புதன், 28 ஜூன், 2017

தந்தை பெரியார் ! கவிஞர் இரா .இரவி !தந்தை பெரியார் !  கவிஞர் இரா .இரவி !

அறிவு பூட்டின்
திறவுகோல்
பெரியார்*
எதையும் ஏன்? ஏதற்கு? எப்படி?
என்று கேட்க வைத்தவர்
பெரியார்
பிள்ளை பெறும் இயந்திரமா?
பெண்கள் என்று கேட்டவர்
பெரியார்*
கற்பிக்கப்பட்ட கற்பனை கடவுள்
என்பதை உணர்த்தியவர்
பெரியார்*
அடித்து நொறுக்கினார்
அடிமை விலங்கை
பெரியார்*
அறிஞர் அண்ணா என்ற
ஆலமரத்தின் விதை
பெரியார்*
ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வியும் பதவியும்
கிடைத்திடக் காரணமானவர்
பெரியார்
பெண் இனத்தின்
போர்முரசு விடிவெள்ளி
பெரியார்
மூடநம்பிக்கை ஒழித்து
தன்னம்பிக்கை விதைத்தவர்
பெரியார்*
சமூக நீதியாம் இடஒதுக்கீட்டை
சாதித்துக் காட்டியவர்
பெரியார்*
மனிதனை நினை என்று
மனிதனுக்கு நினைவூட்டியவர்
பெரியார்
தமிழருக்கு தன்மானம்
கற்பித்த ஆசான்
பெரியார்
தள்ளாத வயதிலும்
தளராத தேனீ
பெரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தியாகி வைத்தியநாதர் நினைவேந்தல்நிகழ்வில் 23.2.2019

தியாகி வைத்தியநாதர் நினைவேந்தல்நிகழ்வில் 23.2.2019