இன்று ஒரு தகவல் நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129ef55a39a7cdde&attid=0.2&disp=inline&realattid=f_gbul22vy1&zw

  • நூல் : இன்று ஒரு தகவல்
  • ஆசிரியர்: நகைச்சுவை மாமன்னர் இளசை சுந்தரம்
  • நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி

நூல் ஆசிரியர் நகைச்சுவை மாமன்னர் இளசை சுந்தரம் அவர்கள் நாடறிந்த நல்ல
பேச்சாளர் மகாகவி பாரதி வேடமணிந்து பாரதியாகவே கேட்கும் கேள்விகளுக்கு விடை
அளித்து சுவையான நிகழ்ச்சியினை பிரான்சு, பாரீசு நகர் முதல் பல்வேறு நாடுகளில்
நடத்தி புகழ் பெற்றவர். இவர் வானொலி நிலைய இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வு
பெற்றாலும், இலக்கிய பணியில் ஓய்வின்றி உழைத்து வரும் சிறந்த சிந்தனையாளர்.
இவர் வானொலியில் வழங்கிய இன்று ஒரு தகவல்களைத் தொகுத்து நூலாக்கி வெற்றி பெற்று
, தற்போது மூன்றாம் தொகுதி வெளியிட்டுள்ளார். வெளியீட்டு விழாவிற்கு நானும்
சென்றிருந்தேன். கோலாகலமாக நடைபெற்றது. விழாவிற்கு அணிந்துரை வழங்கிய உழைப்புச்
செம்மல் மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் கலைமாமணி வி.கே.டி.பாலன் வந்து விழாவை
சிறப்பித்தார்கள். அணிந்துரையில் எனக்கு அதற்குரிய தகுதி இல்லை என்றும், எனது
உரைகளில் இளசையாரின் கருத்துக்களை மேற்கோள்காட்டி பேசி வருகிறேன்
என்றும், உண்மையை அப்படியே பதிவு செய்து உயர்ந்த உள்ளத்தைக் காட்டி
உள்ளார்.

உயிரோடு வாழ்வது வாழ்க்கை அல்ல
உயிர்ப்போடு வாழ்வது தான் வாழ்க்கை

என்ற வைர வரிகளோடு ஆசிரியர் உரை துவங்குகின்றது. இந்த நூலின்
நோக்கத்தை,தாக்கத்தை இந்த இரண்டு வரிகளில் முடித்து விடலாம். பிறந்தோம்
, இறந்தோம் என சராசரி வாழ்க்கை வாழாமல் சாதனை வாழ்க்கைக்கு வழி வகுக்கின்றது
இந்த நூல் என்றால் மிகையன்று. உயிர்ப்போடு வாழ வேண்டிய அவசியத்தை
உணர்த்துகிறது.39 தலைப்புகளில் அரிய, பெரிய தகவல்களின் தொகுப்பு இந்நூல்
39நூல்கள் படித்து அறிய வேண்டிய தகவல்களை இந்த ஒரே நூலில் பழச்சாறு போல
வழங்கியுள்ள நூலாசிரியர் பாராட்டுக்குரியவர். ‘சிரிப்பு சிகிச்சை’ என்று
தொடங்கி ‘வெற்றியின் விதைகள்’ என்று முடியும் அனைத்தும் முத்துமாலையாக, கருத்துப்
பெட்டகமாக உள்ளது.

இன்று உலக அளவில் நகைச்சுவை மன்றங்களும்,.தொலைக்காட்சிகளில் நகைச்சுவை
நிகழ்ச்சிகள் மிகப் பெரிய வரவேற்பையும், பெற்றுள்ள காலம் இது எல்லோரும் கூடி
நின்று சிரிப்பதற்கு பயிற்சி வகுப்புகள் நடக்கும் நிகழ்வைப்
பார்க்கிறோம்.சிரிப்பால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். ‘மூக்குதசை மற்றும்
சுவாசப்பாதையில் ஊடுருவும் சில வைரஸ் பாக்டீரியா மற்றும் பிற நூண்ணியிரிகளை
ஊடுருவவிடாமல் செய்கின்றது சிரிப்பு’ என்ற விஞ்ஞானத் தகவலை மிக நுட்பமாக பதிவு
செய்துள்ளார். காபி குடித்தல் வெள்ளைக்காரர்கள் நமக்குக் கற்பித்த கெட்டபழக்கம்
என்ற கருத்து நமக்குண்டு. ஆனால் ‘தினமும் காபி குடித்தல் ‘ என்ற கட்டுரையில்
‘ஒரு நாளைக்கு ஒரு முறையாவது காபி குடிப்பது அவசியம் அதில் ஆண்டி ஆக்சிடெண்ட்ஸ்
உள்ளது. என்ற பேராசிரியர் வில்சன் கூறிய தகவலை எழுதியுள்ளார்.

மாணவர்கள் நல்லதை கீழே விட்டு விட்டு மோசமானதை தன்னுடன் வைத்துக் கொள்ளும்
ஐல்லடையாக இருக்கக் கூடாது. கெட்டதை கீழே விட்டு விட்டு நல்லதை வைத்துக்
கொள்ளும் முறமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் பல்வேறு தகவல்கள்
இந்நூலில், எதைச் சொல்வது? எதை விடுவது? என்பது புரியாத அளவிற்கு அனைத்தும்
அற்புதம். ‘உண்மையான மகிழ்ச்சி என்பது நாமே ஒன்றை அனுபவிப்பதில்லை இல்லை.
மற்றவர்களுக்கும் அதைப் பகிர்ந்து கொடுத்து வாழ்வது தான்’ என்கிறார். இதனை
நாமும் நம் வாழ்க்கையில் உணர முடியும். நாம் முழுமனதுடன் நம்மிடம் உள்ளதைப்
பகிர்ந்து அளிக்கும் போது, பெற்றவர்கள் நம்மிடம் மகிழ்வோடு நன்றி கூறும் போது
அதனைக் கேட்ட நம் உள்ளம் பூரிப்படைவது முற்றிலும் உண்மை. கொடுத்துப் பாருங்கள்
நீங்களே உணரலாம். இதைத்தான் உலக பொதுமறை படைத்த திருவள்ளுவரும்
வலியுறுத்துகின்றார்.புதினா என்பது நமக்குத் தெரியும் பிரியாணிக்கு வாசத்திற்கு
போடுவார்கள் என்று வகையில் தான் தெரியும். புதினாவை வாயில் போட்டுக் மென்றாலோ
அல்லது புதினா மூலம் பல் துலக்கினாலோ வாய் நாற்றம், சொத்ததைப்
பல்,பூச்சிப்பல்லால் வருகிற கூச்சம்
, வலி நீங்கும். என்ற மருத்துவத் தகவலைத் தருகின்றார்.

இந்நூலாசிரியர் பட்டிமன்ற நடுவர், பேச்சாளர் என்பதால் மிக அதிகமான நூல்களைப்
படிக்கிறார். அதில் மானுடத்திற்கு பயன்படக் கூடிய தகவலைத் திரட்டி, திரட்டுப்
பாலாகத் திக்திக்க வழங்கி வருகிறார். இப்படி நல்லவைகளைத் திரட்டுவதும் ஒரு கலை
இக்கலை நன்கு வாய்த்து இருக்கிறது நூலாசிரியர் இளசையாருக்கு. சீனாவில்
நடக்கும் கிறிஸ்துமஸ் விழா, மனித இயல்பு, முகமதியரின் ரம்ஜான் நோன்பு
பற்றி,மனக்கவலை வேண்டாம் அது மனதிற்கும் உடலுக்கும் கேடு
, நொச்சி இலையின் மருத்துவக்குணம், யானைகள் பற்றி, வியாபார நேர்மை பற்றி இப்படி
பல்வேறு தகவல்கள் படித்து முடித்தவுடன், நமக்கே பிரமிப்பாகவும், வாய்ப்பாகவும்
உள்ளது. இவருக்கு எப்படி? நேரம் கிடைக்கின்றது. எல்லோருக்கும் ஒரு
நாளைக்கு 24மணி நேரம் தானே
, இவருக்கு மட்டும் 48 மணி நேரமா? இவர் எப்போது படிக்கிறார், எப்போது
எழுதுகிறார். எப்போதுமே பேசி வருகிறாரே எனப் பல்வேறு கேள்விகள் நமக்கு
எழுகின்றன. பன்முக ஆற்றலாளராகத் திகழும் நகைச்சுவை மாமன்னர் இளசை, சுந்தரம்
அவர்கள் தொடர்ந்து படைக்க வேண்டும்

கருத்துகள்