ஞாயிறு, 25 ஜூன், 2017

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !ஹைக்கூ !   கவிஞர் இரா .இரவி ! 

உண்டு காப்பீடு 
ஆடு மாடு வயல்களுக்கு 
இல்லை திருநங்கைகளுக்கு ! 

முரண் வடஇந்தியாவில் ராசி 
தென்இந்தியாவில் ராசியன்று 
திருநங்கைகள் ! 

ஆண்களும் ஏற்பதில்லை 
பெண்களும் ஏற்பதில்லை 
திருநங்கைகள் ! 

வாழ்க்கையில் போராட்டம் நமக்கு 
வாழ்க்கையேப் போராட்டம் 
திருநங்கைகள் ! 

வழி இல்லாத வாழ்க்கை 
வலி மிகுந்த வாழ்க்கை 
திருநங்கைகள் ! 

மூன்றாம் பால் அல்ல 
முதல் பால் 
திருநங்கைகள் ! 

வாய்ப்பு வழங்கினால் 
வாகை சூடுவார்கள் 
திருநங்கைகள் ! 

தவறே செய்யாமல் 
தண்டனைப் பெற்றவர்கள் 
திருநங்கைகள் ! 

குடும்பத்தில் எதிர்ப்பு 
குமுகாயத்தில் புறக்கணிப்பு 
திருநங்கைகள் ! 

தவறான பிம்பம் தகருங்கள் 
மனிதாபிமானம் விதையுங்கள் 
திருநங்கைகள் ! 

சகமனுசியாக மதியுங்கள் 
சகோதரியாக நினையுங்கள் 
திருநங்கைகள் ! 

கேலியாகப் பேசாதீர்கள் 
தோழியாகப் பாருங்கள் 
திருநங்கைகள் ! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தியாகி வைத்தியநாதர் நினைவேந்தல்நிகழ்வில் 23.2.2019

தியாகி வைத்தியநாதர் நினைவேந்தல்நிகழ்வில் 23.2.2019