ஒரு ஆரம்பம் (க )விதையாய் .. நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ .நி .அரவிந்தன். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

ஒரு ஆரம்பம்  (க )விதையாய் ..

நூல் ஆசிரியர் கவிஞர்  ஸ்ரீ .நி .அரவிந்தன்.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி 

விலை ரூபாய் 35 செல் 9025451594

.கலைமாமணி பேரா .கு .ஞாசம்பந்தன் அவர்களின் வாழ்த்துரை ,உமா மகேஸ்வரி அவர்களின் வாழ்த்துரை,  நூல் ஆசிரியர் ஸ்ரீ .நி .அரவிந்தன் அம்மா ஸ்ரீ .நாகஜோதி மடல் ,நூல் ஆசிரியர் ஸ்ரீ .நி .அரவிந்தன் பயிலும் சாய்ராம் பதின்ம மேல் நிலைப் பள்ளி தமிழ்த்துறைத் தலைவர் ப .ரெங்கராஜ் அவர்களின் அணிந்துரை யாவும் நூலிற்கு தோரணமாக உள்ளன .
மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவரின் முதல் முயற்சி .இளம் கவிஞரின் இனிய படைப்பாக  வந்துள்ளது .ஒரு ஆரம்பம்  (க )விதையாய் மலர்ந்துள்ளது .தொடக்கம் மிக நன்றாக உள்ளது .

பங்கு பெறு  ! பணிவாய் இரு !
பருத்தியாய் வெடி ! பகையை ஒழி !
பழமை நினை ! பழகு நல் வினை !
பழம் விழுமென நினைக்காதே !
பறிக்க மரத்திலேறு !
படிப்படியாய் முன்னேறு !
பகலில் 
பனி இரவில் கூட போராடு !
பரிசாகப் பட்டம் வரும் !
பெரிகாரம் செய்யாதே !
பணியைச் செய் !

பட்டறிவு மிக்க முதியவர்போல சிந்தித்து வாழ்வியல் அறிவுரை போல பள்ளி மாணவன் வழங்கியது சிறப்பு .சோம்பேறியாக இருக்காதே .சுறுசுறுப்பாக இரு என்று உணர்த்துகின்றார் .பாராட்டுக்கள் .

உலகில் ஒப்பற்ற உறவான அம்மா பற்றி கவிதை எழுதாமல் இருக்க முடியாது .இந்த நூல் வெளிவர உதவிய அம்மாவிற்கு ஒரு அழகிய கவிதை வடித்துள்ளார் .
தொப்புள் கொடி உறவு !
தாயே  நீ 
பாசத்தின் ஊற்று 
உன் அன்பிற்கும் 
உண்டோ மாற்று 
என் வாழ்வில் நீ 
வகிக்கும் பங்கு 
ஈடாகுமோ வைரக்கங்கு 
என் மீது காட்டுகிராய் கனிவு 
ஊட்டத்துடன் ஊற்றுகிறாய் நிறைவு 
என் வெற்றியில் நீ 
காணும் இன்பம் 
நீ இருக்க 
எனக்கில்லை துன்பம் !

இயக்குனர் டி .ராஜேந்தர் பாணியில் இறுதி எழுத்து ஒன்றி வரும் இயைபு ஓசை நயத்துடன் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .எழுதியுள்ள கவிதை நன்று .  "விளையும் பயிர் முளையிலேயே தெரியும் " என்ற பொன்மொழிக்கு ஏற்ப இந்த இளம் கவி வருங்காலத்தில் பெரும் கவியாக வருவார் என்ற நம்பிக்கை தருவதாக உள்ளன கவிதைகள்.

 .பாதை !
இயற்கையை ரசி !
உகந்ததைப்  புசி !
உண்மையை சுவாசி !
நல்லதை யோசி !
வளர்த்திடு அறிவுப் பசி 
பார்க்காதே ராசி !
வாழ்க்கையை நேசி !
செல்ல வேண்டாம் காசி !
இறைவன் அளிப்பார் ஆசி !

கடவுளை வணங்க காசிக்குப் போக வேண்டாம் வாழ்கையை செம்மையாக வாழ்ந்தாலே போதும் என்கிறார் .மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவனுக்கு இவ்வளுவு அறிவு முதிற்ச்சியா ? எண்ணிப் பார்க்க வியப்பாக உள்ளது .நல்ல சிந்தனை வளம் உள்ளது .

இன்றைக்கு ஆசிரியர் மாணவர்கள் உறவு சீராக இல்லை என்பதை தினந்தோறும் செய்திகள் பதிவு  செய்து வருகின்றன .ஆனால் இந்த நூல் ஆசிரியர் ஒரு மாணவர் அவர் ஆசிரியர்கள் பற்றி மிக உயர்வாக எழுதியுள்ள கவிதை படிக்க மனம் ஆறுதலாக உள்ளது .

ஆசிரியர்கள் !
மரத்திற்கு வேர்ப் போல 
எங்களைத்தாங்குகிறீர்கள் 
ஒளி தரும் மெழுகைப் போல 
எங்கள்  உயர்வுக்காக உருகுகிறீர்கள் 
கடல் போல அறிவு ! வானம் போல எண்ணம் !
காக்கைப் போல ஒற்றுமை !
பூ மாதா போல பொறுமை !
உடைய நீங்கள் நினைத்திருந்தால் 
என்றோ உலகை வசப்படுத்தியிருக்கலாம் !
அதைச் செய்யாமல் மாணவர்களை 
வாழ்வில் அடைய வைக்கிறீர்கள்  வெற்றி !
இது எங்கள் வெற்றி அல்ல !
உங்களின் வெற்றி !
உங்களிடம் பட்ட கடன் பல கோடி !
அடைக்க ஈடாகாது பல மாடி !
உங்கள் மீதுள்ள அன்பால் நாடி 
இதயத்தில் உங்களை வடித்து 
தினமும் செய்கிறேன் கோடி ....

இந்த நூல் ஆசிரியர் போலவே ஒவ்வொரு மாணவனும் ஆசிரியர்களை மதித்து நடந்தால் ஆசிரியர் மாணவர் உறவு சீராகும் ,மேம்படும் .

சோகத்தில் வடிக்கும் கண்ணீர் பற்றிய விளக்கம் மிக நன்று .

கண்ணீர்  காவியம் !
கரு விழி அணையை உடைத்து 
இமைகளில் ஊற்றெடுத்து 
எழுச்சி , உணர்ச்சி 
இன்பம் , துன்பம் 
எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு 
பாய்வதுதான் கண்ணீர் !

நூல் ஆசிரியர் ஸ்ரீ .நி .அரவிந்தன் அவர்களிடம் கவிதை எழுதும் ஆற்றல் உள்ளது .இரைக்கும் கிணறுதான் தண்ணீர் ஊரும் .தொடர்ந்து எழுத , எழுத கதைகள் வரும் .கவிதைகள் வடித்து தொடர்ந்து நூல் வெளியிட வாழ்த்துக்கள் .இந்த இளம் கவியை எனக்கு தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில் அறிமுகம் செய்த கவிஞர் விஸ்வநாதன் அவர்களுக்கு நன்றி 
 

-- 


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்