காதல் ! கவிஞர் இரா .இரவி !

காதல் !  கவிஞர் இரா .இரவி !



கவிதை வழங்கும் 
அட்சயப் பாத்திரம் 
காதல் ! 

முக்காலமும் 
பாடு பொருள் 
காதல் ! 

மூன்றெழுத்து முத்தாய்ப்பு 
மூச்சு இருக்கும்வரை நினைப்பு 
காதல் ! 

ஒன்றும் ஒன்றும் 
இரண்டல்ல ஒன்று 
காதல் ! 

கவிதை வரும் 
விதையென வளரும் 
காதல் ! 

நினைவலை தொடரும் 
மகிழ்ச்சி பரவும் 
காதல் ! 

முகம் மலரும் 
அகம் குளிரும் 
காதல் ! 

சிறகுகள் முளைக்கும் 
சிந்தனை பறக்கும் 
காதல் ! 

சொல்லில் அடங்காது 
சொன்னால் புரியாது 
காதல் ! 

ஊடல் இன்றி 
ஒருவரும் இல்லை 
காதல் !

கண்களில் தொடங்கி மூளையில் பதிந்து 
உதட்டில் வழியும்  
காதல் ! 

திரைப்படத்தில் ரசிப்பு 
இல்லத்தில் எதிர்ப்பு 
காதல் !

நாவலில் விருப்பு 
நம் வீட்டில் வெறுப்பு 
காதல் !

நேரடியாக சந்திக்காவிட்டாலும்  
நினைவுகள் சந்திக்கும் 
காதல் !

இணையற்ற இணை 
என்றனர் 
எங்களை !

காணமல் போகும்
கவலை 
அவள் சிரித்தால் !

இருட்டிலும் 
ஒளிர்கின்றன 
அவள் விழிகள் !

வாசனை திரவியங்கள் 
தோற்றன 
கூந்தல் வாசம் !

எந்த  ஆடையும் 
அழகாகின்றன 
அவள் அணிந்தால் !

நின்றால் அழகு 
நடந்தால் அழகோ அழகு 
அவள் !

ஊட்டம் தரும் 
உமிழ்நீர் பரிமாற்றம் 
முத்தம் !.

சிமிட்டாமல் பார்ப்பதில் 
சிங்காரி வென்றாள்
தோற்றேன் நான் ! 



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !



கருத்துகள்