பாரதி இன்று இருந்திருந்தால் : நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129ef511819ea4b8&attid=0.4&disp=inline&realattid=f_gbukvnuo3&zw

பாரதி இன்று இருந்திருந்தால் : நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி

பாரதி இன்று இருந்திருந்தால் நூல் ஆசிரியர் – கவிஞர் கலாவிசு


அட்டைப்படமே அற்புதம் பாரதி பிறந்த வீடு புகைப்படத்தில் பாரதி செல்லம்மா நிற்கும் காட்சி மிகவும் சிறப்பு. பாரதியைப் பாடாத கவிஞர் இல்லை பாரதியைப் பாடாதவர் கவிஞரே இல்லை எனலாம். மகாகவி பாரதியாரின்125 வது பிறந்தநாளை முன்னிட்டு 125 கவிஞர்களின் கவிதைகளை திரட்டித் தொகுத்து வைர வரிகளால் முன்னுரை கவிதை வழங்கி மிகவும் சிறப்பாகத் தொகுத்து இருக்கிறார் நூல் ஆசிரியர் கவிஞர் கலாவிசு தேனீ மலர்களைத் தேடிச் சென்று தேன் சேகரிப்பதைப் போல கவிஞர்களுக்கு அறிவிப்புத் தந்து கவிதைகளைத் திரட்டி புதுவைக்கு பெருமை சேர்த்து உள்ளார். பாரதியின் கால்பதித்து புதுவை மண்ணில் இருந்து பாரதிக்கு மகுடம் செய்து இருக்கிறார்கள். எளிமையான சின்னம், புதுவை முதல்வர் மாண்புமிகு ந.ரங்கசாமி முதல் புதுவை அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துரை நுலிற்கு அழகு சேர்க்கின்றன ‘பாரதி இன்றிருந்தால்’ என்ற தலைப்பைத் தந்து 125 கவிதைகளும் 125 விதமாக வித்தியாசமாக மகாகவி பாரதியின் பரிமாணங்களை கவிதைகளால் படம் பிடித்து காட்டுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நூலில் 30 ஆம் பக்கம் எனது கவிதையும் இடம் பெற்றதைப் பெருமையாகக் கருதுகின்றேன். புதுவையின் பெருமைகளில் ஒன்றாகத் திகழும் அரிமதி தென்னகனார் தொடங்கி கவிஞர் ஆர்.பி.ஆனந்தன் வரை உண்மைக் கவிஞன் கொள்கைக் கவிஞன், தன்மானக் கவிஞன். சமரசமற்ற கவிஞர். நியாயமான கோபக்கவிஞன், முன்டாசுக் கவிஞன், தமிழ்மொழி நேசக் கவிஞன், வெள்ளையரின் சிம்ம சொப்பணக் கவிஞன். வீரக் கவிஞன். செல்லம்மாளின் செல்லக் கவிஞன். தமிழாசிரியக் கவிஞன், ஈடு இணையற்ற மாபெரும் கவிஞன் மகாகவி பாரதியின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக மிகவும் சிறப்பாக வந்துள்ளது நூல். தமிழை விரும்புபவர்கள்,கவிதை எழுதிட விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல். தொகுப்பாசிரியர். கவிஞர் கலாவிசு “புதுவை கவிதைவானில்” என்ற மாத இதழுக்கு ஆசிரியராக இருந்து கொண்டு பல்வேறு இதழ்களிலும் கவிதை, கதை என எழுதிக் கொண்டு அவ்வப்போது தொகுப்பு நூல்கள் வெளியிட்டு, விழா நடத்தி பல்வேறு சாதனையாளர்களுக்க விருதுகள் வழங்கி துடிப்புடன் செயல்பட்டு வருபவர். பாரதி கனவுகண்ட புதுமைப் பெண்ணிற்கு மண்ணில் எடுத்துக்காட்டாகத் திகழக் கூடிய சிறந்த பெண்மணியின் உழைப்பின் வெளிப்பாடுதான் இந்நூல். பின் அட்டையில் இந்திய வரைபடத்தையே பாரதியின் உருவத்தால் வடிவமைத்து புதுமையாக இருந்தது. விருது பெற்றவர்களின் புகைப்படங்களும் அவர் தம் சாதனைகளும் நூலின் பிற்பகுதியில் அச்சிட்டது அவர்களுக்கும் பெருமை. அவர்களை அறிந்து கொண்டு நாமும் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தை வாசகர்களுக்கும் உருவாக்குகின்றன.

இந்நூலில் மரபும் உண்டு, புதுக்கவிதையும் உண்டு.பாரதியைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவர்கள் அவசியம் படிக்க வேண்டிய அற்புத நூல். படித்துவிட்டு தூக்கிப் போடாமல் ஆவணமாக பாதுகாத்து வைக்கக் கூடிய சிறந்த நூலாக உள்ளது.

நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் மகாகவி பாரதியின் ஓவியத்தையும் இணையாக கவிஞர்களின் புகைப்படத்தையும் கவிதைக்கு மேல் அச்சிட்டு வளரும் கவிஞர்களையும் வளர்த்து விட்டு கவிஞர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளது. 125 கவிஞர்களின் முகவரிகள் அடங்கிய தகவல் களஞ்சியமாக உள்ளது. இந்நூல் சங்க காலத்தில் அவ்வையார், காக்கைப் பாடினியார், காரைக்கால் அம்மையார் என எண்ணிலடங்கா பெண்பாற்ப்புலவர்கள் இருந்தார்கள். இன்றைக்கு பெண்பாற்ப் புலவர்கள் அதிகம் இல்லையே என்ற குறையே தீர்க்கும் வண்ணம் பல பெண்பாற்ப் புலவர்கள் பாரதி பற்றி அழகிய கவிதைகளை வடித்து உள்ளனர்.

எதில் எந்தக் கவிதையையும் மேற்கோள் காட்டவில்லை ஏனெனில் ஏதாவது ஒரு கவிஞரின் கவிதையே மட்டும் மேற்கோள் காட்டினால் மற்ற கவிஞர்கள் வருந்தக்கூடும். எனவே, இலக்கிய நேசர்களே, தமிழ் ஆர்வலர்களே அவசியம் இந்த நூலை வாங்கிப் படியுங்கள் கவிதைகள் அனைத்தும் கற்கண்டு.

கருத்துகள்