ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

வருந்தாதே தேற்று மனதை 
சாதனையாளர்கள் பலர் 
பத்தில் தோற்றவர்கள் ! ( நான் உள்பட ) 

எப்பக்கம் திருப்பினாலும் 
மேல்நோக்கியே எரியும் நெருப்பு 
வறுமையிலும் செம்மையாக ஏழைகள் !

கிளைகள் வெட்டிட 
வளரும் பனை 
பாராட்டிட மலரும் குழந்தை !

காகம் அமர 
பனம்பழம் விழுந்த கதை 
சோதிடர் சொல்லிய கதை !

தந்தது 
குதூகலம் 
கோடை மழை !

உலகத்தில் உண்டு 
நம்ப முடியாத உண்மை 
ஆட்டை  விழுங்கும்   பாம்பு ! 

இரைக்காக ஓடிய புலி தோற்றது 
வென்றது உயிருக்காக ஓடிய
மான் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !