சிலைகளும் வன்முறைகளும் கவிஞர் இரா .இரவி


சிலைகளும் வன்முறைகளும் கவிஞர் இரா .இரவி

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிலைகள் உள்ளன .ஒவ்வொரு சிலைகளையும் 24 மணி நேரமும் பாதுகாப்பது இயலாத செயலாகும் .தியாகம் செய்த ,சாதியை விரும்பாத ஒப்பற்ற
த் தலைவர்களுக்கு எல்லாம் சாதிச் சாயம் பூசி அவர்களை அவமானப் படுத்திவிட்டனர் .ஒப்பற்ற உயர்ந்த தலைவர்களை , சாதி வெறி பிடித்தவர்கள் தத்து எடுத்துக் கொண்டனர் .வேண்டுமென்றே அமைதிக்குப் பங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் ,சில விசமிகள் சிலைகளை அவமானப்படுத்துவதும் ,அதைக் காரணம் காட்டி சாலை மறியல் என்ற பெயரில் வன்முறைகளை விளைவித்து வருகின்றனர் .சாதி ஒழிய வேண்டும் என்று கடைசி மூச்சு உள் ளவரைப் போராடிய தந்தை பெரியார் பிறந்த மண்ணில் சாதிச் சண்டைகள் நடப்பது வேதனையாக உள்ளது .விலை மதிப்பற்றது மனிதஉயிர்கள் .உயிர்களின் மதிப்பு உணரப் பட வேண்டும் .எக்காரணம் கொண்டு மனித உயிர்கள் பலி யாகாக் கூ டாது

தமிழகத்தில் எதற்கு எடுத்தாலும் சாலை மறியல் .தண்ணீர் வரவில்லை என்றால் சாலை மறியல் சாக்கடை அடைத்தால் சாலை மறியல் பேருந்தில் மாணவன் சண்டையிட்டால் சாலை மறியல்.அரசின் கவனம் ஈர்க்க ஒரே வழி சாலை மறியல் என்ற தவறான முடிவுக்கு மக்கள் வர அரசும் காரணம் ஆகி விட்டது .

சாலை மறியல் காரணமாக பொதுமக்கள் பல துன்பங்களைச் சந்தித்து வருகின்றனர் .கர்ப்பிணி
ப் பெண்ணின் உயிர் போக சாலை மறியல் காரணமாகின்றது .நேர்முகத்தேர்வு செல்ல முடியாமல் பலருக்கு வேலை கிடைக்காமல் போகின்றது . இப்படிப் பலத் துன்பங்கள் நடக்கின்றது .
சாலை மறியல் செய்வோர் ,ஒரு நிமிடம் சாலையில் பயணிக்கும் பயணியாகத் தன்னை கற்பனை செய்துப் பார்க்க வேண்டும் .அந்த வேதனை ,வலி புரியும் .சாலை மறியல் தடை செய்யப் பட வேண்டும் .சட்ட விரோதம் என அனைவரும் உணர வேண்டும் .

ஒவ்வொரு ஊரில் உள்ள எல்லா சிலைகளையும் அந்த ஊரின் ஒதுக்குப் புறத்தில் காட்சிக் கூ டமாக்கி ஒரே இடத்தில வைத்து 24 மணி நேரமும் பாது காக்கலாம் .அந்தந்த தலைவர்களின் பிறந்த நாள் நினைவு நாள் வந்தால் மரியாதைச் செய்ய அனுமதிக்கலாம் .சிலை அவமதிப்பு அது தொடர்பான கலவரங்களைத் தவிர்க்கலாம் .மனித நேயம் வளர்ப்போம் .சாதி மத வெறி மாயப்போம்

--
--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்