புதன், 30 செப்டம்பர், 2015

ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர் திருமதி கமலா அவர்கள் ஆசிரியராக இருந்து பயிற்றுவித்தவர்கள் பரிசு பெற்றனர்ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர் திருமதி கமலா அவர்கள் ஆசிரியராக இருந்து பயிற்றுவித்தவர்கள் பரிசு பெற்றனர்

தமிழ்ச் சுடர் முனைவர் நிர்மலா மோகன் அவர்களுக்கு பொற்கிழி வழங்கிய படங்கள் கவிஞர் இரா .இரவி

டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களின் 135 பிறந்த நாள் விழா வை முன்னிட்டு தமிழ்ச் சுடர் முனைவர் நிர்மலா மோகன் அவர்களுக்கு பொற்கிழி வழங்கிய  படங்கள் கவிஞர் இரா .இரவி
மகிழ்வோர் மன்றத்தில் பேசுகிறேன் .வருக ! வருக !

மகிழ்வோர் மன்றத்தில் பேசுகிறேன் .வருக ! வருக ! கொலு பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன காதி வஸ்திராலயத்தில்

கொலு பொம்மைகள் விற்பனைக்கு   உள்ளன காதி வஸ்திராலயத்தில்  குற்றப் பிரிவு காவல் நிலையம் எதிரில் திருப்பரங்குன்றம் சாலை .படங்கள் .கவிஞர் இரா .இரவிதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் நடைபெற உள்ளது .நானும் பேசுகிறேன் .வருக !வருக !

6.10.2015 அன்று மாலை மதுரை காந்தி  அருங்காட்சியகத்தில் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் நடைபெற உள்ளது .நானும் பேசுகிறேன் .வருக !வருக !


கவிஞர் இரா .இரவியும் பனையூர் இராஜாவும் நடனமாடிய படங்கள் இனிய நண்பர் கு .பாலமுரளி கை வண்ணத்தில் .

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை சார்பில் மதுரையில் நடந்த சுற்றுலா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது முடிவில் பனையூர் இராஜா குழுவினரின் கிராமிய நடனம் தப்பாட்டம் நடந்தது கவிஞர் இரா .இரவியும்  பனையூர் இராஜாவும் நடனமாடிய படங்கள் இனிய நண்பர் கு .பாலமுரளி கை வண்ணத்தில் .


மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு மாதங்கி மகளிர் மன்றம் சார்பில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கினார்கள் .பாராட்டுக்கள்

மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு மாதங்கி மகளிர் மன்றம் சார்பில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கினார்கள் .பாராட்டுக்கள் .
செவ்வாய், 29 செப்டம்பர், 2015

நன்றி .திரு .தமிழ் அரசு . இன்றைய சிந்தனை..

நன்றி .திரு .தமிழ் அரசு 
.
இன்றைய சிந்தனை..
...........................................

செய்வதற்கு முன் திட்டமிடுங்கள்.
........................................................................
ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.
அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும்.
இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன்.ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.
இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது.
இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று
பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.
இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.
மன்னன் வந்தான்.அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள்மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர்,''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''
தான் செல்ல இருந்த படகைப் பார்த்து விட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்று கொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''
கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.
மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.
படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான்,
''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''''தெரியும் மறு கரைக்குச் செல்கிறேன்!''' அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''
''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு
வரப் போவதில்லை!'''' பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''
''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா..? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்;அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக்
கொன்று விட்டார்கள்!
இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்;
காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.
மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!
நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி,குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.
இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டு மென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.
இந்தக் கதையின் மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை..?
பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.
ஒன்று :
ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்;
அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.
இரண்டு :
அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!
ஆம்,நண்பர்களே.,
நாமும் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!
எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள்.
அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்.
நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின்அதை செயல்முறை படுத்துங்கள்.. பின் வெற்றி உங்களோடு.. !

திங்கள், 28 செப்டம்பர், 2015

நன்றி . அழைப்பிதழ் தந்த வடக்கு மாசி வீதி திரு .நவநீத கிருஷ்ணன் அவர்களுக்கு


நன்றி . அழைப்பிதழ் தந்த வடக்கு மாசி வீதி திரு .நவநீத கிருஷ்ணன் அவர்களுக்கு 

நன்றி . தினமணி நாளிதழ் !


 நன்றி . தினமணி நாளிதழ் !

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு ஹைதராபாத்தில் பட்டிமன்றம் நடந்தது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு ஹைதராபாத்தில் நெஞ்சை அள்ளுவது சங்க காலப் பாடல்களா தற்காலப் பாடல்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது .தமிழ்ச் சுடர்   முனைவர் நிர்மலா மோகன் அவர்களும் ஹைதராபாத்தில் வாழும் தமிழ் அறிஞர்களும் வாதாடினார்கள் .
 நன்றி புகைப்படம் அனுப்பி உதவிய கலைமாமணி ஏர்வாடியார் அவர்களுக்கு .

கலங்கரை விளக்கம் ! கவிஞர் இரா .இரவி !


கலங்கரை விளக்கம் ! கவிஞர் இரா .இரவி !

படிக்காத மீனவனின் வழிகாட்டி
திக்குத் தெரியாதவனின் திசைகாட்டி
கலங்கரை விளக்கம் !

ஒளியின் வழி
காட்டிடும் வழி
கலங்கரை விளக்கம் !

நினைவூட்டியது
பெற்றோரையும் ஆசிரியரையும்
கலங்கரை விளக்கம் !

கலங்கியவனுக்கு ஆறுதல்
குழம்பியவனுக்கு தெளிவு
கலங்கரை விளக்கம் !

சுற்றுலாப் பயணிகளையும்
சுண்டி இழுக்கும்
கலங்கரை விளக்கம் !

குழந்தைகளுக்கும்
குதூகலம் தரும்
கலங்கரை விளக்கம் !

ஆதவனுக்கு அடுத்து
ஓய்வின்றி உழைக்கும்
கலங்கரை விளக்கம் !

இருளை விரட்டும்
ஒளியை உமிழும்
கலங்கரை விளக்கம் !

உயரமாக இருந்தாலும்
ஒருபோதும் கர்வமில்லை
கலங்கரை விளக்கம் !

பலருக்கு உதவியபோதும்
நன்றி எதிர்பார்ப்பதில்லை
கலங்கரை விளக்கம் !

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை சார்பில் மதுரையில் நடந்த சுற்றுலா விழிப்புணர்வு ஊர்வலம்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை சார்பில் மதுரையில் நடந்த சுற்றுலா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது முடிவில் பனையூர் இராஜா குழுவினரின் கிராமிய நடனம் தப்பாட்டம் நடந்தது.


நன்றி மதுரை மணி !

நன்றி மதுரை மணி !

திருவள்ளுவர் வலியுறுத்தியது விதியா ? மதியா ? .கவிஞர் இரா .இரவி !

திருவள்ளுவர் வலியுறுத்தியது  விதியா ? மதியா ?  .கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...