என் வாழ்வே ! எனது செய்தி ! காந்தியடிகள் ! கவிஞர் இரா .இரவி .

என் வாழ்வே ! எனது செய்தி ! காந்தியடிகள் !      கவிஞர் இரா .இரவி .

அரிச்சந்திரன் நாடகம் பார்த்தார்
காந்தியடிகள்
ம்மா அப்பா மதிக்கும் சிரவணன் கதை கேட்டார் !

சட்டம் படிக்க இங்கிலாந்து புறப்பட்ட போது
சாதியை விட்டு விலக்கப் போவதாக  மிரட்டினார்கள் !

மிரட்டலுக்கு அஞ்சவில்லை
காந்தியடிகள்
மிடுக்குடன்
இங்கிலாந்து பயணமானார் !

அன்னைக்கு தந்த சத்தியத்தை உயிரெனக் காத்தார்
அசைவம் மது மாது எதுவும் தொட வில்லை !

தென்ஆப்பிரிக்கா தொடர் வண்டியில் அவமதித்தார்கள்
தன்னம்பிக்கை இழக்கவில்லை  வாழ்ந்து காட்டினார் !
கோச்சு வண்டியில் படியில் அமரச் சொன்னார்
காந்தியடிகள் மறுக்கவே அடித்தான் அசரவில்லை !

வழிக்கு வந்து உள்ளே அமர வைத்தான்
வலி தாங்கிய அகிம்சையை உணர்ந்தான்
வண்டிக்காரன் !     
உடலால் மெலிந்து இருந்தபோதும்
உள்ளத்தால் வலிமை மிக்கவர் 
காந்தியடிகள்

தனி ஒரு மனிதனுக்கு ஆடை இல்லை எனில்
தலைப்பாகை ஆடம்பர ஆடைதுறந்து அரையாடையானார் !

வட்ட மேசை மாநாட்டுக்கு இங்கிலாந்து சென்றபோது
வளமான மன்னரை
அரையாடையோடு சந்திக்க முடியாது என்றனர் !

இனிமேல் என் ஆடை இதுதான் கொள்கை முடிவு
இப்படியே அனுமதித்தால் வருகிறேன் மறுத்தால் செல்கிறேன் !

எனக்கும் சேர்த்து நீங்களும் உங்கள் மன்னரும்
ஏராளமான ஆடை அணிந்து இருக்கிறீர்கள் என்றார் !

காந்தியடிகளின்   ஒட்டு மொத்த வாழ்க்கையை
ஒரே ஒரு திருக்குறளில் அடக்கி விடலாம்
!

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் .

காந்தியடிகளின் குரு டால்ஸ்டாய்
டால்ஸ்டாயின் குரு திருவள்ளுவர் !

ஒரு கன்னத்தில் அடித்தால் உடன்
மறு கன்னம் காட்டு ! இயேசு பிரான் !

தீமை செய்த பகைவனுக்கும் வெட்கும் வண்ணம்
நன்மை செய் !
திருவள்ளுவர் !

காந்தியடிகளின் விடுதலை விருப்ப உணர்வுதான்
காந்திய வழியில் நெல்சன் மண்டேலாவை உருவாக்கியது !

காந்தியடிகளின் அன்பு மிக்க வாழ்க்கைதான்
கல்கத்தாவில் அன்னை தெரசாவை உருவாக்கியது !

காந்தியடிகளின் நேர்மையான நெஞ்சம்தான்
கர்ம வீரர் காமராசரை தமிழகத்தில்
உருவாக்கியது !

காந்தியடிகளின்  உண்மையான போதனைதான்
கக்கன்ஜி என்ற மாமனிதரை
உருவாக்கியது !
காந்தியடிகளின்  வாழ்க்கை ! திருவள்ளுவரின் வாக்கே !
காந்தியமும் வள்ளுவமும் வேறு இல்லை ஒன்றே !
காந்தியடிகளுக்கும் காந்தியவாதிகளுக்கும்
மரணம் இல்லை இன்றும் என்றும் வாழ்வார்கள் !
 

கருத்துகள்