ஒரு கவிதை என்ன செய்யும்..? கவிஞர் இரா .இரவி

ஒரு கவிதை என்ன செய்யும்..? கவிஞர் இரா .இரவி
அநீதியை எதிர்க்கும்
நீதிக்கு குரல் தரும் !
அடிமைத்தனம் அகற்றும்
அன்பை போதிக்கும் !
அறியாமை இருள் அகற்றும்
அறிவை வளர்க்கும்
இயற்கை நேசிப்புத் தரும்
இசையை ரசிக்க வைக்கும்
இதயத்தை இதமாக்கும்
இலக்கிய ஆர்வம் பிறக்கும்
காதலை நேசிக்கும்
வெறுப்பை அகற்றும்
விழிப்புணர்வு விதைக்கும்
இலக்கியத தாகம் தணிக்கும்
.
சாதி மத வெறி நீக்கும்
சகோதர உணவு வளர்க்கும் !
மனிதநேயம் கற்பிக்கும்
மனதை கொள்ளையடிக்கும் !
மொழிப் பற்றை விதைக்கும்
விழி மொழி கற்பிக்கும் !
மிருக குணம் நீக்கும்
மனிதனை மனிதனாக்கும் !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !