பொன்மனச் செம்மல் எம் .ஜி .ஆர் கவிஞர் இரா .இரவி

பொன்மனச் செம்மல் எம் .ஜி .ஆர்          கவிஞர் இரா .இரவி

தனித்தமிழ் ஈழத்தை ஆதரித்த
தனிப்பெரும் தலைவர்  எம் .ஜி .ஆர்

ஈழத்திற்கு நிதி உதவி தந்து வளர்த்தவர்
ஈழத்தமிழரின் நெஞ்சம் நிறைந்தவர்

சிங்களக் கொடுமை உணர்ந்தவர்
சிங்களம் வீழ்ந்திட    விரும்பியவர்

மதிய உணவை சத்துணவாக விரிவாக்கியவர்
மாணவர்கள் பள்ளி வரக் காரணமானவர்

கோடிகளைக் கொள்ளை அடிக்காதவர்
குடும்பத்திற்குச்  சொத்துச் சேர்க்காதவர்   


திரையில் மட்டுமே நடித்தவர்
நிஜத்தில் என்றுமே நடிக்காதவர்

விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்தவர்
விவேகமாகச் சிந்தித்துச் செயல்படுத்தியவர்

அவரால் வாழ்ந்தவர்கள் கோடி
அவரால் வீழ்ந்தவர்கள் மிகச் சிலர்
உலகம் வியக்கும் வண்ணம் மதுரையில்
உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியவர்


உயிருள்ளவரை முதல்வராய் இருந்தவர்
உன்னத ஏழைகளின் இதயத்தில் வாழ்பவர்


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!


கருத்துகள்