தானியம் கொத்தும் குருவிகள் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129e956a893fde73&attid=0.24&disp=inline&realattid=f_gbswj6q023&zw
தானியம் கொத்தும் குருவிகள் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

* நூல் ஆசிரியர் : கவிஞர் ப்ரணா



செயற்கைக் கோள்கள்,தொலைக்காட்சிகள்,கதிர்வீச்சு மிக்க செல்லிடப்பேசி கோபுரங்கள்,உலகமயம்,நவீனமயம் எனற பெயரில் மகாகவி பாரதியார் மிகவும் நேசித்த சிட்டுக்குருவி இனம் அழிந்து கொண்டே வருகின்றது. அடுத்த தலைமுறைக்கு சிட்டுக்குருவி இனம் இருக்காது.”தானியம் கொத்தும் குருவிகள்” என்ற இந்த நூல் தான் குருவிகள் வாழ்ந்ததை சொல்லும் ஆவணமாக இருக்கும் இந்த இனிய தலைப்பைச் சூட்டிய நூல் ஆசிரியர் கவிஞர் ப்ரணா பாராட்டுக்குரியவர். இவர் ஹைதராபாத்தில் வாழ்ந்த போதும் அன்னைத்தமிழை மறக்காமல் இலக்கியத்தளத்தில் இயங்கிவரும் சிறந்த படைப்பாளி.

இந்த நூலை இவர் காணிக்கையாக்கி இருப்பது யாருக்கு என்று அவர் வரியிலேயே காண்க.

“என்னை பாதித்த என்னை எழுதவைத்த அனைத்து நிகழ்வுகளுக்கும் அண்மையில் மறைந்த எனது அருமை தந்தையாருக்கும் காணிக்கை”

தந்தை பெரியார் சொன்ன இலக்கணப்படி ஒரு நூல் எழுதி முழு மனிதன் ஆகி இருக்கிறார்.

கவிதைக்கான இலக்கணம் அவரது மொழியில் இதோ
கவிதையென்பது இதுதான். இப்படித்தான் இருக்கவேண்டும் கவிதை என்பன போன்ற போலி விதிமுறைகள் எதுவும் இட்டுக்கொள்ளாது இயல்பாய் தோன்றியவற்றை எவ்வித செயற்கை முலாமும் பூசாது அப்படி அப்படியே உலவ விட்டிருக்கிறேன்.

இந்தத் தொகுப்பில் சமூக மாற்றங்களை நிகழ்த்தவல்ல கவிதைகள் என்று ஒரு வரியிலேயே நூலின் உள்ளடக்கத்தை சுட்டி உள்ளார்.அணிந்துரை நல்கிய தச்சன் இலக்கிய இதழ் ஆசிரியர் கவிஞர்.இரா.நாகராஜன்.

உள்ளத்து உணர்வுகளை அப்படியே இயல்பாக பதிவு செய்து இருப்பதால் படிக்கும் வாசகர்களுக்கு கவிதையின் மீது ஒரு வித ஈர்ப்பு வருகின்றது. நல்ல படைப்பு பல்வேறு சிற்றிதழ்கள் அல்ல அல்ல சீரிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் சிறந்த படைப்பாளி. கவிதைக்கான நவீன ஓவியங்கள் மிகச்சிறப்பாக உள்ளது.நேர்த்தியான வடிவமைப்பு முதல் கவிதையிலேயே முத்தாய்ப்பாக பறவை நேசத்தை பதிவு செய்கிறார் பாருங்கள்!

காதல் குறிப்புகள்

எனது கூடாரம் அருகே மெல்லிய சிறகொலியாகவேனும் உனது
காலடியோசை கேளாதாயென
வறண்ட நிலத்தின் நாவுகள் மேகத்துளிகளை எதிர்நோக்கி
நீண்டிருப்பது போல காத்திருக்கிறெனினும்
இப்பொழுது மட்டும் வந்துவிடாதே
சின்னஞ்சிறிய ஒசை கேட்பினும் பறந்துவிடக்கூடும்
கூடார வாயிலில் தானியம் கொத்தும் குருவிகள்

காதலியின் சந்திப்பை விட குருவி தானியம் உண்ணுவது முக்கியம் என உணர்த்தும் கவிதை இது போன்ற அற்புதமான கவிதைகள் நூல் முழுவதும் நிறைந்து உள்ளது.

தேர்தல் என்ற பெயரில் அரசியல்வாதிகள் நிகழ்த்தும் பித்தலாட்டத்தை தோலுரிக்கின்றது புரிதல் என்ற கவிதை இரண்டு வரி மட்டும் பாருங்கள்

பிறகு வெட்டக் கிளம்பிய ஊர்பெருசு சர்வ சாதாரணமாக கேட்டார்.”எழவு தேர்தல் வருதாலே?”

மரணம் சில சிந்தனைகள் கவிதை சிந்திக்க வைக்கின்றன.இருக்ககூடாத வாசகங்கள் கவிதை எள்ளல் சுவையுடன் இருக்கின்றது.சவப்பெட்டி செய்யும் இடத்தில் ” நன்றி மீண்டும் வருக” சட்டப்பேரவையில் ” அரசியல் பேசாதீர்”.இந்நூல் மரபுக் கவிதை,புதுக்கவிதை,”ஹைக்கூ” என முக்கனிச்சுவையும் உள்ளது.ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்பது போல ஒரே நூலில் மூன்று கவிதை வகையும் உள்ளது. இலக்கிய விரும்பிகள் விரும்பிப்படிக்கும்.

நூலாக திகழ்கின்றது. நிஜமுரைத்தல் என்ற கவிதை பாருங்கள் “மனுஷனைப்பார்த்து ரொம்ப நாளாச்சு என்று தோன்றுகிறது இப்பொழுதெல்லாம் கண்ணாடி பார்க்கும் போது கூட”. மனிதன் மனிதனாக வாழ்ந்திட வேண்டும் என்பதை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார்.ஹைக்கூ சுவையே தனிச்சுவைதான்.

குட்மார்னிங்கில் துவங்கி
குட் நைட்டில் முடிக்கிறான்
ஓவ்வொரு நாளையும் தமிழன்

தமிங்கிலம் பேசி தமிழைச் சிதைக்கும் தமிழனின் தலையில் கொட்டு வைக்கிறார்.

பார்த்தால் நிலவு
தொட்டால் நெருப்பு
காதல்

குடைகளை அல்ல
மனங்களை விரியுங்கள்
மழைவரும் நேரம்

யாருமே வந்ததில்லை
மழைவந்து முத்தமிடும்
அனாதையின் கல்லறை

இப்படி பல்வேறு சிந்தனைகளை விதைக்கும் அழகிய ஹைக்கூ கவிதைகளின் அணிவகுப்பு ஏராளம் கவிச்சுவை தாராளம். சிந்தனையில் மின்னல் கீற்றை உருவாக்குகின்றன. அணிந்துரையில் குறிப்பிட்டபடி சமூக மாற்றத்தை உருவாக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை வாங்கிப் படியுங்கள்.

கருத்துகள்