2009 ஆம் ஆண்டு நாட்குறிப்பு , நூல் விமர்சனம்: கவிஞர் இராஇரவி


  • BOOK NO.9.jpg
2009 ஆம் ஆண்டு நாட்குறிப்பு , நூல் விமர்சனம்: கவிஞர் இராஇரவி

நூல் ஆசிரியர் :கவிஞர் கி.கண்ணன்


நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது. நூலாசிரியர் கவிஞர் கி.கண்ணன் மானம்பாடியில் வாழும் கவிதை வானம்பாடி. மகாகவி பாரதியாரைப் போல ரௌத்திரம் பழகு என பல இடங்களில் உள்ளக்குமுறலை நன்கு பதிவு செய்துள்ளார். சில இடங்களில் கொச்சையான உடல்மொழிச் சொற்களை தவிர்த்து இருக்கலாம்.


மதம் மாறினாலும் சாதி மாறுவதில்லை,மதம் மாறிய பின்னும் சாதி தொடரும் அவலைத்தைச் சுட்டுகின்ற கவிதை.


ஆதுசரி


கீதையின் பாதை பயணித்த கீழத்தெரு இராமசாமி
மருவியிருந்தான் பைபிளுக்கு
தோத்திரம் வாசித்த பீட்டரும்
தூக்கிச் சுமந்தான் திருக்குர்ஆன்
அங்குமிங்கும் மாறி மாறியும்
மாறாதிருந்தன அவர்கள் சாதி


இக்கவிதை படித்ததும் என் நினைவிற்கு வந்தது, தாழ்த்தப்பட்ட சகோதரன், இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கோ, இஸ்லாமிய மதத்திற்கோ மாறினால் சாதி மாறுவதில்லை,வகுப்பு மாறி விடுகின்றது. தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்படுத்தப்பட்டவர் ஆகிவிடுவதால் சலுகைகள் பறி போகின்றன. சமூக நீதி கிடைப்பதில்லை. தேர்தல் காலத்தில் மட்டுமே வாக்காளன் நினைக்கப்படுகிறான் என்பதை உணர்த்தும் கவிதை.


ஏனவே வெட்கப்படுகிறேன் நானிங்கு
எப்போதெனில் கரும்புள்ளி மட்டுமே
நாம் உயிரோடிருப்பதை உறுதிப்படுத்தும்
தேர்தல் நினைத்து


கவிதைகளில் பகுத்தறிவு சிந்தனை உள்ளது


ஆனாலும் ரொம்பவே மோசம் மனிதன்
வேண்டுதலை நிறைவேற்றும் அய்யனாருக்கு
ஆட்டுத்தலை காணிக்கை
ஏழுதவே கூச்சமாயிருக்கிறது
உண்ணாத சிலைக்குத் தலையா?


இன்றைய அரசியல் தலைவர்களின் அவலநிலையை தோலுரித்துக் காட்டும் கவிதை.


பிறிதொரு நாள்
எதிர்க்கட்சித் தலைவர்கள்
ஒருவர் மாற்றி ஒருவர்
அறிக்கை சாணத்தால் அடித்துக் கொண்டார்கள்
வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்ய நாம்
அவர்களுக்கு வாக்களித்த பாவத்துக்கு

எதிர்கட்சித் தலைவர்கள் என்பதற்கு பதிலாக கட்சித் தலைவர்கள் என்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும், பொருத்தமாக இருக்கும்


ஆதலால்
பணக்காரர்களுக்கே சட்டம் பேசத் தொடங்கி விட்டதால்
வம்பேனென்று ஊமைகளாயினர் ஏழைகள்


சட்டம் ஒரு இருட்டறை என்றார் அறிஞர் அண்ணா. ஏழைகளுக்கு நீதி வழங்கும் மன்றமாக நீதிமன்றங்கள் மாற வேண்டும்.


இன்றைய திரைப்படங்களின் அவலநிலை கண்டு கொதித்துப் பாடுகிறார் கவிஞர் கண்ணன்.


ஆதலின் நமீதாவின் சதைக்குத் திரளும் கூட்டம்
பூ
கதைக்கு போகாதது ஏன் ? விளங்கவில்லை
இரசிகர்களைத் திரையரங்கினுள் இழுப்பது
கதைகளா? சதைகளா?


நடிகையின் பெயர் குறிப்பிடத் தேவையில்லை, நடிகை என்று பொதுவாகவே குறிப்பிட்டு இருக்கலாம். கவிஞரின் கோபம் உண்மை தான். மிகவும் சிரமப்பட்டு கதையம்சத்துடன், கருத்துள்ள திரைப்படம் எடுத்தால்,திரையரங்கை விட்டு விரைவில் ஓடி விடுகின்றது. நடிகைகளின் சதைகளைக் காட்டி, கதையே இன்றி திரைப்படம் எடுத்தால், ஓகோ என்று ஓடி விடுகின்றது. இந்த அவலநிலை மாறவேண்டும் என்பதே கவிஞரின் விருப்பம்.ஊடகங்களும் கதைப்பற்று இன்றி, சதைப்பற்றுடன் நடந்து கொள்கின்றன.


தேர்தலே இன்றைக்கு மூடநம்பிக்கையாகி விட்டது. கண் துடைப்பாகி விட்டது.ஜனநாயகம், பணநாயகம் ஆகி விட்டது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று இனி கூறுவதில் அர்த்தம் எதுவுமில்லை. வாக்காளர் பட்டியலில் பலர் விடுபட்டுப் போகும் விபத்து நடக்கின்றது. ஆதனை விளக்கும் கவிதை.பெயர் இருந்தால் மட்டும் என்ன சாதிக்கப் போகிறோம்


குறிப்பாக
இருப்பவர் விடுபட்டுப் போய்
இறந்தவர் இடம் பெற்று விடுகிறார்கள்
வாக்காளர் பட்டியலில்


இன்றைக்கு இந்திய நாடு எப்படி இருக்கிறது. என்பதை நன்கு பதிவு செய்துள்ளார்;.கண்டு உணர்ந்த உணர்வை கவிதையாக்கும் போது வெற்றி பெறுகின்றது. ஏதுகை, மோனை இலக்கணங்கள் இல்லாவிட்டாலும், கருத்தின் காரணமாக சுவை கூடி விடுகின்றது.


இவ்வாறாக இருக்கிறதென் நாடு
பசித்துப் புசிக்க உணவில்லாத
பஞ்சப் பரம்பரை அனேகம்
புசிக்கப் பசி;க்கவே இல்லையென
உண்ணாவிரதத்தில் பணக்காரர்
ரூபாய்த்தாள் தோதாய் இல்லாமையால்
மேறபடிப்புக்குப் படியேற முடியாது
அடிப்படைக் கல்வியோடு இந்நாட்டு மன்னர்கள்
சொல்வதெனில் வெட்கமென்ன
கோடி கோடியாய்குமிகின்றது
ஏழுமலiயானுக்கு உண்டியல் காணிக்கை


இந்தக் கவிதை சிந்திக்க வைக்கின்றது. ஏழுமலையான் கருவறை முழவதும் தங்கமாக்கப்படுவதாக செய்தி படித்தேன். தினமும் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் பசியால் வாழும் ஏழைகள் கோடி இருக்கும் இந்த நாட்டில், கோடிக்கணக்கில் தங்கம்,கடவுள்களுக்கு தங்கம் அவசியமா? நாட்டில் பகுத்தறிவு பரவவேண்டும், ஏற்றத்தாழ்வுகள் சமநிலை அடையவேண்டும், வறுமை ஒழிக்கப்படவேண்டும்


ஈழக்கொடுமை கண்டு கொதிக்காத கவிஞன் இல்லை. கொதிக்காதவன் கவிஞனே இல்லை. கவிஞர் கண்ணனும் கொதித்து உள்ளார். நாம் வாய் இருந்தும் ஊமையான அவலம் சுட்டும் கவிதை.


ஈழப்பிரச்சினையில்
நாம் ஆண்மை அற்றவர்களாய் இறுகிய பின்
பேசுவதற்கென்ன இருக்கிறது
இறையாண்மை பற்றி


இறையாண்மை என்ற கற்பனை பூச்சாண்டி காட்டியே தமிழர்களின் இன உணர்வை மழுங்கடித்த அவலத்தை நன்கு பதிவு செய்துள்ளார். நல்ல முயற்சி, பாராட்டுக்கள். நேர்த்தியான அச்சு, நூலில் சில இடங்களில் கவிதைக்கேற்ற ஓவியங்கள் பயன்படுத்தி இருக்கலா

கருத்துகள்