கவியரசு கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி !


கவியரசு கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி ! 

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து
எட்டாத உயரம் உயரந்தவன் நீ

கவியரசு பட்டத்திற்கு முற்றிலும்
குவலயத்தில் பொருத்தமானவன் நீ

நான் நிரந்தரமானவன் என்று அறிவித்து
நிரந்தரமாக மக்கள் மனதில் நிலைத்தவன் நீ

உன் பாடல் ஒலிக்காத வானொலி இல்லை உலகில்
உன் பாடல் ஒலிக்காத வானொலி வானொலியே இல்லை

ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினரும்
அன்போடு ரசிக்கும் பாடல் உன் பாடல்

எனக்குப் பிடித்த மதம் தாமதம் என்றுரைத்து
சினம் கொண்ட அவையைச் சிரிக்க வைத்தவன் நீ

படைத்தவன் யார் ?என்பது முக்கியம் அல்ல
படைப்பைப் பாருங்கள் என்று அறிவுறுத்தியவன் நீ

உனக்கு இணையான ஒரு கவிஞன்
உனக்கு அடுத்து யாருமில்லை என்பதே உண்மை

உனக்கு நிகர் நீ மட்டுமே தான்
உன்னை விஞ்சிட எவருமில்லை உலகில்

தொகைக் குறிப்பிடாதக் காசோலைத் தந்தபோதும்
தொகைக் குறிப்பிட ஆசைப் படாதவன் நீ

பணத்திற்காக ஏங்கும இந்த உலகில்
பணத்திற்காக ஏங்காத நல்லவன் நீ

செருக்கோடு இருந்த திரை உலகில் பலரின்
செருக்கை அகற்றிய கவிஞன் நீ

கண்ணதாசனே உன் இயற்ப் பெயர் முத்தையா
கற்கண்டென நீ வடித்த பாடல்கள் தமிழின் சொத்து ஐயா

எங்கு நீ கற்றாய் இத்தனை வித்தை
இனிய பாடல்கள் பதிந்து மனதில் விதையாக

காலத்தால் அழியாத கல்வெட்டு வரிகளை
காற்றினில் விதைத்த சகல கல வல்லவன் நீ !



கருத்துகள்