ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கவிஞர் K. விஸ்வநாதன், அலைபேசி : 94882 44051

ஹைக்கூ உலா !

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம் :
கவிஞர் K. விஸ்வநாதன், அலைபேசி : 94882 44051

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017.
தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com  பக்கம்120. விலை : ரூ. 80.
******
ஹைக்கூ உலாவுக்கு என் அன்பு மடல் உலா!
கவிதை உலகில் சுருங்கப் படித்து
சிறந்த கருத்து சொல்வதில் வல்லவர்                  
கவிஞர் இரா. இரவி !
கடுமையான உழைப்பும் சிறந்த சிந்தனையும்
இனிய முகமும் உள்ள இன்சொல் வேந்தர்        
கவிஞர் இரா. இரவி !
ஆர்வம் மிக்கவர் ஹைக்கூ எழுதுவதில்
உயர்ந்த சிந்தனையை மூன்று வரியில் தந்தவர்  
கவிஞர் இரா. இரவி !
எம் போன்ற பாமரனையும் பதப்படுத்தி
கவிஞர் ஆக்கி அழகு பார்ப்பவர்                  
கவிஞர் இரா. இரவி !
எதிலும் துணிவுடன் ஹைக்கூ எழுதி
தன்னம்பிக்கை வளர்க்கும் தீர்க்கதரிசி             
கவிஞர் இரா. இரவி !
ஜப்பானியர்க்கு நிகராக ஹைக்கூவில்
தமிழர் தலை நிமிர கவிதை எழுதியவர்
கவிஞர் இரா. இரவி !
இயற்கையை வென்றான் எடிசன்
இயற்கையை ரசிப்பவன் கவிஞன்
இயற்கையின் சொந்தம் உழவன்
இதற்கெல்லாம் ஏகலைவன்
சூரியன் (இரவி) !
மரம் உலகுக்கு எவ்வகையில் உதவுகிறது
மனிதர்க்கு உணர்த்தியது உம் ஹைக்கூ
பல வண்ண மலர்கள் பறிக்க அல்ல
பார்த்து ரசிக்க, என்ன உயர்ந்த சிந்தனை!!!
பறவைகள் பலவிதம்
இயற்கையின் வளம்
இக்கவிதை ஒருவிதம்.
“சாதி வெறி பண்புகளை அழிக்கும்
மத வெறி குலங்களை அழிக்கும்
வறட்டு கௌரவம் விடு – “வாழ்” – “வாழ் விடு”          
                  உரத்த சிந்தனை.
மகிழ்ச்சி அளிக்கும் மது, வாழ்வை அழிக்கும்
குடிகேடிக்கும், அரசுக்கும் சவுக்கடி உம் ஹைக்கூ.
சோதிடம் என்பது திடமில்லை
சோ
(SO) சோதிடம் பொய்யே
நிரூபணம் உம் கவிதை !
ஜல்லிக்கட்டு சரியான மல்லுக்கட்டு
ஜனங்களின் நாடிதுடிப்பு உம் கவிதை !
அரசியலை அம்பலமாக்கியது
உம் அருமையான ஹைக்கூ !
“மனிதன் எனில் தலைகுனிவான்”
தேர்தல் நிலை உணர்த்தியது உம் ஹைக்கூ.
தேர்தல் அறிக்கை கானல் நீர்
உணர்த்தியது உம் ஹைக்கூ.
அறம் பற்றி உம் திறம்
அருமை! மகிழ்ச்சி!!!
உழவர் நிலை அவலம்
உணர்த்தியது உம் கவிதை
கவலைக்கு மருந்து உம் கவிதை
தானத்தில் சிறந்தது நிதானம் (மூதுரை)
அதனினும் சிறந்தது உறுப்பு தானம்
இரவியின் ஹைக்கூ ‘சிறப்பு’.
அறியப்பட வேண்டிய செய்தி
கண்ணீர் கொணர்ந்த வரிகள்
அம்மா ஹைக்கூ !
மனித நேயம் மறக்காதிருக்க
அருமையான ஹைக்கூ.
முதல் காதல், காலம் முடியும் வரை
காலத்திற்கும், காதலுக்கு கனக்கச்சிதம்
உம் கவிதை.
காதல் கொண்டவரின் மனதைக் காட்டும்
கண்ணாடிக் கவிதை ‘என்னவள்’
மனிதனின், அன்பின் முதல் மொழி
 முத்தம்.
‘கலாம்’க்கு இணை பெருந்தலைவர்களில் ஒருவருமில்லை
காணப்போவதும் இல்லை.
அஞ்சாமையோடு சமரசம் ஆகாத வீரர்க்கு
      வாழ்த்துக்கள் (இன்குலாப்)
தொலைக்காட்சி – தொல்லைக்காட்சியாகியது
      உண்மை உணர்த்தும் கவிதை!
அலைபேசியின் அல்லல் உணர்த்தும்
      அருமையான கவிதை!
வல்லவன் சம்பாதித்து, வட்டிக்காரன் வாழ்ந்தான்
      காட்டியது, ‘கந்துவட்டி’ கவிதை.
தங்களின் உதிரிப்பூக்கள் ஹைக்கூ கவிதைகள்
தங்களின் அறிவின் வெளிப்பாடு “ஹைக்கூ உலா”
பதினேழாம் புத்தகம் பதியம் போட்டு பல நூறு ஆகட்டும்.
படித்தேன், பரவசமானேன், பாராட்டத் துடித்தது என் மனம்.
எளிமையான வார்த்தைகளில் வலிமையான கருத்துகள்
சொல்வது உங்கள் தனித்தன்மை, வாழ்க வளர்ச்சியுடன் ...
வளர்க உம் புலமை
வழி நடத்தட்டும் ”தமிழ்க்கடவுள்”
வளமோடு வாழ்வீர் பல்லாண்டு ...

கருத்துகள்