அற்புதம் அம்மா வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

அற்புதம் அம்மா வாழ்க !  கவிஞர் இரா .இரவி !

சத்தியவான் உயிரை எமனிடம் போராடி !
சாவித்திரி மீட்ட கதை புராணக் கற்பனை !

நீதி மன்றத்தில்  மகன் உயிருக்காக போராடி!
நீதிபெற்றாள் அற்புதத் தாய்  உண்மை நிகழ்வு !

தமிழச்சி புலியை முறத்தால் விரட்டினாள் அன்று !
தமிழச்சி தூக்குக்  கயிற்றை அறுத்தாள் இன்று !

குற்றமற்ற மகன் பேரறிவாளன் மீது தவறாகக் 
குற்றம் சுமத்தி தூக்கிலிடுவதைத் தடுத்தார்  !

ஏளனம் கேலி வசவுகளைப் புறக்கணித்து !
எப்படியும் மகன் உயிர் காக்கப் போராடினார் !

முயற்சி திருவினையாக்கும் வள்ளுவர் வாக்கு !
முற்றிலும் மெய்யென மெய்பித்தார் இங்கு !

என்று போகுமோ ? என் உயிர் என்று !
என்றும் வருந்திய மகனின் உயிர் காத்தார் ! 

அற்புதமான அம்மாவைப் பெற்றிட்ட காரணத்தால் !
அநியாயமாகப் போக வேண்டிய உயிர் காக்கப்பட்டது !

துஞ்சாமல் நடத்திய அன்னையின் போராட்டம் 
தூக்குக் கயிற்றைத்  தூக்கி தூர  எறிந்தது !   

கொலைக் குற்றவாளிகள் அல்ல இவர்கள் !
கொலைக் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் !

கொலை செய்யத் தூண்டியவர்களுக்கு !
தண்டனை அதிகம் சட்டம் சொல்கிறது !

கொலை செய்யத் தூண்டியவர்கள் !
தண்டனை பெறாத  விசித்திர வழக்கு !

ஒரு பக்கம் மட்டும் பார்ப்பது மடமை 
இரு பக்கமும் பார்க்க வேண்டியது கடமை !


நீதியரசர் சதாசிவம் வாழ்க பல்லாண்டு !
நீதி தந்து உயிர்கள் காத்த உத்தமர் வாழ்க !

உலகில் ஒப்பற்ற உறவு அன்னை என்பதை !
உலகிற்கு உணர்த்திய அற்புதம் அம்மா வாழ்க !  

கருத்துகள்