ஞாயிறு, 25 ஜூன், 2017

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
ஹைக்கூ !      கவிஞர் இரா .இரவி ! 

நடந்தேன் நடந்தது 
நின்றேன் நின்றது 
நிலவு ! 


உழைக்காமலே வியர்வை 
மலர்களின் மீது 
பனித்துளி ! 

பூமியில் இருந்து வானம் 
வானில் இருந்து பூமி 
மழையின் சுற்றுலா ! 

ஓய்வு அறியாதவன் 
சோம்பல் முறிக்காதவன் 
ஆதவன் ! 

கண்டதும் மலர்ந்தன 
சென்றதும் வாடின 
மலர்கள் ! 

மணக்கும் 
தொட்ட கை 
மதுரை மல்லிகை ! 

முற்றிலும் உண்மை 
மலர்களின் ராஜா 
ரோஜா ! 

வெட்ட வெட்ட 
பொய்த்து மழை 
மரம் ! 

ஒன்று இசைக்கு 
மற்றொன்று பாடைக்கு 
மூங்கில் ! 

ஒன்று சிலை 
மற்றொன்று படிக்கல் 
மலைக்கல் ! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அழைப்பிதழ்

அழைப்பிதழ்