வெள்ளி, 29 ஜூன், 2012

என்னவென்பது அவளை என்னவளை ! கவிஞர் இரா .இரவி

என்னவென்பது அவளை என்னவளை !   கவிஞர் இரா .இரவி

கருப்பு அழகி என்பதா ?
கண்
அழகி என்பதா ?

புருவ
அழகி என்பதா ?
பருவ
அழகி என்பதா ?

காது
அழகி என்பதா ?
மூக்கு 
அழகி என்பதா ?

சிகை
அழகி என்பதா ?
சிரிப்பு
அழகி என்பதா ?

இதழ்
அழகி என்பதா ?
இடுப்பு
அழகி என்பதா ?

கை
அழகி என்பதா ?
கால்
அழகி என்பதா ?

சொல் அழகி என்பதா ?
சுவை
அழகி என்பதா ?

நடை
அழகி என்பதா ?
உடை அழகி என்பதா ?

உடல் அழகி
என்பதா ?
டல் அழகி என்பதா ?

கூர்மதி 
அழகி என்பதா ?
கூடல் அழகி என்பதா ?

பெயர் அழகி என்பதா ?
என்னவென்பது அவளை ! என்னவளை !

பேரழகி என்பதே பொருத்தம் !
பிரபஞ்ச அழகியும் தோற்பாள் இவளிடம் !--

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ            கவிஞர் இரா .இரவி

முட்டாள்களின்
மூடச்செயல்
தற்கொலை !

தன்னம்பிக்கையற்றவர்களின்
தரமற்ற செயல்
தற்கொலை !

தாழ்வு மனப்பான்மையின்
வெளிப்பாடு
தற்கொலை !

கோழைகளின்
கோழைத்தனம்
தற்கொலை !

பகுத்தறிவு மனிதனுக்கு
அழகற்ற செயல்
தற்கொலை !

அவலம் கேவலம்
செயற்கை மரணம்
தற்கொலை !

தீர்வு அல்ல
தீராத அவச்சொல்
தற்கொலை !

மனச்சிதைவால்
உயிர்ச்சிதைவு
தற்கொலை !

முடிவு அல்ல தொடக்கம்
உறவுகளின் துக்கம்
தற்கொலை !

முடிவல்ல ஆரம்பம்
பெற்றோரின் துன்பம்
தற்கொலை !

மடத்தனத்தின் உச்சம்
உயிர் போவதே மிச்சம்
தற்கொலை !

வாழ்க்கை ஒருமுறைதான்
வீணடிப்பது முறையோ ?
தற்கொலை !

உங்களின் செயலால்
உறவுகளுக்கு இன்னல்
தற்கொலை !

தலைமுறைக்கே அவமானம்
காற்றில் பறக்கும் மானம்
தற்கொலை !

ஒரே பிறப்பு உண்மை
மறு பிறப்பு பொய்
தற்கொலை ?

கோடிகள் கொடுத்தாலும்
மீட்க முடியாது உயிர்
தற்கொலை ?

உன்னால் உருவானதல்ல உன்னுயிர்
உனக்கேது உரிமை
தற்கொலை ?

சாதிக்கும் மாற்றுத்திறனாளிகள்
உயிர் மாய்க்கும் குறையற்றவர்கள்
தற்கொலை ?

ஒழியட்டும் ஒழியட்டும்
உலகை விட்டு
ஒழியட்டும்
தற்கொலை !

முற்றுப்புள்ளி வைத்திடுவோம்
முடிவு கட்டுவோம்
தற்கொலைக்கு !

வாழட்டும் வாழட்டும் உயிர்கள்
இயற்கையாக வரட்டும்
மரணம்
வேண்டாம்
வேண்டாம் தற்கொலை .


 

வியாழன், 28 ஜூன், 2012

மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா

மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா

மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா

மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா

மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா

மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா

மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா

மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா

மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா

மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா

மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா

மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா

மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா

மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா

மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா

மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா
மதுரை மணியம்மை தொடக்கப் பள்ளியில் நடந்து வரும் ,தாய் தனிப் பயிற்சி வகுப்பில் பயின்று 10 ஆம் வகுப்பு ,11 ஆம் வகுப்புதேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு முத்தமிழ் அறக்கட்டளை ,நிலா சேவை மைய  அறக்கட்டளை சார்பாக பாராட்டு விழா நடைப் பெற்றது .பாராட்டி விருது வழங்கப் பட்டது .கவிஞர் இரா .இரவி தனது ஹைக்கூ ஆற்றுப்படை நூலை பரிசாக வழங்கி சிறப்புரை ஆற்றினார் .மணியம்மை தொடக்கப் பள்ளியின் தாளாளர் பி .வரதராசன் தலைமை வகித்தார் .முத்தமிழ் அறக்கட்டளை திருச்சி சந்தர்  முன்னிலை வகித்தார் .நிலா சேவை மைய  அறக்கட்டளை இரா .கணேசன் வரவேற்றார் . தாய் தனி பயிற்சி நிர்வாகி மோகன கண்ணன் நன்றி கூறினார் .பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ               கவிஞர் இரா .இரவி

அணைக்க முடியவில்லை
குப்பைகளின் தீ
அணு உலை தீ ?

பல கோடி ஊழல்
பிணையில் வெளியே
ரொட்டி திருடன் சிறையில் !

துன்பத்தால் அழுதவனுக்கு
சிரித்து ஆறுதல்  சொன்னது
மலர் !

மனம்
அறம்
மரம் !

இன்றும் உள்ள பாத்திரங்கள்
சகுனி கூனி
அரசியல் !--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com

www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!


திங்கள், 25 ஜூன், 2012

குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள் ! நாள் ஒரு சிந்தனை :வாழ்வியல் ! வா .செ.குழந்தைசாமி ! தொகுப்பு பேரா .இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள் !

நாள் ஒரு சிந்தனை :வாழ்வியல் !

வா .செ.குழந்தைசாமி !

தொகுப்பு பேரா .இரா .மோகன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
  

நூலின் தொகுப்பு ஆசிரியர் தமிழ்த்தேனீ  பேரா .இரா .மோகன்அவர்கள் தமிழ்த்தேனீ  என்ற படத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் என்பதை மெய்ப்பிக்கும் நூல் இது . தமிழறிஞர் வா .செ.குழந்தைசாமி அவர்கள், குலோத்துங்கன் என்ற புனைப்பெயரில் கவிதை படைத்தது வரும் சிறந்த கவிஞர்.பன்முக ஆற்றலாளர் .அவரது படைப்புகளிலிருந்து தேனீ மலர்களிலிருந்து தேன் எடுப்பது போல் எடுத்து ,தொகுத்து வழங்கி  உள்ளார்கள் .       குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள் -அறிவுப்பசி போக்கும் கதிர் -தானியமாகவும் உள்ளது .அறியாமை இருள் போக்கும் ஒளிக்கதிராகவும் உள்ளது .

தமிழறிஞர் தமிண்ணல் அவர்களின் அணிந்துரை நூலிற்கு அணி சேர்ப்பதாக உள்ளது .  தமிழறிஞர் வா .செ.குழந்தைசாமி அவர்களின் படைப்புகளான - உள்ளத்தில் ணியுளர் உயர்வர் , குலோத்துங்கன்கவிதைகள் ,மானுட யாத்திரை  3 பாகங்கள் ஆகியவை .இயந்திர மயமான இன்றைய உலகில் வாசிக்கும் பழக்கம் வழக்கொழிந்து தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் பெருகி வரும் காலத்தில் அய்ந்து நூல்களும் படிக்க நேரமும் ,வாய்ப்பும் இல்லாதவர்கள் இந்த ஒரு நூலைப் படித்தால் போதும் . தமிழறிஞர் வா .செ.குழந்தைசாமி அவர்களின் படைப்பாற்றலை குன்றத்து விளக்கென ஒளிர்ந்திடும் வண்ணம் மிகச் சிறப்பாக தொகுத்து உள்ளார் . தொகுப்புஆசிரியர் பேரா .இரா .மோகன்  அவர்கள் .
   

இந்த நூலில்ஒரு வரி கூட தேவையற்ற வரி இல்லை ..அனைத்தும் வைர வரிகள் .நூல் விமர்சனத்தில் எல்லா வரிகளையும் எழுதி விட முடியாது .எனக்குப் பிடித்த சில வரிகளை உங்கள் ரசனைக்கு பதச் சோறாகக் காண்க . இந்த வரிகளை படிப்பதோடு நின்று விடாமல் வாழ்வில் கடைப் பிடிக்கத் தொடங்கினால் வாழ்வு வளம் பெறும் . இன்ப ஒளி வீசும் .துன்ப இருள் நீங்கும் . 
 
ஆசையே அழிவுக்கு காரணம் என்றார் புத்தர்.அறிஞர் 
வா .செ.கு. அவர்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார் .

ஆசை எனும் பசி
ஆசை போல் பசி
யொன்றில்லை .

பசி என்ப
து வாழ்க்கை முழுவதும் தொடரும் .அது போலவே பலருக்கும் ஆசையும் தொடர்கின்றது என்பதை நன்கு உணர்த்துகின்றார் .

தாழ்ந்த இனம் உயர்ந்த மொழி சமைத்ததில்லை !
தானாக எம்மொழியும் வளர்ந்ததில்லை  !

இந்த வரிகளைப் படித்ததும் தமிழர்கள் தமிழ் மொழியை வளர்க்கா விட்டாலும் ,சிதைக்காமல் இருந்தால் சரி என்று எண்ணத் தோன்றியது .

அச்சம் என்பது மடமையடா !
என்ற கவி அரசு கண்ணதாசன் வைர வரிகளை வலி மொழிவது போல் உள்ள வைர வரிகள் .

 அச்சம்நின் று
வும் நெஞ்சில்
ஆளுமை செழித்தல் இல்லை .

நிமிர்ந்து நின்று
முயல்வது மனிதம் !

ஆறிலும்  சாவு நூறிலும் சாவு  கேள்விப்பட்டு இருக்கிறோம் . எதிர்முக சிந்தனையை நேர்முக சிந்தனையாக சிந்தித்து உள்ளார் வா . செ.கு .
ஆறிலும் கல்வி ,
நூறிலும் கல்வி
இன்றைய பணி
இன்றைய கருவி !
இன்றைய பணியை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும் .இன்றைய பணியை நேற்றைய கருவி கொண்டு செய்யும் மக்களின் நாளைய வாழ்வு நலியும் .

அறிவியல் முன்னேற்றத்திற்கு வலி மொழியும் வைர வரிகள் .  


மூடரால் சமுதாயம் நைந்தது !

தான் கண்ட பாதை தான்
சரியென்ற
மூடரால்
சமுதாயம் நைந்த தம்மா !

மானுடத்தின் ஏணி !

தரமுடையோர் தாழ்வதில்லை
நிமிர்ந்து நிற்கும்
ஏற்புடையார் மானிடத்தின்
ஏணி வாழ்வில்
ஏறுநடை பொது அங்கு
ஏழை  இல்லை . 


நூல் ஆசிரியர் .தொகுப்பு ஆசிரியர் இரண்டு பேரின் ஆளுமையைப் பறைசாற்றும் விதமாக நூல் உள்ளது .தொகுப்பு ஆசிரியர் உழைப்பைக் கண்டு வியந்து போனேன் .

எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்து விட்டு ,அந்த ஊ
ர்  செல்லும் பேருந்தில் பயணிக்க வேண்டும் .அதுபோல் மனிதனுக்கு குறிக்கோள் வேண்டும் .அதனை உணர்த்தும் வரிகள் .

தேவை ! உயந்த
குறிக்கோள்
ஓர் உயர்வு ,நீண்ட காலக்
குறிக்கோள் என்பது ஒரு நாட்டுக்கும் தேவை .தனி மனிதனுக்கும் தேவை .அது நம் பாதைக்கு ஒளி காட்டும் .பயணத்திற்குத் திசை காட்டும் .  

மூடநம்பிக்கையில் மூழ்கித் தத்தளிக்கும் மனிதர்களுக்கான அற்புத வரிகள் இதோ !

பகுத்தறிவே சமுதாயத்தின் நந்தாத தீப்பந்தம்
விழிப்புணர்வே சமுதாயத்தின் 
நந்தாத தீப்பந்தம்
வய்ய
  வாழ்வின் நங்கூரம் !

வித்தியாசமான முயற்சி
தொகுப்பு ஆசிரியர் பேரா .இரா .மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .நாள் ஒரு சிந்தனை என்று 365 நாட்களுக்கு 365 சிந்தனை நூலில் உள்ளது .வா .செ.குழந்தைசாமி  என்ற படைப்பாளியின் படைப்பிலிருந்து படைப்பாளியே வியக்கும் வண்ணம் மிகச் சிறப்பாக தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

ஞாயிறு, 24 ஜூன், 2012

உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி

உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் !   கவிஞர் இரா .இரவி
சிறு கூடல் பட்டியில் பிறந்த கண்ணதாசனே !
பெரும் பாடல் புலவனே ! கவியரசனே !

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து
எட்டா  உயரம் இலக்கியத்தில் அடைந்தவனே !

கவிதை கதை கட்டுரை வடித்தவனே !
கற்கண்டு எழுத்தில் சகல கலா வல்லவனே
!

எந்த நாளும் எனக்கு அழிவில்லை என்றவனே !
எந்த நாளும் அழிவின்றி மக்கள் மனங்களில் நின்றவனே !

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
என்றவனே !
அந்த பறவை போலவே வாழ்ந்து காட்டியவனே !

அச்சம் என்பது மடமையடா
என்றவனே !
அச்சம் இன்றி துணிவுடன் வாழ்ந்தவனே !

ஆறடி நிலமே சொந்தமடா   என்றவனே !
அற்புத வாழ்வியல் தத்துவம் உரைத்தவனே !

உலகம் பிறந்தது எனக்காக என்றவனே !
உலகில் பிறந்து உணர்வில் கலந்தவனே !


வீடு வரை உறவு வீதி வரை மனைவி !
வாழ்வின் நிலையாமையை உணர்த்தியவனே !

ஆசையே அலை போல  என்றவனே !
ஆசையை அடக்க அறிவு
றுத்தியவனே  !
காலத்தைக்  கடந்து நின்றவனே !
காலத்தால் அழியாத பாடல் படைத்தவனே !

கல்வெட்டு வரிகளை மனங்களில் பதித்தவனே !
கவிஞன் என்ற சொல்லிற்கு பெருமை சேர்த்தவனே !

உலகம் உள்ளவரை உன் பெயர் நிலைக்கும் !
உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் !


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

வெள்ளி, 22 ஜூன், 2012

தன்னம்பிக்கை வாசகர் வட்ட விழா புகைப்படங்கள்

தன்னம்பிக்கை வாசகர் வட்ட விழா புகைப்படங்கள்

பரிசு வழங்கும் விழா புகைப்படங்கள்

முத்தமிழ் அறக்கட்டளை ,நிலா சேவை மைய அறக்கட்டளை சார்பில் மகாகவி பாரதியார் தமிழாசிரியராக பணிப் புரிந்த பெருமைப் பெற்ற மதுரை சேதுபதி மேல் நிலைப் பள்ளியில் நான் பயின்ற பள்ளியில்  மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா புகைப்படங்கள்

பரிசு வழங்கும் விழா புகைப்படங்கள்

முத்தமிழ் அறக்கட்டளை ,நிலா சேவை மைய அறக்கட்டளை சார்பில் மகாகவி பாரதியார் தமிழாசிரியராக பணிப் புரிந்த பெருமைப் பெற்ற மதுரை சேதுபதி மேல் நிலைப் பள்ளியில் நான் பயின்ற பள்ளியில்  மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா புகைப்படங்கள்

ஞாயிறு, 17 ஜூன், 2012

குடியரசுத் தலைவர் தேர்தல் கவிஞர் இரா .இரவி

குடியரசுத் தலைவர் தேர்தல்    கவிஞர் இரா .இரவி

நாம் மிகவும் மதிக்கக் கூடிய அப்துல் கலாம் அவர்கள் மீது அன்பு உண்டு .மரியாதை உண்டு .ஆனால் கொடிய கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக ,காங்கிரசுக்கு ஆதரவாக கருத்து சொன்னது தவறு .அதன் காரணமாக அவர் மீது இருந்த நன் ம
திப்பை  சிலரிடம் இழந்தார். சோனியா விரும்புபவர்தான்  குடியரசுத் தலைவர் ஆக முடியும் .சென்ற முறை .அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்த போது ,சோனியா பிரதமர் ஆக முயன்ற போது,கலாம் சொன்னார் "நீங்கள் இந்திய குடிமகள் இல்லை பிறந்தது  இத்தாலி " எனவே அத்வானி நீங்கள் பிரதமர் ஆவதை எதிர்க்கிறார் .என்றார் .இதை மனதில் வைத்து சோனியா நாம் பிரதமர் ஆவதை தடுத்தவர்  கலாம் என்று தவறக் கருதி கடந்த முறை பிரதீபா பாட்டிலைகுடியரசுத் தலைவர் ஆக்கினார் .

காங்கிரசுக்கு
தரவாக , கொடிய கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக கலாம் கருத்து சொன்ன போதும் காங்கிரஸ் ஏமாற்றி விட்டது .இந்த முறையும் அவரை குடியரசுத் தலைவர்ஆக்க சோனியாவிற்கு விருப்பம் இல்லை . சோனியா பொறுத்தவரை மவ்னமாக  வஞ்சம் தீர்ப்பார்.இலங்கையில் ராஜபட்ஜெவிற்கு உதவியது உதாரணம் .இப்போது உள்ள சூழ்நிலையில் கலாம் வெற்றிப் பெற வாய்ப்பு இல்லை என்பதால் ,கலாம் தேர்தலில் நிற்க மாட்டார் .இதற்கு  முன்பே கலாம் நாம் விரும்ப வில்லை என்று அறிவித்து இருக்கலாம் .அவர் மீது மதிப்பு இன்னும் உயர்ந்து இருக்கும் கலைஞர் கலாம் என்றால் கலகம் என்று சொன்னது தவறு .கலைஞர் அவர்களை பொறுத்த    மட்டில் கலாம் தமிழர் அவரை ஆதரிக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது .சோனியா சொன்ன .பிரணாப்பை ஆதரிக்க பிரதி பலனாக எனக்கு என்ன ? கைம்மாறு  செய்ய வேண்டும் என்று வியாபாரம் பேசி முடித்து இருப்பார். பழங்குடி  இனத்தை சேர்ந்த சங்மா குடியரசுத் தலைவர் ஆனால் நன்று .ஆனால் அவர் வெற்றி பெற வாய்ப்பே  இல்லை .அவரை ஏற்க சோனியாவிற்கு மனம் இல்லை .பிரணாப் குடியரசுத் தலைவர் ஆவது உறுதி .பிரணாப் தமிழருக்காக இதுவரை எந்த உதவியும் செய்தது இல்லை .தமிழர் வாக்கில் வெற்றி பெரும் அவர் இனியாவது தமிழருக்கு உதவ வேண்டும் .

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம்

வெள்ளி, 15 ஜூன், 2012

சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் கவிவாணன்

சுட்டும்  விழி

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி

நூல் விமர்சனம் 
கவிஞர் கவிவாணன்
மாவட்ட துணை செயலர்                                            
த.மு .எ .க .ச
13.2.2.பள்ளிவாசல் தெரு
வத்தலக்குண்டு 624202
செல்  9965039935


பிணம் தின்னும் சாத்திரங்களின் பிடறியில் ஏறி மிதிக்கும் சுடராக இருந்தவர் .இடர்பாடுகள் இருந்தும், படரும் நிலையில் சிந்தனை பிரசவித்த அக்கினி கணை .மூத்திப்பை தூக்கிக் கொண்டு மூடநம்பிக்கைக்கு எதிராக ஒரு யுக ஆத்திரம் கொண்டவர் தந்தை பெரியார். வரை இரா. இரவி எப்படி ? பார்க்கிறார்.

மூடநம்பிக்கை
முற்றுப் புள்ளியாக்கியது
ஈரோட்டு மை !

 
நல்ல கவித்துவ  சொல்லாட்சி

எலி மீது யானை
எப்படி ? சாத்தியம்
பிள்ளையார் !

என்கின்ற
போது மூட நம்பிக்கைக்கும் கடவுள் மறுப்புக்கும் இவர் கவிதைகள் சாட்டை எடுக்கின்றன .
ஹைக்கூ கவிதையில் சொல் சிக்கனம் ,காட்சிகளின் உள்ளடக்கம் ,கவித்துவ நாணயம் வேண்டும் .அது இவர் கவிதைகளில் ஏராளம் .

கூழ்  இன்றி ஏழை
கோடிகளில் அரசியல்வாதி
ஒளிரும் இந்தியா !


நம்மை ஏமாற்றும் அரசியல் எந்தக் கழுதையிலாவது ஏறி வரும் .ஒன்று சாதிக் கழுதை ,இரண்டு மதக் கழுதை.இரண்டும் முன்னே போனால் கடிக்கும் பின்னே போனால்  உதைக்கும் .கடிக்கும் பல்லை உடைக்கும் முற்போக்கானவர்களின் கவிதை ! கவிதை என்பது வெறும் சொல்லாட்சியல்ல .

கேரளா மகாகவி குஞ்
ஞிண்ணி சொல்வது போல்

"எழுவது எழுத்து "

எழும் எழுத்தை நாம் படைப்போம் .அந்த வரிசையில்11 கவிதை நூல்களின் மூலம் இரா .இரவி தந்து கவிதை பயண நீட்சியை பறைசாற்றுகிறார்.
சமூக அக்ககறை என்பது முற்போக்காளனுக்கு மிகவும் அதிகம் என்பதை  தொடர்ந்து வலியுறித்தி வரும்  பல முற்போக்கு கவிஞர்களில் இரா .இரவியும் முக்கியத்துவம் பெற்றவர் .ஆதலால்தான் .

விதைத்த நிலம்
பாய்ச்சிய நீரில்
பாலிதீன் பைகள் !

திரும்புகின்றது
கற்காலம்
மின் தடை !

கொன்ற கோபம்
இன்னும் தீரவில்லை
அதிரும் பறை ! 


என பல கவிதைகள் சமூக அககறையோடு அதிர வைக்கிறது .

ஏங்கியது குழந்தை
கதை கேட்க ..
முதியோர் இல்லத்தில் பாட்டி !

குடும்ப உறவுகள் சிதைந்து போன நுகர்வு கலா
ச்சாரத்தில்,  இன்னும் பாட்டியின் ஏக்கம் ஒவ்வொரு பேரப் பிள்ளைகளுக்கும் இருக்கும்  என்பதை உணர்த்துகிறது .

பொம்மை உடைந்த போது
உடைந்தது மனசு
குழந்தை !

மெல்லிய உணர்வுகளை
தன் ஹைக்கூ கவிதைகளில் சேமித்து வைக்கிறார் இரா .இரவி .

மனத்தில் ம
ச்சமென
நீங்காத நினைவு
காதல் !

மிகவும் ரசிக்க தக்க கவிதை .மச்சம் மறையாது  உடலோடு இருக்கும் .அது காதலாக பரிமளித்து நம்மை சிலாகிக்க வைக்கிறது .

உருகிடும் மெழுகு
உறைந்திடும்  அழகு 
அம்மா !

அம்மாவிற்கு நிகர் எதை வேண்டுமானாலும் உவமை சொல்லலாம் .வானம் ,மலை என்றாலும் அம்மாவின் தியாகத்திற்கு முன் குறைவுதான். அம்மா என்றால் ஆளும் அம்மா அல்ல .நம்மை ஆளும் அம்மா நம்மம்மா !
ஹைக்கூ கவிதைகளில் பல மின்னல்களை உள்ளடக்கியது இரா .இரவியின் "சுட்டும் விழி" நூல் .
ஆனாலும் இன்னும் சுண்ட காய்ச்சிய சொல் வேண்டும் என்பது  என்  அவா .

நூலை வாங்கி வாசியுங்கள்
நூதனமான  ஹைக்கூ வை நேசியுங்கள்
வாழ்த்துக்கள் !
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!

வியாழன், 14 ஜூன், 2012

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ                  கவிஞர் இரா .இரவி  

உணர்த்திச் சென்றன
அலைகள்
கடலின் வனப்பை !


சந்தேகப்படுங்கள்
நம்பாதீர்கள்
"சாமி நான்" என்பானை !

மூடி மறைக்க முடியவில்லை
கோடிகளால்
சாமியார் லீலைகள் !


வளர்வது தெரியாது
வளரும்
காதல்
மரம் !

சொல்லில் அடங்காது
சொன்னால் புரியாது
காதல் !


கூட்டம் கூடியது
முக்கியப்புள்ளி நாய் இறந்தது
முக்கியப்புள்ளி இறந்தார் ?

உள்ளம் மலர்ந்தது 
நட்ட செடியில்
பூத்தது பூ !

மலர்ந்த மலர்
மழலையின் சிரிப்பு
மனதிற்கு மகிழ்வு !

அன்பை அழித்து
வம்பை வளர்கின்றது
தொலைக்காட்சித் தொடர்கள் !

அமோகமாக நடக்கின்றது
குறுந்தகவல்
கூட்டுக் கொள்ளை 
தொலைக்காட்சிகள் !


தமிழ்த்திரைப்பட விளம்பரத்தில்
ஆங்கிலத்தில் பெயர்கள்
வெள்ளையன்  வாரிசுகள் !

மீன் சாப்பிட்டது
அழுக்கை
சுத்தமானது குளம் !
 


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

புதன், 13 ஜூன், 2012

அரசியல் ! கவிஞர் இரா .இரவி

அரசியல் !                   கவிஞர் இரா .இரவி

தேவை இல்லை
நீதி நேர்மை நாணயம்
அரசியல் !

மிகவும் தேவை
நிதி ரவுடி பித்தலாட்டம்
அரசியல் !

ஏய்க்கத் தெரிந்தால்
ஏற்றம் உறுதி
அரசியல் !

கூட்டுக் கொள்ளை
கூட்டணிக்  கொள்ளை
அரசியல் !

அணியும் உடையோ வெள்ளை
அடிக்கும் பணமோ கருப்பு
அரசியல் !

சொன்னதை இல்லை என்பார்கள்
சொல்லாததைச்  சொன்னேன் என்பார்கள்
அரசியல் !

அண்ணன் தம்பி என்பார்கள்
ஆள் வைத்துக் கொல்வார்கள்
அரசியல் !

சகோதரி சகோதரன்  என்பார்கள்
சகவாசம் இல்லை என்பார்கள்
அரசியல் !

என் உயிர்த் தொண்டன் என்பார்கள்
சந்திக்க மறுப்பார்கள்
அரசியல் !

உங்கள் வீட்டுப் பிள்ளை என்பார்கள்
தன் வீட்டுப் பிள்ளைகளை வளர்ப்பார்கள்
அரசியல் !

உயிர் எனக்கு துச்சம் என்பார்கள்
பிறகு அச்சம் கொல்வார்கள்
அரசியல் !

பிரித்து ஆளும் சூழ்ச்சி
நெஞ்சத்தில் நீர் வீழ்ச்சி
அரசியல் !

தேவை இல்லை படிப்பு
அவசியம் தேவை நடிப்பு
அரசியல் !

ஓடி வருவேன் என்பார்கள்
ஓடி விடுவார்கள் வென்றதும்
அரசியல் !

நன்றி மறவேன் என்பார்கள்
நன்றி என்ன ? என்பார்கள்
அரசியல் !

வந்ததுப்  பஞ்சம்
நல்லவர்களுக்கு
அரசியல் !

கூடவே  இருந்து குழிப் பறிக்கும்
குணம் கற்பிக்கும்
அரசியல் !

உள் ஒன்று வைத்து
புறம் ஒன்று பேசும்
அரசியல் !

பொது  நலம் பேசும் உதடுகள்
தன் நலம் மட்டுமே பேணும் உள்ளம்
அரசியல் !
--

திங்கள், 11 ஜூன், 2012

இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர் இலக்குவனார் ! கவிஞர் இரா .இரவி

இருபதாம் நூற்றாண்டுத்  தொல்காப்பியர் இலக்குவனார் !

 கவிஞர் இரா .இரவி

வளமை மிக்க தமிழுக்காக உழைத்த தமிழ் உண்மை
வாய்மை மேடு  ஊரில் பிறந்த தமிழ் வாய்மை

சிங்காரவேலரின் ம்கனாகப்  பிறந்த தமிழ்ச்சிங்காரம்
இரத்தினம் அமையார் பெற்றெடுத்த தமிழ் இரத்தினம்

திருக்குறளை நேசித்து ஒப்பற்ற உரை எழுதியவர்
திருவள்ளுவரையே மகனாகப் பெற்றவர்

அறிஞர் அண்ணா பிறந்த ஆண்டில் பிறந்த தமிழ் அறிஞர்
அறிஞர் அண்ணாவின் பாராட்டைப் பெற்றத் தமிழ் அறிஞர்

உயர்நிலைப்  பள்ளியின் ஆசிரியராகப் பணியைத் தொடங்கி
உயர்ந்த உசுமானியப் பல்கலைக் கழகம் வரை உயர்ந்தவர்

கவிஞர் கட்டுரையாளர் எழுத்தாளர் பன்முக ஆற்றலாளர்
கற்கண்டுத் தமிழுக்கு இனிமை சேர்த்த இனியவர்

தமிழுக்காகச்  சிறை சென்ற மாவீரர்
தமிழுக்காகவே  வாழ்க்கை வாழ்ந்த மாமனிதர்

தன்னலம் மறந்து தமிழ் நலம் காத்தவர்
தமிழுக்காகவே வாழ்க்கையை ஈந்தவர்

தன் சொந்த சொத்துக்களை தமிழுக்காக விற்றவர்
தன் சொந்த மொழியான தமிழை சொத்தாக மதித்தவர்

ஆதிக்க இந்தியை எதிர்த்த கொள்கைக் குன்று
அழகு தமிழின் புகழை அகிலம் பரப்பியவர்

பாவாணர் பாராட்டிய பண்பாளர் இலக்குவனார்
பார் புகழும் தமிழுக்குப்  புகழ் பல சேர்த்தவர்

இலக்குவனாரைப்  பாராட்டாத தமிழ் அறிஞர் இல்லை
இலக்குவனாரைப்  பாராட்டாதவர்   தமிழ் அறிஞரே இல்லை
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

 கண் தானம் செய்வோம் !!!!!

ஞாயிறு, 10 ஜூன், 2012

தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி

தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்
உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி
தலைப்பு     நாமும் நம் மொழியும்
இடம் .மணியம்மையார் தொடக்கப் பள்ளி ,மதுரை
நாள் 10.6.2012
ஏற்பாடு .திரு .பி .வரதராசன் புரட்சிக் கவிஞர் மன்றம் 


நம் தமிழ் மொழியை  நீரில் நெருப்பில் இழந்தோம் .
புகை வண்டி ,தொடர் வண்டி ,மின் தொடர் வண்டி  தொடரி என்றனர் .சரியான
சொல்லாக அமைந்தது .


கல்வி என்பது நன்கு சுவற்றுக்குள் மட்டும் இல்லாமல் ஊரெல்லாம்  பரவ
வேண்டும் என்பதால் கல்லூரி என்று சொன்னார்கள்
அவரை ,துவரை ,சோளம் ,தினை .பனை ,கேழ்வரகு இவை எல்லாம் காரணத்துடன் அமைந்த
வேர்ச் சொற்கள் . .
பன்னீர் . பல துளிகள் சேர்ந்தது பன்னீர் என்றனர் .


மோடி  மஸ்தான் சாகிப் என்பவர் பல்கலைக் கழகத்தில் உருது மொழியைக் கொண்டு
 வந்தார் .பலரும் இது இயலாத செயல் என்றனர் .பத்து வருடங்களில் உருது
மொழியை முழுமையாகக் கொண்டு வந்துக் காட்டினார் .அந்த  உள்ளம் தமிழருக்கு
வேண்டும் .
குடி குடி கெடுக்கும் என்று எழுதி விட்டு குடியை கொடுக்கலாமா ?விற்கலாமா?
புகை பகை புற்று நோய் வரும் என்று எழுதி விட்டு தயாரிக்கலாமா? விற்கலாமா ?


நமது நாட்டில் சொல்லுக்கும் செயலுக்கும் ஒற்றுமை இல்லை .
பெரியார் பாராட்டிய பன்னீர் செல்வம் பற்றி இங்கே குறிப்பிட வேண்டும் .
அன்று திருவையாறு கல்லூரியில்  வடமொழி மட்டுமே கற்பித்தனர் .   5
மாணவர்களுக்கு 9 ஆசிரியர்கள் இருந்தார்கள் பணம்  செலவு செய்தனர் .சரபோஜி
மன்னர் நாட்டு மொழி கற்க செலவு செய்ய எழுதி வைத்துள்ளார் என்றார்கள்
.தமிழ் நாட்டில் தமிழ் தான் நாட்டு மொழி எனவே தமிழ் தான் கற்பிக்க
வேண்டும் என்று வாதாடினார் .திருவையாறு கல்லூரியை தமிழ்க்  கல்லூரியாக
மாற்றினார் .எங்கள் மொழியும் இருக்கட்டும்    என்று  வட மொழி கேட்டுப்
பெற்றனர் .அன்று பன்னீர் செல்வம் அவர்களுக்கு இருந்த தமிழ்ப் பற்று இன்று
தமிழருக்கு இல்லை .பேராசிரியர் இலக்குவனார் படித்த கல்லூரி  திருவையாறு
கல்லூரி.மொழிக்காக சிறை சென்ற பேராசிரியர் . நாட்கள் சிறை சென்றவர்
.மொழிப் போராளி .வேலை பறிப் போனது ,பேசக் கூ டாது ,வெளியே செல்லக்  கூ
டாது இப்படி பல துன்பங்களை  மொழிக்காக ஏற்றவர் .
கல்லூரியில் அய்யங்கார் கட்டு ,அய்யர் கட்டு ,சைவ கட்டு ,அரை சைவ  கட்டு,
அசைவ கட்டு என்று பிரிவுகளாக இருந்தது உணவு உண்ணும் இடம் .அதனை முதலில்
இரண்டு ஆக்கினார் .பின்னர் ஒன்றாக ஆக்கினார் .திரு பன்னீர் செல்வம் .


தமிழனுக்கு விழிப்புணர்வு வர வேண்டும் .தமிழன் கண்ணை மூடிக் கொண்டு
இருந்தால் கண்ணில் மண்ணைப் போட்டு க் கொண்டே இருப்பார்கள் .
 ஒருவர் விருந்து இடுகிறார் நான் இட்டப் பட்டு உண்கிறேன் .அதில் இருந்து
வந்த சொல் இட்டம் .நல்ல தமிழ் சொல்லில் ஸ் சேர்த்து இஷ்ட்டம் என்று ஆக்கி
வட சொல் ஆக்கி விட்டனர் .இப்படி பல சொற்கள் .
உயரம் குறைவாக இருப்பது குட்டை . ஷ் சேர்த்து குஷ்டம்  ஆக்கினார்கள் .
ஒரு செயல் செய்ய முடியாமல் கட்டுண்டு கிடப்பது கட்டம் ஷ் சேர்த்து
கஷ்டம்  ஆக்கினார்கள் .ஒரு எழுத்தை  மாற்றி நம் சொல்லையே திருடி விட்டனர்
.இப்படி திட்டமிட்டு தமிழைச் சிதைத்தனர் .
முடி வெட்டுதல் ,துணி வெட்டுதல் கலைச் சொற்கள் .காரணச் சொற்கள் .
புது மனை புகு விழாவின் போது ரிப்பன் வெட்டுதல் நம் பண்பாடு அன்று .
பிறந்த நாளிற்கு மென்மாவு (கேக் )  வெட்டுதல் நம் பண்பாடு அன்று .
எங்கே இருந்து  எந்தக் குப்பை வந்தாலும் கொட்ட குப்பைதொட்டி தேவை இல்லை
.தமிழ் நாடு இருக்கின்றது.


பெர்னாட்சாவை  பார்த்து ஒருவர் கேட்டார்."நீங்கள் இயற்கையை விரும்புபவர்
.நீங்கள் பேசும் மேடையில் பூக்கள் இல்லையே ".என்றார் .அதற்கு பெர்னாட்சா
சொன்னார் நான் இயற்கையை பூங்காவிற்கு சென்று ரசிப்பேன் .பூக்கள்பறித்து
வந்து மேடையில்வைக்க விரும்ப வில்லை .எனக்கு குழந்தைகளைப்  பிடிக்கும்
என்பதற்காக குழந்தையின் தலையை கொண்டு வந்து மேடையில் வைக்க வேண்டுமா ?


திரு .வி .க சொல்வார் .ஒவ்வொரு ஆண்களுக்குள்ளும்  பெண்மை இருக்க வேண்டும்
.அப்படி இருப்பவர்களுக்குதான் வீடு பேறு கிடைக்கும் ..
பெண்மை என்பது என்ன வென்றால் அன்பு,அருள்,பொறுமை ,அடக்கம் ,பண்பு
,ஒழுக்கம் ,தூய்மை ஆகும் .இப்படி பட்ட பெண்மை குணம் பெற்றவர்கள்தான்
புகழ் அடைந்தார்கள் புத்தர்,வள்ளலார் .


வெட்டுவதால் தான் வேட்டி என்றார்கள்  ஷ் சேர்த்து வேஷ்டி  ஆக்கினார்கள்
துண்டு போடுவதால் துண்டு என்றார்கள் .உலகில் வேறு எந்த மொழிக்கும்
இத்தகைய பெருமை இல்லவே இல்லை .ஒவ்வொரு சொல்லுக்கும் காரணம் உண்டு.


வேட்டைக்கும் போகிறவன் பறவை போல ஒலி கொடுப்பான  வேடம் போடுவான் .வேடம்
என்ற தமிழ்ச் சொல்லில்  ஷ சேர்த்து வேஷம்   ஆக்கினார்கள் .உயிரை விட
செய்வதால் விடம் என்றனர் ஷ என்ற ஒரு எழுத்தை சேர்த்து விஷம்
ஆக்கினார்கள்.ஒன்றோடு ஒன்று சேர்த்தல் சுவடி என்ற சொல்லை ஜோடி
ஆக்கினார்கள் ,பின் ஜோடனை,ஜோடிப்பு  ஆக்கினார்கள் .


நான் தாஜ்மகால் சென்றேன் .யாரும் தடுக்க வில்லை. காஷ்மீர்  சென்றேன்
.யாரும் தடுக்க வில்லை.ஆனால்  நாம் தானம் தந்த சேர நாட்டில் உள்ள கண்ணகி
கோயில் சென்றால் தடுக்கின்றனர் . குறிப்பிட்ட நாளில் மட்டுமே அனுமதி
.இதுவா ?ஒருமைப்பாடு .


உலகப் பொது மறையான திருக்குறள் வழியாகவே தமிழன் உலகம் முழுவதும் அறியப்
பட்டான்   .தமிழர்களின் அடையாளம்  திருக்குறள்.திருவள்ளுவருக்கு கோட்டம்
அமைத்தோம் ,சிலை வைத்தோம் ,கோயில் கூட கட்டினோம் .


ஆனால் திருவள்ளுவர் சொன்ன கருத்துக்களை கடைப்  பிடிக்க மறந்தோம்  .
பரிசுச் சீட்டு நடத்தினோம் .மதுக் கடைகள்  திறந்தோம் .
திருக்குறள் வழி நடந்தால் தமிழும் ,தமிழரும் செழித்து வாழலாம்
.தமிழர்க்கு இனியாவது விழிப்புணர்வும் ,தமிழ்ப் பற்றும் வர வேண்டும் .--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

 கண் தானம் செய்வோம் !!!!!

வெள்ளி, 8 ஜூன், 2012

மு .வ .அல்லது முன்னேற்ற வரலாறு நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மு .வ .அல்லது முன்னேற்ற வரலாறு

நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


வானதி பதிப்பகம் சென்னை.17 விலை ரூபாய் 60

தமிழ் உன்னை வளர்த்தது
தமிழை நீயும் வளர்க்க வேண்டும் .
----மு .வரதராசன்

தமிழ் அறிஞர் மு .வ.  அவர்கள் நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த்தேனீ  இரா .மோகன் அவர்களுக்கு எழுதிய மடலின் வைர வரிகளுடன் நூல் தொடங்குகின்றது .வைர வரிகளை தாரக மந்திரமாகக் கொண்டு தமிழ் அன்னைக்கு அணி சேர்க்கும் விதமாக நூல்களை எழுதி குவித்துள்ளார் .தமிழ்த்தேனீ  இரா .மோகன். இவருடைய மற்றொரு நூலிற்கான அணிந்துரையில், சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர் , முனைவர் வெ.இறையன்பு . இ.ஆ.ப .அவர்கள் குறிப்பிட்டது.  முற்றிலும் உண்மை. தமிழ்த்தேனீ  இரா .மோகன் அவர்கள் அருகில் அவர் எழுதிய நூல்களை அடுக்கினால் அவரை விட உயரமாக இருக்கும் . 90 நூல்களை எழுதி குவித்தவரின்  தரமான நூல் இது .மாமனிதர் தமிழ் அறிஞர் மு .வ.என்ற ஆளுமையின் திறமை ,நேர்மை, எளிமை  உணர்த்தும் அற்புத நூல் .மு .வ . பற்றி தமிழ்த்தேனீ  இரா .மோகன் எழுதிய ஆறாவது நூல் இது  .இலக்கிய ஆறாகப் பாயும் நூல் இது .

நூலில் உள்ள கருத்துக்களில் பதச் சோறாக சில வரிகள் உங்கள் ரசனைக்கு .

"மு.வ .எழுத்துலகில் இவர் தொடாத துறையும் இல்லை .தொட்டுத் துலங்காத துறையும் இல்லை. என்னும் அளவிற்கு
மு.வ . வின் படைப்பாற்றல் இமாலயச் சாதனையாக வெளிப்பட்டது .பொதுவாக கல்வி உலகில் மாணவர்களால் மதிக்கப் பெரும் பேராசிரியர்கள் உண்டு . மு.வ .வோ  மாணவர்களை மதித்த பேராசிரியர் ஆவார் . தம் புதினங்கள் நான்கினுக்குத் தம்மிடம் பயின்ற முதலணி மாணவர்களான ம .ரா .போ .குருசாமி ,கா .அ.ச .ரகுநாயகம்  ,சி .வேங்கடசாமி ,ரா .சீனிவாசன் ஆகிய நால்வரிடம் அணிந்துரை பெற்ற தாயுள்ளம் கொண்டவர்  மு .வ ."

இந்த நிகழ்வைப் படித்ததும் வியந்துப் போனேன்  .இப்படியும் பண்போடு வாழ்ந்துள்ளார்கள் என்று எண்ணி . .
நான்கு மாணவர்களின் பெயர்களை முன் எழுத்துக்களுடன் ஆவணப் படுத்தி உள்ளார் . நூல் ஆசிரியர் .மு .வ .அவர்களின்  செல்ல ப் பிள்ளை என்பது உண்மை .ஒரு மகன் தந்தையின் பண்பை உற்று நோக்குவதுப்    போல உற்று நோக்கி படைத்துள்ளார் .மு .வ .அவர்களின் உள்ளம் உயர்ந்த உள்ளம் யாருக்கும் வாய்க்காத நல்  உள்ளம் .மாணவர்களை மதித்த உள்ளம் .

தமிழ் அறிஞர் மு .வ .அவர்களை நான் நேரில் பார்த்தது இல்லை .நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் அவர்களின் நூல்களின் வாயிலாகவே மு .வ .என்ற இலக்கிய ஆளுமையைப் பற்றி அறிந்து அவரது படைப்புகளை படிக்கத் துவங்கினேன். ஒரு கதை எப்படி? எழு வேண்டும் என்பதுப் பற்றி
மு .வ .அவர்களின் கதை படித்து அறிந்துக் கொண்டேன். இன்றைய எழுத்தாளர்கள் அனைவரும்
மு .வ .அவர்களின் படைப்புகளைப் படித்து அறிய வேண்டும் .பிற மொழிக் கலப்பு இன்றி, அழகு தமிழ் நடையில் தெளிந்த நீரோடைப் போன்று எழுதி உள்ளளார் .என்பதை அறிய முடிகின்றது .இந்த நூலின் மூலமாக.சங்கத் தமிழை எளிமைப் படுத்தி ,  இனிமைப் படுத்தி வழங்கியவர் மு .வ .என்பதை உணர்த்துகின்றது இந்நூல் .


எனக்கு மு .வ . அவர்களை நூல்கள் வழி அறிமுகம் செய்தவர் பேராசிரியர் இரா .மோகன்.கவி அரசர் தாகூரை மு .வ. அவர்களின் நூலைப் படித்து தான் அறிந்துக் கொண்டேன் .தாகூர் பற்றி கவிதை எழுதினேன் . மிகச் சிறந்த மனிதர் மு .வ . முதன் முதலில் தமிழில் முனைவர் பட்டம் பெற்றமைக்காக பாராட்டு விழா நடத்த அனுமதி கேட்டப்போது பாராட்டு விழா வேண்டாம் என்று மறுத்த பண்பாளர்  மு .வ .மு .வ . அவர்களின் புகழைப் பறை சாற்றும் நூலாக வந்துள்ளது. பாராட்டுக்கள். இன்றைய  இளைய தலைமுறை அனைவரும் படிக்க வேண்டிய அற்புத நூல் .

உன் நண்பன் யார் ?  என்று சொல் நீ யார் ? நான் என்று சொல்கிறேன் .என்று சொல்வார்கள். அதுப்போல மு. வ .அவர்கள் யார் என்று சொல்ல அவர் யார் பற்றி நூல் எழுதி உள்ளாரோ ? அதை வைத்தே மு .வ .யார் என்று சொல்லி விடலாம் .

மு .வ .எழுதிய நூல்கள் .

காந்தி அண்ணல் ,கவிஞர் தாகூர் ,அறிஞர் பெர்னாட்சா,திரு .வி.க . இந்த நான்கு பெருமக்களையும் தமிழ் உலகிற்கு விரிவாக அறிமுகம் செய்து வைத்தவர் மு .வ .


  "தேவையே இல்லாமல் ஒரு மனிதன் வாழ முடியாது .தேவைகளைக் குறைத்து வாழலாம் ."மண் குடிசை  ( பக்க எண் 52.) தமிழ் அறிஞர் மு .வ.  அவர்களின் அத்தனை நூல்களையும் ஆராய்ந்துப் படித்து மலர்களில் தேன் எடுப்பதுப்  போல எடுத்து இலக்கிய தேன் வழங்கி உள்ளார் .மு .வ.  அவர்களின் வைர வரிகளை பக்க  எண்களுடன் சான்றாக மிகத் துல்லியமாகப்  எழுதி உள்ளார்கள் .

மு வ .வின் படைப்புகளான கள்ளோ ? காவியமோ ?, கரித்துண்டு , நெஞ்சில் ஒரு முள் போன்ற நூல்கள் ஆழ்ந்து படித்ததன் காரணமாக ,அந்த நூலில் உள்ள வரிகளுடன் நூல் எழுதி உள்ளார். இலக்கிய விருந்துப்  படைத்துள்ளார் .


மதுரையில் காந்தி அருங்காட்சியத்தில் மு .வ அவர்களின்
நூற்றாண்டு  நிறைவு விழாவை மிகச் சிறப்பாக ,கோலாகலமாக, மதுரை வியக்கும் வண்ணம் ஒரு நாள் முழுவதும் நடத்தி மு வ .வின் புகழை உலகு அறிய வைத்தவர்  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .எழுதுவதோடு நின்று விடாமல் எழுதியபடி செயல் பட்டும் வருகிறார் .விழாவில் முழுவதும் இருந்து ரசித்தேன் நான் .
மு .வ .பற்றிய பிம்பம் இமயத்தை வென்றது .


சூரியனின் இதயத்திலிருந்து சிந்திக்கவும்
நிலவின் உதடுகளிலிருந்து பேசவும்
வல்லவர் மு .வ .
---- ஈரோடு தமிழன்பன்

மு .வ .பற்றி இப்படி மற்றவர்கள் எழுதியதைத் தேடி
ப் பிடித்து நூலில்  ஆவணப் படுத்தி உள்ளார். இந்த நூலில் மு .வ. அவர்கள் எழுதிய நூல்களின் பட்டியலும் ,நூல் ஆசிரியர் பேராசிரியர்
இரா. மோகன் அவர்கள் எழுதிய நூல்களின் பட்டியலும் உள்ளது .படித்து பிரமித்துப் போனேன். இலக்கிய ஆர்வலர்கள் .ஆராய்ச்சி மாணவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அற்புத நூல். தரமான நூலை பதிப்பித்த வாதி பதிப்பகத்தாருக்கும் பாராட்டுக்கள் .இந்த நூல் மு .வ .என்ற மகுடத்தில் பதித்த வைரக் கல்லாக ஒளிர்கின்றது .


திங்கள், 4 ஜூன், 2012

காதல் கவிதைகள் கவிஞர் இரா .இரவி

காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி

ஒரு ஆணுக்கு தன்னையும்
ஒரு பெண் காதலிக்கிறாள்
என்பதே பெருமை அருமை !
நவீன உடையை விட
சராசரி சேலையில்தான்
நடக்கும் சோலை
அவள் !

மாதா பிதா குரு நண்பன்
அனைவரையும் பின்னுக்குத் தள்ளி
முந்தினாள் அவள் !
பார்த்தால் பசி தீரும் என்பார்கள்
அவளைப் பார்த்தாலே
எனக்குப் பசி வருகின்றது !

சொர்க்கம் நரகம் நம்பாத
நாத்திகன் நான் !
அவளைச் சந்தித்ததும்
நம்பினேன் சொர்க்கத்தை !


அருகில் அவள் இல்லாவிட்டாலும்
என்னுள் இருக்கிறாள் !
எண்ணும் போதெல்லாம்
என் நினைவில் வருகின்றாள் !


முதலில் கண்கள் பேசியது
பிறகு இதழ்கள் பேசியது
பிறகு மனசு பேசியது
பேசிப் பேசி வளர்ந்த காதல்
பேசாமல் மனம் வாடியது !


காதல் வெற்றியை விட
காதல் தோல்விதான்
கவிதை வளர்க்கின்றது !
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!

காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் . விமர்சனம் கவிஞர் இரா .இரவி

காதல் ஆத்திச்சூடி

நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விஜயா  பதிப்பகம் கோவை     விலை ரூபாய்
40

அவ்வையின்   ஆத்திச்சூடி அறம் செய்ய விரும்பு !என்று தொடங்கும் கவிஞர் தபூ சங்கர் ஆத்திச்சூடி காதல் செய்ய விரும்பு ! என்று கற்பிப்பதுப்  போல உள்ளது .தபூ சங்கர் காதலர் கட்சி தொடங்கி விரைவில் தலைவர் ஆகி விடுவாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது .இவருடைய படைப்புகள் அனித்தும் காதல் ! காதல் ! காதல் ! காதல் தவிர வேறு இல்லை என்று சொல்லுமளவிற்கு எங்கும் எதிலும் காதல் ரசமே பொங்கி வழிகின்றது .

நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்களிடம் சிறிய வேண்டுகோள் காதலியின் இருப்பிடம் இதயம் அல்ல மூளை என்று இன்றைய அறிவியல் சொல்கின்றது .இனி வரும் கவிதைகளில் மூளை என்ற சொல்லைப் பயன்படுத்துங்கள் .இதயம் மாற்று அறுவைச் சிகிச்சை நடக்கும் காலம் இது .

உயிர் உள்ள இதயத்தில்தான்
காதல் நுழையும் என்றில்லை
காதல் நுழைந்
தால்
உயிர் பெற்ற
இதயங்களும் உண்டு .


காதல் விதைகளிலும் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஒவ்வொரு நூலிலும் கண் தானம் பற்றிய கவிதை எழுதி வருவது நன்று .பாராட்டுக்கள் .

கண்களை
தானம் செய்யுங்கள்
அதற்கு முன்
காதலை தானம் செய்யுங்கள்
கண்களால் .


"பாவத்தின் சம்பளம் மரணம் " கேள்விப்பட்டு இருக்கிறோம் .இப்படி அடிக்கடி கேள்விப்பட்ட சொற்களை வித்தியாசமாக மாற்றிப்போட்டு கவனம் கவர்ந்து விடுகிறார் .

புண்ணியத்தின்
சம்பளம்
காதல்

காதல் திருமணத்தில் முடிந்தால் நன்று .ஆனால் பலருக்கு திருமணத்தில் முடிவதில்லை .சிலருக்கு மட்டுமே காதல் திருமணத்தில் முடிகின்றது. காதல் திருமணம்    முடித்தவர்களுக்கு ஆலோசனை வழுங்குகின்றார் .

காதலர்களாகச் சந்தித்துக் கொண்ட
இடங்களுக்கெல்லாம்
திருமணம் ஆனதும்
தம்பதிகளாகச் சென்று வாருங்கள்
அதற்
குப் பெயர்தான் தேனிலவு .     

திருமணம் ,காதல் இரண்டையும் மிக வித்தியாசமாக ஒப்பீடு செய்துள்ளார் .

திருமணம் என்பது
ஒரு நாழிகை  செய்வது
காதல் என்பது
ஒவ்வொரு
நாழிகையும்
செய்வது .

கவிஞர் தபூ சங்கர் காதல் ஆத்திச்சூடியை   இப்படித் தலைப்பிட்டு அதற்கு விரிவான வசனம் காதலனுக்கு பயன்படும் விதமாக எழுதி  உள்ளார். இந்த நூலை காதலைப் படிப்பவர்களுக்குப் பாடப் புத்தகமாக வைக்கலாம் .
அவளிடம் மயங்கு ,ஆயிரம் மறை கண்ணில் படு ,இதயத்தை அலங்கரி
,ஈர்க்கும் படி நட ,உறுத்தாமல் பார் , ஊதிய மின்றி  காவல் செய் ,எதற்கும் வழியாதே ,ஏகலைவனாய் இரு ,ஐம்புலன்களால் காதலி ,ஒய்யாரமாய்க் காதல் சொல்,ஓர் உலகம் செய் , ஒளவிபழகு  .

காதல் ஆத்திச்சூடி தலைப்பில்  உள்ள சில வைர வரி வசனங்கள் .

"எனக்கு வரையத்  தெரியாதே என்று பதறாதே .உனக்கு
வரையத்  தெரியாதுதான் .ஆனால் உன் காதலுக்கு வரையத்  தெரியும் .

முத்த முதலாய் உன் கண்கள் அவள் விழிகள் வலி பார்க்கிறபோதுதான் உன் காதல் வலி மொழியப்படுகிறது .

பார் அவளைப் பார்த்துக் கொண்டே இரு .

இந்த உலகத்தில் அழகான வேலை உன் காதலியை காவல் காக்கும் கருப்பண்ண சாமி வேலைதான் .

இப்படி காதலர்களுக்கு காதல் பற்றி வகுப்பு ஆசிரியர் போலப் பாடம் நடத்தி உள்ளார் .   
நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் எப்போதும் காதலைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருப்தால்தான் அவரால் இந்த அளவிற்கு காதல் பற்றி எழுத முடிகின்றது .இன்றைய கவிஞர்களில் இவர் அளவிற்கு யாரும் காதலை மட்டும் இந்த அளவிற்குப்  பாட வில்லை என்று அறுதி இட்டுச் சொல்லலாம் .காதலை ஆய்வு செய்து கவிதை எழுதி வருகிறார் .இன்றைய இளைஞர்கள் அவ்வையின்   ஆத்திச்சூடி மறந்தாலும்  ,கவிஞர் தபூ சங்கர் காதல் ஆத்திச்சூடி மறக்க மாட்டார்கள் .இந்த உலகம் உள்ளவரை காதல் இருக்கும் .காதல் உள்ளவரை   கவிஞர் தபூ சங்கர் கவிதை நிலைக்கும் .  

ஞாயிறு, 3 ஜூன், 2012

இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் . விமர்சனம் கவிஞர் இரா .இரவி

இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது

நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விஜயா  பதிப்பகம் கோவை     விலை ரூபாய் 80


காதலர்கள் பரிமாறிக் கொள்ளும் கவிதை நூல்கள் யாருடையது என்று புத்தகக் கடைக்காரகளைக் கேட்டால் அனைவரும் சொல்லும் சொல் "கவிஞர் தபூ சங்கர்நூல்கள்தான் "கவிஞர் தபூ சங்கர் காதலை நேசிப்பதைப்  போலவே காதலர்கள் காதலுக்கு அடுத்தபடியாக தபூ சங்கர்  நூல்களை நேசிக்கிறார்கள் என்றால் மிகை அன்று .அதனால்தான் மிகக் குறுகிய  காலத்தில்   பல பதிப்புகள் வந்துள்ளது .நூலின் பெயர்களும் வித்தியாசமாக சூட்டுவதில் வல்லவர்  தபூ சங்கர் .  அட்டைப்படங்களும் , உள் புகைப்படங்களும் ,அச்சு வடிவமைப்புகளும் நூலை கையில் எடுத்ததும் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும் வண்ணம் மிக நேர்த்தியான வடிவமைப்பு விஜயா பதிப்பகத்திற்குப்  பாராட்டுக்கள் . 

நூலின் சமர்ப்பணமே வித்தியாசமாக உள்ளது .இப்படி ஒரு நூல் சமர்ப்பணம்  நான் இது வரை எந்த நூலிலும் படித்து இல்லை .

ஒரு வேளை
இவன் நம்மைக்
காதலிக்கிறானோ என்று
நீ எப்போதாவது
நினைத்திருந்தால்
அந்த நினைப்புக்கு
இந்த நூல் சமர்ப்பணம் . 
       

கவிஞர் பழனி பாரதியின் அணிந்துரை அழகுக்கு மேலும் அழகு !

காதல் கண்ணில் தொடங்கும் என்பார்கள் இந்த நூலில் கண்கள் பற்றிய கவிதையோடு இந்த நூல் தொடங்குகின்றது .

சின்ன மீன்களை
பெரிய மீன்கள்
தின்று விடுவது மாதிரி
என் கண்களைத் தின்றுவிடுகின்றன
உன் கண்கள் .

காதலித்த அனைவரும் அறிந்துக் கொள்ளும் அற்புத வரிகள் .பாராட்டுக்கள் 
.

இந்த உலகத்தில்
எத்தனையோ பேர்
கடவுளின் அவதாரமாகப்
பிறந்ததாக
இலக்கியங்கள்
சொல்கின்றன
ஆனால் நீ ஒருத்திதான்
காதலின் அவதாராமாகப்
பிறந்தவள் !   


இந்தக் கவிதைப் படிக்கும் ஆண்களுக்கு அவரவர் காதலி நினைவிற்கு உறுதி என்று அறுதி இட்டுச் சொல்லலாம் .

கவித்துவம் குறைவாக வசன நடையில்  உள்ள சில பக்கங்களைத் தவிர்த்து இருக்கலாம் .

எள்ளல் சுவையுடன் ஒரு கவிதை உங்கள் ரசனைக்கு .

கல்லூரிக்குள் இருக்கும்
ஓடைப்பிள்ளையார் கோயிலுக்கு
நீ போவதைப் பார்த்தாலே
எனக்குப் பயமாய் இருக்கும்
தன தாயைப் போல
பெண் வேண்டும் என்று
ஆற்றுக்கு ஆறு
உட்கார்ந்திருக்கும் பிள்ளையார்
நீதான் அந்தப் பெண் என்று
சொல்லிவிடுவாரோ என !

  
விழி தானம் விதைக்கும் விதமாக ஒரு கவிதை மிக நன்று .

உனது கண்களை
ஒரு சின்னஞ்சிறு
பெண்ணுக்கே
தானமாக
வழங்க வேண்டும் என்று
பதிவு செய்
அந்தக் கண்கள்
அடுத்த தலைமுறையில்
என்னை மாதிரி
இன்னும் ஒரு காதலன்
உருவாகட்டும்  !

 
இந்தக் கவிதை கவிஞராக இருக்கும் ஒவ்வொரு காதலனின் உள்ளத்து உணர்வைப் படம் பிடித்த கவிதை இதோ !

என் கவிதைகளில்
எதோ ஒரு கவிதையை
நீ படிக்க நேர்ந்தால்
அந்தக் கவிதைதான்
என் கவிதைகளில்
சி
றந்த கவிதை !

காதல் தோல்வி நினைவுகளும் சுகமான சுமைதான்

நீ எனக்கு கிடைத்திருந்தால்
எப்போதோ
என் மனைவியாகி இருப்பாய்
கிடைக்காமல்
போனதால்தான்
இன்னும்
காதலியாகவே
இருக்கிறாய் !

இந்தக் கவிதை படித்ததும்
தபூ சங்கர்அவர்களுக்கு காதல் தோல்வி அடைந்ததன் காரணமாகவே மிகச் சிறந்த கவிதைகளை எழுதி வருகிறார் .காதல் வெற்றிப் பெற்று இருந்தால் இவ்வளவு கவிதைகள் எழுதி இருக்க முடியாது .

நீ இன்னும் என்னை
மறக்கவில்லை
அதனால்தான்
நான் இன்னும்
உயிரோடு
இருக்கிறேன்
.

இந்த நூல் படிக்கும் வாசகர்கள் அவரவர் காதலை அசைப் போடும் விதமாக  மிகச் சிறப்பாக கவிதை எழுதி உள்ள தபூ சங்கர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .காதல் கவிதைகள் எழுதுவதில் தனக்கென தனி இடம்  பிடித்துள்ளார்  தபூ சங்கர்.

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது