வெள்ளி, 31 மே, 2013

" நச் "வரி கவிதைகள் ! நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

" நச் "வரி கவிதைகள் !

நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

ஸ்ரீ வில்லிபுத்தூர் .விலை ரூபாய் 30.

நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன்அவர்கள் சகலகலா வல்லவர் .கதை ,கவிதை ,கட்டுரை .துணுக்கு எழுதும் படைப்பாளி மட்டுமல்ல ," நச் "வரி கவிதைகளுக்குத்  தகுந்த ஓவியம் வரைந்த ஓவியர் .இந்த நூலை நூல் இலைப் பின்னல் மூலம் நூலாக்கியவரும் இவரே .நெசவாளி , உழைப்பாளி .இவரது படைப்பு வராத இதழ்களே  இல்லை என்று சொல்லும்  அளவிற்கு சகல இதழ்களிலும் எழுதி வரும் படைப்பாளி .தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஸ்ரீ வில்லிபுத்தூர்  கிளைச் செயராக இருந்து இலக்கியப் பணி  செய்து வருபவர் .வயதால் முதியவர்ராக இருந்தாலும் , ஓயாத உழைப்பால் என்றும் இளைஞர் .

.படைப்பாளியே ஓவியராக இருப்பதால் முதலில் ஓவியம் வரைந்தாரா ? முதலில்  கவிதை எழுதினாரா ? என வியக்கும் அளவிற்கு இரண்டும் மிகப்பொருத்தமாக உள்ளன .அவரே வரைந்து இருப்பதால் நூலிற்கு கூடுதல் பலமாக உள்ளது .

" நச் "வரி கவிதைகள் ! என்ற பெயரில் நச் , நச் என்ற கருத்துக்களை விதைக்கும் விதமாக கவிதைகள் எழுதி உள்ளார் .சமுதாயத்தின் நச்சுக் கருத்துக்களைச்  சாடும் விதமாக ,விழிப்புணர்வு வரும் விதமாக கவிதைகள் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .

நல்ல இலக்கிய ரசிகராக இருந்தால்தான் .நல்ல படைப்பாளியாக மிளிர முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன் .மதுரையில் நடக்கும் முக்கிய இலக்கிய விழாக்களுக்கு ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து மதுரை வந்து விழாவை ரசித்துச் செல்வார் .

அரசியல்வாதிகள் எல்லோரும் "விலைவாசியை குறைப்போம் ".என்று சொல்லி பதவிக்கு வருவார்கள் .வந்ததும் சொல்லியதை சுலபமாக மறப்பார்கள் .விலைவாசியால் ஏழைகளின் வாழ்வில் தொல்லை .

எல்லாம் இழந்தபின் மொட்டை 
ஆயினும் கவலை 
விழி பிதுங்கும் விலைவாசியால் !

சித்தர்கள் போல வாழ்வியல் தத்துவம் கூறும் கவிதைகளும் உள்ளன .

சாட்டையில்லாப் பம்பரம் 
சுழலும் வரை உலகு 
சாய்ந்தால் சவம் !

எல்லோருக்கும் குழந்தைப் பருவம் பொற்காலம் .அக்காலம் யாருக்கும் திரும்புவதில்லை .

எதிர்காலம் எப்படியோ ..
இப்பொழுது விளையாடு 
 பொம்மையுடன் !

மகிழுந்தில் செல்ல வேண்டிய நபர்கள் எண்ணிக்கையில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்வதை சாலையில் பார்க்கிறோம் .அது ஒரு நிலாக்காலம் ,நம் மனது கனாக் காணும் .

இரு சக்கர வாகனத்தில் 
ஒரு சேர நால்வர் 
பொருந்தாப் பயணம் !

படைப்பாளி பொதுவுடைமைவாதி என்பதால் மாட்டையும் பொதுவுடைமைவாதியாகப் பார்க்கிறார் .

வண்டி இழுக்கச் 
சண்டி செய்யும் மாடு 
உழைப்புச் சுரண்டலை எதிர்த்து ! 

ஆக்கிரமிப்பின் காரணமாக பல கண்மாய்கள் ,ஊருணிகள் ,குளங்கள் தமிழ்நாட்டில் காணமல் போன அவலம் குறித்து .

தாகம் தணித்த ஊருணி நீ 
பெருகின வீடாக 
இழந்தன தண்ணீரை !

நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன்அவர்கள் நெசவாளி என்பதால்  நெசவாளியின் வாழ்க்கையைப் பற்றியும் எழுதி உள்ளார் .

பட்டுச் சட்டை அணிந்த 
பறவை  அழகு 
பட்டுத்துணி நெய்த 
நெசவாளர் வாழ்க்கை அழகில்லை !

.மேலே உள்ள கவிதையை இப்படி மூன்று வரிகளில் ஹைக்கூ வடிவிலும் எழுதலாம் .

நெசவாளி 
வாழ்க்கை 
கந்தல் !

நூல் ஆசிரியர் ஹைக்கூ பற்றிய புரிதலுடன் மூன்று  வரிகளில் எழுதினால் இன்னும் சுவையாக இருக்கும் .
 காதலுக்கு கவிதை அழகு .கவிதைக்கு கற்பனை அழகு .

மீன்களைப் போல் இருந்த 
அவள் கண்களைக் 
கொத்த வந்த பறவை !

நூல் ஆசிரியர் வயது 70 கடந்த இளைஞர் .இளமை ததும்பும் அவரது கவிதைகள் மிக நன்று .

மழை மேகம் சூழ மயிலாடுது 
மான் விழி மங்கை நடைபயில 
மனம் கூத்தாடுது !

அழகியல் கவிதைகளில் நூலில் நிரம்ப உள்ளன .நூல் ஆசிரியர் நெசவாளி என்பதால் எட்டுக் கால் பூச்சியையும் நெசவாளியாகவேப் பார்க்கிறார்  .

கட்ட குட்ட பொண்ணுக்கு 
எட்டுக் கால் புச்சி ஒன்று 
பட்டுத் தறியில் சேலை நெய்யுது !

மாற்றுத் திறனாளிகள் மாண்புகள் உணர்த்தும் கவிதை நன்று .

ஊனம் ஒருபுறம் மட்டும் 
ஊக்கம் 
உடல் எங்கும் !

கணவன் மனைவி இருவருக்கும் அறிவுரை தரும் கவிதை ஒன்று .ஒவ்வொருவரும் கடைபிடித்தால் மண  நாட்டில் விலக்கு வராது 

நான்கு சுவருக்குள் 
தீப்பதை விட்டு 
நடுவீதியை  நாட வேண்டாம் !

தமிழக மீனவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் ஆறுதல் தரும் விதமாக,தன்னம்பிக்கை விதைக்கும் கவிதை மிக நன்று .

கடல் வளம் வற்றினும் 
வற்றவில்லை 
தன்னம்பிக்கை !

நாளிதழ் ஒன்றுக்கு வாராவாரம் புகைப்படத்திற்கு எழுதிய கவிதை எதுவும் பிரசுரம் ஆகவில்லை என்று வருத்ததுடன் பதிவு செய்த கவிதைகள் யாவும் மிக நன்று .
பதச்சோறாக ஒரே ஒரு கவிதை மட்டும் .

தன்னம்பிக்கையோடு படி 
அரசுவேலை உறுதி 
அய்பத்தைந்தாம் அகவையில் !

நூல் ஆசிரியர் எஸ் .எஸ். மணியம் அவர்களுக்கு பாராட்டுக்கள் .கை அடக்கப் பதிப்பாக வந்துள்ளது .சமுதாயத்தை உற்று நோக்கி கவிதைகளை வடித்துள்ளார் .சிந்திக்க வைக்கின்றார் .தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் . 

புதன், 29 மே, 2013

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !



ஹைக்கூ   ( சென்றியு  )  கவிஞர் இரா .இரவி !

மிருகத்தையும் 
மனிதனாக்கியது 
மழலையின் சிரிப்பு !

களத்துமேட்டில் குவித்த நெல் 
குறையவில்லை அப்படியே 
கிராமங்களில் !

தேவைப்பட்டது பணம் 
நடத்தினார் 
காதணி விழா !

ஒய்வுக்குமுன் 
மகள் திருமணம் 
அரசு ஊழியர் !

விமானம் ஓட்டினாலும் 
வீட்டில் சமையல் 
பெண்கள் !

சோழியன் குடுமி 
சும்மா ஆடியது 
காற்று !

வைகுண்டத்திற்கு வழி  சொன்னவர் 
மறந்தார் 
தன் வீட்டிற்கு வழி !

இன்றும் தொடர்கின்றது 
மன்னனின் சந்தேகம் 
கூந்தலின் மணம் இயற்கையா ?

மரம் இழந்த இலை 
சருகானது 
பெற்றோர் இழந்த குழந்தை ?

ஒன்றும் ஒன்றும் இரண்டு 
குடும்பம் ஒன்றாய் இருப்பது நன்று 
பிரிவினை பெரிய வினை !

வயதைக் குறைக்கும் 
வாழ்நாளை நீடிக்கும் 
இலக்கிய ஈடுபாடு !

அளவிற்கு மிஞ்சினால் 
அமுதமும் திகட்டும் 
திகட்டாத தமிழ் !


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

தவம் ! நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

தவம் !

நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !

viji.masi@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மக்கள் வெளியிடு ,49 உனிசு அலி சாகிப் தெரு ,எல்லீசு ந்சாலை ,சென்னை .2.
 makkalveliyeedu@yahoo.com

 திரு மே .து .ராசுகுமார் அவர்களின் பதிப்புரை ,தஞ்சை திரு .மா .ராசப்பா
அவர்களின் அணிந்துரை ,திரு ஆ .முருகரசன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு
தோரண வாயில்களாக  உள்ளன .16 முத்தான , சத்தான கட்டுரைகளின் தொகுப்பு நூல்
.நூல் ஆசிரியர் விஜிமா அவர்களின் என்னுரை மகாகவி பாரதியாரின்
மனதி லுறுதி வேண்டும் !
வாக்கினிலே யினிமை வேண்டும் !
என்ற வைர வரிகளுடன்  தொடங்கி உள்ளார்கள் .

நூல்  ஆசிரியர் விஜிமா அவர்களின் தவத்திற்கு உறுதுணையாக இருந்த மகன்கள்
இளங்கோ ,பாரதி ,திருஞானசம்பந்தன் ,மருமகள் ராதிகா ஆகியோருக்கும் ,என்
தவத்தில் தலையிடாத என் இனிய கணவருக்கும் நன்றி என்று எழுதி உள்ளார்கள்
.நூல் வெளி வந்த ஆண்டு 2006.அப்போது ஒரு மருமகள் மட்டும் இருந்ததால் அவர்
பெயர் மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள் .தற்போது மூன்று  மருமகள்கள் வந்து
விட்டதாக சொன்னார்கள் .தனது மகன்களுக்கு மிக நல்ல தமிழ்ப் பெயர்கள்
சூட்டி உள்ளது நூல் ஆசிரியரின் தமிழ்ப் பற்றை பறை சாற்றும் விதமாக உள்ளது
.பாராட்டுக்கள் .இப்பொதெல்லாம் ரமேஷ் ,சுரேஷ் ,ஷ்,ஷ் என்று பெயர்
சுட்டுவதே நாகரீகம் என்று கருதுகின்றனர்

தன்னம்பிக்கை நூல்கள் தன் முன்னேற்ற நூல்கள் நிறைய தற்போது வருகின்றன
.இந்த நூல்ஏழு ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட  தன்னம்பிக்கை நூல்.மனிதவள
ஆற்றலை மேம்படுத்த அறிவுரை கூறும் அற்புத நூல் .நூல் ஆசிரியருக்கு
வேண்டுகோள் விரைவில் உங்கள் நூல்கள் அனைத்தையும் மறுபதிப்பு செய்து
வெளியிடுங்கள் .

.பயனுள்ள பல கருத்துக்களின் பொக்கிசமாக உள்ளது .நூலில் உள்ள கருத்தக்கள்
அனித்தும் சிறப்பு என்றாலும் முத்தாய்ப்பாக உள்ள சில வரிகள் மட்டும்
உங்கள் பார்வைக்கு இதோ !

" மனிதன் ஒருவனால் மட்டுமே சிந்தித்துச் செயல் பட முடியும்
.சிந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனாலும் சாதிக்க இயலும் !சிந்திக்கும்
எல்லோராலும் சாதனை படைக்க முடியுமா என்ன ? 90%முடியும் !சிந்தனையை
ஒருமுகப்படுத்திச் செயல்பட்டால் சிந்தனை கை கூடும் .

இந்த ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனைச் செயல்பாடுதான் தவம் ஆகும் .நாமும்
நமது  சிந்தனைச் செயல்பாட்டிற்காக எண்ணங்களை  நிறைவேற்றுவதற்காக' தவம் '
இருக்க வேண்டும் .ஆம் ; தவம் மேற்கொள்ள வேண்டும் ."

உலகப் பொது மறையான திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டி உள்ளார்கள் .
 " இலட்சியத்தை அடிய வேண்டும் என்ற ஒரு வெறி அல்லது மனதுக்குள் ஒரு
அக்னிச் சுடர் இருக்க வேண்டும் ."
இந்த வரிகளை நாம் கடை  பிடித்து நடந்தால் வாழ்வில் வெற்றிப் பெறலாம்
.இளைய தலைமுறையினர் பலர் எந்தவித லட்சியமும் இன்றி ஏனோ தானோ என்று
விரக்தியுடன் வாழ்ந்து வருகிண்ட்னர் .அவர்கள் படிக்க வேண்டிய நூல் இது .
படித்தால் உங்களுக்குள் ஒரு மாற்றம் நிகழும் லட்சியம் பிறக்கும் .

வெளிநாடுகளில் பகுதி நேர வேலை பார்த்துக் கிடைக்கும் பணத்தில்   படித்து
சாதித்தது வெற்றிபெற்றவர்களின் விபரங்கள் நூலில் உள்ளது .நம்மை நாமே
மதிப்பீடு செய்து கொள்ளும் உத்தியை விளக்கி உள்ளார்கள் .கட்டுரையில்
சொல்லாத பொருளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்துப் பொருளிலும்
கருத்துக்கள் உள்ளன ..நூல் ஆசிரியர் விஜிமா அவர்கள் அறிவியல் புயல்
அப்துல் கலாம்  அவர்களை பல முறை சந்தித்து உரையாடி இருக்கிறர்கள் .கவிஞர்
வைரமுத்து அவர்களையும் சந்தித்து உரையாடி இருக்கிறர்கள் .பல்வேறு
நாடுகளில் வாழ்ந்து இருக்கிறார்கள் .நிறைய நூல்கள் ஆங்கிலம் ,தமிழ்
இரண்டு மொழிகளிலும் படித்து இருக்கிறார்கள் .ஆழ்ந்த அனுபவ  அறிவினைக்
கொண்டு மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்கள் .

சமுதாயத்திற்குப் பயன்படும் விதத்தில் நூல் எழுதி உள்ள்ளர்கள் .எண்ணிப்
பார்க்க வியப்பாக உள்ளது .தமிழக சட்டமன்றத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்த
அரசு வேலையை குழந்தைகள் நலனுக்காக விட்டுவிட்டு அயல் நாடுகள் சென்று
.மகன்களைப் படிக்க வைத்து பெரிய பணிகளில் அமரவைத்துவிட்டு
,குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு ,நேரம் ஒதுக்கி எழுதிக் கொண்டும்
,இலக்கியப் பணியிலும் ஆர்வம் காட்டி தொடர்ந்து நூல்கள் எழுதி வருவது
சாதனைதான் .அரசுப்பணியை விட்டதும் நன்மைதான் .அதிலேயே இருந்து இருந்தால்
இவ்வளவு நூல்கள் எழுதி இருக்க முடியாது என்பது என் கருத்து .

கட்டுரைகளுக்கான தலைப்பே கவித்துவமாக  உள்ளன .காரணம் நூல் ஆசிரியர்
முதலில் கவிஞர் பிறகுதான் எழுத்தாளார் .இந்நூலில் உள்ள தலைப்புகளை ஆய்வு
செய்து முனைவர் பட்டம் பெற்று விடலாம் .

தலைப்புகளைப் பாருங்கள் .
தவம் என்றால் ,இலட்சியத்தை நோக்கி ,நம்மை நாமே மதிப்பிடுதல் ,மனதின்
தேடலை அறிந்து ,உன்னை உணர்த்தி விடு ,திட்டம் தீட்டு ,முடியும் என்றே
முழங்கிடு ,சோதனைகளை எதிர்கொள் ,நடந்துகொண்டேயிரு ,வாழ்க்கையே ஒரு
கல்விதான் ,நற்பண்புகளை வளர்த்துக் கொள் ,தியானம் ,மனம் இருந்தால்
,தாழ்வு  மனப்பான்மையை அகற்றுக , கால நேரம் பார்த்து நடக்கணும் ,உனக்குள்
போராடு .
தலைப்புகளைப் படித்தாலே அதன் உள்ளடக்கம் உங்களுக்கும் விளங்கும் .

நூலில் ஒரு ராணுவ வீரர் ஒரு தாயையும் ,ஒரு சகோதரியையும் காப்பாற்றி தன
ஒரு கால் இழந்த உண்மை நிகழ்வு நெகிழ்ச்சி .தன்னம்பிக்கை தரும் மிக நல்ல
நூல் .இந்த நூல் படிக்கும் முன் இருந்த மனநிலையும் படித்து முடித்தப்பின்
உள்ள மனநிலையின்  மாற்றம்தான் நூலின் வெற்றி .இந்த நூல் பற்றி
சுருக்கமாகச்  சொல்வதென்றால், இந்த நூல் படிக்க என் தவம் செய்தேனோ !


--

படித்ததில் பிடித்தது !

படித்ததில் பிடித்தது ! 
இனிய நண்பர் மருத்துவர் கவிஞர் K.சரவணன் அவர்கள் கபிலன் வைரமுத்துவிற்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை  !

அன்பிற்கினிய திரு கபிலன் அவர்களுக்கு வணக்கம்!

பொன்னும், மணியும்,
 வைரமும், முத்தும் என
 நான்மணி நல்கிய நல் மாணிக்கமே!

பெற்றோரின் பெறுந்தவத்தால்
 அன்னையின் மணிவயிற்றில்
 முன்னூறு நாள் கலைபயின்றாய்!

இவ்வுலகம் ஆவல் கொள்ள
இப்புண்ணிய பூமியில் தவழ்ந்தாய்!

குழலின் நாதம்போல்
மகிழ்வாய் மழலை கொண்டாய்!

பாடும் பறவைகள்போல்
பாங்குடனே துள்ளித்திரிந்தாய்!

கண்டங்கள் கடந்து சென்று
கல்வியின் கரைகண்டாய்!

கலையும், தகவல் தொழில்நுட்பமும்
இரு கண்களெனக்கொண்டாய்!

கலையும், இலக்கியமும்
கலந்து விருந்து தந்தாய்!

உயிரின் உன்னதத்தை
 தன் உள்ளத்தில் உணர்ந்துகொண்ட
மருத்துவர் மங்கை நல்லாள்
மனதிற்கு இனியவனானாய்!

அன்னையும் தந்தையும்
காட்டிய நல் அன்பு வழியில்
மனதிற்கு இனியாளோடு
இல்லரத்தில் நல்லரம் கொண்டாய்!

இல்லரத்தின் நல்லரத்தால்
இனிய வாழ்வின் பெறும்பயனாய்
மெட்டூரி என்ன்னுமொரு
மொட்டொன்றை மலரச்செய்தாய்!

அன்னை தந்தையற்குப் பிள்ளையாய்

அன்பு மனைவிக்குக் காதலனாய்

செல்ல மகளுக்குத் தந்தையாய்

வாசகர் விறும்பும் நற்கவிஞநாய்

இன்றய இளைஞர்களின் முன்மாதிரியாய்

முப்பத்தோராண்டுகள்

முரையாய் கடந்து வந்தாய்!
முப்பத்து இரண்டாம் ஆண்டில்

முதலடி எடுத்து வைக்கும்

அன்பின் கபிலனே!

உனக்கென் அன்பு வாழ்த்துகள்!

அந்னையும் தந்தையும்

அன்புடன் உடனிருக்க

அன்பும் அறிவும்
 அழகென்று கொள்க!

இலக்கியமும் கலைகளும்
 இன்பமெனக்கொள்க!

உருதியும் ஊக்கமும்
உயர்வென்று சொல்க!
உண்மையும் நேர்மையும்
உனதென்று வெல்க!

எல்லா நலமும் வளமும்
எல்லையின்றி பெறுக!

ஈடில்லா இன்பநிலை
என்னாளும் பெறுக!

இன்றுபோலென்றும்
இன்புற்றிருப்பதற்கு
எல்லாம்வல்ல
இயற்கையை வணங்குகிறேன்!

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகளுடன்,

-- 

செவ்வாய், 28 மே, 2013

நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !

நம்மை மீட்டும் வீணை !

நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !

நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் ,சென்னை .

நம்மை மீட்டும் வீணை ! நூலின் தலைப்பே நம்மை மீட்டி விடுகிறது .சிந்திக்க வைக்கிறது .வீணையை நாம்தானே மீட்ட வேண்டும் .வீணை நம்மை எப்படி?  மீட்டும் .சிந்தித்தபோது .இந்த நூல் படித்தால் படித்த வாசகரும் ஹைக்கூ கவிதை எழுத வைத்து விடும் என்பதை உணர்த்துகின்றதோ!  என்று நினைத்தேன் .இதற்கான விடையை ஒரு ஹைக்கூ வாகவே வடித்துள்ளார் .

கையில் ஏந்தினால் 
நம்மை மீட்டும் வீணை
புத்தகம் !

புத்தகம் பற்றிய இவ்வளவு அருமையான விளக்கம் இதுவரை யாரும் சொல்லவில்லை .

.நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி அவர்கள் மரபுக்கவிதை , புதுக்கவிதை  , ஹைக்கூ கவிதை முப்பா வடிப்பதிலும்  வல்லவர் .ஏற்கெனவே நூல்கள் எழுதி பல பரிசுகளும் , பாராட்டுகளும் பெற்றவர் .ஓய்வு பெறும்  வயது வந்தபோதும் , ஓய்வின்றி தனியார் விடுதியில் மேலாளராக உழைத்து  கொண்டே இலக்கியப் பணியும் செய்து வரும் நல்லவர் .இவர் புறத் தோற்றம் கருப்பாக இருந்தாலும் ,அகம் மிக, மிக வெள்ளையானவர் .இனிய மனிதர் .தள்ளாத வயதிலும் தளராத தேனீ .சமுதாயத்தை உற்று நோக்கி நெஞ்சில் துணிவுடன் நேர்மைத் திறத்துடன் ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ளார் .

ஹைக்கூ கவிதைகளின் வீச்சை உணர்த்துவதாக நூல் உள்ளது .அட்டை முதல் அட்டை வரை அனைத்து ஹைக்கூ கவிதைகளும் பிடித்து இருந்தாலும் அணிந்துரையில் அனைத்து ஹைக்கூ கவிதைகளும் குறிப்பிட முடியாது என்ற காரணத்தால் மிகவும் பிடித்த சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

அரசியல்வாதிகள் மாறி மாறி இவர் அவரை ஊழல் என்பதும் ,அவர் இவரை ஊழல் என்பதும் தினசரி செய்திகள் .இதனை உற்று நோக்கி எழுதிய ஹைக்கூ ஒன்று .

திருடன் திருடன்  என்று 
தெருவெல்லாம் அலறல் 
திடுடனும் சேர்ந்து !

இந்த யுகத்தில் உலகத்தில் இதுவரை எங்கும் நடக்காத அளவிற்கு மிகப் பெரிய தமிழினப் படுகொலை இலங்கையில் நடந்தது.மனிதாபிமானத்துடன் கண்டிக்க வேண்டியவர்கள் கல் நெஞ்சத்தோடு இன்னும் கண்டிக்காமல் , தண்டிக்காமல் இருக்கிறார்கள் .அதனை உணர்த்தும் ஹைக்கூ .

ஈழத்தமிழர் நிலை கண்டு 
இதயம் துடிப்பதில்லை 
இருந்தால்தானே துடிக்க ....

இயற்கையைப் பாடுவதில் ஹைக்கூ வடிப்பதில் ஜப்பானிய கவிஞர்களுக்கு தமிழ்க் கவிஞர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறை சாற்றும் விதமாக உள்ள அழகியல் பாடும் அழகிய ஹைக்கூ .

வெள்ளிக் காசுகளை எடுக்காமல் 
விலகி விலகி ஓடுகிறாள் 
விசித்திர நிலவுப் பெண் !

அரசியல்வாதிகள் கோடி கோடியாக கொடி பிடித்து கொள்ளை அடிப்பார்கள் .ஊழல் வெளியே தெரிந்து கைது செய்ய காவல்துறை வரும் நேம் நெஞ்சு பிடித்து படுத்துக் கொள்ளும் நிகழ்வை கவனித்து வடித்த ஹைக்கூ .

நோயற்ற தலைவர் 
மருத்துவமனை படுக்கையில் 
முன் ஜாமீன் வாங்க !

அருவியை எல்லோரும் பார்த்து இருக்கிறோம் .நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்திஅருவியை பார்க்கும் பார்வை மிகவும் வித்தியாசமானது .

கின்னஸ் சாதனைதான் 
பல்லாயிரம் மீட்டர் பட்டுத்துணி 
மலையருவி !

மூட நம்பிக்கையைச் சாடும் விதமாக எள்ளல் சுவையுடன் வடித்த ஹைக்கூ ஒன்று மிக நன்று .

ஆண் பல்லி கத்தினால் 
பெண் பல்லி மகிழ்ச்சி 
மனிதனுக்கேன் மிரட்சி !

ஆற்றில் தண்ணீரை பன்னாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடித்து விற்று 
கோடிகள் சேர்க்கின்றனர் .ஆற்று மணலை உள்நாட்டு தாதாக்கள் கொள்ளை அடித்து விற்று கோடிகள் சேர்க்கின்றனர் .ஆறுகள் எல்லாம் கொள்ளை போய் காணாமல் போவதை கண்டு கொதித்து எழுதியுள்ள ஹைக்கூ .

காணாமல் போன நதிகளை 
கண்டு பிடித்தேன் 
வரை படத்தில் !

மூட நம்பிக்கை காரணமாக அட்சய திதி என்ற பெயரில் நடந்த பகல் கொள்ளைக்கு பலர் பலியானார்கள் .மூட நம்பிக்கைச் சாடி நெற்றிப் பொட்டில் அடித்தாற்ப் போன்ற ஹைக்கூ .

அட்சய திதி ராசியில் 
பகலில் அமோக விற்பனை 
இரவில் கடையில் கொள்ளை !

உலகப் பொதுமறையான திருக்குறளின் பெருமையை உணர்த்தும் விதமாக உள்ள ஹைக்கூ .

உதடுகள் ஒட்டாக் குறளை 
உச்சரித்தேன் 
ஒட்டியது உள்ளத்தில் !

அணிந்துரையில் அதனை ஹைக்கூவையும் எழுதி விடுவேனோ! என்ற அச்சத்தில் இத்துடன் முடிக்கிறேன் .மற்றவை வெள்ளித் திரையில்காண்க ! உள்ளே நூலில் காண்க .
நூலில் உள்ள ஹைக்கூ கவிதைகளை படியுங்கள் .மின்னலை உணருங்கள் .அதிர்வுகளை பாருங்கள் .மின்மினிகளை ரசியுங்கள் .துளிப்பாக்களை சுவையுங்கள் .வாமனப்பாவின் வீச்சை அறியுங்கள் .தேவையற்ற பகுதிகளை நீக்கிட சிலை உருவாகும் .தேவையற்ற சொற்களை நீக்கிட ஹைக்கூ உருவாகும் .சுண்டக் காய்ச்சிய பாலாக சுவைக்கும் .ஹைக்கூ அனுபவம் சொல்லால் விளக்க முடியாது .நீங்களே உணருங்கள் ..நூலைப் படித்து முடித்தவுடன் நீங்களும் ஹைக்கூ படையுங்கள் .



-- 

எழுத்து ஓர் கலை ! நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

 எழுத்து ஓர் கலை !

நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !   


நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

திருவரசு புத்தக நிலையம் 13.தீனதயாளு தெரு ,தியாகராயர் நகர் ,சென்னை .,17
விலை ரூபாய் 30

எழுத்தாளர் ஆக வேண்டும் .கவிஞர் ஆக வேண்டும் .படைப்பாளி ஆக வேண்டும் .என்ற எண்ணம்  உள்ள இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நல்ல நூல் .சராசரி வாசகர் கூட இந்த நூல் படித்தால் படைப்பாளி ஆகி விடுவார் .அந்த அளவிற்கு படைப்பின் ரகசியம் சொல்லித்தரும் நூல் .நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலா மணி அவர்கள் கவிதை ,கதை ,கட்டுரை ,நூல் விமர்சனம் எழுதிடும் சகலகலா ஆற்றல் மிக்கவர் என்பதால் ,படைப்பு உலகில் தான் சந்திந்த அனுபவங்களை வாசகர்களுக்கு பயன்படும் விதத்தில் பகிந்து உள்ளார்கள் .
.
எழுத்தாற்றல் கலை கைவரப் பெற்ற காரணத்தால் ,வளரும் படைப்பாளிகளுக்கு படைப்பின் சூத்திரத்தை சொல்லித்தரும் விதமாக கட்டுரைகள் வடித்துள்ளார்கள் .
" எழுது எழுது என்று என்னை எபோதும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இப்புத்தகம் சமர்ப்பணம் "
என்று அவர்களை எழுதிட ஊக்கப்படுத்தியவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வித்தியாசமாக காணிக்கை ஆக்கி உள்ளார்கள் .

ஹைக்கூ உலகில் அறிய பல கட்டுரைகள் வடித்து வரும் இனிய நண்பர் பேராசிரியர் முனைவர் இராம .குருநாதன் அவர்களின் அணிந்துரை ஆய்வுரையாக உள்ளது .அதிலிருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு .
.
"திருமதி விஜயலட்சுமி மாசிலா மணி அவர்கள் படைப்பாளர் ,கட்டுரையாளர் கவிஞர் இம்முத்திறக் கூறுகளும் நன்கு புலனாகுமாறு  தம் நூலைப்  படைத்தளித்துள்ளார் ."

நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலா மணி அவர்கள் என்னுரையில் அவரது அருமை மகன் திரு .திருஞானசம்பந்தன் அவர்கள் " IF YOU CAN TALK , YOU CAN WRITE "என்ற நூலை பரிசளித்ததான் காரணமாக இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் ஆர்வம் வந்து எழுதத் துவங்கினேன் .என்று குறிப்பிட்டுள்ளார்கள் .பரிசளித்த நூலின் பெயரே பல கட்டுரை செய்திகளைச் சொல்லும் விதமாக உள்ளது .

நூலில் 20 தலைப்புகளில் படைப்பாற்றல் பயிற்று விக்கும் விதமாக முத்திரைக் கட்டுரைகள் வடித்து உள்ளார்கள் . "எழுத்தும் ஒரு வித சமையல் கலையே " . முதல் கட்டுரையிலேயே மிக வித்தியாசமாக எழுத்தையும் சமையலையும் ஒப்பீடு செய்துள்ளார்கள் .
" எதோ சுவைபட எழுத வேண்டும் என்பதற்காக ,மனநலத்தைக் கெடுக்கக் கூடிய கதைகளை எழுதக் கூடாது ." இந்த கருத்தில் நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்களின் சமுதாய அக்கறை  புலப்படுகின்றது .எதையெல்லாம் எழுதலாம் என்று நூலில் பட்டியல் இட்டு விட்டு, அதோடு நின்று விடாமல் எதை எழுதக் கூடாது என்பதையும் அறிவுறுத்தியது சிறப்பு .மகாகவி பாரதியார் கவிதைகளை பொருத்தமான இடங்களில் மேற்கோள் காட்டி உள்ளார்கள் .கட்டுரை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக நூல் உள்ளது .

எழுத்தை இசையோடு ஒப்பிட்டு எழுத்துக்கும் ஏழு சுரங்கள் உண்டு என்கிறார் .எழுத்துக்கு ஏழு சுரங்களா ? என்று வியப்பில் ஆழ்த்துகிறார் .அவரே  ஏழு சுரங்கள் எவை என்று விளக்கி உள்ளார்கள் .

சிந்தனை ,செயல் ,தாகம் ,வேகம் ,விவேகம் ,விவாதம் ,வெறி .இந்த ஏழு  சுரங்களை எழுத்தாளர்களாகிய நாம் நம் எழுத்தில் தகுந்த கலவையில் சேர்த்தால் ,எத்தனை 
எத்தனையோ படைப்புகளை உருவாக்கலாம் ."தாகமும் வேகமும் எழுத்தில் சேரும்போது பேனா கூட அரேபியக் குதிரைபோல் பேப்பரில் ஓடும் ."இதில் உள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மை நானும் ஒரு படைப்பாளி என்பதால் நன்கு உணர்தேன் .பயனுள்ள தகவல்கள் .

படைப்பாளியின் எண்ணத்தில் ஒரு கருத்து உருவானால் உடன் குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் .பிறகு எழுதலாம் என்று நினைத்து , தள்ளிப் போட்டால் .மறந்துவிடும் .எழுத நினைத்ததை எழுத முடியாது .படைப்பாளிகளுக்கு வகுப்பு எடுப்பதுபோல மிக தெளிவாக பல  யுத்திகளை எழுதி உள்ளார்கள்.பாராட்டுக்கள் .

படைப்பாளிகள் எப்போதும் சிறிய கையேடும் எழுதுகோலும் வைத்தே இருப்பது நல்லது .எனக்கு அதிகாலை 4 மணிக்கு விழிப்பு வந்தது .அப்போது வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் கஷ்டம் நினைவிற்கு வந்தது .உடன் எழுந்து எழுத ஆரம்பித்து விட்டேன் .மிக நன்றாக வந்து .உடன்  இணையத்திலும் முக நூலிலும் பதிப்பித்தேன் .படித்த பலரும் பாரட்டினார்கள் .உண்மை சொல்வதென்றால் பல வருடங்களாக எழுதி வரும் எனக்கு பல யுத்திகளை கற்றுத் தந்தது இந்த நூல் . 

. நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலா மணி அவர்கள் எழுத்துலக வாழ்வில் சந்தித்த அனுபவங்களை விரிவாக எழுதி உள்ளார்கள் .எழுதுவதில் அச்சம் வேண்டாம் துணிந்து எழுது !  என்று ஊக்கப் படுத்தி உள்ளார்கள் .மேல் நாட்டு அறிஞர்கள் நூல்கள் பல படித்து எழுத்துக்கலை பற்றி அவர்கள் சொன்ன அறிய விளக்கங்களை அழகு தமிழில் வழங்கி உள்ளார்கள் .எழுதியவுடன் வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள் .தோல்வி வந்தால் இயல்பாக ஏற்றுக் கொள்ளுங்கள் .என்று ஜென் தத்துவங்கள் போல பல அறிவார்ந்த கருத்துக்கள் நூலில் உள்ளன .முயற்சி ,பயிற்சி இருந்தால் எழுத்தில் முத்திரைப் பதிக்கலாம் என்று பயிற்றுவித்துள்ளார்கள் .
தை பாதித்த ,கண்ணால் கண்ட விசயங்களை கற்பனை கலந்து கதை எழுதலாம். எண்ணியதை எண்ணியதோடு நின்று விடாமல் எழுத்து ஆக்கினால் சமுதாயத்திற்கு உதவும் .நமக்கும் பெயரும் ,புகழும் கிடைக்கும்   .

மகாகவி பாரதியார் பஞ்சிலி சபதம் முன்னுரையில் குறிப்பிட்டதை நூலில் எழுதி உள்ளார்கள் .
" எளிய பதங்களை எளிய நடை ,எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம் பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு "
பாரதி சொன்ன விளக்கம் இந்த நூலிற்கும் பொருந்தும் விதமாக எழுதி உள்ளார்கள் .

திங்கள், 27 மே, 2013

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ   ( சென்றியு )   கவிஞர் இரா .இரவி !

இனிய வரவேற்பு 
இரடிப்பு மகிழ்ச்சி 
கோடை மழை !

சக்தி உள்ளவ்ரை 
நகர்ந்துகொண்டே 
நிமிட முள் !

இன்றும் வாழ்கின்றனர் 
மலை முழுங்கி 
மகாதேவன்கள் !

நாய் விற்ற காசு 
குரைத்தது 
மனதில் !

அன்று " நானே கள்வன் "
மாண்டான் மன்னன் 
இன்று ?

ஆராய்ச்சி மணி 
அடித்த பசு 
அரண்மனை பிரியாணியில் !

முரசுக் கட்டிலில் 
தூங்கிய புலவன் 
முதுகை முறித்தனர் !

மக்களின் மறதி 
அரசியல்வாதிகளுக்கு வசதி 
புதுப்புது ஊழல் !

நாட்டு நடப்பு 
வறுமையிலும் செம்மை ஏழைகள் 
செழுமையிலும் சீரின்றி பணக்காரர்கள் !

காந்தியோடு முடிந்தது 
அரசியிலில் நேர்மை 
நேர்மையின்மை முதல் தகுதி !


சுட்டும் விழி ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

சுட்டும் விழி !
நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !

நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி !
மின்னல் கலைக்கூடம் 117.எல்டாம்ஸ் சாலை ,சென்னை .18 விலை ரூபாய் 40. செல் 9841436213.

மதிப்பிற்குரிய  நண்பர் , கவிஞர் இரா.இரவி அவர்கள் ,"ஹைகூ " உலகில்  தனக்கென ஒரு இடம் பெற்றிருக்கிறார். இயற்கையை  ரசிப்பதும் , காதலை வருணிப்பதும் தான் ஒரு கவிஞனின் வாடிக்கை என்பதைக்  கடந்து , கவிஞனும் , சமுதாய விழிப்புணர்வை  ஏற்படுத்த முடியும் என்ற நோக்கில் ,"சுட்டும் விழியைச் " சுழட்டிவிட்டிருக்கிறார்.

இவரது  சமுதாயப் பார்வை  நம்மைப்  பலவாறு சிந்திக்கவைக்கிறது.
எப்படி?
கொஞ்சம் பார்க்கலாம் வாங்க...

சமுதாய  விழிப்புணர்வை  ஏற்படுத்தத்  தன்னால் முடியும் என்று முழங்கி , அதை அவரது "சுட்டும் விழியில்" நிரூபித்திருக்கிறார்."நல்ல  கூட்டம் பித்தலாட்டப்  பயிற்சி சோதிடம்."
மனிதனின் முன்னேற்றமும் , அவன் வாழ்வும் அவன் உழைப்பில்தான் இருக்கிறதே தவிர , சோதிடம் பார்ப்பதிலா?
பித்தலாட்டத்தை  நம்புகிறாயே மனிதா? சிந்தியப்பா  சிந்தி! என்று சொல்லாமல் சொல்லுகிறார் ஆசிரியர்.
"பலனில்லை 
பெயர் மாற்றம் 
எண்ணம்  மாற்று."
எனும் கவிதை பெயர் மாற்றத்திலோ, இட மாற்றத்திலோ உன் உயர்வு இல்லை: உன் எண்ணம் மாறி உயர்ந்தால் உன் வாழ்வு உயரும் என்ற கருத்தைச் சொல்லுகிறது.
இன்றுள்ள  நகர்ப்புற அசுத்தங்களைக் கண்டு மனம் வாடும் கவிஞர், "சுத்தம் தானே சோறு போடும்: அசுத்தம் நோய்க்கு நுழைவாயில் அல்லவா? மனிதா இதைக் கொஞ்சம் யோசி!" என்கிறார்:
"சுத்தமே சுகம் 
அசுத்தமோ நோய் 
குப்பையில் நகரம்."
பசுமையான வயல்களும் , கழனிகளும் நமக்கு உணவளிக்கும்  அன்ன லட்சுமித் தெய்வங்கள்.அப்படிப்பட்டவைகள்  இன்று  அழிக்கப்பட்டு  அவ்விடங்களில் மாளிகைகளும்,தொழிற்சாலைகளும் பெருகிவருவது  அநியாயம் என்று பதறுகிறார்.
ஆசிரியரின் பதற்ற வரிகள்தான், " பன்னாட்டு நிறுவனங்களால் ,கொள்ளை போனது , பச்சை வயல்.என்பவை ஆகும்.
மேற்சொன்ன  ஆசிரியரின் கவிதை வரிகளில் இருந்து, அவரது' சமுதாய அக்கறை ' தெரிகிறது. ஒரு கவிஞன் என்பவன்  கற்பனயில் மிதப்பவன் மட்டுமல்ல ; அவன்  தான்  வாழும் சமுதாயத்தின் 'மாசுகளைக் , குறைகளை'
மக்களுக்குச் சுட்டிக் காண்பித்து , அவற்றைக் களைய ' கவிதை உருவில் ' கோடரியையும் கொடுக்க வல்லவன் என்பதை நம் கவிஞர் நிரூபிக்கிறார்.
எந்த ஒரு படைப்பாளிக்கும்  சமுதாயப்  பற்று வேண்டும் .கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு, சமுதாயத்தின் மீது அளவுகடந்த பற்றும் , பாசமும் இருக்கிறது என்பதற்கு இந்த நூலில் பல கவிதைகளை எடுத்து வைக்கலாம்.
தமிழ் மீது அளவற்ற காதல் கொண்ட நம் கவிஞர், தன்  காதலியின் பெயர் தமிழில் இருப்பதைப் பெருமையாகக் கூறுகிறார்:
"இனிது இனிது 
 தமிழில் இனிது 
 அவள்  பெயர்"
தமிழின் சீரிளமைத் திறம் வியந்து ' பாடுகிறார் :
"யுகங்கள் கடந்தும் 
இளமை  குன்றவில்லை 
தமிழ்."
இன்று  இளைஞர்களும் , இளம்பெண்களும்  அவசர அவசரமாகக்  காதல் என்ற பெயரில் ,கட்டுண்டு , காதல் திருமணம் செய்வது தடுக்கப்படவேண்டிய ஒன்று என்பதைச் சுட்டிக்கன்பிக்கும் கவிஞர்...
"பக்குவப்படாத காதல் 
அவசரத் திருமணம் 
விரைவில் மணவிலக்கு."
என்று  இன்றைய  'விவாகரத்து ' விடயங்களைச் சுட்டிக்காண்பிக்கிறார்.
இவ்விடத்தில் எனது கவிதை ஒன்றை நினைவு கூறுகிறேன் .
"இளமைக்  காதல் சிறுகதை:
 வயசுக் காதல் தொடர்கதை : 
 முதுமைக் காதல் கவிதை!"
பருவத்தே பயிர் செய்' என்பது போலவே பருவம் வந்து , மனம் பக்குவப்பட்டபின்னரே  திருமணம் செய்துகொள்ளவேண்டும்!

இப்படியாகக் கவிஞர் தனது " ஹை  கூ " நடையில்  மூன்று  வரிகளில், முப்பது வரிக் கட்டுரைச் செய்திகளை அடக்கி உள்ளார்.
சிந்தனைக்குப் பல கவிதைகள் உள்ளன....எடுத்துக்காட்டாக ஒன்று:
"சோகத்தில் உளி 
 பாராட்டு வாங்கினர் 
 சிலையோடு சிற்பி."
முத்தாய்ப் பாய் இவரது கவிதை பற்றி எனது சிறப்பு விளக்கம்:
" கிடைக்கவில்லை 
 எங்கு  தேடியும் 
 போதி மரம்"
என்ற கவிதைப் படித்தபோது , நான்  மதுரை உள்நாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனை முடித்து , விமானத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தேன். கவிதைப் படித்ததும் , கவி நண்பர் இரா.இரவி அவர்களை கைபேசியில் அழைத்து, " இப்போது போதி மரம் என் கையில் !" என்று கூறினேன்.
வாசகருக்கும் , ஆசிரியருக்கும்  இதன் முழு அர்த்தமும் புரியும் என நினைக்கிறேன் .......அந்த அளவிற்கு , "சுட்டும் விழி " எனக்குள் "ஞானம் "  புகுத்தியது  என்பதுதான் உண்மை!
ஹைகூ  கவிஞரை  வாழ்த்துகிறேன்.

மேலும் பல அரிய  கருத்துக்கள் கொண்ட நூல்களை எழுதும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!
.

-- 

கவிதை பாட ஆசை ! நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

கவிதை பாட ஆசை !

நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !   
viji.masi@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

விஜயா பப்ளிகேசன் .தென்றல் .100.அன்னை தெரசா நகர் ,மடிப்பாக்கம் ,சென்னை .91. விலை ரூபாய் 12.

நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்கள் "என்னைக் கவிதை எழுதத் தூண்டிய மடிப்பாக்கம் பாரதி இயக்கத்திற்கு " என்று எழுதி நூலை காணிக்கையாக்கி உள்ளார்கள் .சொற்கள் நடந்தால் வசனம் .சொற்கள் நடனமாடினால் கவிதை .இந்த நூலில் சொற்கள் களி  நடனம் புரிந்துள்ளன .உள்ளத்தில் உள்ளது கவிதை .உண்மையை உரைப்பது கவிதை .இயற்கையாகப் பொங்கி வருவது கவிதை .படித்ததும் மனதில் பதிவது கவிதை .இப்படி கவிதைக்கு பல்வேறு விளக்கங்கள்  எழுதிக் கொண்டே போகலாம் .இந்த நூலில் உள்ள கவிதைகள் கவிதைக்கான எல்லா விளக்கங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது .நல்ல கவிதை நூலை இவ்வாளவு ஆண்டுகளாக வாசிக்க விலையே என்று வருத்தப்பட்டேன் .இந்நூல் பதிப்பித்த ஆண்டு 1999.இன்றும் பொருந்துவதாக கவிதைகள் உள்ளது .அதுதான் நூல் ஆசிரியர் வெற்றி .

மரபுக் கவிஞர் ஆலந்தூர் கோ .மோகனரங்கன் ,புலவர் திலகம் சி .வித்யாசாகரம் இருவரின் அணிந்துரையும் அழகுரை .
இந்நூலில் உள்ள அனைத்துக் கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் , பதச்சோறாக சில கவிதைகள் மட்டும் உங்கள் பார்வைக்கு .

கவிதை பாட ஆசை !
நான் கவிதை பாட வேண்டும் !
நான் கவிஞனாக   வேண்டும் !
எதுகையும் மோனையும் தெரியுமா ?
தெரியாது .
இலக்கணம் பயிலாதவர் பாட்டெழுதுவதா ?
எதுகையும் மோனையும் 
எதுவென்று  தெரிந்துதான் 
எழுதுகோலை எடுக்க வேண்டுமெனில் 
என் எண்ணங்கள் -
காட்டாற்று வெள்ளமாய்க் 
கரைபுரண்டு ஓடிவரும் கருத்துக்கள் 
கரை போடா முடியாது !
காணாமல் பொய் விடுமே !

இலக்கணம் என்ற பூட்டுப்  போட்டுப் பூட்டிக் கொள்ளாமல் மிகவும் சுதந்திரமாக கவிதை வடித்துள்ளார்கள் .மனதில் பட்டத்தை கவிதை ஆக்கி உள்ளேன் என்று முதல் கவிதையிலேயே முரசு கொட்டி உள்ளார்கள் .
.
இயற்கை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு கவிதை எழுதும் ஆற்றல் மிக இயல்பாக வசப்படும் .நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணிஅவர்கள் இயற்கையின் ரசிகை என்பதால் ரசித்து கவிதை எழுதி உள்ளார்கள் .

கொட்டிக் கிடக்கும் 
பவள மல்லி பார்த்தேன் !
பாரிஜாதமலரே ! பாரிஜாதமலரே !
பவளக் காம்போடு 
பழுப்பு வெண்மையில் 
பச்சை இலைக் கொம்பு நுனியில் 
பார்ப்பவர் உள்ளம் கொள்கிறாயே !
உன்னைப்  படைத்தவர் யார் ?

இந்தக் கவிதை படிக்கும் வாசகர்களுக்கு மனத்திரையில் மலர் , இலை, இயற்கை காட்சியாக விரியும் என்பது  உறுதி .

சின்னச் சின்ன மின்னல் போல சின்னச் சின்ன துளிப்பாக்கள் சிந்திக்க வைக்கின்றன .வாழ்வியல் சூத்திரம் சொல்லித் தருகின்றன .

வேலை செய் !

வெற்றி வேண்டுமெனில் 
வேலை செய் !
செல்வம் வேண்டுமெனில் 
செயல் தொடங்கு !
புகழ் வேண்டுமெனில் 
புண்ணியம் செய் !

அறிவு !

தோண்டத் தோண்ட கிணற்றில் தண்ணீர் !
படிக்கப் படிக்க உனக்குள் பன்னீர் - அறிவுப்பன்னீர் !

படிப்பின் அவசியத்தை மிக எளிமையாகவும், இனிமையாகவும் சொற்ச்சிக்கனத்துடன் உணர்த்தி உள்ளார்கள் .

தற்போது நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்கள் கவிதை ,கதை ,கட்டுரை ,விமர்சனம் எழுதும் 
பன்முக ஆற்றல் மிக்கவராக இருந்தபோதிலும் .முதலில் எழுதிய கவிதைதான் என்பதால் இந்நூலில் தனி முத்திரை பதித்து உள்ளார்கள் .ஹைக்கூ கவிதைகளும் உள்ளன .அதில் ஒன்று.

நீந்தச் சென்றவார்கள் 
மூழ்கி  விட்டார்கள் 
மதுப்பழக்கம் !

டாஸ்மாக் கடை  சென்று சும்மா பீர் மட்டும் தான் என்று ஆரம்பித்து பிராந்தியில் மூழ்கும் இன்றைய   இளைய தலைமுறை கவனத்தில் கொள்ள வேண்டிய ஹைக்கூ இது .

கவிதை காணாமல் போகிறது !
காலைப் பொழுது 
கவிதைப் பிறக்கும் பொழுது 
கவிதை காட்டாற்று வெள்ளமாய்க் 
கரை புரண்டு ஓடி வந்து நெஞ்சில் மோதுகிறது !
காகிதம் எடுத்துப் பேனா பிடித்து 
வெள்ளத்தை வெள்ளைத்தாளில் 
தாவிப் பிடித்து அடக்க நினைக்கையில் 
காபி ரெடியா ?குரல் ஒழிக்க 
சாவி கொடுத்த பொம்மையாய் 
கால்கள் ச்மையலறை நோக்கக் 
கைகள் காபி கலக்க 
கரை புரண்டு வந்த கவிதை 
காணாமல் போயிற்று !

இலக்கிய  நண்பர்களே உங்கள் மனைவிக்கு கவிதை எழுதும் ஆற்றல் இருந்து ,காலையில் கவிதை எழுத அமர்ந்தால் ,ஆணாதிக்க சிந்தனை விடுத்து நாமே காபி கலந்து கொண்டால் .தமிழுக்கு நல்ல கவிதை கிடைக்கும் .பெண்ணுரிமையை மிக மென்மையாய் கவிதையில் உணர்த்து உள்ளார்கள் .பாராட்டுக்கள் .நட்சத்திர  விடுதியில் சமையல் கலைஞராக  இருப்பார் .ஆனால் தன்  வீட்டில் சமையல்  அறைக்குள் நுழையவே மாட்டார் .

ஆண்களே ஆணாதிக்கம் விட்டு 
அனுசரனைக்கு வாருங்கள் .
அறிவிலோங்கிக் சமமென்றால் 
ஆண்  ஒரு  நாளும் பெண் ஒரு  நாளும் 
சமைத்தால் தவறில்லையே  !
ஆண்மகனே உன்னுருவில் 
பெண்மகள் பாதியென்றால் 
காலையில் நீ காபி போடு !
கவிதைபாடத் துடிக்கும் 
கண்மணிக்கு கைக்குதவு !

ஆண் ,பெண் சமம் என்று மேடையில்  பேசி,இதழ்களில்  எழுதும் முற்போக்குவாதிகள் கூட வீட்டில் மனைவிக்கு  சமையலறையில் உதவுவதே இல்லை என்பதே கசப்பான உண்மை .நானும் இதில் அடக்கம் .ஆணாதிக்க சிந்தனையை அகற்றி .மனைவிக்கு உதவுங்கள் என்று புத்திப் புகட்டும் விதமாக கவிதை உள்ளது .இது தான் பெண்ணியக் கவிதை .

கருப்பனைக் கை தூக்கி விடுங்க !

கருப்பனைக் கை தூக்கி விடுங்க 
கவிதை வானில் அவனை 
நிரந்தர நிலாவாக்கவிட்டாலும் 
நட்சத்திர அந்தஸ்தாவது கொடுங்க !
மின்னி விட்டுப் போகட்டும் .!

எனக்கு இந்தக் கவிதை படித்ததும் .ஒருமுறை கவியரசு கண்ணதாசன் அவர் கவிதையை ஒரு மாணவனை படிக்க வைக்கிறார் யாரும் கை தட்ட வில்லை .மாணவன் கவிதையை கவியரசு கண்ணதாசன் படிக்கிறார் பலத்த கைதட்டல் .நடந்த உண்மையை சொல்லி விட்டு படைப்பாளி யார் ? என்று பார்த்து ரசிப்பதை விடுத்தது படைப்பை ரசியுங்கள் என்று உணர்த்தினார் .கருப்பனுக்காக குரல் கொடுத்த நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்களுக்கு பாராட்டுக்கள் .தொடர்ந்து நீங்கள் கவிதைத் துறையில் ஆர்வம் செலுத்துங்கள் .விரைவில் ஹைக்கூ நூல் ஒன்று வெளியிட வாழ்த்துக்கள் .


-- 

.
-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...