திரும்பிப் பார்க்கிறேன் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை திருமதி சுலைகாபானு நஜுமுதீன் .உலக சாதனையாளர் ,நல்லாசிரியர் விருதாளர்.

பயணம் செய்த படகில் எடுத்த படம் திரும்பிப் பார்க்கிறேன் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை திருமதி சுலைகாபானு நஜுமுதீன் .உலக சாதனையாளர் ,நல்லாசிரியர் விருதாளர். வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. பக்கங்கள் : 78, விலை : ரூ.70 தமிழ் செம்மல் விருது பெற்ற தோழர் கவிஞர் இரா.இரவி அவர்கள் தமிழ் மக்களிடையே ஹைக்கூ இரா. ரவி என்று அறியப்படுபவர் . 📘 தோழர் அவர்களின், ‘ திரும்பிப் பார்க்கிறேன் ‘ என்ற நூலினை படித்து வியப்படைந்தேன் , காரணம் இத்துணை ஞாபகத்துடன் தன் வாழ்நாளில் நடந்த … தான் சந்தித்த அத்தனை நல்ல மனிதர்களையும் , அவர்களுக்கும் இவருக்குமான தொடர்பினையும் , இலக்கிய நெருக்கத்தினையும் பற்றி மிக அழகாக எழுதியிருக்கிறார் . 📘 புத்தகத்தை ஒரே மூச்சாக படித்தேன் என்று தான் சொல்லனும் . அந்த அளவிற்கு விறுவிறுப்பாக இருந்தது. 📘 சுற்றுலா துறையில் பணியில் சேர்ந்ததிலிருந்து அந்தப் பணியில் இருக்கும் பொழுது அவர் சந்தித்த மாமனிதர் அப்துல் கலாம் , நீதியரசர் கற்பக விநாயகம் முனைவர் இறையன்பு ஐஏஎஸ், இப்படி இந்த பட்டியலில் பிரபலமானவர்களோடு அவருடன் மிகவும் நெருக்கமாக அன்றாடம் அவருடன் பழகக்கூடிய எளிய மனிதர்களைக் கூட தன்னுடைய புத்தகத்தில் மறக்காமல் எழுதி இருப்பது அவரது மேன்மையினை நல்ல பண்பினைக் காட்டுவதாக உள்ளது. 📘 புத்தகத்தினை படிக்கும் பொழுது அதில் என் பெயரும் இடம் பெற்று இருக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை …. ஆனால் என்னையும் ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளார் கவிஞர் . இந்த புத்தகத்தில் என் பெயரும் வந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது. கவிஞர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 📘 புத்தகத்துல அவர் எழுதியது எதுவுமே மிகை இல்லை என்பதற்கு நான் சொல்லப் போகும் இந்த நிகழ்வு ஒரு சான்றாகத் தான் இருக்கும் . 🚢 “ நானும் என் கணவரும் ஒருமுறை ( 2016ல் ) கொல்கத்தா பயணம் சுற்றுலா சென்று இருந்தோம் . குழுவாக சென்ற சுற்றுலா ( package tour ) அல்ல . 🚢 தனிப்பட்ட முறையில் நாங்கள் சுற்றிப் பார்ப்பதற்கு போவதால் , ஏதாவது உதவி தேவைப்படும் அப்படின்றதுனால சுற்றுலா துறையில் பணியாற்றும் நண்பர் இரா. இரவி அவர்களிடம் இதைப் பற்றி கேட்ட பொழுது அங்கு தமிழகத்திலிருந்து சுற்றுலா துறையில் பணிபுரியும் ஒரு அலுவலர் எண்ணை எங்களுக்கு கொடுத்திருந்தார் . எதற்கும் தேவைப்படலாம் என்ற எண்ணத்தில் நான் அந்த எண்ணைப் பதிந்து வைத்தேன். 🚢 சுந்தரவன காடுகளைச் சுற்றிப் பார்க்க நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து கார் மூலமாக சென்றடைந்த பொழுது அங்கே நிறைய படகுகள் இருந்தது . 🚢 ஆனால் அந்த படகில் போறதுக்கு எப்படி டிக்கெட் வாங்குவது அப்படின்றது தெரியாம இருந்தது . அங்கங்க சுற்றிப் பார்த்தோம் டிக்கெட் கவுண்டர் மாதிரி எதுவுமே அங்கு இல்லை . 🚢 எங்கள் கார் டிரைவர் அங்குள்ள ஒருவனை அறிமுகப்படுத்த , அவன் தனிப்படகில் செல்லலாம் ரூ3000 ஆகும் கூட்டிட்டு போறேன்னு சொன்னான் . 🚢 எனக்கு ( பாதுகாப்பு கருதி ) இருவர் மட்டும் தனியாக ஒரு படகுல சுந்தரவனம் காடுகளை சுத்தி பார்ப்பதற்கு கொஞ்சம் பயமா இருந்ததுனால , வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு மறுத்துட்டேன். 🚢 சரி வெளியிலிருந்து பார்ப்போம் … மத்தவங்க எல்லாம் எப்படி போறாங்க !!! இவ்வளவு கூட்டம் இருக்குது இவங்க எல்லாம் எப்படி இந்த படகில போனாங்கன்னு பாத்துட்டு இருக்கும்போது … 🚢 அங்க படகிற்கான டிக்கெட் கொடுக்கிற இடத்தை கண்டுபிடித்தோம் . 2 டிக்கெட் ரூ 500 க்கு வாங்கிட்டு வந்து முதல் ஆளாகப் படகில போய் ஏறி உட்கார்ந்து விட்டோம் . 🚢 உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே என்னோட முதல்ல பேசினா அந்த பையன் வயது 20 / 21 தான் இருக்கும் , வந்து அந்த படகுக்காரனிடம் இவங்களை ஏற்றக்கூடாது , இவங்க என்கிட்ட புக் பண்ணி இருக்காங்க… இப்ப வந்து மாட்டேன்னு சொல்லிட்டாங்க , இவங்கள நம்பி நான் ஒரு படகை பேசிட்டேன் . அதனால எங்களை படகில் ஏற்றக் கூடாதுன்னு ஹிந்தில பேசினான் . 🚢 நான் விசாரிக்க மட்டுமே செய்தோம் . புக் எல்லாம் செய்யல போய் சொல்றான்னு ஆங்கிலம் , ஹிந்தி என கலந்து சத்தமாக பேசிக் கொண்டிருந்த போது … 🚢 எங்களோட ஹோட்டல்ல பக்கத்து ரூம்ல தங்கி இருந்த குஜராத் மாவட்ட ஓய்வு பெற்ற நீதிபதியும் எங்களுக்கு ஆதரவாக பேச முற்பட்ட போது அந்த பையன் பயங்கர சத்தத்துடன் “ ஆப் சுப் பைட்டீயே “ ன்னு கத்த அவர் அமைதியானார் . 🚢 நான் அவனிடம் சொன்னேன் உன்கிட்ட நாங்க விசாரிச்சோமே தவிர தனி படகு வேண்டாம்ன்னு தெளிவா சொல்லிட்டோம் , அதனால உன்கிட்ட வர மாதிரி இல்லன்னு சொன்னேன் . 🚢 அந்த பையன் விடாம இல்லல்ல இவங்க போட்ல போக கூடாது இறக்கி விடுங்க அப்படின்னு ரொம்ப கோவமா பேசிட்டு இறங்கி போயிட்டான் . 🚢 படகுக்காரர் இரண்டு பேருக்கும் சேர்த்து கொடுத்த ரூ500 ஐத் திருப்பி ரிட்டர்ன் பண்ணிட்டு , நீங்க தயவு செய்து இறங்கிருங்க … அப்பதான் படக எடுத்து மத்தவங்கள கூட்டிட்டு போக முடியும் அப்படின்னு சொல்லிட்டாரு … 🚢 எனக்கு ரொம்ப கோபம் ஆயிடுச்சு … என்ன காரணம்னா ஜட்ஜ் பார்த்து ஓங்கி கத்தி முடத்தவுடன் , என்னிடம் திரும்பி *ஆப் சவுத் இந்தியன் ஹே ன்னா தேக்லத்தும்* ன்னு சொன்னான். 🚢அப்படின்னு ஒரு வரியை அவன் சொன்னதைக் கேட்டதும் என்ன ???? தென்னிந்தியா தானே அப்படின்னா …. அவ்வளவு இளக்காரமா உங்களுக்கு அப்படின்னு படக விட்டு இறங்கி நானும் என் கணவரும் வந்துட்டோம் . 🚢 ஆனாலும் எனக்கு அவன் இறக்கி விட்ட படகில ஏறியே ஆகணும் அப்படின்ற எண்ணம் மட்டும் தான் மேலோங்கி இருந்துச்சு . 🚢 நாங்க வந்த அந்த டாக்ஸி டிரைவருக்கு போன் பண்ணும் போது அவனும் எடுக்கவே இல்ல … 🚢 அப்போ சுற்றுமுற்றும் பார்த்தேன் , எங்கேயாவது காவலர்கள் இருக்கிறார்களா ? என்று , அந்த நேரத்தில் உடனடியா கவிஞர் இரவி அவர்கள் கொடுத்த தொலைபேசி எண் நினைவில் வர , 🚢 அந்த எண்ணில் போன் பண்ண ஒரு தமிழகப் பெண் அலுவலர் தான் எடுத்தாங்க . உண்மையில் எனக்கு அப்ப தெம்பே வந்தது போல ஆச்சு. 🚢அவர்களிடம் நடந்த விஷயத்தை சொன்னேன் . அவங்க அப்படியே என் பக்கத்துல எதாவது போலீஸ் இருப்பாங்க அவங்கள பாருங்க அவங்க கிட்ட போன கொடுங்க அப்படின்னாங்க , 🚢 அப்படியே நான் சுத்திப் பார்த்தேன் ஒருத்தர் போலீஸ்காரர் மாதிரி இருந்தாரு, அவரிடம் இங்கே போலீஸ் யாராவது இருக்காங்களான்னு கேட்டேன் . 🚢 அவர் என்ன வேணும் சொல்லுங்க ? ன்னார் , நடந்ததைக் கூறியதும் நீங்க ஏதும் பணம் கொடுத்தீங்களா … அப்படின்னு கேட்டாரு . 🚢 நான் , இல்ல பணம் ஏதும் கொடுக்கல , ஆனா அவர்கிட்ட புக் பண்ணவே இல்ல அப்படின்றது மட்டும் தெளிவா சொன்னேன் . அப்புறம் நான் இந்த தமிழ்நாட்டு சுற்றுலாத்துறையில இருந்து பேசுறாங்க அப்படின்னு சொல்லிட்டு அவர்ட்ட போனை கொடுத்தேன் . 🚢அவங்க அந்த போலீஸ்காரர் கிட்ட பேசினாங்க , அதுக்கப்புறம் சீருடையின்றி மஃப்டியில் இருந்த அந்த போலீஸ்காரர் அவனை அடையாளம் காட்டச் சொன்னார். 🚢 வழி ஃபுல்லா பார்த்துட்டு போனேன் அந்த பையன் இல்ல … போட்ல ஏறி அந்த போட்மெண்ட்ட ஏதோ பேசினாரு அவங்க இருவரும் வங்காளத்தில் தான் பேசிக்கிட்டாங்க . 🚢 திருப்பி என்னை அந்த போட்ல ஏத்தி விட்டு போகச் சொல்லிட்டாரு அந்த போலீஸ்கார். படகில பயணம் போனோம் . 🚢 காடுகளை பார்த்தோம் . சுந்தரவனக்காட்டினை ரசிக்க மனமில்லை. என் மனசுக்குள்ள திருப்பி வரும் பொழுது இந்த வாலிபன் ஏதும் பிரச்சனை பண்ணுவானோ அப்படின்னு ஒரு உள்ளுக்குள்ள ஒரு பயம் இருந்தது . 🚢ஏன்னா நாங்க ரெண்டு பேர் மட்டுமே அங்கிருந்த கூட்டத்தில் தமிழ் . அங்கு வேறு தமிழர்கள் யாரும் இருக்கிற மாதிரி எனக்கு தெரியல . ஆனாலும் போனா என்ன உயிர் தானே போகும் . அப்படின்னு ஒரு தைரியம் … 🚢 அந்த ஃபுல் ட்ரிப்பும் ஒரு 2 மணி நேரம் காடுகளைச் சுத்தி காமிச்சு படகைத் திருப்பி கொண்டு வந்து இறக்கி விட்டாங்க , 🚢 இறக்கிவிட்டு அந்த இடத்தில் இருந்து நாங்க இருக்கிற டாக்ஸிக்கு வரதுக்கு கொஞ்சம் தூரம் …. வர வழியில் எங்கேயாவது அந்த பையன் இருப்பானான்னு என் கண் முழுவதுமே அவன தேடிட்டுத் தான் இருந்தது . ஆனா எங்கயுமே அவன பாக்க முடியல … 🚢 நான் உடனே அங்கிருந்து ஆட்டோவில் ஏறி அந்த கார் இருக்கக்கூடிய இடத்துக்கு வந்து சேர்ந்துட்டோம் .கார்ல ஏறி அந்த கார் டிரைவர் கிட்ட , நீங்க தானே அவன அறிமுகம் பண்ணி வச்சீங்கன்னு நடந்த விஷயத்தை சொன்னேன் . 🚢 அவங்களுக்குள்ள இருந்தஇருந்த டீலிங்கா தான் எனக்கு தெரிஞ்சுச்சு . அப்புறம் ஹோட்டலுக்கு வந்து ஹோட்டல் நிர்வாகத்திடம் கேப் டிரைவரைப் பற்றி புகார் செய்தேன் . இந்த நேரத்தில் எனக்கு கவிஞர் அவர்கள் அந்த கொடுத்த தொலைபேசி எண் எவ்வளவு உபயோகமா இருந்துச்சு பாருங்க … இந்த நிகழ்வை நான் பல மேடைகளில் பேசும்பொழுது சொல்லி இருக்கிறேன் . இதற்கு காரணம் தோழர் இரா. இரவி அவர்கள் தான் . கட்டாயம் இந்த இடத்தில் சொல்லி ஆகணும் . இந்த விஷயத்தை நான் கவிஞருடம் பகிர்ந்து இருக்கிறேன் . இப்படித்தான் அவர் பலருக்கும் இன்னும் கூட நிறைய உதவிகளை அறியாமல் செய்து கொண்டே இருக்கிறார். அவர் செய்த உதவி அவருக்கே தெரியாது . யாருக்கும் எந்த நேரத்தில் எந்த உதவியும் கேட்டாலும் உடனே செய்யக்கூடிய ஒரு நல்ல உள்ளம் படைத்த தோழர் தான் கவிஞர் ஹைக்கூ இரா. இரவி அவர்கள் . அருமையான இந்த புத்தகம் **திரும்பிப் பார்க்கிறேன் ** 📘தன் வாழ்வில் சந்தித்த மிகப்பெரிய ஆளுமைகள் ஒவ்வொருவரையும் மறக்காமல் குறிப்பிட்டு தற்போது அவரிடத்தில் இருக்கக்கூடிய நண்பர்களையும் விடுபடாமல் எழுதி இருக்கிறது மிகவும் சிறப்பான ஒன்று . கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

கருத்துகள்