னை 
தனியாக்கிச்சென்றாள்! 
 
பெண்ணே ,
உன்னைத்தேடி  
 வயதாகிப்போனேன்!  
 
காலங்கள் போனால்
போகட்டும் கண்ணே!
என் காதல் வாழும் 
என்றும்  இளமையாக!
 
மண்மீது  மீண்டும் 
ஜனனங்கள்  வேண்டாம் 
உன்  மனதோடு நானும் 
வாழ்ந்தாலே  போதும்...
என் வாழ்நாளின் பாரம் தீரும்!
 
 
 
 


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

புதன், 28 செப்டம்பர், 2011

சுட்டும் விழி விமர்சனத்திற்கு விமர்சனம் கலாநிதி பொன் பால சுந்தரம் லண்டன்

சுட்டும் விழி விமர்சனத்திற்கு விமர்சனம் கலாநிதி  பொன் பால சுந்தரம் லண்டன்  

md;Gf; ftpQH  ,utp mtHfSf;F

jq;fs; Rl;Lk; tpopf;fhd Nguhrpupia re;jpuh mk;ikahupd; tpkHrdk; gbj;Njd;. kJiuf; ftpQuhf ,Ug;gjdhy; fz;zfpapd; Rl;l tpopahf ftpijfs; kdq;fisj; jpwf;f itj;Js;sd.

jq;fspd; fw;gidf; fsQ;rpag; ngl;lfj;jpy; epiy nfhz;bUf;Fk; rpy fUj;jhsk; kpf;f Kj;Jf;fis Iahapuk; iky;fSf;F mg;ghy; ,Ue;J mjpfhiyapy; urpj;J kfpo;e;Njd;.

    jLf;fp tpOe;jJk;
     jkpo;g; Ngrpdhd;

f\;lj;jpYk;> Jd;gj;jpYk; jkpo;jhd; clypy; XLk; ,uj;jk;Nghy $lNt ek;Kld; tho;fpwnjd;gij ,J czHj;JfpwJ. jkp;o; Ngr kwg;gtHfSf;F ,e;j tupfs; Crp kUe;jhf Vwpf;nfhz;bUf;Fk;. my;yJ Vw;wg;gLk;.

kw;nwhU i`f;$  --  tsh;j;jpl;l kz;zpw;F
                  ed;wp nrhd;dJ kuk;
                  G+r;nrhupe;J 

mG+Htkhd tupfs; ,it. gj;J khjk; Rke;J ngw;nwLj;J ghYhl;bj;> jhyhl;b> gy;RitA+l;b tsHj;j jha;f;Ff; $l ghy;thHf;fj; jaq;Fk; khdpl kuq;fs; jq;fSila kdg;gilg;ig jkJ neQ;rq;fspy; gjpj;J jpUe;jp tho jkJ kdf; fjTfisj; jpwf;Fk; jpwTNfhyhf Vw;Wf;nfhs;thHfs; vd;gJ vdJ ek;gpf;ifahFk;.

,g;gb ,d;Dk; mNdf ghly;fs; cs;sj;ijj; njhLfpd;wd. ,jpy; vd;idf; ftHe;j kw;w tupfs; ahUk; thq;fhkNyNa kyHe;jd G+f;fs; - thbdhs; G+f;fhupvd;gJ.

,f;fhl;rpapid fhNy[; `T]py; ehd; jq;fpUf;Fk; re;jHg;gq;fspy; ghHj;Jf; ftiyg;gl;bUf;fpNwd;. Myaq;fSf;F Kd;dH G+ khiyfis tpw;Fk; ngz;fs; khiyg; nghOjpy; me;jg; G+ khiyfSld; NrHe;J jhKk; thLtij ehd; mbf;fb ghHg;gJz;L. ehd; ftiyg; gl;bUf;fpNwd;.

,d;W jq;fs; kdk; ,uhkypq;f mbfshH  thba gapiuf;fz;L thbNdd; vdf; $wp thbdhNu> mNjNghy jq;fs; kdKk; thLtij kj;jhd %d;W tupfspy; tpijj;jpUf;fpwPHfs;.

xsitahiug;Nghy fLifAk; Jisf;Fk; ftpijfshf jq;fs; ftpijfs; kyHfpd;wd.

md;Gld;

nghd; ghyRe;juk; (,yz;ld;)
--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

நூல்:சுட்டும் விழி ஆசிரியர்:கவிஞர் இரா.இரவி மதிப்புரை;முனைவர் ச.சந்திரா


நூல்:சுட்டும் விழி
ஆசிரியர்:கவிஞர் இரா.இரவி
மதிப்புரை;முனைவர் ச.சந்திரா
தமிழ்த்துறைத் தலைவர்
கலசலிங்கம் பல்கலைக்கழகம்

                                                                                             
              சுட்டும்விழி எனும் நூல் கவிஞர் இரா.இரவியின்  பதினொன்றாவது படைப்பு.பாங்கான படைப்புங்கூட.இலக்கியத்தேனீ  முனைவர் இரா.மோகன் அவர்கள் இந்நூலுக்கு வழங்கியிருக்கும் அணிந்துரை அடி முதல் முடிவரை புத்தகத்தை ஆராய்ந்து எழுதப்பட்ட அற்புத உரை.அட்டைப்பட வடிவமைப்பிற்கு எனத் தனியாக ஏதேனும் பரிசு அறிவிக்கப்படின், இந்த வருடத்திற்கான பரிசு சுட்டும்விழிக்குத்தான்.அறிவுப்பூர்வமாய் வடிவமைத்திருக்கும் அரிமா முத்து அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!சமூகச்சீர்கேடு,து-மாசு கேடுகள்-என சூரியப் பார்வையினையும்,இயற்கை ரசனை,அதீத அன்பு- என சந்திரப் பார்வையினையும்  சுட்டிக்காட்டுவதனால் மகாகவியின் பயன்பாட்டுச் சொற்றொடரான 'சுட்டும் விழி'- எனும் தலைப்பு இந்நூலுக்கு பொருத்தமான ஒன்றே!    
திறப்புவிழா!
             புத்தகத்தைத் திறந்தவுடன் முதல் பக்கத்திலேயே,அந்நியமொழியில் பேசுவதுதான் ஆடம்பரம் என்று தவறாக எண்ணி நடப்போர்க்கு நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல் ஒரு துளிப்பா!
      "தடுக்கி விழுந்ததும்
      தமிழ் பேசினான்!
      அம்மா!  (.1)
தமிழியல் உணர்வோடு தமிழின உணர்வு;சமூக இழிநிலையோடு அரசியல் இழிநிலை;தாயன்போடு தாரத்தின் அன்பு;மாசுக்கட்டுப்பாடு,நிதித்தட்டுபாடு,நீதித்தட்டுப்பாடு,பணம் படுத்தும் பாடு-என பல்வேறு பாடுகள் பக்கத்திற்குப் பக்கம் இடம்பிடிக்கின்றன.மூடத்தனத்தின் முதுகெலும்போ ஹைக்கூவின் மூன்றாம் வரியில் கவிஞரால் முறித்துஎறியப்படுகின்றது .இயற்கை அன்னை மீது கவி கொண்டிருக்கும் பாசமும் நேசமும் ஆங்காங்கே வெளிப்பட,தேசத்தலைவர்கள் இடையிடையே வந்துபோக,இத்தோடு  இரா.இரவியின் அநுபவத்துளிகள் தேசியக்கொடியின் மூவர்ணமாய் நூல் முழுமையும் மிளிர்கின்றன.
கல்வெட்டும் சொல்வெட்டும்;
                   சொற்களை மாற்றிப்போட்டு சுவைபட ஹைக்கூ படைப்பது என்பது கவி இரவிக்கு கைவந்த கலை.
      "வாழ்ந்தவர்கள் இறந்தனர்
       இறந்தவர்களுக்காக வாழ்கின்றது
       தாஜ்மஹால்!" (.35)
தாம் போகின்றபோக்கில் பார்க்கின்ற காட்சியை துளிப்பாவாக உருமாற்றுவதில் வல்லவர் இவர்.இதோ ஒரு கண்ணீர்க் கவிதை!
       "யாரும் வாங்காமலேயே
        மலர்ந்தன பூக்கள்!
        வாடினாள் பூக்காரி!(.33)
இலக்கிய நயமிக்க மின்பா ஒன்று !
         வளர்த்திட்ட மண்ணிற்கு
         நன்றி சொன்னது மரம்
         பூ உதிர்த்து! (.34)
ஊடல்-கூடல் என இரண்டினையும் ஒருங்கே சுட்டிக்காட்டும் ஒப்பீட்டுத் துளிப்பா இதோ!
         புறத்தில் கோபம்!
         அகத்தில் இன்பம்!
         அவள் பலாப்பழம்!
முரண்சுவை மிக்க ஹைக்கூ;
          கோடிகளும் இலட்சங்களும்
          கோவிலின் உள்ளே!
          வெளியே பிச்சைக்காரர்கள்!(.44)
நிலையாமையை உணர்த்தும் ஹைக்கூ!
           சிற்பி இல்லை!
           சிற்பம் உண்டு!
           எது நிலை? (.58)
இதனை வாசித்தபொழுது முக்கடலும் சங்கமிக்கும் குமரியில் இயற்கைச் சீற்றத்திற்குப் பின்னும் கம்பீரமாய் நிற்கும் ஐயன் வள்ளுவன் சிலையும் ,அச்சிலையை வடிவமைத்து செதுக்கிய சிற்பியான கணபதி ஸ்தபதி சமீபத்தில் இந்நிலவுலகினை விட்டு நீங்கியதும்தான் நினைவிற்கு வருகின்றது!
இதோ கல்வெட்டுக் கவிதை!
       தமிழைக் காப்பதில்
       பெரும்பங்கு வகித்தன!
       பனைமரங்கள்!
என தாய்மொழிப்பற்றோடும் துளிப்பாக்கள் கவியால்  படைக்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்க ஒன்று!ஹைக்கூத்திலகம் என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்று, இலக்கிய உலகிற்கு பெரும்பணி ஆற்றிவரும்  கவிஞர் இரா.இரவியின் பேரும் புகழும் அலைகடல் தாண்டி அவனி முழுதும் எட்ட என் போன்ற இலக்கிய வாசகர்களின் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
  

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது
மைவரைந்த கண்கள்!  கவிதாயினி T. கார்த்திகா


நாள்கணக்காய்
இரவில் நடைபோடும்
வெண்ணிலவு.. 
வெளிச்சத்தில் பெண்ணின்  முகம்  பார்த்தல்
மண்ணில்  வந்து  வாழ  ஏங்கும்!
 
 பாலைவனச்செடிகள்
எப்போதாவது பெய்யும் மழையில்!
சந்தோசமாய் நனைந்துவிட்டு,
நனைந்த மயக்கத்தில்
தன்னைச்சுற்றி
 இளந்தளிகளை  ஈன்று
தன்னிலை வந்தவுடன்
வெயில் கொளுத்தும் வானையே பார்த்து
மழைக்காக  ஏங்கினாலும் 
மடிந்து  போவதில்லை!
 
இந்த பெண்மையும் 
மாயவன் விரித்த வலையில் 
மதிமயங்கி மாட்டிக்கொண்டு 
விடிவிக்க...
 ஆளில்லாமல் போனாலும்
தனிமையில் போராடி
முதுமையிலும் ஓய்வதில்லை!
மடிந்தாலும் இவள்
வரலாற்று பாதையின்
நினைவுச்சினங்களின்  புதிய  போர்க்களம் !
 
பூக்களை  ரசிப்பவன் 
அது  காற்றோடு  மோதி 
காயமாகும்  ரகசியத்தை
அறிவதில்லை!
பெண்ணின் மைவரைந்த 
கண்களை  வருணிப்பவன்  
அது நாளும் எழுதும் 
கண்ணீர் இதிகாசம் அறிவானா?

--


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கவிஞர் இரா .இரவி எழுதிய சுட்டும் விழி ஹைக்கூ நூல் வெளியீடு விழாப் புகைப்படங்கள்

கவிஞர் இரா .இரவி எழுதிய சுட்டும் விழி ஹைக்கூ நூல் வெளியீடு விழாப் புகைப்படங்கள் 

சனி, 24 செப்டம்பர், 2011

மதுரை வந்த வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி வரவேற்றார் கவிஞர் இரா .இரவி

பொறியாளர் சுரேஷ் மகன் திருமண வரவேற்பிற்க்காக மதுரை வந்த வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி  வரவேற்றார் கவிஞர் இரா .இரவி உடன் கவிஞர்கள் சந்திரன் ,குருநாதன்

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ                    கவிஞர் இரா .இரவி

உயிர்களை ஊசலாடவிட்டவருக்கு
பதவி ஊசலாடுகிறது
சிதம்பர ரகசியம்

பொதுஉடைமை
உணர்த்தியது
செம்பருதி பூ

தங்கக்கூண்டு வேண்டாம் 
தங்க  கூண்டு போதும்
காதலர்களுக்கு

இயற்கையின்
இனிய கொடைகள்
வண்ணங்கள்

மூளையின்
முடங்காத முயற்சி
எண்ணங்கள்

இதயத்தை இதமாக்கும்
கோபத்தைக் குறைக்கும்
இனிய இசை

ஈடு இணை இல்லை
இன்பத்தின் எல்லை  
காதல் உணர்வு

அளவிற்கு அதிகமானால்
ஆபத்து
பணமும் காற்றும்

யோசிப்பதில்லை பிறரைப்பற்றி
சந்திக்கும்போது
பிரிந்த காதலர்கள்

அன்று   பாசத்தால்
இன்று பணத்தால்
உறவுகள்

புலியைக்கண்ட மானாக
வேட்பாளரைக் கண்ட
வாக்காளர்
--


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

நூல் உலகம் » குறிச்சொல் - வெ. இறையன்பு

நூல் உலகம் » குறிச்சொல் - வெ. இறையன்பு

அணு உலை உயிர்களுக்கு உலை

அணு உலை உயிர்களுக்கு  உலை

நமக்கு நாமே
வைக்கும் அணுகுண்டு
அணு உலை
வராது பூகம்பம் சரி
வந்தால்
அணு உலை

கணிக்க முடியாதது
இயற்கையின் சீற்றம்
அணு உலை

கொலைக்களம் ஆக வேண்டாம்   
கூடங்குளம்
அணு உலை

மின்சாரம் காற்றிலும் கிடைக்கும்
உயிர்கள் போனால் கிடைக்குமா ?
அணு உலை

பண நட்டம் பெற்றிடலாம்
உயிர்கள் நட்டம் ?
அணு உலைமின்சாரம் பெறப்   பல வழி
உயிர்கள் போக வழி
அணு உலை

உயிர்கள் அவசியம்
மின்சாரம் அனாவசியம்
அணு உலை

வாழலாம் மின்சாரமின்றி
வாழமுடியுமா?உயிரின்றி
அணு உலை

உயிரா ? மின்சாரமா?
உயிரே முதன்மை
அணு உலை

வராது சுனாமி என்றவர்களே
வராமலா இருந்தது சுனாமி
அணு உலை

உத்திரவாதம் உண்டா ?
பூகம்பம் வரதா ?
அணு உலை

விரும்பவில்லை வெறுக்கின்றனர்
மனிதாபிமானிகள்
அணு உலை 

வேண்டும்   என்போர்
வசித்திட வாருங்கள்
அணு உலை அருகில்

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!
 

--

புதன், 21 செப்டம்பர், 2011

ஜோசியனை ஜெயிலில் போட வேண்டும்!

பேரன்புள்ள தாய்மார்களே! தோழர்களே! இன்றைய தினம் நாம் எல்லோரும் டாக்டர்
மனோகரன் - கஸ்தூரி இவர்களின் வாழ்க்கைத் துணை ஒப்பந்த நிகழ்ச்சி
குறித்து இங்குக் கூடி இருக்கின்றோம். இந்நிகழ்ச்சி இதுவரை நம்மிடையே
நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளுக்கு மாறாகவும், அறிவிற்குப்
பொருத்தமானதும், மூடநம்பிக்கை அற்றதுமானதுமாகும். இதுவரை நடைபெற்ற
முறைகளின் உட்பொருளைப் பற்றி சிறிதும் கருதாமல், அதனால் ஏற்படும் பலனைப்
பற்றியும் கவனிக்காமல் தொடர்ந்து பழைய முறையையே பெரும்பாலோர் பின்பற்றி
வருகின்றனர்.

பழைய புரோகித முறை என்பது மூன்று தன்மைகளை அடிப்படையாகக் கொண்டது;
சிறுபான்மையினர் பலன் அனுபவிக்கவும், பெரும்பான்மையினரை அடிமைகளாக்கி
தாங்கள் பாடுபடாமல், உழைக்காமல் வாழ்ந்து கொண்டு வருவதுமாக
இருக்கின்றனர்.

முதலாவது காரியமாக ஜாதிப் பிரிவுகளை ஏற்படுத்தி, அதன் காரணமாகத் தங்களை
உயர்ந்தவர்களாக்கிக் கொண்டு, அந்த ஜாதிப் பிரிவுகள் கலைந்து விடாமல்
இருக்க, இதுபோன்ற சடங்குகளையும் முறைகளையும் ஏற்படுத்திப் பலன்
அனுபவித்துக் கொண்டு வருகின்றனர்.

சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று பாடுபட்டு
வருவதில், சமுதாயத் துறைகளில் பலவற்றில் சீர்திருத்தம் செய்வது போல
ஜாதியைக் காப்பாற்றுகின்ற திருமணத் துறையிலும் மாற்றம் வேண்டுமென்று
கருதி, இம்முறையினை மாற்றி அமைத்து, புது முறையைக் காண வேண்டியதாயிற்று.
இதுவரை நடைபெற்று வந்த முறைகள் யாவும்,

1. மக்களை அறிவற்ற மடையராக்குவது;

2. பெண்களை நிரந்தர அடிமைகளாக்குவது;

3. ஜாதி இழிவைக் காப்பது -

ஆகிய மூன்று காரியங்களை அடிப்படையாகக் கொண்டவையே யாகும். நான் பொதுத்
தொண்டிற்கு வந்ததற்குக் காரணமே அடிப்படையே,

1. மனிதன் பகுத்தறிவுவாதியாக வேண்டும். 2. நம் நாட்டில் இருக்கும்
பெண்ணடிமை ஓழிக்கப்பட வேண்டும். 3. மனிதனுக்குள் உள்ள ஏற்றத் தாழ்வுகள்
ஒழிக்கப்பட வேண்டும் என்பதாகும்.

ஆகவே தான், இம்முறையிலும் மாற்றம் செய்ய வேண்டியதாயிற்றே தவிர, இதில்
வேறு எந்தக் காரியமோ, உட்கருத்தோ இல்லை.

வாழ்த்துரை என்பது மூட நம்பிக்கையில் சார்ந்ததே ஆகும். வாழ்த்துவதாலே
நன்மை வரும் என்று நம்புவதானால் தூற்றுதலால் கெடுதல் வரும் என்பதையும்
நம்பித்தானே ஆக வேண்டும்? வாழ்த்துதலுக்கு என்ன பலனோ, அதுதான்
தூற்றுதலுக்கும் உண்டு. மனிதன் நல்ல மனிதனாக, பெருமையோடு வாழ
வேண்டுமென்று சொன்னால், அவன் உலகத்தோடு ஒட்டி வாழ வேண்டும். இதைத் தான்
வள்ளுவரும், "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்" என்ற குறளில் கூறி இருக்கின்றார்.

இன்னும் அவர் "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - வானுறையும் தெய்வத்துள்
வைக்கப்படும்"

என்று குறிப்பிட்டிருக்கிறார். வள்ளுவர் ஒரு பகுத்தறிவுவாதியாக
இருந்தும், மனதறிந்து இரண்டு பொய்களைத் தெரிந்தே கூறி இருக்கிறார். அந்த
இரண்டு பொய்கள் வானுரையும் - தெய்வம் என்பதாகும். அவருக்கு வானுலகம்
என்பதாக ஒன்றில்லை. தெய்வம் என்பதாக ஒரு பொருள் இல்லை என்பது நன்கு
தெரியும். பின் ஏன் அவ்வாறு கூறினார் என்றால், அவர் வாழ்ந்த காலத்தில்
உள்ள மக்கள் இவற்றைக் கூறினால் தான் பயந்து நடப்பார்கள் என்று கருதி
அவ்வாறு கூறியுள்ளாரே தவிர, அதை நம்பி அவர்கள் அவ்வாறு கூறவில்லை. மனிதன்
உலகத்துக்கு ஏற்றபடி வாழ வேண்டுமென்பதே அவரது கருத்தாகும்.

மேல்நாட்டு விஞ்ஞானிகள் பூமியிலிருந்து சூரியன் இருக்கிற வரை
வான்மண்டலத்தில் ஆராய்ச்சி நடத்தி வருகின்றார்கள். அவர்கள் எவரும்
மத்தியில் ஓர் உலகம் இருக்கிறது என்பதாகவோ, தெய்வங்கள் இருக்கின்றன
என்பதாகவோ கூறவில்லை. இவ்வளவு தூரத்தில் சூரியன் இருக்கும் போதே உஷ்ணம்
அதிகமாகி மனிதன் மயங்கி விழுகிறான். வீடுகள் தானாகவே தீப்பற்றி எரிந்து
போகின்றன. அப்படி இருக்க பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எப்படி ஓர்
உலகம் இருக்க முடியும்? இருந்தால் எரிந்து சாம்பலாகி இருக்காதா? இதை
எல்லாம் சிந்திக்க வேண்டும்.

இன்றைய அரசாங்கம் (தி.மு.க அரசு) சுயமரியாதைத் திருமணங்களை
செல்லுபடியாக்கச் சட்டம் கொண்டு வருவதாக இருக்கிறது. "கலப்பு மணம்" (ஜாதி
மறுப்பு) செய்து கொள்பவர்களுக்குப் பரிசளிக்கப் போவதாக
அறிவித்திருக்கிறது. இவையெல்லாம் வரவேற்க வேண்டியவையே ஆகும். இன்னும்
இந்த அரசாங்கம் ராகு காலத்தில் கல்யாணம் செய்து கொள்பவர்களுக்கு அரசாங்க
உத்தியோகங்களில் முதலில் சலுகைக் கொடுக்க வேண்டும். ராகு காலம்
என்பதெல்லாம் பிறருக்குத் தான் சொல்கிறானே தவிர, எவன் தன் வாழ்க்கையில்
கடைப்பிடிக்கிறான்? இராகு காலத்தில் நம்பிக்கை உள்ள ஒருவன் ரயில் ராகு
காலத்தில் கிளம்புகிறது என்று அதில் பிரயாணம் செய்யாமலிருக்கின்றானா?
கோர்ட்டில் அமீனா ராகு காலத்தில் கூப்பிட்டால், 'இப்போது ராகு காலம் வர
முடியாது' என்று சொல்கின்றானா? இதற்கெல்லாம் ராகு காலம் பார்க்காதவன்
மற்றவற்றிற்கு ஏன் பார்க்க வேண்டுமென்று கேட்கிறேன்? மூட நம்பிக்கை
என்பதே பிடிவாதத்தாலே தான் ஆகும். இதெல்லாம் அரசாங்கம் கவலையெடுத்துக்
கொள்ளாததால் தானாகும். மூட நம்பிக்கையைக் கொள்கையாகக் கொண்ட அரசாங்கமே
இதுவரை ஆட்சியிலிருந்து வந்தாலும், மக்களை அறிவுடையவர்களாக்க வேண்டுமென்ற
எண்ணமில்லாமல் மக்களை மடையர்களாக, பகுத்தறிவற்றவர்களாக வைத்திருந்தால்
தான் நாங்கள் வாழ முடியும் என்று ஆட்சியினர் கருதி இருந்ததாலும், இதைப்
பற்றிய கவலையே இல்லாமலிருந்ததோடு, மூட நம்பிக்கையை மக்களின் இரத்தத்தில்
ஊறச் செய்து விட்டனர். அதை உறிஞ்சி எடுத்துப் போக்க வேண்டியிருப்பதால்
மக்களுக்குச் சங்கடமாக இருக்கிறது. நம்மைப் பின்பற்றுபவர்கள் இந்த மூட
நம்பிக்கையை ஒழிக்க வேண்டுமென்று பாடுபட்டு வருபவர்களே ஆவார்கள்.

மனிதனுக்குச் சொத்துரிமை இருக்கும் வரையும் பெண்கள் அறிவு பெறுகிற வரை,
பகுத்தறிவு பெறுகிற வரை தான் இந்தத் திருமணம் இருந்து வரும். அதன் பின்
திருமணம் என்ற முறையே இருக்காது. மேல்நாடுகளைப் போல் பெண்களும் ஆண்களும்
தாங்கள் விரும்பியவர்களோடு நண்பர்களாகவே வாழ்க்கை நடத்தும் படியான நிலை
ஏற்பட்டு விடும். இப்போது நான் இப்படி சொல்வது சிலருக்குச் சங்கடமாக,
வியப்பாக இருந்தாலும், இன்னும் சில ஆண்டுகளில் அந்த நிலை வரத்தான்
போகிறது. அதைத் தடுக்க யாராலும் முடியாது.

நம் நாடு கடைசி நாடானதால் இப்போது தான் கொஞ்சம் வெளிச்சம் வருகிறது. நாடு
இன்னும் நிறைய வளர்ச்சி அடைய வேண்டும். மக்கள் அறிவு பெற வேண்டும். நம்
நாட்டில் அறிவாளிகளுக்கு நிறைய பஞ்சம். ஒரு புத்தர், ஒரு வள்ளுவர்
இவர்களைத் தவிர, வேறு அறிவாளிகளே தோன்றவில்லையே! தோன்றியவனெல்லாம்
முதுகைப் பார்த்துக் கொண்டே, பின்னாலே பார்த்துக் கொண்டே போய் விட்டானே
தவிர, தங்களுக்கு முன்னாலுள்ள வருங்காலத்தைப் பற்றிச் சிறிது கூடக்
கவலைப்படவில்லை.

நல்ல அரசாங்கமாக இருந்தால் இந்த ஜோசியனை எல்லாம் பிடித்து ஜெயிலில் போட
வேண்டும். இது ஒன்றும் அதிசயமில்லை. இப்போது எல்லாம் பிடித்து ஜெயிலில்
போடவில்லையா? அதுபோல இவர்களை நேற்று வந்தவன் கமால் பாட்சா, முல்லாக்களை
எல்லாம் பிடித்து ஜெயிலில் போட வேண்டும். அப்போது தான் திருந்தும்.
அதுபோலவே நம் எழுத்துக்களையும் சீர்திருத்தம் செய்ய வேண்டும். இந்த
அண்ணாத்துரை ஆட்சி இருந்தால் நிச்சயம் இவை நடக்கும் என்று நம்புகிறேன்.

பழைய பாசி பிடித்த அறிவை விட்டு விட்டுச் சிந்தியுங்கள். பெண்களை எல்லாம்
நன்றாகப் படிக்க வையுங்கள். அவர்களை எல்லாம் பகுத்தறிவுவாதிகளாக்குங்கள்
என்று கேட்டுக் கொள்கிறேன்.

--------------09.07.1967 அன்று நாகரசம்பட்டியில் நடைபெற்ற திருமண
விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை.”விடுதலை”, 20.07.1967

--

சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில்: சோமாலிய மக்களுக்கு தமிழர்கள் ஏன் உதவக்கூடாது ?

சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில்: சோமாலிய மக்களுக்கு தமிழர்கள் ஏன் உதவக்கூடாது ?
ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சம் 640.000 பிள்ளைகளை பட்டினி மரணத்தின் விளிம்பு நிலைக்கு கொண்டு வந்துவிட்டதாக ஐ.நா அவசர அறிவப்பு விடுத்துள்ளது.
சோமாலியாவின் தெற்குப் பகுதியில் பட்டினி காரணமாக ஐந்து வயதுக்குட்டபட்ட சுமார் 29.000 பிள்ளைகள் கடந்த 90 தினங்களில் மரணித்துள்ளார்கள். பட்டினி வேகம் தொற்று நோய்போல பரவிக்கொண்டிருக்கிறது.

சோமாலியாவில் மட்டும் அடுத்த சில மாதங்களில் 640.000 பிள்ளைகள் பட்டினி மரணத்தை நெருங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஏழுமாதமுள்ள சிறுமி ஒருத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவருடைய நிறை வெறும் 3.4 கிலோ மட்டுமே. ஐ.நாவின் வேண்டுகோள் பலமாக இருந்தாலும் அதற்கு உலகின் வளமுள்ள நாடுகள் பெரிதாக அக்கறை காட்டவில்லை.
ஆபிரிக்க கண்டத்தில் மிகவும் வறுமைப்பட்ட நாடாகவும் உலகிலேயே மிகவும் ஆபத்து மிக்க நாடுகளில் ஒன்றாகவும் இருப்பது சோமாலியா ஆகும். 1991ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தால் அப்போது ஆண்டு அவந்த அரசு கவிழ்ந்ததோடு பல விடுதலைப் போராட்ட இயக்கங்களும் ஆரம்பமாகியது. பின்னர் அவ்வியக்கங்கள் அனைத்தும் தீவிரவாத அமைப்புகளாக மாறி இன ரீதியான அல்லது மதப் பிரிவின் ஆயுதக்குழுக்களாக மாறியது. இதனால் கொலைக்களமாக மாறியது சோமாலியா. அந் நாட்டில் உள்ள வறுமைக்கோட்டிற்கு மேற்பட்ட மக்கள் வெளிநாடுகளில் சென்று சரண்டைந்தனர். தமிழர்களைப் போல சோமாலியர்களும் தமது சொந்த நாட்டில் இருக்க முடியாது பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
தற்போது சோமாலியாவில் இருக்கும் அரசானது மூன்றில் 1 பங்கு நிலத்தைக்கூட தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை என்பதே உண்மையாகும். உலக நாடுகள் அனைத்தும் சோமாலியாவை (Fஆஈள் ஸ்TஆTஏ) அதாவது தோல்வியடைந்த நாடு என்று பொருட்பட அழைப்பார்கள். போராளிகள் ஒருபக்கம், தீவிரவாதிகள் ஒருபக்கம் மற்றும் அரசாங்கம் ஒருபக்கம் என இருக்கும் நிலையில் அங்கே உள்ள மனிதர்கள் நிலை படுமோசமாக இருக்கிறது. சத்தான உணவுகள் இன்றி மக்கள் இறப்பது என்றால் அது சோமாலியாவாகத் தான் இருக்கமுடியும். அளவுக்கு அதிகமான வெப்பம், மழை வீழ்ச்சி குறைவு எந்தப் பயிரையும் பயிரிட முடியாத நிலை என்பன போக 100 அடிக்கு வெட்டினால் கூட தண்ணீர் கிடைப்பது இல்லையாம். இப்படியும் ஒரு பூமியா ? என்று ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
இங்கே இருக்கும் ஆடு மாடுகள் தொடக்கம் மனித இனம் வரை சொல்முடியாத துன்பத்தையே அனுபவித்து வருகின்றனர். பிறந்த நாள் முதல் இதுவரை ஒரு பிஸ்கட் துண்டைக் கூடக் கடித்துப்பார்க்காமல் இறந்த குழந்தைகள் இங்கே தான் இருக்கிறார்கள். சாக்கிளேட் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைகளும் இங்கே தான் இருக்கிறார்கள். சமீபத்தில் ரூய்டர்ஸ் செய்திச் சேவையானது வெளியிட்ட படங்கள் உலகை அதிரவைத்துள்ளது. பட்டினியால் செத்த குழந்தை இன்னும் சாகக்கிடக்கும் குழந்தை மற்றும் போசாக்கு குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்கள். ஈழத் நடந்த போரில் பல ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்தார்கள் நாம் மறுக்கவில்லை. ஈழத்து நிலங்கள் பொன் விளையும் பூமி அங்கே நீர் இருந்தது விவசாயம் இருந்தது. கடற்கரைகள் இருந்தன. ஆனால் சோமாலியாவில் ஒன்றுமே இல்லை. இதுதான் வித்தியாசம்.
உணவு இல்லை என்றால் கடிப்பதற்கு ஒரு கொய்யாக் காய் இல்லை மாம்பழம் அதுவும் இல்லாவிட்டால் ஒரு பப்பாப்பழமாவது எமது ஊரில் கிடைக்கும். ஆனால் சோமாலியாவில் பஞ்சு மட்டும் தான் மரமாக இருக்கிறது. சிலவேளைகளில் தினை கிடைக்கும். அதிலும் கஞ்சிவைத்தே உண்ண முடியும். இப்படியான நிலையில் வாழும் அம்மக்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை, அங்கே இருக்கும் குழந்தைகளுக்காவது புலம் பெயர் வாழ் தமிழர்கள் உதவவேண்டும். தம்மாலான உலர் உணவுகளை வழங்கி பட்டினியால் வாடும் குழந்தைகளுக்கு 1 நேரச் சாப்பாடாவது கிடைக்கச் செய்யவேண்டும். சர்வதேச சூழலில் பணம் படைத்த மேற்குலக நாடுகள் சோமாலியாவை கண்டும் காணாததுபோல உள்ளனர். அங்கே எண்ணை வளம் இருந்திருந்தால் நான் நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு போய் நின்றிருக்கும் மேற்குலகம். ஆனால் அங்கே ஒன்றுமே இல்லையே..
உலகில் பரந்துவாழும் தமிழர்கள் கஷ்டம் என்றால், பட்டினி என்றால் இல்லை மரணபயம் என்றால் என்ன என நன்கு உணர்ந்தவர்கள். அதனால் அவர்கள் மனம் வைத்தால் இதனை ஒரு சிறிய உதவியாகச் செய்யலாம். தமது பிள்ளைகளுக்கு உணவுகளை வாங்கும்போது சோமாலிய பிள்ளைகளுக்கு ஒரு உலர் உணவை வாங்கி அதனை அங்கே அனுப்பிவைக்கலாம். இதனை தாய் தந்தையர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் சேர்ந்து செய்யவேண்டும். தமிழீழ பிள்ளைகள் அனைவரும் ஒன்றிணைந்து சோமாலியப் பிள்ளைகளுக்கு உணவுகளை அனுப்பிவைத்தால் சர்வதேச அளவில் தமிழ் சிறுவர்களின் நடவடிக்கை பாராட்டப்படும். தமிழர்களின் இரக்க குணத்தை உலகறியச் செய்ய , நாமும் ஒரு சோமாலியக் குழந்தைக்கு உணவு கொடுப்போம். தர்மம் தலைகாக்கும்.

http://www.google.com/hostednews/ap/article/ALeqM5hK9hiMpCZp6GAiO8HBQAxT_O1Jmw?docId=93b79e4575dd43b2a71486e26d474a20
http://www.wtsp.com/news/national/article/204731/81/29000-children-dead-from-famine-in-Somalia
http://www.unfoundation.org/
http://www.unicefusa.org/

http://www.salem-news.com/articles/august092011/help-somalia-cf.php
 
உதவி செய்ய விரும்புவோர் சர்வதேச அமைப்புகளின் ஊடாக தொடர்பு கொள்ளலாம்
 
Somali refugees need your help now!
End Famine in Somalia - Somalia Famine: Millions are hungry!
Somalia Emergency - Food and shelter urgently needed!
 
United Nation High commission for Refugees (UNHCR)
 
 
International Committee of the Red Cross (ICRC)
 
 
 
Somalia's Children Caught in the Crossfire
 
 
முத்தமிழ்
சென்னை

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம்

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின்  சார்பில் தன் முன்னேற்றப்   பயிலரங்கம் ,சிபி பயிற்சிக் கல்லூரியில்   நடைப்பெற்றது .தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர் ராஜராஜன் வரவேற்றார் .தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .ஆ .முத்துகிருஷ்ணன் ,ராமமூர்த்தி  வாழ்த்துரை வழங்கினார்கள்  .உதவி வேளாண்மை அலுவலர் ,கவிஞர் திருமதி .குமாரி லட்சுமி    வெற்றிக்கு வழி தன்னம்பிக்கை என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .  கவிஞர்கள் விஸ்வநாதன் ,குருநாதன்,குமுதம் ஆறுமுகம் ,யமுனா ரகுபதி ,மகாலட்சுமி ஆகியோர் தன்னம்பிக்கை தொடர்பான கவிதை படித்தனர் .செயற்குழு உறுப்பினர் தினேஷ் நன்றி கூறினார் .தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர்  பெருமளவில்   கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .
இணைப்பு தன்னம்பிக்கை வாசகர் வட்ட விழா புகைப்படங்கள்

திங்கள், 19 செப்டம்பர், 2011

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ          கவிஞர் இரா .இரவி

கேலிக்கூத்தானது
அகிம்சையின் ஆயுதம்
உண்ணாவிரதம்

எடுபடவில்லை
மோடியின் 
மோடிமஸ்தான் வேலை

காந்தியடிகளை
அவமானப்படுத்தும் 
மத வெறியர்

பிறக்கும் போது இல்லை
இறக்கும் போது உண்டு
ஆடை

யானையின் வாய்
அரசியல்வாதியின் கை
சென்றால் திரும்பாது 

இதயம் அல்ல
மூளைதான்
காதலியின் இருப்பிடம் --

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!
 

எய்ட்ஸ் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

எய்ட்ஸ் ஹைக்கூ
கவிஞர் இரா .இரவி

பண்பாடுப்   பயிற்றுவிக்கும்
பயமுறுத்தல் நோய்   
எய்ட்ஸ்

ஒழுக்கத்தைப் பொதுவாக்குவோம்
இருபாலருக்கும்
வராது  எய்ட்ஸ்

மருந்து இல்லை
மரணம் உறுதி
எய்ட்ஸ்

உயிரை உருக்கும்
உடலைக் கெடுக்கும்
எய்ட்ஸ்

கவனம் தேவை
குருதி பெறுகையில்
எய்ட்ஸ்

எச்சரிக்கை
ஊசி போடுகையில்
எய்ட்ஸ்

வரும் முன் காப்போம்
உயிர்க் கொல்லிநோய்
 உணர்ந்திடுவோம் 

சபலத்தின் சம்பளம்
சலனத்தின் தண்டனை
எய்ட்ஸ்

சில நிமிட மகிழ்வால்
பல வருடங்கள் இழப்பு
எய்ட்ஸ்

வெறுக்க வேண்டாம்
நேசிப்போம் நண்பராக
எய்ட்ஸ் நோயாளிகளை

--

--

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!
 

அணு உலை

அணு உலை                     ஹைக்கூ                              கவிஞர் இரா .இரவி

அறிவியலின்
ஆபத்து
அணுஉலை

அரிசி உலை உயிர் வளர்க்கும்
அணு உலை உயிர்களைப்
பறிக்கும்

அதனைத் தொலை
உயிருக்கு   உலை
அணு உலை

நன்மையை விட
தீமையே அதிகம்
அணு உலை

கூட்டமாகக்    கொல்லும்
கொடிய வில்லன்
கூடங்குளம் அணு உலை

பற்றி எரிந்தால்
அணைக்கவே முடியாது
அணுஉலை

கொள்ளியால்
தலைச்   சொரிதல்
அணுஉலை

ஆதாயத்தை விட
ஆபத்தும் அழிவும் அதிகம்
அணுஉலை

உயிர் இனங்களை மட்டுமல்ல
புல் பூண்டுகளை அழிக்கும்   
அணுஉலை

அயல்நாடுகளில்
அங்கீகரிக்கவில்லை
அணுஉலை

அக்கம் பக்கம்
அழிவு நிச்சியம்
அணுஉலை

வேண்டாம் வேண்டாம்
கூடங்குளம்
ரத்தக்குளமாகிட

உலை வைக்காமல்
உண்ணாவிரதம்
அணுஉலை  மூட

ஜப்பானின் அழிவு
தமிழகத்திற்கு  வேண்டாம்
மூடுக   அணுஉலை
--

--


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!
 

சனி, 17 செப்டம்பர், 2011

{பகலவன் குழுமம்} - ஒன்றுபடுவோம், வென்றெடுப்போம், பெரியாரின் புகழ் பாடுவோம்!

{பகலவன் குழுமம்} - ஒன்றுபடுவோம், வென்றெடுப்போம், பெரியாரின் புகழ் பாடுவோம்!


தமிழ்நாடன்
குவைத்
 
இன்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 133 ஆவது பிறந்த நாள். தமிழர்கள் தெளிவுபெற்றது இவரால், தமிழர்கள் அரசியல் விடுதலை பெற்றது இவரால், எழுச்சியுற்றது தந்தை பெரியாரால், நமது வாழ்வு பணி அரசியல் பொருளாதாரம் என அனைத்து மட்டங்களிலும் இன்று நாம் அடைந்திருக்கும் வளர்ச்சி, உயர்ச்சி என்பதெல்லாம் பெரியார் ஒருவரால் கிடைத்ததாகும்.
 
ஆனால், பெரியார் இன்றும் வாழவேண்டிய செயலாற்ற வேண்டிய கட்டாயம் அப்படியே உள்ளது. நாம் ஒரு அடி மேலேறினால் எதிரி நமக்கும் மேலே நிற்கப் பார்க்கிறான், துரோகிகள் காலைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறான்.
 
கலைஞரை விரட்ட செயலலிதாவை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கேற்பட்டது, கெட்ட வாய்ப்பா? வேறு வழியின்றியா? அல்லது துப்பின்றியா? சிந்திக்க வேண்டும். தமிழினம், தமிழ்தேசியம் என்றெல்லாம் காலம் காலமாக பேசி, இரண்டில் ஒருவர்தான் முடிவென்று சொல்வதன் தன்மை என்ன?.
 
அநியாமாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று உயிர்களை தமிழர்களை இருபது ஆண்டுகளாக ஆகியும் காக்க முடியாததன் காரணம் என்ன?. இருபது ஆண்டுகள் கழித்து மூளை முடுக்கெல்லாம் போராடி, நிரந்தரத் தீர்வினை உடன் எட்ட முடியாமைக்கு என்ன பெயர்? உடன் எதிரி தெம்பாக செயல்படுவதன் பொருள் என்ன?.
 
இவ்வளவும் நடந்தும், மக்கள் பேரெழுச்சிக்குப் பிறகும், அநியாயமாக ஆறு உயிர்களைப் பறிக்கும் துணிச்சல் பார்பனிய மதம் பிடித்த செயலலிதாவிற்கு யார் தந்தது?. ஆயிரமாயிரம் சொந்தங்கள் ஐந்து நாட்களைக் கடந்தும் பட்டினி கிடக்க, இம்மியளவும் அசையாத முதலமைச்சரை தமிழகம் பெறக் காரணம் என்ன?. 
 
நடிகனுக்கும் மட்டைப் பந்துக்காரனுக்கும் சுளுக்கு வந்தால் கழிவறை வரை சென்று செய்தி வெளியிடம் ஊடகங்கள், இவ்வளவு பெருங்கூட்டமாக மக்கள் வீதிக்கு வந்து போராடுகையில் என்ன செய்துகொண்டிருக்கின்றன. 
 
தமிழர்களே உறவுகளே தோழர்களே இனியும் காலந்தாழ்த்தாதீர்கள், சாதி மதம் கட்சி என்ற வேறுபாடுகள் என்றுமே நன்மை பயப்பவை அல்ல. மக்களை துண்டாடுபவை. மக்களை மாக்களாய் மாற்றுபவை. 
 
ஒரு மூலையில் ஒரு தமிழன் தும்மினால் கூட உலகின் அத்துணை தமிழனிலும் எதிரொலிக்க வேண்டும். அதுவொன்றே தமிழனை வாழவைக்கும். 
 
தமிழன் தமிழனோடு மட்டுமே சண்டையிடுவான், வேறு யாரிடமும் வாலாட்டினால் செருப்பால் அடிப்பான் என்று தெரியும். பிறரிடம் அடங்கிப் போகும் நீங்கள், தம்மில் அடித்துக் கொள்வதேன்.  இந்நிலை மாறவேண்டும்.
 
இன்றைய நாளில் நாம் புத்துணர்வுப் பெறுவோம், பெரியாரின் அறிவைப் பெறுவோம், துணிச்சலைப் பெறுவோம், போராடும் மனநிலையைப் பெறுவோம். எந்த வகையில் போராடுகிறோம், யாருடன் இணைந்து போராடுகிறோம் என்பதல்ல பிரச்சனை, தமிழனுக்கு எதிரானவற்றை எதிர்த்துப் போராடுகிறோம் என்பதே வேண்டும்.
 
ஒன்றுபடுவோம், வென்றெடுப்போம்.
 
பெரியாரின் புகழ் பாடுவோம்.

தந்தைப் பெரியார்

ஈ. வெ. ராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈ.வெ. இராமசாமி
Thanthai Periyar.jpg
வேறு பெயர்(கள்): இராமசாமி, ஈ.வெ.இரா., பெரியார், (அ) தந்தை பெரியார்
பிறப்பு: செப்டம்பர் 17 1879
பிறந்த இடம்: ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: திசம்பர் 24 1973 (அகவை 94)
இறந்த இடம்: வேலூர், தமிழ்நாடு, இந்தியா
இயக்கம்: சுயமரியாதை இயக்கம், தமிழ் தேசியவாதம்
முக்கிய அமைப்புகள்: இந்திய தேசிய காங்கிரஸ், நீதிக்கட்சி, திராவிடர் கழகம்
குறிப்பிடத்தக்க விருதுகள்: யுனஸ்கோ (1970)
மதம்: இறை மறுப்பாளர்

பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்[1]. இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக்கராணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையே, அந்த மூடநம்பிக்கைக்கு காரணமாக இருப்பது கடவுள் நம்பிக்கை, கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர நாத்திகராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமைவாயந்த திராவிடர்களை பார்ப்பனரால்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் பெரியார் எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காக செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிகிடந்த சாதிய வேறுபாடுகளை குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு பெரியார் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளார். இவரின் சமுதாயப் பங்களிப்பை பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் "புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது[2]

இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பலத் தாக்கங்களை ஏற்படுத்தியவை.

இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.இராமசாமி நாயக்கர், தந்தை பெரியார் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார்.

பொருளடக்கம்

[மறை]

[தொகு] வாழ்க்கை

[தொகு] இளமைக் காலம்

இளமையில் பெரியார்

பெரியார் செப்டம்பர் 17, 1879, ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர் எனும் இயர் பெயர் கொண்டவராய் தமிழ்நாட்டிலுள்ள, ஈரோட்டில் பிறந்தார்[3].இவரின் குடும்பத்தினர் கன்னடத்தைத் தாய்மொழியாக உடையவர்கள் ஆவர். (தெலுங்கு அன்று). இவரின் தந்தை வெங்கட்ட (நாயக்கர்) மிக வசதியான வணிக பின்னணியை கொண்டவர். இவரின் தாயார் முத்தம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட சின்ன தாயம்மாள் ஆவார். இவரின் உடன் பிறந்தோர் தமையனரான கிருஷ்ணசாமி, தமக்கைகள் கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி[4] [3] ஆவார்கள். பின்னாளில் இவர் தந்தை பெரியார் [4]என மரியாதையுடன் தமிழர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.

1929, இல் பெரியார் சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில்[5] , தன் பெயரின் பின் வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்கு பின்னாள் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார். பெரியார் மூன்று திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவராவார். அவரின் தாய்மொழி கன்னடம்[6][7][8] ஆகும். பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை, ஐந்து வருடங்கள் மட்டுமே கல்வி பயின்றார். அதன் பின் கல்வியில் நாட்டமில்லாமையால் தந்தையின் வணிகத்தொழிலை 12 ஆம் வயது முதல் மேற்கொண்டார். தன்தந்தையின் விருந்தோம்பலில் திளைத்திருந்த வைணவப் ப்ண்டிதரின் உபதேசங்களை கேட்கும்படி தன்தந்தையால் பெரியார் பணிக்கப்பட்டிருந்தார். அதன்படி அப்பண்டிதர் அளிக்கும் உபதேசங்களை மிக ஆர்வமுடனும், அவரின் இந்து புராண இலக்கிய உபதேசங்களில், புராணக் கதைகளில் எழுந்த சந்தேகந்தங்களையும் துடுக்குடன் அவ்விளவயதிலேயே வினவினார். அன்று எழுந்த கருத்து வேற்றுமைகளே பின்னாளில் இந்து ஆரிய எதிர்ப்புக் கோட்பாடுகளை மேற்கொள்ள வழிகோலின. பெரியார் வளரும்பொழுதே சமயம் என்பது அப்பாவி மக்களின் மீது வஞ்சகத்துடன், அவர்களை சுரண்டுவதற்காக போற்றபட்ட போர்வையாக போர்த்தப்பட்டுள்ளதை களையவேண்டுவது தனது தலையாய கடமை என்ற எண்ணத்தையும், மூடநம்பிக்கைகளிலிருந்தும், சமயகுருமார்களிடமிருந்தும்[9] இம்மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார்.

பெரியாரின் 19 வது வயதில் அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயித்த வண்ணம் சிறு வயது முதல் நேசித்த, 13 வயது நாகம்மையாரை மணந்து கொண்டார். நாகம்மையார் தன் கணவரின் புரட்சிகரமான செயல்களுக்கு தன்னை முழுவதுமாக ஆட்படுத்திக்கொண்டார். இருவரும் இணைந்து பல போராட்டங்களிலும் ஈடுபடலானார்கள். திருமணமான இரு வருடங்கள் பெண் மகவை ஈன்றெடுத்தார், அக்குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்தது. அதன் பிறகு அவர்களுக்கு பிள்ளைப் பேறு இல்லை[10].

[தொகு] காசி யாத்திரை

1904 இல் பெரியார் இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் காசிக்கு யாத்திரிகராக காசிவிசுவநாதரை[4][3] தரிசிக்க சென்றார், அங்கு நடக்கும் மனிதாபிமனமற்ற செயல்கள், பிச்சை எடுத்தல், கங்கை ஆற்றில் மிதக்கவிடப்படும் பிணங்கள்[4] போன்ற அவலங்களையும், பிராமணர்களின் சுரண்டல்களையும்[3] கண்ணுற்றவரானார்.

இதனிடையே காசியில் நடந்த ஒரு நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது. பிரமாணரல்லதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் யாத்திரிகர் அன்னசத்திரத்தில் பெரியாருக்கு பிரமணரல்லாதார் என்ற நிலையில் உணவு வழங்க மறுக்கப்பட்டது. இந்நிலைகண்டு மிகவும் வருத்தவமுற்றவரானார் இருப்பினும் பசியின் கொடுமை தாளமாட்டாமல் பிரமாணர் போல் பூணூல் அணிந்து வலிந்து தன்னை ஒரு பிராமணர் என்று கூறிஉள்நுழையமுயன்றார். ஆனால் அவர்மீசை அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது. பிராமணர் யாரும் இந்து சாத்திரத்தின்படி இவ்வளவு பெரிய மீசை வைத்திருப்பதில்லை என்று கோயில் காவலாளியால் வலிந்து தள்ளப்பட்டு வீதியில் விழுந்தார்[4].

பசித்தாளமால் வீதியின் குப்பைத்தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவுகளை வேறுவழியில்லாமல் உண்டு பசியைப் போக்கிகொண்டார். பிரமணரால்லாதார் கட்டிய அன்னசத்திரத்தில் பிரமணரல்லாதாருக்கு உணவு வழங்க பிரமணர்களால் மறுக்கப்படுகின்றதே என்ற நிலைமையை எண்ணி வருந்தினார். இந்து சமயத்தின் வேற்றுமை காணும் (வருண ஏற்றதாழ்வு) உணர்வினை எதிர்க்கும் நோக்கத்தை அன்றே புனிதமான காசியில் தன்மனதில் இருத்திக்கொண்டார்[4]. அதன் விளைவாக அதுவரை இறைப்பற்றுள்ளவாரக இருந்த பெரியார் காசி யாத்திரைக்குப் பின் தன்னை ஒரு இறைமறுப்பாளராக (நாத்திகராக) மாற்றிக்கொண்டார்]].[11].

[தொகு] காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் (1919-1925)

பெரியார் 1919 ஆம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்திவிட்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இணைவதற்கு முன் தான் வகித்து வந்த அனைத்து பொதுப்பதவிகளையும் விட்டு விலகினார். அவர் வகித்து வந்த முக்கியப் பதவிகளான ஈரோடு நகராட்சித் தலைவர் பதவியை துறந்தது மட்டுமில்லாது, தன்னை முழுமனத்துடன் காங்கிரசு பேரியக்கத்துக்காக ஒப்படைத்துக் கொண்டார். காந்தியின் கதர் ஆடையை அவரும் உடுத்திக் கொண்டதுமட்டுமில்லாமல், பிறரையும் உடுத்தும்படி செய்தார், கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி மறியல் செய்தார், வெளிநாட்டுத் துணிவகைகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல்கள் நடத்தினார். தீண்டாமை வேரறுக்க பெரும்பாடுபட்டார். 1921 இல் ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காக பெரியார் நீதிமன்றத்தால் சிறைத்தண்டனைப் பெற்றார். அம்மறியலில் அவரும் அவர் துணைவி நாகம்மையார் மற்றும் அவர் தமக்கையார் கலந்து கொண்டனர். இதன் பலனாக அன்றைய ஆங்கில அரசு நிர்வாகத்தினர் உடனடியாக பணிந்தனர். மீண்டும் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை[12] எதிர்த்து மறியல் செய்ததினால் கைது செய்யபட்டார். 1922 இல் பெரியார் சென்னை இராசதானியின் (மதராஸ் இராஜதானி) காங்கிரஸ் கட்சித் தலைவராக (தற்பொழுது -தமிழநாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் என்று பெயர்) தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் நடைபெற்றத் திருப்பூர் கூட்டத்தில் அரசு பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, காங்கிரஸ் கட்சி ஆங்கில அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதை மிகத்தீவிரமாக முன்னிருத்தினார். அவரின் முயற்சி அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களின் வர்க்கபேத மற்றும் வேற்றுமை கொண்டு பிறசாதியினரை (இனவேற்றுமை) பார்க்கும் தன்மையால் தோல்வியுற்றுது. அதனால் 1925 [13] இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

[தொகு] வைக்கம் போராட்டம் (1924-1925)

முதன்மைக் கட்டுரை: வைக்கம்

கேரளாவில் உள்ள வைக்கம் எனும் சிறிய நகர் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ளது. கேரள வழக்கப்படி கோயில்களில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும் ஈழவர்களும் நுழையத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்த்து. 1924 இல் சாதி எதிர்ப்புகள் வலுத்திருந்த சமயமாதலால் சாதி எதிர்ப்பு (சத்தியாகிரகம்) போராட்டம் [14][15]காந்திய வழியில் நடத்த வைக்கம் சிறந்த இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏப்ரல் 14 அன்று பெரியார் அவரின் துணைவியார் நாகம்மாளுடன் வைக்கம் வந்து போரட்டத்தில் ஒன்றாக கலந்து கோண்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டனர். காந்தியின் அறிவுறுத்தலின் படி இப் போராட்டத்தில் கேரளாவைச் சாரதாவர்கள், இந்து சமயம் சாராதவரகள் கலந்து கொள்ளவில்லை. பெரியார் கைது செய்யபட்ட போதிலும் பெரியாரின் தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை தொடர்ந்ததால் இச்சட்டம் விலக்கிகொள்ளப்பட்டது. அதுமுதல் பெரியார் வைக்கம் வீரர் என தமிழ் மக்களால் அழைக்கப்படலானார். பல சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட பெரியாருக்கு கிடைக்காத பெயரும், புகழும் இப்போராட்டத்தின் மூலம் கிடத்தது சற்று மிகைப்படுத்தப்பட்டதாகவே அறிஞர்கள் கருதுகின்றனர்[16]

வைக்கம் போராட்டம் கேரள சீர்திருத்தவாதியும் நாராயணகுருவின் இயக்கத்தைச் சேர்ந்தவருமான டி.கெ.மாதவன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அவர் காங்கிரஸில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். வைக்கம் போராட்டத்திற்கு முப்பதாண்டுக்கால வரலாறு உண்டு. டி.கெ.மாதவன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு திருவிதாங்கூர் சட்டச்சபை உறுப்பினராக ஆனதும் அந்தப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்தார். அன்னிபெசண்டின் உதவியை நாடினார். பின்னர் காந்தியின் உதவியை நாடினார். போராட்டத்தை காந்தியின் வழிகாட்டலுடன் சத்தியாக்கிரக போராட்டமாக முன்னெடுத்தார்

நாடெங்கிலும் இருந்து காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் அதில் பங்குகொண்டார்கள். வினோபா பாவே அதில் பங்கு எடுப்பதற்காக வந்தார்.கேரளத்தில் காங்கிரஸ் தலைவர்களாக இருந்த கேளப்பன், கெ.பி.கேசவமேனன், இ.எம்.எஸ், ஏ.கே.கோபாலன் போன்றவர்களும் பங்கெடுத்தார்கள். தமிழகத்தில் இருந்து ஈ.வே.ரா அவர்களும்,கோவை அய்யாமுத்து அவர்களும், எம்.வி.நாயிடு அவர்களும் பங்கெடுத்தார்கள். போராட்டத்தில் ஈ.வே.ரா முக்கியமான பங்கு வகித்து சிறைசென்றார். ஈ.வே.ரா அந்தப்போரில் பங்கெடுத்தது சில மாதங்கள் மட்டுமே. ஆனால் வைக்கம் போராட்டம் மேலும் பல மாதங்கள் நீடித்தது.

நடுவே போராட்டம் வலுவிழந்தபோது காந்தியும் நாராயணகுருவும் நேரில் வந்து போராட்டத்தில் பங்குகொண்டார்கள். கேரளத்தில் மாபெரும் சமூக சக்தியாக விளங்கிய நாராயணகுரு பங்கெடுத்து நடத்திய ஒரே போராட்டம் இதுவே. கடைசியில் வெற்றி ஈட்டியது. அமைதி ஒப்பந்தத்தில் காந்தி சர்பில் தேவதாஸ் காந்தியும் போராட்டக்குழு சார்பில் ராஜாஜியும் கையெழுத்திட்டனர்

பின்னர் இப்போராட்டம் அனைத்து கேரள கோயில்களுக்கும் முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் இந்தியாவெங்கும் ஆலயப்பிரவேச இயக்கமாக காந்தியால் கொண்டு செல்லப்பட்டது

[தொகு] சுயமரியாதை இயக்கம்

முதன்மைக் கட்டுரை: சுயமரியாதை இயக்கம்
சுயமரியாதை இயக்கத்தின துவக்க காலத்தின் பொழுது பெரியார்

பெரியார் மற்றும் அவரின் தொண்டர்கள் தொடர்ந்து நெடுங்காலமாக அரசாங்கத்தினரிடம் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நீக்க கோரி முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பல்ர் இந்தியாவின் விடுதலைக்காக போராடிவந்தபொழுதிலும் இவர்கள் சமூக விடுதலைக்காகப் போராடி வந்தனர். சுயமரியாதை இயக்கம் ஆரம்பத்தில் பிரமணரல்லாதோர் தாம் பழம்பெரும் திராவிடர்கள்[17] என்றப் பெருமையுடன் வாழவும், அதை உணரவும், நாம் யாருக்கும் அடிமையில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்டவும் உருவாக்கப்பட்டது.

சுயமரியாரியாதை இயக்கம் 1925 இல் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய கொள்கை பரப்புரையாக, சமுதாயத்தின் ஏளனத்திக்குரிய மூடபழவழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதை தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது. மக்களை அறிவின்மையினிருந்து மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழிவகை செய்தன. பகுத்தறிவு சிந்தனையுடன் மக்களின் செயல்பாடுகள் இருக்க வலியுறுத்தின. பகுத்தறிவாளர்கள் பின்பற்றப்படவேண்டிய கடமைகளாக பலவற்றை இவ்வியக்கம் வலியுறுத்தியது.

 • சுயமரியாதையாளர்கள் பிரமாணப் புரோகிதரில்லா, சமயச்சடங்கில்லா திருமணங்கள் நடைபெற வலியுறுத்தினர்[18].
 • ஆணும், பெண்ணும் சமம், அவர்கள் வேறுபாடின்றி, சரிநிகர் சமமாக வாழும் முறையை வலியுறுத்தியது[18].
 • கலப்புத் திருமணமுறையையும், கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தியது.
 • அளவில்லா குழந்தைகள் பெறுவதை தடுத்து குடும்ப கட்டுபாட்டை 1920 களிலேயே இதை வலியுறுத்தியது[18].
 • கோயில்களில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும் (பெண்களை கோயில் தாசிகளாக, பொது மகளிராக ஆக்கி அடிமைப்படுத்தும் முறை), குழந்தை திருமணத்தையும் தடை செய்தது[18].
 • இதனினும் முக்கிய கொள்கையாக அரசு நிருவாகப் பணி, கல்வி இவற்றில் இடவொதுக்கீடு முறையை கடைப்பிடிக்க மதராஸ் அரசு நிருவாகத்தை (தமிழ்நாடு உட்பட) 1928[18] லேயே வலியுறுத்தியது.

இந்த பரப்புரை மற்றும் தத்துவங்கள் முழுநேர செயல்பாடுகளாக பெரியார் 1925 இலிருந்து செயல்படுத்தி வந்தார். இதை பரப்புவதற்கு ஏதுவாக குடியரசு நாளிதழை 1925 முதல் துவக்கி அதுமுதல் பரப்பி வந்தார். ஆங்கிலத்தில் ரிவோல்ட் என்ற நாளிதழ் மூலம் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மக்களுக்காக பிரசாரம் செய்தார்.[19] . சுயமரியாதை இயக்கம் வெகு வேகமாக மக்களிடையை வளர்ந்தது. மக்களின் ஆதரவையும் நீதிக்கட்சித் தலைவர்களின் மூலமாகப் பெற்றது. 1929 இல் சுயமரியாதையாளர்கள் மாநாட்டை பட்டுக்கோட்டையில் எஸ்.குருசாமி மேற்பார்வையில் மதராஸ் இராசதானி சார்பில் நடைபெற்றது. சுயமரியாதையாளர்களின் தலைமையை கே.வி.ஆழகிரிசாமி ஏற்றார். இம்மாநாட்டைத் தொடர்ந்து அன்றைய மதராஸ் இராசதானியின் பல மாவட்டங்களில் சுயமரியாதையாளர்களின் கூட்டங்கள் நடைபெற்றது. இதற்கான பயிற்சி பட்டறையாக, பயிற்சி களமாக ஈரோடு மாநகரம் செயல்பட்டது. இதன் நோக்கம் சமுதாய மறுமலர்ச்சிக்காக மட்டுமில்லாமல் சமுதாயப் புரட்சிக்காகவும், இதன் மூலம் விழிப்புணர்வு பெற்ற புதிய சமுதாயத்தை உருவாக்க வழி செய்தது[20]

[தொகு] வெளிநாடு சுற்றுப்பயணம் (1929-1932)

1929 இல் முதல் வெளிநாட்டுப் பயணமாக மலேயாத் தமிழர்களின் அழைப்பை ஏற்று மனைவி நாகம்மாளுடன் கப்பலில் ஏறி மலேயாச் சென்றார் அங்கு சுமார் 50000 மக்களுக்கு மேற்பட்டுத் திரண்டு வரவேற்ற மக்களிடையே சுயமரியாதை கருத்துக்களை விளக்கிப் பேசினார். தைப்பிங், மலக்கா, கோலாலம்பூர், கங்கைப்பட்டாணி போன்ற இடங்களிலும் சென்று தமது கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். பின் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு டிசம்பர் 1931 இல் சக சுயமரியாதையாளர்களான எஸ்.ராமநாதன் மற்றும் ஈரோடு ராமுவுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். எகிப்து, கிரிஸ், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கு 3 மாதம் வரை பயணம் மேற்கொண்டார். இந்த பயணங்களின் முடிவில் இந்தியா திரும்பும் வழியில் இலங்கைக்கும் பயணம் செய்தபின், 1932 நவம்பர் 1 அன்று இந்தியாத் திரும்பினார்[21]

இச்சுற்றுபயணங்கள் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைளுக்கு மேலும் மெருகூட்டி அவற்றின் செயல்பாடுகளை மேலும் வலுவடையச் செய்தன. ரஷ்யாவின் பொதுவுடமைக் (கம்யூனிசம்) கொள்கை இவருடையக் கொள்கையை ஒத்ததாகவே இருந்தது. பலவிடங்களில் பெரியாரின் கருத்துக்கள் மார்க்சியத்தின் சமூகப் பொருளாதாரக் கருத்துக்களுடன் ஒத்துபோவதாக இருந்தது ஆனால் தனியார் முதலாளித்துவத்தை முற்றிலும் ஒழிப்பதில் உடன்பாடில்லை[22]. பெரியார் திரும்பியதும் உடனே மார்க்சியத் தலைவர் எம்.சிங்காரவேலு செட்டியாருடன் சமூக அரசியல் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். இதன் மூலம் பெரியாரின் கொள்கை சோசலிசத்துடன் கூடிய சுயமரியாதைக் கொள்கையாக மாறிற்று. இதனால் தமிழகத்தில் பெரும் வளர்ச்சியையும் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தையும் உருவாக்கிட இதுவே காரணமாயிற்று[21]

[தொகு] இந்தி எதிர்ப்பு

முதன்மைக் கட்டுரை: இந்தி எதிர்ப்பு போராட்டம்
இராஜாஜியுடன் பெரியார்

1937 இல் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார். அவரின் ஆட்சி காலத்தில் இந்தி கட்டாய மொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தி எதிர்த்து போராட்டமாக வெடித்தது.[23] நீதிக்கட்சியின் தமிழ் தேசியவாதிகளான சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் மற்றும் பெரியார் இப்போராட்டத்தினை முன்னின்று நடத்தினர். இப்போராட்டம் 1938 இல் பல்ர் கைது செய்யப்பட்டு சிறையில் இராஜாஜி அரசால்[24]

அடைக்கப்பட்டவுடன் முடிவுற்றது. அதே வருடம் தமிழ்நாடு தமிழருக்கே என்றே முழக்கமும் ஊரெங்கும் முழங்கியது[25] . இதை முதன்முதலில் முழக்கமிட்டவர் பெரியார், பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து அவர் இவ்வாறு முழக்கமிட்டார். இது ஆரியர்கள், திராவிடர்களின் பண்பாடுகளை ஊடுருவிச் சிதைக்க திட்டமிடும், அபாயகரமான தந்திரச் செயல் என குறிப்பிட்டார்[25]. இந்தியை ஏற்றுக்கொளவது இந்தி பேசும் வட இந்தியர்களிடமிருந்து, தமிழர்களை பிரித்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க வழிவகுத்துவிடும். இந்தி தமிழர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துவது மட்டுமில்லாமல், அவர்கள் நெடுங்காலமாக பாதுகாத்துவரும் பண்பாட்டையும் சிதைத்து விடும். தமிழை இனிமேல் பயன்படுத்த முடியாத நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுவிடுவார்கள் என்று பெரியார் வலியுறுத்தினார்.[26]. தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1948, 1952, மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் நடந்தன[27].

[தொகு] நீதிக்கட்சித் தலைவராக (1938-1944)

முதன்மைக் கட்டுரை: நீதிக்கட்சி

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற அரசியல் கட்சி 1916 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. பிராமணர்களுக்கு எதிராகவும், அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்திற்கு எதிராகவும் துவக்கப்பட்டது. இக்கட்சியே, பின்னாளில் நீதிக்கட்சி என பெயர்மாற்றம் பெற்றது. பிராமணர் அல்லாதவர்களின் சமூக நீதி காத்திடவும், அவர்களின் கல்வி, அரசு அதிகாரத்தில் பங்கெடுப்பு போன்றவற்றை வலியுறுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டது. அக்கட்சி, பிரமணரல்லாதாரை அல்லது பார்ப்பனரால்லாதவர்களை ஒடுக்க, பிராமணர்கள் அல்லது பார்ப்பனர்கள் பின்பற்றி வந்த வர்ணாசிரம தத்துவத்தை முற்றிலும் எதிர்த்தது[28].

1937 இல் இந்தி கட்டாயப் பாடமாக மதராஸ் மாகாணப் பள்ளிகளில் அரசால் திணிக்கப்பட்டபோது, பெரியார் தனது எதிர்ப்பை நீதிக்கட்சியின் மூலம் வெளிப்படுத்தினார். 1937 ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக திராவிட இயக்கத்திற்கு கணிசமான மாணவர்களின் ஆதரவு கிட்டியது. பின்னாட்களில் இந்தி எதிர்ப்பு தமிழக அரசியலில் பெரும் பங்கு வகித்தது. இந்தியை ஏற்றுக்கொள்வதால் தமிழர்கள் அடிமைப்படுவார்கள் என்ற காரணத்தால் முற்றிலும் எதிர்க்கப்பட்டது. நீதிக்கட்சிக்கு மிகுதியான மக்களாதரவு இல்லாததினால் மிகவும் நலிவடைந்திருந்தது. 1939]],[29] இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த பெரியார் விடுதலையானதும் அக்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார். அவரின் தலைமையில் கட்சி சிறப்புடன் வளர்ச்சி கண்டது. இருப்பினும், கட்சியின் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தமையால் பலர் பெரியாரின் தலைமையின் கீழ் ஈடுபட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினர்[28]

[தொகு] திராவிடர் கழகம் (1944-முதல்)

முதன்மைக் கட்டுரை: திராவிடர் கழகம்

[தொகு] திராவிடர் கழகம் உருவாதல்

1944 இல் நீதிக்கட்சித் தலைவராக பெரியார் முன்னின்று நடத்திய நீதிக்கடசிப் பேரணியில் திராவிடர் கழகம் எனப் பெரியாரால் பெயர் மாற்றப்பட்டு அன்று முதல் திராவிடர் கழகம் என அழைக்கப்பட்டது. இருப்பினும் பெரியார் நீதிக்கட்சியைத், திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றியதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து மாற்று அணியை, நீதிக்கட்சியின் நீண்ட அனுபவமுள்ளவரான, பி.டி. ராஜன், தலைமையில் துவக்கப்பட்டு 1957 வரை அம்மாற்று அணி செயல்பட்டது.

திராவிடர் கழகத்தின் கொள்கை நகரமக்களிடமும், மாணவ சமுதாயத்தினரிடமும் வெகு விரைவாகப் பரவியது. இக்கட்சியின் கொள்கைகளும் இதன் சார்ந்த செய்திகளும் வெகு விரைவிலேயே கிராமத்தினரிடமும் பரவியது. பார்ப்பன புரோகிதர்களின் அடையாளங்களான இந்தி மற்றும் சமயச்சடங்குகள் தமிழ் பண்பாட்டுக்கு விரோதமானவை என அடையாளம் காணப்பட்டு விலக்கிவைக்கப்பட்டன. அவ்வடையாளங்களின் பாதுகாவலர்களாக விளங்கும் பார்ப்பனர்கள், இந்நிலையை எதிர்த்து வாய் மொழித் தாக்குதல்களை தொடுக்கலாயினர் [30] . 1949 முதல் திராவிடர் கழகம் தங்களை மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்களாகவும், சமூக சீர்திருத்தவாதிகளாகவும் சமூகத்தில் அடையாளப்படுத்தும் வகையில் செயல்படலாயினர். திராவிடர் கழகம் தலித்களுக்கு எதிராக பயன்படுத்தபடும் தீண்டாமையை மிகத்தீவிரமாக எதிர்ப்பதிலும், ஒழிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டனர். பெண்கள் உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத்திருமணம், கைம்பெண் திருமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள் [31] இவைகளில் தனிக்கவனம் செலுத்தினர்.

[தொகு] அண்ணாதுரையுடன் கருத்து வேறுபாடு

முதன்மைக் கட்டுரை: திராவிட முன்னேற்றக் கழகம்
பெரியாருடன், அண்ணாதுரை

1949 இல் பெரியாரின் தலைமைத் தளபதியான கஞ்சிவரம் நடராசன் அண்ணாதுரை பெரியாரிடமிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) (Dravidan Progressive Federation), என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தார்[30]. இந்த பிரிவு பெரியார் மற்றும் அண்ணாதுரையிடம் நிலவிய இருவேறு கருத்துக்களே காரணம் என்க கூறப்படுகின்றது. பெரியார் திராவிடநாடு அல்லது தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார் ஆனால் அண்ணாதுரை தில்லி அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சியைப் பெறுவதில் அக்கரை காட்டினார்[32]. அவர்கள் கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பினர். பெரியார் தன்னுடைய கட்சியின் இலட்சியங்களாகவும், தனது இலட்சியங்களாகவும் முன்னிருத்திய சமுதாய மறுமலர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு, முடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்றவற்றை அரசியல் காரணங்களுக்காக சிறிதும் விலகிநிற்க அல்லது விட்டு கொடுக்க அவர் விரும்பவில்லை. ஆகையால் பெரியார் தனது கட்சியை அரசியல் கட்சியாக மாற்ற விருப்பமில்லை என்பதை அவரின் கட்சியின் அதிருப்தியடைந்த தொண்டர்களிடமும், உறுப்பினர்களிடமும் தெரிவித்து அவர்களை சமாதானப்படுத்தினா. பெரியாரிடமிருந்து பிரிந்து போகும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள், ஜூலை 9, 1948 அன்று பெரியார், தன்னை விட 40 வயது இளையவரான மணியம்மையாரை மறுமணம் புரிந்த்தை காரணம் காட்டி கட்சியிலிருந்து அண்ணாதுரைத் தலைமையில் விலகினர்[33]

அண்ணாதுரை விலகும் பொழுது தன்னை அரசியலில் வளர்த்து ஆளாக்கியத் தலைவனை வணங்கி கண்ணீர்விட்டு பிரிகின்றோம் என்று கூறிப் பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்த காரணத்தினால் பெரியார் அவர்களின் திமுக கட்சியை கண்ணீர்த்துளி கட்சி[34] என அதுமுதல் வர்ணிக்கலானார்.

[தொகு] இறுதி காலம்

1956 இல் சென்னை மெரினாவில் இந்து கடவுளான ராமரின் உருவப்பட்ம்[35] எரிப்பு போராட்டத்தை பெரியாருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த பி.கக்கன் அவர்களால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பெரியார் அப்போராட்டத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்[35].

1958 இல் பெரியார் மற்றும் அவரது செயல்வீரர்கள் பெங்களூரில் நடைபெற்ற அனைத்திந்திய அலுவலக மொழி மாநாட்டில் கலந்துகொண்டனர். அம்மாநாட்டில் பெரியார் ஆங்கிலத்தை, இந்திக்கு மாற்றுதலான அலுவலக மொழியாக அரசாங்கத்திடம் வலியுறுத்திக் பெற்றுக்கொள்ள வலியுறுத்தினார். 1962 இல் பெரியார் தனது கட்சியான திராவிடர் கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக கி.வீரமணியை முழு நேரமும் கட்சிப் பொறுப்பை கவனிக்கும் விதத்தில் நியமித்தார். ஐந்தாண்டுகளுக்குப்பிறகு பெரியார் வடஇந்தியா சுற்றுப்பயணம் மூலம் சாதியங்களை ஒழிக்கப் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரின் இறுதி கால நெருக்கத்தில் அவருக்கு யுனஸ்கோ விருது இந்திய கல்வி அமைச்சர் , திரிகுனா சென் அவர்களால் சென்னையில் (மதராசில்), ஜூன் 27, 1973 அன்று வழங்கப்பட்டது.


[தொகு] மறைவு

பெரியாரின் கடைசி கூட்டம் சென்னை, தியாகராய நகரில், டிசம்பர் 19, 1973 அன்று கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் சமுதாயத்தில் அனைவரும் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டு முடித்துகொண்டார். அதுவே அவரின் கடைசிபேச்சு ஆகும். குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்றப் பெரியார், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், உறுதியான பகுத்தறிவுச் சிற்பி என அனைவராலும் போற்றப்பட்ட பெரியார், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 24, 1973 அன்று தனது 94 ஆம் வயதில் இயற்கை எய்தினார்[33].

[தொகு] விமர்சனங்கள்

பெரியார் இந்து மத மூடநம்பிக்கைகளையும்,பிராமணியத்தையும் எதிர்த்தார். பிற மதங்களை பற்றி அவர் விமர்சிக்கவில்லை

[தொகு] வாழ்க்கை வரலாறு

 • 1879 : செப்டெம்பர் 17, ஈரோட்டில் பிறந்தார். பெற்றோர்: சின்னத்தாயம்மை-வெங்கட்ட நாயக்கர்
 • 1885 : திண்ணைப்பள்ளியில் சேர்ந்தார்.
 • 1891: பள்ளிப்படிப்பை விட்டு நிறுத்தப்பட்டார்
 • 1892 : வாணிபத்தில் ஈடுபட்டார்
 • 1898 : நாகம்மையை (அகவை-13) மணந்தார்.
 • 1902 : கலப்புத்திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமயத்தினர், சாதியினருடன் சேர்ந்து விருந்துண்டார்.
 • 1904 : ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார். (அக்குழந்தை ஐந்தாம் மாதத்தில் இறந்தது. பின்னர் குழந்தையே இல்லை.)
 • 1907 : பேராய இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ஈரோட்டில் கக்கல் கழிச்சல் நோய் பரவியபோது, யாரும் உதவிக்கு முன்வராத நிலையில் துணிந்து மீட்புப்பணியாற்றினார்.
 • 1909 : எதிர்ப்புக்கிடையில் தங்கையின் மகளுக்கு கைம்மைத் திருமணம் செய்துவைத்தார்.
 • 1911 : தந்தையார் மறைவு
 • 1917 : ஈரோடு நகரமன்றத்தின் தலைவரானார்.

[தொகு] நினைவகங்கள்

தமிழ்நாடு அரசு ஈ.வெ.ராமசாமி நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் - அண்ணா நினைவு இல்லமாக்கியுள்ளது. இங்கு தந்தை பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய வைக்கம் இடத்தில் தந்தைபெரியார் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தந்தை பெரியார் அவர்களின் உட்கார்ந்த நிலையிலான நான்குஅடி உயர திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 400 பேர்கள் அமரக்கூடிய அளவிலான திறந்தவெளி அரங்கம் உள்ளது. நூல் நிலையம் உள்ளது. பார்க்க

[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] வெளி இணைப்புக்கள்

வைக்கமும் காந்தியும், வைக்கம்போராட்டத்தில் ஈவேராவின் உண்மையான பங்கு. ஜெயமோகன் கட்டுரை

[தொகு] மேற்கோள்கள்

 1. மேத்தா, ராஜேந்திர ராஜ்; தாமஸ் பாந்தம்(2006). நவீன இந்தியாவின் அரசியல் கொள்கைகள்: கட்டுரையை ஆராய்தல்.சேஜ் பதிப்பகம் : ஆயிரம் கருவாலிமரம், 48.
 2. கந்தசாமி,. வெண்தாடி வேந்தர் பெரியாரின் பகுத்தறிவு ஆய்வு மற்றும் தீண்டாமை குறித்த பார்வை, 104.
 3. 3.0 3.1 3.2 3.3 டையல், Anita (1977). ஈ.வெ. இராமசாமி நாயக்கர்-பெரியார். சுவீடன்: ஸ்கான்டிநேவியன் பல்கலைக்கழக புத்தகங்கள். pp. பக்கம். 19.
 4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "பெரியாரை பற்றி: வாழ்க்கை வரலாறு 1879 to 1909". திராவிடர் கழ்கம். பார்க்கப்பட்ட நாள் 2008-09-06.
 5. சரசுவதி. சுயமரியாதையை நோக்கி, பக்கம். 54.
 6. கூகுல் புத்தகம்
 7. கூகுல் புத்தகம்
 8. "பெரியாரைப் பற்றி:புரட்சிகரமான கருத்துக்கள்". திராவிடர் கழகம். பார்க்கப்பட்ட நாள் 2008-11-30.
 9. வீரமணி, கே. (1992) பெண்ணுரிமைக் குறித்து பெரியார். எமரால்டு பதிப்பகம்: சென்னை, அறிமுகப்படுத்தப்பட்டது - xi.
 10. கோபாலகிருஷ்ணன், எம்.டி. (1991) பெரியார்: தமிழர் புரட்சியின் தந்தை, சென்னை. எமரால்டு பதிப்பகம், பக்கம். 3.
 11. கோபாலகிருஷ்ணன், பெரியார்: தமிழர் புரட்சியின் தந்தை, பக்கங்கள். 14-17.
 12. "பெரியார் ஈ.வெ.ராமாசாமியின் வாழ்க்கை வரலாறு (1879-1973)". பாரதிதாசன் பல்கலைக்கழ்கம் (2006). பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 6, 2008.
 13. கந்தசாமி, டபுள்யு.பி. வசந்தா; புளோரின்டின் சமாரன்டேச்; கே. கந்தசாமி(2005). வெண்தாடி வேந்தர் பெரியாரைப் ப்ற்றிய ஆராய்ச்சி மற்றும் அவரின் தீண்டாமை ஒழுப்பு பார்வை.எக்சிஸ்: போனிக்ஸ், 106.
 14. டைய்ல், அனிதா, "ஈ.வெ. ராமசாமி நாயக்கர்-பெரியார்", பக்கங்கள். 22-24
 15. கென்ட், டேவிட். "பெரியார்". ACA. பார்க்கப்பட்ட நாள் 2007-06-21.
 16. ரவிகுமார்."பெரியார் மறுவாசிப்பு", கவுன்டர் கரன்ட்ஸ், மார்ச் 2, 2006.
 17. Diehl, ஈ.வெ. ராமசாமி நாயக்கர்-பெரியார், பக்கங்கள். 77 & 78.
 18. 18.0 18.1 18.2 18.3 18.4 பெரியார் காலத்தில் சுயமரியாதை இயக்கம்பார்த்து பரணிடப்பட்ட நாள் 26-06-2009
 19. சரசுவதி, எஸ். சுயமரியாதையை நோக்கி, பக்கம். 4.
 20. சரசுவதி, எஸ். சுயமரியாதையை நோக்கி, பக்கம். 19.
 21. 21.0 21.1 சரசுவதி. சுயமரியாதையை நோக்கி, பக்கம். 54.
 22. டீல், ஈ.வெ. ராமசாமி நாயக்கர்-பெரியார், பக்கம். 69.
 23. சட்டர்ஜி, உயர்சாதி எதிர்ப்பு: அம்பேத்கார் மற்றும் பெரியாரின் ஒற்றுமைகள், பக்கம். 40.
 24. நலங்கிள்ளி, தஞ்சை (1 ஜனவரி 2003). "தமிழ் நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தமிழ் நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்கள்". இந்தி எதிர்ப்பு போராட்டம்: 1938-1964. தமிழ் காவலர். பார்க்கப்பட்ட நாள் 2007-12-30.
 25. 25.0 25.1 சரசுவதி, எஸ். சுயமரியாதையை நோக்கி, பக்கங்கள். 118 & 119.
 26. சரசுவதி. சுயமரியாதையை நோக்கி, பக்கம். 88.
 27. டீல், ஈ.வெ. ராமசாமி நாயக்கர்-பெரியார், பக்கம். 79.
 28. 28.0 28.1 பாண்டியன், சாதி, தேசியவாதம் மற்றும் மனித இனம், பக்கம். 62.
 29. கந்தசாமி,. வெண்தாடி வேந்தர் பெரியாரின் தீண்டாமை குறித்த நடுநிலைப்பார்வை, 109.
 30. 30.0 30.1 பாண்டியன், ஜே., (1987).சாதி, தேசியவாதம் மற்றும் மனிதநேயம். பாப்புலர் பிரக்காசன் பிரைவேட் லிமிடெட்.: மும்பை, பக்கம். 64.
 31. பன்னாட்டு தமிழ் மொழி நிறுவனம், (2000).திருக்குறள்/ தமிழர் பரம்பரை ம்ற்றும் பண்பாட்டு கையேடு. ஐ டி எல் எப்: சிகாகோ, பக்கம். 1346.
 32. டீல், ஈ.வெ. ராமசாமி நாயக்கர்-பெரியார், பக்கம். 29.
 33. 33.0 33.1 "20 ஆம் நூற்றாண்டின் ஒரு நூறு தமிழர்கள் - பெரியார் ஈ. வெ. ராமசாமி". தமிழ்நேசன்.ஒஆர்ஜி. பார்க்கப்பட்ட நாள் 2009-01-17.
 34. [பெரியார் இவர்களை கண்ணீர்த்துளிகளாகப் பார்க்கின்றார்-ஞாநி-திண்ணை]பார்த்து பரணிடப்பட்ட நாள் 28-06-2009
 35. 35.0 35.1 ரிச்மென், பவுலா (1991). தெற்காசியாவின் பழைமை வழக்கங்களின் காணப்படும் வேற்றுமைகள், அத்தியாயம் 9: ஈ. வெ.இராமசாமியின் இராமாயண வாசிப்பு. கலிபோர்னியா பல்கலைக்கழகம்.

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...