அன்புள்ள அப்பா ! கவிஞர் இரா .இரவி !

அன்புள்ள  அப்பா ! கவிஞர் இரா .இரவி ! 

அறிவு தந்த அன்புள்ள அப்பா நீங்கள் !
ஆற்றல் ஈந்த அன்புள்ள அப்பா நீங்கள் !
உருகும் உன்னத மெழுகு நீங்கள் !
தேயும் ஒப்பற்ற சந்தனம் நீங்கள் !

தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் நீங்கள் !
திறமைகளை பயிற்று வித்த ஆசான் நீங்கள் !
சான்றோனாக்கி மனம் மகிழ்ந்தவர் நீங்கள் !
சந்தோசங்களை வழங்கிய வள்ளல் நீங்கள் !

ஓய்வறியாது உழைக்கும் செம்மல் நீங்கள் !
ஒரு நாளும் கவலை கொள்ளாதவர் நீங்கள் !
கடமையைக் கச்சிதமாய் முடித்தவர் நீங்கள் !
மடமையை முழுமூச்சாய் எதிர்த்தவர் நீங்கள் !

பகுத்தறிவை எனக்கு கற்பித்தவர் நீங்கள் !
மூடநம்பிக்கை அகற்றி தன்னம்பிக்கை தந்தவர் நீங்கள் !
எதையும் ஏன்? ஏதற்கு? எப்படி? என்றவர் நீங்கள் !
எவருக்கும் அஞ்சாமல் வாழ்பவர் நீங்கள் !

வாழ்வியல் கருத்துக்களை வழங்கியவர் நீங்கள் !
வாழ்வாங்கு வாழ்ந்து காட்டுபவர் நீங்கள் !
உலகிற்கு வரக் காரணமானவர் நீங்கள் !
உலக அறிவை உணர்த்தியவர் நீங்கள் !

"அப்பா" உறவிற்கு இலக்கணம் வகுத்தவர் நீங்கள் !
அன்பை பொழிவதில் இமயத்திற்கு நிகர் நீங்கள் !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !