நன்றி தினமணி கவிதைமணி இணையம் ! மறுஜென்மம் ! கவிஞர் இரா .இரவி !




நன்றி தினமணி கவிதைமணி இணையம் !

மறுஜென்மம் ! கவிஞர் இரா .இரவி !

மறுஜென்மம் என்பது  உண்மை இல்லை 
மறுபடி மறுபடி  சொல்லி  வந்த பழைய பொய் !

மதிமிக்க அறிஞர்கள் பலர் அறிவித்தனர் அன்றே 
மறுஜென்மம் என்பதில் நம்பிக்கை இல்லை என்று !

பிறப்பும் இறப்பும் யாவருக்கும் ஒரேஒரு முறைதான் 
பேதலிக்க வேண்டாம் யாரும் மறுபிறவி குறித்து !

மறுபிறவி என்பது கற்பிக்கப்பட்ட கற்பனை 
மறுபடி மறுபடி சொல்வதால் உண்மையாகாது !

ஏழுபிறவி என்று எழுதியதும் கற்பனைதான் 
எவருக்கும் மறு பிறப்பு இல்லை என்பதே உண்மை !

ஒருவர் இறந்தால் மறுபடி பிறப்பார் என்றால் 
உலகில் பிறப்பும் இறப்பும் சமமாகவா உள்ளன !

மனிதராக அல்ல விலங்காகப் பிறப்பர் என்பர் 
மனிதனின் அபாரக் கற்பனையே இக்கதைகள் !

பாவம் செய்யாதிருக்க பயமுறுத்தப்பட்டதுதான் 
பாவம் செய்யாதிருப்போம் மனசாட்சிக்குப் பயந்து !

மதம் பரப்ப வந்தவர்களின் போலிப் பரப்புரை     
மறுஜென்மம் என்பதே புரட்டின் உச்சம் !

மறுபிறவி வேண்டாமென்று பலர் பிராத்தனையில் 
மனம் உருகி வேண்டுதல் செய்வோரும் உண்டு ! 

போன பிறவியில் நான் இப்படி அப்படியென 
பொய்யுரை  அள்ளி விடுவோரும் உண்டு !

மறுஜென்மம் என்பதை  விஞ்ஞானம்  ஏற்கவில்லை  
மறுஜென்மம் என்பதை விஞ்ஞானிகளும் ஏற்கவில்லை !

பிழைப்பிற்காக  மறுஜென்மம் கதையளப்போர் 
படம் எடுத்து பணம் ஈட்டுவோரும் உண்டு !

பிறப்பு எல்லோருக்கும் ஒரேயொரு முறைதான் 
பிறந்ததன் பயனை நிறைவேற்றுவோம் நன்முறையே !

வள்ளுவர் உரைத்தது போலவே எல்லோரும் 
வாழ்வாங்கு வாழ்ந்து பிறவியைச் செம்மையாக்குவோம்   !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !