மொட்டுகளின் வாசம் ! மாணவர்களின் கவிதை தொகுப்பு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

மொட்டுகளின் வாசம் !

மாணவர்களின் கவிதை  தொகுப்பு .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .வெளியீடு வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் ,தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி,தேவகோட்டை.
 .
ஒருங்கிணைப்பு    .சுழல் பதிப்பகம் ,32.தில்லை நகர் 2-வது தெரு .மானகிரி ( அ ),காரைக்குடி வட்டம் ,சிவகங்கை மாவட்டம் .
630307
விலை ரூபாய் 15
ஒரு சில மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கி விட்ட செய்தி படித்து மாணவ சமுதாயமே   பாழ்
அடைந்து விட்டதோ ? என்று வருத்தத்தில் இருந்தபோது, இந்த நூல் கைக்கு வந்தது .மாணவர்கள் பலர் படைப்பாற்றலோடு உள்ளார்கள் என்று பறை சாற்றும் விதமாக ,தேவகோட்டை ,தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கவிதை  தொகுப்பு வந்துள்ளது .மாணவர்களை ஆற்றுப்படுத்தினால், நெறிப்படுத்தினால் ,பயிற்றுவித்தால்    அளப்பரிய சாதனை நிகழ்த்துவார்கள் என்பதற்குச் சான்று இந்த நூல் .வருடா வருடம் பள்ளி இறுதி விடுமுறை தினங்களில் " இளமைக்கனல்" என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிறித்தவ பள்ளிகளில் இலக்கிய ஆர்வம் உள்ள மாணவர்களை மதுரையில் உள்ள புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளிக்கு   வரவழைத்து படைப்பாற்றல் பயிற்சி தருகின்றனர் . இனிய நண்பர் ஆசிரியர் ஞா .சந்திரன் அழைப்பின் பெயரில் சில வருடங்களாக பயிற்சிக்கு வந்த மாணவர்களுக்கு ஹைக்கூ கவிதை எழுதும் பயிற்சி தந்தேன் .அந்த மாணவர்களின் ஹைக்கூ தொகுப்பு இந்த நூல் என்பதில்  மகிழ்ச்சி அடைந்தேன் .பள்ளியின் 69 வது ஆண்டு விழா வெளியீடாக வந்துள்ளது .

மொட்டுகளின் வாசமே நறுமணம் கமழ்கின்றது .மொட்டுகள் மலராகும் போது வரும் வாசம் பரவசம் தரும். "விளையும் பயிர் முளையிலேயே தெரியும்" என்பது போல வருங்கால கவிஞர்களின் அற்புதப்  படைப்பாக இந்நூல் வந்துள்ளது .இனியவர், மனித நேயர் ,இலக்கிய ஆர்வலர் , அருள்பணி ந .இக்னேசியஸ் பிரிட்டோ அவர்களின் அணிந்துரை அழகுரை. ஆசிரியர் ம .ஸ்டீபன் மிக்கேல்ராஜ் அவர்களின்  வாழ்த்துரை மிக நன்று. இந்நூலில் 26 மாணவர்களின் 74 ஹைக்கூ கவிதைகள் உள்ளது .இதில் பல மாணவர்களின்   பல ஹைக்கூவும் ,சில மாணவர்களின்  ஒரே ஒரு ஹைக்கூவும் எழுதி உள்ளனர் .பதச் சோறாக தலா ஒரு மாணவருக்கு ஒரு ஹைக்கூ மேற்கோள் காட்டி உள்ளேன் .

கூடங்குளம் அணு உலை கழிவு கடலில் கலந்தால் மீன்கள் சாகும் ,வாழ்வாதாரம் பாதிக்கும். என்று அச்சப்படும்  மீனவர்களின் உள்ளத்து உணர்வை உணர்த்தும் உன்னத ஹைக்கூ .
பூ .சந்திர சேகர்         8 ஆம் வகுப்பு
-------------------------------------------------------
கடலில் இரசாயனக் கலப்பு
இலவசமாய் இறந்தன
மீன்கள் !


இலங்கை சிங்களப்படை காட்டுமிராண்டித் தனமாக தமிழக மீனவர்களை சுட்டும் வீழ்த்தும் அவலத்தை தட்டிக் கேட்க 
நாதி இல்லை .என்பதை சுட்டும் ஹைக்கூ .
எஸ் .அஜீத் குமார் .
         8 ஆம் வகுப்பு
-------------------------------------------------------
கடலில் வலை வீசினான்
சிக்கியது
தமிழ் மீனவர் பிணம் !


அன்று மனிதனை நெறிப்படுத்த ஏற்படுத்தப் பட்ட மதங்கள் இன்று மனிதனை வெறிப்படுத்தும் வேலையை செய்து மனிதனை விலங்காக்கி வரும் அவலம் பற்றி .
க .விக்னேஸ்வரன் 
        8ஆம் வகுப்பு
-----------------------------------------------------
ஏவிவிட்டதும்
இரத்த வெள்ளம்
மதவெறி !    


அன்று தனியார்கள் சேவை செய்ய கல்வித்துறைக்கு வந்தனர் .ஆனால் இன்று தனியார்கள் கொள்ளை அடிக்கவே கல்வித்துறைக்கு வருகின்றனர் .அதனை உணர்த்தும் ஹைக்கூ .
வே .பிரவின் குமார்       
8ஆம் வகுப்பு
-------------------------------------------
கல்லூரி சீட்டுக்கு
அடகானது
அம்மாவின் தாலி !
ஆனால் இன்று அடகு மட்டும் வைத்தால் பணம் போதாது விற்க வேண்டிய நிலை .அம்மா கழுத்தில் மஞ்சள் கயிறுதான் மிச்சம் .

கல்வியின் மேன்மையை உணர்த்தும்ஹைக்கூ
எம் .பிரகாஷ் 
8ஆம் வகுப்பு
-----------------------------------------------------
ஊன்றுகோல்  எதற்க்கு
கற்ற கல்வி
கையில் !


பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர் .அதனை மாணவர்கள் உணர்ந்து படிக்க வேண்டும் என்று உணர்த்தும் ஹைக்கூ .
ஜோ .மில்டன் அமல ரூபன்   9 ஆம் வகுப்பு

--------------------------------------------------------------
கரும்பலகையில் தெரிந்தது
தாய் தந்தையின் வியர்வை
எதிர்காலமாய் !

புதிய சிந்தனையுடன் பாலித்தீன் பை கேடு உணர்த்தும் ஹைக்கூ .
ச .சிவசுப்பிரமணியன்    
8ஆம் வகுப்பு
---------------------------------------------------------
வண்ணக் கல்லறைகளில்
உறங்கும் காய்கறிகள்
கேரிபேக் !

நெஞ்சில் துணிவுடன் ,நேர்மை திறத்துடன் நாட்டு நடப்பை பதிவு செய்துள்ள ஹைக்கூ .
க .காட்வின்  
9 ஆம் வகுப்பு
-------------------------------------------------------------
வீட்டில் நாய்கள்
நாட்டில் அரசியல்
ஜாக்கிரதை !


புகை என்பது பகை .அன்று நடிகர்களைப் பார்த்து மாணவர்கள் புகை பிடித்தனர் .இன்று மாணவர்களே புகைக்கு எதிராக கவிதை வடித்துள்ளனர் .
மு .யோகராஜ்   
8ஆம் வகுப்பு
----------------------------------------------------
சிறிய உரு
க்கொண்ட
பிணப்பெட்டி
சிகரெட்  !


குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டுமென்று உரக்கக் குரல் தரும் விதமான ஹைக்கூ .
ச .கார்த்திக்       
8ஆம் வகுப்பு
-------------------------------------------------------
பட்டாசு ஆலைச் சிறைகளில்
பட்டாம்
பூச்சிகள்குழந்தைத் தொழிலாளர்கள் !

நமது நாட்டில் ஏவு கணைகள் ஏவுவதற்கு பல கோடிகள் விரயம் செய்த போதும் ,ஏழை விவசாயி பசி போக்க ஒன்றும் செய்வதில்லை .விவசாயிகளின் தற்கொலை தடுக்க முடிய வில்லை .விவசாயத்தை   செழிக்க வைக்க திட்டம்  தீட்ட வில்லை .அதனை சுட்டும் ஹைக்கூ .
சுப .மணிமாறன்   
12 ஆம் வகுப்பு
-----------------------------------------------------
எல்லை கடந்து வெல்லும் தங்கம் இந்தியா
கடக்காத எல்லை
வறுமைக் கோடு  !


பாதையை தவறாக்கும் போதையை கண்டித்து எழுதியுள்ள ஹைக்கூ .
என் .நவீன்     
8ஆம் வகுப்பு
---------------------------------------
சில்லரை  கொடுத்து
கல்லறை செல்கிறான்
மதுபானக் கடை !
அன்று உலகப் புகழ் பெற்ற இந்தியா.இன்று ஊழல்ப் புகழ் பெற்ற இந்தியா என்றானது .இன்றைய அரசியல்வாதிகளின் தலைகுனிவு செயலால் , உலக அளவில் இந்தியர் என்றால் பெருமைப்பட்ட காலம் போய் விட்டது .எங்கும் எதிலும் ஊழல்.என்ற அவலம் சுட்டும் ஹைக்கூ .
சு .மணிகண்டன்.      9 ஆம் வகுப்பு
-----------------------------------------------------------------------
ஒலிம்பிக்கில்  வெண்கலம்
   
ழலில் தங்கம்
இந்தியா !

காந்தியடிகளின் குரு டால்ஸ்டாய் ,டால்ஸ்டாயின் குரு நமது திருவள்ள்ளுவர் .
உலகப் பொதுமறையான  திருக்குறளின் மேன்மை உணர்த்தும் ஹைக்கூ .
எம் .யுவராஜ் .    8
ஆம் வகுப்பு
---------------------------------------------------
அடிகளைக் கண்டு அஞ்சினர்
ஆங்கிலேயர்கள்
திருக்குறட்பா !


பிள்ளைகள் பெற்றோர்கள் தம்மை கஷ்டப்பட்டு   வளர்த்திட்ட நன்றி மறந்து ,பெற்றோர் இடமிருந்து சொத்துகளை அபகரித்து விட்டு அவர்களை அவதிப்பட வைக்கின்றனர் .பிள்ளைகள் வளர்த்த பெற்றோரை கைவிடும் அவலம் சொல்லும் ஹைக்கூ .
ஜா .முத்து
.     9 ஆம் வகுப்பு
-----------------------------------------------------
அண்ணனுக்கு வீடு
தம்பிக்கு விளைநிலம்
தாயுக்கு திருவோடு !


இயற்கையை மனிதன் பேண  வேண்டும் என்று உணர்த்தும் ஹைக்கூ .
சி .கபிலன்.    
9 ஆம் வகுப்பு
--------------------------------------------------------
மனிதன் பாதி
மரம் பாதி
இணைந்ததே இயற்கை !

வாகனப் புகை சுவாசிக்கு
ம் காற்றை மாசு படுத்தும் உண்மையை உணர்த்தும் ஹைக்கூ .
ப.செபஸ்டியன்
கில்பட் .     7 ஆம் வகுப்பு
----------------------------------------------------------------
ஓடும் வாகனம்
விடும் மூச்சு
கருத்தது காற்று !  


குழந்தையை குப்பைத் தொட்டியில் போடும் மனிதாபிமானமற்ற செயலைக்  கூறும் ஹைக்கூ .
ரூபன் விஜய் . 
9 ஆம் வகுப்பு
------------------------------------------------------------
தாய் மடியானது
குப்பைத் தொட்டியில்
பெண்சிசு ! 


தண்ணீரை உறிஞ்சி எடுத்து பூமியை நிர்மூலம் ஆக்கும் அவலம் சுட்டும் ஹைக்கூ .
வே .பிரவின் குமார்
----------------------------------------------------
ஆள் துளைக் கிணறு
பீய்ச்சி  அடித்தது
பூமியின் கண்ணீர் !


மனிதன் ஒருவன் இறக்க ஓராயிரம் மலர்களை இரைந்து இறக்க வைக்கும் கொடுமை உணர்த்தும் ஹைக்கூ
ச .பரந்தாமன்.       8
ஆம் வகுப்பு
------------------------------------------
மனித மரணம்
வாச
த்திற்கா
மரிக்கும் மலர் !

தினந்தோறும்  செய்தித்தாளில் அரசியல்வாதிகளின் புதுப்புது
ழல் அம்பலமாகி வருகின்றது .அதனை நினைவுப் படுத்தும் ஹைக்கூ .
மு .நிரேஷ் குமார் .   11
ஆம் வகுப்பு
---------------------------------------------------
கொள்ளை அடிப்பதற்கும்
ழல் செய்வதற்குமா?
சுதந்திர இந்தியா !


தொலை நோக்கு சிந்தனையுடன் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தா விட்டால் இந்த நிலை வரும் என்பதை எச்சரிக்கை செய்யும் ஹைக்கூ .
சு .மணிகண்டன் .     
9 ஆம் வகுப்பு
--------------------------------------------------
நியாயவிலைக் கடை
ஒரு குடும்பத்திற்கு
ஒரு லிட்டர் தண்ணீர் !

சிலர் பதவிகளை விலை கொடுத்து வாங்கும் நிலையை சுட்டும் ஹைக்கூ .
ம .சுபாஷ் .     
10 ஆம் வகுப்பு
----------------------------------------------------------------------------
பணமிருந்தால்
பெட்டிக்கடையில்
கூட வாங்கலாம்
பதவி !


சாதிக்கு ஒரு சுடுகாடு தந்திட்ட சாதிக்கு சுடுகாடு தருவது என்று ? தீண்டாமை சாகாமல் இன்னும்
மயா
னத்தில் இரட்டை சுடுகாடு மூலம் வாழ்கின்ற   அவலத்தை சுட்டும் ஹைக்கூ .
மு .மிதுன்   
7 ஆம் வகுப்பு
------------------------------------------------
சவக்குழி சென்றும்
சாகாமல் வாழ்கின்றது
சாதி !

கல்வியின் உயர்வை உணர்த்தும் ஹைக்கூ
எம் .காளிமுத்து
11 ஆம் வகுப்பு
---------------------------------------------------
வேலைக்குச்  சென்றான் தீர்ந்தது பசி
பள்ளிக்குச் செல்லா
தால்
தெரியவில்லை கல்விருசி !

சித்தர்கள் பாடல்கள் போல ஜென் தத்துவங்கள் போல ஒரு ஹைக்கூ .வி .பிரவின்     8 ஆம் வகுப்பு
------------------------------------------------------------------------------
சவ ஊர்வலம்
வழியெங்கும் கதறி அழுகின்றன
நாளைய பிணங்கள் !

மேல் நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் படைப்புகள் .
மாணவர்களின் சிந்தனை அபாம். அற்புதம். பாராட்டுக்கள் .கவிதைக்கு மிகவும் பொருத்தமான ஓவியம் மிக நன்று .திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் ஓவியம் மிக மிக  நன்று .இந்த ஓவியத்தின் சிறப்புக் கண்டு வியந்து ,என் புதிய நூல் வடிவமைக்கும் இனிய நண்பர் மின்மினி ஹைக்கூ இதழ் ஆசிரியர் கன்னிக் கோவில் ராஜா அவர்களிடம் என் நூலிற்கான ஓவியங்களை திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் அவர்களிடம் வரைந்து வாங்குங்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளேன் .
தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி யின் தலைமை ஆசிரியர் அருட் தந்தை, இனியவர், அருள்பணி ந .இக்னேசியஸ் பிரிட்டோ அவர்களை பாராட்ட வேண்டும் .நூலாக வெளியிட்டமைக்கு பாராட்டுக்கள் மற்ற பள்ளிகளிலும் படைப்பாற்றல் பயிற்சி தந்தால் இது போன்ற மாணவ படைப்பாளிகள் உருவாகுவார்கள் என்பது உறுதி. ஒரு சில கவிதைகள் நான்கு வரிகள் உள்ளது .அடுத்த பதிப்பில் மூன்று வரிகளாக சுருக்கி வெளியிடுங்கள் ஹைகூவிற்கு  இலக்கணம் மூன்று வரிகள்.

கருத்துகள்