இதயத்தில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் பொன்.குமார்.

இதயத்தில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர்  பொன்.குமார்.

http://ponkumarsalem.blogspot.com/2011/08/blog-post_22.html
இரவும் பகலும் இடைவிடாது வந்து கொண்டேயுள்ளன. இது போலவே இரா.இரவி ஹைக்கூ படைத்தலும் தொடர்கிறது. ஹைக்கூ கவிதைகள், விழிகளில் ஹைக்கூ, நெஞ்சத்தில் ஹைக்கூ, உள்ளத்தில் ஹைக்கூ என்னும் ஹைக்கூத் தொகுப்புகளைத் தொடர்ந்து தற்போது தந்திருக்கும் தொகுப்பு "இதயத்தில் ஹைக்கூ" இரா.இரவியின் இதயத்துடிப்பு 'ஹைக்கூ ஹைக்கூ' என்றே ஒலிக்கும்.
சுனாமியில் பல்லாயிரம் உயிர்கள் பலியாயின. இப்பெரும் சோகத்தை பலகவிஞர்கள் கவிதையில் பாடியுள்ளனர். இரா.இரவியோ ...
"தாய் இருக்க சேய்
சேய் இருக்க தாய்
சுனாமி கொலை"
என சோகத்திலும் சோகமான பிரிவு சோகத்தைக் கூறியுள்ளார். இது முதல் ஹைக்கூ. தொடர்ந்து சுனாமி தொடர்பாக பல ஹைக்கூக்களை எழுதியுள்ளார். ஒரு சுனாமி கவிஞருக்கு பல கவிதைகளைத் தந்துள்ளது.
விளம்பரங்கள் பெண்ணை பலவாறாய் சீரழித்து வருகிறது. பண்பாட்டையும் சிதைக்கிறது. ஒரு மெண்டோஃபிரஸ்க்காக ஒரு பெண் சோரம் போவதான விளம்பரத்தை சொரணையில்லாமல் ஒவ்வொருவரும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். கோபமுற்ற கவிஞர்..
"பெரும் பங்கு
பண்பாட்டைச் சிதைப்பதில்
விளம்பரங்கள்"
என சாடியுள்ளார். பண்பாடு காக்க கவிஞர் ஆற்றியுள்ள சிறுபங்கிது.
மனிதர்கள் நாய் வளர்ப்பார்கள். வளர்க்கும் நாய்க்குத் தரும் மரியாதையை மனிதனுக்குத் தருவதில்லை. இந்நிலை கண்டு வருந்திய கவிஞர்...
"அம்மா தாயே
மனிதனை விரட்டி விட்டு
நாய்க்கு கறிசோறு"
என் எழுதி மனிதாபிமானமற்றவர்களாக மனிதர்கள் உள்ளனர் என்கிறார். இது கவிஞரின் மனித நேயத்தைக் காட்டுகிறது.
இத்தொகுப்பின் பின்பகுதியில் புகைப்படங்களையும், அதற்கு எழுதிய ஹைக்கூ கவிதைகளையும் இணைத்துள்ளார். ஒரு படத்திற்கு ஒரு கவிதை எழுதுவதே கடினம். கவிஞரோ ஒவ்வொன்றுக்கும் ஆறு கவிதைகள் எழுதி அசத்தியுள்ளார். படம் கூறும் கருத்துக்களை ஹைக்கூவில் பலவாறாய் பிரதிபலிக்கச் செய்துள்ளார். படங்களைத் தாண்டியும் பொருள் தரக்கூடிய தன்மை மிக்கவையுள்ள்ன.
ஹைக்கூ படைப்பில் இடையறாது இயங்கி வரும் இரா.இரவி அவர்கள் பாராட்டுக்குரியவர். ஒவ்வொரு ஹைக்கூவிலும் அவரது அக்கறையை உணர முடிகிறது. ஐந்து தொகுப்புகளின் மூலம் ஆயிரத்து ஐநூறுக்கும் மேல் ஹைக்கூ படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிடும்படி ஹைக்கூ எழுத வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்