செவ்வாய், 20 ஜூன், 2017

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

மனிதரில் இல்லை
மலர்களிலும் இல்லை
உயர்வு தாழ்வு !

தேநீரெனப்   பருகினான்
கதிரவன்
மலர்களில் பனித்துளிகள் !

வேரிலிருந்து
பயணித்தது  
கிளைகளுக்கான சத்து !

குளத்தில்
தன் அழகை ரசித்தது
மரக்கிளை !

வருந்துவதில்லை
வெட்டிய வடுக்களுக்கு
பனைமரம் !

கிளைகள் வெட்ட வெட்ட
உயரம் வளர்ந்தது
பனைமரம் !

கழிவுநீர் உறிஞ்சி
இளநீர் தந்தது
தென்னை !

இவ்வளவு அழகாய்
பவளம் அடுக்கியது யாரோ
மாதுளம் பழம்!

காரணப்பெயர்
ஆறு ஐந்து சுளைகள்
ஆரஞ்சு !கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்புக் குறியீடுகளில் விளைந்து நிற்கும் சொற்கள்! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

விருப்புக் குறியீடுகளில்  விளைந்து நிற்கும் சொற்கள்! தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவி...