புதன், 21 ஜூன், 2017

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
காரணமாகின்றன
நூலும் வாலும்
பட்டம் பறக்க !
கட்டாயமாக்குங்கள்
எதிர்காலம் செழிக்கும்
மழை நீர் சேகரிப்பு !
குழந்தைக்கு ரணம்
பெற்றோருக்குப் பணம்
காதணி விழா !
காதலுக்கான
மலரானதில் மகிழ்ச்சி
ரோஜா !
தண்ணீர் இல்லை
குப்பைகள் உள்ளன
கிணறு ?
உணரவில்லை மாட்டின் ரணம்
புண் கொத்தும்
காகம் !
இன்று விடுமுறை
திருடர்களுக்கு
பௌர்ணமி !
வரப்புச் சண்டை
சகோதரர்களிடையே
வருந்தியது வரப்பு !
அறியவில்லை
உழைக்காமல் உண்பது திருட்டு
பண்ணையார் !
சிலைக்காக
சிதைக்க வேண்டாம்
பாறையை !
எங்கும் இல்லை
ஒருவவரைப் போல
ஒருவர் !
உண்மை
உண்மை தவிர வேறில்லை
கண்ணாடி !
பெயர் சொல்லி
பிழைக்கின்றனர்
கடவுள் !
இரண்டும் வேண்டும்
சூட்டெரிக்கும் சூரியன்
சுடர் விடும் நிலவு !
மரணித்தவருக்காக
மரணித்தன மலர்கள்
மலர் வளையம் !
வளரும் கவிஞரின்
முகவரி அட்டையாக
கவிதை நூல் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது