சினிமாவுக்குப் போகலாம் வாங்க மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி

  • BOOK NO.8.jpg

சினிமாவுக்குப் போகலாம் வாங்க மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி
நூலின் பெயர் : சினிமாவுக்குப் போகலாம் வாங்க
நூல் ஆசிரியர் : முனைவர்.கு.ஞானசம்மந்தன்

அட்டைப்படமே வித்தியாசமாக உள்ளது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியைப்போல நூலின் சிறப்பை அட்டைப்படமே உணர்த்தும் வண்ணம் அழகான வடிவமைப்பு சிலருக்கு நன்றாக பேசவரும். சிலருக்கு நன்றாக எழுத வரும். வெகு சிலருக்குத்தான் நன்றாக பேசவும், எழுதவும் வரும். அந்த வெகு சிலரில் சிகரமாகத் திகழ்கின்றனர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் முன்னுரை எழுதியுள்ள எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துப் பற்றி கூறவே தேவையில்லை. நூலை படிக்க வேண்டுமென்ற ஆவலைத்தூண்டும் வண்ணம் வந்துள்ளது. பத்மஸ்ரீ கமலஹாசன் இயக்குநர். திரு. பாண்டியராஜன் இயக்குநர். திரு.சரண் இப்படி பலரும் வாழ்த்துரை வழங்கி இருப்பது நூலிற்கு பெருமை சேர்க்கின்றது.நூலாசிரியர் என்னுரையில் நன்றி மறப்பது நன்றன்று என்ற திருக்குறளைப் போல பாட்டுப் புத்தங்கள் வழங்கிய நண்பர்களின் பெயர்கள் வரை குறிப்பிட்டு நன்றியை பதிவு செய்து உள்ளார்கள். நடிப்பில் நடமாடும் பல்கலைக் கழகமாகத்திகழும் கலைஞானி கமலஹாசனுடனான சந்திப்போடு துவங்குகின்றது நூல். 40 கட்டுரைகள் நூலில் உள்ளது. ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பிலும் திரைத்துறைப் பற்றிய வரலாற்று உண்மைகளைப் பதிவு செய்தது நல்ல யுத்தி. திரைத்துறை செய்தியை படித்தவுடன் கட்டுரையை தொடர்ந்து படிக்கும் எண்ணம் வந்துவிடுகிறது. நூலின் நடையை பாராட்டியே தீர வேண்டும். மிகவும் எளிய நடை படித்தவர்களுக்கும் புரியும். பாமரர்களுக்கும் புரியும். கடினமான சொற்கள் எங்கும் பயன்படுத்தவே இல்லை பேச்சில் தனக்கென தனிபாணி அமைத்து நகைச்சுவை வெடிகளோடு இலக்கிய நிகழ்வுகளையும் கலந்து தந்து வெற்றி பெற்றதுபோலவே எழுத்திலும் தனக்கென தனிபாணி அமைத்து வெற்றி பெற்று இருக்கிறார். அந்தக் காலங்களில் குழந்தைகள் வானொலியை தொடுவதற்கு கூட தடை இருந்ததை அழகாக பதிவு செய்துள்ளார்.
இன்று குழந்தைகள் சர்வ சாதாரணமாக கணிப்பொறியில் விளையாடுவதும் கால மாற்றத்தை கண்முன் கொண்டுவந்தது.திரைப்படங்கள் இன்று போட்டி போட்டுக்கொண்டு நமது இல்லத்திற்கே மடை திறந்த வெள்ளமென வந்துவிட்டது. ஆனால் அந்த காலத்தில் திரைப்படம் பார்க்க திரையரங்கிற்கு சென்று எப்படி பார்த்தார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்து இருக்கிறார்கள். இந்நூலை படிக்கும்போது அவரவர் குழந்தையாக இருக்கும்போது திரையரங்கு சென்ற அனுபவத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து விடுகிறது. இதுதான் நூலின் வெற்றி. ஆசிரியர் பெற்ற உணர்வை நூலை படிக்கும் வாசகனும் பெறுகின்றான்.டூரிங் திரையரங்கில் ஒரு சினிமா காட்டும் இயந்திரம்தான் இருக்கும் 4 ரீல் முடிந்தவுடன் சிறிய இடைவேளை விடுவது வழக்கம். இதுபோன்ற பலநுட்பமான விசயங்களை எல்லாம் நகைச்சுவை உணர்வோடு விளக்கி உள்ளார். காலத்தின் கண்ணாடி இலக்கியம் என்பார்கள். மிக சிறப்பாக எழுதி இருக்கிறார்கள். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான “காளிதாஸ் முதல் திருமிகு.பி.யூ.சின்னப்பா” வரையிலான வரலாற்று உண்மைகள் தகவல் சுரங்கமாக உள்ளது. பதிவு செய்து ஒலிபரப்பும் வசதி இல்லாத காலத்தில் நேரடியாக நாடகம் ஒலிப்பரப்பான செய்தி படிக்கும்போது இன்றைய தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சிகளுக்கு அன்றே முன்னோட்டம் நடந்துள்ளதை அழகாக விளக்கி இருக்கிறார்கள். கல்கி இதழில் தொடராக ஒவ்வொரு வரமாக வந்தபோது ஒவ்வொரு வாரம் காத்திருந்து படித்த வாசகர்களுக்கு ஒட்டுமொத்தமாக நூலாக வந்து இருப்பது கற்கண்டுச் செய்தி. அன்று படித்தவர்களும் ஆர்வமுடன் திரும்பவும் படித்து மகிழ்கின்றார்கள். அன்று படிக்காதவர்களும் ஆர்வமுடன் வாங்கி படித்து இன்புறுகிறார்கள் பரவலாக வாசிக்கப்படும் புத்தகமாக பேசப்படும் புத்தமாக வந்து இருப்பது நூலாசிரியர், பேராசிரியர், முனைவர், கலைமாமணி கு.ஞானசம்பந்தன் அவர்களுக்கு மட்டுமல்ல மதுரைக்கே பெருமை தரும் பதிவாகும். இந்நூல் தொடர்ந்து பல பதிப்புகள் வெளிவந்து சாதனை படைக்கும் என்பது உண்மை

கருத்துகள்