ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !

நேர்மையின் உச்சம் 
நாணயத்தின் எச்சம் 
கக்கன் !

அறம் செய்ய விரும்பு 
விரும்பினால் போதாது 
செய்க அறம் !

உண்ணும் உரிமை பறிக்க
யாருக்கும் இல்லை 
உரிமை !

தோற்றது 
புவி ஈர்ப்பு விசையிடம் 
விழி ஈர்ப்பு விசை   !

பக்தர்களின் பேராசை 
பிரமாண்டமான 
புத்தர் சிலை !

என்னை வணங்குவதை  விட 
பின்பற்றுவது சிறப்பு 
சொன்னார் புத்தர் !

கற்பித்தன 
மலர்ச்சி 
மலர்கள் !

உடலும் உடையும் 
சுத்தமாக 
மனம் ?

எண்ணம் செயல் 
அழகானால் 
அழகாவாய் !

ஒரே மாதிரி இன்றி 
ஒவ்வொரு  மாதிரி 
இதழ்களில் ராசிபலன்  !

பத்துப்பொருத்தம் பார்த்து 
முடித்த இணைகளுக்கு
மணவிலக்கு !

போனால் வராது
பொன்னிலும் மேலானது  
நேரம் !

குரு சீடர் 
கருத்து வேறுபாடு காரணமானது 
மட்டை விளையாட்டில் தோல்வி !

கவலைகள் காணாமல் போகும் 
ரசித்துப் பாருங்கள் 
அந்தி வானம் !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்