ஞாயிறு, 30 நவம்பர், 2014

நேர்மையான அதிகாரி முது முனைவர் வெ.இறையன்பு இ.ஆ .ப அவர்கள் எழுதி வரும் "உலகை உலுக்கிய வாசகங்கள்" கட்டுரை படித்து மகிழுங்கள்

நேர்மையான அதிகாரி  முது முனைவர் வெ.இறையன்பு இ.ஆ .ப   
அவர்கள் எழுதி வரும்  "உலகை  உலுக்கிய வாசகங்கள்" கட்டுரை படித்து மகிழுங்கள்  

-- http://epaper.dailythanthi.com/firstpage.aspxதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய " வாழ்கையின் அற்புதமான தரிசனங்கள் " கட்டுரை படித்து மகிழுங்கள் .நன்றி தினமலர் நாளிதழ் . --

தமிழ்த் தேனீ  முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய " வாழ்கையின் அற்புதமான தரிசனங்கள் " கட்டுரை படித்து மகிழுங்கள் .நன்றி தினமலர் நாளிதழ் .
-- 

மாற்று மருத்துவ கருத்தரங்கம் ! தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி !மாற்று மருத்துவ கருத்தரங்கம்  !    தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி !

மக்கள் சேவை சங்கமும் ,செல்லமுத்து  - சரஸ்வதி கல்வி மற்றும் சமூக சேவை அறக்கட்டளையும் இணைந்து  மருத்துவ கருத்தரங்கம் மதுரை மன்னியம்மை தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது .நுகர்வோர்  உரிமை பாதுகாப்பு பேரவையின் பொருளாளர் திரு முத்து கிருஷ்ணன் வரவற்றார்  .

கவிஞர் இரா .இரவி தலைமை வகித்து  .அலோபதி தவிர்த்த மற்ற சித்தா ,ஆயுர்வேதம் ,ஹோமியோபதி மருத்துவங்களின் சிறப்பை சொல்லி கருத்தரங்கை தொடங்கி  வைத்தார் .

செல்லமுத்து  - சரஸ்வதி கல்வி மற்றும் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர்  திரு செ.இராசேந்திரன் கருத்தரங்கம் பற்றி  அறிமுக உரையாற்றினார் .நுகர்வோர்  உரிமை சங்கத்தின் உதவித் தலைவர்   திருச்சி சந்தர் வாழ்த்துரை வழங்கினார்  .

சமயநல்லூர் அரசு சித்தா மருத்துவர் திரு .சி .சுப்பிரமணியன் சித்தா மருத்துவத்தின் நன்மையை அருமை பெருமையை சித்தர்களின் பாடல்களுடன் தமிழ் இலக்கியத்தில் உள்ள கவிதைகளுடன் எடுத்து இயம்பினார் .இஞ்சி .சுக்கு ,மிளகு ,கருவேப்பிலை ,மல்லி ,புதினா, சீரகம் மஞ்சள் ஆகியவற்றின் மருத்துவ நன்மைகள் பற்றி விரிவாக விளக்கினார்கள் .

மாற்று  மருத்துவம் அல்ல சித்த மருத்துவம் மக்கள் மருத்துவம் தொன்மையான மருத்துவம்.வீட்டில் உள்ள தாத்தா பாட்டிகளை  முதியோர் இல்லம் அனுப்பி விட்டோம் .அதனால் பாட்டி வைத்தியம் இல்லாமல் போனதால் குழந்தைகளுக்கு நோய்கள் வருகின்றன. முதியோர்களை மதித்து வீட்டில் வைத்து  பேண  வேண்டும் .பேரன் பேத்திகளுக்கு  அவர்கள் அன்பு உளவியல் ரீதியாக நல்ல பல்கன் தரும் .  குழந்தையின்மைக்கு ஆண்களுக்கு கருவேப்பிலை சிறந்து மருந்து அரைத்து குடிக்கலாம் .நல்ல பலன் வரும் . குழந்தையின்மைக்கு பெண்களுக்கு மல்லி சிறந்து மருந்து அரைத்து குடிக்கலாம் .நல்ல பலன் வரும் .

அகத்தியர் பாடல் 48 வரிகளில் உள்ளது .அதில் அனைத்து மருத்துவ கருத்துக்களும் உள்ளன .தினமும் கீரை சூப் அருந்துங்கள் .பொன்னால் ஆன மேனி கிடைக்கும் இந்த கீரை உண்டால் .அதுதான் பொன்னாங்கண்ணி. பொன்னாகும்   காண் நீ  என்பதே பொன்னாங்கண்ணி என்று ஆனது .அகம் சீர் செய்வது சீரகம் .

கடுக்காய் 156 வகை நோய் தீர்க்கும் மருந்து .10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு சாப்பிடலாம் .காரணம்  மிளகு நஞ்சு முறிக்கும் .பாம்பு கடித்தால் மிளகுகளை வாயில் போட்டு மென்றால் மிளகின் ருசி தெரிந்தால் கடித்தது சாதாரண பாம்பு.பயம் இல்லை ருசி தெரியாவிட்டால் நஞ்சுள்ள பாம்பு.

நிலவேம்பு கசாயம் அலோபதி மருத்துவர்களாலும் ஏற்கப்பட்ட மருந்து .வெந்தயத்தில் இரும்பு சத்து  உள்ளது .சித்தரத்தை மிக நல்ல மருந்து .சிறிய வெங்காயம் இரத்த அழுத்தம் நீக்கும் நல்ல மருந்து .நம் உணவில் அதிகம் சின்ன வெங்காயம் சேர்த்தல் நோய் வராது.எமஉருகு நோய் ( எயிட்ஸ்க்கும்) சிறுசெருப்படை மூலிகை மருந்தாகும் . இதற்கும்  பாடல் உள்ளது .தூதுவளை சளியை நீக்கும். முருங்கைக்கீரை ,பசலைக்கீரை உடல் நலத்திற்கு  மிகவும் நல்லது 

பிராத்னா ஆயுர்வேத நல மையம் தலைமை மருத்துவர் திரு. 
டி.எம் .பிரசன்னா குமார் அவர்கள்    ஆயுர்வேத மருத்துவத்தின் நன்மைகளை எடுத்து இயம்பினார் .நோயாளியின் நாடி பிடித்து பார்த்தே நோயை சொல்லி விட முடியும் .அலோபதி போல தேவையற்ற சோதனைகள் ஆயுர்வேத மருத்துவத்தில்  தேவை இல்லை  .எண்ணெய் தேய்த்து குளிப்பதை பலர் நிறுத்தி விட்டோம். அதனால்தான் நோய்கள் வருகின்றன .தொடர்ந்து  எண்ணெய் தேய்த்து குளித்தால் நோய்கள் வராது 

 கேராளவில் சிலர் தினமும் எண்ணெய்  தேய்த்து குளிக்கின்றனர் .நாம் வாரும் ஒரு முறையாவது   எண்ணெய்  தேய்த்து குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது .வெப்பம் தணிக்கும் பள்ளி ஆசிரியை தன் மாணவ மாணவியரிடம் என்னை தேய்த்து குளிப்பதை வலியுறுத்தி வந்தார்கள். முதலில் எதிர்த்த பெற்றோர்கள் பின் கடைபிடித்தனர் .விளைவு உடல் நலமின்றி அடிக்கடி விடுப்பு எடுத்தவர்கள் எப்போது விடுப்பு எடுக்கவில்லை . நடந்த உண்மை இது .

நெய் என்பது அமிர்தம் போன்றது .பிறந்த குழந்தை முதல் வயது முதியவர்கள்  வரை பயன்படுத்தலாம் .நெயில் இரத்த கொழுப்பு இல்லவே இல்லை .நெய் மூளைக்கு சிந்தனைக்கு மிகவும் நல்லது .
அரிசி உணவு விடுத்து சிறு தானிய உணவு உண்டால் சர்க்கரை  நோய்  வராது . கசாயம் குடிக்க அஞ்சினால் நோய் தீராது என்றார்.நம் உடலுக்கு நாம் தான் முதல் மருத்துவர் .உணவு பற்றி அவரவர் அறிந்து கொள்ள வேண்டும் .எந்த உணவால் ஒவ்வாமை ஏற்படுகிறதோ அவற்றை தவிர்த்தால் நோய் வராது .

அலோபதி மருத்துவர்கள் தலையில் தண்ணீர்  ஊற்றாதீர்கள் என்பார்கள் .அது தவறு .தினமும்  தலையில் தண்ணீர் ஊற்றுவது உடல் நலத்திற்கு நல்லது .

மதுரை ஹோமியோபதி மருத்துவ சங்கத்தின் தலைவர் திரு .
எம் .எம் .அப்துல் காசிம் அவர்கள் ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பை எடுத்து இயம்பினார் .அலோபதி மருத்துவர்களால் தீர்க்க முடியாத நோய்களை தீர்க்கும் ஆற்றல்  ஹோமியோபதி மருத்துவத்திற்கு உண்டு என்று பல உதாரங்கள் சொல்லி விளக்கினார். அனைத்திற்கு தம்மிடம் ஆதாரம் உள்ளது என்றார் .

ஹோமியோபதி மருத்துவர் ஹனிமன் அலோபதி M.D படித்தவர். அலோபதி மருத்துவம் புரிந்தவர் .அலோபதியில் நோய் திரும்பத் திரும்ப வருகிறதே .நோய்   திரும்ப வராமல் தடுப்பதற்கு ஆய்வு செய்து கண்டுபிடித்ததே ஹோமியோபதி.

நோய் எதிர்ப்பு  சக்தி வளர்ப்பது நோய்  திரும்ப வரவிடாமல் தடுப்பது ஹோமியோபதி என்றார் . கர்பப்பை  எடுக்க வேண்டும் என்று அலோபதி மருத்துவர்கள்  சொன்ன பெண்களுக்கு மருந்தால்  குணபடுத்தி உள்ளேன் என்றார் .முன்பெல்லாம் ஹோமியோபதி மருத்துவர் என்றால் கேலி பேசுவார்கள் .இப்போது பலர் தேடி வந்து மருத்துவம் செய்கின்றனர் .மக்களிடையே விழிப்புணர்வு வந்துள்ளது என்றார்.மற்ற மருத்துவம் நோய்களுக்கு சிகிச்சை தருகின்றன. ஆனால் ஹோமியோபதி நோயாளிக்கு   சிகிச்சை தருகின்றன.அலோபதியில் காய்ச்சல் என்றால் ஒரே வகை மாத்திரை ஆனால்  ஹோமியோபதியில் நோயாளிக்கு தகுந்தபடி மருந்து உள்ளது . நோயாளிக்கு நடந்து வந்து அமரும் விதத்திலேயே எந்த வகையான காய்ச்சல் என்பதை அறிந்து விடுவோம் .

மக்கள் சேவை சங்கத்தின் செயலர் கு .இராம மூர்த்தி அவர்கள்    3 மருத்துவர்கள் சொன்ன பயனுள்ள தகவல்கள் சொன்னமைக்கு நன்றி  கூறினார்  .  . 

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

குழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா !

குழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா !


சனி, 29 நவம்பர், 2014

குழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா ! கவிஞர் இரா .இரவி !

குழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா !
கவிஞர் இரா .இரவி !
வள்ளியப்பா இலக்கிய வட்டம் இராயவரம் மு .அ.மு .சுப .பழனியப்ப செட்டியார் இலக்கிய வட்டம் விஜயா பதிப்பகம் திரு .வேலாயுதம் இணைந்து நடத்திய குழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா மதுரை அருகே மேலூரில் உள்ள ஸ்ரீ சுந்தரேசுவரர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் திருவிழாவாக நடைபெற்றது .கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி, பேராசிரியர் ,எழுத்தாளர் அய்க்கண் ,குழந்தை இலக்கியப் பணிச் செல்வர் வெங்கட்ராமன் , மின்மினி ஆசிரியர் கன்னிக் கோவில் இராஜா ,முனைவர் தாமோதரக் கண்ணன் ,புதுவை பாரதி ஆசிரியர் ஓவியர் பாரதி வாணர் சிவா ,மேலூர் கவிஞர் வாசுகி ,நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மண்டல மேலாளர் திரு .கிருஷ்ண மூர்த்தி , மேலூர் ஆசிரியர் சு . அழகன் புலவர் சோமன் ,ஆசிரியர் பிலிக்ஸ் ,கவிஞர் இரா .இரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.மீனாட்சி பதிப்பகம் ,மணிவாசகர் பதிப்பகம் சார்பாகவும் வந்து இருந்தனர்.
குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினார்கள். குழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா அவர்களின் பாடல்களுக்கு மாடு ,குதிரை ,அணில் என மாறுவேடமிட்டு மாணவ மாணவியர் நடமாடினார்கள் .ஏராளமான குழந்தைகள் விழாவில் பங்குபெற்றனர் .
அனைவருக்கும் சுவையான மதிய விருந்து வழங்கினர் .பள்ளியிலும் விஜயா பதிப்பகம் திரு .வேலாயுதம் அவர்கள் இல்லத்திலும் விருந்து நடந்தது .திரு .வேலாயுதம் அவர்கள் அருகில் நின்று அனைவருக்கும் அன்போடு பரிமாறினார்கள் .சென்னை ,புதுவை ,திருச்சி உள்பட பல ஊர்களில் இருந்து குழந்தை இலக்கிய படைப்பாளிகள் வந்து இருந்தனர் .நாள் முழுவதும் குழந்தைகளின் இனிமையோடு கழிந்தது .
 கவிஞர் இரா .இரவி ,குழந்தை இலக்கியப் பணிச் செல்வர் வெங்கட்ராமன் , மின்மினி ஆசிரியர் கன்னிக் கோவில் இராஜா.கவிஞர் இரா .இரவி முனைவர், கவிஞர் தாமோதரக் கண்ணன்


 முனைவர், கவிஞர் தாமோதரக் கண்ணன் ,   பேராசிரியர் ,எழுத்தாளர் அய்க்கண் ,கவிஞர் இரா .இரவி


மின்மினி ஆசிரியர் கன்னிக் கோவில் இராஜா ,பேராசிரியர் ,எழுத்தாளர் அய்க்கண் ,
கவிஞர் இரா .இரவி

இளைய மகன் கெளதம் கை வண்ணத்தில் !

இளைய மகன் கெளதம் கை வண்ணத்தில் !

இனிய நண்பர் மின்மினி இதழ் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள்

இனிய நண்பர் மின்மினி இதழ் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் என் ஹைக்கூ கவிதைகள் ,என்  புகைப்படத்துடன்  நாட்காட்டி சென்னையில்  அச்சடித்து  இருந்து கொண்டு வந்து இன்று மேலூரில் நடந்த குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா விழா ! குழந்தைகள் திருவிழாவில் வழங்கினார் .

படித்ததில் பிடித்தது ! இனிய நண்பர் ஆசிரியர் சு . அழகன் தா .மு .எ க .ச . மேலூர் .

படித்ததில் பிடித்தது ! இனிய நண்பர் ஆசிரியர் 
சு . அழகன் தா .மு .எ க .ச . மேலூர் .
 

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் ' அன்பே தவம் ' என்ற தலைப்பில் ஆன்மிகம் கலந்த இலக்கிய உரையாற்ற உள்ளார்கள்

தமிழ்த் தேனீ  முனைவர் இரா .மோகன் அவர்கள் ' அன்பே தவம் ' என்ற தலைப்பில் ஆன்மிகம் கலந்த இலக்கிய உரையாற்ற உள்ளார்கள்.  சுவைக்க வருக .இடம் ; காந்தியடிகள் ,நேருஜி சிலைகளை கடவுள் சிலைகளோடு கோபுரத்தில் வைத்துள்ள மதுரை வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடி.

 நாள் 3.12.2014 மாலை 6.30 மணி . 

வெள்ளி, 28 நவம்பர், 2014

மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி

மட்டை விளையாட்டு தேவையா?
கவிஞர் இரா. இரவி.
****
தலைக்கவசம் அணிந்திருந்த போதும் கிரிக்கெட் வீரர் ஹீயூஸ் காயம் ஏற்பட்டு உயிரை இழந்து விட்டார். ஆஸ்திரேலியாவில் அவர்களுக்குள் நடந்த போட்டி.  அதனால் பிரச்சனை இல்லை.  இதுவே இந்தியா, பாகிஸ்தான் போட்டியாக இருந்து, யாராவது ஒருவர் இறந்து இருந்தால் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி இருக்கும்.  கெட்டதிலும் ஒரு நல்லது என்பது இது தான்.

மட்டையாட்டத்தில் பயன்படுத்தும் பந்து மிக கனமான பந்து.  அந்தப்பந்து நெஞ்சில், நெற்றியில், பொட்டில் பட்டாலும் ஆபத்து.  ஹீயூஸ்க்கு கழுத்துப் பகுதியில் தாக்கியதில் உயிர் இழந்துள்ளார். இந்த விளையாட்டில் உள்ள ஆபத்தை உணராமல் குழந்தைகள் விளையாடி வருகின்றனர்.  மட்டை விளையாட்டு விளையாடும் போதும் ஏற்பட்ட சண்டையின் காரணமாக உயிர்பலி நேர்ந்து உள்ளது.  மதுரையிலும் மட்டை விளையாட்டு சண்டையில் ஒரு மாணவன் இறந்தான்.

குளிர்பிரதேசத்தில் உடம்பெல்லாம் மூடி வெயில் காணாதவர்கள் ஆசையோடு வெயிலில் விளையாடிய விளையாட்டு இது.  வெப்ப பூமியிலும் அதுபோன்ற உடை அணிந்து வெயிலில் விளையாடி வருகின்றனர். ஊடகங்களில் பெருமளவு விளம்பரம் செய்வதால் இந்த விளையாட்டு குழந்தைகள் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  இந்த விளையாட்டில் அளவிற்கு அதிகமான ஊழல் நடந்து வருகின்றது.  விளையாட்டு வீரர்களும் கோடிக்கணக்கில் குறுக்கு வழியில் சம்பாதிக்கின்றனர்.விளம்பரப் படங்களில் நடித்து கோடிகள் ஈட்டுகின்றனர் 

யார் வெல்வது? யார் தோற்பது? என்பதை பணத்திற்காக முதலில் முடிவு செய்து கொண்டு விளையாடுகின்றனர்.  பந்தயம் கட்டுபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, தொகைக்கு ஏற்ப விளையாட்டின் முடிவை முடிவு செய்கின்றனர். இந்த பித்தலாட்டம் பற்றி எதுவும் அறியாமல் கொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நேரலைகளில் விளையாட்டை ரசித்து நேரத்தை விரையம் செய்து வருகின்றனர்.விளையாட்டை தொலைக்காட்சியில் பார்க்க வேண்டும் என்று அதற்கும் வீட்டில் சண்டை 

மட்டை விளையாட்டு வீரர் ஹீயூஸ் காயப்பட்டவுடன் கோமா நிலைக்கு சென்று நினைவு திரும்பாமலே இறந்து விட்டார்.  மிகவும் குறைந்த வயது.  25 வயதிலேயே அவர் உயிரை இழந்திட காரணமாக அமைந்தது மட்டை விளையாட்டு.  ஆபத்து இல்லாத எத்தனையோ விளையாட்டுகள் உள்ளன. ஆனால் அவைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தரவதில்லை.  அதனால் அந்த விளையாட்டுகள் குழந்தைகளிடம் பிரபலம் அடையவில்லை.  கபடி போன்ற விளையாட்டுகளில் இப்படி உயிர் போகும் ஆபத்து இல்லை.

மாணவர்கள் மட்டை விளையாட்டு விளையாடும் போது சண்டை வந்தால் மட்டையால் அடித்துக் கொள்ளும் நிகழ்வுகளும் நிறைய நடந்துள்ளன. 

மட்டை விளையாட்டு போட்டிகளில் வீரர்களை ஏலம் விடுவதும் அவர்களை விலைக்கு வாங்குவதும் நல்ல செயல் அன்று.  ஒரு மனிதனை ஏலம் விடுவது நாகரீக உலகில் ஏற்புடைய செயல் அன்று.  மேலும் ஏலம் எடுத்து சம்பாதிக்கும் வணிகத்தில் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கு பெறுகின்றனர். அவர்களும் வந்து விளையாட்டு அரங்கில் நிற்பதால் தொலைக்காட்சிகளில் அதிக முக்கியத்துவம் தந்து அவர்களை காட்டுகின்றனர்.  இதன் காரணமாகவும் இந்த விளையாட்டு பிரபலமாகி வருகிறது. 

 அரசியல் தலைவர்கள் சிலரும் இந்த விளையாட்டை ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.  பார்த்து வருவதோடு நில்லாமல் அது பற்றி ஊடகத்திலும் சொல்லி வருகின்றனர். விளையாட்டு வீரர் புத்தகத்தை படிப்பதாக விளம்பரம் வேறு செய்கின்றனர் . இதன் காரணமாகவும் இந்த விளையாட்டு குழந்தைகளிடையே பிரபலமாக வருகின்றது.

அன்றே பெர்னாட்சா என்ற பேரறிஞர் சொன்னார். 11  முட்டாள்கள் விளையாட பதினோறாயிரம் முட்டாள்கள் பார்க்கும் விளையாட்டு மட்டை விளையாட்டு என்றார்.

 மட்டை விளையாட்டின் காரணமாக சாதிக் கலவரங்கள் வன்முறைகள் நடந்த நிகழ்வுகளும் உண்டு.  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது உண்மையான அன்பு இருந்தால் மட்டை விளையாட்டு விளையாடுவதற்கு தடை செய்யுங்கள். நாம் தான் எடுத்து கூறி அந்த விளையாட்டில் உள்ள ஆபத்தை புரிய வைக்க வேண்டும்.  மேலும் மட்டை விளையாட்டுக்கு பயன்படும் மட்டை பந்து இவற்றை வாங்கி கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

மட்டை விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுப்பதிலும் ஊழல் உள்ளது.  அரசியல் தலையீடு உள்ளது. உண்மையான திறமை மிக்க விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யாமல் தவிர்த்து விடுகின்றனர். 

ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர் ஹீயூஸ் விளையாடிய போது அவரது தாயாரும், சகோதரியும் இருந்து உள்ளனர்.  அவர்கள் கண் முன்னிலையில் பந்தால் அடிப்பட்டு சுருண்டு விழுந்த காட்சி சோகம்.விழுந்தவுடன் கோமா நிலை அடைந்து கடைசியில் இறந்த சோகம் சொல்லில் அடங்காது.  அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு வழங்கும் நிதி உதவி எதுவும் அவரை ஈடு செய்ய முடியாது.

1998ஆம் ஆண்டு ராமன் லம்பா தலையில் பலமாக பந்து விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.  பாகிஸ்தனை சேர்ந்த விளையாட்டு வீரர் அப்துல் அஜீஸ் மார்பில் பந்து விழுந்து அவரும் உயிரிழந்தார்.  தென் ஆப்பிரிக்கா வீரர் மார்க் பௌச்சருக்கு மட்டை விளையாட்டு குச்சி எகிறி இடது கண்ணில் பாய்ந்து பார்வை குறைபாடு ஏற்பட்டது.  

இப்படி மட்டை விளையாட்டால் உயிர் இழந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் காய்முற்றவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.  உயிர்க்கொல்லி விளையாட்டை புறக்கணிப்போம்.

ஆபத்தான மட்டை விளையாட்டை புறக்கணிக்க முன்வர வேண்டும்.  ஆசையோடு ,அன்போடு ,பாசத்தோடு நாம் வளர்க்கும் குழந்தைகள் மட்டை விளையாட்டு விளையாடி பாதிப்பு அடையாமல் காக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.  மட்டை விளையாட்டால் உயிர் இழந்தது ஹீயூஸ் அவர்களோடு முற்றுப்பெறட்டும்.  இனி எந்த உயிரும் பறிபோகாமல் இருக்க மகா மட்டமான ஆபத்து நிரம்பிய மட்டை விளையாட்டை புறக்கணிப்போம்.


.

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோடம் - 2

படித்ததில் பிடித்தது ! முகவரி இலக்கம் !

படித்ததில் பிடித்தது !
முகவரி இலக்கம் ! 
உணர்ச்சிக்கவிஞர் அறிவுமதி ! 
ஓவியம் மதுரைக்காரர் டிராட்ஷ்கி  மருது !
 நன்றி ஆனந்த விகடன் !

மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா கவியரங்கம் .

மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா கவியரங்கம் . 

புதன், 26 நவம்பர், 2014

இனிய நண்பர் முனைவர் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் பேசுகிறார் .ஹலோ விகடனில்

இனிய நண்பர் முனைவர் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் பேசுகிறார் .ஹலோ  விகடனில்

சென்றியு ! கவிஞர் இரா .இரவி !

சென்றியு ! கவிஞர் இரா .இரவி !
மரணதண்டனைக்கு ஆதரவு
ஐ.நா .மன்றத்தில்
காந்தி தேசம் !

சில்லரை விற்பனை மட்டுமல்ல
மொத்தமும் தடை செய்க
சிகரெட் ( வெண்சுருட்டு ) !

அண்ணன் வேகம்
தம்பிக்கு இல்லை
கடிகார முட்கள் !

யாருக்கும் தெரியாது
எப்போது வெடிக்கும்
எரிமலை !

விருப்ப ஒய்வு
பெற்றார் அப்பா
மகளுக்குத் திருமணம் !

அதிகம் படித்தவர் அதிகாரத்தில்
அதிகம் படிக்காதவர் எடுபிடி
அலுவலகம் !

அறிக்கைகளில் நேர விரையம்
பொது நலம் பேண நேரமின்மை
அரசியல் !

பட்டிமன்றம் புகைப்படம் புகைப்படக் கலைஞர் திரு. இராமலிங்கம் கை வண்ணத்தில் .

பட்டிமன்றம் புகைப்படம் புகைப்படக் கலைஞர் 


திரு. இராமலிங்கம் கை வண்ணத்தில் .

இனிய நண்பர் இசக்கியின் கை வண்ணத்தில் கவிஞர் இரா .இரவி

இனிய நண்பர் இசக்கியின் கை வண்ணத்தில்  கவிஞர் இரா .இரவி
செவ்வாய், 25 நவம்பர், 2014

மாவீரன் பிரபாகரன் பிறந்த நாள் ! கவிஞர் இரா .இரவி !

மாவீரன்  பிரபாகரன் பிறந்த நாள் !       கவிஞர் இரா .இரவி !

மாவீரன் நேதாஜியை நேசித்தவன் நீ 
மாவீரன் நேதாஜி போலவே நிலைத்தாய் நீ !

நீ இருக்கிறாய் என்றும் இல்லை என்றும் 
நாட்டில் பட்டிமன்றங்கள் நடக்கின்றன !

நீ யானை மாதிரி ஆம் இருந்தாலும் 
இறந்திருந்தாலும்  மதிப்பு மிக்கவன் நீ !

நீ இன்னும் இருக்கிறாய் ! என்று 
நாளும் அச்சத்தில் சாகிறான்  பகைவன் !  

நீ இன்னும் வாழ்கிறாய் ! என்று 
நாளும் மகிழ்வில் வாழ்கிறான் தமிழன் !

சிங்கள ஆதிக்கத்தை என்றும் எதிர்த்தாய்
சிங்கள் மக்களை என்றும் எதிர்த்ததில்லை !

கடவுளை நம்பாத நாத்திகர்களும் 
கனிவோடு  உன்னை நம்புகின்றோம் !

புழுவாக இருந்த இலங்கைத் தமிழனை 
புலியாக மாற்றிய மாவீரன் நீ !

கொட்டக் கொட்ட குனிந்தவனுக்கு   
திருப்பிக் கொட்டிட கற்பித்தவன் நீ !

புறநானூற்று  வீரத்தை படித்தோம் 
புதிய  வடிவில் ஈழத்தில் பார்த்தோம் !

எட்டு நாட்டுப் படைகளோடு வீர 
எட்டு வைத்து போராடியவன் நீ !

துரோகம் உன்னை தோற்கடிக்கவில்லை 
துரோகம்தான்  உன்னிடம் தோற்றது !

இருக்கிறாய் என்பதற்கும் இல்லை என்பதற்கும்
இவ்வுலகில் சாட்சிகள் இல்லை இன்று  !

உலகத்தமிழர்கள் உள்ளங்களில் என்றும் வாழ்கிறாய் 
உலகம் முழுவதும் சாட்சிகள் உண்டு !

பகைவர்கள் துரோகிகள் மனசாட்சி  இன்றும் 
பயத்தோடு உன் வீரம் பாராட்டும் !  

தனித்தமிழ் ஈழம் விரைவில்  மலர்வது உறுதி  
பிரபாகரன் தேசம் பெயர் சூட்டுவதும் உறுதி  !

புரட்சியாளர்களுக்கு பிறந்த நாள் உண்டு 
புனிதர்களுக்கு இறந்த  நாள் இல்லை !

நன்றி .தினமணி

நன்றி .தினமணி

கச்சத் தீவைத் திரும்ப பெற முடியும் .

படித்ததில் பிடித்தது ! இனிய நண்பர் ப .திருமலை நூலில் இருந்து பயணம் மாத இதழில் .
.
கச்சத்   தீவைத் திரும்ப பெற முடியும் .

பழமொன்ரியு ! கவிஞர் இரா .இரவி !

பழமொன்ரியு !             கவிஞர் இரா .இரவி !

தேவை விளம்பரம் 
பூக்கடைக்கும் 
காகிதப்பூக்கள் !

பணிவு கூட்டிடும் 
கர்வம் குறைத்திடும் 
புகழ் !

வாத்தியார் பிள்ளை மக்கல்ல
ஆசிரியர் பிள்ளை 
பேராசிரியர் ! 

ஆசைப்படலாம் முடவன்
கொம்புத் தேனுக்கு 
கடையில் கிடைக்கும் !

நாலு பெண்கள் கூடினால் 
வேற்றுமையல்ல  ஒற்றுமை 
மகளிர்  சுய உதவிக்குழு !

நாய் விற்ற காசு குரைக்காது
தெரிந்தது 
நாயின் முகம் !

நிலையாமை ஒன்றே 
நிலையானது 
வாழ்க்கை !

நீர் உயர 
நெல் உயரவில்லை 
அழுகியது நெல் ! 

பெண் புத்தி பின் புத்தி 
பின்னால் வருவதை 
யோசிக்கும் புத்தி !  

பொறுத்தார் பூமி ஆளவில்லை 
இழந்தார்கள் 
பூமியை !

அதிகம் வேண்டும் 
ஞாபகம் 
பொய்யனுக்கு ! 

பிறந்ததும் 
கற்றது நீச்சல் 
மீன்குஞ்சு !

பழம்தான் 
இனிப்பதில்லை
மிளகாய்ப்பழம் !

எடுத்தால்  ஓடாததால்   
எடுக்கவில்லை படம் 
பாம்பு !

பசுமரத்தாணியாகப்  பதிகின்றன 
ஊடகத்தில் காட்டும் 
கெட்டவைகள் !

பழகப் பழக 
புளிக்கும் பால்
இனிப்பால் காதலி !

பாம்புக்கு பால் வார்ப்பு 
இலங்கைக்கு உதவும் 
இந்தியா !

பாம்பு  என்றால் 
படையும் நடுங்கும் 
அஞ்சுவதில்லை பருந்து !

பிள்ளையில்லா வீட்டில் 
துள்ளவில்லை வருத்தத்தில் 
கிழவன் !

உருவத்தில் சிறியது 
உடல் நலத்திற்கு நல்லது 
மிளகு !

மூர்த்தி சிறியது 
கீர்த்தி பெரியது 
மிளகு !

பல் போனால் 
சொல் போகவில்லை 
செயற்கைப் பற்கள் !

தோளுக்கு மிஞ்சினால் 
தோழனாகப்  பழகினால் 
நீடிக்கும் உறவு !

பிள்ளையார் பிடிக்க 
குரங்காய் முடிந்தது 
அணு உலை !

சிப்பியில் விழும் 
எல்லா மழைத்துளியும் 
முத்தாகாது !

நல்ல மரத்தில் புல்லுருவிகள் 
கல்வித்துறையில் 
தனியார் !

வயதாகும் முன்பும்    
நரை வரும் 
இளநரை !

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் 
எல்லாப் பிள்ளைக்கும் வாயுண்டு 
பேசத்தெரிந்த பிள்ளை பிழைக்கும் !

பயம் கொள்ளவில்லை 
புலிக்குகை புகுந்த மான் 
குகையில் இல்லை புலி !
 
இரண்டும் ஒன்று 
தவளை அரசியல்வாதி 
தன் வாயால் கெடுபவர்கள் !

தீட்டின மரத்திலேயே 
கூர் பார்த்தனர் 
கட்சி மாறி !

பசுத்தோல் போர்த்திய 
புலியாக 
தலைவர்கள் !

தோலிருக்க 
சுளை முழங்கி 
அரசியல்வாதி !

வாய்ப்பந்தல் 
நிழல் தராது 
தேர்தல் அறிக்கை !

நெற்றிக்கண் கண்டால் 
நடுங்குகின்றனர் 
இக்காலப் புலவர்கள் !நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

பட்டிமன்றம் புகைப்படங்கள் புகைப்படக் கலைஞர் திரு. இராமலிங்கம் கை வண்ணத்தில் .

பட்டிமன்றம் புகைப்படங்கள் புகைப்படக் கலைஞர் 
திரு. இராமலிங்கம் கை வண்ணத்தில் .

.23.11.2014 )திருநகர் நூலகத்தில் 47 ஆம் ஆண்டு  தேசிய நூல்கள் வார விழா தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் நடந்தது .அந்த விழாவில் இலக்கிய இணையர்  திருநகர் நூலகர் திரு சக்திவேல் அவர்களிடம் 112 அரிய நூல்களை நன்கொடையாக வழங்கினார்கள்.

தொல்காப்பியம் தொடங்கி இனிய நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்தியின் மழையின் கையெழுத்து ,எனது நூல்களான புத்தகம் போற்றுதும், சுட்டும் விழி வரை இருந்தது .

திருநகர் நூலக வாசகர்கள் அனைவரும் இலக்கிய இணையரை  பாராட்டினார்கள். விழாவிற்கான ஏற்பாட்டை திருநகர் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் இனிய நண்பர் கவிஞர் செல்லா செய்து இருந்தார் .நூலகத்தின் வெளியே பெரிய மேடையிட்டு இருக்கைகள் வைத்து மிகச் சிறப்பாக நடந்தது .காவல்துறை உதவி ஆய்வாளர் திரு .சீனிவாசன் விழாவில்  கலந்து கொண்டு சிறப்பித்தார் .திருநகர் பகுதி வாழ் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நாய்கள் ஜாக்கிரதை! இயக்கம் : திரு. சக்தி .சௌந்தர் ராஜன் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

.
நாய்கள் ஜாக்கிரதை!
இயக்கம் :  திரு. சக்தி .சௌந்தர்  ராஜன் !
திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவிநடிப்பு : திரு. சிபி   :
தயாரிப்பு  திரு. சத்யராஜ்


*****
       சத்யராஜ் அவர்களின் புதல்வர் சிபி நடித்துள்ள படம்.  இந்தப்படத்தின் கதாநாயகன் சிபி என்றால் இன்னொரு கதாநாயகன் நாய் என்றே சொல்ல வேண்டும்.  நாய் பற்றி இப்படி ஒரு படம் வந்தது இல்லை.  நாய் இவ்வளவு அறிவு மிக்கது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் இயக்குனர் திரு.            . பாராட்டுக்கள்.
       5 சூட்கேஸ்கள் வைத்து உள்ளனர்.  அதில் ஒன்றில் மட்டும் வெடிக்கக்கூடிய வெடிமருந்து உள்ளது.  நாய் சூட்கேஸ்களை மோந்து பார்த்து விட்டு வெடிமருந்து உள்ள சூட்கேஸ் சுட்டிக்காட்டி அதன் அருகே + என்ற குறியிடுகிறது.  படத்தின் இறுதிக்காட்சியில் கதாநாயகன் சிபி உயிர் உழைப்பதற்கும் உதவுகின்றது நாய்.  கதாநாயகி இருக்கும் இடத்தையும் சுட்டிக் காட்டுகிறது.  கடைசியில் வில்லனால் சுடப்பட்டு இறந்து விடுகிறது.
       நாய்க்கு பயிற்சி தந்தால் பல சாகசங்கள் செய்கின்றது.  ஏணிகளில் ஏறுகின்றது, ஓடுகின்றது, திருடனை விரட்டிச் சென்று பிடிக்கின்றது.  நாயின் பயிற்சியாளர் உட்காரு என்றால் உட்காருகிறது.  ஓடு என்றால் ஓடுகின்றது.

இந்தப்படம் பார்த்தபோது இனிய நண்பர் காவல்துறை உதவி ஆணையர் கவிஞர் மணிவண்ணன் அவர்கள் இலக்கிய விழாவில் சொன்ன நிகழ்வு நினைவிற்கு வந்தது.  காவல்துறையில் உள்ள நாயின் முன் இறைச்சி வைத்து இருப்பார்கள். அந்த நாய் இறைச்சியை உண்ணாமல் அப்படியே பார்த்துக்கொண்டே இருக்கும். பயிற்சியாளர் சாப்பிடு என்று சொன்னால் மட்டுமே சாப்பிடும்.  இப்படி ஒழுக்கம் கடைபிடிப்பதில் நாய்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன.

       நாய் நன்றியுள்ள விலங்கு என்பதையும் தாண்டி, அறிவு உள்ள விலங்காக உள்ளது.  நாய் பற்றி முழுக்க முழுக்க எடுத்து இயம்பிடும் படம்.  படத்தில் நகைச்சுவை காட்சிகளும் உள்ளன.  துப்பாக்கி சத்தம் கேட்டால் மிரளும் காட்சி.  அதற்கு முன்பு நடந்து துப்பாக்கி சுடும் காட்சி.  சிபி காவல் அதிகாரியாக நன்றாக நடித்து உள்ளார்.  படம் தொய்வின்றி விறுவிறுப்பாக செல்கின்றது.  மயில்சாமியின் நகைச்சுவை ரசிக்கும்படி இருந்தது.

       உயிரோடு சவப்பெட்டியில் அடைத்து சாவதை வெப் காமிரா மூலம் கண்டுகளிக்கும் கொடூர வில்லன். கதாநாயகி சவப்பெட்டியில் உயிருக்குப் போராடும் காட்சி.  பார்ப்பவர்களுக்கு பரபரப்பை தந்தது.  கதாநாயகனையும் சவப்பெட்டியில் உயிரோடு அடித்து கடைசியில் இருவரும் சாகாமல் பிழைப்பது படம் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சி.

       சண்டைக்காட்சிகளில் சிபி கடினமாக உழைத்து உள்ளார்.  நகைச்சுவைக் காட்சிகளிலும் நன்றாக நடித்துள்ளார்.  சற்று இடைவெளி எடுத்துக்கொண்டு சிபி நடித்து வெளிவந்துள்ள படம்.  குடும்பத்துடன் குறிப்பாக குழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டிய படம்.  பார்த்து விட்டு வெளியே வரும் போது நாயின் மீதான மதிப்பு கூடிவிடுகின்றது.  ஒளிப்பதிவு, இசை, பின்ணணி இசை யாவும் மிக நேர்த்தியாக இருந்தன. மதுரை விமான நிலையத்தில் தினமும் இவ்வகை நாய்களை பார்ப்பேன்.  அவைகளின் அறிவு நுட்பம் கண்டு வியந்து போவேன்.பாராட்டுகள் .காவலர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம் .
நாயுக்கு 5 அறிவு அல்ல 6 அறிவு உள்ளது என்ற முடிவுக்கு வர வைத்தது இந்த திரைப்படம் .படத்தின் இயக்குனர் திரு. சக்தி .சௌந்தர்  ராஜன் அவர்களுக்கும் ,நடித்த அவர்களுக்கும் ,தயாரித்த   திரு. சத்யராஜ் அவர்களுக்கும்
-நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
திங்கள், 24 நவம்பர், 2014

பழமொன்ரியு ! கவிஞர் இரா .இரவி !

பழமொன்ரியு !             கவிஞர் இரா .இரவி !


தம்பி உடையான் 
படைக்கு அஞ்சினான் 
எதிரணியில்   தம்பி !

நாற்பது வயதிற்கு  மேல் 
நாய் குணம் ஆம் 
நன்றி குணம் !

தனி மரம் தோப்பானது
தனி மரத்தின் 
விதைகளால் !

மாமியார் மருமகள் சண்டை 
கண்ணிற்கு இன்பம் 
தொலைக்காட்சி !

நாய் வேடமிட்டு  குரைத்தாலும் 
தெரிந்திடும் வேறுபாடு 
குரைப்பது கடினம் !

தீமைக்கும் 
நன்மை செய் 
திருக்குறள் !

முக்கடல் சங்கமத்தில் 
முப்பால் வடித்தவர் 
திருவள்ளுவர் !

நண்டு கொழுத்தால் 
வளையில் இராது 
சாமியார் கைது !  
 

திரைகடல் ஓடி 
திரவியம் தேடினால் 
சுடுகிறான் சிங்களன் !

செருப்பால் அடித்து விட்டு 
வெல்லம் தந்தார் 
இலங்கை அதிபர் !

தான் பிடித்த முயலுக்கு 
மூன்றே கால் 
இலங்கை !

தீமையைப் பார்ப்பதை  விட  
பார்வையற்று இருப்பது மேல் 
நீதி தேவதை !

நிழலின் அருமை 
வெயிலில் தெரியும் 
அப்பா மறைவு !

நிறைகுடம் 
தளும்பாது   
பண்பாளர் !

நிர்வாண நாட்டில் 
ஆடை அணிந்தவன் 
அறிவாளி !

தண்ணிரில் உள்ளது 
வாழ்வு 
மீன் !

நெருப்பில்லாமல்
வந்தது  புகை 
பனி மூட்டம் !

நொறுங்க உண்டால்  ஆயுசு நூறு 
நொறுக்குத்தீனி  உண்டால்  
குறையும் ஆயுசு !

கொடுத்தால் கிடைக்கும் 
கொடுக்காமல்  கிடைக்காது 
மரியாதை !

நிரந்தரம் 
வெண்மை 
சங்கு !

அலை ஓய்ந்தபின்  
நீராட விரும்பினால் 
முடியாது நீராட !

சாட்டை இல்லாமலும் 
பம்பரம் சுற்றும் 
கையால் சுழற்றினால் !


செருப்புக் கடித்தால் 
திருப்பிக் கடிப்பதில்லை 
இரவுடிக் கூச்சல்  !

கொள்ளிக் கட்டையால் 
தலையைச் சொரிதல் 
பன்னாட்டு நிறுவன அனுமதி !

சேரச்சேர 
பணஆசை 
அரசியல்வாதிக்கு !


குறை குடம் 
கூத்தாடும் 
அரசியல்வாதி !

அரசியல் கூத்தில் 
கோமாளிகள் 
அரசியல்வாதிகள் !

கோழி கூவி பொழுது விடியாது 
அரசியல்வாதிகளால் 
வராது  விடியல் !

சலுகையுள்ள மாடு 
படுகையெல்லாம் மேயும் 
அமைச்சர் உறவினர்  !

சிங்கம் பசிக்கு யானையையும் கொல்லும் 
அரசியல்வாதி  பசிக்கு 
உண்மையையும் கொள்வர் !


மணமக்களை வாழ்த்தினர் .

அல்ட்ரா கல்லூரி விரிவுரையாளர்  இனிய நண்பர் ஷான் பிலிப்ஸ் இராஜா , அப்போலோ மருத்துமனை செவிலியர் செல்வி ஷேலி அலோசியா திருமணம் மதுரை கே .எம் .திருமண மன்றத்தில் நடந்தது .மணமக்களை கவிஞர் இரா .இரவி ,மருத்துவர்கள் சரவணன் ,மகேஷ்  மற்றும் நண்பர்கள் கணேசன்,  அறிவழகன்  ஆகியோர் வாழ்த்தினர் .

கவி.கா.மு.ஷெரிப் அவர்களின் நூற்றாண்டு விழா

எதிர் வரும் டிசம்பர் மாதம் 26-11-2014 அன்று கவி.கா.மு.ஷெரிப் அவர்களின் நூற்றாண்டு விழா நமது முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

 இந்த தகவலை உங்கள் நட்பு வட்டம் மற்றும் தமிழ் & இலக்கிய ஆர்வம் உள்ளவர்களின் கவனத்திற்கு கொண்டு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த இணைப்பில் தாங்களுக்கு  நூற்றாண்டு விழா  அழைப்பிதழின் இடுகையும் இணைத்துள்ளேன்.

முடிந்த அளவு தமிழகத்தில் உள்ள உங்களின் நட்பு வட்டங்களை கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்...

நட்புடன்

புதியவன்
9500037000

மகாகவி பாரதியார் தமிழாசிரியராகப் பணியாற்றிய மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா அழைப்பிதழ் !

மகாகவி பாரதியார்  தமிழாசிரியராகப்     பணியாற்றிய மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா  அழைப்பிதழ் !

ஞாயிறு, 23 நவம்பர், 2014

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் இலக்கிய இணையரின் இலக்கிய கொடை உள்ளம் ! கவிஞர் இரா .இரவி !

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் இலக்கிய இணையரின்  இலக்கிய கொடை உள்ளம் !     கவிஞர் இரா .இரவி !
 

நூலகங்களில் பட்டிமன்றம் பேசுவதற்கு செல்லும்போதெல்லாம்  ஆய்விற்கு பயன்படுத்திய நூல்களையும் , இருவரும் எழுதிய புதிய நூல்களையும் நூலகங்களுக்கு  நன்கொடையாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டு உள்ளார்கள் .புதுக்கோட்டை நூலகத்திற்கு வழங்கினார்கள் .மதுரை காந்தி அருங்காட்சியக  நூலகத்திற்கு வழங்கினார்கள் .

நேற்று  (23.11.2014 )திருநகர் நூலகத்தில் 47 ஆம் ஆண்டு  தேசிய நூல்கள் வார விழா தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் நடந்தது .அந்த விழாவில் இலக்கிய இணையர்  திருநகர் நூலகர் திரு சக்திவேல் அவர்களிடம் 112 அரிய நூல்களை நன்கொடையாக வழங்கினார்கள்.

தொல்காப்பியம் தொடங்கி இனிய நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்தியின் மழையின் கையெழுத்து ,எனது நூல்களான புத்தகம் போற்றுதும், சுட்டும் விழி வரை இருந்தது .

திருநகர் நூலக வாசகர்கள் அனைவரும் இலக்கிய இணையரை  பாராட்டினார்கள். விழாவிற்கான ஏற்பாட்டை திருநகர் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் இனிய நண்பர் கவிஞர் செல்லா செய்து இருந்தார் .நூலகத்தின் வெளியே பெரிய மேடையிட்டு இருக்கைகள் வைத்து மிகச் சிறப்பாக நடந்தது .திருநகர் பகுதி வாழ் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

வாழுகின்ற தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத் தகுந்த தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! கவிஞர் இரா .இரவி !

வாழுகின்ற தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத்  தகுந்த தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் !       கவிஞர் இரா .இரவி !

வாழுகின்ற தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத்  தகுந்த தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள். தமிழ் இலக்கிய நூல்களை திருக்குறள் தொடங்கி குறிஞ்சிப்பாட்டு வரை 10 இலக்கிய நூல்கள் பற்றி கேள்வி பதில் முறையில் நூல் எழுதி அது பற்றி மதுரையில் உள்ள மணியம்மை தொடக்கப் பள்ளியில்    மாதம் ஒரு முறை உரை நிகழ்த்தி வருகிறார்கள்  .உரை கேட்க இலக்கிய ஆர்வலர்கள் நிறைய வருகின்றனர் . மிக எளிமையாகவும் இனிமையாகவும் தமிழ் இலக்கியங்களை அறிமுகம்  செய்து அற்புதமாக எழுதியும் பேசியும்  வருகிறார்கள் .தமிழ் இலக்கியங்களை  அனைத்தும் கற்ற பேராசான் .

இந்த நூல்களை பள்ளியின் தாளாளரும், புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவருமான திரு . பி .வரதராசன் அவர்கள் நூல்களை வெளியிட்டு ,விழா நடத்தி வருகிறார்கள் .நான் தொடர்ந்து இந்த விழாவிற்கு சென்று தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் கரங்களால் அறிமுக நூல்களை பெற்று வருகிறேன் .

வாழுகின்ற தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத்  தகுந்த தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்களுக்கு செம்மொழி நிறுவனமும் ,தமிழக அரசும்   விருது வழங்கி ஊக்கபடுத்த வேண்டும் .அவர் எழுதியுள்ள அரிய நூல்களை வெளியிட முன் வர வேண்டும் . பிற மாநிலங்களைப் போல  மொழி அறிஞரை போற்றி பாதுக்காக முன் வர வேண்டும் .

.

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது