ஒரு விதையின் வினா கவிஞர் இரா .இரவி

ஒரு விதையின் வினா             கவிஞர் இரா .இரவி

பறவை ஒன்று பழத்தைத் தின்று
கொட்டையை விட்டுச் சென்றது !

மண்ணில் விழுந்த நான்
மழை நீரால் துளிர்த்து வளர்ந்தேன் !

நான் வளரக் காரணமான மழை
வரக் காரணமானேன் நான் !

உனக்கு நிற்க நிழல் தந்தேன்
நீ புசிக்க நல்ல பழங்கள் தந்தேன் !

நீ சுவாசிக்கத்
தூயக் காற்றுத் தந்தேன்
உந்தன் நோய் தீர்க்கும் மருந்து தந்தேன் !

பறவைகளும் வந்து அமர்ந்து
பழம் தின்று  பறந்து சென்றன !
நன்றி மறந்து என்னை பணத்திற்காக
நீ  விலைப் பேசி விற்று விட்டாய்  !    
 
என்னை வாங்கியவன்  வருகிறான்
இரக்கமின்றி வெட்டக் கோடாரியோடு !

என்னை விற்ற உன்னிடம் ஒரு கேள்வி
என்னை விட்டுச் சென்றது ஒரு பறவை !
என்னை நட்டவன் நீ இல்லை
என்னை விற்க உனக்கேது உரிமை !




--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்