செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

பொள்ளாச்சி தமிழிசைச் சங்கத்தில் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன்அவர்களை நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் நடைப்பெற்றது .

பொள்ளாச்சி தமிழிசைச் சங்கத்தில் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு  பட்டிமன்றம்  நடைப்பெற்றது .

புகைப்படம் எடுத்து வாங்கி வந்தோம் .

பட்டுக்கோட்டை நண்பர் திரு R.P.R..நாடிமுத்து அவர்களின் புதல்வி N. மோனிஷா செல்வன் P.முத்துக்குமரன் திருமணம் திருச்சி தாஜ் திருமண மண்டபத்தில் நடை ப்பெற்றது  .நானும் என் மனைவி ஜெயசித்ராவும் சென்று இருந்தோம் .திருமணத்திற்கு வந்து இருந்த அனைவரையும் புகைப்படம் எடுத்து உடனடியாக படத்தை கொடுத்தனர் .வந்து இருந்த அனைவரும் ஆவலோடு புகைப்படம் எடுத்து வாங்கி சென்றனர் .நாங்களும் புகைப்படம் எடுத்து வாங்கி வந்தோம் .

வண்ணத்துப் பூச்சி கவிஞர் இரா .இரவி

வண்ணத்துப்  பூச்சி    கவிஞர் இரா .இரவி

வானவில்
நகர்வலம்
வண்ணத்துப்  பூச்சி !

உற்று நோக்கினால்
சுறுசுறுப்பைப் போதிக்கும்
வண்ணத்துப்  பூச்சி !

கண்டால்
கவலைகள் பறந்தோடும் 
வண்ணத்துப்  பூச்சி !

பார்க்கப் பார்க்கப்
பரவசம் தரும்
வண்ணத்துப்  பூச்சி !

மலரில் தேன் எடுத்து
மகரந்தச் சேர்க்கை 
வண்ணத்துப்  பூச்சி !

சிந்தனைச்  சிறகடிக்க
உதவிடும்  உன்னதம்
வண்ணத்துப்  பூச்சி !

பறந்தாலும் அழகு
அமர்ந்தாலும் அழகு
வண்ணத்துப்  பூச்சி !

காதலியை நினைவூட்டும்
காதல் பட்சி
வண்ணத்துப்  பூச்சி !

ரசிப்பது தவறில்லை
பிடிப்பது தவறு
வண்ணத்துப்  பூச்சி  !

இயற்கையிலும் அழகு
செயற்கையிலும் 
அழகு  
வண்ணத்துப்  பூச்சி  !

பட்டு மேனி
உணரலாம்
தொடாமலே
வண்ணத்துப்  பூச்சி  !

ஆறு முதல் அறுபதும்
அனைவரும் விரும்பும்
வண்ணத்துப்  பூச்சி  !

மைசூர் அரண்மனை பார்த்து மகிழுங்கள்

மைசூர் அரண்மனை பார்த்து மகிழுங்கள் 

http://mysorepalace.tv/360_Eng/index.html

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!


சனி, 25 பிப்ரவரி, 2012

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ             கவிஞர் இரா .இரவி

மரணம் இல்லை
மக்களுக்காகப்  போராடிய
போராளிகளுக்கு !


செலவற்ற
வரவு
புன்னகை !

வலிமை வாய்ந்தது
சிறந்த ஆயுதம்
அன்பு !

கண்டுபிடிக்கவில்லை
மருந்து
காதல் நோய் !


எங்கும் இல்லை
தமிழகம் தவிர
பச்சைக் குத்தும் தொண்டர்கள்  ! 


ஓய்விலும் ஓய்வின்றி
உழைத்திடும் பெண்கள்
மாத விலக்கு !

வென்றவர்களுக்குப் புரியவில்லை
தோற்ற
வர்களுக்குப் புரிந்தது
காதலின் அருமை !

ஏற்றத்தாழ்வு
உழைப்பதில்
கடிகார முட்கள்

நேரம் பார்த்து தோல்வி
நேரம் பார்க்காது வெற்றி
மூடநம்பிக்கை !

ஒரே மாதிரி
ஒருவரும் இல்லை
மனிதர்கள் !

அதிசயம்
ஆனால் உண்மை
உடலின் இயக்கம் !

தேவை 
சிக்கனம்
பயன்பாட்டில் இக்கணம்
மின்சாரம் !

அழகுதான்
கழுதை
குட்டியில் !

ழல் 
உடன் பிறந்த நோய்
அரசியல்வாதிகள்  !
   
இக்கரைக்கு
அக்கரைப் பச்சை
அரசியல்வாதிகள்  !

மூலதனம்
பொய் வாய் 
அரசியல் !

ழல்  ஒழிக்க வந்தவருக்கு
பண விருது
ழல் ?

மக்கள் மறக்கவில்லை
இருவரையும்
காந்தி !கோட்சே !

பெரிய மனிதர்களின்
சின்னப் புத்தி
ழல்  !

தன்னலம் மறந்து அன்று
தன்னலம் ஒன்றே இன்று
அரசியல் !


இறங்காதோ ?
ஏக்கத்தில் ஏழைகள்
விலைவாசி  !


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

வாழ்த்துரை

சுட்டும் விழி நூலுக்கு எழுத்தாளர் சமுத்திர மணாளன் அவர்களின்  வாழ்த்துரை

ஏன்?இந்தக் கொலை வெறி ! கவிஞர் இரா .இரவி

ஏன்?இந்தக் கொலை வெறி !     கவிஞர் இரா .இரவி

பள்ளி மாணவன் ஆசிரியரைக் கொலைப் புரிந்த செய்திப் படித்து ,அதிர்ந்துப் போனேன் .மாதா ,பிதா குரு,தெய்வம் என்றார்கள். தெய்வத்திற்கும் முன்பாக குருவை வைத்தார்கள் .குருவை வணங்கிய காலம்  மாறி  ,கொலை செய்யும் வெறித்தனம் ஏன்?வந்தது. எப்படி? வந்தது , எதனால் ? வந்தது  இப்படி பல கேள்விகள் என் மனதில் எழுந்தது .குடியிருப்பில் இருப்பதுக்  கூடத் தெரியாமல் அமைதியாக வாழ்ந்த மாணவன் ,கொலை செய்துள்ளான் .இன்று ஆசிரியர் மாணவர் உறவில் ஏன் ? இந்த விரிசல்  வந்தது. இருவருக்கும் இடையே அன்பு நிலவ வேண்டும் .ஆசிரியர்கள் மாணவர்களிடம் மிகக் கடுமையாக நடந்துக் கொள்வதும் தவறு. மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்காமல் இருப்பதும் தவறு .

ஆசிரியை உமா மகேஸ்வரியின் கொலைக்கு காரணங்களை ஆராய்ந்தால் ,கொலை செய்த மாணவன் வன்முறை திரைப்படம் பார்த்து இருக்கிறான் .கொலைவெறிக்கு அதுவும் ஒரு காரணமாகிறது .திரைப்பட வன்முறையால் சமுதாயம் சீரழிகிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம் . கொலைவெறிப் பாடலின் பொருள் தெரியாமல் சிறு குழந்தைகளும் இன்றுப் பாடுகின்றனர் .நல்ல திரைப்படங்கள் அத்திப் பூத்த  மாதிரி எப்போதாவதுதான் வருகின்றன .ஆனால் ஆபாச ,வன்முறை திரைப்படங்கள்தான் வரிசை வரிசையாக வருகின்றது .திரைத்துறையினர்  சமுதாய அக்கரையுடன் படம் எடுக்க முன் வர வேண்டும் .

பெரிய திரை இப்படி என்றால் சின்னத்திரைப்  பற்றி சொல்லவே மனம் கூசுகின்றது .குடும்பத்தை எப்படி?  கெடுப்பது ,யாரை எப்படி? பழி வாங்குவது ,எப்படி? குழிப் பறிப்பது ,வக்கிரம் குணம் எப்படி? வளர்ப்பது ,எப்படி ?துரோகம்    செய்வது ,எப்படி ?மோசடி செய்வது என்று வகுப்பு  எடுக்கும் விதமாக தொலைக்காட்சித் தொடர்கள் .உடனடியாக தொலைக்காட்சித் தொடர்களுக்கு தணிக்கை கொண்டு  வர வேண்டியது, மிகவும் அவசர அவசியம் .ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் தமிழ்ப் பண்பாட்டைச் சிதைக்கும் விதமாக தொடரில் வரும் கதாநாயன்கள் அனைவருக்கும் இரண்டு மனைவி . சில தொடர்களில் மாணவன் ஆசிரியரை எப்படி? கேலி செய்ய வேண்டும் என்று கற்பிக்கும் விதமாகவே வருகின்றன .

இந்தக் கொலைக்கு மற்றொரு காரணம் பள்ளியின் நிர்வாகம் .மாநிலத்தில் முதல் மூன்று இடத்தில தம் பள்ளி வந்து விட்டால், அந்த விளம்பரத்தின் மூலம் பள்ளியின் கட்டணத்தை ,நன்கொடையை உயர்த்தி பணம் கொள்ளை அடிக்க வேண்டும் . என்ற வெறியோடு பல தனியார் பள்ளிகள் செயல்படுகின்றனர் . பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு நெருக்கடிக் கொடுக்கின்றனர் .அதன் காரணமாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நெருக்கடிக் கொடுக்கின்றனர் ..தமிழ் நாட்டில் தமிழ் சொல்லித் தராமல் ,இந்தி, சமஸ்கிருதம் ,பிரன்ச் படிக்கச் சொல்லி துன்புறுத்துகின்றனர் .பிஞ்சு நெஞ்சங்களில் கட்டாயப்படுத்தி நஞ்சு கலக்கின்றனர் .தாய்  மொழி தமிழ் நன்கு புரியும். அதை விடுத்து  அந்நிய மொழிகளை படிக்கச்  சொல்லி துன்புறுத்துகின்றனர் . உலக மொழிஆங்கிலம் தாய் மொழி தமிழ் .இந்த இரண்டு மொழி பள்ளிப் படிப்பிற்குப் போதும் .வேறு மொழிகள் கற்பிப்பதை முதலில் ஒழிக்க வேண்டும் .
நீதி போதனை வகுப்பு முன்பு இருந்தது .ஆனால் இன்று பெரும்பாலான பள்ளிகளில்  நீதி போதனை வகுப்பை எடுத்து விட்டனர் .உடனடியாக எல்லாப் பள்ளிகளிலும்   நீதி போதனை வகுப்பு கட்டாயம் ஆக்க வேண்டும் .

இந்தி சரியாகப் படிக்கவில்லை ,படிப்பு வரவில்லை  என்று ஆசிரியர் குறிப்பு எழுதி உள்ளார் .இதனைப் படித்த பெற்றோர் மிகக் கடுமையாக திட்டி உள்ளனர் .பெற்றோர்களும் படிப்பு சரியாக வராத குழந்தைகளைக் கண்டப்படி திட்டுவதை நிறுத்த வேண்டும். அன்பு செலுத்த வேண்டும் .பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும் .கல்வியின் பயனை பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும் .

தனியார் பள்ளி நிர்வாகங்கள் உடனடியாகத் திருந்த வேண்டும் .திருந்த மறுத்தால் கல்வி அதிகாரிகள் திருத்த வேண்டும் .பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பில் முடிவு சதவிகிதத்தில் தங்கள் பள்ளி முழுமையாக வெற்றிப் பெற வேண்டும் என்ற வெறியில், ஒன்பதாம் வகுப்பில் ,பதினொன்றாம் வகுப்பில் சுமாராகப் படிக்கும் மாணவர்களை பள்ளியில் இருந்து விரட்டு விடும் போக்கு உள்ளது .மாற வேண்டும் .இப்படி விரட்டப் படும் மாணவர்களின் மனசு பற்றி ,அவர்களது பெற்றோர்கள் மனசுப் பற்றி ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் .படிக்காத மாணவனைப் படிக்க வைப்பதுதான் பள்ளிக்குப் பெருமை .அன்று கல்விக்கு சேவை செய்ய தனியார் முன் வந்தனர் .ஆனால் இன்று பணம் கொள்ளை அடிப்பதற்காகவே  தனியார் வருகின்றனர்..இந்த நிலை மாற வேண்டும். மாறினால் கொலை வெறி ஒழியும்.மனித நேயம் மலரும் .ஆசிரியர் மாணவர் நட்பாக இருக்கும் காலம் வரும் . 


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

ஹைக்கூ இரா .இரவி

ஹைக்கூ           இரா .இரவி

ஆபாசம் இல்லாதது
அறிவு வளர்ப்பது
சீர்மிகு சிற்றிதழ்கள்

நடுப்பக்கம் நடிகை  இல்லை
நல்ல தகவல்கள் உண்டு

சீர்மிகு சிற்றிதழ்கள்

வளரும்படைப்பாளிகளின்
வட்ட மேஜை
சீர்மிகு சிற்றிதழ்கள்

எண்ணிக்கை குறைவு
எண்ணங்கள் நிறைவு
சீர்மிகு சிற்றிதழ்கள்

பக்கங்கள் குறைவு
தாக்கங்கள் நிறைவு
சீர்மிகு சிற்றிதழ்கள்

இல்லத்திற்கே வரும்
கடைகளுக்கு வராது
சீர்மிகு சிற்றிதழ்கள்

புதிய
ப் படைப்பாளிகளின்
அறிமுக மேடை
சீர்மிகு சிற்றிதழ்கள்

ஆயிரங்களை இழந்து
இலக்கியம் வளர்க்கும்
சீர்மிகு சிற்றிதழ்கள்

லட்சியம் உண்டு
லட்சங்கள் இல்லை
சீர்மிகு சிற்றிதழ்கள்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!
 

புதன், 22 பிப்ரவரி, 2012

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடைப்பெற்றது

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடைப்பெற்றது

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடைப்பெற்றது

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப்
பயிலரங்கம் நடைப்பெற்றது .*
*
மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப்
பயிலரங்கம் நடைப்பெற்றது . **வாசகர் **வட்டத்தின்** செயலர், கவிஞர் இரா ,இரவி
தலைமை வகித்தார் .திரு தினேஷ் முன்னிலை வகித்தார் .கவிஞர்கள் யமுனா ரகுபதி
,பிரபாகரன் ,சிவா முருகன் ஆகியோர்  தன்னம்பிக்கை தொடர்பான கவிதை படித்தனர்
.திரு .ராமமூர்த்தி ,திரு பீட்டர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் .மதுரை
விரகனூர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் கவிஞர் கா .கண்ணதாசன்  சிறகை விரி
! வானம் வசப்படும் !    என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார்
.ஜோதிடம் பார்க்கப் பயன்படும் கிளி ,சிறகு இருந்தும் பறக்காமல் கிடைத்த நெல்
மணியோடு திருப்திப் பட்டு இருந்து விடுகின்றது. கிளியைப் போலவே சில
மனிதர்களும் இருந்து விடுகின்றனர் .முயற்சியால் வெற்றிப் பெற்ற அறிஞர்களின்
வரலாறு கூறி,  மிகச் சிறப்பாக பயிற்சித் தந்தைமைக்காக ,எல்லோரும் எழுந்து
நின்று கர ஒலி தந்து பாராட்டினார்கள் . மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர்
பலரும் கலந்து கொண்டு  விழாவை சிறப்பித்தனர் .விழாவிற்கான ஏற்பாட்டை வாசகர்
வட்டத்தின் தலைவர் ராஜராஜன் ,ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் இருவரும்
செய்து இருந்தனர் . *

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

உறவின் கவிதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் ரூபி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

உறவின் கவிதைகள்

நூல் ஆசிரியர் கவிஞர் ரூபி

நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி

அட்டைப்படத்தில் மழலைகள் அலங்கரிப்பது மிக அருமை .நூலில் 51 கவிதைகள் உள்ளது அனைத்தும் மிக நன்று  .
கவிதைகள் அன்பிலே தொடங்கி ,தேசத்தில் முடிகின்றது .நூல் ஆசிரியர் கவிஞர் ரூபி பள்ளி ஆசிரியர் என்பதால் ,தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக ,பண்பாடு ,ஒழுக்கம் போதிக்கும் விதமாக ,வெற்றிக்கான வழி கூறும் விதமாக கவிதைகள் உள்ளது .பாராட்டுக்கள்.  இந்நூலை பாசமிகு அண்ணன் திரு .வின்சென்ட் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பதால் நூலின் தலைப்பு பொருத்தமாக உள்ளது .கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா ,முனைவர் .சகோ .ஜோசபின் ,அருட்பணி அணி சேவியர் ,நிர்மலா தேவி, கவிஞர் கோ ஆகியோரின் அணிந்துரை  வாழ்த்துரை நூலிற்கு தோரணமாக உள்ளது .

முதல் கவிதையில் அன்பிற்கான விளக்கத்தை அற்புதமாகப் பதிவு செய்துள்ளார் .

அன்பிலே !

அன்பு பொறுமை உள்ளது !
அன்பு நன்மை செய்யும் !
அன்பு உண்மையில் மகிழும் !
அன்பு மன உறுதியில் இருக்கும் 1
அன்பு ஒரு போதும் அழியாது !


முயற்சி !

முயற்சி என்ற ஒன்று இல்லாதிருந்தால் !
ஆதிகால மனித வாழ்வே நீடித்திருக்கும் !
முயற்சியின் பலனே அறிவியல் வளர்ச்சி !
முயற்சியே  இன்று விண்வெளிப் பயணம் !

முயற்சியின்  பலனை மிகச் சிறப்பாகக் கவிதையில் நன்கு பதிவு செய்துள்ளார்கள் .அவர்களுக்கு
ப் பாராட்டுக்கள் .

வெற்றி !

முட்களை அல்ல ரோஜாவைப் பார்ப்போம் !
மகிழ்ச்சியும் வெற்றியும் மனத்தில் நிலைக்கும் !
பலவீனங்களை ஏற்று முன்னேறுவோம் !
வெற்றிக் கனியை எட்டும் கனியாக்குவோம் !    

 வெற்றிப் விவேகமாகச் சிந்தித்து கவிதை வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .

நூலாசிரியர் பெண் என்பதால் பெண் விடுதலைப் பற்றியும் கவிதை வடித்துள்ளார் .

பெண்விடுதலை யாசித்துப்  பெறும் பிச்சையல்ல !
வேள்வித் தீயில்  வெற்றி கண்டிடும் அமுதசுரபி !
பெண்களின் சுவாசமாய்க் கல்வி அமைந்து !
புரட்சியும் புதுமையும் இவ்வையகம் நிறைந்திடட்டும் .  


நூல் ஆசிரியர் கவிஞர் ரூபி  பள்ளி ஆசிரியர் என்பதால் மாணவர்களுக்காவும் கவிதை எழுதி உள்ளார் .

மாணவர்களே !

இன்னிசை கேளுங்கள் ! ரசிக்கத் தொடங்குங்கள் !
ஓவியம்  வரைந்திடுங்கள் ! உணரத் தொடங்குங்கள் !  
இயற்கையை நோக்குங்கள் மதிக்கத்
தொடங்குங்கள் !
வாழ்க்கையை உணருங்கள் ! வாழத்
தொடங்குங்கள் !
இக்கவிதையை மாணவர்கள் கடைப்பிடித்து நடந்தால் கொலை வெறி வராது .நன் நெறி வரும் .

புத்தகம் !

புத்தகம் படிப்பதனால்  புதிய கருத்துக்களை !
புத்தகம் படிப்பதனால் புதிய அர்த்தங்களை !
புத்தகம் படிப்பதனால் புதிய சிந்தனைகளை !
புத்தகம் படிப்பதனால் புதிய தன்னம்பிக்கை !

வாழ்வை  வசந்தமாக்கும் உயர்ந்த நூல்கள் பற்றி நல்ல    கவிதை பாராட்டுக்கள் .

ஒழுக்கம் !

ஒழுக்கம் உள்ளவனை  உலகம் உற்று நோக்கும் !
ஒழுக்கம் உள்ளவனை நாடும் வீடும் போற்றும் !
ஒழுக்கம் உள்ளவனை உறவினர் வாழ்த்துவர் !
ஒழுக்கம் உள்ளவனை நண்பர்கள் கொண்டாடுவர் !

உயிருக்கும்  மேலாக ஒழுக்கத்தை வள்ளுவர் வலியுறுத்தி உள்ளார் .வள்ளுவர் வழியில் வடித்த கவிதை மிக நன்று .

உறவு !

உறவால்  மிளிர்கிறது அன்பு !
உறவால் மறைகிறது தவறு !
உறவால் தருகிறது மகிழ்ச்சி !
உறவால் உருவாகிறது வளர்ச்சி!
உறவால் மலர்கின்றது நம்பிக்கை !

உறவின் பயனை மேன்மையை உணர்த்திடும் வைர வரிகள் மிக நன்று .கவிதைகள் மூலம் வாழ்வியல் நெறிகளை ,மேன்மைமிக்க
கருத்துக்களை  ,வாசகர் மனதில் நமக்கு பதியும் வண்ணம் கவிதையால் பதியம் செய்துள்ளார் .மிக எளிமையாகவும் இனிமையாகவும் கவிதைகள் உள்ளது .கவிதைகளின் முடிவில் பொன்மொழிகள் ,அறிஞர்கள் மிக நல்ல கருத்துக்கள்  பிரசுரம் செய்தது மிகச் சிறப்பு .தொடர்ந்து எழுத்துகள் வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் .


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!


கவிஞர் இரா .இரவியின் இணையங்களின் புள்ளிவிபரம்

கவிஞர் இரா .இரவியின் இணையங்களின் புள்ளிவிபரம்

http://www.alexa.com/siteinfo/eraeravi.com#
http://www.alexa.com/siteinfo/kavimalar.com#

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!
 

அகவிழி - பார்வையற்றோர் விடுதி ஆண்டு விழா புகைப்படங்கள்

அகவிழி - பார்வையற்றோர் விடுதி ஆண்டு விழா புகைப்படங்கள்

திங்கள், 20 பிப்ரவரி, 2012

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

பிறந்ததும் கற்றது
நீச்சல்
மீன் !

இன்பம் துன்பம்
உணர்த்தியது
சாலை !

குடை  விரித்து
மழை நின்றதும்
காளான் !


குறைந்தது 

இறப்பு விகிதம்
ஆன்மா கதை உப்புமா
!

பயன்பட்டது மனிதனுக்கு
பறவையின் சிறகு
காது குடைய !

நேர்மறையாளனுக்கு 
இரண்டும் ஒன்று
வெற்றி தோல்வி !

வருந்தியது
வெள்ளியன்று வீதியில்
உடைந்த தேங்காய் !

மூடநம்பிக்கை
சக்கரத்தில்
வீணடிக்கும் எலுமிச்சை !

யாருக்கும்
சுடவில்லை
தீச்சட்டி !

கண்டுபிடிக்காமல்
இருந்திருக்கலாமோ ?
மின்சாரம் !

உலகின் முதன்மை
உச்சரிக்க இனிமை
தமிழ் !

அர்த்தமற்றது
உருவ பலம்
யானையின் காதில் எறும்பு
!

அகவிழி - பார்வையற்றோர் விடுதி ஆண்டு விழா புகைப்படங்கள்

அகவிழி - பார்வையற்றோர் விடுதி ஆண்டு விழா புகைப்படங்கள்

மரவரம் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்

மரவரம்

நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

 மின்னல் பதிப்பகம் ,
118. எல்டாம்ஸ் ரோடு,சென்னை .18 .விலை ரூபாய் 20

நூலின் அட்டைப்படமும் ,தலைப்பும் மரங்களை நினைவுப் படுத்துகின்றன .நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் பொதிகை மின்னல் என்ற மாத இதழின் ஆசிரியர் .தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .திருக்குறளில் ஆழ்ந்த புலமை மிக்கவர் .குட்டியூண்டு என்ற நூலின் மூலம் பலரின் பாராட்டைப் பெற்றவர் . இரண்டாவது ஹைக்கூ நூல் இது .மரம் பற்றியே 203  ஹைக்கூ கவிதைகள் எழுதி சாதனை படைத்துள்ளார் .பாராட்டுக்கள் .
இயந்திர மயமான உலகில் நீண்ட நெடிய கருத்துக்களை ,கவிதைகளை வாசிக்க நேரமோ ,பொறுமையோ பலருக்கு இருப்பதில்லை.ஆனால்  , சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஹைக்கூ கவிதைகளை ஆறு வயது முதல் அறுபது வயது வரை விரும்பி    வாசிக்கின்றனர்.ஹைக்கூ கவிதையை வாசிக்கின்றனர் .யோசிக்கின்றனர் .ஹைக்கூ கவிதை ஒன்றுக்குத்தான் வாசிக்கும் வாசகரையும் படைப்பாளி  ஆக்கும் ஆற்றல் உண்டு .அந்த வையில் இந்த நூல் படிக்கும் வாசகர்களும் படைப்பாளி ஆக வாய்ப்பு உள்ளது .  மிகவும் குறைவாக நூலின் விலையை 20 ரூபாய் என்று நிர்ணயம் செய்த பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள் .இயற்கை நேசர், நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் ,மரங்களை ரசித்து ரசித்து ஹைக்கூ வடித்து நூலைப் படிக்கும் வாசகர்களையும் மரத்தை ரசிக்க வைத்து விடுகிறார் .

கொளுத்தும் கோடை
தாயாய் மரம்
குஞ்சாய் நாம் 
!

மரத்தின் தாயுள்ளத்தை காட்சிப் படுத்தி நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்வெற்றிப் பெறுகின்றார் .  ஹைக்கூ கவிதையின் மூலம் அறிவியல் தகவலும் வழங்கி உள்ளார் .

கிருமிகளைக் கொன்று
உடல் நலம் காக்கின்றது
வேப்பமரக் காற்று 
!

மரம் வெட்டுவது தவறு என்பதை உணர்த்திடும் ஹைக்கூ .

வெட்டி வீழ்த்தியவனை
வெட்டி வீழ்த்தியது
வெயில் !

திரைப்படப் பாடலை நினைவுப் படுத்தும் ஹைக்கூ .

பெற்ற பிள்ளை கைவிட்டான்
கை
விடவே   இல்லை
தென்னம்பிள்ளை
!

இன்னா செய்தாரை திருக்குறள் கருத்தை வலியுறுத்தும் விதமாக உள்ள ஹைக்கூ இதோ !

கல் எறிந்தவனை
நான் வைத்து தண்டித்தது
கனி எறிந்த மரம்  
!

போதிமரம் எதனால்? புகழ் பெற்றது பாருங்கள் .

புத்தன் அமர
புகழ் பெற்றது 
போதிமரம்

ஜோதிடம் பார்ப்பது பணத்தையும் ,நேரத்தையும் விரையம் செய்யும் வேலை .ஜோதிடம் என்பதை பொய்.
பொய் சொல்லும் சோதிடர்களுக்கும் மரம் எப்படி? உதவுது பாருங்கள் .

பொய் கூறிய சோதிடனுக்கும்
சோறு போடுகிறது
மரத்தடி நிழல் !

ஹைக்கூ கவிதையின் தனிச் சிறப்பு என்பது காட்சிப் படுத்துதல் .அந்த வகையில் உள்ள ஹைக்கூ .

பட்ட மரத்திற்கு
பச்சைப் பொன்னாடை
படரும்  கொடி
!

பறவைகள் சேர்ந்து வாழ்கின்றன .ஆனால் மனிதன்  தான் சுயநலத்தின் காரணமாக  பிரிந்து வாழ்கிறான் .இன்றைய யதார்த்தை பதிவு செய்யும் ஹைக்கூ .

பலவகைப் பறவைகள்
கூட்டுக்  குடுத்தனமாய்
ஒரே அத்திமரம்
!

மரம் மட்டும் அல்ல மரம் உதிர்க்கும் இலையும் எப்படி உதவுகின்றது என்பதை விளக்கும் ஹைக்கூ .

நீரில் தத்தளிக்கும் எறும்பு
படகாக வருகிறது
மரம் உதிர்த்த இலை
!

ஈழத்தமிழருக்கு நடந்த கொடுமையை ,தமிழ் இனத்திற்கு நடந்த அநீதியை ,படுகொலையை கண்டித்து கவிதை எழுதாதவர்கள் கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம் .மனித நேயம் கவிஞனுக்கு இலக்கணம் .அந்த வகையில் மனித நேயத்தோடு  படைத்த ஹைக்கூ .

முள் வேலிக்குள்
மனித மரங்கள் 
ஈழத்தமிழர்கள்  !

சொர்க்கம் என்பது வானில் இல்லை மண்ணில் தான் உள்ளது .என்பதை உணர்த்தும் ஹைக்கூ .

சொர்க்கத்தின் முகவரி
சுற்றிலும் மரங்கள்
நடுவே குடில் !

மனிதனுக்கு நாகரீகம் கற்பித்தது மரம் .அதனை நினைவுப்  படுத்தும் ஹைக்கூ .

நிர்வாணமாய் திரிந்தவனுக்கு
முதல் உடுப்பு கொடுத்தது
இலை ஆடை!

இப்படி நூல் முழுவதும் மரமும் ,மரமும் சார்ந்தே ஹைக்கூ கவிதைகள் எழுதி ,நூல்படிக்கும் வாசசகர்கள் மனதிலும்
 மரநேசத்தை வித்துப் போல விதைத்து  வெற்றிப் பெற்றுள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் .
மரம் பற்றியே முழுமையாக வந்த முதல் ஹைக்கூ நூல் இதுதான் .முத்திரைப் பாதிக்கும் ஹைக்கூ கவிதைகள் படைத்த நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்அவர்களுக்கு பாராட்டுக்கள் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!


வனதேவதை நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா

வனதேவதை              நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விலை  ரூபாய் 20 ,மின்னல் கலைக்  கூடம், 118 .எல்டாம்ஸ் ரோடு சென்னை.18 

அட்டைப்பட வடிவைமைப்பு மிக அருமை .மகாகவி பாரதியாரின் வைர வரிகளுடன் நூல் தொடங்குகின்றது .இந்நூலை தன் கிராமத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு இயற்கை  வளம் காத்திட அரும்பணி ஆற்றி வரும் கவிஞர் சீனி .ரவி பாரதி அவர்களுக்கு காணிக்கை யாக்கி இருபது மிகச் சிறப்பு .

சுற்றுச் சுழல் விழிப்புணர்வு விதைக்கும் ஹைக்கூ  சென்ரியு கவிதைகளின் தொகுப்பு நூல் இது.   நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா ஹைக்கூ உலகில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி உழைப்பாளி .கவிஞர் கார்முகிலோன் அணிந்துரை அற்புதம் . கவிஞர் வசீகரன் வாழ்த்துரை மிக நன்று .இந்நூலில் ஹைக்கூ சென்ரியு கவிதைகள் இடையே பஞ்ச பூதங்கள் மற்றும் பறவைகள் ,மரங்கள் ,யாதுமாகி நஞ்சு ஆகிய தலைப்புகளுக்கு பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுத்து விளக்க உரையுடன் இடம் பெறச் செய்தது கூடுதல்   சிறப்பு  .

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்
இன்று
வறண்ட பாலை

மிகச் சிக்கனமான  சொற்களைக் கொண்டு மிகப் பெரிய கருத்துக்களை உணர்த்துவது ஹைக்கூ .தமிழ் இனத்தை அழித்த ஈழத்தில் நடந்த படுகொலைகளை ,அவலத்தை, கொடுமையை   நெஞ்சு இருக்கும் வரை மறக்க முடியாது .அது பற்றி ஒரு ஹைக்கூ

வேரோடு சாயும்
புத்தனின் போதிமரம்
சிக்கித் தவிக்கும் தமிழீழம்

பிள்ளையார் சதுர்த்தி என்ற பெயரில் மிகப் பெரிய பிள்ளையார் சிலைகளை கடலில் கரைத்து கடலை மாசுப் படுத்தும் அவலத்தை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் ஹைக்கூ 

காக்கும் கடவுள்
மாசானால்
கடலில் கரையா  பிள்ளையார்

இலைகர்கள் பலர் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதை கடிக்கும் விதமாக

வெண்சுருட்டு மோகத்தில்
அதிகரிக்கும் வெண்புகை
பகையாகும் உயிர்     

  சுற்றுச் சுழல் விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ எழுதுவது எளிதல்ல .கடின முயற்சியில் நூல் ஆசிரியர் கன்னிக்கோவில் ராஜா வெற்றி பெற்றுள்ளார் .

தூறல் மழை
மண்வாசனை நுகர்கையில்
கந்தகநெடி

காட்சிப் படுத்தும் ஹைக்கூ கவிதையில் நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .

குளிர்கால இரவு
போர்வை தேடும் மனிதன்
பனியில் குளிக்கும் மலர்கள்   

அம்மாவும் மரமும் ஒன்று என்று உணர்த்திடும் விதமாக அம்மாவின் மேன்மை உணர்த்தும் விதமாக !

மரத்தில் சாய்ந்தேன்
தாய்மடி சுகம்
கிராமத்தில் அம்மா

ஹைக்கூ மூலம் காட்சிப் படுத்தி வெற்றிப் பெறுகின்றார் . நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா  .

குறிபார்க்கும் வேடன்
கண்ணில் பாய்ந்தது
மழைத்தூறல்  

அணு உலை உயிருக்கு உலை என்பதை உணர்த்திடும் உன்னதப் படைப்பாளி !

நாடெங்கும் நிலநடுக்கும்
வெற்றிக் கொண்டாடத்தில்
அணு உலை


சுற்றுச் சுழல் ஆத்திச்சூடி மிக நன்று .சூழல் மொழி !

உடலுக்கு உயிர் அவசியம்
உலகிற்கு மரம் அவசியம் 
சாயப் பட்டறை கழிவு மாக்கள் குடித்தால் அழிவு
சுற்றுச் சுழல் கேடு  சுகாதாரத்தை உடனே நாடு
டயர்கள் பலவற்றை எரித்தால் - பழுதாகும் காற்றின் இதயம்
நீரை சிக்கனமாக்கு -சந்ததியை வளமாய் மாற்று
பூமியின் பசுமை -சிதைப்பது மடமை
மரங்கள் தருவது உயிர்வளி மக்கள் கொடுப்பது உயிர்வலி
வாழை தென்னை பனை -வளமாக்கும் உன்னை   
சூழல் மொழி !இப்படி சிந்திக்க வைக்கும் இந்த நூலின் மகுடமாக மின்னுகின்றது .பல்சுவை இளகிய விருந்தாக இந்நூலைப் படைத்தது உள்ளார் .படைப்பாளியின் கடமையை செம்மையாகச் செய்துள்ளார் .தரத்திற்கு பாராட்டுக்கள் .புதிய முயற்சி ! மானுட வளர்ச்சி !

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

காதலில் சொதப்புவது எப்படி .திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

காதலில் சொதப்புவது எப்படி

இயக்கம்  பாலாஜி மோகன்

இசை தமன்

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

 சின்ன  சின்ன   விசயத்திற்காக  சண்டைப் போட்டு பிரிந்து விடும் இன்றைய  காதலை, நகைச்சுவை கலந்து படம் பிடித்து வெற்றிப் பெற்றுள்ளார் . இயக்குனர் பாலாஜி மோகன் .
நீண்ட நாட்கள் கழித்து நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடித்து உள்ளார் .படத்திற்கு இணை தயாரிப்பாளாராகவும் உள்ளார் .அமலாபால் கதாநாயகியாக நன்றாக  நடித்து உள்ளார் . தொடர்ந்து இதுபோல படங்களில் நடித்தால் நடிகை ரேவதி போல சிறந்த நடிகைக்கான இடம் கிடைக்கும் . செல் பேசி ,இணைய  முகப்பு  புத்தகம் ,நண்பர்கள் இவற்றின் காரணமாக இன்றைய  காதலர்கள் சந்திக்கும் பிரச்சனையை நன்கு கையாண்டு உள்ளார் .இயக்குனர் பாலாஜி மோகன்.  

  .
காதலில் சொதப்புவது எப்படிஆண்களா ? பெண்களா ? என்ற பட்டி மன்றம் பார்ப்பதுப்  போன்ற  உணர்வு வருகின்றது .
நேசிப்பது வெறுப்பது இரண்டிலும் பெண்கள்தான் மிகவும் தீவிரமாக இருப்பார்கள் .ஆண்களை நண்பர்கள் உசுபேத்தி காதலை சொதப்பி விடுகிறார்கள் .இன்றைய இளைஞர்கள் பலர் குடிக்கு அடிமை ஆகிறார்கள் .குடியை பெண்கள் யாருமே விரும்புவதில்லை. நண்பர்களின் வற்புறுத்தலின் காரணமாக குடித்ததன் காரணமாக காதலில் சொதப்பி காதலியை இழந்த கதை நிறைய உண்டு .அதை 
இளைஞர்களுக்கு உணர்த்தும் விதமாக திரைப்படத்தில் காட்டி உள்ளார் . 

 புரிதல் இல்லாமல் சிறு சண்டைப் போட்டுப் பிரியும் காதலர்கள்  பற்றிய கதை .காதலில் சொதப்புவது எப்படி?என்று, படத்தின் பெயர் எதிர்மறை சிந்தனையாக உள்ளதே என்று நான் யோசித்தேன் .ஆனால் இந்தப் படம் பார்க்கும் காதலர்கள் ,சொதப்பாமல் காதலிப்பது எப்படி ?என்பதை உணர்த்துகின்றது .தமனின் இசை நன்றாக உள்ளது

அமலாபால் பெயர் பார்வதி ,பார்வதியின் அம்மா அப்பா இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் .விவாகரத்து வாங்க முயல்கின்றனர். அப்பா அம்மா பிரிவு பார்வதியின் மன நிலையை வருத்தப் படுத்துகின்றது .அந்த வருத்தம் அவள் காதலில் பிரதிப்பலிக்கின்றது . காதலனுடன் சண்டையிட நேருகின்றது .பார்வதியின் தாத்தா பாட்டிக்கு  எண்பது திருமணம் வருகின்றது .பிரிந்து வாழும் தந்தையை பார்வதி  திருமணத்திற்கு அழைக்கின்றாள் .  தந்தையாக நடிகர் சுரேஷ் நன்றாக நடித்து உள்ளார் .
மாமனாரின் எண்பது திருமணத்திற்கு வந்து பிரிந்த மனைவியை சந்திக்க .பாசம் வந்து அன்பு வந்து விவாகரத்து எண்ணத்தை கைவிட்டு இணைகின்றனர் .கருத்து வேறுபாடு வந்தால் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் .பேசாமல் இருந்து பிரிவது தவறு .குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற கருத்தை நன்கு உணர்த்தி உள்ளார் .

காதலில் மட்டுமல்ல குடும்பத்தில் சொதப்பாமல் இருபது எப்படி? என்பதையும் உணர்த்துகின்றது .படத்தில் ஆபாசம் நடனம்,  வன்முறை ,வெட்டுக் குத்து ,குத்துப் பாட்டு எதுவும் இல்லாமல் தரமாக மென்மையான காதலை மிக மேன்மையாக வடித்துள்ளார் .
தாத்தா பாட்டி தலைமுறை இறுதி மூச்சு  வரை இணைந்து    வாழ்கின்றது .அப்பா அம்மா தலைமுறை பிரிய முயலுகின்றது .பேரன் பேதி தலைமுறை உடனே பிரிந்து  விடுகின்றது .என்ற கருத்தை வலியுறுத்துகின்றார் .காதல்  கிடைப்பது அரிது .கிடைத்த காதலை சொதப்பி இழந்து விடக் கூடாது .சிறு சிறு விசயங்களைப் பெரிதுப் படுத்தி காதலை இழந்து விடாதீர்கள் .இப்படி பல்வேறு தகவல்களை படத்தில் வழங்கி உள்ள இயக்குனர் பாலாஜி மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.    வழக்கமான தமிழ்த் திரைப்படப் பாணியில் இருந்து மாறுபட்டு வித்தியாசமாக சிந்தித்து ,படத்தை நன்றாக வழங்கி உள்ளார் .--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

சனி, 18 பிப்ரவரி, 2012

பொதிகை மின்னல் மாத இதழ் சார்பாக சென்னையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடைப்பெற்ற நூல்கள் அறிமுக விழா புகைப்படங்கள்

பொதிகை மின்னல் மாத இதழ் சார்பாக சென்னையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடைப்பெற்ற நூல்கள்  அறிமுக விழா புகைப்படங்கள்

பொதிகை மின்னல் மாத இதழ் சார்பாக சென்னையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடைப்பெற்ற நூல்கள் அறிமுக விழா புகைப்படங்கள்

பொதிகை மின்னல் மாத இதழ் சார்பாக சென்னையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடைப்பெற்ற நூல்கள்  அறிமுக விழா புகைப்படங்கள்

முப்பொழுதும் உன் கற்பனைகள் .திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

முப்பொழுதும் உன் கற்பனைகள்

இயக்கம் எல்ரெட் குமார்

இசைG.V. பிரகாஷ் குமார்
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

அதர்வா முரளி கதாநாயகன் ,அமலாபால்  கதாநாயகி .வழக்கமான மசாலாப் பாடல் ,அடி ,உதை ,சண்டை உள்ளது .கவிஞர் தாமரையின் பாடல்கள் நன்று. பின்னணி இசை நன்று .விதைவையான    தாய் தன் குழந்தையை மிகவும் சிரமப்பட்டு வளர்க்கிறாள். தன் மகனுக்கு நடக்க முடியவில்லை என்றதும் தூக்கியே சுமக்கிறாள் .அதிகப் பணம் சம்பாதித்து கேரளா வைத்தியம் பார்த்து மகனை நடக்க வைத்து படிக்க வைத்து அழகு பார்க்கிறாள் .மகன் வேலை தொடர்பாக சென்னை சென்றதும் பிரிவு தாங்க முடியாமல் நோயுற்று இறக்கிறாள்.   

லட்சியத்தாய் மனதில் நிற்கிறாள் .
தாய் இறந்த சோகத்தில் உடைந்து இருக்கும்தோழனுக்கு , தோழி வந்து மகனுக்கு அறிவுரை கூறி அழைத்து செல்கிறாள் .இருவரும் சேர்ந்து தயாரித்த கதிர்வீச்சு தடுப்பு திட்டத்திற்கு விருது கிடைக்கின்றது,பெரிய தொழில் அதிபர் தன் மகளை வேறு கணினி நிறுவனத்தில் வேலை பார்க்க வைத்து ,விருது கிடைத்ததும் கட்டாயப் படுத்தி அமெரிக்கா அழைத்து சென்று விடுகிறார் .ஏற்கனேவே அவளுடன் சண்டையிட்ட   பெண்  பித்தர்களான இருவர்தான் கடத்தி  விட்டார்கள் என்று கருதி வில்லன்களை கொலை செய்கின்றார் .  
தாயை இழந்தவர் ,காதலியையும் இழந்ததால் மன நோயாளியாகி விடுகிறார் .ஆனால் சென்னையில் கணினி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.சனி ஞாயிறு மட்டும் பெங்களூர் சென்று காதலியுடன் வாழ்வது போல கற்பனையில் வாழ்ந்து வருகிறார் .அமெரிக்கா சென்ற தோழி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு நண்பர்களை அழைக்க  வருகிறார்.இவனுக்கு தோழியை அடையாளம் தெரியவில்லை .இவனுக்கு என்ன நேர்ந்தது விசாரிக்கிறாள்.மன நல மருத்துவர் சில காலம் அவனுடன் தோழியாக ,காதலியாக நடிக்க சொல்கிறார் .இவளும் நடித்து பின் உண்மையில் காதலில் விழுகிறாள் .

அதர்வா முரளி,அமலாபால்.நாசர் ,ஜெயபிரகாஷ் அனைவரும் நன்றாக நடித்து உள்ளனர் .வித்தியாசமான கதை என்றாலும் ,தமிழ் திரைப்படத்தில் மன நோயாளி கதையை விடாமல் பிடித்துக் கொண்டு எடுத்து வருகின்றனர் .

மன நோயாளி சென்னையில் இருந்து பெங்க
ளூருக்கு வார வாரம் அவரே கார் ஒட்டி செல்வது நம்பும்படியாக இல்லை .கணினி பொறியாளர்கள் உடன் பணி புரியும் பெண்களை அழைத்து குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து அவர்களை சிதைக்கும் அவலத்தை படத்தில் காட்டி உள்ளனர் .படித்த கணினி பொறியாளர்கள் பண்பாடு இன்றி நடந்து கொள்கின்றனர்.இவர்களைக் கொன்ற  , அதர்வா முரளியை காவல் உயர் அதிகாரி ,அவரே மன்னித்து விட்டு விடுவது நம்பும்படி இல்லை . இதுபோன்ற பல குறைகள் இருந்தாலும் .சிரிப்பு நடிகர் சந்தானம் சில காட்சியில் மட்டும் வந்து சிரிக்க வைக்கின்றார். சந்தானம் வசனத்தில் காதலி அழகாக இருந்தால் ஆண்கள் உண்மையாக காதலிப்பார்கள் அழகு இல்லை என்றால் உண்மையாக காதலிக்க மாட்டார்கள் என்கிறார் .தவறு .புற அழகைப் பார்த்து வருவதல்ல உண்மை காதல் .அக அழகைப் பார்த்து வருவதுதான் உண்மை காதல் .

நடக்க முடியாத மகனை நடக்க வைத்து, படிக்க வைத்து உலகம் வியக்கும் வண்ணம் வருவான் என்ற உறுதியோடு இருக்கும் உன்னத  தாய் .கடைசியாக  மகன் வந்து பால் விட்டதும் உயிர் விடும் காட்சி நெகிழ்ச்சி .இயக்குனருக்குப் பாராட்டுக்கள் .தாய்  மகன் பாசத்தை உணர்த்தி கண்ணில் கண்ணீர் வைத்துவிட்டார்.படம் முடிந்து வெளியே வந்த பிறகும் தாய் நம் கண் முன் வருகின்றார் .   அமலாபால் தெய்வத்திருமகள் திரைபடத்தில் நடித்துப் போல இந்தப் படத்திலும் மிக நன்றாக நடித்து உள்ளார் .

கதாநாயகன் அதர்வா முரளி ,மறைந்த நடிகர் முரளியின் மகன் .அப்பாவிற்கு தப்பாமல் பிறந்த பிள்ளையாக நன்றாக நடித்து உள்ளார் .யோகா கற்றவர் என்பதால் சண்டைக் காட்சியில் சிறப்பாக சண்டை செய்கின்றார் .வெள்ளைக்காரகள் இருவருடன் மோதும் காட்சி நன்று .பின்னணி இசை மிக நன்று .

--

இனிய நண்பர் அகில் அவர்களின் நேர்முகம் ஒளிப்பரப்பாகின்றது. பார்த்து மகிழுங்கள்

21.2.2012  செவ்வாய்  அன்று காலை 8 மணி முதல் 9 வரை கலைஞர் தொலைக்காட்சியில், சந்தித்த வேளை நிகழ்ச்சியில்  www.tamilauthors.com  இணையத்தில்
இந்தியா , இலங்கை, சிங்கப்பூர், மலேசியா நாட்டை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட எழுத்தாளர்கள் ,கவிஞர்களை  ஆவணப் படுத்திய   www.tamilauthors.com  ஆசிரியர் ,கவிஞர், எழுத்தாளர், இனிய நண்பர் அகில் அவர்களின் நேர்முகம் ஒளிப்பரப்பாகின்றது. பார்த்து மகிழுங்கள் ,நேர்முகம் காண்பவர் திரு ரமேஷ் பிரபா .
"Ahil" <editor@tamilauthors.com>,
--

புதன், 15 பிப்ரவரி, 2012

நூல்:கூடுகள் சிதைந்தபோது நூலாசிரியர்:அகில் மதிப்புரை:ச.சந்திரா

நூல்:கூடுகள் சிதைந்தபோது
நூலாசிரியர்:அகில்
மதிப்புரை:.சந்திரா
கோபுர நுழைவாயில்:
          இறைவனுக்கும் தொண்டருக்குமான ஆண்டான் -அடிமை உணர்வை மாணிக்கவாசகர் சொல்லச்சொல்ல எழுத்தாணி கொண்டு நீலகண்டேஸ்வரர் ஏட்டில் எழுதியது அக்காலம்!தாய்நாட்டிற்கும் புலம்பெயர் நாட்டிற்குமான சிதை(க்கப்)பட்ட உணர்வை அகிலாண்டேஸ்வரர் எழுதியது இக்காலம்!சிதறிய  பாதரசத்தைப் புட்டியில் அடைப்பது எத்துணை கடினமோ,அதைப்போன்றதுதான் ஆங்காங்கே கிட்டிய அனுபவங்களைச் சிறுகதையாக உருமாற்றுதல்.சுய அனுபவங்கள் பசும்பொன்னாகத் துலங்க,அத்துடன் தான் சார்ந்த பிறரது அனுபவங்களையும் இணைத்து அணிகின்ற ஆபரணமாக பொலிவுறச்செய்திருக்கின்றார் அகில்.
பரவுதலும் படர்தலும்:
      அதி கவனத்துடன் கதைக்கான கரு தேர்ந்தெடுப்பு,கச்சிதமாக கதையைச் சொல்லிச்செல்லும் திறம்,இயல்பான கதாப்பாதிர அறிமுகம்,உரையாடல்களுக்கிடையே உணர்வுகளின் இழையோட்டம்-என முகில் வானில் பரவுவது போல் நூல் முழுவதும் அகில் பரவி நிற்கின்றார்.அத்துடன் 'கூடுகள் சிதைந்தபோது'-எனும் அவரது இத்தொகுப்பை படிக்கும் வாசகர் மனதிலும் நிற்கிறார் என்பதும் மறுக்க முடியாத உண்மை!சிறுகதையின் தலைப்புகள் ஒவ்வொன்றும் ஆலவிதையாக ஊடுருவ,கதைக்களம் ஆலமரவிழுதுகளாய் கதை வாசிப்போர் மனதில் படர்ந்து பரவிப் பதிகின்றது.
பாதியும் மீதியும்:
                          அஃறிணை உயிர்நிலை பாடம் புகட்டும் கதை பாதி;உயர்திணை உறவுநிலை கற்றுத்தரும் கதை மீதி!கண்ணீரும் செந்நீருமாய்,இனப்பிரச்னையும் பணப்பிரச்சினையுமாய்,அடக்குமுறையும் ஒடுக்குமுறையுமாய்,மோதல்களும் சாதல்களுமாய்,சிதைக்கப்படுவதும் சிதைபடுவதுமாய்,இடியோசையும் தடியோசையுமாய்,ஊடலும் தேடலுமாய்,திருந்துவதும் திருத்துவதுமாய்,இரைச்சலும் புகைச்சலுமாய் இச்சிறுகதைத்தொகுப்பில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் படும்பாடு-படுத்தும்பாடு பல்வேறு உத்திகளோடு ஆசிரியரால் சொல்லிச்செல்கின்ற      வேளையில் இவையெல்லாம் அவரது மெய் அனுபவங்கள்தான் என்று புரிபடுகின்றது!  
முன்னும் பின்னும்:
                 முதுமையின் ஏக்கத்தை,இளமையின் வேகத்தை,நட்பின் பரிபூரணத்தை,தியாகத்தின் உச்சத்தை,இழப்பின் கொடூரத்தை,பிரிவின் சுமையை,தாய்மையின் உன்னதத்தை நூலாசிரியர் இத்தொகுப்பில் உணர்த்தும் பாங்கு போற்றத்தக்கது.பிராந்தியமொழியில் கதாப்பாத்திர உரையாடல் இருப்பினும் உணர்வுப்பூர்வமாக அகில் அவர்களின் நடைச் சிறப்பு உள்ளதால் ஒரே வாசிப்பில் கதை படிப்போர் மனதிற்கு புரிபடுகின்றது.பாத்திரங்கள் மிதிவண்டி,மகிழுந்து,பேருந்து,ரக்குவாகனம்-என எதில் பயணித்தாலும் வாசகர்களும் அவ்வாகனங்களில் பயணிக்கின்றோம்!ஆசிரியர் முன்னோக்கிச் சென்றால் நாம் முன்னும்,அவர் பின்னோக்கிச் சென்றால் பின்னும்-என நம்மை அறியாமல் செல்கின்றோம்!கதை கூறும் பாங்கில் உள்ள யதார்த்தமே இவ்வாறு நம்மைச் செயல்படவைக்கின்றது.
உடற்காயமா?மனக்காயமா?
              உறவுகளின் மேம்பாட்டில் தங்கப்பதக்கம் தகரம் ஆகின்றது!பன்றிக்குட்டிகள் பள்ளி ஆசிரியர் போல் பாடம் நடத்துகின்றன!பிறவிப்பகை கொள்ளும் பூனையும் நாயும்கூட நட்புடன் வாழ்கின்றன!காந்த அலைகள்  கண்ணீரைத் தடுத்து நிறுத்துகின்றன! உறவுக்கும் உரிமைக்கும் இடையே கடிதங்கள் பாலம் கட்டுகின்றன!கல்வீடு  பேசுகின்றது ஆயிரம் கதைகள்!ஐந்தறிவு உயிரிழப்புக்காக கண்ணீரைப்பொழியும் பரணி பாத்திரம்,உடற்காயத்துடன் மனக்காயத்திற்கும் மருந்து கட்டும் பார்த்திபன் கதாப்பாத்திரம்,வயிற்றுக்குழந்தையோடு துணைவியையும் நாய்க்கும் நரிக்குமாக பறிகொடுக்க நேரும் கணவன் பாத்திரம்,மண்வாசனைக்காக கல்வீட்டிலேயேக் காத்துக்கிடக்கும் எச்சூழலிலும் கலங்காத தாய் கதாப்பாத்திரம்-என தொகுப்பில் இடம்பெறும் பாத்திரங்கள் அனைத்துமே வாசிப்போர் மனதில் ஐக்கியமாகி விடுகின்றனர்.
மனதார...
      ஆறறிவு உயிர்களைச் சீர்திருத்த ஐந்தறிவு உயிரான  பறவை-விலங்கினங்களைக் கொண்டு கதைகள் படைத்திருக்கும் அகில் அவர்கள் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பட்டியலில் முன்வரிசையில் இடம்பெற என்போன்ற இணையதள வாசகியரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

திங்கள், 13 பிப்ரவரி, 2012

கூடுகள் சிதைந்தபோது நூல் ஆசிரியர் திரு அகில்.விமர்சனம் கவிஞர் இரா .இரவி

கூடுகள் சிதைந்தபோது

நூல் ஆசிரியர் திரு அகில்
வெளியீடு           வம்சி            திருவண்ணாமலை  விலை  ரூபாய் 120

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நூலின் அட்டைப்படமும் அச்சும் மிக நேர்த்தியாக உள்ளது .வம்சி பதிப்பகத்திற்கு முதலில் பாராட்டுக்கள் .நூல் ஆசிரியர்
திரு அகில் www.tamilauthors.com  என்ற இணையத்தின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட எழுத்தாளர்கள்,கவிஞர்கள் பற்றிய குறிப்புகளை ஆவணப்படுத்தி உலகம் முழுவதும் இணைய வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர்     
  இந்நூலை முதுபெரும் ஈழத்து எழுத்தாளர் ,பேராசிரியர் , கட்டுரையாளர் ,விமர்சகர் பன்முக ஆற்றலாளர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார் .அவர் இறக்கும் தருவாயில் இறுதியாகத் தந்த முன்னுரை இடம்பெற்ற நூல் என்பதால் கூடுதல் சிறப்புப் பெறுகின்றது .  அவருடைய முன்னுரையில் உள்ள வைர  வரிகள்

அகிலின் கூடுகள் சிதைந்தபோது எனும் சிறுகதையில் இந்த மொன்ராஜ் (montage) உத்தியின் இலக்கிய வடிவைக் காண்கிறேன்.

  கலாநிதி க .குணராசா அவர்களின் அணிந்துரை அற்புதம் .கலாநிதிநா .சுப்பிரமணியன் அணிந்துரை அழகுரை .

  சாதாரண நகைச்சுவை துணுக்கை விரிவாக்கி சிறுகதை என்றும் ,ஆபாசத்தை விலாவாரியாக விளக்கி சிறுகதை என்றும் எழுதி வெளி வரும் சில சிறுகதைகளை படித்த விபத்தின் காரணமாக ,எனக்கு சிறுகதை மீதே ஈடுபாடு இல்லாமல் இருந்தது .இந்த நூலை படித்து முடித்தவுடன் இது போன்ற சிறுகதைகளை நாமும் எழுத வேண்டும் .என்ற உந்துதலைத் தந்து வெற்றிப் பெற்றது நூல் ஆசிரியரின் சிறுகதை உத்தி பாராட்டுக்குரியது .சிறுகதை எப்படி ? எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் குறும் விதமாக கதைகள் உள்ளது .

14 கதைகளும் புலம் பெயர்ந்த வலியை, வேதனையை   ,உணர்வை வாழ்வியல் நெறியை ,மனிதாபிமானத்தை ,விலங்காபிமானத்தை உணர்த்துகின்றது .இந்நூலில் உள்ள பல கதைகள் உலக அளவிலான போட்டியில் பரிசுப் பெற்ற சிறுகதைகள் .முத்திரைப் பதிக்கும் முத்திரைக் கதைகள். 

ஈழத்தமிழர்கள் வலி மிகுந்த புலம் பெயர்ந்த வாழ்விலும் ,தமிழுக்காக தமிழ் இலக்கியத்திற்காக ஆற்றிவரும் பணிகள் அளப்பரியது .உலக அளவில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக நம் தமிழுக்குத்தான் அதிக இணையம் உள்ளது . தமிழ் இணையங்களில் பெரும்பாலான இணையம் ஈழத்தமிழர்களால்தான் நிர்வகிக்கப் படுகின்றது .   நூல் ஆசிரியர் திரு அகில் இனிய ஆசிரியராக இருந்துகொண்டே படைப்பாளியாகவும் வெற்றிப் பெற்று இருப்பது வியப்பைத் தருகின்றது .

வருமானத்தில் ஒரு பகுதியும் ,பொன்னான நேரத்தையும் தமிழ் இலக்கியத்திற்காக செலவு செய்து தமிழை
ஈழத்தமிழர்கள் வளர்த்து வருகின்றனர் . புலம் பெயர்ந்தோரின் வலியை ,வேதனையை ,உள்ளத்து உணர்வை ,தாய் மகன் பாசப் போராட்டத்தை கதைகளில் படம் பிடித்துக்காட்டி வெற்றி பெறுகின்றார் .  நூல் ஆசிரியர் திரு அகில் .திரு அகில்அவர்களின் வாழ்க்கைத் துணையாக மட்டுமன்றி இலக்கியத் துணையாகவும் விளங்கி, உதவி வரும் அவரது மனைவிக்கும் பாராட்டுக்கள் .அவரது ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்த நூல் வந்து இருக்க வாய்ப்பு இல்லை .இந்நூலில்  உள்ள  கதைகளும் முழுவதும் கற்பனையே என்று சொல்லி விட முடியாது . திரு அகில் அவர்களின் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகள் அவரது உறவினர்கள் நண்பர்கள் வாழ்வில் நடந்து நிகழ்வுகளை அவதானித்து கதை வடித்துள்ளார்
 வலி என்ற முதல் கதைய்லேயே முத்திரைப் பதிக்கின்றார். நூல் ஆசிரியர் திரு அகில்.புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் இன்னலை படம் பிடித்துக் காட்டுகின்றார் .பன்றிகளோடு பன்றியாகப் பயணித்த தமிழரின் அனுபவத்தை சுட்டி ,
இப்படி நடக்கும் என்று நினைத்து இருந்தால் செத்தாலும் பரவாயில்லை என்று சிலோனில் இருந்து இருக்கலாம் .என்று ஒரு கணம் அவன் நினைத்துப் பார்க்கக்
கூடத் தவறவில்லை .என்று எழுதுகின்றார் .

கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கு ஒரு கொடுமை ஆடிக்கொண்டு வந்ததாம். என்ற பொன் மொழியை நினைவு படுத்துவது
ப்  போல .இலங்கையில் இனவெறி ,வன்முறை தலை விரித்து ஆடுகின்றதே என்று உயிருக்குப் பயந்து புலம் பெயர்ந்தால், அங்கும் துன்பம் வருவதுக் கண்டு ,புலம்பும் தமிழரின் உள்ளத்து உணர்வை மிக நுட்பமாக கதையில் பதிவு செய்துள்ளார் .  அசைவ விரும்பியான மயூரன் சைவமாக மாறியதன் மூலம் இந்தக் கதைப் படிக்கும் வாசகர்கள் அசைவ விரும்பியாக இருந்தால் சைவத்திற்கு மாறி விடுவார்கள் .இன்று மருத்துவர்களும் உடல் நலத்திற்கு சைவ உணவையே பரிந்துரை செய்கின்றனர் .கதை நெகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு கதையும் படிக்கும் வாசகனுக்கு ஒரு செய்தி சொல்கின்றது .அதுதான் இந்த நூலின் தனிச் சிறப்பு .
வாடியப் பயிரைக் கண்டப் போதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலாரைப் போல விலங்குகளின் மீது பாசத்தைப் பொழிந்து விலங்கு அபிமானத்தை     வரவைத்து வெற்றிப் பெறுகின்றார் .நூல் ஆசிரியர் திரு அகில் .தாய் மகன் பாசப் போராட்டத்தை ,முதியோர் இல்லத்தில் வாடும் முதியோரின் வருத்தத்தை காட்சிப் படுத்தி உள்ளார் .

இப்படி அனைத்து கதைகள் பற்றியும் எழுதிக் கொண்டே போகலாம் .முழுவதும் எழுதி விட்டால் நூல்  படிக்க சுவை குன்றும் .என்பதால் இத்துடன் விடுகின்றேன் ,மற்றவை வெள்ளித் திரையில் காண்க ! என்பதைப்  போல  மீதியை நூலைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். ஈழத்தமிழர் உலகில் இல்லாத நாடு இல்லை ஈழத்தில் நடந்த இனவெறியின் காரணமாக உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து தமிழ் வளர்த்து வருகின்றனர் .கூடுகள் சிதைந்தபோது என்ற நூல் படித்து முடித்தவுடன் என் நினைவிற்கு ஈழத்தமிழர்கள் தேன்கூடு போல வாழ்ந்து வந்தனர் .ஆனால் அந்தக் கூடு சிதைந்து விட்டது .தேன்கூட்டில் கல் எரிந்து சிதைப்பதுப் போல சிதைத்து  விட்டனர் .ஈழத் தமிழர்களுக்காக, ஈழத்தில் தனி நாடு அமைவதே ஒன்றே தீர்வாகும் .அப்போதுதான் புலம் பெயர்ந்த தமிழர்கள் பிறந்த, மண்ணான ஈழம் வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும் .படைப்பாளிகள் அனைவரும் இதற்காக உரக்க குரல் கொடுங்கள். என்ற சிந்தனையை என்னுள் விதைத்தது இந்த நூல் .இந்நூல படிக்கும்  ஒவ்வொரு  வாசகர் மனதிலும் தனி ஈழம்  வேண்டும் என்ற சிந்தனையை விதைக்கின்றது .நூல் ஆசிரியருக்குப் பாராட்டுக்கள் .இந்த நூலிற்காக பல பரிசுகளும் விருதுகளும் உறுதியாகக் கிடைக்கும் .     --
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

நூலின் பெயர்:அவ்வுலகம்

நூலின் பெயர்:அவ்வுலகம்


நாவல் ஆசிரியர்:டாக்டர் வெ.இறையன்பு I.A.S.

மதிப்புரை:முனைவர் ச.சந்திரா

கோபுர நுழைவாயில்:

இலக்கியநாயகன் பாலைநிலம் கடந்து வாகைசூடியது சங்ககாலம்!புதினநாயகன் மரணவாயிலின் நிலையைக் கடந்துசெல்ல உதித்தது அவ்வுலகம்!சமூகத்தைப் பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலக்கவைக்கும் சீரிய நோக்கத்தில்,விரிந்ததோர் பார்வையுடன் படைப்புக்களை வழங்குவதில் இறையன்புக்கு நிகர் அவர்மட்டுமே!பழமையிலிருந்து வேறுபட்டும்,மாறுபட்டும் இவ்வுலக இணைப்பிற்கும்,மறுவுலக பிரவேசித்தலுக்கும் இடையேயான பயணத்தை எடுத்துரைக்கும் இந்நாவல் ஆசிரியரின் முத்தான மூன்றாவது நாவல்!

உருவமா?பிம்பமா?

மொழிகளற்ற,காலபேதம் உணர இயலாத,பெயர் எனும் அடையாளம் தொலைக்கப்பட்டதும் மறுக்கப்பட்டதுமான ஓர் உலகில் உருவமற்று உலவும் பிம்பங்களின் கதையே அவ்வுலகம்! வெளியுலகில் ,இல்லறத்தில் -என தனக்குள் சுயமுரண்பாடு கொண்ட தலைமைக் கதாப்பாத்திரமும்,துணைக்கதாப்பாத்திரங்களும் நதியும்,கிளைநதிகளுமாய் பிரவாகம் எடுத்து கடலோடு கலப்பதும், கலக்கும்முன் அவர்களது ரிஷிமூலம் கண்டறிவதுமே இந்நாவலின் உள்ளடக்கம்.சதைப்பிண்டம் என்பது முதற்பிறப்பாய் இருக்க, மனிதத்தை உணரும் மறு இருப்பாய் அவ்வுலகவாசிகள் நடமாட,மரணத்திற்குப்பிறகும் மனிதவாழ்வு முற்றுப்பெறுவதில்லை என்பதனை உலகிற்கு சொல்லவந்த நூலே இந்நாவல் எனலாம்.

சொர்க்கமா?நரகமா?

அவ்வுலகம் ஓர் அபூர்வமான உலகம்!அங்கு ஒருமுறை சந்தித்தவரை இன்னொருமுறை சந்தித்தல் இயலாது!அங்கிருப்போர் உண்ணலாம்!உறங்க முடியாது!பார்க்கலாம்;பேசலாம்;வாய்விட்டு அழமுடியாது!பூவுலகில் வாழ்ந்தபொழுது இருளில் பொதிந்திருந்த அவர்களின் பொய்மைகளெல்லாம் இங்கு வெளிச்சமிட்டுக் காட்டப்படும்!வாழ்ந்தவர் மாய்வதும்,மாய்ந்தவர் எழுவதுமாய், இருத்தலில் இல்லாதிருத்தலும், இல்லாமையில் இருத்தலுமாய்,அந்நியப்படுதலும் அன்னியோன்யப்படுதலுமாய்,கட்டமைப்பும் கட்டவிழ்ப்புமாய் ,பிரிதலும் பிரித்தலுமாய் மொத்தத்தில் சுகமும் சோகமுமாய் நாவலின் கதை நயமாய் நகர்கின்றது.

இரத்த ஓட்டம்:

'வாழ்வதற்கே வணங்காதபொழுது சாவதற்கு கடவுளை வணங்கவேண்டுமா?'-என்று வினவும் நாத்திகவாதியான காளிதாஸுடன் துவங்கும் கதை,'கடவுள் மாத்திரம்தான் நான் கேட்டதைத் தரமுடியும்'-என்று பதிலளிக்கும் ஆத்திகவாதியின் வாழ்க்கைக்குறிப்புடன் முடிய,இடையிடையே மகாபாரதக் கிளைக்கதைகளாய் பல்வேறு பாத்திரங்கள் நடமாட, இவ்வனைவரும் எவ்விதமாய் மரணநிலையை எதிர்கொள்கின்றனர் என்பதை ஆசிரியர் சொல்லிச்செல்லும் பாங்கு அற்புதம்!விரும்புகின்ற எல்லாவற்றையும் செய்கின்ற இடமாக மண்ணுலகம் இருக்க,யாருக்கு என்ன விருப்பமோ அவற்றைச் செய்யவிடாது தடுக்கும் ஒரு விசித்திர உலகமாக 'அவ்வுலகம்' இருக்கின்றது.உணர்வுப்பகிர்தல் மறுக்கப்பட,வெறும் எண்ணப்பகிர்தலுடன் வரையறுக்கப்பட்ட பகுதியில் உலவுகின்ற வாழ்வே அவ்வுலக வாழ்வு!

மேடுகளும் பள்ளங்களும்:

அவ்வுலகத்தில் வெளிச்சத்திற்குள் இருளும் ,இருளுக்குள் வெளிச்சமும் புலப்படுகின்றது.அசைவது அசையாதிருக்கின்றது.அசையாதது அசைகின்றது.இவ்வுலகில் யானையாய் இருந்தவர் அவ்வுலகில் பூனையாய் பதுங்குகிறார்.கேட்க முடியாதோர்க்கும் செவி திறக்கின்றது.பார்க்கமுடிந்தவர்க்கோ பார்வை பறிபோகின்றது.விட்டுப்போனது தொடர்கின்றது.தொடர்ந்து வந்ததோ விட்டுப்போகின்றது.புத்தகங்கள் உயிர்பெற்று உலாவுகின்றன.அத்தோடு உயிலிலும் இடம்பெறுகின்றன.வார்த்தைகளை உபதேசிக்க வாய் திறந்தாலோ குருதி வழிகின்றது!கண்ணீரோ விழிகளிலிருந்து வழிய மறுக்கின்றது.

கல்வெட்டு வாசகங்கள்:

தலைமைக் கதாப்பாத்திரமான திரிவிக்ரமன் தனக்குத் தானே வினவிக்கொள்வதும் விடையளித்துக் கொள்வதுமான பகுதி(ப.137-141) தர்க்கநெறி சார்ந்த,அனைவரும் உய்த்துணரவேண்டிய உன்னத பகுதி.

* முடியாதவனின் கடைசி ஆய்தம் பொறாமை(ப.140)

* நல்லபடியாக மரணித்தவனே நல்லபடியாக வாழ்ந்தவன்(ப.124)

*மரணம் என்பது ஒரே நிகழ்வு அல்ல!பல சின்ன நிகழ்வுகளின் ஒட்டுமொத்த தொகுப்பு.

*நாத்தை மிதிச்சால் அது நல்ல பயிராய் வளருமா?(ப.110)

*பகிர்ந்து கொள்கின்ற போதுதான் நொய்யரிசிகூட நெய்யரிசி ஆகும்.(ப.50)

மனதார...

வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் எது வேண்டுமானாலும் ஒன்றுபோல் நிகழலாம்;மரணம் என்பது மட்டும் ஒருவரிலிருந்து மற்றவர்க்கு வேறுபடும்;அம்மரணத்தை எதிர்கொள்வதும் ஒருவரிலிருந்து மற்றவர்க்கு மாறுபடும் என்பதனை எடுத்துரைக்க வந்த நூலே டாக்டர் இறையன்பு அவர்களின் 'அவ்வுலகம்'.இந்த மண்ணுலகில் நிறைவேற்றவேண்டும் என்று எண்ணியதை தயக்கமின்றி சாதித்துவிடுங்கள்!இதன்பின் 'அவ்வுலகம்' மட்டுமல்ல! எவ்வுலகம் சென்றாலும் அதற்கான வேகத்தடைகள் எழும்பிக்கொண்டே இருக்கும் என்று வாசகர்க்கு சொல்ல வந்ததே இந்நாவல்.ஏக்கமும் தாக்கமுமாய்,துள்ளலும் துவளலுமாய் தன் எழுத்துக்களை கருத்தாக்கம் செய்யாமல்,தத்துவமும் தார்மீகமுமாய்- இவ்வுலகம் மட்டுமல்லாது மறு உலகத்திற்கும் வழிகாட்டியிருக்கும் நூலாசிரியர் டாக்டர் வெ.இறையன்பு அவர்களின் இலக்கியப்பணி சிறக்க என்போன்ற ஆர்வலர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!--

நன்றி

அன்புடன்

கவிஞர் இரா .இரவிwww.eraeravi.com

www.kavimalar.com

www.eraeravi.wordpress.com

www.eraeravi.blogspot.com

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://en.netlog.com/rraviravi/blog

இறந்த பின்னும்

இயற்கையை ரசிக்ககண் தானம் செய்வோம் !!!!!

சனி, 11 பிப்ரவரி, 2012

மாணவன் ! கவிஞர் இரா .இரவி


மாணவன் !              கவிஞர் இரா .இரவி

ஆசிரியருக்கு அஞ்சிய காலம் அன்று
ஆசரியர்
கள் அஞ்சும் காலம் இன்று

ஆசிரியரை வணங்கிய காலம் அன்று
ஆசிரியரைக் கொலை செய்யும் காலம் இன்று
மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள்
தெய்வத்திற்கும் முன்பாக குருவை வைத்தார்கள்

மாணவர்களே ஆசிரியர்களை மதியுங்கள்
மதித்து நடந்தால் உலகம் உங்களை மதிக்கும்


மாணவனை
க் கொலைகாரனாக மாற்றும்
திரைப்பட வன்முறைக
களை நிறுத்துங்கள் !

ஆங்கிலப் பள்ளிகளின் கெடு பிடிகள்
பிஞ்சு நெஞ்சங்களில் வன்முறை நஞ்சு

மாவட்ட ஆட்சியரின் ஆய்வில்
மதுக்
கடையில்  சீருடையோடு மாணவன்

தமிழ்நாட்டு பள்ளிகளில் தமிழைக் கற்பியுங்கள்
இந்தி சமஸ்கிருதம்
வகுப்புகளை உடன் மூடுங்கள்

நிறுத்தப்பட்ட நீதி போதனை வகுப்பை
அனைத்து  பள்ளிகளிலும்  உடன் தொடங்கிடுக !
மிக நல்ல மாணவன் நாளை
மிகச் சிறந்த ஆசிரியராவான் !

கற்க கசடற கற்றபின்
அயல்நாடு செல்லாதிருக்க ! 

ஏன் ? எதற்கு ? எப்படி ?
என்று  கேட்க    சிறக்கும் மாணவன்


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

வியாழன், 9 பிப்ரவரி, 2012

சுட்டும் விழி” விமர்சனம் குகன் கண்ணன்

சுட்டும் விழி”   விமர்சனம் குகன் கண்ணன்

http://guhankatturai.blogspot.in/2012/02/blog-post_09.html 

கவிதை விரும்பாத வாசகன் கூட தன்னையும் அறியாமல் வாசிக்கும் கவிதை ஹைக்கூ கவிதையாக தான் இருக்கும். ஐந்து நோடிக்கு மேல் எடுத்துக் கொள்ளாத வாசிப்பு. ஒரு பக்க கட்டுரை ஏற்ப்படுத்தும் பாதிப்பு, நருக்கென்று கருத்து என்ற போன்ற பெருமை ஹைக்கூ கவிதைகளுக்கு உண்டு. இன்று, ட்விட்டரில் பலர் 140 எழுத்துக்களில் தங்கள் கருத்தை சொல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால், நூற்றாண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் திருக்குறளிள் இரண்டடியில் சொல்லியிருக்கிறார். ஜப்பானில் மூன்றடியில் கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள்.

ஜப்பானில் தோன்றிய 'ஹைக்கூ' தமிழ் கவிதை சூழலில் பலர் முயற்சித்து வருகிறார்கள். தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் என்று பட்டியலிட்டால் அதில் கவிஞர் இரா.ரவி அவர்கள் பெயர் கண்டிப்பாக இருக்கும். அவர் எழுதிய எல்லா புத்தகங்களும் ஹைக்கூ கவிதையாக இருக்கும். அல்லது ஹைக்கூ பற்றிய கட்டுரை, விமர்சன நூலாக இருக்கும். ஹைக்கூ கவிதையில் தன் முழு கவனத்தை செலுத்தி வருபவர். அவர் எழுதிய 11வது நூல் தான் “சுட்டும் விழி”.

போதுவாக, நான் நூல் விமர்சனம் செலுத்தினால் அந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த வரிகளை குறிப்பிடுவேன். ஆனால், இந்த நூலில் எனக்கு பிடித்த கவிதையை குறிப்பிட சொன்னால் 64 பக்கங்கள் கொண்ட கவிதையில் 40 பக்கங்களுக்கான கவிதையை குறிப்பிட வேண்டியதாக இருக்கும். அந்த அளவுக்கு பல கவிதைகளில் நருக்கென்ற கருத்தோடு முடித்திருக்கிறார்.


உழைப்பாளியின் ரத்தம்
உறிஞ்சிக் குடிக்கும்
டாஸ்மார்க்
*
பன்னாட்டு நிறுவனங்களால்
கொள்ளை போனது
பச்சை வயல்
*
வேகமாக விற்கின்றது
நோய்பரப்பும் குளிர்பானம்
வருத்தத்தில் இளநீர்.
இயற்கையை அழித்து
செயற்கை மரங்கள்
நகரங்கள்


மேல் குறிப்பிட்ட கவிதைகளில், மூன்றாவது வரியில் இதயத்தை துழைக்கும் அம்பை ஒழித்து வைத்திருக்கிறதா அல்லது நம்மை குத்தும் குற்றவுணர்வா என்ற யோசிக்க வைக்கும் வரிகள்.

சமக்கால அரசியலை கேலி செய்யும் நாவலோ, சிறுகதையோ வருவது மிகவும் குறைவு. ஆனால், சமக்கால அரசியலை பகடி செய்யும் கவிதைகள் ஏராளமாக வந்துக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக கீழ் காணும் கவிதைகளை படித்து பாருங்கள்.

எண்ணங்களால் அன்று
எண்ணிக்கையால் இன்று
கூட்டனி !
*
திரும்புகின்றது
கற்காலம்
மின்தடை
*
காவிரி போல்
அரசியலானது
சமச்சீர் கல்வி
*
உயராத கூலி
உயரும் விலைவாசி
வேதனையில் ஏழைகள்.
**

இந்த புத்தகத்திற்கு “சுட்டும் விழி” என்ற தலைப்பு மிக பொருத்தாமாத அமைந்திருக்கிறது. காரணம், ஒவ்வொரு கவிதையும் நாம் படித்த முடித்த பின் நம்மை சுடாமல் இருப்பதில்லை.

மருத்துவ குறிப்பு சொல்லும் கவிதை,
மூளைச்சாவு
பயன்பட்டது
உறுப்புதானம்


ஈழ தமிழர்களுக்கு நம்பிக்கைக் கொடுக்கும் கவிதை,
அணையப்போகும் விளக்கு
சுடர்விட்டெரியும்
இலங்கைக் கொடூரன்.


வரலாற்றை பதிய வைக்கும் கவிதை,
மூடநம்பிக்கை
முற்றுப்புள்ளியாக்கியது
ஈரோட்டு மை.


ஒரு கவிதை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் இன்னொரு கவிதை நம்மை தாக்க தயாராக உள்ளது.

ஹைக்கூ கவிதைகளுக்கு தலைப்பு தேவையில்லை என்ற மரபில் இந்த புத்தகமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று கவிதைகள் சமூகத்தைப் பற்றியதாக இருந்தால், அடுத்த கவிதை 'ஈழம்' பற்றியதாக உள்ளது. இல்லை என்றால் 'காதல்' பற்றியதாக உள்ளது.
சமூகம், அரசியல், காதல் என்று வகைப்படுத்தி கவிதைகளை வரிசைப்படுத்தியிருக்கலாம்.


கவிதை வாசிப்பு ஆர்வம் இல்லாத வாசகர்கள் வாசிக்க வைக்கும் கவிதை நூலாக இருக்கிறது "சுட்டும் விழி".


--

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது