திங்கள், 30 ஜனவரி, 2012

ஹைக்கூ ஆற்றுப்படை » Buy Tamil Books online, Audio Books online from நூல் உலகம்

ஹைக்கூ ஆற்றுப்படை » Buy Tamil Books online, Audio Books online from நூல் உலகம்

மனதில் ஹைக்கூ » Buy Tamil Books online, Audio Books online from நூல் உலகம்

மனதில் ஹைக்கூ » Buy Tamil Books online, Audio Books online from நூல் உலகம்

சுட்டும் விழி » Buy Tamil Books online, Audio Books online from நூல் உலகம்

சுட்டும் விழி » Buy Tamil Books online, Audio Books online from நூல் உலகம்

இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

இலக்கிய சங்கமம்

நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

காவ்யா பதிப்பகம் சென்னை   விலை
ரூ 90

தமிழகத்தில் இலக்கிய இணையர் என்றால் தமிழ்த்
தேனீ  இரா .மோகன் ,தமிழ்ச்சுடர்   நிர்மலா மோகன் .கர்னாடகத்தில்  இலக்கிய இணையர் என்றால் முனைவர் இரா .சீனிவாசன் , முனைவர் அ.சங்கரி.இருவரும் பெங்களூர்த்   தமிழ்ச்சங்கத்தில் தங்களை இணைத்துக்    கொண்டு தமிழ்ப்பணி செய்து வருகின்றனர் .தமிழ் இலக்கியங்களை கன்னடத்தில் மொழி பெயர்க்கும் பணி செய்து வருகின்றனர் .திருக்குறளை கன்னடத்தில் படித்து இருந்தால் திருவள்ளுவர் சிலை திறப்பிற்கு பல வருடங்கள் தடை செய்து இருக்க மாட்டார்கள் என எண்ண தோன்றுகிறது . 

நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரிஅவர்கள் இலக்கிய சங்கமம் என்ற இந்த நூலில் தமிழ் இலக்கியத்தில் உள்ள நுட்பங்களை, பெருமைகளை ,ஆற்றல்களை வெளிப்படுத்தும் விதமாக மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்கள் .    நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி தமிழ் பேராசிரியராகவும் ,தமிழ்த்துறைத் தலைவராகவும் இருந்த காரணத்தால் இலக்கிய ஈடுப்பாட்டின் காரணமாக நல்ல ஆய்வு செய்து நூல் எழுதி உள்ளார்கள் .இந்த நூலைப் படித்து விட்டு ஒவ்வொரு தமிழரும், தமிழ் இலக்கியத்தில் உள்ள அளவிற்கு நல்ல கருத்துக்கள் உலகத்தில் வேறு எந்த மொழியிலும் இல்லை  என்று மார் தட்டிக் கொள்ளலாம் .

                    12 தலைப்புகளில்   மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பாக நூல் வந்துள்ளது .தமிழ் இலக்கியங்களில் இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டி உள்ளார் . மனோன்மணீயம் ,முத்தொள்ளாயிரம் ,பெரிய புராணம் ,திருக்குறள் ,கம்ப ராமாயணம் இவற்றில் உள்ள இயற்கைக் காட்சிகளை பாடல் வரிகளுடன் மிக அழகாக விளக்கி உள்ளார்கள் .
திருவள்ளுவர் -சமுதாய வழிகாட்டி என்ற தலைப்பில் உள்ளக் கட்டுரை உலகப் பொது மறையான
திருக்குறளின் சிறப்பை நன்கு எடுத்து இயம்பி உள்ளார் .   

திருக்குறள் அ என்னும்  உயிர் எழுத்தில் தொடங்கி ன்  என்னும் மெய் எழுத்தில் முடிகின்றது என்ற தகவல் நூலில் உள்ளது .
அறத்தின் சிறப்பு

அழுக்காறு  அவா வெகுளி இன்னாச்சொல்
ன்நான்கும் இழுக்கா இயன்றதறம்                               குறள் 35

முக்கியமான திருக்குறளும் அதற்க்கான விளக்கமும் மிகச் சிறப்பாக உள்ளது .
சித்திரம் வரையும் ஓவியன் ,தன்னுடைய அகக் கண்ணால் உணர்ந்து ,அழகான சித்திரத்தை வரைந்து ,தானும் மகிழ்வதுடன் பிறரையும் மகிழ்வடையச் செய்கிறான் .அதுபோல திருவள்ளுவர் தன் 
அகக் கண்ணால் உணர்ந்தவற்றை திருக்குறளின் வாயிலாக வடித்துக் காட்டி தானும் மகிழ்ந்து பிறரையும் மனம் மகிழச் செய்துள்ளார் .அதுபோல இந்நூல்   முனைவர் அ.சங்கரி தமிழ் இலக்கியங்களில் தான் படித்து மகிழ்ந்த காட்சிகளைக் கட்டுரையாக்கி   வாசகர்களை மகிழ்வித்துள்ளார் .

தமிழ் இலக்கியங்களில் கணிதம் என்ற கட்டுரைப் படித்து வியந்துப் போனேன்.கால அளவையாக தமிழன் அன்றே பயன்படுத்தியச் சொற்கள் பாருங்கள் .இமை ,நொடி , கடிகை ,நாழிகை,மணி இந்தச் சொற்கள் எந்தப் பாடலில் உள்ளது என்பதை விளக்கி உள்ளார்.
தமிழர்களின் விருந்தோம்பல் பற்றி எழுதுவதோடு நின்று விடாமல் ,  
பெங்களூர்த்   தமிழ்ச்சங்கத்தில் பட்டி மன்றம் பேச வந்த  தமிழ்த்தேனீ  இரா .மோகன் அணியினர் அனைவரையும் இல்லத்திற்கு அழைத்து ,தன் கைப்பட சமைத்து அருஞ்சுவை உணவு கொடுத்து ,தன் படைப்புகளான அரிய நூல்களில் கையொப்பம் இட்டுக் கொடுத்து ,அன்பைப் பொழிந்து   முனைவர் இரா .சீனிவாசன் , முனைவர் அ.சங்கரி இணையர் தமிழர்களின் விருந்தோம்பல்இன்றும் கடைப் பிடித்து வருகின்றனர் .

புகழ்ப்பெற்ற தசராப்  பண்டிகை வரலாறு பற்றி ஒரு கட்டுரை  உள்ளது .திருக்குறள் புறநானூறு ,தொல்காப்பியம் ,பரிபாடல் ,கம்ப ராமாயணம் தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்துப் படித்து ஆராய்ந்து நூல் எழுதி உள்ளார்கள் . பெண்ணியம் அன்றும் இன்றும் கட்டுரை மிகச் சிறப்பு .

ஆணாதிக்கம் விதைக்கும் சொல்லாடல்களுக்கான க
ன்டனத்தை நன்கு பதிவு செய்துள்ளார் .

பொம்புளை சிரிச்சாப் போச்சு
புகையிலை விரிச்சாப்
போச்சு

அறியாமை பெண்ணிற்கழகு

இந்திரன் கெட்டதும் பெண்ணாலே
சந்திரன் 
கெட்டதும் பெண்ணாலே

இது போன்ற
சொல்லாடல்கள் சமுதாயத்தில் ஒழிக்கப் பட வேண்டும் .
ஆளுமைத்திறன் பற்றிய கட்டுரையில் நற்றிணை பாடல் ,மகா கவி  பாரதியார் வைர வரிகளுடன் மிகச் சிறப்பாக மேற்கோள் காட்டி உள்ளார்கள் .

பெரிய புராணம் பற்றிய ஆய்வுக்
கட்டுரை மிக நன்று .பாரதியார் கவிதைகளில் மனித நேயம் மிக நல்ல ஆய்வு .மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் .தமிழ் இலக்கியங்கள் என்ற மலர்களில் இருந்து தேன்
எடுத்து இலக்கியத் தேன் விருந்து படைத்துள்ளார் .இலக்கிய சங்கமம் என்ற இந்த  நூல் .தமிழ் இலக்கியத்தின் சங்கீதமாக காதில் ஒலிக்கின்றது .

கர்னாடகத்தின்  இலக்கிய இணையர் முனைவர் இரா .சீனிவாசன் , முனைவர் அ.சங்கரி.இருவரும் இளம் வயதில்  ரகுநாத் என்ற மகனை இழந்த சோகத்தை மறக்க, இலக்கியத்தில் ஈடுபட்டு வெற்றிக் கொடி நாட்டி வருகின்றனர் .


அன்புடன்

இணையத்தில் இலக்கியம் படித்து மகிழுங்கள்

இணையத்தில் இலக்கியம் படித்து மகிழுங்கள்

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி

கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி
முல்லை பெரியாறு அணையை பிரிடீஷ் அரசு ஒதுக்கிய நிதி போதாமல் தன் சொந்த சொத்துக்களை வித்துக் கட்டினார்.திரு . பென்னி குக் என்ற மாமனிதர் .முல்லை பெரியாறு அணையை இடிக்க நினைப்பது அந்த தன்னலமற்ற தியாகி திரு .பென்னி குக் அவர்களுக்கு செய்யும் பச்சைத் துரோகம் வெள்ளையருக்கு இருந்த மனிதாபிமானம் கேரளா மனிதர்களுக்கு இல்லை .
புதிய அணை கட்டுகிறோம் என்ற பெயரில் சில கோடிகளை அரசியல் வாதிகள் சுருட்டுவதை தவிர வேறு ஒன்றும் நோக்கம் இல்லை .
காங்கிரஸ் அரசு இது வரை போட்ட திட்டங்களில் அரசியல் வாதிகள் சுருட் டியத்தைப் பார்த்து உலகமே சிரிக்கின்றது.
500ஆண்டுகளுக்கு திடமாக உள்ள அணையை உடைக்க வேண்டும் .புதிய அணை கட்ட வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள்.நன்றி மறந்தவர்கள் .நெய்வேலியில் இருந்து தமிழ் நாட்டு மின்சாரம் கேரளா செல்கின்றது .மாட்டுக் கறி உண்ண அடி மாடுகள் சாரை சாரையாக தினமும் கேரளா செல்கின்றது .அரிசி பருப்பு என அனைத்துப் பொருள்களும் தமிழகத்தில் இருந்துதான் செல்கின்றது .உண்டு கொளுத்து விட்டு வஞ்சனை செய்கிறார்கள் .
அணை இடிவது போல கிராபிக்ஸ் காட்சி குறுந்தகடு வெளியிட்டார்கள் .அணை இடிவது போல பித்தலாட்டமான படம் அணை 999 தயாரித்து உள்ளார்கள்.பாராளு மன்றத்தில் கேரளா அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஓரணியில் நின்று .புதிய அணை வேண்டும் என்று வம்பிற்கு குரல் கொடுக்கின்றனர்.ஆனால் தமிழக அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் இது வரை எந்தப் பிரச்சனைக்கும் ஓரணியில் நிற்பதே இல்லை .
பத்மநாபபுரம் கோயில் நகைகள் அனைத்தும் தமிழகத்திற்கு சொந்தம் என்று ஆய்வாளர்கள் ஆதாரத்துடன் விளக்கி உள்ளனர் .எனவே பத்மநாபபுரம் கோயில் நகைகள் அனைத்தும் தமிழகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்த வேண்டும் .
தமிழகத்தில் லட்சக் கணக்கான மலையாளிகள் பிரபல நகைக் கடைகள் ,ஜவுளிக் கடைகள் ,போக்கு வரத்து நிறுவனங்கள், தேநீர்க் கடைகள் என பலவாறு நிறுவனங்கள் நடத்திக் கொண்டு மிகவும் வளமாகவும் ,நலமாகவும் .பாதுகாப்பாகவும் வாழ்ந்து வருகிறார்கள். எனவே, இப்படி பல்வேறு காரணங்களை மனதில் கொண்டு கேரளா அரசியல்வாதிகள் திருந்த வேண்டும் .வதந்தி பரப்பும் அணை 999 திரைப்பட இயக்குனரை கைது செய்ய வேண்டும் .
மனித நேய அடிபடையில் மனிதாபிமான அடிப்படையில் நாடு அமைதியாக இருக்க கேரளா ஒத்துழைப்புத் தர வேண்டும் .வீண் வம்பை விலைக் கொடுத்து வாங்க வேண்டாம் என்று கேரளாவிற்கு எச்சரிக்கை செய்கிறோம் .இங்குள்ள மனிதாபிமானமுள்ள மலையாளிகளும் அவர்கள் சங்கத்தின் சார்பாக கேரளாவிற்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் .தமிழன் சண்டைக்குப் போக மாட்டான் அனால் வந்த சண்டையை விட மாட்டான். என்பது வரலாறு .
திடமாக உள்ள அணையை உடைக்க வேண்டும் .புதிய அணை கட்ட வேண்டும் என்று தொடர்ந்து பொய்யாகக் குரல் கொடுக்கிறார்கள். பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னாலும் மெய் ஆகி விடாது .பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு ,தமிழன் பொருத்தது போதும் என்று பொங்கி எழுந்தால் தாங்க முடியாது .மனிதாபிமானத்தை ஏமாளித்தனம் என்று தவறாக எண்ணி விடாதீர்கள் . மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு உடனடியாக எச்சரிக்கை செய்ய வேண்டும் .தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில்தான் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்டு கொண்டு இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் .

மின்மினி இரு மாத ஹைக்கூ இதழ் ஜனவரி இதழ் வெளியீடு

மின்மினி இரு மாத  ஹைக்கூ  இதழ்   ஜனவரி இதழ்  வெளியீடு

தேநீர் கோப்பையுடன் கொஞ்சம் ஹைக்கூ ஹைக்கூ நூல் வெளியீட்டு விழா .

தேநீர் கோப்பையுடன் கொஞ்சம் ஹைக்கூ ஹைக்கூ நூல் வெளியீட்டு விழா .

சனி, 28 ஜனவரி, 2012

மறையவில்லை முத்துக்குமார் இரா .இரவி

மறையவில்லை முத்துக்குமார்    இரா .இரவி

உடலால் உலகை விட்டு மறைந்த போதும்
உணர்வாளர்களின் உள்ளத்தில் என்றும் வாழ்கிறாய்

மரண வாக்கு மூலத்தை இறபிற்கு முன்
மின்னஞ்சல் அனுப்பி அதிர்ச்சியில் ஆழ்த்தினாய்

உலகில் தற்கொலை செய்வது கோழைத்தனம்
உந்தன் தற்கொலையோ நல் வீரத்தின் இலக்கணம்

உடலுக்கு தீ மூட்டி பரவிய ஒளியில்
உணர்வினை எமக்கு புகட்டிய புத்தன்

உந்தன் கோரிக்கையை ஆள்வோர் ஏற்று இருந்தால்
ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து இருப்பார்கள்

சர்வதேச சமுதாயத்திற்கு படு கொலைகளை
கவன ஈர்ப்பு செய்த திருமகன்

ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் காக்க வேண்டி
ஒப்பற்ற உன் உயிர் மாயித்த மா
வீரன்
ஈழத்தமிழர்கள் லட்சிய வரலாற்றில்
இனிய இடம் உனக்கு உறுதியாக உண்டு கொலைகாரன்களிடையே நடந்த தேர்தலில்
பெரிய கொலைகாரன் வெற்றி பெற்றான்
கொட்டு இல்லாமல் ஆடுவான் இனி
வெற்றி
க் கொட்டு கிடைத்ததால் கூடுதலாக ஆடுவான்
ஆணவக்காரர்களின் ஆட்டம் நிரந்தரம் அன்று
ஆதிக்கம் நிலைத்ததாக வரலாறு இல்லை

இருள் மறைந்து ஒளி பிறக்கும் உறுதி
தனித்தமிழ் ஈழம் விரைவில் மலர்வதும் உறுதி

தமிழ் ஹைக்கூ ஆயிரம்-தொகுப்பாசிரியர் முனைவர் இரா.மோகன் .மதிப்புரை: முனைவர் ச.சந்திரா

தமிழ் ஹைக்கூ ஆயிரம்-தொகுப்பாசிரியர் முனைவர்  இரா.மோகன்  eramohanmku@gmail.com

மதிப்புரை: முனைவர் ச.சந்திரா  neraimathi@rocketmail.com

கோபுர நுழைவாயில்:

       சேரமன்னர் பதின்மரின் வாகைசூடல் குறித்த பதிற்றுப்பத்து தோன்றியது சங்க காலம்!நூற்றுவரின் சமுதாயச் சாடல் குறித்த தொகுப்பு நூலாம் 'தமிழ் ஹைக்கூ ஆயிரம்'உருவானது இக்காலம்! இந்திய தேசத்தின் தென்கோடியில் வசிக்கும் முத்தான கவிஞர்களின் படைப்புக்களில் முனை முறியாத அட்சதை அரிசியாய்,பதின்நூறு தெரிவு செய்யப்பட்டு வடகோடியில் ஒளிர்விடும் சாகித்ய அகாதமியால்  வெளியிடப்பட்டிருக்கும் முனைவர் இரா.மோகன் அவர்களின் இத் தொகை நூல் ஹைக்கூ வரலாற்றில் அதிகமாய்   பேசப்படவிருக்கின்ற அற்புதநூல்! தன்னலம் கருதாது பொதுநலச்சார்போடு பல்லோரின் பாங்கானப் படைப்புக்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கும் இத்தகையப் பெருந்தகையாளருக்கு முத்தமிழ்க்காவலர் நினைவுப்பரிசு வழங்கப்பட்டிருப்பது பொருத்தமான ஒன்றுதானோ?

ஒன்பான்சுவையா?அறுசுவையா?

       மேல்கணக்கு பதினெட்டு பிறந்தது சங்ககாலம்!கீழ்க்கணக்கு பதினெட்டு பிறந்தது சங்கம் மருவிய காலம்!ஹைக்கூ தொகைநூல் பத்தொன்பது பிறந்தது இக்காலம்!முனைவர் இரா.மோகனின் இத்தொகுப்புநூல் பிறந்தததனால் ஹைக்கூவிற்குப் பொற்காலம்! விருந்திற்கு முன் தரப்படும் 'சூப்'-போல  வாசகர்களை நூல்வாசிப்பிற்குத் தயார்செய்கின்றது தொகுப்பு ஆசிரியரின் முன்னுரை!பின்னிணைப்புக்களோ விருந்தின் நிறைவில் வழங்கப்படும் 'ஐஸ்கிரீம்'-போல சுவைக்கின்றது!நூற்றுக்கவிஞர்களின் உணர்வுப்பூர்வமான ஹைக்கூக்களோ தலைவாழை இலையில் பரிமாறப்படும் அறுசுவை உணவாய் ருசிக்கின்றது

கலங்கரை விளக்கம்:

        யாதும் ஊரே;யாவரும் கேளிர் எம்மதமும் சம்மதம் எனும்படி-  மதுரை முதல் புதுவை வரை,வந்தவாசி முதல் வத்தலக்குண்டு வரை,சிவகங்கை முதல் செர்மனி வரை- தமிழ் தேசம் முதல் அயல்தேசம் வரையில் வாழும் இருபால்கவிகளின்   படைப்புக்கள்   இடம்பெறும் இந்நூல் பகுத்தறிவுப்பாதைக்கு மனிதர்களை இட்டுச்செல்கின்றது.இத்தொகுப்பில் சாதியம் நொறுக்கப்படுகின்றது.அறியாமை அலசப்பட்டிருக்கின்றது.மூடநம்பிக்கை ஊதப்பட்டிருக்க,.தமிழியம் ஓதப்பட்டிருக்கின்றது.மங்கிப்போ மனிதநேய ஜோதி தூண்டப்பட்டிருக்கின்றது.மொத்தத்தில் இந்நூலில் சமகால இழிநிலைகளுக்கு சாட்டையடி கொடுக்கப்பட்டிருக்கின்றது.

கதம்பமாலை:

       விழிகளும் மொழிகளுமாய்.பரிதியும் பால்நிலவுமாய்,மழைத்துளிகளும் மனிதநேயத்துளிகளுமாய்,இறகுகளும் சிறகுகளுமாய் ,எதிர்மறையும் நேர்மறையுமாய்,அஃறிணையின் கற்பித்தலும் உயர்திணையின் கற்றலுமாய் ,வினா-விடையும் வியத்தலுமாய்,தன்னம்பிக்கைச்சாலையில் நடை போடும் நன்னூல் இது!முள்ளும் முகவரி தேடும் இந்நூலில் ஒற்றை ரோஜா இதழ் திறந்து பேசுகின்றது!வண்ணங்கள் உடைபடுகின்றன!பூவும் தீயும் சந்தித்து உரையாடுகின்றன!கடவுளின் காலடி சத்தம் கூடக் கேட்கின்றது.ரேகைகள் சிவக்கின்றன!ஊசித்துளை வழியே ஓர் ஊர்வலமே நடக்கின்றது.மொத்தத்தில் கிழக்கு வெளுக்கின்றது.

தன்னம்பிக்கை ஊட்டும் தமிழன்பனின் ஹைக்கூ இதோ!
        "பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
        முத்தமிட்டுச் சொன்னது பூமி
        ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ ! "(.25)

தமிழியம் ஊட்டும் கவிஞர் இரா .இரவி ஹைக்கூ ஒன்று!
       “ தமிழன் என்று சொல்லடா!
        தலை நிமிர்ந்து நில்லடா!
        ஆங்கிலக் கையொப்பம் ஏனடா?”(.83)

தென்றல்நிலவனின் தெம்மாங்கு மின்பா ஒன்று!
          "மெதுவாய் வீசு காற்றே
          செடியில் பூத்திருக்கு!
          முதல் ரோஜா!"(.88)

இளந்தென்றலின் புயல் ஹைக்கூ இதோ!               !
       "சங்கங்கள் நெய்யூற்றினால்
       எப்படி அணையும்
       சாதீ?"( ப.87)

இளையதலைமுறையைச் சாடும் ஒரு ஹைக்கூ!
       பெற்றவர் பட்டினி
       நடிகருக்கு பாலாபிஷேகம்!
       இந்தியா இளைஞர்  கையில்!(.119.தமிழ்ச்செல்வி)  
         
யதார்த்தத்தைப் பறை சாற்றும் ஹைக்கூ ஒன்று!
         "நேற்று வரை தூற்றியவர்கள்
          நாளை முதல் போற்றுவார்கள்!
          இன்று அவன் இறந்துவிட்டான்!(.33.கழனியூரன்)

தொன்மக்குறியீட்டுப் பா ஒன்று!
       ஞானப்பால் கிடைக்கலையாம்
       தீக்குச்சி அடுக்கும்
       சிவகாசி ஞானசம்பந்தன்கள்!(ஸ்ரீரசா..89)       

மனமார...
       முத்தான கவிகளின்  மூவைந்து ஆண்டு காலப்படைப்புக்களை முனைப்புடன் தெரிவு செய்து தமிழன்னைக்கு புத்தாபரணமாய் சூட்டியிருக்கும் தொகுப்பாசிரியர் முனைவர் இரா.மோகன் அவர்களின் இலக்கியப்பணி தேசங் கடந்து தொடர என்போன்றோரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

--

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

 ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

விழித்த
விதை
விருட்சம்

தூங்கிய
விதை
குப்பை

மிகவும் ஒல்லி
பெயர்
குண்டுமலை

பார்த்தீனியமாகப்
பெருகியது
ஊழ
ல்   

விலைவாசி குறையுமா ?
விடியல் விளையுமா ?
ஏக்கத்தில் ஏழைகள்

இங்கிலாந்துக்காரனின்
இனிய சுவடுகள்
கல் கட்டிடங்கள்


அங்கிகரிக்கப்பட்ட
சூதாட்டம்
பங்குச்சந்தை

துன்ப இருள்
அகற்றும் விளக்கு
திருக்குறள் 


அறநெறிப்படுத்தி
அன்பைப் போதிக்கும்
ஆத்திச்சூடி

பெண்ணுரிமையின்
முதல் குரல்
கண்ணகி   


வெள்ளி, 27 ஜனவரி, 2012

தமிழில் புதிய முயற்சி லிபுன் கவிஞர் .இரா .இரவி

தமிழில் புதிய முயற்சி 

லிபுன்              கவிஞர் .இரா .இரவி

காதல் ஜோடி இருவர் .ஆனால் அருகே பலர் .நேரடியாகப் பேசிக் கொள்ள முடியாத சூழ்நிலை .இருவரும் அருகில் உள்ள பலருக்கும் தெரியாமலே விழிகளாலே பல பேசினார்கள் .சம்மந்தப்பட்ட    இருவருக்கும் நன்கு புரிந்தது .ஆனால் அருகில் இருந்த எவருக்கும் எதுவும் புரியவில்லை .காதல் மொழி பேச இதழ்கள் வேண்டாம் .விழிகளே போதும் என்று பேசிவிட்டு இருவரும் விடைப்பெற்று சென்றனர் .காதலி என்ன சொன்னாள்.காதல
ன் என்ன சொன்னான் என்பது இருவர் மட்டுமே அறிந்த ரகசியம் .

பேசும் அவள் விழிகள்
காதல் மொழி நாளும் சொல்லும்
ஒய்வு எடுத்தன இதழ்கள்


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
லிபுன்              கவிஞர் .இரா .இரவி மலர்க்கண்காட்சி யின்  உள்ளே நுழைந்தான் .பார்த்தான் பரவசம் அடைந்தான் .இத்தனை வண்ணங்களா ? வியந்தான் .இயற்கையின் இனிய கொடை எண்ணங்களை இனிமையாக்கியது.மலர்களில் எந்த மலர் சிறந்த மலர் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் விழி பிதுங்கி நின்றான் .
ஒவ்வொரு மலரும் ஒருவித அழகு .வாழ்நாள் குறைவு என்றாலும்,வாடாமல் சிரிக்கும் மலர்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டான் .  
மலர்க்கண்காட்சி காண்பது    மனதிற்கு மகிழ்ச்சி ,குளிர்ச்சி என்பதை உணர்ந்தான் .

மனதை வருடும் 
மலர்க்கண்காட்சி
மண்ணில் மலர்ந்த மலர்களின் ஆட்சி
பரவசம் பார்த்தவர்கள் சாட்சி

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

வியாழன், 26 ஜனவரி, 2012

கவிஞர் இரா .இரவி தன் செல்லிடப்பேசியில் எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

கவிஞர் இரா .இரவி  தன் செல்லிடப்பேசியில்  எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

கவிஞர் இரா .இரவி தன் செல்லிடப்பேசியில் எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

கவிஞர் இரா .இரவி  தன் செல்லிடப்பேசியில்  எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

கவிஞர் இரா .இரவி தன் செல்லிடப்பேசியில் எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்


கவிஞர் இரா .இரவி  தன் செல்லிடப்பேசியில்  எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

கவிஞர் இரா .இரவி தன் செல்லிடப்பேசியில் எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

கவிஞர் இரா .இரவி  தன் செல்லிடப்பேசியில்  எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

கவிஞர் இரா .இரவி தன் செல்லிடப்பேசியில் எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

கவிஞர் இரா .இரவி  தன் செல்லிடப்பேசியில்  எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

கவிஞர் இரா .இரவி தன் செல்லிடப்பேசியில் எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

கவிஞர் இரா .இரவி  தன் செல்லிடப்பேசியில்  எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

உணவுத் திருவிழாவில் உணர்வுத் திருவிழாவாக கவியரங்கம் நடைப்பெற்றது

மதுரையில் நடந்த உணவுத் திருவிழாவில் உணர்வுத் திருவிழாவாக கவியரங்கம் நடைப்பெற்றது .தலைமை கவிஞர் பொற்கை பாண்டியன் உடன் கவிஞர்கள் இரா .இரவி ,அருச்சுனன் ,கா .கண்ணதாசன் கவிதை வாசித்தனர் .  

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ     கவிஞர் இரா .இரவி 
 விதைத்தவர் இல்லை
வளர்ந்து சிரித்தது
மரம்

உருவம் இல்லை
உணர்வு இனிது
தென்றல்

அங்கீகரிக்கப்பட்ட
கை
யூட்டானது
வரதட்சணை

விலை ஏறும் தங்கம்
வேதனையில்
பெற்றோர்

பணி ஒய்வுப் பெற்றாலும்
சிந்தனை 
ஒய்வு இல்லை
எழுத்தாளர்

பறக்கும் பட்டத்துடன்
சேர்ந்து பறந்தது
மனசு

உடலுக்கு மட்டுமல்ல
உள்ளத்திற்கும் நல்லது
காய்கறிகள்

காரணப்பெயரோ ?
ஆங்கிலத்தில்
வெண்டிக்காய்

பாவாடை அணிந்த
காய்
கத்தரிக்காய்

உணர்த்தியது
வாழ்வின் வெறுமை
வெங்காயம்

கூடியது சுவை
இலையில் இட்ட
உணவு

பறித்ததும் சிரித்தது
அற்ப ஆயுள்
ரோஜா

இதழ்கள் சொல்லவில்லை
கூந்தல் சொல்லியது
வருகிறேன்

இல்லை என்றால்
மிகவும் சிரமம்
மின்சாரம் சம்சாரம்

  

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!


ஹைக்கூ கவிஞர் இரா. இரவி

ஹைக்கூ            கவிஞர் இரா. இரவி 

மலரே ரசித்தது
மலர்க்  கண்காட்சி
என்னவள்

வண்ணங்கள் எத்தனை
உணர்த்தியது 
மலர்க்  கண்காட்சி

இயற்கையின் மேன்மை
இனிதே சொல்லியது
மலர்க்  கண்காட்சி


நினைவிற்கு வந்தது
சரவிளக்கு
பொன்சாய்மரம் 


பலன் தரவில்லை
பெயர்
வாகை மரம் 


பயணத்தில்
உடன் வரவில்லை
வந்தால் நினைவில்


வரப்பு உயர
நீர் உயரும்
வரப்பு ?


எங்கெங்கோ மலர்ந்த
மலர்களை இணைத்தது
நார்

 எங்கெங்கோ பிறந்த
இருவரை இணைத்தது
காதல்

வழியே
தெரியவில்லை
வழிகாட்டி ?

சிறகுகள் அ
சைத்து
 சிகரம் தொட்டது
பறவை

விலைவாசி
ஆலைக் கரும்பாக
மக்கள்

காற்றாடி
சுழன்று
தந்தது மின்சாரம்

 

விலை ஏறியது
வருத்தமில்லை
குடிகாரன்

சென்னையில் நடந்த முனைவர் வெ.இறையன்பு அவர்களின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா புகைப்படங்கள்

சென்னையில் நடந்த முனைவர் வெ.இறையன்பு அவர்களின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா  புகைப்படங்கள்   

புதன், 25 ஜனவரி, 2012

மைசூர் புகைப் படங்கள்

மைசூர் புகைப் படங்கள் ,தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன், .கவிஞர் இரா. இரவி,முத்து இளங்கோவன், திருநாவுக்கரசு

பெங்களுர்த் தமிழ்ச் சங்கத்தில்

பெங்களுர்த் தமிழ்ச் சங்கத்தில் முத்தமிழ்க்  காவலர் விருதுப் பெற்ற தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன் அவர்களுக்கு பாராட்டும், தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது .உடன் பெங்களுர்த் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மு .மீனாட்சி சுந்தரம் செயலர் கோ .தாமோதரன் ,பேராசிரியர் சீனிவாசன்   ,தமிழ்ச்  சுடர் முனைவர் நிர்மலா மோகன்,முனைவர் சங்கரி ,கவிஞர் இரா. இரவி,முத்து இளங்கோவன், திருநாவுக்கரசு   ,பெங்களுர்த் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள்.
--

வெள்ளி, 20 ஜனவரி, 2012

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்மேனிலை ப் பள்ளி மாணவர்களுக்கான கவிதை கட்டுரை பேச்சுப்போட்டிகள் நடந்தது

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்மேனிலை ப் பள்ளி மாணவர்களுக்கான கவிதை கட்டுரை பேச்சுப்போட்டிகள்  நடந்தது

மதுரை கேப்ரங்கால் மகளிர் மேனிலைப் பள்ளியில் நடைப் பெற்றது. பள்ளியின் தேசிய மாணவிகள் படையின் மரியாதை அணிவகுப்பு நடந்தது .

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்மேனிலை ப் பள்ளி மாணவர்களுக்கான கவிதை கட்டுரை பேச்சுப்போட்டிகள்  நடந்தது

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்   மேனிலை ப் பள்ளி மாணவர்களுக்கான கவிதை கட்டுரை பேச்சுப்போட்டிகள் நடந்தது. வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கி பாராட்டும் விழா மதுரை கேப்ரங்கால் மகளிர் மேனிலைப்  பள்ளியில் நடைப் பெற்றது. பள்ளியின் தேசிய மாணவிகள் படையின் மரியாதை அணிவகுப்பு நடந்தது .

தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் முனைவர் க .பசும்பொன் வரவேற்றார் .பள்ளியின் தாளாளர் திரு .மார்த்தாண்டன் தாமஸ், உதவி சுற்றுலா அலுவலர் கவிஞர் இரா.இரவி,கவிஞர் பாண்டுரங்கன் ,புலவர் ஆறுமுகம் எழுத்தாளர் கர்ணன், கனல்பூக்கள்   ஆசிரியர் கவிஞர் சாந்தி  ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் சு .நாகராச முருகன்  வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கி,சிறப்புரையாற்றினார் .மூன்று போட்டிகளுக்கும் தலா   முதல் பரிசு ரூபாய் 10000 இரண்டாம் பரிசு ரூபாய் 7000
  பள்ளியின் தலைமை ஆசிரியர் லீலா மனோகரி நன்றி கூறினார்.

 முடிந்த அளவிற்கு ஆங்கிலச் சொல் கலப்பின்றி நல்ல தமிழில் பேசுங்கள் .மம்மி டாடி என்று அழைப்பதை விடுத்து  அம்மா ,அப்பா என்று அழையுங்கள் ,தொலைக் காட்சித் தொடர்களைப் பார்க்காதீர்கள் போன்ற வேண்டுகோள் மாணவ, மாணவியரிடம் விடுக்கப்  பட்டது .

 

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...