படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய காலை வணக்கம் ." எட்வர்ட் டீ பானோ என்பவர் ,'ஒரு தகவலை முழுமையாகக் கவனிப்பதற்குப் பேசுபவரை மதிக்க வேண்டும் .அந்தத் தகவலில் ஆர்வம் இருக்க வேண்டும். அந்தத் தகவல் அவருக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும்' என்று குறிப்பிடுகிறார். உதாரணமாக ,புகை பிடிக்காத ஒருவரிடம் எந்தப் புகைச்சுருட்டு எவ்வளவு விலை என்கிற தகவலைத் தந்தால் அவர் அதைச் சிறிதும் பொருட்படுத்த மாட்டார். ஆர்வம் தேவையைப் பொறுத்தே அமைகிறது. கலீல் கிப்ரான்,' ஒரு மனிதனின் நிஜத் தன்மை அவன் எதை வெளிப்படுத்துகிறான் என்பதில் அமைவதில்லை. மாறாக உங்களிடம் அவன் எதை வெளிப்படுத்துகிறான் என்பதில்தான் இருக்கிறது .எனவே அவனை அறிந்து கொள்ள அவன் பேசுவதைக் கவனிக்காதீர்கள்; அவன் பேசாததைத் கவனியுங்கள்' என்று குறிப்பிடுகிறார். முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 206" .இந்த நாள் பேசாததைக் கவனிக்கும் உற்சாகமான நாளாக அமையட்டும்.

கருத்துகள்