உரைகல்லின் --- விழுதுகள்
*******************************
ஜூலை - 1
=========
________________________________________________
கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம்
உதயமான நாள் ஜூலை 1
________________________________________________
கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் 2001 ஆம் ஆண்டு ஜீலை 1 ஆம் நாள் உதயமானது.
16 ஆவது உதய விழா இன்று
கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையத்திற்கு
வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் தொடங்கி 15 ஆண்டுகள் முடிந்து இன்று 16 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது..
இந்த ஆண்டு கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் மரம் நடு விழாவாக கொண்டாடுகிறது.
மரம் வளர்ப்போம்..... மழைப் பெறுவோம்
_____________________________________________________
வானொலி வரலாறு
^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் வானொலி நிகழ்ச்சிகளை மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஒரே நேரத்தில் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடையும் போது 6 வானொலி நிலையங்களும், 18 டிரான்ஸ் மீட்டர்களும் இருந்தன. வர்த்தக நோக்கில் விவித்பாரதி என்ற சேவை 1957ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி தொடங்கப்பட்டது.
சென்னையில் முதல் பண்பலை நிலையம் 1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் நாள் தொடங்கப்பட்டது.டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் அகில இந்திய வானொலி பண்பலை ஒலிபரப்புகிறது.
கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம்
தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் அகில இந்திய வானொலி நிலையத்தால் அமைக்கப்பட்டுள்ள வானொலி நிலையம் ஆகும்.
இது கோடை பண்பலை வானொலி நிலையம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த வானொலி நிலையம் மூலம் காலை 4.55 மணி முதல் இரவு 12.00 மணி வரை பல்வேறு பொழுதுபோக்கு பாடல்கள், நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்படுகின்றன.
கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் உள்ள டிரான்ஸ் மீட்டர் என்கிற ஒலிபரப்பு கோபுரம் மலையின் உச்சியில் அமைந்திருப்பதால் இதன் ஒலிபரப்பு எல்லை கிட்டத்திட்ட 250 முதல் 300 கிலோமீட்டர் தூரம் வரை சென்றடைகிறது.
இந்த வானொலி நிலையத்தின் ஒலிபரப்புகள் தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களிலும், கேரளாவில் ஒரு சில மாவட்டங்களிலும் சென்றடைகிறது. இதன் நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவை நேயர்களுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளாக இருக்கின்றன.இதனால் இந்த வானொலிக்கு அதிக அளவில் நேயர்கள் இருக்கின்றனர்.இரண்டரை கோடிக்கும் அதிகமான மக்கள் கேட்கும் மிகபெரிய பண்பலை.முருகுவள்ளி.
கருத்துகள்
கருத்துரையிடுக